World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

நிமீக்ஷீனீணீஸீஹ்: றிணீக்ஷீறீவீணீனீமீஸீt ணீutலீஷீக்ஷீவீsமீs 500 தீவீறீறீவீஷீஸீ தீணீஸீளீ தீணீவீறீஷீut

ஜேர்மனி: வங்கிகள் பிணை எடுப்பிற்கு பாராளுமன்றம் 500 பில்லியன் யூரோக்களை அனுமதிக்கிறது

By Dietmar Henning
23 October 2008

Use this version to print | Send this link by email | Email the author

போருக்கு பிந்தைய ஜேர்மனியின் வரலாற்றில் முன்னோடியில்லாத பல நிகழ்வுகளை கடந்த வாரம் கண்ணுற்றது.

புண்டஸ்ராக் (கூட்டாட்சியின் பாராளுமன்றம்) கடந்த வெள்ளி காலையில் வங்கிகள் பிணை எடுப்பிற்காக ஒரு 500 பில்லியன் யூரோக்கள் பொதிக்கு உடன்பட்டது. "நிதியச் சந்தை உறுதிப்படுத்தப்படுவதற்கான சட்டம்" என்று கூறப்படும் இச்சட்டம் 476 பிரதிநிதிகள் ஆதரவு, 99 எதிர்ப்பு ஒருவர் வாக்களிக்கவில்லை என்ற முறையில் நிறைவேறியது. புதிய சட்டம் புண்டஸ்ராற் (மேல்மன்றத்திலும்) இயற்றப்பட்டு பிற்பகலே ஜனாதிபதி Horst Kohler கையெழுத்தை பெற்று இந்த வாரம் திங்கள் முதல் நடைமுறைக்கு வந்தது.

ஒரு சட்டம் இதற்கு முன்பு இவ்வளவு விரைவாக இயற்றப்பட்டதே இல்லை. கிறிஸ்துவ ஜனநாயக பாராளுமன்ற தலைவர் Volker Kauder அக்டோபர் 12 அன்று "Anne Will" நிகழ்ச்சியில் அறிவித்ததில் இருந்து, ஜனாதிபதி கடந்த வெள்ளி கையெழுத்திட்டு, 6 நாட்களுக்குள் சட்டமாயிற்று என்பதும் ஒரு புதுமைதான்.

இதைச் செய்து முடிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் அரசியலமைப்பில் கொடுத்துள்ள உரிமைகளை கைவிட்டனர்; இதில் இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சி பிரதிநிதிகளும் அடங்குவர்.

Frankfurter Rundschau இந்த வழிவகை "அரசாங்கத்தின் அவசரகால நிலைமையின் தெளிவான தர்க்க முறையை" காட்டிக் கொடுத்தது என்றும் "2008 ன் பொருளாதார நெருக்கடி" என இதை 1968ன் அவசர கால நிலையுடன் ஒப்பிட்டுக் கூறியது.

உள்ளத்தை உறைய வைக்கும் சொற்களில் சமூக ஜனநாயகக் கட்சியாளரும் பேர்லின் நகர அரசாங்கத்தில் நிதி மந்திரியுமான Thilo Sarrazin, "ஒரு விரைவுபடுத்தும் சட்டம்" பற்றிக்கூட பேசினார். மார்ச் 23, 1933ல் ஜேர்மனியின் பாராளுமன்றம் அத்தகைய Enabling Act ஐ இயற்றி அடால்ப் ஹிட்லருக்கு முழு அதிகாரத்தையும் கொடுத்தது. இந்த ஒப்புமை வெள்ளியன்று பாராளுமன்றத்தில் சட்டத்திற்கு ஆதரவுக் கொடுப்பதில் இருந்து Sarrazin ஐ ஒன்றும் நிறுத்திவிடவில்லை.

பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட உரைகள் தன்னைத்தான் திறனாய்வு செய்யும் தன்மையையும் கொண்டிருக்கவில்லை. அதற்கு முற்றிலும் மாறான வகையில் அரசாங்கக் கட்சிகள் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம், கிறிஸ்துவ சமூக ஒன்றியம், சமூக ஜனநாயகக் கட்சி ஆகியவை) வங்கிகளுக்கு தாங்கள் நிபந்தனையற்ற சரண் அடைந்ததைப் பற்றி களித்து மகிழ்ந்து கடந்த வாரம் இயன்றதை செய்ததாகவும், ஒவ்வொரு நாளும் விடியற்காலை வரை பணிபுரிந்ததாகவும் இதையொட்டி இணையற்ற முறையில் விரைவான சட்ட நடவடிக்கை வந்துள்ளது என்றும் கூறினர்.

இந்த விவாதத்தின்போது SPD கட்சியின் தலைவர் பீட்டர் ஸ்ட்றுக் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் ஒத்துழைப்பிற்காக நன்றி கூறினார். இப்படி விரைவுபடுத்தப்பட்ட நவடிக்கை "முழு மன்றத்திற்கும் ஊக்கம் அளிப்பதாகவும்", இது இணையற்ற செயல்" என்றும் அனைவரும் ஒன்றாக செயல்பட்டு இதைச் சாதித்துள்ளதாகவும் கூறினார். இவருடைய சக ஊழியரான பாராளுமன்ற CDU/CSU தலைவர் பெருமிதத்துடன், "வார ஆரம்பத்தில் சரிந்திருந்தோம், ஆனால் நிலைமைக்கு ஏற்ப எழுச்சி பெற்று விட்டோம்" என்று கூறினார்.

பாராளுமன்றத்தின் CDU தலைவர் நோர்பேர்ட் லாமெர்ட் இந்த வாரம் "எமது அரசியலமைப்புக் கருவிகள் திறனுடன் நடந்து கொண்டதற்கு வியப்பூட்டும் நிரூபணம்" என்றும் "ஜனநாயக ஒற்றுமைக்கு குரல் கொடுத்து அது வெளிவந்ததில் சிறப்பான நிரூபணம்" என்றும் கூறினார்.

சுதந்திர ஜனநாயக கட்சியின் (FDP) தலைவர் கைடோ வெஸ்டர்வெல்லே கூறினார்: "இப்பொதி ஜேர்மனிக்கு உதவுகிறது." அனைத்து பிரதிநிதிகளும் ஜேர்மனிய மக்களுக்கு சேதம் வரக்கூடாது என்பதை தவிர்க்கும் கட்டாயத்தில் உள்ளனர்" எனவே FDP மசோதாவிற்கு ஆதரவு தருகிறது என்றார்.

பாராளுமன்றத்தில் இருக்கும் மற்ற இரு எதிர்க்கட்சிகளான பசுமைக் கட்சியும் இடது கட்சியும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.

பசுமைக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் Renate Kunast சட்டத்தை "ஒரு 500 பில்லியன் யூரோக்களுக்கு எப்படியும் செலவுசெய் எனக் கொடுக்கும் காசோலை" என்று விவரித்தார்; இது வங்கி மேலாளர்கள் உதவியுடன் தயாரிக்கப்பட்டது, எனவே "பணத்தைக் கொடு, தலையிடாதே" என்ற உணர்வைத்தான் கொண்டுள்ளது என்றும் கூறினார். வங்கிகளுக்கு அரசாங்கம் அடிபணிந்து விட்டது என்று இவ்வம்மையார் கூறினார்; "இங்கு உட்கார்ந்து கொண்டு வெள்ளைக் கொடி காட்டுகிறீர்கள்" என்று குனாஸ் அரசாங்க கதிரைகளில் இருப்பவர்களை பார்த்துக் கூறினார்.

இடது கட்சியின் பாராளுமன்ற பிரிவுத் தலைவரான Gregor Gysi, பாராளுமன்றம் என்ன செய்ய வேண்டும் என்று Deutsche Bank ன் இயக்குனர்கள் முடிவெடுத்தால், அப்பொழுது ஜனநாயகம் "தீவிர ஆபத்தில் இருக்கிறது" என்று முறையிட்டார்.

