WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
உலக பொருளாதாரம்
World financial crisis leads to auto industry layoffs across
Europe
உலகப் பொருளாதார நெருக்கடி ஐரோப்பா முழுவதும் கார்த் தொழிலில் கதவடைப்புக்களுக்கு வழிவகுத்துள்ளது
By Dietmar Henning
10 October 2008
Use this version to print
|
Send this link by
email |
Email the
author
உலகெங்கிலும் இருக்கும் அரசாங்கங்கள் வங்கிக் கல்லாப்பெட்டிகளில் அவற்றின்
ஊகவணிக இழப்புக்களை மட்டுப்படுத்துவதற்கு பில்லியன் கணக்கான டாலர்களைக் கொட்டிக்கொண்டிருக்கையில், மில்லியன்
கணக்கான தொழிலாளர்களின் வேலைகளும் வருமானங்களும் அச்சுறுத்தலுக்காளாகி, இடருக்குள்ளாக்கி விடப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் அனைத்து முக்கியமன கார் நிறுவனங்களும் விற்பனையில் கடுமையான சரிவு என்று அறிவித்துள்ளதுடன்
அதையொட்டி உற்பத்திக் குறைவு அல்லது நேரடியான பணி நீக்கத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளன.
கார்த் தொழிலில் உள்ள தற்போதைய நெருக்கடியில் பலவும், இந்த ஆண்டு
ஆரம்பத்தில் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வுடன் பிணைந்துள்ளன. தற்போதைய நிதிய நெருக்கடியின் விளைவுகள்
இப்பொழுதுதான் பாதிக்கத் தொடங்கியுள்ளன என்ற நிலையில் ஐயத்திற்கு இடமின்றி அவற்றின் தாக்கங்கங்கள் வரவிருக்கும்
வாரங்களில் மிகக் கூடுதலாகத்தான் இருக்கும்.
ஆடம்பரக் கார்களுக்கும் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் சாதாரண கார்களுக்குமான
சந்தை இரண்டுமே தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இதுவரை ஜேர்மன் நிறுவனங்களான
Porsche, BMW
ஆகியவை உற்பத்தி செய்த மிக விலையுயர்ந்த விளையாட்டு கார்கள் (Sports
Cars) மற்றும் ஆடம்பர கார்கள்,
ஊக நிதிய செயல்களில் பெரும் இலாபத்தை ஈட்டியவர்களால் பெரிதும் விரும்பப்பட்டவை இப்பொழுது பாதிப்பிற்கு
உட்பட்டுள்ளன; முன்பு ஒரு புதிய வண்டிக்கு பல ஆயிரக்கணக்கான யூரோக்களை செலவழிக்கத் தயாராக இருந்தனர்.
இந்த ஆண்டு பாதிப்பை ஒட்டி இந்த அடுக்கினர் வேலையின்றி இருப்பதால் புதிய கார் வாங்க முடியாமல் உள்ளனர்.
விளையாட்டுக் கார் உற்பத்தி நிறுவனம்
Porsche
பற்றி Süddeutsche
Zeitung கொடுக்கும் தகவல்:
"இதுவரை ரஷ்யா சிறிய விளையாட்டுக் கார் உற்பத்தியாளர்களால் உத்தரவாதமான வாடிக்கையாளர் நாடு என்று
கருதப்பட்டு வந்தது. எங்காவது சந்தை இடறி விழுந்தால், ரஷ்யா எளிதில் அதைச் சரிசெய்துவிடும் என்று
இருந்தது. Porsche
குடும்பம் எப்பொழுதும் அவர்களுடைய ஆண்டு உற்பத்தியான 100,000 நாடெங்கிலும் செல்லக்கூடிய மற்றும்
விளையாட்டுக் கார்களை வாங்குவதற்கு செல்வந்தர்களை கொண்டிருந்தது. இப்பொழுது அது ஒரு கடந்த கால நிகழ்வாகிவிட்டது."
BMW
நிறுவனம், Porsche
போல் உயர்ந்தவிலை கார்களில் சிறப்புக் கவனம் செலுத்துவது, உலகெங்கிலும் செப்டம்பர் மாதம் விற்பனையில்
14 சதவிகிதக் குறைவு என்று அறிவித்துள்ளது.
BMW
யின் அமெரிக்க விற்பனை இதே மாதத்தில் கால் பகுதி குறைந்துவிட்டது.
Porsche
அமெரிக்காவில் 44 சதவிகித சரிவையும் உலக சராசரியாக 27 சதவிகிதத்தையும் பதிவு செய்துள்ளது.
