: செய்திகள்
ஆய்வுகள் : வட
அமெரிக்கா
The US election campaign: a balance sheet
அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரம்: ஒரு இருப்பு நிலைக் குறிப்பு
By Barry Grey
28 October 2008
Use this version
to print | Send
this link by email | Email
the author
தேர்தல் தினத்திற்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கையில், கருத்துக் கணிப்புக்கள் பராக்
ஒபாமாவும் ஜனநாயகக் கட்சியும் ஒரு கணிசமான வெற்றியை அடையக்கூடும் என்று குறிப்பு காட்டுகின்றன. வெள்ளை
மாளிகை மீது கட்டுப்பாட்டைக் கொள்ளுவதுடன், ஜனநாயகக் கட்சியினர் கூட்டாட்சி சட்டமன்றத்தின் இரு பிரிவுகளிலும்
தங்கள் பெரும்பான்மையை அதிகரித்துக் கொள்ளும் வகையில் செனட் மன்றத்தில் சட்ட முன்மொழிவுகள் மீது கட்டாயமாக
வாக்களிக்கும் வகையில் பிலிபஸ்டர் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தேவையான 60-49 பெரும்பான்மையையும்
அடையக் கூடும்.
ஒரு ஏறுமாறான ஜனநாயகக் கட்சி வெற்றியை ஒபாமா நிர்வாகத்தில் முக்கிய
கொள்கை மாற்றங்களுக்கான வாக்கு என்று எடுத்துக் கொள்ளக் கூடாது, அத்தகைய மாற்றம் வருவதற்கான வாய்ப்பு
இல்லை என்பதை விளக்குவதற்கான காரணங்களை ஏற்கனவே ஜனநாயகக் கட்சி தலைவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
நியூ யோர்க் டைம்ஸ் ஞாயிறன்று முதல் பக்கக் கட்டுரையில் ஜனநாயகக்
கட்சிக்கு கணிசமான வெற்றி பற்றிய உட்குறிப்புக்களை அவதானித்திருக்கையில், சுகாதாரப் பாதுகாப்பு, வீடுகள்
முன்கூட்டி விற்கப்படல், வேலைகள் மற்ற சமூக பிரச்சினைகள் பற்றிய மக்கள் எதிர்பார்ப்புக்களை "மன்றத்திலும் செனட்டிலும்
கூடுதலான எண்ணிக்கை இருந்தபோதிலும் கூட நிறைவேற்றுவது கடினமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளது.
டைம்ஸ் குறிப்பிட்டது: "ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையின் தன்மை, இடைநிலைவாதிகள்,
பழமைவாதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது மூலம் விரிவடைந்துள்ளதும், வெளிப்படையான சிந்தனைப் போக்கு செயற்பட்டியலை
தொடர்வதை ஜனநாயகக் கட்சிக்கு சிரமமாக்கும் என்றும் கட்சியினர் கூறினர்."
ஜனநாயகக் கட்சி தலைவர்கள் "மிக அதிக நம்பிக்கை கொடுக்கும் சட்டங்ளை
இயற்றுவது" குறித்து சட்ட மன்ற செயற்பட்டியலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற குறிப்பைத் தெரிவித்து
தொடர்ந்த கருத்துக்களையும் செய்தித்தாள் மேற்கோளிட்டது. அவையின் பெரும்பான்மைக் கட்சி தலைவர், மேரிலாண்டின்
ஸ்டெனி ஹோயர் டைம்ஸிடம் கூறினார்," தாங்கள் வெற்றிபெற்றதற்கு காரணம் சுயேட்சைகளுக்கும் பாதிப்பில்லாத
குடியரசுக் கட்சியினருக்கும் விடுத்த வேண்டுகோள் மற்றும் அதனை தொடர்ந்து செய்வதை விரும்பப் போகின்றார்கள்
என்பதை தெளிவாகப் புரிந்திருக்கும் புதிய உறுப்பினர்களை பெறப் போகிறோம்."
தேர்தல்களின் மிக முக்கியமான கூறுபாடு முழுப் பிரச்சாரமும் இரு கட்சிகளில் எதுவும்
எதிர்பாராத பொருளாதார நெருக்கடியினால் மறைக்கப்பட்டு விட்டது. சில பிரச்சார நாடகவகையிலான
உத்திகளைத் தவிர, இரு வேட்பாளர்களும் நெருக்கடியை எதிர்கொண்ட விதம் ஒன்றாகத்தான் இருந்தது. எத்தனை
சகதியை வாரி இறைத்தாலும், அமெரிக்க ஆளும் உயரடுக்கு தொடர்புடைய வர்க்க நலன்கள் பிரச்சினை
வெளிப்பட்ட உடன், ஒபாமாவும் அவருடைய குடியரசுக் கட்சிப் போட்டியாளர் ஜோன் மக்கெயினும் மக்கள்
எதிர்ப்பை மீறி வங்கிகளுக்கு பிணை எடுப்பிற்காக பல டிரில்லியன் டாலர்கள் பொதியை அளிக்க ஒப்புதலைக்
கொடுத்தனர்.
