: செய்திகள்
ஆய்வுகள் : வட
அமெரிக்கா
What is behind US-Taliban talks?
அமெரிக்க-தலிபான் பேச்சுக்களுக்கு பின்னால் என்ன உள்ளது?
By Alex Lantier
29 October 2008
Use this version
to print | Send
this link by email | Email
the author
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நேரடியாக
தொடக்கும் அமெரிக்காவின் திட்டங்களை பற்றி நேற்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தகவல்
கொடுத்துள்ளது. ஒரு பழமைவாத நாளேடான ஜேர்னல் இந்தத் தகவலை முதலில் கொடுத்துள்ளது
என்பது ஒரு பெரிய செய்தி ஊடகப் பரபரப்பு அல்ல; அரசாங்கக் கொள்கையில் இருக்கும் திட்டமிட்ட மாற்றம்
பற்றிய அறிவிப்புத்தான் இது.
"அமெரிக்கா தாலிபான் கூறுபாடுகள் சிலவற்றுடன், ஆப்கானிஸ்தானை முன்பு
ஆண்டுவந்த ஆயுதமேந்திய இஸ்லாமியக் குழு, அல்கொய்தாவிற்கு பாதுகாப்பு கொடுத்த குழுவுடன் பேச்சு வார்த்தைகள்
நடத்துவது பற்றி தீவிரமாக ஆலோசிக்கிறது; ஒரு சில மாதங்களுக்கு முன்பு இத்தகைய பெரும் கொள்கைமாற்றம்
என்பது நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்திருக்கும்." என்று ஜேர்னல் எழுதியுள்ளது. இத்தகைய
பேச்சுக்கள் பற்றிய விவரங்கள் "ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மூலோபாயம் பற்றிய வெள்ளை மாளிகையில் உள்ள
இரகசிய மதிப்பீட்டு ஆவணத்தில் வரைவு பரிந்துரையில் உள்ளது" என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இத்திட்டங்கள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நிலைமை தீவிரமாக சரிந்துள்ளதை தீர்க்க
முற்படுகின்றன. நாடு முழுவதும் வன்முறை படர்ந்துள்ளது; அண்டை பாக்கிஸ்தானிய பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளிலும்
பரவியுள்ளது. அங்கு ஏற்கனவே அமெரிக்க ஆதரவுடைய அரசாங்கம் அமெரிக்க குண்டுவீச்சுக்கள் மற்றும் தலிபன்
போராளிகளுக்கு எதிராக அமெரிக்க தரைப்படை பல இடங்களில் ஊடுருவியதற்கு தடைசொல்லாது இணங்கியதால்
குறைமதிப்பிற்கு ஆளாகியுள்ளது. தாலிபான் மீதான அமெரிக்கப் போர் முக்கிய அமெரிக்க நட்பு நாடுகளையும்
பகைத்துள்ளது; அவை 1990களின் நடுப்பகுதியில் அமெரிக்க குழாய்த்திட்ட நலன்களுக்காக அமெரிக்கா தலிபான்
போராளிகளை ஒழுங்கமைக்கும் பணியில் உதவியவை: செளதி அரேபியாவின் மத குருமார் அமைப்பு மற்றும் பாக்கிஸ்தானின்
சக்தி வாய்ந்த இராணுவ உளவு அமைப்பான ISI
எனப்படும் Inter-Service Intelligence
யும் இதில் அடங்கும்.
தலிபானை அரக்கத்தனமாக சித்தரிக்கும் அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு
எதிரான போர்" வனப்புரை ஒரு புறம் இருந்தாலும், அமெரிக்க-தலிபான் பேச்சுக்கள் ஒன்றும் புதிதல்ல.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையெடுப்பு 2001ல் நிகழ்ந்தபோது ஒப்புமையில் குறைவான துருப்புக்கள்தான்
இருந்தன; அமெரிக்கப் படைகள் நாட்டை ஆக்கிரமிப்பது என்பது ஆப்கானிஸ்தானின் அடிபணியாத பழங்குடி
உயரடுக்கை சூழ்ச்சியாய் கையாளலில்தான் நம்பியிருந்தது. ஜேர்னலிடம் அரசுத்துறை அதிகாரி ஒருவர்
கூறினார்: "நாங்களும் ஆப்கானியர்களும் பழங்குடி மக்களிடம் அன்றாடம் மாவட்ட அளவில் பேச்சு வார்த்தைகளை
நடத்துகிறோம். சில சமயம் அவர்கள் தலிபான்கள் அல்லது அவர்களுடைய ஆதரவாளர்களாகக்கூட இருக்கும்.
