:
விஞ்ஞானமும்
தொழில்நுட்பமும்
World's largest particle accelerator begins
operations
Scientists to gain greater understanding of the
mysteries of the universe
உலகின் மிகப் பெரிய அணுத்துகள் விரைவாக்கி செயற்பாடுகளை தொடங்கியது
விஞ்ஞானிகள் பிரபஞ்ச புதிர்கள் பற்றிய புரிதலை மேலும் பெற்றுக்கொள்வார்கள்
By Dan Conway
25 September 2008
Use this version
to print | Send
this link by email | Email
the author
செப்டம்பர் 10 ஆம் தேதி, அணுத்துகள் இயற்பியலுக்கான ஐரோப்பிய செர்ன்
(CERN)
ஆய்வுக்கூட விஞ்ஞானிகள், பிரான்ஸ் மற்றும் சுவிஸ்லாந்து எல்லைக்கருகில் நிலத்திற்கு அடியில் கட்டப்பட்ட ஒரு வட்ட
அரணில் வெற்றிகரமாக ஒரு புரோட்டோன் ஒளிக்கணையை செலுத்தினார்கள். மாபெரும் அணுத்துகள் பெருவெடிப்பியந்திரம்
(Large Hadron Collider)
எனப்படும் இது, மனிதனுடைய முழு வரலாற்றில் மிகப் பெரிய குறிக்கோளுடைய விஞ்ஞான பரிசோதனையின் தொடக்கமாக
குறிக்கப்படுகிறது. இவ்வாய்விற்காக, 80 நாடுகளிற்கு மேற்பட்ட மற்றும் 500 பல்கலைகழகத்திற்கு அதிகமான
சுமார் 10 ஆயிரம் விஞ்ஞானிகளும், பொறியியலாளர்களும் ஒன்று திரட்டப்பட்டுள்ளனர்.
ஒரு பெரும் திகிலடையும் நோக்கில் பார்த்தால், மாபெரும் அணுத்துகள் பெருவெடிப்பியந்திரம்
(LHC)
பொறியியலின் ஒரு வியத்தகு அதிசயமாக
உள்ளது. நிலத்திற்கடியில் 100 மீட்டர் ஆழத்தில் வைக்கப்பட்டுள்ள
இந்த பெருவெடிப்பியந்திரம், மேலும் பல முதன்மை துகள்களைக் (Fundamental
particles) கண்டறிய அதிவேகத்தில் அணு உட்துகள்களை (Subatomic
particles) அதிவேகத்தில் மோதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பெருவெடிப்பியந்திரம் அணுக்களின் கருக்களில் காணப்படும் சிறிய நேரேற்றம் கொண்ட
(Positively charged) துகள்களாலான இரு தனித்தனி
புரட்டோன் கதிர்களை அல்லது ஏற்றம்பெற்ற துகள்களை பாரிய வளையங்களூடாக எதிர்த்திசைகளில் துரிதப்படுத்துவதன்
மூலம் செயற்படவுள்ளது.
எவ்வாறிருப்பினும், பெரிய வளையத்தினூடாக
செல்வதற்கு முன்னர், தேவைபடுகின்ற வேகத்தை அடைவதற்கு
நான்கு தனிப்பட்ட நிலைகளில் புரோட்டான்கள் தயார் செய்யப்படுகின்றன.
முதலில், சாதாரணமாக ஒரேயொரு புரோட்டனையும் எலெக்ட்ரோனையும்
கொண்டிருக்கும் ஹைட்ரஜன் அணுக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எலெக்டரான்கள்,
LINAC 2 என்கிற
ஒரு நேர்போக்கு விரைவூக்கியினால் வேகப்படுத்தப்பட்டு பின்னர், புரோட்டன் சின்க்கோட்ரான் ஊக்கி (Proton
Synchotron Booster) என்றழைக்கப்படும் ஒரு நான்கு
வட்ட வடிவத்தின் மூலம் மீண்டும் விரைவுபடுத்தப்படுகின்றன. அதை தொடர்ந்து, மீண்டும் 628
மீட்டர் சுற்றளவு கொண்ட புரோட்டன் சின்க்கோட்ரானில் (Proton
Synchotron) விரைவுபடுத்தப்படுகிறது.
