WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
உலக பொருளாதாரம்
Worst week for global markets since 1929
1929 இற்கு பின்னர் உலகச் சந்தைகளுக்குமோசமான வாரம்
By Barry Grey
11 October 2008
Use this version to print
|
Send this link by
email |
Email the
author
வெள்ளியன்று உலக பங்குச் சந்தைகள் பெரிதும் சரிந்து, 1929 இற்கு பின்னர் பங்குமதிப்புக்கள்
மிகப் பெரிய சரிவைக் கண்டது என்ற விதத்தில் வாரத்தை முடித்தன. உலகப் பெருமந்த நிலை தோன்றக்கூடும்
என்ற அச்சத்தின் பின்னணியில் G7
தொழில்துறை முன்னேற்ற நாடுகளின் நிதி மந்திரிகள் கூட்டம் வாஷிங்டனில் அவசரமாக அமெரிக்க நிதி மந்திரி
ஹென்றி போல்சன் மற்றும் மத்திய வங்கி கூட்டமைப்பு தலைவர் பென் பெர்னான்கேயுடன் நடைபெற்றது.
ஆசியாவில் இருந்து ஐரோப்பா வரையிலும் மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலும் ஒரு
நாள் முழுவதும் பீதியுடன் விற்பனை நடந்து, அமெரிக்க பங்குச் சந்தையிலும் பெரும் ஊசலாடும் தன்மை இருக்கையில்,
தங்கள் நாடுகளின் இருப்புக்களை மிகச் சக்திவாய்ந்த வங்கிகளுக்கு கொடுக்க இருப்பதாகவும்
G7 அறிக்கை
ஒன்றை வெளியிட்டன. ஆனால் பொருளாதார பேரழிவுச் சரிவை தடுக்க குறிப்பிட்ட விதத்தில் எந்த ஒருங்கிணைந்த
நடவடிக்கைகளையும் கோடிட்டுக் காட்டவில்லை.
கூட்டத்திற்கு பின்னர் ஒரு அறிக்கையை வெளியிட்ட போல்சன் ஒரு செய்தியாளர்
கூட்டத்தையும் நடத்தி அமெரிக்க அரசாங்கம் வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்புச் சட்டம் $700 பில்லியனுக்காக என
ஜனநாயகக் கட்சி தலைமையிலான காங்கிரசால் இயற்றப்பட்ட கிட்டத்தட்ட வரம்பற்ற அதிகாரத்தை பயன்படுத்தி
நேரடியாக வங்கிகள் மற்றும் நிதிய நிறுவனங்களில் இருந்து பங்குகளை வாங்கும் முயற்சியை ஆரம்பித்து விட்டதாக
அறிவித்தார்; இது நிதிய பிரபுத்துவத்தின் மிகச்சக்தி வாய்ந்த பிரிவுகளுக்கு வரி செலுத்துபவர்களின் பணம் அரசாங்கத்தால்
மாற்றப்படுவதின் விரிவாக்கம் ஆகும்.
ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் முக்கிய பங்குச் சந்தைகள் வெள்ளியன்று இழப்புக்களை
வோல் ஸ்ட்ரீட்டில் Dow Jones Industrial
Average வியாழனன்று காட்டிய 7.3 சதவிகிதக் குறைப்பையும்
விட அதிகமான இழப்பைக் காட்டின. ஜப்பானின் நிக்கேய் குறியீடு 9.6 சதவிகிதம் என்று ஐந்து ஆண்டுகளில் மிகக்
குறைவான சரிவைப் பதிவு செய்தது. கடந்தவார ஆரம்பத்தில் இருந்த இது அதன் மதிப்பில் 24 சதவிகிதத்தை இழந்துள்ளது.
டோயோட்டா பங்குகள் 6.2 சதவிகிதம் குறைந்தன; ஒரு பெரிய ஜப்பானிய காப்பீட்டு நிறுவனம் திவாலானது
என்று பதிந்துகொண்டது.
ஹாங்காங்கின் Hang
Seng குறியீடு 7.2 சதிவிகிதம் சரிந்தது. ஆஸ்திரேலியாவின்
S&P/ASX 200
குறியீடு 8.3 சதவிகிதம் குறைந்தது; சற்றே பரந்த
All Ordinaries 8.2 சதவிகிதம் குறைந்தது.