ஒபாமா வெற்றி என்பது என்ன பொருளைக் கொடுக்கும்? "நம்பிக்கை",
"மாற்றம்", "தற்போதைய நிலையின் கடுமையான நெருக்கடி" போன்ற பிரச்சாரத்தின் அடுக்குப் பேச்சுக்களின்
உண்மைத் தன்மை என்பது அம்பலமாகும். அமெரிக்க மக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் நலன்களை இடைவிடாமல் தொடரும் உறுதிப்பாட்டிற்கு அர்ப்பணித்துக் கொள்ளும் ஒரு
நிர்வாகத்தைத்தான் எதிர்கொள்வர். ஒபாமாவிற்கும் புஷ்ஷிற்கும் இடையே முக்கிய வேறுபாடு அவர்கள்
கொள்கைகளில் இருக்கும் வலதுசாரித் தன்மை அல்ல, எப்படி இக்கொள்கைகள் திறமையுடன்
செயல்படுத்தப்படுகின்றன என்பதாகத்தான் இருக்கும்.
பிரச்சாரத்தின் இறுதிக் கட்டம் வந்துள்ள நிலையில், பெருமந்த நிலைக்கு பின்னர் மிக
ஆழ்ந்த தன்மையுடையது என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள ஒரு பொருளாதார நெருக்கடிக்கு நடுவே, அமெரிக்க
ஏகாதிபத்தியம் அதன் இரத்தம் கொட்டும் செயல்பாட்டை தொடர்கிறது; பாக்கிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும்
நடக்கும் ஏவுகணைத்தாக்குதல்கள் இப்பொழுது சிரியாவிலும் ஊடுருவியுள்ளன. முழுத் தேர்தலும் நிலவுகின்ற அரசியல்
நடைமுறையின் திவால்தன்மை மற்றும் அமெரிக்க ஜனநாயக முறையின் தோல்வி ஆகியவற்றின் வெளிப்பாடுதான்.
தேர்தல் விளைவு எப்படி இருந்தாலும் மீண்டும் 2002, 2004, 2006 தேர்தல்களில்
இருந்தது போலவே, புஷ் நிர்வாகத்தின் இராணுவவாதம் மற்றும் ஜனநாயக விரோதக் கொள்கைகளுக்கான மகத்தான
மக்கள் எதிர்ப்பிற்கு உண்மையான வெளிப்பாடு எதனையும் இரு கட்சி முறை வடிமைப்பிற்குள் வெளிப்படுத்த முடியாது;
போர்பற்றிய அடிப்படைக் கொள்கைகளும் சமூகப் பிற்போக்குத்தனமும் தொடரும்.
மக்களை திருப்தி செய்யும் வகையில் ஒபாமா "நாட்டை ஒன்றாகக்
கொண்டுவருதல்", வறியவர்களையும் செல்வந்தர்களையும் இணைக்கும் முயற்சி உண்டு என்ற சொற்ஜாலங்களை
பொறுத்தவரை, புஷ்ஷைப் போல் இவரும் நிதியப் பிரபுத்துவத்தின் அரசியல் பிரதிநிதிதான் என்பது மிக விரைவில்
காட்டப்படும்.
கற்றுக் கொள்ளவேண்டிய அடிப்படைப் படிப்பினை இதுதான்: அமெரிக்க தொழிலாள
வர்க்கம் ஜனநாயகக் கட்சி மற்றும் முதலாளித்துவ அரசியலின் முழு கட்டமைப்பில் இருந்து முறித்துக் கொண்டு சுதந்திரமாக்கி
கொள்ள வேண்டியதன் அவசியத்தை எதிர்கொள்கிறது. வளர்ந்துவரும் சமூக இன்னல்கள் மற்றும் இன்னும் கடுமையான
முறையில் இராணுவ வாதம் வன்முறையில் வெடிப்பது இவற்றை தவிர்ப்பதற்கு ஒரே மாற்றீடு நிலவும் பொருளாதார,
சமூக ஒழுங்கிற்கு முற்றிலும் எதிரான எதிர்ப்பில் ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க அரசியல் இயக்கத்தை
கட்டியமைப்பதுதான்; அது உண்மையான ஜனநாயகம் மற்றும் சமூக சமத்துவம் என்பதை அடிப்படையாக
கொண்டிருக்கும் --அதாவது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்டிருக்கும்.
ஜெரி வையிட் ஜனாதிபதி பதவிக்கு, பில் வான் ஓகென் துணை ஜனாதிபதி பதவிக்கு
என்று நிறுத்திய வகையில் சோசலிச சமத்துவக் கட்சி தேர்தலில் பங்கு கொள்கிறது; இதற்கு ஒரு அடிப்படை
நோக்கம்தான் உள்ளது; வாக்களிப்பிற்கு பின்னர் வளரக்கூடிய தொழிலாள வர்க்கத்தின் அரசியல் போராட்டங்களுக்கு
தளம் அமைத்தல் மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளில் உள்ள வர்க்கப் பிரச்சினைகளை தெளிவுபடுத்துல் என்பதே
அது. |