ஆனால் இதெல்லாம் வெறும் சூடான பேச்சுத்தான். பசுமைவாதிகளும் இடது கட்சியும் வார ஆரம்பத்தில் விரைவுபடுத்தி வரவிருக்கும் சட்டத்திற்கு ஆதரவு கொடுக்க முடியாது என்று கூறியிருந்தால் சட்டம் இவ்வளவு விரைவாக வருவது தடுக்கப்பட்டு இருக்கும். கடந்த வாரம் திங்கள் காலையில் அதிபர் அங்கேலா மேர்க்கெல் "500 பில்லியன் யூரோக்கள் காசோலை வெள்ளிக் கிழமை கொடுக்கப்படும் என்று, முதலில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடைய உடன்பாட்டையும் நாடினார், வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் குனாஸ்ட் மற்றும் இடது கட்சி பாராளுமன்ற தலைவர்கள் Gregor Gysi, Oskar Lafontaine உட்பட அனைவரது உடன்பாட்டையும் நாடினார். பின்குறிப்பிடப்பட்டவர் ஞாயிறு அன்று "Anne Will" பேச்சு நிகழ்ச்சியிலேயே உடன்பாட்டிற்கான அடையாளத்தை காட்டியிருந்தார்.

பொதுவாக பல பாராளுமன்ற கட்டங்களை கடந்து சட்டங்கள் இயற்றப்பட பல மாதங்கள் ஆகும். ஆனால் கூடியிருந்த பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் திங்களன்றே மேர்க்கெலிடம் அத்தகைய விதிகளை வலியுறுத்தப் போவதில்லை என்று உத்தரவாதம் கொடுத்திருந்தனர். Frankfurter Rundschau இதை "இணையில்லாத வழிவகை", "ஜனநாயகத்திற்கு ஊறு" என்று விளக்கியது.

SPD மற்றும் இடது கட்சியினால் நிர்வகிக்கப்படும் பேர்லின் நகர அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் சட்டம் பற்றி உடன்பாட்டைத் தெரிவித்தனர். பொதுவாக மாநில பிரதிநிதிகள் கூட்டாட்சி பங்காளிகளில் ஒருவர் உடன்பாடு காட்டவில்லை என்றால் வாக்களிக்க மாட்டார்கள்.

நிதி மந்திரி Steinbrück (SPD) வெளிப்படையாக கூடியிருந்த மாநிலப் பிரதமர்களுக்கு அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பிற்காக நன்றி செலுத்தினார். இத்தகைய நடவடிக்கைகள் அசாதாரண நிலைமகளினால் மட்டுமே நியாயப்படுத்தப்படும். இது ஆபத்தை அகற்றுவதற்காகவும் ஜேர்மனிய கூட்டாட்சிக் குடியரசிற்கு சேதம் வராமல் தடுப்பதற்கும் இயற்றப்படுகிறது" என்றார். உண்மையில் நிதிய அடுக்கிற்கு இது மகத்தான பரிசு ஆகும்.

பாராளுமன்ற விவாதத்தின்போது அனைத்துக் கட்சியில் இருந்தும் பேச்சாளர்கள் வங்கிகள், அவற்றின் மேலாளர்களுடைய நடவடிகைககள் பற்றி புகார் கூறினர். பொருளாதார மந்திரியான Michael Glos (CSU) சில நிதிய நிறுவன அதிகாரிகளை மாஃபியாவுடன் ஒப்பிட்டார். சில வங்கிகள் "சிசிலிய குடும்ப இனக் குலங்கள் போல்" செயல்படுகின்றன என்று அவர் கூறினார். ஆனால் மிகப் பெரிய பெரும்பான்மை மூலம் பாராளுமன்றம் 500 பில்லியன் யூரோக்களை (அமெரிக்க $642 பில்லியன்) இந்த இனக் குலங்களுக்கு கொடுப்பது என்று முடிவெடுத்துவிட்டது. ஒப்புமையில் முழு கூட்டாட்சி வரவு-செலவு திட்டமும் இந்த ஆண்டில் மொத்தம் 283 பில்லியன் என்றுதான் இருந்தது.