Shanghai Composite
குறியீடு 3.6 சதவிகிதம் குறைந்தது; கடந்த வாரம் இருந்ததைவிட இது 12.8 குறைவாகும். இந்தோனேசிய பங்குச்
சந்தை வாரத்தில் முன்னதாக பீதி விற்பனையால் மூடப்பட்டிருந்தது, இன்னும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் ஐரோப்பா முழுவதும் படர்ந்த
Dow Jones Stoxx 600
குறியீடு 7.5 சதவிகித்தால் குறைந்தது; இந்த குறியீட்டை பொறுத்தவரையில் ஒற்றை நாள் செயற்பாடுகளில் மிக
மோசமான நாட்களில் ஒன்றாகும்.
லண்டனில் FTSE
வெள்ளியன்று 8.9 சதவிகிதம் சரிந்தது. ஜூன் 2007ல் மிக அதிக உயர்விற்கு பின்னர் அது 43 சதவிகிதம்
குறைந்துள்ளது. வெள்ளி, பிரிட்டனின் குறியீடு ஐந்தாம் தொடர்ந்த நாளாக இழப்பைக் கண்டது; அன்று அது 20
சதவிகித மதிப்பை இழந்தது.
பிரான்சில் CAC
40 குறியீடு 6.8 சதவிகிதம் சரிந்தது; ஜேர்மனியில்
DAX 30 சதவிகிதம் குறைந்தது. இத்தாலி, ரஷ்யா மற்றும்
ஆஸ்திரியாவில் வணிகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஐஸ்லாந்தின் பெரிய வங்கிகளில் கடைசியானதும் சரிந்து
அரசாங்கத்தால் பொறுப்பு எடுக்கப்பட்டுள்ளன; அனைத்து பங்கு வணிகமும் தற்காலிகமாக நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளன.
இலத்தீன் அமெரிக்க முழுவதும் உள்ள சந்தைகள் குறைந்த மட்டத்தை அடைந்தன.
மெக்சிகன் வங்கி 6.4$ பில்லியன் வெளிநாட்டு இருப்புக்களை ஏலத்தில் விற்று பெசோவிற்கு முட்டுக் கட்டை
கொடுத்தது.
MSCI உலகக் குறியீடு (சர்வதேச பங்கு விலைகள்
பற்றிய ஒரு அளவுகோல்) இந்த வாரம் 19 சதவிகிதம் குறைந்தது; சான்றுகள் குறித்துவைத்துக்கொள்ளப்படும்
1970ல் இருந்து இது மோசமான நிலைமை ஆகும்.
இப்பொழுது உலகப் பொருளாதாரத்தை நிதிய நெருக்கிடியில் ஆழ்த்திக்
கொண்டிருக்கும் நிலை ஒரு பெருமந்த நிலையாக மாறுகிறது என்பதற்கான குறிப்பு, வங்கிகளுடைய பங்குகளுடன்,
எண்ணெய், உலோகம் மற்றும் அடிப்படை மூலப்பொருட்கள் நிறுவனங்களின் பங்குகளும் தீவிரமாக சரிந்தன.
"நாம் பார்த்துக் கொண்டிருப்பது உலக அளவில் மிக அதிக விற்பனை; இதற்குக் காரணம்
பெரும் பீதியும் அச்சமும்தான்; அவை உலகின் பெரிய பொருளாதாரங்களின் வருங்காலம் பற்றி முழுமையான
உறுதியற்ற தன்மையுடன் இணைந்துள்ளன." என்று GFR
சேமிப்புக்களின் தலைவரான மார்ட்டின் ஸ்லானே கூறினார்.
அமெரிக்காவில் பெரும்பாலன பங்குகள் வரலாற்றில் ஒரே நாளில் பெரும் கொந்தளிப்பான
ஊசலுக்கு பின்னர் கீழ்மட்டத்தை அடைந்தன. 112 ஆண்டு கால வரலாற்றில் முதல் தடவையாக
Dow Jones Industrial Average
1,000 புள்ளிகளுக்கும் மேலாக ஊசலாடியது.