சாதாரண கார்களும் விற்பனை சரிவைக் கண்டுள்ளது. உலகின் மிகப் பெரிய கார்
தயாரிப்பு நிறுவனமான டோயோடோ செப்டம்பர் மாதம் அமெரிக்க விற்பனையில் 32 சதவிகித குறைப்பை
கண்டது. பல வாங்கும் திறனுடைய வாடிக்கையாளர்கள் நெருக்கடியின் விளைவுகள் பற்றி அஞ்சுவதால், ஒரு புதிய
காரில் முதலீடு செய்யத் தயாராக இல்லை. மற்றவர்கள் தங்கள் வங்கியில் இருந்து தேவையான கடனைப் பெற
முடியாமல் உள்ளனர். Ifo
Institute for Economic Research
என்று மூனிச் பல்கலைக் கழகத்தில் உள்ள பொருளாதார ஆய்வகத்தின் கருத்தின்படி, ஜேர்மனிய கார்த் தொழிலில்
உள்ள விற்பனையாளர்களின் எதிர்பார்ப்பு 20 ஆண்டுகள் இல்லாத வகையில் சரிந்துவிட்டது.
ஓப்பெலுக்கான (General
Motors) செய்தித் தொடர்பாளர்
Rüsselsheim
ல் கூறிய கருத்து: "நிதிய நெருக்கடி ஐரோப்பாவில் பலரையும் கார் வாங்குவதை நிறுத்தி வைக்கச் செய்துள்ளது."
இது குறிப்பாக ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் கிரேட் பிரிட்டனுக்கு பொருந்தும்.
ஸ்பெயினில் குறிப்பிடத்தக்க வகையில் நிலச் சொத்துக்கள் நெருக்கடியின் பாதிப்பு
அதிகமாக இருக்கும் நிலையில், கார் விற்பனை ஒரு ஆண்டிற்கு முன்பு இருந்ததைவிட 44 சதவிகிதம் குறைந்துள்ளது.
ஜேர்மனியில் உள்ள
Gelsenkirchen ல் இருக்கும்
CAR
ஆராய்ச்சி நிறுவனத்தின் கணக்கீட்டின்படி இத்தாலிய சந்தைகளிலும் விற்பனை குறைந்தது 14 சதவிகிதம் இவ்வாண்டு
குறையும் என்றும், அமெரிக்காவில் இது 13 சதவிகிதமாக இருக்கும் என்றும் இங்கிலாந்தில் 5 முதல் 6 சதவிகித
குறைவாக இருக்கும் என்றும் ஜேர்மனிய சந்தையில் 2 சதவிகிதம் வரை இருக்கலாம் என்றும் தெரிகிறது.
உற்பத்தியை படிப்படியாகக் குறைத்தல், வேலைகள் இழப்பை படிப்படியாக செய்தல்
நெருக்கடியின் ஆரம்பம் இப்பொழுதுதான் உணரப்படுகிறது என்ற நிலையில், கார்த்தயாரிப்பு
நிறுவனங்கள் உடனே உற்பத்திக் குறைப்பு, பணிநீக்கம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. சில காலமாகவே
கார்த் தொழில் கூடுதல் உற்பத்தி பற்றிக் குறை கூறிவந்தது. இப்பொழுது நெருக்கடியை பயன்படுத்தி தொழிலாளர்
மீது செயல்படுத்த முடியாமல் இருந்த திட்டங்களை செயல்படுத்த முடிகிறது.
ஸ்வீடனின் கார் உற்பத்தி நிறுவனம்
Volvo (போர்ட்
நிறுவனத்தை சேர்ந்தது) ஏற்கனவே மற்றும் ஒரு 3,000 தொழிலாளர்களை நீக்குவதாக அறிவித்தது; இது
மொத்த பணிநீக்கத்தை 6,000 என்று தற்பொழுது உயர்த்தியுள்ளது. நிறுவனத்தின் எஜமானரான
Stephen Odell
"உலகெங்கிலும் கார்த் தொழிலில் விரைவாக சரியும் சந்தை நிலைமையை ஒட்டி" வேலை இழப்புக்கள் இன்றியமையாதவை
என்று அறிவித்தார்.
ஜேர்மனியில்
Saarlouis
இல் உள்ள போர்ட் ஆலை கிட்டத்தட்ட 200 தற்காலிக தொழிலாளர்களை திட்டமிட்ட காலத்திற்கு இரு மாதங்கள
முன்னரே பணி நீக்கம் செய்துவிட்டது. சார்லாந்தில் உள்ள ஆலையில் 6,500 மொத்த தொழிலாளர் தொகுப்பாக
உள்ளனர்; இங்கு முக்கியமாக ஏற்றுமதிக்கு கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பவேரிய கார் உற்பத்தி நிறுவனமான
BMW
அதன் லைப்சிக் ஆலையில் உற்பத்தி நிறுத்தத்தை அறிமுகப்படுத்தி, இன்னும் தற்காலிக ஆலை மூடலையும் பிற ஆலைகளில்
செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
BMW
ன் திட்டங்கள் 2007 உடன் ஒப்பிடும்போது 20,000 ல் இருந்து 25,000 கார்கள் குறைவாக உற்பத்தி செய்யப்பட
வேண்டும் என்பதாகும்.