400 பில்லியன் யூரோக்கள் வங்கிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கடன்களுக்கு பயன்படுத்தப்படும்; இதற்கான உறுதிப்பாடுகள் 2009 இறுதிக்குள் முடிக்கப்படும். இந்த உத்தரவாதங்கள், மூன்றாண்டு காலம் வரை நீடிப்பவை 2012 முடிவில்தான் கடன் சுமை முடிவுறும் என்ற பொருளைத் தருகிறது.

வங்கிகளின் பங்குகளை வாங்குவதன் மூலமும் அல்லது நச்சுக் கடன்களை வாங்குவதன் மூலமும் வங்கிகளுக்கு மறு மூலதனம் அளிப்பதற்கு, பாராளுமன்றத்தின் வரவு-செலவு திட்டக் குழு 80 பில்லியன் யூரோக்கள் வரை உயர்த்தக் கூடிய, மற்றும் ஒரு 70 பில்லியன் யூரோக்கள் 2009 இறுதி வரை பயன்படுத்தப்படும்.

Steinbrück மற்றும் அரசாங்கத்தினர் இந்த 400 பில்லியன் யூரோ உறுதியைக் காக்க அழைக்கப்பட போவதில்லை என்று நம்புகின்றனர்; அறவிடமுடியா கடன்களுக்கு 20 பில்லியன் யூரோக்கள்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் கூட்டாட்சி கடன்கள், அரசாங்கப் பத்திரங்கள், உத்தரவாதங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பிணை எடுப்பு பொதிக்கு திரட்டுவதால், கூடுதலான இழப்புக்கள் சங்கிலித்தொடரான விளைவுகளை கட்டவிழித்துவிட்டு நாட்டையே திவாலாக்கிவிடும்.

"பேர்லின் கூட்டணியை எதிர்கொண்டுள்ள சோகம் நிறைந்த தன்மையை இது கொண்டுள்ளது" என்று Der Spiegel அதன் சமீபத்திய பதிப்பில் கூறியுள்ளது. "இந்த மீட்புப் பொதியின் திறமை உறுதியாக இல்லை, உண்மைப் பொருளாதாரம், வரும் ஆண்டு ஒரு தீவிர பொருளாதாரப் பின்னடைவு நிலையைக் காணக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளது". "முழு மீட்புப் பொதிக்கும் தேவைப்படும் பணத்தை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டுமானால்", பேர்லின் பொருளாதார வல்லுனர் Henrik Enderlein ஐ மேற்கோளிட்டு செய்தி ஏடு, "பொறுத்துக் கொள்ள கூடிய தன்மையின் வரம்பிற்கு சென்றுவிட நேரிடும்" எனக் கூறியுள்ளது.

Der Spiegel இன் கருத்தின்படி நிதிய நெருக்கடியின் ஆழ்ந்த தன்மை இன்னும் கண்டறியப்படவில்லை. அது அமெரிக்க கடன் அட்டையின் நச்சுத்தன்மை மட்டத்தை சுட்டிக்காட்டியுள்ளது; வரவிருக்கும் ஆண்டில் அது அமெரிக்க $100 பில்லியனை, நான்கு மடங்கு அதிகம் என்ற முறையில் அடையக் கூடும் என்றும் குறைந்த பிணைமதிப்பு அடைமானங்கள் போல் இதுவும் மொத்தமாகத் திரட்டப்பட்டு சர்வதேச அளவில் விற்கப்பட்டுள்ளது என்று ஏடு சுட்டிக்காட்டியுள்ளது. இதே கொள்கைதான் "மிக விரைவில் கொடுக்கப்படும்" கார் வாங்குவதற்கான கார் கடன்களுக்கும் பொருந்தும்" என்று ஏடு கூறியுள்ளது.

இப்பொழுது நிலைமை இன்னும் வியத்தகு முறையில் "வணிகக் கடன்கள், காப்பீடு என்னும் உலகளாவிய சூதாட்டமாக" மாறியுள்ளது. எஞ்சிய நிதி என அழைக்கப்படும் சந்தையில் அளவு, Credit Default Swaps (CDS) கடந்த நான்கு ஆண்டுகள் நினைத்துப் பார்க்க முடியாத 55 டிரில்லியன் யூரோக்களாக பத்துமடங்கு அதிகரித்துள்ளது. இது முழு உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஒப்பாகும். இப்பொழுது இந்த குமிழியும் வெடிக்கும் அச்சுறுத்தலைக் காட்டியுள்ளது.