Dow முதல் 15 நிமிஷங்களில் 696 புள்ளிகள்
சரிந்து 8,000 அளவை விடக் குறைவாயிற்று. பின்னர் அது 320 புள்ளிகள் அதிகமாயிற்று; ஆனால் 128 புள்ளிகள்
அல்லது 1.5 சதவிகித இழப்புடன் 8,451 என்று முடிந்தது.
இது குறியீட்டை பொறுத்தவரையில் நேரடியான எட்டாவது இழப்பு வணிகமாகும்;
இதில் 1,870 புள்ளிகள் அல்லது 18.2 சதவிகிதம் ஒரே வாரத்தில் சரிந்தது. வார இழப்பு ஜூலை 22,
1933 இழப்பை விட கூடுதலாயிற்று; அப்பொழுதுதான் பெருமந்த நிலை மிகஆழமாக இருந்தது; அப்போது 17
சதவிகிதக் குறைவு பதிவுசெய்யப்பட்டதுடன், அந்த நேரத்தில் வாரத்திற்கு ஆறு வணிக நாட்கள் இருந்தன.
கடந்த ஆண்டு மிக அதிக உயர்வை காட்டிய வரை,
Dow 40.3
சதவிகிதம் இழந்து பங்கு மதிப்புக்களில் 8.4 டிரில்லியன்களை அழித்துவிட்டது.
Standard & Poor இன் 500 குறியீடு
10.7 புள்ளிகள் சரிந்தது; 900 அளவை விட குறைவாக 899ல் முடிந்தது. S&P
500 2007ல் இருந்த உச்ச நிலையை விட 42.5 சதவிகிதம் குறைந்துவிட்டது. நஸ்டக் கூட்டு குறியீடு அன்று 4.4
புள்ளிகள் என்று சிறிதே ஆதாயத்துடன் முடிந்தது ஆனால் வாரம் முழுவதையும் கணக்கில் கொண்டால் 15 சதவிகிதம்
குறைந்தது.
வோல் ஸ்ட்ரீட்டிற்கே இது மோசமான வாரம் ஆகும்;
Dow, மற்றும்
S&P 500
ஆகியவை அவற்றின் மிகப் பெரிய வாராந்திர இழப்பை புள்ளி, மற்றும் சதவிகித முறையில் கண்டன.
அதிக நிதியப் பங்குகள் எழுச்சியுற்றன;
G7 மற்றும்
போல்சன் புதிய பிணை எடுப்பு நடவடிக்கைகளை அறிவிப்பர் என்ற எதிர்பார்ப்பில். ஆனால் அடுத்த முக்கிய வங்கித்
தோல்வியாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்ப்படும் மோர்கன் ஸ்ரான்லி 22 சதவிகிதம் சரிவுற்றது, கோல்ட்மன்
சாக்ஸ் 12 சதவிகிதத்தை இழந்தது.
போர்ட் மோட்டார் நிறுவனத்தின் பங்கு மற்றும் ஒரு 4.33 சரிந்தது;
ExxxonMobil
8.29 சதவிகிதம் குறைந்தது.
ரொரன்டோ பங்கு சந்தை 535 புள்ளிகள் சரிவைக் கண்டது.
"இங்கு ஒரு கீழ்நோக்கு சுற்றுசுழல் அச்சம் உள்ளது" என்று
Schaeffer's Investment Research
ன் மூத்த பங்குகள் பகுப்பாய்வாளரான Richard
Spaks கூறினார்.
கடன் சந்தைகள் பற்றிய ஆய்வு ஏற்றம் காண்பற்கான அடையாளம் எதையும்
காட்டவில்லை. வங்கிகள் தங்கள் இருப்பு நிதியை பத்திரப்படுத்தி வைக்கின்றன, மற்ற வங்கிகளுக்கு கடன் கொடுக்க
மறுக்கின்றன; உயர்ந்த வட்டி விகிதத்திற்கு கூட கொடுப்பதில்லை; ஏனெனில் மற்ற வங்கிகளின் திவால்தன்மையில்
அவற்றிற்கு நம்பிக்கை இல்லை.