1959ல் அமைக்கப்பட்ட, செர்னின் முதலாவது அணுத்துகள் விரைவூக்கியான
புரோட்டன் சின்க்கோட்ரான் (The Proton
Synchotron), குறிப்பிடத்தக்க அபிவிருத்திகளுடன் இன்றும்
மாபெரும் அணுத்துகள் பெருவெடிப்பு இயந்திரத்தில் (LHC)
பயன்படுத்தப்படுகிறது. 17 மைல் நீளத்திலான பிரதான வட்ட வளைய அரணுக்குள் செலுத்தப்படும் முன்னர், ஒரு
சூப்பர் புரோட்டான் சின்க்கோட்ரானில் (The Super
Proton Synchotron) புரோட்டான் சக்தியானது மீண்டும்
அதிகரிக்கப்படுகிறது.
மாபெரும் அணுத்துகள் பெருவெடிப்பியந்திரம் (LHC)
முழுவதும் தொடர்ச்சியாக அதீத திறன் வாய்ந்த மின்காந்த கடத்திகளை
(Superconducting magnets)
கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் 1.9 கெல்வின் அளவுடைய வெப்பநிலையை, அதாவது
-271.25 பாகை
செல்சியஸிற்கு சமமாக குளிரூட்டப்படுகிறது. இவற்றால் அணுத்துகள் பெருவெடிப்பு இயந்திரமானது, இதுவரை
உருவாக்கப்பட்டிராத அதிகுறைந்த வெப்பநிலையை உருவாக்கும் மிகப்பெரிய கிரயோஜினிக்
(Cryogenic)
அமைப்பாக உருவாகி உள்ளது. அதீத கடத்தும் திறனை உருவாக்க
இதுபோன்ற மிக உயர்ந்த குளிர்ச்சியான வெப்பநிலை தேவைப்படுகிறது. இந்த வெப்பநிலை உருவாக்கத்திற்கு
மொத்தம் 120 மெட்ரிக் டன் ஹீலியம் திரவம் தேவைப்படுகிறது. அதாவது, அதீத கடத்தும் திறன் என்பதற்கு
மின்சார ஓட்டத்திற்கு எவ்வித உராய்வும் இல்லாத தன்மை தேவையாகும்.
இந்த வலுவான மின்னோட்டங்கள் தேவைக்கேற்ற மிகவும் சக்திவாய்ந்த
காந்த புலங்களை (Fields)
முறையாக உற்பத்தி செய்கின்றன.
புரோட்டான்களை வளையத்துள் சுற்றி வரச்செய்ய, விரைவாக்கியானது 1,232
இருதுருவ மின்காந்தங்களைப் (Dipole magnets)
பயன்படுத்துகிறது. பெருவெடிப்பிற்கான ஒளிக்கணைகளை குவிய செய்ய
392 நான்கு துருவ மின்காந்தங்கள் (Quadrapole
magnets) பயன்படுத்தப்படுகின்றன. புரோட்டோன்களை
வளையத்தைச் சுற்றி தள்ளும் ரேடியோ அலைகள், ஒவ்வொன்றையும் சுமார் 100 பில்லியன் கொண்ட கற்றையாக
ஒருங்கிணைக்கிறது.
பிரதான வட்டத்தில் இரண்டு அடுத்துள்ள வழித்தடங்களைச் சுற்றி (Tracks)
எதிரெதிர் திசைகளில் பயணிக்க புரோட்டன்களானது விரைவுபடுத்தப்படுகின்றன.
இந்த நிகழ்முறையில் ஒளியின் வேகத்தில் 99.999999 சதவீதம் எட்டப்படுகிறது.
அணுத்துகள்களின் வேகத்தை விரைவுபடுத்தும் விரைவாக்கியின் இரு பிரதான பண்புகள்
என்பது அதன் மின்காந்த புலங்களின் வலிமை மற்றும் அதன் மொத்த சுற்றளவு என்பதேயாகும். முடிவில், உற்பத்தி
செய்யப்பட்ட சக்தியும், பெருவெடிப்பு இயந்திரத்தின் அளவும் அதனை இதுவரையில் இல்லாத ஒரு மிக பெரிய சக்தி
வாய்ந்த விரைவாக்கியாக எடுத்துக்காட்டுகிறது. அதை சுற்றி வரும் புரோட்டான்கள் இறுதியில் 7 டெரா
எலெட்ரான் (Tera electronvolts -TeV)
சக்தியை எட்டுகின்றன. ஒரு வோல்ட் வித்தியாசத்தில் ஓர்
எலெட்ரானை நகர்த்த தேவையான சக்தி தான் ஓர் எலெட்ரான் வோல்ட் எனப்படுகிறது. டெரா என்பது ஒரு
ட்ரில்லியன் என்பதன் முன் அடைச்சொல் ஆகும். அதாவது, 1க்கு பின்னால் பன்னிரெண்டு பூஜ்ஜியம் சேர்க்கப்படும்
போது கிடைக்கும் மதிப்பாகும்.
