World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
In the wake of the Bear Stearns collapse US Federal Reserve cuts interest rates again Bear Stearns சரிவை அடுத்துஅமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கி வட்டி விகிதத்தை மீண்டும் குறைக்கிறது By Alex Lantier கடன் நெருக்கடியை எளிதாக்கும் மற்றொரு நடவடிக்கை, அமெரிக்க வங்கிகளுக்கு முட்டுக் கொடுக்கும் நடவடிக்கை என்ற விதத்தில், அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கியானது செவ்வாயன்று மத்திய நிதிய வீதத்தை, முக்கியமான குறுகிய கால வட்டி விகிதத்தை 3 சதவீதத்தில் இருந்து 2.25 சதவீதத்திற்கு என்று குறைத்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து இது அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கியின் ஆறாவது வீத குறைப்பு ஆகும்; முழு மூன்று சதவீதம் குறுகிய காலம் வங்கிகளுக்கு இடையேயான கடன்களுக்கு இருக்கும் இலக்கு விகிதத்தில் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசேர்வ் தள்ளுபடி வீதத்தையும் குறைத்துள்ளது; இந்த வீதம் நேரடிக் கடன்களுக்கு வங்கிகளிடம் வசூலிக்கப்படுகிறது; இது 3.25 ல் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வட்டிவீத வருங்கால சந்தைகள் மற்றும் பல நிதிய வர்ணனையாளர்கள் அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கியின் நிதிகள் மற்றும் தள்ளுபடி வீதங்களில் குறைந்தது 1 சதவீத வெட்டு இருக்கும் என்று தாங்கள் எதிர்பார்த்ததாக கூறினர். ஆனால் அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து ஒரு குறுகிய 150 புள்ளி சரிவிற்குப் பின்னர், பங்குச் சந்தைகள் தீவிரமாக ஊக்கம் பெற்றன; Dow Jones தொழிற்துறை சராசரி 12,391.52 என்று 419.27 புள்ளிகள், 3.5 சதவீதம் அதிகமாக அன்று முடிவடைந்தது. அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கியின் வீத வெட்டுக்கள் அமெரிக்காவின் ஐந்தாம் மிகப் பெரிய முதலீட்டு வங்கியான Bear Stearns ä JP Morgan Chase ஆல் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு இடைத்தரகும் நிதிய உதவியும் கொடுத்த ஒரு நாளைக்கு பின்னர் வந்துள்ளது. திவால் பாதுகாப்பு மனு கொடுக்கும் விளிம்பில் இருந்த Bear Stearns, விற்பனை செய்யப்பட்டது என்பது முன்னோடியில்லாத வகையில் அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கி நிதியச் சந்தைகளில் பெரும் சரிவு இல்லாமல் இருப்பதற்காக தரகு வேலை செய்ததை அடுத்து ஏற்பட்டது; இதையொட்டி சந்தைக்கு மட்டும் இல்லாமல் வணிக வங்கிகளுக்கும் சரிவு குறையும் வகையிலும் முதலீட்டு வங்கிகள், தரகு நிறுவனங்கள் ஆகியவை சரியாத வகையிலும் இந்த நடவடிக்கை வந்தது; அமெரிக்க வீடுகள் சந்தை சரிவை தொடர்ந்து பாதுகாப்புப் பத்திரங்கள் மதிப்பில் பெரும் சரிவை பில்லியன்கள் அளவில் பெற்றன; அதை ஈடு செய்யும் வகையில் இது நடந்தது. அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கியின் நிதியை மதிப்பற்ற அடைமானப் பத்திரங்களுக்கு ஈடாக கொடுக்க முன்வந்த விதத்தில், அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கி 1930களின் பெருமந்த நிலைக் காலத்திற்கு பின்னர் காணப்படாத வகையில் நிதிய முறையில் தலையிட்டது. இது JP Morgan Chase க்கு திவாலான Bear Stearns ஐ எடுத்துக் கொள்ளுவதற்கு நம்பிக்கை கொடுத்தது; மேலும் கிட்டத்தட்ட $30 பில்லியனை சரியான இலகுவில் பணமாக்கமுடியாத சொத்துக்கள் காப்பீடு செய்யப்படுவதற்கும் நம்பிக்கை கொடுத்தது; இவை 85 ஆண்டுகள் செயல்பட்டு வந்த முதலீட்டு