மூன்று மாத லைபர் விகிதம் என்று வங்கிகளுக்கு இடையேயான அமெரிக்க டாலர்களை
கடன் கொடுத்தலில் முக்கிய கடன் அடையாளம், 4.82 சதவிகிதம் என்று கிட்டத்தட்ட 10 மாதங்களில் மிக அதிக
இடத்தில் உயர்ந்தது. அமெரிக்க அரசாங்கத்திற்கு கடன் கொடுப்பது என்ற வகையில் மிகப் பாதுகாப்பாக
கருதப்பட்ட முதலீட்டு முறை பறந்து சென்றுவிட்டது; இதையொட்டி ஒரு மாத, மூன்றுமாத கால கருவூல
பத்திரங்களிடம் இருந்து கிடைக்கும் வருமானம் கிட்டத்தட்ட பூஜ்யம் என்று ஆயிற்று.
தனியார் முதலீட்டு நிதிகள், முன்பு கூடுதலான அளவில் இலாபத்தைக் கொடுத்தவை
நஷ்டங்களாக மாறி, பங்குகளை பீதியில் விற்பதற்கு உதவும் வகையில் இருக்கின்றன. பல நிறுவனங்களும் மீட்பு
கோரிக்கைகைளை வாடிக்கையாளர்கள் மற்றும் பிற வங்கி கடன்காரர்களிடம் இருந்து எதிர்கொள்ளுகின்றனர்;
அதுவும் உத்தரவாத்திற்கு கூட்டுக் கையெழுத்திட்டவர்கள், பெரிய இலாபம் கிடைக்கும் என வாங்கிவர்கள் தங்கள்
பங்குகளை விற்று பணம் பெற முயல்கின்றனர்.
சந்தைக் கொந்தளிப்பின் இடையே அமெரிக்க முதலாளித்துவ முறையின் சீரழிவின்
உண்மை ஜெனரல் மோட்டார்ஸ் அது திவால் அறிவிப்பு கொடுக்கலாமா என யோசிப்பதாக கொடுத்துள்ள தகவலில்
சுருக்கமாக வந்துள்ளது. பல தசாப்தங்கள் ஆலைகளை மூடல், ஊதியக் குறைப்புக்கள், கார்த்
தொழிலாளர்களுடைய நலன்கள், ஓய்வூதியங்கள் ஆகியவை தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட பின், இவை
அமெரிக்காவின் மிகப் பெரிய கார் தயாரிக்கும் நிறுவனத்தின் இலாபத்தன்மை மற்றும் போட்டி நிலையை
அதிகரிக்கும் என்று கூறி நியாயப்படுத்தப்பட்டபின், ஒருகாலத்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் அடையாளச்
சின்னமாக இருந்த இந்த கார் தயாரிக்கும் நிறுவனம் இப்பொழுது சரிவின் விளிம்பில் தள்ளாடி நிற்கிறது.
ஜெனரல் மோட்டார்ஸ் இன் அறிவிப்பு பொருளாதார நெருக்கடியில் ஒரு புதிய
கட்டம் வந்துள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; இது இரு வாரங்களுக்கு முன்பு இருந்த நிலைமையையும் விட
அப்பால் சென்றுள்ளது; அப்பொழுது புஷ் நிர்வாகம் வங்கிகளை மீட்பற்கான தப்புவித்தல் திட்டம் ஒன்றை அறிவித்து
அது ஒன்றுதான் சந்தை கரைப்பையும் கடுமையான மந்தநிலையையும் தவிர்க்கும் என்று கூறினார். அப்படிப்பட்ட
எல்லாவற்றையும் போக்கும் திறனுடைய மருந்து (பெரு வங்கிகளின் இழப்பை மறைக்க, மற்றும் நிதிய
அதிகாரங்களை அவற்றின் கரங்களில் ஒருங்கிணைக்கும் நடவடிக்கை) நெருக்கடியைக் குறைக்கும் வகையில் ஏதும்
செய்யவில்லை. அது செய்யவும் முடியாது; ஏனெனில் இது அமெரிக்க முதலாளித்துவ முறையின் தொழில் தளத்தில்
புகுந்துவிட்ட அழுகிய தன்மையை போக்குவதற்கு எதையும் செய்யவில்லை.
