WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
The German bailout of the banks and the role of the Left
Party
ஜேர்மன் வங்கிகளின் பிணையெடுப்பும் இடது கட்சியின் பங்களிப்பும்
By Ulrich Rippert
15 October 2008
Use this
version to print | Send
this link by email | Email
the author
திங்களன்று 'ஜேர்மனி வங்கிகளுக்கான பிணையெடுப்பு பொதி' என்பதாக 480 பில்லியன்
யூரோவுக்கான வேலைத்திட்டம் ஒன்றை ஜேர்மன் அரசாங்கம் இறுதி செய்துள்ளது. சர்வதேச நிதி நெருக்கடி சூழலிலும்
நாட்டின் வங்கி அமைப்பு, அடிப்படையில் உறுதி கொண்டதாக இருப்பதாக கூறி வந்த கூட்டணி அரசாங்கத்தின் (சமூக
ஜனநாயக கட்சி [SPD]
- கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் [CDU]
- கிறிஸ்தவ சமூக ஒன்றியம் [CSU])
நிலைப்பாட்டில் முற்றிலும் ஒரு எதிர்திசையிலான திருப்பத்தை இந்த பிணையெடுப்பு பொதி குறிக்கிறது.
ஜேர்மனியின் பங்குச் சந்தையின் தடாலடி வீழ்ச்சிக்கான - கடந்த வெள்ளியன்று வர்த்தக
தினத்தன்று DAX
குறியீடு சுமார் 12 சதவீதம் வீழ்ச்சியுற்று பின் இறுதியில் ஏழு சதவீத சரிவுடன் முடிவுற்றதில் இது மிகவும் கூர்மையான
வெளிப்பாட்டை கண்டது - அரசாங்கத்தின் எதிர்வினையே இது.
பிணைத்தொகுப்பு என கூறப்படும் இதன் பல்வேறு உட்கூறுகளும் வங்கிகளின் நலன்கள்
மற்றும் கோரிக்கைகளை நோக்கியதாகவும் நிதி பிரபுத்துவத்தை தங்களுக்கு பின்னால் கொண்டதாகவும் இருக்கின்றன.
வங்கிகளுக்கு இடையிலான கடன் பாய்வினை வலிமைப்படுத்தும் நோக்கத்திலான அரசாங்க
உறுதிமொழிகளை அளிப்பதுடன், இந்த தொகுப்பானது நேரடியாக, செயலிழக்கும் வங்கிகளுக்குள் நிதியை
செலுத்தவும் அனுமதிக்கிறது. வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு தகவலின் படி, 'நிதிச் சந்தை ஸ்திரமாக்கல் நிதி'
என்கிற பெயருடன் பெடரல் பட்ஜெட்டின் ஒரு அங்கமாக ஒரு சிறப்பு நிதி 400 பில்லியன் யூரோ நிதியுடன் அமைக்கப்பட
இருக்கிறது. இது தவிர, மொத்தம் 80 பில்லியன் யூரோ அளவுக்கு கடனளிக்கும் அதிகாரத்தை நிதி அமைச்சர்
கொண்டிருக்கும் வகையும் செய்யப்பட இருக்கிறது. பிந்தையதாக கூறப்பட்ட நிதி, வங்கிகளுக்கு மூலதனத்தை
செலுத்துவதற்கும், நிதி அபாயமுறுத்தும் கையக நடவடிக்கைகளுக்கும் செலவு செய்யப்பட இருக்கிறது.
480 பில்லியன் யூரோ (651 பில்லியன் அமெரிக்க டாலர்) என்கிற அளவில்,
ஜேர்மன் பிணையெடுப்பு திட்டமானது அமெரிக்காவின் பிணையெடுப்பு தொகுப்பான 700 பில்லியன் டாலர்
திட்டத்துடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கிறது, ஒப்பீட்டில் ஜேர்மனியின் மக்கள் தொகை அமெரிக்க மக்கள்
தொகையில் நான்கில் ஒரு பங்கு தான் என்ற நிலையிலும்.
