WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்
திக்ஷீணீஸீநீமீ: 360 தீவீறீறீவீஷீஸீ tஷீ தீணீவீறீ ஷீut tலீமீ தீணீஸீளீs
பிரான்ஸ்: வங்கிகளை பிணை எடுப்பதற்கு 360 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கீடு
By Antoine Lerougetel
20 October 2008
Use this version
to print | Send
this link by email | Email
the author
மிகக் குறைந்த விவாதத்துடன் பிரெஞ்சு பாராளுமன்றம் வங்கிகளுக்கான அரசாங்கத்தின்
360 பில்லியன் யூரோக்கள் மீட்பு திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தது; இது நிதிய உயரடுக்கிற்கு மகத்தான முறையில்
பொது நிதியம் மாற்றப்படுவதாகும்; இது 224 - 23 என்ற வாக்கெடுப்பில் நிறைவேறியது. யூரோப் பகுதி
மற்றும் பிரிட்டன் ஆகிய அரசாங்கங்களின் ஒருங்கிணைந்த 2.7 டிரில்லியன் யூரோ நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்
(15 நாடுகளில் யூரோ நாணயமாக உள்ளது). ஆளும்
UMP,
New Centre மற்றும்
MoDem (Mouvement démocratique de François
Bayrou) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றது. சோசலிஸ்ட்
கட்சி (PS),
மற்றும் பசுமைக் கட்சி ஆகியவை வாக்களிப்பதை தவிர்த்தன; கம்யூனிஸ்ட் கட்சி (PCF)
எதிர்த்து வாக்களித்தது.
திவாலடைந்து கொண்டிருக்கும் வங்கிகளுக்கு அவற்றின் பங்குகள், சொத்துக்கள்
ஆகியவற்றை வாங்கி மறு மூலதனம் கொடுக்கும் வகையில் 40 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய
320 பில்லியன் யூரோக்கள் வங்கிகளுக்கு இடையேயான கடன்களுக்கு உறுதி மொழி போன்றவை ஆகும். நிதி மந்திரி
Christine Lagarde
இத்திட்டம் வரவு செலவுத்திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார். மிக அதிக கடன் வாங்குதல்,
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 65 சதவிகிதத்திற்கு மேல் ஆகியிருக்கும், ஏற்கனவே பெருத்துள்ள பொதுக் கடனை
அதிகப்படுத்துதல், ஐரோப்பிய ஒன்றிய ஸ்திரத்தன்மை உடன்பாடான 60 சதவிகிதம் என்ற நெறியைவிடக் கூடுதலாக
செல்லுதல் என்று இது உட்குறிப்பாய் காட்டுகிறது.
அடிப்படை சமூகத் தேவைகளுக்கு கொடுப்பதற்கு காட்டும் தயக்கத்திற்கு மாறாக
அரசாங்கம் வங்கிகளுக்கு விரைவில் பணம் கொடுக்கும் விதம் ஏழு மில்லியன் மக்கள் ஏற்கனவே வறுமைக்
கோட்டிற்குக் கீழ் உள்ள நிலையில், மக்களால் நன்கு உணரப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்கள் பிரான்ஸ்
முழுவதும் தங்கள் வாங்கும் சக்தி குறைந்துள்ளதற்கு எதிராகவும் மிகப் பெரிய அளவில் வங்கிகளுக்கு நிதி
கொடுக்கப்படுவதை எதிர்த்தும் 80 பேரூர்களில் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆண்டு ஓய்வூதியங்கள்
இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் போயிருந்தன, அதேவேளை பணவீக்கமோ ஆகஸ்ட் மாத இறுதியில் 3.2
சதவிகிதம் ஆகியிருந்தது.
தனியார் துறை சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் காப்பீடுகளில் பற்றாக்குறை
2008ல் முறையே 9 பில்லியன் மற்றும் 4.1 பில்லியன் யூரோக்கள் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த
புள்ளிவிவரங்களை அரசாங்கம் வங்கிகளுக்கு கொடுத்துள்ள 360 பில்லியன் யூரோவை தொடர்ந்து, மிக அதிகம்
என்றும் சுகாதார சமூகப் பணிகளில் குறைப்பு வேண்டும் என்பதை நியாயப்படுத்த பயன்படுத்தியுள்ளது.
