World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

OECD report ranks US third worst in inequality and poverty

வறுமை மற்றும் சமத்துவமின்மையில் மூன்றாவது மோசமான நாடாக அமெரிக்காவை OECD அறிக்கை குறிப்பிடுகிறது

By Patrick O'Connor
22 October 2008

Use this version to print | Send this link by email | Email the author

முப்பது உறுப்பு நாடுகள் கொண்ட குழுவில், வருமான சமத்துவமின்மை மற்றும் வறுமை அளவில் மூன்றாவது மோசமான நாடாக அமெரிக்கா இருப்பதாக பாரீசை மையமாகக் கொண்ட பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைப்பு நேற்று (21.10.2008) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. இந்த பட்டியலில் மெக்சிகோ மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முன்னிரு இடங்களில் உள்ளன. ஜப்பான், தென் கொரியா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் மேற்கத்திய ஐரோப்பாவிலுள்ள OECD நாடுகள் அனைத்தும் போலாந்து மற்றும் ஹங்கேரி உட்பட அமெரிக்காவை விட சிறந்த புள்ளிகளை பதிவு செய்துள்ளன.

"பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைப்பு நாடுகளில் வருமான பகிர்வு மற்றும் வறுமையின் சமத்துவமின்மை வளர்கிறதா?" என்ற தலைப்பில் வெளியான இந்த 300 பக்க அறிக்கை, உறுப்பு நாடுகள் அளித்த கடந்த இரண்டிலிருந்து மூன்று தசாப்தங்களின் தரவுகளை கடந்த மூன்று ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வெளியிடப்பட்டதாகும். OECD நாடுகளின் மூன்று காலாண்டுகளில் சமத்துவமின்மை மற்றும் வறுமை அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் இந்த அறிக்கை, "சமீபத்திய தசாப்தங்களில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி ஏழைகளை விட பணக்காரர்களுக்கே பலன் அளித்துள்ளது" என்பதையே தனது இறுதி முடிவாக குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவை பற்றி அவ்வறிக்கை விளக்கியதாவது: "நீண்டகால போக்காக 1970களின் தொடர்ச்சியாக, 2000த்திலிருந்து வருமான சமத்துவமின்மை விரைவாக அதிகரித்துள்ளது... அமெரிக்காவின் பணக்கார வீடுகள் மத்திய மற்றும் ஏழை வருமான குழுக்களை பின்னுக்கு தள்ளி உள்ளன. இது போல் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது, ஆனால் இந்த போக்கு அமெரிக்காவை போன்று மிக வலிமையாக வேறெங்கும் ஏற்பட்டிருக்கவில்லை. நுகர்வுசக்தி சமநிலையில் (Purchasing Power Parity) 10 சதவீதம் பணக்காரர்களின் சராசரி வருமானம் 93,000 அமெரிக்க டாலராக உள்ளது. இது பிற OECD நாடுகளை விட அதிகபட்ச அளவாகும். எவ்வாறிருப்பினும், அமெரிக்க குடிமக்களில் 10 சதவீத ஏழைகள் ஆண்டுக்கு 5,800 அமெரிக்க டாலரை மட்டுமே வருமானமாய் பெறுகிறார்கள். இது பிற OECD நாடுகளின் சராசரியை விட சுமார் 20 சதவீதம் குறைவாகும்.

உண்மையில் இந்த வருமான புள்ளிவிபரங்கள் மிக பெரிய செல்வந்தர்கள் மற்றும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளுக்கு இடையே இருக்கும் இடைவெளியை வெளிப்படுத்தி காட்டவில்லை. செல்வவள சமத்துவமின்மையானது, குறிப்பிடப்பட்ட வருமான சமநிலையின்மையை விட மிக அதிகளவில் உள்ளது. மக்கள்தொகையில் 1 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் ஒரு சிறு மேற்தட்டு அடுக்கு, ஊக வணிகத்தின் பல்வேறு வடிவங்களின் மூலமும், நிதி சுரண்டல்கள் மூலமும் கடந்த மூன்று தசாப்தங்களில் முன்னொரு போதுமில்லாத அளவிற்கு செல்வங்களை குவித்து கொண்டுள்ளது. ஆனால் வரி ஏய்ப்பு திட்டங்கள் மற்றும் பிற செயல்முறைகள் மூலம் பெருமளவில் மறைக்கப்பட்டிருக்கும் இந்த செல்வங்களை பொருளாதார நிபுணர்களும், புள்ளியியல் ஆய்வாளர்களும் துல்லியமாக கணக்கெடுக்க முடியாமல் உள்ளது.

வீட்டுப்பொருட்களின் சொத்து விபரங்களை பல நாடுகள் சேகரிக்காததாலும், நாடுகளுக்கு இடையே செல்வவளத்தை ஒப்பிடுவதிலுள்ள பிற சிரமங்களாலும் செல்வவள சமத்துவமின்மையை விட்டு விட்டு வருமான சமத்துவமின்மையை பதிவு செய்திருப்பதாக OECD குறிப்பிட்டது. எவ்வாறிரும்பினும், ஒவ்வொரு நாட்டிலும் செல்வவள சமத்துவமின்மையானது வருமான பகிர்வை விட கணிசமான அளவில் அதிகமாகவே இருக்கும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. அமெரிக்காவில், முதல் 1 சதவீதத்தினர் 25 முதல் 33 சதவீதத்திற்கு இடையிலான மொத்த நிகர மதிப்பை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் போதிலும், முதல் 10 சதவீதத்தினர் தேசிய செல்வவளத்தில் 71 சதவீதத்தை கொண்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இது மொத்த வருமானத்துடன் ஒப்பிடும் போது 28 சதவீதமாகும்.

பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைப்பிலுள்ள நாடுகளுக்கு இடையே சராசரி வருமான சமத்துமின்மை 1980களின் மத்தியில் இருந்ததை விட 2000ம் ஆண்டுகளின் மத்தியில் 7 முதல் 8 சதவீதம் அதிகமாக இருந்ததாக காட்டும் கணிப்புகளையும் இந்த அறிக்கை மேற்கோள்படுத்தி காட்டியது. "இது மிகப் பெரிய உயர்வாக தோன்றாது. ஆனால், இரண்டு தசாப்தங்களாக வருமானங்கள் ஒவ்வொரு மட்டத்திலும் உயர்ந்திருந்த போதினும், இது 50 சதவீத ஏழைகளிடமிருந்து 880 டாலரை எடுத்து, 50 சதவீத பணக்காரர்களுக்கு 880 டாலரை கொடுப்பதற்கு இணையானதாகும்." என்று அந்த அறிக்கை விளக்கியது.

தேசிய மத்திய தர வருமானத்தில் பாதிக்கும் குறைவாக பெறுபவர்கள் தான் வீட்டுப்பொருட்களின் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் என்று OECD அறிக்கை வரையறுத்தது. இந்த அடிப்படையில், அமெரிக்க மக்கள்தொகை 17 சதவீத ஏழைகளைக் கொண்டுள்ளது. இது அபிவிருத்தி அடைந்த அனைத்து பொருளாதார நாடுகளை விட உயர்ந்த அளவாகும் என்பதுடன் மெக்சிகோ மற்றும் துருக்கியை விட மிக குறைந்த அளவில் தான் அமெரிக்கா பின்தங்கி உள்ளது.

மக்கள் வறுமையிலேயே இருக்கும் கால அளவிலும் அமெரிக்கா பிற OECD நாடுகளை விட மோசமாகவே உள்ளது. அறிக்கையின்படி, பெரும்பாலான உறுப்பு நாடுகளில் சுமார் பாதி ஏழை மக்கள் மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே வறுமை கோட்டைத் தாண்டி விடுகிறார்கள். ஆனால் இதிலும் ஆழ்ந்த சமநிலையின்மை கண்டறியப்பட்டுள்ளது; "தொடர்ந்து நீடிக்கும் வறுமையை டென்மார்க் மற்றும் ஹாலாந்து ஆகியவை 2 சதவீதத்திற்கும் குறைவாகவே கொண்டுள்ளன, அதுவே அமெரிக்க புள்ளிவிபரத்தின்படி 7 சதவீதமாக உள்ளது.