இப்பொழுது நெருக்கடி விரைவில் பரந்த பொருளாதாரத்தையும் சூழ்ந்துள்ளது; இது
புதிய ஆலைகள் மூடல் மற்றும் பொருளாதார வாழ்வின் ஒவ்வொரு பிரிவிலும் குறைப்புக்கள் என்ற அலையைக்
கொண்டு வரும்.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெள்ளியன்று அது எடுத்த மதிப்பீட்டின்படி
பொருளாதார வல்லுனர்களின் ஒருமித்த உணர்வு அமெரிக்காவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டின் மூன்று,
நான்காம் காலாண்டுகளிலும் 2009 முதல் காலாண்டிலும் குறையும் என்பதாகும். "முதல் தடவையான கணக்கீடு
அக்காலங்கள் பற்றியும் எதிர்மறையாக கணித்துள்ளது." என்று செய்தித்தாள் எழுதியது. "இந்த கணிப்புக்கள் சரியாக
வந்தால், அது முதல்தடவையாக அமெரிக்காவில் உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து மூன்று காலாண்டுகளில் சுருக்கம்
அடையும் என்பதாகும்; இது ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறுகிறது"
ஜனாதிபதி புஷ் மற்றும் ஒரு வெள்ளை மாளிகையில் தோன்றி, நிதியச் சந்தைகளில்
நம்பிக்கையை புதுப்பிக்க ஒரு பயனற்ற முயற்சியை மேற்கொண்டார். தன்னுடை நிர்வாகம் பங்கு ஆபத்துக்களை வாங்க
முடிவெடுத்துவிட்டது என்று அறிவித்த அவர் இது அமெரிக்க வங்கிகளுக்கு கூடுதலான மூலதனத்தை கொடுக்கும்
என்றார்; நெருக்கடி பற்றி அவருடைய முந்தைய கருத்தைக்களை விட புதிதாக ஏதும் கூறவில்லை.
"கூட்டாட்சி அரசாங்கம் ஒரு பரந்த மூலோபாயத்தைக் கொண்டுள்ளது"
நெருக்கடியைத் தீர்க்க என அவர் இவருடைய முந்தைய "மூலோபாயத்தின்" இழிந்த தோல்வி பற்றி விளக்காமல்
அறிவித்தார் --அதாவது 700 பில்லியன் பிணை எடுப்புப் பொதி, நிதிய பீதியை தடுத்து நிறுத்த முடியாமல்
போனதைப் பற்றி விளக்கவில்லை.
நிதிய சந்தைகளில் இருக்கும் சிதைவிற்கு அடையாளமாக, புஷ் கருதப்படுவது மட்டும்
அல்லாமல், அரசாங்கத்தின் உயர்மட்ட சிதைவுகளுக்கு அடையாளமாகவும் கொள்ளப்படுகிறார். அவர் பேசிக்
கொண்டிருக்கையிலேயே Dow
சரியத் தொடங்கியது; அவர் பேச்சை முடிப்பதற்குள் இன்னும் ஒரு 300 புள்ளிகள் குறைந்தன.
புஷ் மற்றும் பிற தலைவர்களை பற்றிய அணுகுமுறையை பற்றி சுருக்கமாகக் கூறுகையில்,
Howard Silverblatt
என்னும் Standard & Poor
ல் இருக்கும் மூத்த குறியீட்டு பகுப்பாய்வாளர் கூறினார்: "மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். அரசியல் வாதிகள்
தலைமை நிர்வாகிகள் கூறுவதை எவரும் நம்புவதில்லை."
இன்னும் செலவுகளை கொடுத்த வங்கிகளை முட்டுக் கொடுக்கும் நடவடிக்கைகளும்
பரிசீலனையில் உள்ளன; இதில் பல நூற்றுக்கணக்கான பில்லியன்கள் அரசாங்கத்தால் வங்கிக் கடன் மற்றும் வங்கிகளுக்கு
இடையேயான கடன்கள் மற்றும் அரசாங்க காப்பீடு அனைத்து வங்கி சேமிப்புக்களுக்கும் ஆகியவை அடங்கியுள்ளன.
