World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Stock markets fall as global recession takes hold

உலக பொருளாதாரப் பின்னடைவு பாதிப்பை ஆரம்பிக்கையில் பங்குச் சந்தைகள் சரிகின்றன

By Patrick O'Connor
16 October 2008

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க பொருளாதாரம் ஒரு கடுமையான பொருளாதாரப் பின்னடைவில் நுழைகிறது என்பதற்கான பெருகிய சான்றுகளின் மத்தியில் நேற்று அமெரிக்க, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தீவிரமாக சரிந்தன.

நேற்று வோல் ஸ்ட்ரீட்டில் Dow Jones Industrial Average 7.8 சதவிகிதம் அல்லது 733 புள்ளிகள் வீழ்ச்சியுற்றது; இது இரண்டாவது மிகப் பெரிய ஒரு நாள் வீழ்ச்சியாகும். 30 Dow Industrials களில் கோக்கா-கோலா ஒன்றுதான் எதிர்பார்த்தைவிட அதிக இலாப விவரங்களை வெளியிட்டதால் ஓரளவு உயர்வைக் காட்டியது.

Standard & Poor's 500 குறியீடு இன்னும் தீவிரமாக 9 சதவிகிதம் சரிந்தது; தொழில்நுட்பத் தளத்தையுடைய நஸ்டக் 8.4 சதவிகிம் குறைந்தது. இக்குறியீடுகளில் உள்ள பங்குகள் கிட்டத்தட்ட சீரான முறையில் தாழ்ந்தன; சரியும் பங்குகள் முன்னேறும் பங்குகளைவிட 8 க்கு 1 என்ற விகிதத்தில் நஸ்டக்கில் இருந்தன.

நேற்றைய Dow Jones மிகப் பெரிய முறையில் திங்களன்று ஏற்பட்ட ஒரு நாள் 936 புள்ளிகள் உயர்வை அழித்துவிட்டது; அது முந்தைய வாரத்தில் முன்னோடியில்லாத வகையில் 18 சதவிகிதச் சரிவை தொடர்ந்து ஏற்பட்டிருந்தது. புஷ் நிர்வாகம் வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பிற்கு $700 பில்லியன் கொடுத்து நீட்டிக்கும் விதமாய் முக்கிய வங்கிகள், நிதிய நிறுவனங்களை முட்டுக் கொடுத்து நிறுத்த $2.25 டிரில்லியன் வரை கூடுதலாக பொதுப் பணத்தில் இருந்து ஒதுக்கீடு செய்ய இருப்பதாக அறிவித்தைத் தொடர்ந்து திங்களன்று முன்னேற்றம் இருந்தது.

சந்தையில் நேற்றைய கீழ்நோக்குச் சரிவு, பிணை எடுப்பு அமெரிக்கா பொருளாதாரப் பின்னடைவு நிலைக்கு செல்வதைத் தடுக்க முடியாது என்ற பெருகிய முன்னுணர்வைக் காட்டுகிறது. நுகர்வோர் செலவினம் தீவிரமாகக் குறைந்துவிட்டது, வேலை இழப்புக்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன, வணிக நம்பிக்கை குறைவாக உள்ளது மற்றும் முக்கியமான அமெரிக்க ஏற்றுமதிச் சந்தைகள் ஐரோப்பாவிலும் மற்ற பகுதிகளிலும் உலக வளர்ச்சியின் தடுமாற்றத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியின் கீழுள்ள தன்மைகள் எவற்றையும் புஷ் நிர்வாகத்தால் சீர்படுத்த முடியவில்லை.

"அரசாங்கம் செய்துள்ள அனைத்தும் பொருளாதாரம் இன்னும் சரிவதை தடுக்கப் போவதில்லை" என்று PNC வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுனர் Stuart Hoffman நியூ யோர்க் டைம்ஸிடம் கூறினார்.

"பழைய நெருக்கடியில் இருந்து ஓரளவிற்கு நாம் புதிய நெருக்கடிக்கு நகர்ந்து விட்டோம்" என்று Standard & Poor's ன் மூத்த குறியீட்டெண் பகுப்பாய்வாளர் Howard Silverblatt கூறினார். "கடன் நெருக்கடி ஓரளவு கவனிக்கப்பட்டுள்ளது, ஆனால் இப்பொழுது பொருளாதாரப் பின்னடைவு நிலை, வேலையின்மை மற்றும் உயர்ந்துள்ள உற்பத்தி செலவுகள் ஆகியவை பீடித்துள்ளன."

