World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Global food prices rise and famine increases

உலகளாவிய நிலையில் உணவுப்பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன, பஞ்சம் அதிகரிக்கிறது

By Barry Mason
29 March 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பான உலக உணவுத் திட்ட (WFP) அமைப்பு உலக உணவுப் பொருள் விலைகளில் உயர்வு, பட்டினியால் வாடும் மற்றும் சத்துணவற்ற மக்களுக்கு உணவளிக்கும் தனது திறனை குறைக்க கூடும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.

சென்ற மாதம் WFP அமைந்துள்ள ரோமில் பேசிய அதன் நிர்வாக இயக்குநர் ஜோசெட் ஷீரன் கூறினார், "தேவைகள் அதிகரிக்கும் ஒரு சூழ்நிலையில் மக்களை சென்றடையும் எங்களது திறன் சரிகிறது.... அதிக விலையால் மக்கள் உணவுச் சந்தையில் இருந்து வெளித் தள்ளப்படும் சூழலில் பட்டினியின் புதிய முகத்தை நாங்கள் காண்கிறோம்.... முன்னர் அதிக அவசரமானதாக இல்லாத சூழல்களும் இப்போது அவ்வாறு அவசர அவசியமானதாக இருக்கின்றன.

இந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், இந்த ஆண்டு தனது பணிக்கு சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் தொகை நிதி தேவைப்படும் என்று மதிப்பீடு செய்துள்ளது, இது சென்ற ஆண்டு மதிப்பீட்டை விட சுமார் அரை பில்லியன் டாலர் அதிகமாகும். இந்த தொகை உலகெங்கிலும் 78 நாடுகளில் உள்ள 73 மில்லியன் மக்களுக்கு உணவளிக்க அங்கீகாரம் பெற்ற திட்டங்களுக்கான தொகையாகும். இத்தொகை திட்டமிடப்பட்ட உணவுத் திட்டங்களுக்கு மட்டுமே, திடீரென்று எழக்கூடிய எதிர்பாராத அவசரங்களை உள்ளடக்கியதில்லை என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

புவியின் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள மக்கள் தங்கள் வருமானத்தின் கூடுதலான தொகையை உணவுக்காக செலவிட வேண்டி வரும் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இதனால் இந்த மக்கள் குறைவான உணவையோ, அல்லது சத்துக் குறைந்த உணவையோ எடுத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்கள், அல்லது வெளி உதவியை சார்ந்திருக்கும் நிலை தோன்றும் என்கிறது அந்த அறிக்கை.

மிகவும் பாதிப்படையக் கூடிய நாடுகளில் சிம்பாப்வே, எரித்ரியா, த்ஜிபோத்தி, காம்பியா, ரோகோ, சாட், காமரூன், நைஜர், செனகல் இவை அனைத்தும் ஆபிரிக்க கண்டத்து நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர ஹைத்தி, மியான்மர் (பர்மா), யெமன் மற்றும் கியூபா ஆகிய நாடுகளும் பாதிப்புள்ளாகின்றன.

உணவுப் பொருள்களுக்கான விலை உயர்வு காரணங்களில் அதிகரிக்கும் எண்ணெய் விலைகளும், சீனாவிலும் இந்தியாவிலும் அதிகரிக்கும் உணவுத் தேவைகளும் குறிப்பாக இறைச்சிக்கு, இருப்பதாக WFP கூறுகிறது. இந்த அதிகரிப்பிற்கு காரணம் இந்த இரு நாடுகளின் பொருளாதார சக்தி துரிதமாக வளர்ச்சியுற்றதே ஆகும்.

காலநிலை மாற்றத்துடன் தொடர்பு கொண்டுள்ள வானிலை நிகழ்வுகளும் கூட விலைவாசி உயர்வில் ஒரு பங்களிப்பை ஆற்றியிருக்கின்றன. உணவுப் பயிர்களை உயிரி எரிபொருள் தயாரிப்புக்கு பயன்படுத்துவது அதிகரித்திருப்பதும் கூட சந்தையில் விலை உயர்வுக்கு காரணமாகி விடுகிறது.