பின்னர், பெரிய உணர்விகளைக் (Detectors)
கொண்ட வட்ட வளையத்தை சுற்றிய நான்கு புள்ளிகளில் ஒன்றில்
புரோட்டான்கள் மோதவிடப்படுகின்றன. புரோட்டான்கள் மோதும் போது 14
TeV நிகர சக்தி
உற்பத்தியாகும். அது ஒவ்வொரு எதிர் புரோட்டான்களை விட இருமடங்காகும்.
CMS அல்லது
Compact Muon Solenoid எனப்படும் ஓர் உணர்வி (Detector)
20 மீட்டர் நீளமும், 15 மீட்டர் விட்டமும் கொண்ட ஒரு பெரிய
சிலிண்டர் வடிவில் உள்ளது. 12,500 மெட்ரிக் டன் எடை கொண்ட
CMS,
4 Tesla அளவுடைய,
அதாவது இந்த பூமியை போல் 100,000 மடங்கு அளவிற்கும் மேற்பட்ட ஒரு காந்த புலத்தை உற்பத்தி செய்கிறது.
ஒருமுறை புரோட்டன்கள் ஒன்றையொன்று மோதி உடைக்கும்போது அவைகள் மில்லியன்கணக்கான மிகச்சிறிய நுண்துகள்களை
உருவாக்கும். அவை வெவ்வேறுபட்ட வழிகளில் அவைகளுடைய அதனதன் பண்புகளைப் பொறுத்து காந்த புலத்தில் மாற்றங்களை
உண்டாக்கும்.
இராட்சச நுண்ணோக்கியைப் போல
CMS போன்ற உணர்வி
சாதாரணமாக நுண்துகள்களைக் காட்சியாய் காண்பிக்காது. இதற்கு மாறாக, வெடிப்பின் விளைவாக உற்பத்தியாக்கப்படுகின்ற
துகள்களின் பல்வேறு தோற்றப் பகுதிகளை பதிவு செய்ய அவை மிக நுண்மையாக வடிவமைக்கப்பட்ட
உபகரண அடுக்குகளைப் பயன்படுத்துகின்றன.
சான்றாக, CMSன்
முதல் அடுக்கில், நுண்துகள்களின் இயங்கு விசையையும், அவற்றின்
நிலையையும் அளவிட ஒரு சென்டிமீட்டரில் மில்லியனில் ஒன்று அளவுடைய சிலிக்கான் உணர்விகளை பயன்படுகிறது.
புரோட்டான்கள் ஒவ்வொன்றும் சுமார் 100 பில்லியன் கற்றைகளாக உணர்விகளுக்குள்
பயணிக்கின்றன. அவற்றில் 200 பில்லியன் புரோட்டன்கள் திட்டமிடப்பட்ட மோதுதல் பகுதியில் புலப்படுகின்றன.
புரோட்டானுடைய சிறிய அளவுகாரணமாக அவற்றில் 20 அல்லது அதேயளவானவைகள் மட்டுமே உண்மையில்
மோதுதலுக்கு வரும். எவ்வாறிருப்பினும், ஒவ்வொரு 25 நானோ நொடிக்கு ஒரு அலைவரிசை அல்லது துடிப்பு
என்ற விகிதத்தில் புரோட்டான் கற்றைகள் அலைகளாக பயணிக்கின்றன. அதாவது, உணர்வியின் உட்பகுதியில்
மோதுதல்கள் உண்மையில் சராசரியாக ஒரு நொடிக்கு 80 மில்லியன் வீதத்தில் நடந்தேறும்.
பின்னர் இந்த வெடிப்புகளின் விளைவுகளை உணர்விகள் பதிவு செய்து வைக்க வேண்டும்.
இதற்கென பெரியளவிலான கணிணி செயல்முறைகளும், சேமிப்பு சாதனங்களும் தேவைப்படுகின்றன.
