World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US shipped fuses for nuclear-armed missiles to Taiwan

அணுவாயுத ஏவுகணைகளுக்கான எரியூட்டு பொறியமைவுகளை அமெரிக்கா தாய்வானுக்கு அனுப்பியது

By Patrick Martin
28 March 2008

Back to screen version

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அணுவாயுத ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் நான்கு பெரிய மின்சார எரியூட்டு பொறியமைவுகளை (Fuse) தாய்வான் இராணுவத்திற்கு அனுப்பப்பட்டதை பாதுகாப்பு சரக்குத்துறை முகாமை உறுதிபடுத்தி இருப்பதால், அமெரிக்க அணு ஆயுத பாதுகாப்பு குறித்து பெண்டகன் அதிகாரிகள் கூறிய அனைத்தையும் மீறி உள்ளது.

ஒவ்வொன்றும் இரண்டு அடி உயரத்திலான, கூம்பு வடிவ நான்கு பொறியமைவுகளை வானூர்திகளுக்கான உதிரி மின்கலங்கள் என்ற முத்திரையுடன் பிரம்பு கூடைகளாலான பெட்டகத்தில் அனுப்பப்பட்டன. அதை தாய்வான் இராணுவம் பெண்டகனின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னர், இறுதியாக அவை கடந்த வாரம் அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பி அளிக்கப்பட்டன.

ஒரு கசப்பான போட்டியாளராகவும், முக்கிய இராணுவ விரோதியாகவும் கருதப்படும் ஒரு நாட்டிற்கு இதுபோன்றதொரு அதிபயங்கர ஆயுதத்தின் பகுதிகளை அனுப்பியதற்காக, சீனாவின் பெருத்த குற்றச்சாட்டுக்களுடன் இந்த செயல்பாடு சர்வதேச அளவில் ஒரு பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தால் ஏற்படக் கூடிய எதிர்மறையான மற்றும் பேரழிவு விளைவுகளை தவிர்க்க, அமெரிக்கா சீனாவிற்கு ஒரு முழுமையான பதிலை அளிக்க கோரியும் மற்றும் அந்நடவடிக்கைக்கு "கடுமையான அதிருப்தி" தெரிவித்தும் சீனாவின் வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் குன் காங் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

இந்த பரிமாற்றம் கவனக்குறைவால் ஏற்பட்டது என்பதையும், இது தாய்வானுடனான அமெரிக்க கொள்கையில் ஏற்பட்டிருக்கும் ஒரு மாற்றத்தைக் குறிக்காது என்பதையும் சீன ஜனாதிபதி ஹூ ஜின்டோவிற்கு உறுதிப்படுத்த ஜனாதிபதி புஷ் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

இந்த நாட்டின் (தாய்வான்) இராணுவத்திடம் கண்டம் விட்டு கண்டம் தாண்டும் அணு ஆயுத ஏவுகணைகள் இல்லை என்பதால், இந்த எரியூட்டு பொறியமைவுகள் தாய்வானில் உபயோகப்படுத்த முடியாதவை என புஷ் நிர்வாகம் தெரிவித்தது. எவ்வாறிருப்பினும், உண்மையில் அணுவியல் தொழில்நுட்ப பரிமாற்ற செய்யும் நோக்கம் உண்மையில் இருக்குமானால், உண்மையை மூடி மறைக்க அமெரிக்காவிற்கு எல்லாவித காரணங்களும் இருக்கிறது என்பதால் இதுபோன்ற அனைத்து சமாதானங்களும் சந்தேகத்திற்குரியவையே.

இந்நிலையை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் பின்வருமாறு எழுதியது: "வெளிப்படையாக தாய்வானிடம் ஏதும் அணு ஆயுத திட்டங்கள் கிடையாது என்பதுடன் எரியூட்டு பொறியமைவுகள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நேரடியாக எவ்விதத்திலும் உதவாது. அதே நேரத்தில், ஏதாவதொரு நிலையில் அத்தீவின் அரசாங்கம் ஓர் அணு ஆயுத ஆராய்ச்சி திட்டத்தை மேற்கொண்டால், அது சீனாவில் மிகவும் பிரச்சனைக்குரிய விடயமாகிவிடும்."

விமானப்படை செயலாளர் மைக்கல் வேனியால் திங்களன்று ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் அளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இந்த கூம்புகள் வோம்மிங்கிலுள்ள F. E. Warren விமானப்படைத் தளத்திலிருந்து உராஹிலுள்ள பெண்டகன் சரக்கு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, வானூர்தி மின்கலங்கள் தாய்வான் இராணுவத்தால் அளிக்கப்பட்ட ஒரு கேள்விப்பத்திரத்தின் அடிப்படையில் அங்கிருந்து தாய்வானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இவ்வாறு அனுப்பும்போது எப்போது அணுஆயுத எரியூட்டு பொறியமைவுகள் மின்கலங்கள் கொண்ட பெட்டகங்கள் என முத்திரையிடப்பட்டது என்பது தெளிவாக இல்லாதபோதும், அவை 2006 ஆகஸ்டில் அந்நிலையிலேயே தாய்வானில் வந்திறங்கின.