அமெரிக்க வணிகத் துறையின் செப்டம்பர் சில்லறை விற்பனை பற்றி நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, விற்பனை 1.2 சதவிகிதம் குறைந்துள்ளதாக கண்டுபிடித்துள்ளது. இது பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்த்த சரிவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகும்; மேலும் நுகர்வோர் செலவினம் தொடர்ச்சியாகக் குறைந்துள்ள மூன்றாம் மாதம் இது ஆகும்.

எந்த அளவிற்கு நிதிய நெருக்கடி தொழிலாள வர்க்கத்தை தாக்கியுள்ளது என்பதைக் குறிக்கும் வகையில், குறிப்பாக கார் சில்லறை விறப்னையாளர்களை நுகர்வோர் விற்பனை சரிவு தாக்கியது என்பது பற்றி அறிய கார் விற்பனை 3.8 சதவிகிதம் சரிந்துள்ளது என்று குறிப்பிட்டாலே போதும்; இதைத்தவிர பல்பொருள் அங்காடிகளிலும் பெரிய கடை வளாகங்களிலும் இதே நிலைதான் உள்ளது. இதற்கு விடையிறுக்கும் வகையில் பங்குகளின் மதிப்பு நேற்று Wal-Mart (6.3 சதவிகிதம்), Target (8 சதவிகிதம்), Staples (7.7) எனச் சரிந்தன.

மத்திய வங்கிகளின் கூட்டமைப்பு நாடு நெடுகிலும் நடக்கும் வணிகம் பற்றிய முறையான கணக்கெடுப்பான "நடப்பு நூல்" என்பதையும் வெளியிட்டுள்ளது; இதில் செலவு செய்வது என்பது அறிக்கையில் உள்ள 12 பெருநகரப் பகுதிகளிலும் குறைந்துவிட்டது என்பது தெரியவந்துள்ளது. சில்லறை விற்பனை, கார் விற்பனை, சுற்றுலாப் பிரிவு ஆகியவை பெரும்பாலான இடங்களில் சரிந்துள்ளன; வீடுகள் மற்றும் கட்டுமானம் என்ற பிரிவுகள் "வலுவிழந்தன அல்லது மிகக் குறைவான நிலையில் இருந்தன" என்று அறிக்கை கூறியுள்ளது. வணிகர்கள் "பொருளாதரப் பார்வையை பற்றி கூடுதலான அவநம்பிக்கை கொண்டிருப்பதாகத்தான்" கூறியுள்ளனர்.

மற்ற எதிர்மறைக் குறிப்புக்கள் நியூ யோர்க் உற்பத்தி முறை தன்மையை அடக்கியிருந்தன; அது இந்த குறியீடு தொடக்கப்பட்ட 2001ல் இருந்து மிகக் குறைந்த மட்டத்தில் இருந்தது.

ஒரு தனி அறிவிப்பில் நியூ யோர்க்கின் முக்கிய நிதிய அதிகாரியான கட்டுப்பாட்டு பிரிவு வில்லியம் தொம்சன் நிதிய நெருக்கடியை ஒட்டி நகரத்தில் 165,000 வேலை இழப்புக்கள் நேரலாம் என்றும் நிதியப் பிரிவில் மட்டும் 35,000 இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளார். ஜூலை மாதம் தொம்சன் எதிர்பார்த்திருந்த எண்ணிக்கையைவிட 165,000 வேலை இழப்புக்கள் என்பது இருமடங்கு ஆகும். "பொருளாதார தொந்திரவுகள் மற்ற தொழில் பிரிவுகளுக்கு பரவும்போது, நாடு ஒரு பொது பொருளாதார பின்னடைவு நிலையை அடையும்போது" ஏற்படக்கூடிய நிலையை மதிப்பீடு பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

வேலையின்மை அளவு தவிர்க்க முடியாமல் உயரும் என்ற எச்சரிக்கைகள் பலவற்றுள் ஒன்றுதான் தொம்சனுடைய அறிக்கையும் ஆகும். திங்களன்று மைக்ரோசாப்ட்டின் பில் கேட்ஸ் "குறிப்பிடத்தக்க வகையில் ஒரு மந்த நிலை வரக்கூடும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும்" அது 9 சதவிகிதம் வேலையின்மையை கொண்டுவரக்கூடும் என்றும் கூறினார். அவருடய நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய், புதன் அன்று மொத்தமாக 11 சதவிகித சரிவை மதிப்பில் காண்பதற்கு முன்பாகவே இந்த அறிக்கையை கேட்ஸ் வெளியிட்டிருந்தார். மற்ற தொழில்நுட்ப பிரிவு பங்குகளும் நேற்று தீவிரமாகச் சரிந்தன; இதில் EBay 14 சதவிகிதம், டெல் 11 சதவிகிதம் என்பவையும் அடங்கும்.