LHCயிடம் இருந்து
பெறப்படுகிற தரவுகளின் அளவு, பிரமிக்கத்தக்க வகையில் இந்த உலத்திலுள்ள அனைத்து கணிணிகளின் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும்
தரவுகளில் 1 சதவீத அளவானதாக இருக்கும் என்று செர்ன் தொழில்நுட்ப வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
இதுபோன்ற ஒரு பாரிய தகவல் தொழில்நுட்ப நடவடிக்கையினுடைய முக்கியத்துவத்தை
அடிகோடிட்டு காட்டுவதுயாதெனில், சில இயற்பியல் விஞ்ஞானிகள் கிக்ஸ் போஸன் (Higgs
Boson) என்று நம்புகிற இன்னும் புலப்படாமலிருக்கும் நுண்துகளை
LHC
விஞ்ஞானிகள்
கண்டுபிடிப்பார்கள் என்று நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அத்துடன்
சிக்காக்கோவிற்கு அருகிலுள்ள இல்லினோவாவில்
FermilabTM,
Tevatron விரைவாக்கியில்
ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள வசதிகளானது அதாவது கணிணி தொழிற்பாடு போதுமான சக்திவாய்ந்த
திறனுடன் அவற்றை பகுப்பாய்வு செய்வதற்கும் இனம் கண்டு கொள்வதற்கும் போதுமான வேகம் இல்லாமல்
இருந்திருக்கலாம் அல்லது மிக அதிகளவு சேமிப்பு கொள்ளளவு அவற்றை பதிப்பித்து வைக்க போதுமானதாக
இல்லாதிருந்திருக்கலாம்.
இப்படிப்பட்ட தரவுகளை ஒன்று திரட்டுவதும் பகுப்பாய்வதுமாகிய ஒரு மிகப்பெரிய
வியத்தகு வேலையை நிறைவேற்றும் நோக்கத்திற்காக செர்ன் ஆனது உலகிலேயே மிகப்பெரிய கணணித்தொகுதியை
உருவாக்கி உள்ளது. இவை இந்த பூகோளத்தை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கணிணி மையங்களின் சக்தியை பயன்படுத்துவதோடு
மொத்தமாக ஒரு 100,000 கணணி CPUக்களை
(Central processing units)
இணைக்கிறது.
ஒரு நொடிக்கு 1 ஜிகாபைட் வீதத்தில் தரவுகளை இந்த கணிணி தொகுதியால் செயல்முறைப்படுத்த
முடியும். அத்துடன் 15 பெடாபைட்ஸ் (10005)
கூடுதலாகவோ அல்லது ஒரு வருடத்திற்கு 15 மில்லியன் ஜிகாபைட்
தகவல்களுக்கு அதிகமாக சேர்ப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலகளவில் தரவு களஞ்சிய தொகுப்பு தொழில்நுட்பங்களின் பரந்தகன்ற அமைப்பை
அது கொண்டிருக்கும். தரவு களஞ்சிய தொகுப்பானது, ஓர் அதிநவீன மேம்பட்ட தொழில்நுட்பமாகவும் உள்ளது.
அது தரவு களஞ்சியத்தை பல கணிணிகளுக்கு இடையில் பரிமாற்றம் செய்கிறது. மேலும்
LHCன்
தரவு களஞ்சிய நகல்கள் 10 வெவ்வேறு நாடுகளில் 10 வெவ்வேறான
தரவுப் பகுதிகளில் பெறப்படுகின்றன.
எவ்வாறிருப்பினும், பெருவெடிப்பின் அனைத்து பில்லியன்கணக்கான பதிவுகளில், ஒரு சில
அற்ப பதிவுகள் மட்டுமே ஆராய்ச்சியாளர்களின் முக்கிய அக்கறைக்குரியதாய் உள்ளது. அத்துடன், அவைகளிலும் ஒரு
மிகச்சிறிய சிறுபான்மைகள் மட்டுமே இறுதியில் உண்மையான விஞ்ஞான முக்கியத்துவத்தும் உடையதாக இருக்கும். அதாவது,
வைக்கோல் கற்றைக்குள் ஊசியை தேடுவது போல் என்று கூறப்படும் பழமொழி இந்த விடயத்தில் சாதாரணமாக
பொருத்தமாக இருக்காது.