முக்கிய வணிக சங்கமான
MEDEF (Movement of the Enterprises of France)
இன் தலைவர் Laurence Parisot
இத்திட்டத்தை "தற்போதைய நிலையில் மிகச் சிறந்த இயல்பு உடையது" என்று பாராட்டியுள்ளார். இதன் பின்,
அரசாங்கம் அதன் சிக்கன நடவடிக்கையை தொடரும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், வலியுறுத்தினார், பிரதம
மந்திரியை "2009 வரவு செலவுத்திட்ட வரைவில் இருந்து போக்குவரத்து துறை போனஸை வாபஸ்பெற வேண்டும்"
என கேட்டுக்கொள்ள இருப்பதாகவும் இவர் கூறினார்; இது வேலைசெய்வதற்காக உயர்ந்து வரும் பயணச்செலவை
தணிப்பதாகக் கூறப்படுகிறது.
சோசலிஸ்ட் கட்சியின் நிதிக் குழு, பிணை எடுப்புத் திட்டம் பாராளுமன்றத்தில்
விவாதிப்பதற்கு முன் கூடியது, ஒருமனதாக அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று
பரிந்துரைத்தது. ஆனால் நாளின் பிற்பகுதியில் முழு சோசலிஸ்ட் கட்சி பாராளுமன்றக் குழு கூடியபோது அது
வாக்களிப்பதில்லை என்று முடிவிற்கு வந்தது; இதன் முதல் செயலாளரான பிரான்சுவா ஒல்லாந் பின்வருமாறு
விளக்கினார்: "ஐரோப்பிய அளவில் நிதிய நெருக்கடியின் முதல் புயல்களில் இருந்து வெளியே வர உதவும் ஒரு
திட்டத்தை எதிர்ப்பது என்ற பேச்சிற்கே இடமில்லை. ஆனால் நிக்கோலோ சார்க்கோசியின் பொருளாதாரக்
கொள்கைகளுக்கு ஒப்புதல் கொடுப்பது என்ற பேச்சிற்கும் இடமில்லை; ஏனெனில் அவைதான் இன்று நாம் உள்ள
நிலைக்குக் காரணம்."
அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் பற்றி சோசலிஸ்ட் கட்சி அடிப்படையில்
உடன்பாட்டைத்தான் கொண்டுள்ளது. வாக்களிப்பை தவிர்த்ததற்கு ஒருவேளை சார்க்கோசியிடம் இருந்து
சுதந்திரமாக இருப்பது போல் காட்டிக் கொள்ள வேண்டிய தேவையாக இருக்கலாம். சோசலிஸ்ட் கட்சியின்
செய்தித் தொடர்பாளர் ஜூலியன் ட்ரே கூறினார்: "இதற்கு வாக்களித்தல் என்பது தேசிய ஒருமைப்பாட்டு
அரசாங்கத்திற்கு 'ஒரு முன்னோடி' என்ற தோற்றத்தை கொடுத்துவிடக்கூடும்."
பல ஆண்டுகளாக அரசாங்கத்தில் இருந்தாலும், வெளியே இருந்தாலும் சோசலிஸ்ட்
கட்சியின் இளைய பங்காளியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி (PCF),
தற்பொழுது சோசலிஸ்ட் கட்சி உடனும் பசுமை வாதிகளுடனும் 2009ம் ஆண்டு ஐரோப்பிய தேர்தல்களில் உடன்பாடு
கொண்டுள்ளது; இது முதலாளித்துவ எதிர்ப்பு வனப்புரை சிலவற்றைக் கூறியது -- அரசாங்கத்தின் திட்டம்
"அனைத்துக் கொள்ளையர்களுக்கும் ஒரு போனஸ் போல்" உள்ளது என்று சரியாக சுட்டிக் காட்டியது. ஆனால்
இந்த பேச்சளவு எதிர்ப்பு CGT
க்கு PCF
கொடுத்துள்ள ஆதரவின் மூலம் பொய்யாகிப் போகிறது;
CGT தொடர்ந்து ஜனாதிபதி சார்க்கோசியுடன் அவர் மே
மாதத் தேர்தல்களில் வெற்றி பெற்றதில் இருந்து ஒத்துழைத்து வருகிறது; குறிப்பாக ரயில்வே மற்றும் எரிவாயு,
மின்துறை ஆகியவற்றில் இருக்கும் பயன்பாட்டு ஊழியர்களின் சிறப்பு ஓய்வூதியத் திட்டத்தை அழிப்பதற்கு; மற்றும்
வேலை நேரக் கட்டுப்பாட்டிற்கு ஆதரவு கொடுத்து வருகிறது.