பலநேரமும் அவர்கள் கூறுவது 'எங்களுக்கு வேண்டியதை கொடுத்தால், நாங்கள் ஆயுதங்களை களைந்துவிடுவோம்'
" என்பதாகும்.
அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் ஆட்சியின் அதிகாரிகள் "சமீப
வாரங்களில் செளதி அரேபியாவில்" தலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியதாகவும் ஜேர்னல்
குறிப்பிட்டுள்ளது.
ஆனால் தலிபானுடனான பேச்சுவார்த்தைகளை ஆபிரிக்க கொள்கை முறையில்
மேற்கொள்ளும் நடவடிக்கையை தோற்றுவிக்கும் முயற்சிகளில் சில தடுப்புக்களுடன்தான் அமெரிக்க அதிகாரிகள்
உள்ளனர். உளவுத்துறை அதிகாரி ஒருவர் ஜேர்னலிடம் கூறினார்: "சில அமெரிக்க அதிகாரிகள் தலிபான்
தலைவர்களுடன் முறைசாரா வகையில் அமைதியாக பேசுகின்றனர்; ஆனால் இராணுவத்தை பொறுத்தவரையில்
அவர்களை கைதுசெய்வதில்தான் அதிக அக்கறை கொண்டுள்ளது." அமெரிக்க-தலிபான் பேச்சுவார்த்தைகள் பற்றிய
திட்டம் கசியவிடப்பட்டுள்ளமை கருத்து தயாரிப்பாளர்களுக்கும் வெளிநாடுகளில் இருக்கும் முக்கியமாக
ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தானில் உள்ள அரசியல் நோக்கர்களுக்கும் ஒரு அடையாளத்தை, வாஷிங்டன் அத்தகைய
வரம்புகளை தன்மீதே சுமத்திக் கொள்ளாது என்பதைக் காட்டும் அடையாளம் ஆகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆளும் உறுப்பினர்களில் ஏற்படும் மாற்றம்
--வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி மற்றும் தளபதி டேவிட் பெட்ரீயஸ் அமெரிக்க மத்திய
கட்டுப்பாட்டிற்கு உயர் பதவி பெற்று செல்வதால் ஏற்படும் மாற்ங்கள், ஆப்கானிஸ்தானின்மீது உள்ள அமெரிக்க
படைகள்மீது அவருக்கு இதனால் கிடைக்கும் அதிகாரம் ஆகியவை--அமெரிக்காவின் கொள்கை இயற்றுபவர்களுக்கு
"பயங்கரவாதத்தின் மீதான போர்" பற்றி சில மாறுதல்களை நடத்த வாய்ப்பைக் கொடுக்கிறது.
பெட்ரீயசின் வரலாறு இவ்விதத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது.
ஈராக்கில் அமெரிக்கப் படைகளின் தளபதியாக இருக்கையில் அவர் நடத்திய "எழுச்சி செயல்பாட்டை"
ஆப்கானிஸ்தானிலும் நடத்துவதற்கு அவர் அங்கு அனுப்பப்படுகிறார்.