Daimler
ஏற்கனவே இக்கோடையில் இந்த ஆண்டு உற்பத்தியில் 45,000 வாகனங்கள் குறைக்கப்பட இருப்பதாக அறிவித்துவிட்டது.
Volkswagen
இதுவரை உற்பத்தியைக் குறைக்க மறுத்துள்ளது; புதிய ஆலைகளை திறக்கத் தாமதம் காட்டுகிறது. இந்த முடிவைப்
பற்றிக் கூறுகையில் VW
நிதியத்தின் தலைவரான Hans
Dieter Poetsch சந்தை நிலைமையில்
"கணிசமான சரிவு" ஏற்பட்டுள்ளதைக் குறைகூறினார்.
செக்
Volkswagen
பிரிவான Skoda
இதன் உற்பத்தியில் 13,000 வாகனங்கள் சென்ற ஆண்டு இருந்ததைவிட குறைவாக உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த நிறுவனம் கடந்த வெள்ளியன்று ஒரு நாள் உற்பத்தியை நிறுத்தியது.
ஜெனரல் மோட்டார்ஸின் ஐரோப்பிய துணை நிறுவனமான ஓப்பல் மிகத் தீவிர திட்டங்களை
அறிவித்துள்ளது; இதன்படி இந்த ஆண்டின் இறுதிக்குள் கிட்டத்தட்ட 40,000 வாகனங்கள் உற்பத்தி செய்வது குறைக்கப்பட்டுவிடும்.
Eisenach
ல் உள்ள ஒப்பல் ஆலையில், 1,800 தொழிலாளர்கள் உள்ள ஆலை அடுத்த திங்களன்று மூடப்பட உள்ளது.
Bochum
ல் 5000 தொழிலாளர்கள் இருக்கும் ஒப்பல் ஆலை செப்டம்பர் மாதம் இரு வாரங்கள் மூடப்பட்டிருந்தன; இது
நிர்வாகத்திற்கும் ஆலைக் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் நடந்தது. இன்னும் ஆலை
மூடப்படல் என்பது அக்டோபர் இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. ஓப்பல் அதன் முழு ஐரோப்பிய பணியிடங்களிலும்,
Russelsheim
தவிர மற்றவற்றில், தான் அக்டோபர் 20-31 ஐ ஒட்டி உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இது
ஜேர்மனியில் உள்ள
Kaiserslautern, போலந்தில்
உள்ள Gliwice,
இங்கிலாந்தில் உள்ள
Ellesmere Port, Lutton
மற்றும் ஸ்பெயினில் உள்ள
Saragossa ஆகியவற்றைப்
பாதிக்கும்.
ஓப்பலின் செய்தித் தொடர்பாளர்
Andreas Kroer
இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் கூறினார்: "மக்கள் கவலையில் உள்ளனர்; பணத்தை பாதுகாப்பாக
வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். காருக்கான தேவை பெரிதும் குறைந்துவிட்டது. அதற்கேற்ப நாங்கள் சரி செய்து
கொள்ள வேண்டும். ஒரு குப்பை கூளத்தைக் கொண்டு கார்களை உற்பத்தி செய்ய முடியாது."
உண்மையில் ஓப்பல் வேலைக் குறைப்புக்களுக்கு தயாரித்துவருகிறது; தொழிலாளர் பணி
நிலைமையின் மீதும் தாக்குதல்கள் நடத்தத் தயாரிப்பை செய்கிறது.
Bochum Opel
ஆலையில் உள்ள தொழில் குழுவின்படி விற்பனையில்
சரிவு இருப்பதால் 900 வேலைகள் அகற்றப்படக்கூடிய ஆபத்து உள்ளது. நிறுவனத்தின் நிர்வாகம் இன்னும் கடுமையான
வேலை நேரங்கள் மற்றும் இயந்திரப்படுத்துதல் ஒரு கார் உற்பத்தி காலத்தை 27ல் இருந்து 15 மணி நேரத்திற்குள்
குறைத்திட முடியும் என்று மதிப்பிட்டுள்ளது.