"ஆனால் நிதியத் தொழிலைக் காப்பாற்ற உலகரீதியான மீட்புப் பணி வெற்றி பெற்றாலும், இதன் விலை கணிசமாக இருக்கும். மகத்தான மீட்பு பொதிக்கு நிதி கொடுக்க குடிமக்கள் குருதி கொட்ட வேண்டியிருக்கும். நிலைமையைப் பொறுத்த வரையில் பணவீக்க வீதங்கள் அதிகரிக்கும், அதிக வரிவிதிப்புக்கள் இருக்கும், பொருளாதார சரிவை ஒட்டி வருமான இழப்புக்கள் மற்றும் பல ஆண்டுகளுக்கு வேலை இன்மை ஆகியவை வரும் " என்று Der Spiegel கணித்துக் கூறியுள்ளது.

500 பில்லியன் மீட்புப் பொதிக்கு "மாற்றீடு" ஏதும் இல்லை என்றும் இதுதான் நிதியச் சந்தைகளில் மீண்டும் நம்பிக்கையை கொண்டுவரும் என்றும் "ஜேர்மனிய மக்களுக்கு சேதத்தை தவிர்க்கும்" என்றும் அரசாங்கமும், நடைமுறைக் கட்சிகளும் செய்தி ஊடகமும் கூறுதற்கு மாறாக, உண்மை என்ன என்றால் இது மகத்தான நிதிய உயரடுக்கிற்கு கொடுக்கப்படும் நிதியளிப்பு என்பதுதான்; வளப்படுத்திக் கொள்வதற்கான வெறிச்செயல்கள்தான் தற்போதைய நெருக்கடிக்கு காரணம்; அவையோ தொடர்ந்து பல மில்லியன்களை சம்பாதிக்கும்.

இக்காரணத்தினால் 1968 அவசரகாலச் சட்டம், 1930 களின் ஆரம்பத்தில் வந்த அவசர கால ஆணைகள் மற்றும் ஹிட்லரின் 1933 ஊக்கம் கொடுக்கும் சட்டம் ஆகியவற்றுடனான ஒப்புமைகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தக்கவை அல்ல. கடந்த வாரங்களில் பாராளுமன்றத்தின் ஜனநாயக உரிமைகள்தான் காலடியில் வைத்து மிதிக்கப்பட்டுள்ளன; பாராளுமன்றமும் தன்னுடைய அதிகார இழப்பிற்கு உடன்பட்டுள்ளது. ஆனால் Der Spiegel "குடிமக்கள் குருதி சிந்த வேண்டும்" என்று எழுதுவது பொதுவாக ஏற்கப்பட்டுள்ளது; ஏற்றுமதிகள் சரியும், பொருளாதாரம் பின்டைவிற்கு செல்லும், வேலையின்மை வியத்தகு அளவில் உயரும், இவற்றிற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு இருக்கும் என்று கூறும்போது, மக்களும் அரசாங்கத்தின் இரும்புக் கரங்களை நன்கு உணர நேரிடும்.

இரகசியம்

இந்தச் சட்டம் இதற்கு உயிரூட்டிய சட்ட வழிவகை போலவே முற்றிலும் ஜனநாயகமற்ற தன்மையைக் கொண்டது ஆகும். வங்கியாளர்கள், நிதிய மேலாளர்கள் ஆகியோரின் புகார்களையும் மீறி, வலதுசாரி அரசாங்க பிரதிநிதிகள்கூட அவ்வாறு கூறியுள்ளனர். சட்டம் நிதிய உயரடுக்கின் நலன்களை காக்கும் வடிவமைப்பை கொண்டுள்ளது; அவர்களை பொதுமக்கள் கண்காணிப்பில் இருந்து பாதுகாக்கிறது. நெருக்கடியினால் வரும் உண்மையான பாதிப்பாளர்களான வேலை இழந்தவர்கள், தங்கள் அனைத்து இருப்புக்களையும் இழக்கும் வாய்ப்பு உடைய சேமித்தவர்கள், அடைமானக் கடனை கொடுக்க கஷ்டப்படும் வீட்டுச் சொந்தக்காரர்கள் ஆகியோர் காப்பாற்றப்படுவது பற்றி ஒருவரும் சிந்திக்கவில்லை.