விஞ்ஞான எதிர்பார்ப்புகள்
உணர்விகளின் உட்பகுதியில் நடக்கும் பெருவெடிப்புகள், சூரியனுடைய மையப்பகுதிலுள்ள
வெப்பத்தை காட்டிலும் 100,000 மடங்கு அதிகமான வெப்பநிலையை உற்பத்தி செய்யும். உருவாக்கப்பட்ட
இப்படிப்பட்ட நிபந்தனையானது அதாவது அறியப்பட்ட இந்த பிரபஞ்ச தோற்றமுலத்தை போல் அதாவது மாபெரும்
பிரபஞ்ச வெடிப்பின் (Big Bang)
பின்னர் ஒரு வினாடியிலுள்ள ஒரு மில்லியனின் அந்த முதலாவது வினாடியிலுள்ள
(0,0000001 அல்லது1/1000000
) அதே மாதிரியான நிபந்தனைநிலையே இங்கும் உருவாகும். இப்படிப்பட்ட நிலைமைகளின் கீழ், அணுத்துகள்
இயற்பியலின் அடிப்படை மாதிரி கொள்கையில் (Standard
Model) ஹிக்ஸ் போஸன் எனப்படுகிற புலப்படாத நுண்துகள்களின்
இருப்பு தொடர்பான இதுவரை கண்டுபிடிக்கப்படாத இடையிணைப்பை உறுதிசெய்ய முடியும் என்று விஞ்ஞானிகள்
நம்புகிறார்கள்.
அடிப்படை மாதிரி கொள்கையின் கீழ், இரண்டு வகையான அடிப்படை நுண்துகள்கள்
உண்டு. அவையாவன:
ஒன்று, LHCன்
மூலமாக செலுத்தப்படுகிற புரோட்டான்களை கட்டமைக்கும் குவார்க்ஸ் (Quarks)
என்பதாகும். இரண்டாவது லெப்ரோன் என்பதாகும்.
ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு குவார்க்ஸ் தொகுதி ஹேட்ரோன் (Hadron)
என்று வேறொரு பெயரிலும் அழைக்கப்படுகிறது. இரண்டு "
மேல்" குவார்க்சுளும் ஒரு "கீழ்" குவார்க்சும் இணைந்து ஹேட்ரோன் உருவாகிறது. இது பொதுவாக ஒரு
புரோட்டன் என்று அறியப்படுகிறது. இதன் காரணமாக தான்
Large Hadron Collider
என்று அழைக்கப்படுகிறது.
இந்த நுண்துகள்கள் அவற்றின் பல்வேறு பண்புகளுக்கேற்ப ஒன்றன் மீதொன்று வேறுபட்ட
தொடர்புகளையும், அழுத்தங்களையும் பெறுகின்றன. நுண்துகள்களுக்கு இடையில் அழுத்தங்கள் செயல்பட்டன அல்லது
விவரிக்கவியலாத புலங்கள் அவற்றிற்கிடையில் உள்ளன என்பதே பண்டைய இயற்பியலின் (இருபதாம் நூற்றாண்டின் முதல்
ஆண்டுகள் வரை இருந்த இயற்பியல்) விளக்கமாக இருந்தது. எவ்வாறிருப்பினும், குவாண்டம் இயக்கம் என்று
அறியப்பட்ட இயற்பியல் பிரிவுகளின் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள் புலங்கள் என்பதற்கு மாறாக
நுண்துகள்களிடையே பொருள்சார் தொடர்பு இருந்ததாக கண்டறிந்தது. அதுவே கேஜ் போஸன்கள் (Gauge
bosons)
என்று அழைக்கப்பட்டது.
சான்றாக, ஒரு புரோட்டானிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் நிறுத்தப்பட்ட மற்றொரு
புரோட்டான் போட்டான்களின் (மின்காந்தத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட கேஜ் போஸன்கள்) பரிமாற்றத்தின்
காரணமாக அடுத்த புரோட்டானுடன் மோதலுக்குட்படகூடிய மின் விசையை பெறும்.
இந்த பிரபஞ்சம் நான்கு அடிப்படை விசைகளால் அல்லது அவற்றின் தொடர்புகளால்
கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக தான் இன்றும் இயற்பியல் விஞ்ஞானிகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவையாவன:
ஒன்று, வலுவான விசை, இது குவார்க்குகளை ஒன்று
சேர்ந்தாற் போல் இறுக்கமாக பிணைத்து வைத்திருப்பதற்கும், அணுவின் கருவிலுள்ள நியூட்ரோன்கள் மற்றும்
புரோட்டோன்களை ஒன்று சேர்ந்தாற் போல் இறுக்கமாக பிணைத்து வைத்து ஒரு மிகுதியாக தங்கியுள்ள அல்லது
எஞ்சியுள்ள விளைவை (Residual Effect)
ஏற்படுத்துவதற்கும் பொறுப்பேற்கிறது. இண்டாவது, வலுவற்ற
விசை, இது கதிரியக்க சிதைவை ஏற்படுத்த பொறுப்பாகயிருக்கிறது. அதாவது சூரிய கதிர்வீச்சு
உண்டாவதைப் போல் இது நிகழும். முன்றாவது, மின்காந்த விசை;
நான்காவது; ஈர்ப்பு விசை.