பெருமந்த நிலை தோற்றம்

சான் பிரான்ஸிஸ்கோ மத்திய ரிசேர்வின் தலைவரான Janet Yellen சிலிகோன் பள்ளத்தாக்கு நிர்வாகிகளுக்கு கொடுத்த உரை ஒன்றில் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக பொருளாதாரப் பின்னடைவில் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். மூன்றாம் காலண்டுக்காலத்தில் எதிர்பார்த்ததைவிட பொருளாதாரம் வலுவிழந்துள்ளதாக சமீபத்திய பெடரல் தகவல்கள் அறிவித்துள்ளதாக அவர் கூறினார்; "அடிப்படையில் இது வளர்ச்சி எதையும் காட்டவில்லை என்பதும் காரணமாகும்" என்று கூறிய இவர், நான்காம் காலண்டில் "நேரடியான சுருக்கம் என்பது நிகழக் கூடியதே என்றார். "உண்மையில் அமெரிக்க பொருளாதாரம் ஒரு பின்னடைவில் இருப்பதாகத்தான் தோன்றுகிறது" என்று இவ்வம்மையார் கூறி முடித்தார்.

குறிப்பிடத்தக்கவகையில் யெல்லனுடைய உரை பெடரலின் மத்திய வலைத் தளத்தில் வெளியிடப்படவில்லை. நேற்று நியூ யோர்க் பொருளாதார கிளப்பில் மத்திய வங்கிகள் கூட்டமைப்பின் தலைவர் பென் பெர்னன்கே சற்று வேறுவிதமான குறிப்பை உணர்த்தினார். சந்தைகளுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பெர்னன்கே மீண்டும் பிணை எடுப்பிற்கு ஆதரவாகப் பேசி, இம்மாதப் பிற்பகுதியில் வட்டி விகிதங்கள் இன்னும் குறைக்கப்படக் கூடும் என்று குறிப்புக் காட்டினார். மேலும் பொருளாதாரப் பின்னடைவு நிலையில் இருந்து கொள்கை அமைப்பவர்கள் படிப்பினை கற்றுக்கொண்டுள்ளதாகவும் 1930 களில் இவர்களைப் போல் இருந்தவர்களின் "முக்கிய தவறுகளை" தவிர்த்துவிட்டதாகவும் கூறினார்.

ஆயினும், பெருமந்த நிலை பற்றி மத்திய வங்கிகள் கூட்டமைப்பின் தலைவர் வெளிப்படையாக விவாதிக்கிறார் என்ற உண்மையால் வோல் ஸ்டரீட்டில் பலரும் உறுதி குலைகையில், இத்தகைய வெற்றுரைகள், ஊக்கம் கொடுக்கவில்லை.

நியூ யோர்க்கில் இருக்கும் Avalon Partners ன் தலைமை சந்தைப் பகுப்பாய்வளரான பீட்டர் கார்டிலோ வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் 1930 கள் நிலைமையுடன் தற்போதைய நெருக்கடியை பெர்னன்கே ஒப்பிட்டுப் பேசியது "குறிப்பிடத்தக்க வகையில் கவலை கொடுக்கிறது" என்றார். "சந்தை எப்படி இதற்கு விடையிறுக்காமல் இருக்கும்? என்ன இவர் இப்படிக் கூறுகிறார்!" என்று அவர் அறிவித்தார்.

பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து "புதிய உற்சாகத்துடன்" வெளிப்படும் என்று தான் நம்புவதாக பெர்னன்கே வலியுறுத்தினார்; ஆனால் அவருடைய உரை ஒரு கடுமையான நிலையைத்தான் முன்கூட்டிக் காண்பித்தது. "நிதியச் சந்தைகளை உறுதிப்படுத்துவது என்பது முக்கியமான முதல் நடவடிக்கை, ஆனால் அவை நாம் நம்புவது போல் உறுதி அடைந்தாலும், பரந்த பொருளாதார மீட்பு உடனடியாக நிகழாது" என்று அவர் கூறினார். "சமீபத்திய நெருக்கடி தீவிரமாவதற்கு முன்பே பொருளாதார நடவடிக்கைகள் கீழ்நோக்கிச் சென்றுள்ளன... இறுதியில் பொருளாதார நடவடிக்கையின் போக்கு அடுத்த சில காலண்டுகளுக்கு அப்பால் எப்படி இருக்கும் என்பது இன்னும் சாதாரண செயற்பாட்டுக்கு நிதிய, கடன் சந்தைகள் திரும்பிய பின்னர்தான் தெரியவரும்."