"Institute for Financial Market Stabilisation" (FMSA) என்பது 500 பில்லியன் யூரோ பொதியை நிர்வகிக்கும். பொது மக்கள் பார்வையில் இல்லாமல் மூடிய கதவுகளுக்குப் பின் அது செயல்படும், இதற்கு மூன்று பேர் கொண்ட குழு தலைமை தாங்கும். இவர்கள் நிதி அமைச்சரகத்தால் பாராளுமன்ற இசைவுடன் நியமிக்கப்படுவர்; அவர்கள் உதவி எப்படி வழங்கப்பட வேண்டும் என்பது பற்றி முடிவெடுப்பர். அடிப்படை முக்கியத்துவத்துவம் வாய்ந்த செயல்கள் ஐந்து பேர் கொண்ட ஒரு செயற்குழுவினால் FMSA ஆலோசனையை ஒட்டி முடிவடுக்கப்படும். அதில் அதிபர் அலுவலகத்தில் இருந்து ஒருவர், நீதி, பொருளாதாரத் துறையில் இருந்து ஒருவர் மற்றும் மாநிலங்களில் இருந்து ஒருவர் என்றும் இருப்பர்.

FDP வலியுறுத்தியதின் பேரில் FMSA மீதான் கண்காணிப்பு பாராளுமன்ற பட்ஜேட் குழுவில் இருந்து ஒன்பது பேரால் நடத்தப்படும். ஆனால் அவர்கள் இரகசியமாகக் கூடுவர்; இரகசியத்தை காப்பதாகவும் அவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்ளுவர். இதே இரகசியம் நிதியைக் கட்டுப்படுத்தும் பல விதிகளுக்கும் பொருந்தம்; பாராளுமன்றத்திடம் கூட இரகசியமாகத்தான் இருக்கும். பொதுமக்கள் இவ்விதத்தில் கருவூலத்தில் இருந்து தனிப்பட்ட வங்கிகள் ஏன், எவ்வளவு வாங்கின என்பதை ஒரு பொழுதும் அறிய முடியாது.

சட்டமும் மிகத் தெளிவற்ற முறையில்தான் இயற்றப்பட்டுள்ளது. மிகவும் அதிகமாக மேற்கோளிடப்பட்டுள்ள சொற்றொடர் கூறுகிறது; "கூட்டாட்சி அரசாங்கம் முறையான சட்டப்படி இன்னும் கூடுதலான விதிகளை ஆணையாக அறிவிக்கலாம்; அவற்றிற்கு பாராளுமன்றத்தின் உடன்பாடு தேவையில்லை...."

இவ்விதத்தில் இந்த சட்டமானது அரசு உதவி பெறுவதற்கான நிபந்தனைகள் பற்றி ஏதும் கூறவில்லை. வங்கி மேலாளர்களின் ஊதியங்கள், நிதியத்தில் இருந்து உதவி பெறும் வங்கிகளைப் பொறுத்த வரையில், ஆண்டு ஒன்றுக்கு அதிக பட்சம் 500,000 யூரோக்கள் என இருக்கும் என்று கூறியுள்ளார். அரசாங்கமும் போனஸ் பணம், பங்குதாரர்களுக்கு கொடுக்க வேண்டிய பணம், வணிகக் கொள்கை மற்றும் கடன் கொடுத்தல் ஆகியவற்றில் தன் செல்வாக்கு இருக்கும் என்று விருப்பம் கொண்டுள்ளது.. ஆனால் இவையெல்லாம் அரிதாகவே நிகழும். கருவூலம் ஏற்கனவே அரசாங்க உதவி பெறுவதற்கான விதிமுறைகள் "இரு தரப்பார்" பேச்சு வார்த்தைகளுடன் முடிவு எடுக்கப்படும் என்றும் "தனித்தனி வங்கித் தேவைகளை ஒட்டி அமையும்" என்றும் கூறிவிட்டது.