அடிப்படை மாதிரியை பின்பற்றி, கேஜ் போஸன்களின்
(Gauge bosons)
வகைகளாவன:
வலுவான விசையின் குளுவான்கள் (gluons),
மின்காந்த விசையின் போட்டான்கள், வலுவற்ற விசையின்
W மற்றும்
Z போஸான்கள்
ஆகியவை. அடிப்படை மாதிரிக்கொள்கை ஈர்ப்பு விசை பற்றி எதையும் குறிப்பிடவில்லை.
மின்காந்தம் மற்றும் வலுவற்ற விசைகள் இரண்டும் ஒரே விசையின் வேறுபட்ட
தோற்றங்களாக இருப்பதாக இப்போது நம்பப்படுகிறது. எவ்வாறிருப்பினும், கேஜ் போஸன்கள் இந்த
சந்தர்ப்பத்தில் அனேகமாக ஒரேமாதிரியற்றதாக இருக்கின்றன. அதாவது போட்டோன்கள் நிறை
அல்லாதவைகளாகவும், W
மற்றும் Z
போஸன்கள் மிகவும் எடை கொண்டவையாகவும் உள்ளன.
கிக்ஸ் இயங்குமுறை (Higgs
mechanism) என்று அழைக்கப்படுவதுடன் தொடர்புபட்ட கிக்ஸ்
போஸனானது (Higgs Boson)
நிறையின் தோற்றுவாய் என்று ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
எவ்வாறிருப்பினும், கிக்ஸ் போஸனை உற்பத்தி செய்ய மிக உயர்ந்த அளவிலான சக்திகள் தேவைப்படுவதால், அது
ஒருபோதும் கவனிக்கப்படவில்லை. LHC
பெருவெடிப்பில் கண்டறியப்படும் கிக்ஸ் போஸன் நுண்துகள்,
W மற்றும்
Z
போஸன்களுக்கு இடையிலுள்ள வித்தியாசங்களையும், போட்டோன் (Photon)
பற்றிய விளக்கத்தையும் பெற உதவியாய் அமையும் என்று
நம்பப்படுகிறது.
LHC ன் உணர்விகளில்
(Detectors)
உள்ள இத்தகைய மாபெரும் சக்திகள், பிரபஞ்சத்தின் பிற பரிமாணங்கள் போன்ற பேரார்வமூட்டும் புதிர்களை
வெளிச்சத்திற்கு கொண்டு வர கூடும். அத்துடன் இதுவரை ஒருபோதும் கண்டறியப்படாத, ஆனால் பிரபஞ்சம்
முழுவதும் எங்கும் எல்லையில்லாமல் நிரம்பியுள்ளதாக நம்பப்படும் கரும்பிண்டத்தின் தன்மையையும் கூட வெளிப்படுத்தி
காட்டலாம்.
அதிவேக கடத்தும் திறன் கொண்ட பெருவெடிப்பியந்திரம்
LHC ன் பூர்த்தியானது ஒரு
உற்சாகமுட்டுகின்ற மனித புரிதலின் முன்னோக்கிய முன்னேற்றத்தை பிரகடனப்படுத்தும் அதே நேரம், இந்த புரிதல்
10 வருடம் கால தாமதமாகியுள்ளது. டெக்சாஸில் அமைக்கப்பட்ட அதிவேக கடத்தும் திறனிலான பெரு
வெடிப்பியந்திரம் (Superconducting Super
Collider-SSC) 14 மைல்களுக்கு சுரங்கம்
தோண்டப்பட்டும், இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட டாலர்கள் செலவழிக்கப்பட்ட நிலையில் 1993ல் கிளின்டன்
அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டது. அது
சர்வதேச விஞ்ஞான சமுகத்திற்கும், பொதுவாக விஞ்ஞான அறிவிற்கும்
ஏற்பட்ட ஒரு பாரதுாரமான திடீர் இழப்பைத் தான் குறிக்கிறது.