அரசாங்க வங்கிகள் கடன் நெருக்கடியினால் கடுமையாகப் பாதிக்கப்படவில்லை
எனப்படும் அரசாங்கத்தின் உறுதிமொழிகள் பெல்ஜியத்திலும் பிரான்சிலும் உள்ளூராட்சிகளின் நிதியைக் கையாளும்
Franco-Belgian
வங்கியான Dexia
வை 6.4 பில்லியன், 3 பில்லியன் யூரோக்கள் என்று இரு அரசாங்கங்களும் கொடுத்து, பிணை எடுத்ததை ஒட்டி
ஏற்கமுடியாமல் உள்ளன. இதன் பங்குகள் அதற்குப் பின் சரிந்துவிட்டன; இப்பொழுதும் அதன் திவால்தன்மை பற்றி
சந்தேகங்கள் உள்ளன.
சிறு சேமிப்பாளர்கள் வீடுகள் கடனுக்கான வங்கிகளில் மிகப் பழமையானவற்றில்
ஒன்றும், 190 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டதும்,
Squirrel
(அணில்) என்று அழைக்கப்படுவதுமான, CNCE (la
Caisse nationale des caisses d'épargne)
எளிதில் பணமாக்குவது தொடர்பான பிரச்சினையை கொண்டுள்ளது என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன.
கேலியாக எழுதும் La Canard Enchaine
என்னும் வாராந்திர ஏடு அதன் அக்டோபர் 1ம் தேதி பதிப்பில்
Natixis உடைய
உணை நிறுவனம் ஒன்று அமெரிக்க குறைந்த பிணை மதிப்பு சந்தையில் தொடர்பு கொண்டதை அடுத்து,
"CNCE 6.5
பில்லியன் பணத்தைப் பெற வேண்டும்.... இவ்வளவு பெரிய பள்ளத்தை இட்டு நிரப்புதல் என்பது பிரான்சில் பெரும்
வங்கிக்கு ஒரு சவால் ஆகும்; ஏனெனில் அதன் இருப்புக்களின் மதிப்பு
Crédit Agricole
ஐ விடவும் முன்னதாகக் குறைந்துவிட்டது (கிட்டத்தட்ட 6 பில்லியன் அளவிற்கு).
இவ் ஆண்டு தொடக்கத்தில் குறைந்தபட்ச மூலதனத் தேவைக்காக
CNCE "அதன் 17
பிராந்திய சேமிப்பு வங்கிகளில் இருந்து 3.3 பில்லியனை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று... அவற்றுள் சில
அதிக இருப்புக்களை பெற்றிருக்கவில்லை."
ஒரு நிதியம் அளிப்பவரை மேற்கோளிட்டு
Canard
கூறுகிறது: "அரசாங்கம் மற்றும் வங்கியாளர்களிடையே
Squirrel நிலைமை பற்றி ஏதும் கூறக்கூடாது என்ற ஒருமித்த
கருத்து உள்ளது; அப்பொழுதுதான் பீதி பரவுதலை தடுக்க முடியும்."
மற்றும் ஒரு 600 மில்லியன் யூரோக்கள் இழப்பு ஊக செற்பாடுகளால் விளைந்தது
என்பது இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Livret
A சேமிப்புத் திட்டத்தின் நிதிகளை பயன்படுத்திக் கொள்ள
வேண்டும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது; மில்லியன் கணக்கான குறைந்த
மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்கள், அதை நம்பியிருப்பவற்றிடையே இது பாதுகாப்பற்ற உணர்விற்கு
வகை செய்துள்ளது.
மூன்று முக்கிய பிரெஞ்சு வங்கிகளான
Crédit Agricole, Société Générale
மற்றும் BNP
Paribas ஆகியவை அரசாங்க நிதிகளை எடுத்துக் கொள்ளும்
தேவை இல்லை என்று கூறியுள்ளன. ஆனால் பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்கள் பற்றிய கீழ்க்கண்ட பதிவு
வேறுவித சித்திரத்தைத்தான் காட்டுகிறது.
பிரெஞ்சு வங்கி முறையில் நச்சுக் கடன்கள் எவ்வளவு என்பதை வெளியிடுமாறு ஒரு
UMP
அணி பிரதிநிதி, Lionel Tardy
ஆல் வற்புறுத்தப்பட்டதற்கு Crédit Agricole,
இன் தலைவரான Georges Pauget
விடையிறுத்தார்; "பிரெஞ்சு வங்கி முறையில் கவலைகளைப் பொறுத்தவரையில் நான் இன்றுவரைக்குமான
நிலவரத்தைக் கொடுக்க முடியவில்லை...வங்கிக் குழுவிடம்தான் விரிவான புள்ளி விவரங்கள் உள்ளன...என் தலையில்
இல்லை; ஆனால் தகவல் கிடைக்கும்; ஆதாரபூர்வ, உறுதிபடுத்தப்பட்ட தகவல் கிடைக்கும்."