பரந்த வேலையின்மை
கார்த் தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பெரும் புயலென பணிநீக்கங்களுக்கு வழி
வகுக்கும். கிட்டத்தட்ட 2.1 மில்லியன் தொழிலாளர்கள் ஏற்கனவே ஐரோப்பிய கார்த் தொழிலில் தொடர்பு
கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 12 மில்லியன் என்று கார் தொடர்புடைய அனைத்து தொழில்களும்
சேர்க்கப்படும்போது உயரும்.
உற்பத்தியைக் குறைத்தல் என்பது கார் விநியோக தொழிலை நேரடியாகப்
பாதிக்கும்; இதில் குறைந்த இலாபம் காணும் நடுத்தர நிறுவனங்கள் பல செயல்படுகின்றன. கார்கள் விற்பனையில்
பங்கீடு, விற்பனைக் கூடங்கள் மற்ற பணிகள் ஆகியவையும் பாதிக்கப்படும். ஜேர்மனியில் மட்டும் இத்துறையில்
468,000 தொழிலாளர்கள் உள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளனர். இத்தகைய நிறுவனங்கள் சராசரியாக 12
தொழிலாளர்களை நியமிக்கின்றன; இவற்றுள் பல நிறுவனங்கள் ஏற்கனவே பெரும் கடனில் ஆழ்ந்துள்ளன.
வங்கிகளைப் போலவே முக்கிய கார் நிறுவனங்களும் இப்பொழுது அரசாங்கத்திடம்
இருந்து பணத்தைக் கோருகின்றன. அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபையானது, குறைந்த வட்டியுடைய கடன்கள்
வடிவில் கார்த்தயாரிப்பாளர்களுக்கு 25 பில்லியன் டாலர்கள் கிடைப்பதற்கு இருக்குமாறு செய்ய புதனன்று ஒரு சட்டவரைவை
தயாரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
ஜேர்மனிய உற்பத்தியாளர்கள் இந்த நடவடிக்கையை குறைகூறியுள்ளனர். "இது சர்வதேச
போட்டியில் ஒரு சிதைவிற்கு வகை செய்கிறது" என்று
VDA
எனப்படும் ஜேர்மனிய கார்த் தொழில் கூட்டமைப்பின் தலைவரான
Matthias Wissman
கூறியுள்ளார்.
அமெரிக்கா பற்றிய இத்தகைய விமர்சனமானது ஐரோப்பிய கார்த் தொழிலை இதே
போன்ற ஆதரவு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரவேண்டும் என்று கோருவதைத் தடுக்கவில்லை. குறைந்த விலை
வாகனங்கள் வளர்ச்சிக்கும், பழைய கார்களுக்கு புதிய கார்களை மாற்றிக்கொள்ள நுகர்வோர்களுக்கான
ஊக்கத்தொகைக்கும் சேர்த்து 40 பில்லியன் யூரோக்களுக்கு மேலான குறைந்த வட்டிக்கான கடன் பொதி உள்பட
உற்பத்தியாளர்கள் பல்வேறு ஆதரவு நடவடிக்கைகளைக் கோருகின்றனர் .
பெரிய நிறுவனங்களும் அவற்றின் பங்குதாரர்களும் இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து
பெரும் இலாபம் ஈட்ட இயலும். வேலைகளை இழக்கும் தொழிலாளர்கள் ஆதரவிற்கு வங்கியை நாட முடியாது.
ஜேர்மனியில் அரசாங்கம் இந்த வாரம் வேலையின்மை காப்புறுதி தொகைக்கான அளிப்பை அடுத்த ஆண்டுத்
தொடக்கத்தில் இருந்து 0.5 சதவிகிதம் குறைப்பதாக முடிவெடுத்துள்ளது. இந்த நடவடிக்கை தொழிலாளர்களின்
உதவித் தொகை ஊதியச் செலவினங்களை குறைக்கும் நோக்கத்தை கொண்டது ஆகும்.
இந்த முடிவின் உடனடி விளைவு மத்திய தொழிலாளர் முகவாண்மைக்கு நிதியைக்
குறைக்கும், கால அணிமையில் வருங்காலத்தில் தங்கள் வேலைகளை இழக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும் பல்லாயிரக்கணக்கான
கார்த் தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்கு அதனிடம் குறைந்த நிதிதான் இருக்கும்.
See Also:
உலக பெரு மந்த நிலை வரக்கூடிய அடையாளங்கள் பெருகுகையில் அமெரிக்கப் பங்குகள் சரிகின்றன
உலக நிதியச் சந்தைகளை பீதி கவ்வுகிறது
நிதிய நெருக்கடிக்கு பொது மூலோபாய உடன்பாடு காண்பதில் ஐரோப்பிய தலைவர்கள் தோல்வி
|