SSC ன் வேலை பூர்த்தி
செய்யப்பட்டிருப்பின், 54 மைல் சுற்றளவு கொண்ட ஒரு வட்ட வளைய பாதையையும், 40
TeV மொத்த
சக்தியையும் கொண்ட உடைக்கப்பட்ட நுண்துகள்களையும் கொண்டிருந்திருக்கும். அது
LHC காட்டிலும் 3
மடங்கு அதிகமான சக்தியை உற்பத்தி செய்திருக்கும்.
SSCன் ஆய்விடம் ஒரு தனியார் முதலீட்டு குழுமத்திற்கு
விற்கப்பட்டதிலிருந்து, மீண்டும் அதை இயக்க வைக்க எந்த திட்டத்திற்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை.
பத்திரிகையாளர் Daniel
S. Greenberg, விஞ்ஞானம், பணம் மற்றும் அரசியல்
என்ற புத்தகத்தில் SSCக்கான
நிதியை வெட்டிய முடிவைப் பற்றி விரிவாக எழுதுகின்றார்.
"SSCக்கான
ஆதரவு ஆவணத்தில் பதிவாகியுள்ளது"
ஆனால் உண்மையில்,
"SSCன் மேலிருந்த
அக்கறை புறக்கணிக்கத்தக்கதாக இருந்ததோடு, திட்டத்தை பாதுகாக்கும் முயற்சிகளும் அக்கறையற்றதாக இருந்தன"
என்று கிளின்டன் நிர்வாகத்தைப் பற்றி அவர் விவரிக்கின்றார்.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான முன்னாள் உதவித்தலைவர்
John Gibbonsன்
ஒரு குறிப்பிடத்தக்க கருத்தையும் Greenberg
தொடர்புபடுத்தி விவரிக்கிறார்.
SSCக்கான
பெருமளவு நிதிதொடர்பாக கவலை கொள்ளப்பட வேண்டியுள்ளது என்று
Greenberg
உடனான ஒரு பேட்டியில் Gibbons
குறிப்பிட்டார். அதாவது,
"அது மிகவும்
சிறியதாகவும் மிகவும் காலதாமதமாகவும் இருந்ததோடு காங்கிரஸ் ஏதோ ஒரு வழியில் சில மேற்பாகத்தைதான்
விரும்பியது. அது தான் இது. மேலும் நாங்கள் அதை பெற வேண்டும் என்பதற்காக அதற்காக மிகவும் கடினமாக
போராடவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் போராட்டங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்."
என்றார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, சோவியத் ஒன்றிய உடைவிற்கு பின்னர், அடிப்படை
விஞ்ஞான ஆய்வுகளில் அமெரிக்க அரசாங்கம் மேலதிக முதலீட்டை அதிகரிப்பதற்கான எந்த முகாந்திரமும்
காணப்படவில்லை. அதில் SSC
தான் முதல் பலிக்கடாவாக இருந்தது.
SSCன் உள்ளார்ந்த
தன்மையானது,
அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பரந்தகன்ற பிலிஸ்தீனியவாதத்தின் உறுதியான
வெளிப்பாடாக இருந்தது. அதாவது உடனடியான அரசியல், இராணுவ அல்லது பொருளாதார இலாபங்களை
அளிக்காத இந்த திட்டத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை.
2000 செப்டம்பரில்,
SSCக்கான நிதிக்கு எதிராக வாக்களிப்பதற்கான அவரது
காரணத்தை அவர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியவரான இயோவாவின் ஜனநாயக கட்சி செனட்டர்
Tom Harkinவின்
பார்வை தனி எடுத்துக்காட்டாக இருந்தது: "நாங்கள்
சரியான தருணத்தில் உணர்வைப் பெற்றிருப்பதாலும், SSCஐ
பூர்த்தியாக்காமல் இருப்பதாலும் நாங்கள் ஒரு நாட்டை மிகவும் மோசமாக்குகிறோமா? ஒருபோதும் இல்லை.
நாம் நல்ல நிலையில் இருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் பணத்தைப் பாதுகாத்துள்ளோம்."
என்றார்.
ஐரோப்பாவானது LHC
உடனும், செர்ன் உடனும் முன்னோக்கி சென்ற அதேநேரம்
இதற்குமாறாய் அந்த திட்டத்தை மூடுவதற்கு பல தடவைகள் பயமுறுத்தப்பட்டிருந்தது.