இதைத் தொடர்ந்து டார்டி கூறினார்: "எனவே பிரான்சில்கூட இது
அறியப்படவில்லை." Pauget
பதில் கொடுத்தார்; "இல்லை, இது தெரியும்; ஆனால்
Temple உடைய பாதுகாவலர்களிடம் புள்ளிவிவரங்கள் உள்ளன."
RTL வானொலியிடம்
Fillon
கூறியதாக Nouvel Observateur
மேற்கோளிடுகிறது; "நிதிய நெருக்கடியை நாம் கடந்துவிடவில்லை." ஒரு முறையின் நெருக்கடியில் இருந்து நாம்
ஒன்றும் விதிவிலக்கல்ல; சில வங்கிகள் மிக அதிகமான நச்சு தன்மைகளைக் கொண்டிருக்கக்கூடும்; பிரெஞ்சு
வங்கிகளும் கூடத்தான்.... இந்த முறையில் இந்த தொடர்பு மிக அதிகம் உண்டு."
அவர் தொடர்ந்து கூறியது: "இப்பொழுது நாம் 2009 ம் ஆண்டிற்காக வளர்ச்சி
கணிப்புக்களை பெற்றுக் கொண்டிருக்கிறோம்; இது 0.2 சதவிகிதிம் இருக்கலாம் எனப்படுகிறது; அது மிகவும் வலுவற்றது.
வளர்ச்சியில் அது ஒரு நிலைமுறிவு ஆகும்; அதன் விளைவுகள் வேலைகள், பொருளாதாரச் செயல்கள் வாங்கும் திறன்
ஆகியவற்றில் கடுமையாக இருக்கும். அமெரிக்கா மந்த நிலைக்குச் சென்றால், அது நமக்கு மிக, மிக, மிக மோசமான
செய்தியாகும்; ஏனெனில் அனைத்து வளர்ச்சியுற்ற நாடுகளும் 2009ம் ஆண்டை மிக மிகக் கடினமாக அனுபவிக்கும்."
இதற்காகத்தான் Fillon
தயாரிப்பு நடத்துகிறார். "நமக்கு முக்கியமானது செலவினங்கள்மீது உறுதியான பிடிப்பு வேண்டும்... செலவுகளைப்
பொறுத்த வரையில் சமரசத்திற்கு இடமில்லை என்று அவர் வலியுறுத்தினார்.
இதன் பொருள் தொழிலாள வர்க்கம் நெருக்கடியின் சுமையைத் தன் தோள்களில்
சுமக்க வேண்டும் என்பதாகும்; அரசாங்கம் இதற்கான தயாரிப்பை நடத்திவருகிறது; அதற்கு மற்ற முக்கிய கட்சிகளின்
ஆதரவை நாடுகிறது. சார்க்கோசியின் நெருக்கமான ஆலோசகர்
Henri Guaino,
"இது ஒவ்வொரு முடிவு பற்றியும் ...விவாதிப்பதற்கான நேரம் இல்லை. நிர்வாகம் அதன் கடமைகளை செய்வதற்கு
பொறுப்பு கொண்டுள்ளது" என்று வலியுறுத்தினார்.
அக்டோபர் 15ம் தேதி
Les Echos தலையங்கம் நெருக்கடியின் சமூக
விளைவுகள் மீது குவிப்புக் காட்டியது. அது எச்சரித்தது: "பிரெஞ்சு மக்களுடைய தன்னம்பிக்கை மீது இதன் விளைவு,
அதையொட்டி அவர்களுடைய நுகர்வு தவிர்க்க முடியாததாக இருக்கும்... 150 மனித வள இயக்குநர்கள் நடத்திய
ஆய்வின்படி, "பூசல்களின் எழுச்சியை அக்கறையுடன் எடுத்துக் கொள்ளுவது நலம்", நிதிய நெருக்கடி "சமூக
சூழ்நிலையை கொந்தளிப்புடையதாகச் செய்யும் என்பது மறப்பதற்கு இல்லை."
முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து வேலையின்மை நல ஆரம்ப
அதிகரிப்புக்கள் வேலை இழந்தவர்கள் மீதான அடியை மிருதுவாக்கும் தன்மை கொண்டதாக ஆக்கவேண்டும்;
தொழிலாளர்களை குறைவூதிய மற்றும் பகுதி நேர வேலையில் சேருமாறு கட்டாயப்படுத்துவதற்கு வேண்டி அதன் பின்
அது முற்போக்கான வகையில் சிறிது சிறிதாக குறைக்கப்பட்ட வேண்டும் என்றும் அது கருத்துரைக்கிறது.
|