WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : உலக
பொருளாதாரம்
ஜிலீமீ stஷீநீளீ னீணீக்ஷீளீமீts யீணீறீsமீ க்ஷீணீறீறீவீமீsஷ்லீணீt லீவீstஷீக்ஷீஹ் tமீறீறீs us
பங்குச் சந்தைகளின் மோசடியான எழுச்சி - வரலாறு நமக்கு சொல்வது என்ன?
By Tom Eley
15 October 2008
Use this version to print | Send
this link by email | Email
the author
நேற்று உலகளாவிய அளவில் பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலையில் ஏற்பட்ட எழுச்சியானது,
டிரில்லியன்கணக்கான டாலர்கள் சொத்துகளை மறையச் செய்திருந்த முந்தைய வாரத்தின் வீழ்ச்சிகளில் ஒரு பகுதி
மீட்சியாக காட்சியளித்தது. உலகின் மிகப்பெரிய வங்கிகளுக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள அரசாங்கங்கள்
நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் தொகைகளை அளிப்பதாக உறுதி கூறி இருப்பதற்கு, நிதித்துறை மேல்தட்டினரின்
முதல் எதிர்வினையாக இந்த எழுச்சி இருந்தது.
30 முன்னணி பொது வர்த்தக பெருநிறுவனங்களின் சந்தை மதிப்புகளைக் கொண்டு கணக்கிடப்படும்
Dow Jones
தொழிற்துறை சராசரி ஒரே நாளில் 11 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்தது. இது சதவீத அடிப்படையில் வரலாற்றின்
ஐந்தாவது மிகப்பெரிய அதிகரிப்பு என்பதோடு புள்ளிகளில் அடிப்படையில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய
அதிகரிப்பாக இருந்தது. இந்த எழுச்சியின் விளைவாக ஐரோப்பாவின் பங்கு சந்தைகளில் ஒரு கூர்மையான எழுச்சி
எழுந்தது, அது அதனை விடவும் பெரிய அதிகரிப்பை ஆசிய சந்தைகளில் ஊட்டுவதற்கு வித்திட்டது.
இத்தகைய ஸ்திரமற்ற சூழல்களில், திங்களன்று நிகழ்ந்த எழுச்சி பங்குச் சந்தைகளில்
ஒரு ஸ்திரமான காலகட்டத்திற்கு கட்டியம் கூறுகிறதா என்பதை துல்லியமாகக் கணிப்பது என்பது சாத்தியமில்லாதது.
இருப்பினும், பங்குச் சந்தை வரலாற்றின் மிகப் பெரிய எழுச்சிகளை நாம் கருத்தில் கொண்டால், திங்களன்று பங்குச்
சந்தைகளில் நிகழ்ந்த திடீர் எழுச்சி ஒரு எச்சரிக்கையாகவும் எடுத்துக் கொள்ளப்பட முடியும்.
திங்களன்றான வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் சுற்றிதழ் வெளியிட்டிருக்கும்
தகவல்கள், வோல் ஸ்ட்ரீட் வரலாற்றில் 10 மிகப்பெரும் எழுச்சி தினங்களில் எட்டு, "பெருமந்த" காலத்திற்கு (Great
Depression) பிந்தைய முதல் நான்கு வருடங்களுக்குள்
நிகழ்ந்தவை என்பதைக் காட்டுகின்றன. மற்றொன்று 1987 ஆம் வருடம் அக்டோபர் 21 ம் தேதி
நிகழ்ந்திருக்கிறது. அக்டோபர் 19, 1987 அன்று 'கறுப்பு திங்கள்' என்று அழைக்கப்படுவதான ஒரு
திங்கள்கிழமையில் ஒற்றை நாளில் பங்குச் சந்தையில் மிகப்பெரும் வீழ்ச்சியாக 22 சதவீதம் வீழ்ச்சியுற்றதற்கு சில
நாட்கள் தள்ளி இது நிகழ்ந்தது.