அன்பர் மாநிலத்தில் சுன்னி பழங்குடியினர், மஹ்தி இராணுவத்தின் சில பிரிவுகள்,
பெரிய நகரங்களில் இருக்கும் சுன்னிப் போராளிகள் என்று ஈராக்கில் அவர் உள்ளூர் தலைவர்கள் பலருக்கு விலை
கொடுத்தார். இதன் பின்பு ஈராக்கில் அன்பார் மாநிலம் பின்னர் பகுபாக, பாக்தாத், பஸ்ரா என்று
அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக் முழுவதும் எழுச்சி செய்து தங்களுடன் நட்பு கொள்ள மறுப்பவர்களை படுகொலை
செய்தன. கணக்கிலடங்காத ஈராக்கியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அமெரிக்க படையினர்கள் இறந்ததை அடுத்து,
அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஈராக்கிய எதிர்ப்பு குறைந்தது. அமெரிக்கச் செய்தி ஊடகம் மற்றும் அரசியல்
வட்டாரங்கள் இந்த எழுச்சியை பெரும் வெற்றி என்று பாராட்டின.
இப்பொழுது ஆப்கானிஸ்தானிற்கும் இந்த எழுச்சி வரவுள்ளது. குறைந்தது 12,000
கூடுதலான அமெரிக்க படையினர்கள் அங்கு சென்றடைவர். தலிபானுடன் அமெரிக்க பேச்சுவார்த்தைகள் கொள்கை
பற்றி பெட்ரீயஸ் பகிரங்கமாக ஒப்புதல் கொடுத்ததாக ஜேர்னல் குறிப்பிட்டுள்ளது. அக்டோபர் 8
அன்று ஆப்கானிய கொள்கை பற்றி Heritage
Foundation சிந்தனைக்குழுவில் நடத்திய உரை ஒன்றில் அவர்
கூறினார்: "பகைவர்களுடனும் பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டும். அவர்களுள் இயன்ற வரை பலரோடும்
சமரசம் காணவேண்டும்; அதே நேரத்தில் உண்மையாக சமரசத்திற்கு இடம் இல்லாதவர்கள் எவர் என்பதை அடையாளம்
கண்டுவிட முடியும்."
இவ்விதத்தில் ஆப்கானிய பழங்குடி தலைவர்களை கவனமாக இனம் பிரித்தல் மற்றும்
ஒவ்வொருவருக்கும் அவர்கள் மறுக்க முடியாத அளிப்பைக் கொடுத்தல் என்ற கொள்கையை பெட்ரீயஸ் கண்காணிப்பார்.
போராளித் தலைவர்களை பொறுத்தவரையில் அவர்கள் அமெரிக்க இராணுவக் கொள்கையுடன் இணங்கி நடந்தால்
உரிய வெகுமதி பெறுவர். "சமரசத்திற்கு இடம் இல்லாதவர்களை" பொறுத்தவரையில், வான்வழித்தாக்குதல்கள்,
சிறப்பு இராணுவ சோதனைகள் ஆகியவை தொடரும்.
இத்தகைய கொள்கை மாற்றம் குறிப்பிடத்தக்க வகையில் முக்கியமானது; வெற்றிபெறும்
வாய்ப்பு உடைய ஜனாதிபதி வேட்பாளரான ஜனநாயகக் கட்சியின் பராக் ஒபாமா ஆப்கானிஸ்தான் போரில் போதிய
கவனம் இல்லாதது பற்றி நீண்ட காலமாக புஷ் நிர்வாகத்தை தாக்கியுள்ளார்; பாக்கிஸ்தான் இலக்குகளுக்கு எதிராக
தாக்குதல்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இரு ஜனாதிபதி வேட்பாளர்களான ஒபாமா மற்றும் குடியரசு கட்சியின் ஜோன் மக்கெயின்
ஆகியோர் அமெரிக்க-தலிபான் பேச்சுக்களுக்கு ஆதரவு கொடுத்து, "எவர் அடுத்த மாத தேர்தல்களில் வெற்றி பெற்றாலும்
இக்கொள்கை நடைமுறைக்கு வரும் விதத்தில் உதவி இருக்கும்" என்று ஜேர்னல் குறிப்பிட்டுள்ளது.
2008 அமெரிக்க தேர்தல்களின் மைய உண்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஒபாமா வெற்றிபெறக் கூடும் என்ற நிலையில், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கூடுதலான தந்திரோபாயம்
நிறைந்த, அதே நேரத்தில் சிறிதும் ஈவிரக்கமற்ற பிரதிநிதிதான் அதிகாரத்திற்கு வருவார். |