ஜேர்மன் கருவூலத்தின் இந்த ஆண்டுக்கான செலவின பட்ஜெட் தொகை மொத்தம்
283 பில்லியன் யூரோக்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வங்கிகள் மொத்த பட்ஜெட்டை விடவும்
ஒன்றரை மடங்கு அதிகமான தொகையை பெற்றிருக்கின்றன. பட்ஜெட்டில் சுமார் 124 பில்லியன் யூரோக்கள்
தொழிலாளர் மற்றும் சமூக நல அமைச்சகத்துக்கு செல்ல இருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்,
ஜேர்மனியின் ஓய்வூதியதாரர்கள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் மற்றும் மிகவும் பின்தங்கிய அடுக்கினர் இவர்கள்
அனைவருக்காகவும் ஒரு வருட காலத்தில் செலவு செய்யப்படும் தொகையினை விட நான்கு மடங்கு அதிகமான
தொகை வங்கிகளின் மறுசீரமைப்புக்கும் நிதி ஊக வணிகர்களின் நலன்களுக்கும் கிடைக்கத்தக்கதாகும் படி செய்ய
அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.
சுமார் 82 மில்லியன் பேருக்கு அதிகமாக மக்கள்தொகை கொண்டதான
அடிப்படையில் பார்த்தால், அரசாங்கம் ஜேர்மனியின் ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தையின் தலையிலும்
5,730 யூரோ கடன் சுமையினை சுமத்தியிருக்கிறது. இதுநாள் வரையிலும் அரசாங்கம் இத்தகையதொரு முடிவினை
மேற்கொள்வதில் இருந்து பின்வாங்கி வந்திருக்கிறது. வரைமுறையற்ற தொகைகளை கருவூலத்தில் இருந்து வங்கிகளுக்கு
அப்பட்டமாக இடமாற்றும் இத்தகைய நடவடிக்கைகளின் அரசியல் பின்விளைவுகள் குறித்து இது அப்போது அஞ்சி
வந்தது. இதனால் தான், சென்ற வாரத்தின் ஆரம்பத்திலும் கூட, ஜனாதிபதியும் நிதி அமைச்சரும் வங்கிகளுக்கு
நிதியாதரவு அளிப்பதான வாக்குறுதி எதனையும் அளிக்க தயங்கி வந்தனர்.
இருப்பினும், வங்கிகள் திருப்தியடையவில்லை. சந்தைகளை தாராளமயமாக்குவதற்கும்,
நிதி சந்தையை எந்தவிதமான தீவிர கட்டுப்பாடு அல்லது தடையிலிருந்தும் சுதந்திரப்படுத்த அரசாங்கத்திலிருந்தான
நடவடிக்கைக்கும் வேண்டி கடந்த வருடங்களில் அவர்கள் காட்டிய அதிகார தொனி மற்றும் தீவிரத்தை மற்றொரு
முறை வெளிப்படுத்தும் இவர்கள், இப்போது தங்களது சொத்து குவிக்கும் வெறியாட்டத்தை தொடர்ந்து
மேற்கொள்வதற்கு வரிசெலுத்துவோரின் பணத்தில் பெரும் தொகைகளுக்கு அணுகல் கோரி வலியுறுத்தல்
செய்கின்றனர்.
இன்றும் கூட அரசாங்கம் இந்த பிணையெடுப்பு தொகுப்பின் உண்மையான குணவியல்பை
முகமூடியிட்டு மறைக்க முயற்சி செய்கின்றன. இவ்வாறாக, 480 பில்லியன் யூரோ 'நிதி சந்தை ஸ்திரமாக்கல்
நிதி' உருவாக்கத்திற்கான சட்டம் "கடுமையான நிபந்தனைகள்" மற்றும் "தேசியவாத கட்டுப்பாடுகள்"
ஆகியவற்றுக்கான குறிப்பும் உட்சேர்க்கப்பட்டதாக உள்ளது. இருந்தாலும் யார் இந்த "பிணையெடுக்கும்
தொகுப்பினை" வரைவு செய்தது இறுதி செய்தது என்று பார்த்தால் இத்தகைய "நிபந்தனைகளின்" உண்மையான
குணம் தெளிவாக தெரியும்.