ஆறு மாதங்களுக்கு பின்னர், தாய்வான் இராணுவ தொழில்நுட்ப வல்லுனர்கள் அந்த சரக்கு பெட்டகத்தை திறந்தபோது, அதிலிருந்தவை மின்கலங்கள் அல்ல என்பதைக் கண்டனர். பெண்டகனுக்கு தெரிவிக்கப்பட்ட பின்னர், இது பெண்டகன் சரக்குத்துறை அதிகாரிகளால் நம்புவதற்கு சாத்தியமில்லாமல் போனதால், தவறான மின்கலங்கள் அனுப்பப்பட்டனவா என்ற கேள்வியுடன் இதுதொடர்பான மின்னஞ்சல் தொடர்பு ஓர் ஆண்டுக்கு மேலாக நீண்டு சென்றது.

இறுதியாக, கடந்த வாரம், அணு ஆயுத ஏவுகணைகளின் உட்பகுதிகள் தங்களிடம் இருப்பதை தாய்வான் அதிகாரிகள் பெண்டகனுக்கு தெரிவித்துடன், கூம்புகள் மூடப்பட்டு அமெரிக்காவிற்கு விரைவாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

"உலகளவில் மிகவும் பெரிய மற்றும் சிக்கலான DOD போன்றதொரு பெரிய அமைப்பில், தவறுகளும் இருக்கும். ஆனால் அவை அணு ஆயுதமாக இருந்தாலும் அல்லது அதனுடன் சம்பந்தப்பட்ட சாதனமாக இருந்தாலும் கூட திட்டமிடல் அமைப்புகளை பொறுத்த வரையில் அத்தவறுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. தாய்வானுக்கான ஆயுத விற்பனைகள் மீதான எங்களின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை." எனத் தெரிவித்ததன் மூலம் அந்த சரக்கு பரிமாற்றமானது ஒரு எதிர்பாராத அலுவலக பணியாளர் தவறு என்று விவரிக்க செயலாளர் வேனி முயற்சித்தார்.

பென்டகனை பொறுத்த வரை, அந்த கூம்பு வடிவ எரியூட்டு பொறியமைவுகள், பழைய 1960ஆம் காலத்திய மார்க் 12ம் பதிப்பான மினிட்மேன் அணுஆயுத உபகரணத்தின் ஒரு பகுதியாகும். அதுபோன்ற 700 ஏவுகணைகள் தற்போதும் பயன்பாட்டில் உள்ளன, ஏவுகணை வெடிப்பதற்கு முன்னால் அதன் இலக்குக்கு மிக அருகில் இருக்கும் போது இந்த எரியூட்டு பொறியமைவுகள் வெடிப்பு அலைகளை சமிக்கை செய்யும். இந்த எரியூட்டு பொறியமைவுகள் அமெரிக்க அணு ஆயுத திட்டங்களில் மேம்படுத்தப்பட்ட Mark 12A இற்கு பதிலாக நீக்கப்பட்டிருக்கின்றன என்பதுடன் நிரந்தரமாக சேமித்து வைக்க இவை உராஹ் கிடங்கிற்கு அனுப்பப்படுகின்றன.

பின்னர் எவ்வாறு அவை தாய்வானுக்கு அனுப்பப்பட்டன என்பது பென்டகனின் உள் விசாரணையில் இருக்கிறது. தாய்வான் சம்பவத்தை தொடர்ந்து, அனைத்து அணு ஆயுதங்கள் மற்றும் உட்பகுதிகளையும் முழுமையாக கணக்கெடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கேட்ஸ் கட்டளையிட்டிருக்கிறார் என வியாழனன்று பென்டகன் தெரிவித்தது.

பென்டகனால் நடத்தப்படும் விசாரணையில் இவை எந்த சூழ்நிலையில் அனுப்பப்பட்டன என்பதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், பென்டகனின் எவ்வித முயற்சிகளையும் பொதுமக்கள் நிச்சயமாக அறிந்துகொள்ள முடியாதிருக்கும். இந்த நிகழ்வானது அணு ஆயுதங்களை தவறாக கையாண்டதற்கான கடந்த ஆண்டின் இரண்டாவது நிகழ்வாகும்.

கடந்த ஆகஸ்டில், B-52 எனுமொரு யுத்த விமானம் வடக்கு டகோடாவிலுள்ள மைனட் விமானத்தளத்திலிருந்து லூசியானாவிலுள்ள பார்க்ஸ்டேல் விமானத்தளத்திற்கு ஆறு அணுவாயுத ஏவுகணைகளை அதன் இறக்கைகளில் பொருத்தியபடி பறந்து சென்றது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்கு எதிராக தொலைதூர தாக்குதல்களை நடத்திய அமெரிக்க அணுவாயுத குண்டுவீச்சு விமானங்களின் இருப்பிடமாக பார்க்ஸ்டேல் விளங்குவதால், ஈரானுக்கு எதிரான ஒரு யுத்தத்திற்காக அமெரிக்கா அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான ஒரு செயல்பாட்டில் இறங்கி இருக்கிறது என்ற குறிப்பிடத்தக்கதொரு ஊகத்திற்கு அது இட்டு செல்கின்றது.

இந்த நிகழ்விற்கு பின்னர், அலட்சியம் மற்றும் கவனமின்மை ஆகிய குற்றங்களுக்காக நான்கு கீழ்நிலை அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அமெரிக்க தளங்களில் குறைந்தபட்சம் பத்து காலாண்டு ஆயுத கணக்கீடு முறை இருக்கும் நிலையில், நான்கு அணு கூம்பு பொறியமைவுகள் தவறி இருப்பதை கண்டறிந்திருக்க வேண்டும் என்பதால் சமீபத்திய நிகழ்வில், எதிர்பாராத தவறு என வாதிடுவதை நம்புவதற்கு மேலும் சிரமமாக இருக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved