WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : உலக
பொருளாதாரம்
Warnings of recession send global share markets plunging
பொருளாதாரப் பின்னடைவு பற்றிய எச்சரிக்கைகள் உலகப் பங்குச் சந்தைகளை சரிவிற்கு
உட்படுத்தியுள்ளன
By Peter Symonds
25 October 2008
Use this
version to print | Send
this link by email | Email
the author
உலகப் பொருளாதாரம் ஓர் ஆழ்ந்த, நீடித்த பொருளாதாரப் பின்னடைவை
நோக்கி சென்று கொண்டிருப்பதற்கான கூடுதலான அடையாளங்கள் வெளிப்பட்ட நிலையில், உலகப் பங்குச் சந்தைகள்
வெள்ளியன்று மீண்டும் சரிந்தன. மிக அதிகமான வீழ்ச்சி ஆசியாவில் ஏற்பட்டது; அங்கு பெரிய ஏற்றுமதியாளர்கள்
அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள பங்கு சந்தைகள் சுருங்குவதால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
ஜப்பானின் நிக்கேய் 225 9.6 சதவிகிதம், இந்தியாவின் சென்செக்ஸ் 11 சதவிகிதம்,
தென் கொரியாவின் கோஸ்பி 10.6 சதவிகிதமாக சரிந்தன. ஆசியப் பகுதி முழுவதும் இத்தகைய காட்சிதான்
இருந்தது. ஹாங்காங்கின் ஹாங் செங் 8.3 சதவிகிதம், சிங்கப்பூரின்
Strait Times Index
8.3 சதவிகிதம் மற்றும் தைவானின் பங்குகள் 3.2 சதவிகிதம் என ஐந்து ஆண்டுகளிலேயே குறைவு என்ற முறையில்
சரிவுற்றன.
இப்பகுதியில் எட்டு உயர்மட்ட சந்தைகளில் வார இழப்புக்கள் மொத்தம் $820 பில்லியன்
ஆக இருந்தன என FactSet Research
குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. கோஸ்பி 20 சதவிகிதத்திற்கும் மேலாகவும், நிக்கேய் 12 சதவிகிதமும் சென்செக்ஸ்
கிட்டத்தட்ட 13 சதவிகிதமும் வீழ்ச்சியுற்றன.
மூன்றாம் காலண்டு இலாபத்தில் 44 சதவிகிதக் குறைவு என்று சாம்சுங் கூறியது மற்றும்
தன்னுடைய முழு ஆண்டு கணிப்பில் பாதி இலாபம் குறைந்து விடும் என சோனி கூறியதற்கு பீதியடைந்த முதலீட்டாளர்கள்
இவ்விதத்தில் விடையிறுப்பு கொடுத்தனர். விற்பனக் குறைவு, நிதிய அழுத்தம் மற்றும் வலுவான யென் ஆகியவை
தன்னுடைய இலாபக் குறைவிற்குக் காரணம் என்று சோனி கூறியது. முக்கிய ஜப்பானிய ஏற்றுமதியாளர்கள் அனைவரும்
நேற்று பெரும் இழப்பை அடைந்தனர். சோனி 14 சதவிகிதம், ஷார்ப் 13.7 சதவிகிதம், பானாசோனிக் 12
சதவிகிதம், நிக்கோன் 12.4 சதவிகிதம் மற்றும் டோயோடா 11.5 சதவிகிதமாக வீழ்ச்சியை கண்டன.
சரிந்து கொண்டிருக்கும் பங்கு விலைகளுக்கு நடுவே ஐரோப்பிய, ஆசியத் தலைவர்கள்
ASEM
என்னும் ஆசியா-ஐரோப்பா கூட்டத்தில் உலகத்தை தாக்கியுள்ள நிதிய நெருக்கடி பற்றி விவாதிக்க பெய்ஜிங்கில்
கூடினர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான Jose
Manuel Barroso முன்னோடியில்லாத நேரங்களில்
முன்னோடியில்லாத வகையிலான ஒத்துழைப்பை அனைவரும் தரவேண்டும் என்று வலியுறுத்தினார். "நாம் அனைவரும்
ஒன்றாக நீந்த வேண்டும் இல்லாவிடில் ஒன்றாக மூழ்கிவிடுவோம்" என்று அவர் எச்சரித்தார். "ஆசியாவும் இதில்
பங்கு கொள்ள வேண்டும்; குறிப்பாக சீனா இந்தியா போன்ற நாடுகள் பங்கு கொள்ள வேண்டும். புயலின் மையம்
அமெரிக்காவில் இருந்தது, ஆனால் இது ஒரு உலகப் புயல் ஆகும், உலகம் முழுவதும் இதன் பாதிப்புக்கள்
இருக்கும்."
சாதாரண பாதிப்பை விட ஆசியா கூடுதலான தாக்குதலைத்தான் பெறும் என்பது
ஏற்கனவே வெளிப்படையாகத் தெரிந்துள்ளது. இப்பகுதி மிக அதிகமாக ஏற்றுமதிகளை நம்பியிருப்பது எந்த உலக
வகை சரிவிற்கும் குறிப்பிடத்தக்க வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். 2007ம் ஆண்டு ஜப்பானை தவிர ஆசியா
முழுவதும் ஏற்றுமதிகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46.7 சதவிகிதம் என்று இருந்தன. மோர்கன் ஸ்ரான்லியின்
ஆசியத் தலைவர் Steven Roach
உடைய கருத்தின்படி இது 1997-98 ஆசிய நிதிய நெருக்கடியைக் காட்டிலும் 11 சதவிகிதம் அதிகமாகும்.
சர்வதேச கடன் நெருக்கடிக்கு பெரிதும் ஆளாகாமல் ஆசியா இருந்தாலும், உலகப் பொருளாதாரத்துடன்
உறுதியாக உயர்த்தப்படும் வகையில்தான் உள்ளது என்றார் ரோச்.
வேறுவிதமாகக் கூறினால் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருக்கும் வங்கிகள்
சொத்துக்களை இழந்து நஷ்டத்தை சரி செய்யும் வகையைப் போல், ஆசியாவும் "தப்பிப் பிழைப்பதற்கு"
உற்பத்தித் துறையில் அதன் மகத்தான கட்டமைப்பை பெரிதும் குறைக்க வேண்டும். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு
தெரிவித்த கருத்தில் IHS
Global Insight
உடைய இயக்குனரான வில்லியம் ஹெஸ் இதே போன்ற வகையில் எச்சரிக்கையை கொடுத்துள்ளார்: "இந்த
நெருக்கடி பூகோள சீரற்ற தன்மை வெளிவருவதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிதிய நெருக்கடிக்கும் அப்பால் பல
ஆண்டுகள் பலவீனமான ஆண்டுகள் இருக்கக் கூடும் என்று சந்தைகள் தெரிவிக்கின்றன; அதன் பின்னர்தான் ஆசிய
உற்பத்தித் துறையில் நிலைமை ஒழுங்குபடுத்தப்பட முடியும்.
பகுதி முழுவதும் ஏற்கனவே ஒரு விரைவான பொருளாதாரக் குறைப்பிற்கான
அடையாளங்கள் தெளிவாக உள்ளன. சில வர்ணனையாளர்கள் கருத்தின்படி, இரண்டாம் காலாண்டில் 3 சதவிகிதப்
பொருளாதார சுருக்கத்தை காட்டியுள்ள ஜப்பான் ஏற்கனவே மந்த நிலையில் இருக்கிறது எனப்படுகிறது.
சீனாவில் வளர்ச்சி விகிதங்கள் இன்னமும் உயர்ந்துதான் உள்ளன ஆனால் கடந்த ஆண்டு
இருந்த கிட்டத்தட்ட 12 சதவிகிதத்தில் இருந்து பெரிதும் இவ்வாண்டு மூன்றாம் காலண்டில் 9 என வந்துவிட்டன.
நாட்டின் உற்பத்திப் பகுதிகளில் மிகப் பெரிய ஆலைகள் மூடல், வேலை இழப்புக்கள் என்ற அலை வந்துள்ளதாக
தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
நேற்று தென் கொரியா நான்கு ஆண்டுகளில் மிகக் குறைந்த வளர்ச்சி விகித
எண்ணிக்கையை அதன் நடப்பு மூன்றாம் காலாண்டிற்கு அறிவித்துள்ளது --ஆண்டிற்கு 3.9 சதவிகிதம் என்ற அளவில் இது
உள்ளது. சர்வதேச தரநிர்ணய அமைப்பான Moody
சமீபத்தில் அடுத்த ஆண்டு தென் கொரியாவில் வளர்ச்சி விகிதம் 2.2 சதவிகிதம்தான் இருக்கும் என்று கணித்துள்ளது.
ஒத்துழைப்பு பற்றி பெரும் உறுதி மொழிகள் எல்லாம் நேற்று பெய்ஜிங்கில் கூறப்பட்டாலும்கூட
ASEM
உச்சிமாநாட்டில் தத்தம் பொருளாதார நலன்களை ஆசிய, ஐரோப்பியத் தலைவர்கள் வலியுறுத்திய வகையில் அழுத்தங்கள்தான்
நிறைந்திருந்தன. பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஐரோப்பா அடுத்த மாதம் வாஷிங்டனில் நடைபெற
உள்ள G20
கூட்டத்தில் "ஒரு ஒன்றுபட்ட அணியென" திரண்டு நிற்கும் என்று அறிவித்ததுடன் உலக நிதிய வடிவமைப்பை மறுசீரமைப்பதற்கு
ஆசியாவின் உதவியையும் நாடினார்.
ஐரோப்பிய ஒன்றிய கமிசனின் தலைவர் பரோசோ சீனாவிடம் வணிக சமசீரற்ற
தன்மையை தீர்ப்பதற்கு "பெரும் பொறுப்பை காட்டுமாறும்" அதன் மகத்தான வெளிநாட்டு நாணய இருப்புக்களை
சர்வதேச நிதிய முறைக்கு ஊக்கம் தருவதற்கு உதவுமாறும் அழைப்பு விடுத்தார். ஒத்துழைப்பு தருவதாக சீனா
உறுதியளித்தாலும், சீனப் பிரதமர் வென் ஜியாபோ, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கான சீன ஏற்றுமதிகளை
பாதித்துள்ள "உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பட்டுள்ள கடுமையான அதிர்ச்சியை கடக்கும்" வகை பற்றி
கூடுதலான கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ASEM உச்சி மாநாட்டின் பின்னே
இருக்கும் பதட்டங்கள் பூகோள பொருளாதாரப் பின்னடைவை உக்கிரப்படுத்தவே செய்யும் மற்றும் ஒவ்வொரு
நாடும் அதன் போட்டியாளர்களின் இழப்பில் பொருளாதார நலன்கள் ஊக்கம் பெறும் வகையில் நடந்து
கொள்ளும்போது இன்னும் தீவிரமாகத்தான் செய்யும். நேற்று பைனான்சியல் டைம்ஸில் "மிகக் குறைவான
எதிர்பார்ப்புக்கள் இன்னமும் கூடக் குறைவாகலாம்" என்ற தலைப்பில் நம்பிக்கையற்ற ஆசியத்தலையங்கம் எழுதியது:
"ஒரு நிதிய நெருக்கடி மட்டும் வந்தபோது பிரச்சினை சேமிப்பாளர்கள் வங்கிமீது படையெடுப்பர் என்ற
அச்சமாகத்தான் இருந்தது. ஆனால் இப்பொழுது உண்மைப் பொருளாதார நெருக்கடி என்று வந்தவுடன்,
அனைத்தின்மீதும் பாய்ந்து வருதல் என்பது பிரச்சினையாகி விட்டது. உலகப் பொருளாதாரம் தயக்கத்துடன் தேக்கம்
காண்கையில் மிகக் குறைந்த எதிர்பார்ப்புக்கள்கூட மோதலுக்கு உட்படுகின்றன."
தலையங்கம் தொடர்கிறது: "உலகம் முழுவதும் இருக்கும் பொருளாதார
நடவடிக்கைகள், அமெரிக்காவில் இருந்து சீனா வரை பின்னடைவு பெற்றுள்ளன. இங்கிலாந்தில் இந்த வாரம்
வெளிவந்துள்ள புள்ளிவிவரங்கள் உள்நாட்டு மொத்த உற்பத்தி 0.5 சதவிகிதம் மூன்றாம் காலாண்டு காலத்தில்
சரிவுற்றதாக காட்டுகின்றன. இந்த சரிவு எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகும். எப்படி நியாயமான முறையில்
வரையறுத்தாலும், இங்கிலாந்து ஏற்கனவே பொருளாதாரப் பின்னடைவில் உள்ளது என்றுதான் கூறமுடியும்."
செவ்வாயன்று இதே செய்தித்தாள் ஒரு வானிலை வரைபடம் போல் ஐரோப்பாவை
சித்தரித்து பொருளாதார மேகங்கள், புயல்கள், உறுதியற்ற தன்மைகள் இருப்பதைப் போல் காட்டியது. கண்டம்
முழுவதும் பொருளாதாரங்கள் வளர்ச்சிக் குறைவில் உள்ளன; வேலையின்மை மிக அதிகம் உயர்ந்துவிட்டது; சிறிய
சைப்ரஸ் தீவு ஒன்றுதான் விதிவிலக்காக "சில ஒளிரும் தன்மைகளை கொண்டுள்ளது."
ஒரு சர்வதேச நிதிய அமைப்பு
IMF அறிக்கை,
இந்த வாரம் வெளிவந்தது, இங்கிலாந்து, ஸ்வீடன் மற்றும் டென்மார்க்கையும் சேர்த்த யூரோப் பகுதியில் சராசரி
வளர்ச்சி இந்த ஆண்டு 1.3 சதவிகிதம்தான் இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு 0.2 சதவிகிதம்தான் இருக்கும் என்றும்
எச்சரித்துள்ளது. "முன்னோடியில்லாத அளவு பரப்பு மற்றும் சிக்கல்கள் ஆகியவற்றை பொருளாதார முறையின்
நெருக்கடியை எதிர்கொள்ளும் விதத்தில், பொருட்கள் விலை அதிர்ச்சியும் சேர்ந்துள்ள முறையில் ஐரோப்பிய
பொருளாதாரம் ஒரு பெரிய குறைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதில் வியப்பு ஏதும் இல்லை." என்று
IMF
இன் இடைக்கால ஐரோப்பிய இயக்குனர் Alessandro
Leipold கூறினார். இந்த அறிக்கை அனைத்து நாடுகளும்
"கடுமையான போக்கிற்கான" மாற்றுத் திட்டங்களை வரையுமாறும் ஆலோசனை கூறியுள்ளது.
தொழிலாள வர்க்கத்திற்கு இப்பொருளாதார நெருக்கடியின் சமூக விளைவு
மகத்தானதாக இருக்கும். சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆண்டு இறுதிக்குள் உலகெங்கிலும் 20 மில்லியன்
வேலைகள் தகர்க்கப்பட்டுவிடும் என்று கணித்துள்ளது.
ஐரோப்பாவில் ராய்ட்டர்ஸ் தகவல் ஒன்று விளக்கியுள்ளபடி: "தொழிலாளர்கள் முதல்
அரசாங்கம் வரை தவிர்க்க முடியாமல் வெளிப்படும் வினா இதுதான்; வங்கிகளுக்கு நீங்கள் பல பில்லியன்
யூரோக்கள் கொடுக்க முடிந்தது; வேலைகள் காப்பாற்றப்படுவதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?"
இந்தக் கட்டுரை பொருளாதார வல்லுனர்கள் பலரையும் கேட்டறிந்தபின் பிரான்சில் வேலையின்மை 7.2ல் இருநது
8.5 சதவிகிதம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் உயரும் என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. ஸ்பெயினில், ஏற்கனவே
வேலையின்மை 11.3 சதவிகிதம் என்று உள்ள நிலையில் பகுப்பாய்வாளர்கள் இது 19 சதவிகிதத்திற்கு உயரும் என்று
கணித்துள்ளனர்.
உலகந்தழுவிய பொருளாதாரப் பின்னடைவு பற்றிய அச்சங்கள் நேற்று ஐரோப்பிய
பங்குச் சந்தைகள் இன்னும் சரிந்த விதத்தில் பிரதிபலிப்பாயின. பிரிட்டனின்
FTSE 100 ஐந்து
சதவிகிதம் அளவிலும், பிரான்சின் CAC40 3.5
சதவிகிதம் அளவிலும் மற்றும் ஜேர்மனியின் DAX
கிட்டத்தட்ட 5 சதவிகிதம் அளவிலும் இழப்புக்களை கண்டன. ரஷ்யா வெள்ளிக் கிழமை மதிப்பில் பத்தில் ஒரு
பங்கிற்கும் மேலாக இழந்த பின் அதன் பங்குச் சந்தையை செவ்வாய் வரை மூடிவிட்டது. இத்தகைய பெரும் சரிவு
அட்லாண்டிக் கடந்து வோல் ஸ்ட்ரீட்டிலும் தொடர்ந்தது; அங்கு
Dow Jones Industrial Average
நாள் முழுவதும் பெரும் ஊசலுக்கு ஆளான பின் 3.6 சதவிகிதம் வீழ்ச்சி ஆக முடிவடைந்தது.
உலகம் முழுவதும் சரிந்து கொண்டிருக்கும் விற்பனையில் கார்த் தொழிலின் பாதிப்பு
மிக அதிகம் ஆகும். அமெரிக்க கார்த் தயாரிப்பு நிறுவனமான
Chrysler,
ஜெனரல் மோட்டார்ஸுடன் இணைந்து கொள்ளுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் அமைப்பு, நேற்று
அதன் ஊழியர்களிடம் வெள்ளைக் காலர் ஊழியர்கள் 25 சதவிகிதம், அதாவது 5,000 வேலைகளை அடுத்த மாதம்
வெட்டும் என்று கூறியுள்ளது. கடந்த மாத இறுதியில் 1,000 வேலைகள் தகர்ந்ததை அடுத்து இந்த அறிவிப்பு
வந்துள்ளது. பிரெஞ்சு கார்த் தயாரிப்பு நிறுவனமான
PSA Peugeot Citroen நான்காம் காலாண்டில் மிக அதிக
அளவு உற்பத்தியில் வெட்டுக்கு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.
உலகச் சரிவிற்கான மற்றொரு தெளிவான குறியீடு தொடர்ந்து பொருட்கள் விலையில்
சரிவு ஆகும்; இவைதான் உற்பத்திக்கான அடிப்படைத் தேவைப் பொருட்கள் ஆகும். நேற்று ஒரு அவசரக் கூட்டம்
ஒன்று OPEC
ஆல் நடத்தப்பட்டது; இது நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் பீப்பாய்கள் உற்பத்தியில் வெட்டு வேண்டும் என்ற முடிவை
திணித்தன; அதாவது செப்டம்பர் 10ல் இருந்து சரிந்து கொண்டிருக்கும் விலை வாசிகளை முட்டுக் கொடுத்து நிறுத்தும்
முயற்சியாக உலக உற்பத்தியில் 1.7 சதவிகிதம் உற்பத்தியை குறைப்பதாகும் இது. இந்த அறிவிப்பும் சரிவைத் தடுத்து
நிறுத்துவதில் தோல்வியுற்றது; கச்சா எண்ணெய் வருங்கால விற்பனை இன்னும் 6 சதவிகிதம் குறைந்தது.
19 மூலப்பொருட்களின்
Reuters/Jeffries CRB குறியீடு, இந்த வாரம் நான்கு
ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்தது; இந்த அளவீடு ஜூலை மாதம் மிக உயர்ந்த நிலை அடைந்ததை அடுத்து
இப்பொழுது 41 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. பித்தளை, துத்தநாகம், சர்க்கரை
மற்றும் காப்பி ஆகியவற்றின் பங்கு விலைகள் பெரும் சரிவை நேற்று கண்டன. ஏற்கனவே இத்தீவிர சரிவுகள்
பொருட்கள் ஏற்றுமதி நாடுகளான ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டினா போன்றவற்றில் வியத்தகு பொருளாதார பாதிப்பை
ஏற்படுத்தியுள்ளன; ஆனால் உலகெங்கிலும் இருக்கும் மிக வறிய நாடுகள் மீது மிகக் கடுமையான விளைவுகள்
இருக்கும்.
உலக முதலாளித்துவத்தை கிழித்துக் கொண்டிருக்கும் இந்தப் பெரும் புயலுக்கு நடுவே
G20
நாடுகளின் தலைவர்கள் நவம்பர் 15ம் தேதி வாஷிங்டனில் உலக நிதிய முறையை சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
பற்றி விவாதிக்க கூடுகின்றனர். ஏதேனும் உடன்பாட்டை அவர்கள் காணமுடியும் என்றால், பொருளாதார
நெருக்கடியின் பெரும் தாக்கமும் தொழிலாளர்கள் மீது வேலை இழப்புக்கள், கடுமையான சமூகச் செலவினக் குறைப்புக்கள்
ஆகியவற்றை சுமத்துவதின் மூலம்தான் அது இருக்கும், அப்பொழுதுதான் செல்வந்த உயரடுக்குகள் காப்பாற்றப்பட
முடியும்; இது வரை அறிவிக்கப்பட்டுள்ள மீட்பு பொதி நிதிகள் அதைத்தான் காட்டியுள்ளன. |