மார்க் திர்ல்வெல் பிப்ரவரி 26 அன்று வெளியான Financial Times கட்டுரையில் உணவுப் பொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலின் தாக்கம் குறித்து சில தகவல்களை அளிக்கிறார். புதிய மில்லினியம் முதல் மட்டும் உலக உணவு விலைகள் 75 சதவீத அளவுக்கு உயர்வு கண்டுள்ளது என்பதையும், சென்ற ஆண்டு மட்டும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். சென்ற தசாப்தத்தில் சீனாவில் அதன் பொருளாதார வளர்ச்சி உச்சம் காணத் தொடங்கியதை அடுத்து இறைச்சி மற்றும் சோயா பீன்ஸ் நுகர்வு 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் இது போன்ற உணவுப் பொருள் விலை உயர்வுகள் அதனைத் தொடர்ந்த உற்பத்தி அதிகரிப்புகளால் சரிக்கட்டப்பட்டு வந்திருக்கிறது என்பதையும், இந்த முறை அவ்வாறு கூற முடியாது என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

எண்ணெய் விலைகள் உயர்வும் அதனைத் தொடர்ந்து உயிரி எரிபொருள்களின் உற்பத்தி அதிகரித்திருப்பதும் உணவு உற்பத்தியில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் வாதிடுகிறார். இதனால், உணவுத் தேவையை விட எரிபொருள் தேவைக்காக பயிர்கள் வளர்க்கப்படுவது அதிகரிக்கும்.

வளர்ச்சியுறா நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளில் ஏழைகளின் வருமானத்தில் பெருமளவு உணவுப் பொருளுக்கு சென்று விடும் என்னும் உண்மையானது அந்த மக்களின் துயரத்தை இன்னும் அதிகரிப்பதாய் இருக்கிறது. திர்வெல் எழுதுகிறார்: "உணவுப் பொருள் நுகர்வுக்கான பங்களிப்பு அமெரிக்கா போன்ற பணக்கார நாட்டில் ஒப்பீட்டளவில் குறைந்து காணப்படுகிறது சுமார் 10 சதவீதம் என்கிற அளவு நிலையில், இது சீனாவில் சுமார் 30 சதவீத அளவுக்கும் துணை சகாரா ஆப்பிரிக்க கண்டத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமானதாக இருக்கிறது. இதில் மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளாக குறைந்த வருவாயும் அதிகமான உணவு இறக்குமதியும் கொண்ட நாடுகள் இருக்கின்றன. அதிகரித்துள்ள எரிபொருள் விலைகளால் ஏற்கனவே இறக்குமதி செலவு அதிகரித்துள்ள நிலையில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு இந்த நாடுகளை கடுமையாக பாதிக்கும். ஏழை பொருளாதாரங்களில் பலவும் இந்த வகையில் தான் வருகின்றன மற்றும் இவை தங்களது உணவுத் தேவைகளுக்கு உணவு உதவியைத் தான் பெரிதும் நம்பியுள்ளன. உலகளவிலான இத்தகையதொரு உதவியின் அளவு கடந்த இரண்டு தசாப்தங்களாக பெரும் தேக்கநிலையை கண்டுள்ளது, கொடுமையானது என்னவென்றால், இந்த உதவியில் பெருமளவு ஒரு நிலையான வருடாந்திர தொகையாக டாலரில் கொடுக்கப்படுவதை கணக்கில் எடுத்துக் கொள்கையில், விலைவாசி உயர உயர உதவியின் அளவு வீழ்ச்சியடையவே செய்யும்.

அபாயத்தில் உள்ளவர்களில் பெரும்பாலும் நகர ஏழைகள் தான் அதிகம் என்று அவர் குறிப்பிடுகிறார். பல துணை சஹாரா ஆபிரிக்க நாடுகளில், பெரும்பான்மை மக்கள் விவசாயத்தை பிழைப்பாதாரமாக கொண்டுள்ள சூழலில், ஏழைகள் தங்கள் நிலங்களை விட்டு விட்டு முளைக்கும் நகர மையங்களை நோக்கி நகர்வது சகஜமாகியிருக்கிறது.

உணவுப் பயிர் உற்பத்தியை உயிரி எரிபொருள் தயாரிப்புக்கு திருப்பும் முயற்சியானது ஆபிரிக்காவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கானா, பெனின், எத்தியோப்பியா, உகண்டா, தான்சானியா, சாம்பியா மற்றும் தென்னாபிரிக்கா அனைத்து நாடுகளுமே உயிரி எரிபொருளுக்காக பயிர் வளர்ப்பதற்கு திட்டங்களை கொண்டுள்ளன.