ஜேர்மனியின் மிகப்பெரிய வங்கியான --Deutsche
Bank இன் தலைவரான ஜோசப் அக்கெர்மானின் முன்முயற்சியால்
தான் "ஜேர்மனிய வங்கிகளின் பிணையெடுப்புக்கான உத்யோகபூர்வமற்ற குழு" ஒன்று அமைக்கப்பட்டதாக
Süddeutsche Zeitung
தெரிவிக்கிறது. "நான்கு மனிதர்கள் முன்களத்தில் நிற்கிறார்கள்.... நிதி அமைச்சர்
Peer Steinbrück,
பெடரல் வங்கி தலைவர் Axel Weber,
BaFin
[ஜேர்மன் பெடரல் நிதி மேற்பார்வை ஆணையம்] தலைவர் ஜோசன் சானியோ மற்றும் ஜோசப் அக்கெர்மான்."
(SZ)
ஜேர்மன் பிணையெடுப்பு திட்டத்தின் விவரங்கள்
Steinbrück
இன் துணை செயலாளர் Jörg Asmussen
மற்றும் மேர்கெலின் பொருளாதார ஆலோசகர் Jens
Weidmann ஆகியோரால் உருவாக்கப்பட்டதாக அந்த
செய்தித்தாள் மேலும் தெரிவிக்கிறது. இருவருமே ஒப்பீட்டளவில் இளைஞர்கள் - ஆஸ்முசெனுக்கு 42 மற்றும்
வைய்ட்மானுக்கு 39. இருவருமே பொன்னில் படித்த காலத்தில் இருந்தே ஒருவருக்கொருவர் பரிச்சயமானவர்கள்.
அந்த நேரத்தில் அவர்களது பேராசிரியராக இருந்தவர் ஆக்சல் வேபர், பெடரல் வங்கியின் தற்போதைய
தலைவர். இவர் தேர்ந்தெடுத்த "உத்தியோகபூர்வமற்ற குழுவின்" ஒரு உறுப்பினரும் கூட.
ஹேன்ஸ் ஐசல் (சமூக ஜனநாயக கட்சி -
SPD) முந்தைய
SPD-Green
கூட்டணி அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்த சமயத்தில் அவரது அலுவகத்தில் தலைமை அதிகாரியாக
இருந்தார் ஆஸ்முசன். ஜேர்மனியை ஹெட்ஜ் நிதிகளின் ஊடுருவலுக்கு திறந்து விட்டதான சட்டங்கள் மட்டுமல்லாது
ஜேர்மன் சமூக நலத் திட்ட அமைப்பு செலவினத்தை பெருமளவில் குறைக்கும் ஹார்ட்ஸ்
IV சட்டங்களையும்
தயாரிப்பதில் ஆஸ்முசன் முக்கிய பங்களிப்பு செய்தார்.
"வங்கி பிணையெடுப்பு குழு"வில் ஒரு "முக்கிய பங்கு" ஜேர்மனியின் முன்னணி வங்கி
பிரிவினரான அக்கெர்மானால் ஆற்றப்பட்டது. "தனித்தனி சம்பவங்களுக்கேற்ற தீர்வுகளை அரசாங்கம் வலியுறுத்தியது
என்பதோடு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியதை போன்றதொரு தொகுப்பினை நிராகரித்தும் விட்டது" (SZ).
அரைமனதோடு செய்யப்படுவதாக அரசாங்கத்தின் நடத்தையை விமர்சித்த அக்கெர்மான் பின் ஜனாதிபதி மற்றும்
நிதி அமைச்சருடன் தனிநபர் விவாதங்கள் மூலம் நடப்பு பிணையெடுப்பு திட்டத்தை இறுதி செய்தார்.
வங்கிகளிடம் இருந்து "கடுமையான நிபந்தனைகளை" அரசாங்கம் வலியுறுத்தவில்லை,
மாறாக தலைகீழாக நடந்தது. வங்கிகள் அரசாங்கத்துக்கு தங்கள் நிபந்தனைகளை உத்தரவிடுவதாக அமைந்தது.