புஷ் நிர்வாகத்தின் நடவடிக்கைகள், அமெரிக்க பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்தி வரும் நடைமுறையில் உள்ள நிதிய ஒட்டுண்ணித்தனத்தை புதுப்பிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மிகச் சிறந்த "Blue chip" நிதிய பங்குகளும் நேற்று வோல் ஸ்ட்ரீட்டில் தீவிர சரிவை அடைந்தன. சிட்டி குழுமம் மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இரண்டும் 13 சதவிகிதம் குறைந்தன. ஒப்பன்ஹீமர் நிறுவனத்தில் உள்ள வங்கிகள் பற்றிய செல்வாக்குடைய பகுப்பாய்வாளர் ஒருவர் புஷ் பிணை எடுப்பு செய்தும் அமெரிக்க வங்கிகள் "ஆபத்தில் இருந்து நீங்கவில்லை" என்று எச்சரித்ததால் குறைந்த விலைக்கு விற்றுத் தீர்ப்பதற்கு பங்களிப்பு செய்தது.

நேற்றைய வோல் ஸ்ட்ரீட்டின் விற்பனைகளில் முக்கியகாரணி ஹெட்ஜ் நிதிகளின் செயற்பாடு ஆகும்; இவை தங்கள் இடைத்தரகர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை பெறுவதற்கு பங்குகளை விற்க கட்டாயப்படுத்தப்பட்டன. இத்தகைய கட்டாய விற்பனை, பெரிய முதலீட்டாளர்களால் செய்யப்படும்போது, பங்கு விலைகள் இன்னும் குறையும்; இதையொட்டி நிதிய நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய கடன்களுக்கு ஆதரவாக இருக்கும் உத்தரவாத சொத்துக்கள் அல்லது பத்திரங்கள் மதிப்பும் குறையும். இதனால் மற்ற கடன்காரர்கள் கூடுதலான நிதியத்தை கேட்கும் நிலையும் ஏற்படும். இதன் விளைவு நிதியச் சந்தைகளில் கீழ்நோக்கு விரைவாக ஏற்படும்.

இந்த பிணை எடுப்புக்கு எப்படி பணம் செலுத்துவது என்ற முக்கிய பிரச்சினையும் உள்ளது. செவ்வாயன்று கருவூலம் கூட்டாட்சி அரசாங்கம் 2008 நிதியாண்டில் $454.8 பில்லியன் பற்றாக்குறையை, அதாவது 2007 பற்றாக்குறையான $161.5 பில்லியன் என்பதில் இருந்து உயர்த்தியிருக்கிறது என அறிவித்தது. Bloomberg.com உடைய கருத்தின்படி மோர்கன் ஸ்ரான்லியின் தலைமை பொருளாதார வல்லுனர் டேவிட் க்ரீன்லா, பிணை எடுப்பின் முழுப் பரப்பும் தெரியவந்தவுடன் இப்பற்றாக்குறை $2டிரில்லயன் ஆகக்கடும் என்று முன்கணித்தார். இது கிட்டத்தட்ட அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவிகிதம் ஆகும்; இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் 1983ல் பதிவு செய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதம் பற்றாக்குறை என இருந்த உயர்ந்த அளவை விட, இது இரு மடங்கு பெரியது ஆகும்.

தன்னுடைய நியூ யோர்க் பேச்சில் மத்திய வங்கிகள் கூட்டமைப்பின் தலைவர் பெர்னன்கே அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு மற்றொரு ஆபத்தையும் சுட்டிக் காட்டினார் --முக்கிய வணிகப் பங்காளிகளின் மெதுவான பொருளாதார வளர்ச்சி பற்றி; இதுவும் அமெரிக்க ஏற்றுமதிகளை உறுதியாக குறைக்கும்.

ஐரோப்பாவில் நேற்றைய மாற்றங்கள் இந்த அச்சங்களை உறுதிபடுத்தின. முக்கிய பங்குச் சந்தைகள் தீவிர சரிவைச் சந்தித்தன; லண்டன் FTSE 100 குறியீடு குறைந்தது, அதாவது 7.2 சதவிகிதம், பிரெஞ்சு CAC-40, 6.8 சதவிகிதம் என்றும் ஜேர்மனியின் DAX 6.4 சதவிகிதமும் குறைந்தன.

பிரிட்டிஷ் சந்தைகளில் சரிவு என்பது ஓரளவிற்கு ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களுக்கு உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம், முந்தைய காலண்டில் 5.2 சதவிகித்தில் இருந்து 5.7 சதவிகிதம் என உயர்ந்தது என்பதை வெளியிடப்பட்டதை அடுத்து தூண்டுதல் பெற்றது. உத்தியோகபூர்வ வேலையின்மை தொகுப்பில் மற்றும் ஒரு 164,000 மக்கள் சேர்ந்தனர்; 17 ஆண்டுகளில் இது மிகப் பெரிய காலாண்டு உயர்வாகும். பைனான்ஸியல் டைம்ஸ் கருத்தின்படி பல கணிப்பாளர்களும் பிரிட்டனில் வேலையின்மை விகிதம் வரவிருக்கும் ஆண்டில் 7 சதவிகித்திற்கும் மேலாகச் செல்லும் என்று எதிர்பார்ப்பதாக எழுதியுள்ளது.

உலக வளர்ச்சி குறைதல் என்பது பொருட்களுக்கான தேவைக் குறைவில் பிரதிபலிக்கிறது; இதையொட்டி விலைகள் இன்னும் குறைகின்றன. Reuters-Jefferies CRB குறியீட்டெண், உலகப் பொருட்கள் விலை பற்றிய ஒரு குறியீடு, இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவிற்கு நேற்று குறைந்தது; ஜூலை மாதம் இருந்த மிக அதிக நிலையைவிட 40 சதவிகிதம் குறைந்தது. கடந்த மூன்று மாதங்களில் கச்சா எண்ணெய், பிளாட்டினம், எஃகு, செம்பு மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் விலைகள் 35 முதல் 45 சதவிகிதம் குறைந்துள்ளன; விவசாயப் பொருட்கள், சோய், கார்ன் ஆகியவை உட்பட 50 சதவிகித்திற்கும் மேலாகக் குறைந்து விட்டன.

மெதுவான சீன வளர்ச்சியை எதிர்கொள்ளும் வகையில் அலுமினிய உருக்கு ஆலைகளில் உற்பத்திக் குறைவை மேற்கொண்டிருப்பதாக ரியோ டின்டோ அறிவித்துள்ளது. ரியோ டின்டோவின் தலைமை நிர்வாகியான டாம் அல்பனீஸ், சீனப் பொருளாதாரம், "வியத்தகு மொத்த உள்நாட்டு உற்பத்தி நிலைக்குப் பின்னர், சற்று மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது" என்றார். இந்த மகத்தான சுரங்கத் தொழிலின் பங்குகள் இவ்வறிவிப்பை தொடர்ந்து 16 சதவிகிதம் சரிந்தன. மற்ற விசை மற்றும் பொருள் விற்பனை நிறுவனங்களின் பங்குகள் நேற்று சரிந்தன; இதில் Alcoa (12.8 சதவிகிதம்), Exxon Mobil (14 சதவிகிதம்) ஆகியவையும் அடங்கும்.

ஒரு முழு காலகட்டத்திலும் முதலாளித்தவ முறையை அதிர்விற்கு உட்படுத்தியிருந்த அடித்தளத்தில் இருந்த முரண்பாடுகளை நிதிய நெருக்கடி வெளிப்படுத்தியுள்ளது. ஐரோப்பா, ஆசியா மற்றும் பிற பகுதிகளில் இருக்கும் கொள்கை வகுப்பவர்களின் பெரும் திகைப்புடன் கூடிய நம்பிக்கை ஒரு புறம் இருக்க, ஒரு கடுமையான, நீடித்த பொருளாதாரப் பின்னடைவு அமெரிக்காவில் ஏற்படுவது தவிர்க்க முடியாமல் உலகப் பொருளாதாரத்தில் ஒரு பெரிய கீழ்நோக்கிய சரிவை ஏற்படுத்தும்.

See Also:

சோசலிசம் (எதிர்) அரசாங்கம் முதலாளித்துவத்தை பிணை எடுப்பு

பங்குச் சந்தைகளின் மோசடியான எழுச்சி - வரலாறு நமக்கு சொல்வது என்ன?