உயிரி எரிபொருள் உற்பத்தி குறித்து விவாதிக்க ஆப்பிரிக்கன் Biodiversity Network இன் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதாக பிப்ரவரி 16 இல் வெளியான Independent கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. நைஜீரியாவின் புகழ் பெற்ற சுற்றுச் சூழல் நிபுணரான நினிமோ பாஸி கூறியதை இந்த கட்டுரை மேற்கோள் காட்டியது: "ஆபிரிக்கா ஒரு பரந்து விரிந்த கண்டம், இதன் அனுகூலங்களை எரிபொருள் துறை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது.... இது காலனித்துவ விவசாயப் பண்ணை காலத்தின் மறுமலர்ச்சி நினைவுகளாய் காட்சியளிக்கின்றன."

கட்டுரை தொடர்கிறது, "பெரும் தோட்டங்களில் வளர்க்கப்படும் உயிரி எரிபொருள் மூலப் பொருட்களை ஏற்றுமதி சந்தைகளுக்கான திரவ எரிபொருளாக மாற்றும் நோக்கத்தோடு, மேற்கு ஆபிரிக்காவின் வெப்ப மண்டல புல்வெளிகளான சவன்னாக்கள் தொடங்கி, கொங்கோவின் மழைக் காடுகள், தான்சானியாவின் சமவெளிகள் மற்றும் எத்தியோப்பியா காட்டுப் பகுதிகள் வரை, அரசாங்கங்கள் ஏராளமான வளமான பயிர்வளப் பகுதிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து வருகின்றன. செனகலின் அப்துலேயே வடே போன்ற ஆபிரிக்க தலைவர்கள் ஒரு 'பசுமைப் புரட்சியை' எதிர்பார்க்கிறார்கள், பணம் கொழிக்கும் ஏற்றுமதியை ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறார்கள்".

காலநிலை மாற்றமும் ஆபிரிக்காவில் பயிர் உற்பத்தியை பாதிக்கும். காலநிலை மாற்றத்தின் விளைவாக அடுத்த இரண்டு தசாப்தங்களில் அடிப்படை உணவுப் பொருளான மக்காச் சோளத்தின் உற்பத்தி மூன்றில் ஒரு பங்கு சரிவைக் காணும் என்று Stanford பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று மதிப்பீடு செய்துள்ளது.

தென்னாபிரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ஆபிரிக்காவின் சுற்றுச் சூழல் பொருளாதாரம் மற்றும் கொள்கைகளுக்கான மையம் (CEEPA) மேற்கொண்ட ஒரு தனியான ஆய்வில், அடுத்த 30 ஆண்டுகளில் ஆபிரிக்கா தனது விளைச்சல் நிலத்தில் சுமார் 4 சதவீதத்தை இழந்திருக்கும் என்றும், நூற்றாண்டின் நிறைவில் சுமார் 18 சதவீதத்தை இழந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க அமைப்பு (USAID) தான் வழங்கும் உணவு உதவிக்கான தொகையை குறைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. சமீபத்திய பொருட்கள் விலை உயர்வினால் 120 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறை தோன்றியுள்ளதாக இது காரணம் காட்டியுள்ளது.

வர்த்தகத்துக்கான Oxfam செய்தித் தொடர்பாளர் ஆமி பெரி, மார்ச் 2 அன்று Observer -இல் காட்டப்பட்டிருந்த மேற்கோள் உரையில் கூறியிருந்தார்: "வருங்காலத்தில் இன்னும் அதிகமான மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள இருக்கிறார்கள்... அதிகரிக்கும் உணவுப் பொருள் விலைகளால் எழுந்துள்ள சூழலைப் பார்க்கும்போது இது தங்களது வருவாயில் 80 சதவீதத்தை உணவுப் பொருட்களுக்காக செலவிடும் [வளரும் நாட்டு மக்கள்] மக்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் சிந்திப்பது அவசியம்."

முதலாளித்துவ அமைப்பின் பொருளாதார நெருக்கடியின் தாக்கமானது உலகின் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களின் ஒரு சாரார் வாழ்க்கையில் கடும் சேதாரம் விளைவிப்பதாய் இருக்கும்.