வங்கித்துறை மற்றும் அரசாங்க வட்டாரங்களில் நிலவும் குதூகலம் மற்றும்
"பிணையெடுப்பு திட்ட" வெளியீட்டினை பங்கு சந்தைகள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றது இவையெல்லாம்,
அரசாங்கம் வங்கிகளுக்கு வக்காலத்து வாங்கியதானது இந்த நெருக்கடிக்கு முற்றிலும் புதியதொரு பரிமாணத்தை
கொடுத்திருக்கிறது என்பதான உண்மையை மூடி மறைக்க முடியாது. வங்கிகளை மீட்டெடுப்பதெற்கு
ஒதுக்கப்பட்டிருக்கும் பில்லியன்கணக்கான தொகை தவிர்க்கவியலாமல் மந்தநிலையையும் பணவீக்கத்தையும்
துரிதப்படுத்தும்.
இடது கட்சியிடம் இருந்தான ஆதரவு
அரசாங்கம் வெளிப்படையாக வங்கிகளின் ஒரு சேவகனாக செயல்பட
துணிந்ததென்றால், ஒரு பெரும் அரசியல் கட்சி கூட அதன் கொள்கைகளை எதிர்க்க துணியவில்லை என்பதே
காரணம்.
இந்த கொள்கைகளையும், தவிர்க்கவியலாது அவற்றை தொடரும் சமூக
தாக்குதல்களையும் செயலுறுத்துவதில் ஒரு முக்கிய பங்கு இடது கட்சியால் ஆற்றப்படுகிறது. இந்த ஒப்பந்தம்
தயாரிப்பில் பல்வேறு நிலைகளிலும் இக்கட்சி சம்பந்தப்பட்டிருந்தது என்பதோடு பிணையெடுப்பு தொகுப்பின்
விவரங்கள் வெளியாகும் முன்பே தனது ஆதரவிற்கான பச்சைக்கொடியை காட்டி விட்டது.
Anne Will நடத்தும்
பிரபலமான கருத்துரையாடல் நிகழ்ச்சியில் சென்ற ஞாயிறன்று ஒரு முக்கிய விருந்தாளியாக பங்கேற்றது இடது
கட்சியின் தலைவர் ஆஸ்கர் லஃபோன்டேன். கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி-கிறிஸ்தவ சமூக ஒன்றிய நாடாளுமன்ற
பிரிவின் தலைவரான Volker Kauder
ரும் கலந்து கொண்டார். அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டிருக்கும்
நடவடிக்கைகளை அறிவிக்கும் முன்னதாக, லாஃபொன்ரைனை "எனது சகா" என விளித்துக் கொண்டார் இவர்.
பதிலளிக்க கோரியபோது, அரசாங்கத்தால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை "தவிர்க்கவியலாதது, சரியானது"
என்று லஃபோன்டேன் தெரிவித்தார். வங்கிகளுக்கு இடையே மூலதன பாய்வை அரசாங்கம் உறுதி செய்தாக
வேண்டும், இந்த வகையில் அரசாங்க உறுதிமொழிகளையும் சிக்கலில் இருக்கும் வங்கிகளில் நேரடியாக நிதி
செலுத்தங்களையும் வழங்குவது அவசியமானது என்றார் அவர்.
அரசாங்கம் குறித்த லாஃபொன்ரைனின் ஒரே விமரிசனம் அது முன்கூட்டி
செயல்படாமல் விட்டது குறித்ததாக இருந்தது. இந்த பிணையெடுப்பு திட்டம் தவிர்த்து ஹார்ட்ஸ்
IV பெறுநர்கள்
மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஏதேனும் செய்யக் கூடிய வகையில் ஒரு பொருளாதார திட்டத்தையும் அவர்
கோரினார்.
இடது கட்சி, நடப்பு வங்கி அமைப்பை ஆதரிக்கிறது என்பதையும் வரிசெலுத்துவோரின்
பில்லியன்கணக்கான தொகையினை இலாப அமைப்பினை மீட்டெடுக்க செலுத்துவதற்கான முயற்சியை ஆதரிப்பதற்கு
தயாராக இருக்கிறது என்பதையும் லாஃபொன்ரைன் எந்தவித குழப்பத்திற்கும் இடமின்றி தெளிவுபடுத்தினார். அவரது
பிரகடனம், கடந்த காலத்தில் அவர் பேசிய அதிகரிக்கும் சமூக பிளவுகள் குறித்த கண்டனங்களுடனான பேச்சுகளை
கேலிப்பொருளாக்கியிருக்கிறது. அரசியல் கோட்பாடுகளை கட்டளையிடும் வங்கிகளின் அதிகாரத்தை உடைக்காமல்
மக்கள்தொகையில் பெரும்பான்மையினரின் வாழ்க்கை சூழலில் எந்த தீவிர மேம்பாட்டையும் சாதிப்பது
சாத்தியமில்லாதது.