வங்கியினால் வைக்கப்பட்டிருந்தன. நிதிய அமைப்புக்கள், வணிக வங்கிகள் என்று அடைமானப் பத்திரங்கள், மற்ற ஆபத்து நிறைந்த முதலீடுகளில் அகப்பட்டு தத்தளித்து தடுமாறியவற்றை காப்பாற்றும் வகையில் அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கி தன்னுடைய நிதியத்தையே அளித்தது என்பது இதன் பொருள் ஆகும். இறுதியில் இந்தச் செலவு அமெரிக்க வரி செலுத்துபவர்களால் ஏற்கப்படும்; ஏனெனில் அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கியில் இருந்து அமெரிக்க கருவூலத்திற்கு குறைக்கப்பட்ட பண வடிவில்தான் வரும். அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கியின் வட்டிவீத வெட்டுக்களையும் விட, இந்த அசாதாரண நடவடிக்கையான வோல் ஸ்ட்ரீட்டை காப்பாற்றுவது என்பது, செவ்வாயன்று பங்குச் சந்தைகளில் இருந்த குறுகிய கால களிப்பு உணர்விற்கு காரணமாயிற்று. ஆழ்ந்த கவலைகளும் உறுதியற்ற தன்மையும் இன்னமும் உள்ளன என்பது செவ்வாயன்று வோல் ஸ்ட்ரீட் இதழின் முதல் பக்கத்தில் வந்த கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டது. அது தொடங்கிய விதம், "கடந்த ஆறு நாட்கள் அமெரிக்க முதலாளித்துவ முறையை பெரும் அதிர்விற்கு உட்படுத்திவிட்டன." முதலீட்டு வங்கிகள் Goldman Sachs, Lehman Brothers ஆகியவற்றின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன; முந்தைய ஆண்டைவிட இவ்வாண்டு முதல் கால்பகுதியில் வருமானங்கள் தீவிர குறைப்புக்களை பெற்றிருந்த போதிலும், அடைமானம் தொடர்புடைய நடவடிக்கைகளில் பில்லியன் கணக்கானவை தள்ளுபடி செய்யப்பட்டும் இப்படி நிகழ்ந்தது. ஏனெனில் சந்தை இன்னும் மோசமான விளைவுகளுக்கு அஞ்சியது. குறிப்பாக லெஹ்மன் பிரதர்ஸ் கடன் திருப்பிக் கொடுத்தலில் பெருகிய முறையில் சிக்கியதாக வதந்திகள் பரவின; ஏனெனில் Bear Stearns ஐ போலவே இதன் வணிகமும் பெருமளவு குறைந்த பிணையுள்ள அடைமானத்தை ஏற்கும் தொடர்பை கொண்டிருந்தது. கடந்த வார இறுதியை ஒட்டி, சில வாடிக்கையாளர்கள் பணங்களை திரும்பப் பெறத் தொடங்கினர்; கடன் கொடுத்தவர்கள் நிறுவனத்திற்கு கடன் கொடுப்பதை நிறுத்தப் போவதாக குறிப்புக் காட்டினர். 2007 ஐ ஒப்பிடும்போது கோல்ட்மன் சாஷ்ஸின் இலாபங்கள் 53 சதவீதம் சரிந்தன; நிறுவனம் மற்றும் ஒரு 2 பில்லியன் டாலர்களை மோசமான முதலீடு என்று தள்ளுபடி செய்துவிட்டது. 57 சதவீதம் இலாபங்களில் சரிவு என்று லெஹ்மன் பிரதர்ஸ் கூறி, மற்றும் ஒரு $1.8 பில்லியனை தள்ளுபடி செய்துவிட்டது. புதிய வட்டி வீத வெட்டுக்கள் டாலரின் சரிவை அதிகமாக்கத்தான் செய்யும்; ஏற்கனவே இது யூரோ, யென் இன்னும் பிற நாணயங்களுக்கு எதிராக வரலாறு காணாத அளவு வீழ்ந்தது, அல்லது கிட்டத்தட்ட வரலாறு காணாத குறைப்பிற்கு வந்துவிட்டது. டாலரின் சரிவு அமெரிக்க வணிகத்திற்கு நிதி வருவதில் தீவிர விளைவுகளை கொடுக்கும் என்பற்கான அடையாளங்கள் வந்துவிட்டன. டாலர் சரியும்போது, வெளி முதலீட்டாளர்கள் அவர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்துள்ள பணத்தை, அமெரிக்காவின் தற்போதைய கணக்கு பற்றாக்குறைக்காக நிதி கொடுக்கையில் இழப்புக்களை பெறுகின்றனர். Glovista Investments ஐ சேர்ந்த கார்லோஸ் அசிலிஸ் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் கூறினார்: "உலகம் முழுவதும் நிதிய நெருக்கடி பற்றிக் குவிப்பு காட்டுகிறது; அமெரிக்கா உண்மையில் அழுத்தத்தின் மையப் பகுதியாக உள்ளது. இதன் விளைவாக அமெரிக்காவில் இருந்து மூலதனம் வெளியேறுவதை காண்கிறோம். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறியது: "இது ஒரு சேமிப்புக் குறைவான, கடன் அதிகமுள்ள பொருளாதாரத்திற்கு, நாள் ஒன்றுக்கு $2 பில்லியன் வெளியில் இருந்து வருவதை நம்பியிருக்கும் பொருளாதாரத்திற்கு கவலை கொடுக்கும் நிலையாகும் [...] ஆனால் வெளிநாட்டு பணம் அமெரிக்காவிற்கு வெளியில் இருந்து தொடர்ந்து கொட்டினாலும், இந்த வரத்து குறைந்து கொண்டிருக்கிறது. 2007ல் அமெரிக்க நீண்ட கால பத்திரங்கள், பங்குகள் ஆகியவற்றில் வெளிநாட்டார் எடுத்துக் கொண்டது $596 பில்லியன் ஆகும்; இது 2006ல் இருந்த $722 ஐ விடக் குறைவாகும்; இதைத்தான் நிதி துறைத் தகவல் தெரிவிக்கிறது. நிதித் துறை புதிய அறிக்கை ஒன்றின்படி, ஜனவரி மாத வரத்துக்கள் $37.4 பில்லியன் என்று டிசம்பர் மாதத்தில் இருந்த $72.7ல் இருந்து குறைந்ததை காட்டுகின்றன; இது வணிகப் பற்றாக்குறையில் இருக்கும் $58.2 பில்லியனை சமாளிக்கப் போதாது. இத்தகைய கவலைகள் 0.75 சதவீத குறைப்பு அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கியின் கொள்கை இயற்றுதல், அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கியின் பகிரங்கச் சந்தையின் கொள்கை ஆகியவை பற்றி ஏன் முரண்பாடான கருத்துக்கள் உள்ளன என்பதை விளக்குகின்றன. பத்து உறுப்பினர்களில் இருவர், டல்லாஸ் மத்திய ரிசேர்வ் வங்கியின் ரிச்சார்ட் டபுள்யூ பிஷர், பிலடெல்பியாவின் மத்திய ரிசேர்வ் வங்கி சார்ல்ஸ் முதல் பிளோசர் ஆகியோர் நடவடிக்கையை எதிர்த்து வாக்களித்தனர்; அவர்கள் ஒரு குறைந்த விகித வெட்டை விரும்புகின்றனர் என்பதை அதன் மூலம் குறிப்புணர்த்தினர். திங்கள் மற்றும் செவ்வாயன்று வெளிவந்த பொருளாதாரத் தகவல் குறிப்புக்கள் பெருகிய முறையில் பொருளாதாரத்தின் பரந்த பிரிவில் தாக்கம் இருப்பதும் வோல் ஸ்ட்ரீட்டை அதிர்வுக்கு உட்படுத்தும் நிதியக் கொந்தளிப்பையும் காட்டியுள்ளன. திங்களன்று வெளியிடப்பட்ட அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கியின் அறிக்கை எதிர்பாராமல் பெப்ருவரி மாதம் அமெரிக்க உற்பத்தி செயற்பாடுகளில் 0.5 சதவீத சரிவை தீவிரமாகக் காட்டியது. அமெரிக்க சில்லறை விற்பனைகள் 0.6 சதவீதம் சரிந்தன; நுகர்வோர் தட்டுமுட்டு பொருட்கள், கருவிகள் மற்றும் கார்கள் வாங்குவதில் சரிவு முன்னின்றது. கார் உற்பத்தி 1 சதவிகிதம் குறைந்தது; பயன்பாடுகள் உற்பத்தி 3.7 சதவிகிதம் குறைந்தது. வீடுகள் சரிவு 0.6 சதவிகிதம் என்று பெப்ருவரியில் இருந்ததாக அமெரிக்க வணிகத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கட்டிடங்கள் கட்டும் செயல்கள், வருங்காலத் திட்டங்கள் பற்றிய அடையாளம், 7.8 சதவிகிதம் குறைந்து ஆண்டுக்கு 978,000 வீடுகள் என்று சரிந்தன; இது செப்டம்பர் 1991ல் இருந்து மிக குறைவானது ஆகும். பணவீக்கமும் உயர்ந்து கொண்டிருக்கிறது. அடிப்படை உற்பத்தியாளர் விலைக் குறியீடு கடந்த மாதம் 0.5 சதவிகிதம் --ஆண்டுவிகிதம் 6.2 என-- உயர்ந்து வோல் ஸ்ட்ரீட்டின் எதிர்பார்ப்பான 0.2 உயர்வையும் மிஞ்சியது. உயர் எரிபொருள் விலை உயர்வினால் தாக்கப்பட்டுள்ள அமெரிக்க விமான நிறுவனங்கள் பெரும் குறைப்புக்களையும் வேலை வெட்டுக்களையும் அறிவித்துள்ளன. டெல்டா ஏர்லைன்ஸ் தான் 30,000 ஊழியர்களுக்கு முன்கூட்டி ஓய்விற்கான திட்டத்தை அளிக்க இருப்பதாகவும், திட்டம் தோல்வியுற்றால், குறைந்தது 2,000 வேலைகளை பணிமுடக்கம் மூலம் அகற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 45 விமானங்களை தரையிலேயே இருத்தப் போவதாகவும் அதன் போக்குவரத்து திறனை அமெரிக்காவிற்குள் 10 சதவீதம் குறைக்கப் போவதாகவும் அது அறிவித்துள்ளது. யுனைட்டட் ஏர்லைன்ஸும் 20 விமானங்களை தரையில் இருத்தப் போகும் திட்டத்தை அறிவித்துள்ளது. |