இந்த அதிகரிப்புகளில் இரண்டு மட்டுமே - 1987 மற்றும் 1933 - "கரடிப்
போக்கின் முடிவினைக் குறிப்பதாக இருந்தது" என்கிறது ஜேர்னல் சுற்றிதழ். 1933 இல் ஆரம்பித்த
Dow Jones
அதிகரிப்பு, கூடுதல் கூர்மையான வீழ்ச்சிகள் எதிர்நோக்க மெதுவாகவே முன்னேறியது. அடிப்படையில், முன்னேறிய
பங்கு விலைகள் இரண்டாம் உலகப் போர் காலம் வரையிலும் தொடர்ந்ததான "பெருமந்த" நிலையை முடிவுக்கு
கொண்டு வரும் எதனையும் செய்யவில்லை. 1955 ஆம் ஆண்டில் தான்,
Dow Jones
தான் செப்டம்பர் 1929 இல் சாதித்திருந்த அளவிற்கே திரும்ப முடிந்தது. அத்துடன் 1987 அக்டோபர் 21
காளை சந்தைக்கான (Bull market)
தொடக்கத்தை குறிப்பதாகவும் ஜேர்னல் தவறாக மேற்கோள்
காட்டியிருந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு கூடுதல் கூர்மையான வீழ்ச்சிகள் இருந்தன என்பதோடு, அந்த
ஆண்டின் இறுதி வரையிலும் 1987 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தான மதிப்பை பங்குச் சந்தை மீட்கவோ
பராமரிக்கவோ முடியாமல் இருந்தது.
1929ம் ஆண்டின் "பெரும் பொறிவு" காலத்திலும் ஏராளமான ஒற்றை தின பெரும்
அதிகரிப்புகள் பங்குச் சந்தையில் இருந்தன, ஆனால் ஒட்டுமொத்த திசை கீழ்நோக்கியதாகவே இருந்தது.
அக்டோபர் 1929 க்கும் ஜூலை 1932 க்கும் இடையில் 9 சதவீதத்துக்கும் அதிகமாக
Dow அதிகரித்தது
ஐந்து முறை நிகழ்ந்தது. இதில் பங்குகளின் விலை சுமார் 15 சதவீத உயர்வினை கண்டதான சந்தையின் இரண்டாவது
மிகப்பெரிய எழுச்சியும் அடக்கம். ஆனால் இந்த "எழுச்சிகள்" சமயத்தில் நினைவுகூரத்தக்கதாக இருப்பதெல்லாம்,
அவையெல்லாம் ஒரு நெடிய கீழ்நோக்கிய வீழ்ச்சியின் இடையிலான தற்காலிக தருணங்கள் என்பதும், பல முதலீட்டாளர்கள்
சூதாடுவதற்கும் இழப்பதற்குமான தருணங்களாக இருந்தவை என்பதும் தான். பங்குச் சந்தை தனது மதிப்பில் 82
சதவீதத்தை இழந்து இனி கீழ் செல்ல வழியில்லை என்கிற நிலையில் மேலெழுவதற்கே ஜூலை 1932 வரை
பிடித்தது.
பங்கு மதிப்புகளில் தற்காலிக எழுச்சிகள் என்பவை எல்லாம் முதலாளித்துவத்தின் ஊகத்துவ
குணவியல்புகளை அழுத்தமாக எடுத்துரைக்கும் நெருக்கடி காலகட்ட அம்சத்தையே காட்டியிருக்கின்றன. பிரடெரிக்
ஏங்கல்ஸ் தனது கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்
(1880) என்பதில் விளக்கியது போல் "பெரும் ஸ்தாபிப்புகளை....
அரசாங்க சொத்தாக" மாற்றுகின்ற நெருக்கடிகள் எவ்வாறு முதலாளிகளுக்கு "ஈட்டுத்தொகைகளை சுருட்டிக் கொள்வது,
பகிர்வுக் கூப்பன்களை கிழித்தெறிவது, பல்வேறு முதலாளிகளும் ஒருவருக்கொருவர் தங்களது முதலீடுகளை வைப்பு செய்து
கொள்வதான பங்குச் சந்தையின் மேல் சூதாடுவது, இவை தவிர்த்து எந்த கூடுதலான சமூக செயல்பாடும்
இல்லாமல் இருக்கிறது" என்பதை விளங்கப்படுத்துவதாக உள்ளது.
பத்தொன்பதாவது நூற்றாண்டு சூழலுக்கு மாறாக, உழைக்கும் வர்க்கம் மற்றும்
மத்தியதர வர்க்கத்தின் ஒரு பெரும் பிரிவினரிடம், அவர்களது சேமிப்பின் மீது பங்குச் சந்தை தான் மிகப் பெரும்
வருவாயை ஈட்டித் தர இயலும் என்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு, அவர்களின் ஓய்வூதிய நிதிகள்
"கொள்ளையடிக்கப்படுவதை" நாம் காண்கிறோம். |