பத்து வருடங்களுக்கு முன்னதாகவும் லாஃபொன்ரைன் வங்கிகள் மற்றும் நிதி
கூட்டமைப்புகள் அளித்த அழுத்தத்தின் கீழ் பின்வாங்கினார். நிதி மற்றும் வர்த்தக மேல் தட்டினருடன் மோதி
பொதுமக்களின் நலன்களை பாதுகாக்க தயங்கி, தனது பெடரல் நிதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்
அவர். அதற்கு பதில், தனது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் பின்வாங்கி விட்ட அவர்,
SPD மற்றும்
அரசாங்கத்தை தனது முன்னாள் கட்சி நண்பரான ஹெகார்ட் சுரோடரின் கைகளில் ஒப்படைத்தார்.
சுரோடர் அரசாங்கம் மற்றும் அதற்கு பின் தற்போது இருக்கும் அங்கேலா மேர்க்கெலின்
மாபெரும் கூட்டணி (SPD-CDU-CSU)
அரசாங்கம் இவற்றின் சமூக விரோத கொள்கைகளுக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு அதிகரித்த போது,
லாஃபோன்ரைன் அரசியலுக்கு திரும்பி இடது கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சர்வதேச ஊக வர்த்தக குமிழி உடைந்து, முந்தைய அனைத்து நிதிரீதியான கொந்தளிப்புகளையும்
சிறியதாக்கியிருக்கும் ஒரு நிதி நெருக்கடி எழுந்ததை அடுத்து, ஸ்திரப்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்தலில் ஒரு காரணியாக
இடது கட்சியின் சேவைகளை வழங்க லாஃபொன்ரைன் முன்வந்திருக்கிறார்.
கட்சி விவகார மேலாளர் டயட்மர் பார்ட்ஸ்சும் பிணையெடுப்பு தொகுப்பை வார்த்தைகளால்
புகழ்ந்து தள்ளினார். "ஜேர்மனியின் அனைத்து வங்கிகளையும் அமைப்புரீதியாக கட்டுப்படுத்துவதற்கான தேவையை
அங்கீகரிப்பதான ஒரு முடிவு இறுதியில் எடுக்கப்பட்டிருக்கிறது". ஆரம்பிக்கும் போது "அரசாங்கம் நெருக்கடி சமயத்தில்
கொஞ்சம் தூங்கி வழிந்து கொண்டிருந்ததாக" கூறி ஆரம்பித்தார்.
இந்த வாரத்தில் எந்த முறையான விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு
துரிதப்படுத்தப்படும் இந்த பிணையெடுப்பு திட்டத்திற்கு முட்டுக் கொடுக்கும் சட்டத்தை ஆதரிக்க இடது கட்சி ஏற்கனவே
ஒப்புக் கொண்டு விட்டது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
வங்கி இயக்குநர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஒரு சிறிய குழு தங்களுக்குள் கூடி,
வங்கிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் ஒரு பல பில்லியன் யூரோ திட்டத்தை தயாரித்து வரும் நிலையில்,
இந்த அவசர நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தில் எந்தவித அரசியல் விவாதமும் இன்றி ஏற்றுக் கொள்வதற்கும்
தான் தயாராக இருப்பதை இடது கட்சி வெளிப்படுத்தியிருக்கிறது. அவ்வாறு செய்கையில், பின்தொடரும் நடவடிக்கைகளான
வெகுஜனங்களுக்கு விரோதமான சமூக வெட்டுகளின் புதியதொரு முரட்டுத்தனமான சுற்று போன்றவற்றையும் செயல்படுத்துவதற்கு
தான் தயாராக இருப்பதை இடது கட்சி தெளிவுபடுத்துவதாய் அது இருக்கிறது. |