"வாய்ப்புகளில் சமத்துவமின்மையிலும்" அமெரிக்கா மோசமான நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. தந்தைக்கும், மகன்களுக்கும் இடையே வருமான அளவுகளின் ஒப்பீட்டளவில், உறுப்பு நாடுகளுக்கு OECD அளித்திருக்கும் "சம்பளம் மாறும் குறியீடு" விகிதத்தில் பூஜ்ஜியம் என்றால் இளம் தலைமுறை, அவரின் தந்தைக்கு சமமான சம்பளத்தை பெறுகிறார் என்பதாகும். அதுவே 100 என்று குறிப்பிட்டிருந்தால் இரண்டு தலைமுறை சம்பளங்களுக்கும் தொடர்பில்லை என்று பொருள்படும். தலைமுறைகளுக்கு இடையே வருமான சமத்துவமின்மை அளவுகள் மற்றும் சம்பள வளர்ச்சிக்கு இடையே தலைகீழான தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கனடா, நோர்வே, பின்லாந்து மற்றும் டென்மார்க் போன்ற பல நாடுகள் சம்பளம் மாறும் குறியீடு 80திற்கும் மேலாக பதிவாகி உள்ள போதில், அமெரிக்கா வெறும் 50திற்கும் மேலாக மட்டுமே பெற்றுள்ளது.

இந்த பல்வேறு கண்டுபிடிப்புகள், அமெரிக்க சமூகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஆக்கிரமித்துள்ள வர்க்க பிளவுகள் தீவிரமடைவதைத் தான் குறிக்கிறது. அவர்கள் அமெரிக்காவிலுள்ள அசாதாரண சமூக சமத்துவமின்மையின் அளவுகளை பாதுகாப்பதில் அபிவிருத்தியடைந்த பல்வேறு வலதுசாரி உதிரி திட்டங்களுக்காக சம்பளத்தில் நியமிக்கப்படுகிறார்கள். தகுதி அல்லது "கடின உழைப்பு" ஆகியவற்றால் ஒன்றும் செய்ய முடியாது என்பதால் தனிநபர்களின் வருமானங்கள் பெரும்பாலும், அவர்கள் பிறந்த குடும்பம் மற்றும் சமூக சுற்றுப்புறங்களால் தீர்மானிக்கப்படுகிறது.

அதிகளவிலான சமூகச் செலவுகள் மற்றும் வறுமை மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்புகளையும் OECD அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. ஸ்கண்டினேவியன் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உழைக்கும் வயதுடைய மக்களுக்கான சமூக செலவுகள் (குடும்பத்திற்கான சலுகைகள் போன்றவை) 2005ல் தேசிய வருமானத்தில் சராசரியாக 7 முதல் 8 சதவீதமாக இருந்தது. அதற்கு பொருத்தமாக, வறுமையில் இருந்த உழைக்கும் வயதுடைய மக்களின் சதவீதம் 5 முதல் 8 சதவீதமாக இருந்தது. அமெரிக்கா, மெக்சிகோ, துருக்கி மற்றும் தென் கொரியாவில் உழைக்கும் வயதுடைய மக்களில் 12 முதல் 15 சதவீதத்தினர் வறுமையில் வாழ்ந்திருந்த போதினும், தேசிய வருமானத்தில் 2 சதவீதம் அல்லது அதற்கு குறைவாகவே அத்தகைய சலுகைகளில் செலவிடப்படுகிறது.

பரவி வரும் நிதிய நெருக்கடியும் மற்றும் தீவிரமடைந்து வரும் சர்வதேச பின்னடைவும் அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் பின்னோக்கி சென்ற வறுமை மற்றும் சமத்துவமின்மையின் போக்கை விரைவாக அதிகரிக்க உள்ளது.

இந்த முக்கிய அறிக்கைக்கு பொருந்தும் வகையில் OECDன் Observer இதழுக்காக, "சமநிலையற்ற வளர்ச்சி, சமநிலையற்ற பின்னடைவு?" என்ற தலைப்பிட்ட ஒரு கட்டுரையை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் ஆண்டனி அட்கின்சன் பிரசுரித்தார். அதில், "அறிக்கை பிரசுரமாகி இருக்கும் காலம், வாசகர் பின்வரும் கேள்வியை வெளிப்படையாக கேட்கத் தூண்டுகிறது: அடுத்த தசாப்தம் உலக வளர்ச்சிக்காக இல்லாமல் உலக பின்னடைவுக்காக இருந்தால் என்ன நடக்கும்?" என்று எழுதினார். "ஓர் உயரும் அலை அனைத்து படகுகளையும் காப்பாற்ற வில்லையானால், ஒரு மூழ்கடிக்கும் அலையால் அவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள்? பின்னடைவு வந்தால்... அது தொழிலாளர் படையின் விளிம்புகளில் உள்ளவர்களுக்கு நற்செய்தியாக இருக்காது.

சர்வதேச அளவில் வேலைவாய்ப்பின்மை அடுத்த ஆண்டு கூடுதலாக 20 மில்லயன் உயர்ந்து, ஒட்டுமொத்தமாக 210 மில்லியனை எட்டும் என்று திங்களன்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) இயக்குனர் ஜெனரல் ஜீவான் சோமாவியா அறிவித்தார். இந்த புள்ளிவிபரங்கள் சர்வதேச நிதிய அமைப்பின் பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் மற்றும் பல நாடுகளில் தொழிலாளர்கள் குறைப்பு குறித்த சமீபத்திய அறிக்கைகளால் திருத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டவை என்று ILO செய்தி வெளியீடு விவரித்தது.

நாளொன்றுக்கு 1 டாலருக்கும் குறைவாக வேலை செய்யும் உழைக்கும் ஏழைகளின் எண்ணிக்கை மேலும் 40 மில்லியனாக உயரலாம் மற்றும் நாளொன்றுக்கு 2 டாலருக்கு குறைவாக வேலை செய்வோர் எண்ணிக்கை 100 மில்லியனுக்கும் அதிகமாகலாம் என்றும் சோமாவியா கணித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தற்போதைய பொருளாதார சரிவும், அதிகரித்து வரும் பின்னடைவின் விளைவுகளும் விரைவாக எதிர்கொள்ளப்படாவிட்டால், இந்த கணிப்புகள் குறைவானவையே என்று நிரூபிக்கப்படலாம் என்றார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், ILO இயக்குனர் ஜெனரல், சர்வதேச நிதிய அமைப்பு மற்றும் உலக வங்கி அதிகாரிகளுடன் வாஷிங்டனில் நடந்த கூட்டத்தில் பேசுகையில், "சர்வதேச நிதியியல் அமைப்பு முறையினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவுகள் பெருநிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும், குடும்பங்களுக்கும் குழி தோண்டியுள்ளது. தொடர்ந்து உணவு மற்றும் எரிபொருள் விலைகள் உயர்ந்து வருகிறது. அதன் விளைவுகள் பின்னடைவுகளுக்கு முட்டு கொடுக்கின்றன. அது துல்லியமான ஒருங்கிணைந்த அரசு நடவடிக்கைகளால் கையாளப்படாவிட்டால், உலகிற்கு பெரும் கேடு விளைவிப்பதாகவும், கடுமையானதாகவும் இருக்கும்." என்றார்.

உலகமெங்கும் உள்ள அனைத்து உற்பத்தி திறனுக்கும், சமூக கட்டமைப்புக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்னர், மீண்டும் கடன்களின் பரிவர்த்தனை விரைவாக நடைபெற செய்ய வங்கியும், அரசியல் மேற்தட்டும் நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.