SSCன் முடிவு
நிகழ்ச்சியை, அமெரிக்க அடிப்படை விஞ்ஞானத்தின் ஒரு போட்டி கருவியாக
LHCயை
ஐரோப்பிய அரசியல்வாதிகள் பார்க்கிறார்கள். இருந்தபோதிலும், பெருவெடிப்பியந்திரமானது, அது விஞ்ஞான
ஆராய்ச்சியின் சர்வதேச பண்பின் ஒரு சாசனமாகவும், காலவதியான தேசிய அரசு அமைப்புடன்
பொருத்தமற்றதாகவும் இருக்கிறது.
ஒரு மிகப்பெரிய குறிக்கோளுடைய விஞ்ஞான முயற்சியை தனியொரு நாட்டினால்
செயலுருவாக்குவது முடியாதிருந்திருக்கும். மேலும், அணுத்துகள் மோதல்களால் உண்டாகும் விளைவுகளுக்கு,
அமெரிக்கா உட்பட நுாற்றுக்கணக்கான பல்வேறு நாடுகளிலிருக்கும் விஞ்ஞானிகளிடமிருந்து நெருக்கமான
ஒத்தழைப்புக்கள் தேவைப்படும். இத்தகைய ஒத்துழைப்பு ஒரு அடையாளக்குறியீடாகவும், விஞ்ஞான முன்னேற்றத்திற்கு
உண்மையான முன்நிபந்தனையாகவும் பல தசாப்தங்களாக இருந்திருக்கிறது.
அனைத்தையும் தனியார் இலாபத்தின் கீழ் கொண்டு வரப்படுவதாலும், பூகோள
அரசியல் நலன்களாலும் மற்றும் தனிநபர் செல்வ குவிப்பினாலும் கட்டுப்படுத்தப்படுகிற ஒரு சமூக அமைப்பானது,
விஞ்ஞானத்தின் இன்னும் அடுத்த கட்ட வளர்ச்சியை தடுப்பற்கான ஓர் எடுத்துக்காட்டாக
SSC திட்டத்தின்
நிறுத்தம் அமைந்துள்ளது.
இருபதாம் நுாற்றாண்டின் தொடக்க தசாப்த காலப்பகுதியில், அணுத்துகள் இயற்பியலின்
ஆரம்பகாலத்தில் எதிர்கொண்ட பல இடர்களைப் பற்றி மீண்டும் பெறுமதியாக நினைவு கூறக்கூடியதாக உள்ளது.
அந்த காலப்பகுதியில், இயற்பியல் விஞ்ஞானிகள் பெருமளவு ஒன்றுசேர்ந்த பரமாணுகளைப் பற்றிய அவர்களுடைய புரிதல்களில்
ஒரு மாபெரும் வளர்ச்சியை கண்டார்கள். இரண்டாம் உலக யுத்தம் வெடிப்பதற்கு முன்னர் தொடர்ச்சியான சர்வதேச
ஒத்துழைப்பின் உருவாக்கத்தில் பல கண்டுபிடிப்புக்கள் செய்யப்பட்டன. அதே விஞ்ஞானிகளில் பலர் இந்த யுத்தத்தில்
அவர்களே எதிர்தரப்பிலும் இருந்தார்கள். ஏனென்றால் அவர்களுடைய முதலாளித்துவ அரசாங்கங்கள் தமக்கான அணுகுண்டை
உருவாக்குவதற்கு அவர்களை சுரண்டியது.
இந்த முழுமையான மற்றும் பெரும்துயர மாற்றங்கள் விஞ்ஞான ஆய்வினுடைய பங்கில்
ஒரு விபத்தாக இருக்கவில்லை. இந்த தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி திறன் வளர்ச்சிகளின் முன்னோக்கிய பாரிய
விஞ்ஞான முன்னேற்றங்கள் அதற்கு உதவியது. அத்துடன் தேசிய அரசமைப்பை வேராக கொண்டதும், தமக்கிடையே
முரண்பாடுகளையும் உடைய வேறுபட்ட முதலாளித்துவ சக்திகளையும் கூட சர்வதேச ஒருங்கிணைப்பிற்கு கொண்டு
வந்தது.
பூகோள அரசியல் தீவிரப்படுத்தல்களுக்கும் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு
மத்தியிலும் செர்னின் சாதனைகள் இந்த உலகம் முழுவதாலும் கவனிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு
தீர்க்கதரிசனத்திற்குரிய எடுத்துக்காட்டாகவும் காணப்படுகிறது. விஞ்ஞானம் ஒரு நீண்ட பாதையை வந்தடைந்திருக்கிற
அதே நேரம் மனிதனுடைய சமூக ஒழுங்கமைப்பு
இன்னும் மோசமாக பின்தங்கியுள்ளது. |