இத்திட்டங்கள் அனைத்தும் பெரு மந்த நிலைக்காலத்தில் இருந்து மிக மோசமான
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க எடுக்கப்படுகின்றன: புஷ் நிர்வாகம் அல்லது அமெரிக்காவில் ஜனநாயகக்
கட்சி அல்லது குடியரசுக் கட்சி என்று எது இருந்தாலும், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருக்கும் அரசாங்கங்கள்
அனைத்தும் ஒரே விஷயத்தை பொதுவாகக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் நிதியப் பிரபுத்துவத்தின் நலன்களை
தக்க வைத்துக் காப்பதில் பெரும் கவனத்துடன் செயல்படுகின்றன.
இந்த நடவடிக்கைகளில் எதுவும் தொழிலாள வர்க்கத்தை தாக்கவிருக்கும் சமூக
சுனாமியில் இருந்து பாதுகாப்பு கொடுக்காது.
பல மில்லியன்களை வைத்திருப்பவர்கள், பொருளாதாரத்தின் மீது ஏகபோக உரிமை
செலுத்துவபவர்கள், அமெரிக்க அரசாங்கத்தின்மீது ஆதிக்கத்தை செலுத்துபவர்களை பொறுத்தவரையில், அவர்கள்
இரக்கம் சிறிதுமின்றி தங்கள் செல்வக் கொழிப்பு நாட்டத்தில்தான் எப்பொழுதும் போல் ஈடுபட்டிருப்பர். நியூ
யோர்க் டைம்ஸ் வெள்ளியன்று தகவல் கொடுத்துள்ளதைப் போல், வரிப்பணத்தில் வங்கிகளிடம் இருந்து பங்குகளை
வாங்கும் அரசாங்கத்தின் திட்டத்தில் இருக்கும் குறைபாடு பிணை எடுப்பில் பெயரளவிற்கு உயர்மட்ட நிர்வாகிகள்
சம்பளத்தின் மீது வைக்கப்படும் வரம்புகள் ஆகும். டைம்ஸ் எழுதியது: "மிகப் பெரிய அமெரிக்க
வங்கிகள் இதற்கு ஒப்புக் கொள்ளுமா என்பது தெரியவில்லை; அதிலும் குறிப்பாக நிர்வாகிகள் ஊதியம் பற்றி
இருக்கும் தடைகளை."
வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் இரு வாரங்களாக பெரிய நிதிய நெருக்கடியில்
முடிந்தவை, அரசாங்கங்கள் தங்கள் வங்கி முறையை பொதுப் பணத்தில் முட்டுக் கொடுத்து நிறுத்தும் முயற்சிகளை
கண்டது, இது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை விரைவில் வரவிருக்கும் வேலயின்மை, வறுமை மற்றும் சமூக
இழிநிலை இவற்றை எதிர்கொள்ள வைக்கும். இதற்கு ஒருங்கிணைந்த சர்வதேச சோசலிச மூலோபாயம் அவர்களுடைய
நலன்களை உலகின் நிதிய உயரடுக்கிற்கு எதிராகக் காப்பாற்றுவதற்கான தேவையாக வந்துள்ளது; நிதிய உயரடுக்குத்தான்
இந்த பேரழிவு வந்துள்ளதற்கு பொறுப்பு ஆகும்; ஆனால் இந்த நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின்
மீது சுமத்தப் பார்க்கிறது.
See Also:
உலக பெரு மந்த நிலை வரக்கூடிய அடையாளங்கள் பெருகுகையில் அமெரிக்கப் பங்குகள் சரிகின்றன
ஆசிய சந்தைகள் தொடர்ந்து சரிகின்றன
உலக நிதியச் சந்தைகளை பீதி கவ்வுகிறது
நிதிய நெருக்கடிக்கு பொது மூலோபாய உடன்பாடு காண்பதில் ஐரோப்பிய தலைவர்கள் தோல்வி
|