WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
உலக பொருளாதாரம்
Asian markets continue to fall
ஆசிய சந்தைகள் தொடர்ந்து சரிகின்றன
By Peter Symonds
8 October 2008
Use this version to print
|
Send this link by
email |
Email the
author
கடந்த வாரம் புஷ் நிர்வாகத்தின் வோல் ஸ்ட்ரீட்டிற்கான அமெரிக்க $700 பில்லியன்
பிணை எடுப்பு திட்டம் ஒப்புதல் பெற்ற பின்னர்கூட, ஆசியப் பங்குகள் இவ்வாரமும் அமெரிக்க ஐரோப்பிய பங்குச்
சந்தைகளுடன் பெரும் சரிவிற்கு உட்பட்டன. உலக நிதிய நெருக்கடிக்கு ஆசிய சந்தைகள் எதிர்விளைவை காட்டுகையில்,
சர்வதேச பொருளாதார சரிவை ஒட்டி அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றில் ஏற்றுமதி சந்தைகள் அப்பகுதி
முழுவதும் மோசமாக பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சங்கள் நிலவுகின்றன.
இதைத்தவிர பீதி என்னும் கூறுபாடும் சந்தைகளின் கொந்தளிப்பிற்கு எரியூட்டுகின்றன.
திங்கள் அன்று ஆசியா முழுவதும் மிகப் பெரிய சரிவுகளுக்கு பின்னர், செவ்வாய்க்கிழமை வணிகம் தொடங்கியதும் பங்குச்
சந்தைகள் தீவிரமாக சரிந்தன; பின்னர் ஆஸ்திரேலிய ரிசேர்வ் வங்கி எதிர்பார்த்ததைவிட கூடுதலான வட்டி விகிதத்தை
குறைத்துள்ளது --1 சதவிகிதம் 1992க்கு பின்னர் மிக அதிகக் குறைப்பு-- என்ற செய்தி கிடைத்தவுடன் ஓரளவிற்கு
மீட்சி அடைந்தது.
ஆஸ்திரேலிய அறிவிப்பு உலகின் முக்கிய மத்திய வங்கிகள் உலக நிதிய முறைமீதான
நம்பிக்கையை மீட்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கைகளை அதிகப்படுத்தியது.
செவ்வாய் பிற்பகலில் ஜப்பானிய வங்கியின் கவர்னர்
Masaaki Shirakawa அதன் வட்டிவிகிதமான 0.5 ஐயும்
விடக் குறைப்பு ஏதும் இல்லை என்றும் "ஒவ்வொரு நாட்டின் பொருளாதார மற்றும் விலை நிலைமைக்கான பொருத்தமற்ற
நடவடிக்கைகள் சம்பந்தப்படும் கொள்கை ஒருங்கிணைப்பை ஏற்பது விரும்பத்தக்கதல்ல" என்று அறிவிவித்து விட்டார்.
ஜப்பானின் பங்குச் சந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டவற்றுள் ஒன்றாகும். திங்கள் கிழமை
4.3 சரிவிற்குப் பின், நிக்கேய் 225 குறியீட்டெண் மற்றும் ஒரு 317.90 புள்ளிகளை செவ்வாயன்று இழந்தது
--2003 டிசம்பருக்கு பின்னர் மிகக் குறைந்தது. "உணர்வு நம்பிக்கையற்ற நிலையில் உள்ளதால் முதலீட்டாளர்கள்
நிதிய நெருக்கடியின் போக்கு பற்றி கவலைப்படுகின்றனர். எவருக்கும் இந்த நெருக்கடி எப்படி, எப்பொழுது
முடிவடையும் என்பது தெரியாது." என்று Mizuho
Investors ல் மூலோபாய வல்லுனராக இருக்கும்
Masatoshi Sato
அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார்.
நேற்று மிக அதிக இழப்பாளர்களில் முக்கிய கார்த் தயாரிப்பாளர்கள் இருந்தனர்.
மிட்சுபிஷி மோட்டார்ஸ் கார்ப்பரேஷனின் பங்கு 10.3 சதவிகிதம் சரிந்தது, நிசான் மோட்டார் கம்பெனியின் பங்கு
மதிப்பு 4.79 சதவிகிதம் குறைந்தது, டோயோடா மோட்டார் கார்ப்பொரேஷன் பங்கு 4.85 சதவிகிதம்
குறைந்தது. டோயோடோவின் விற்பனை 32 சதவிகிதம், நிசான் 37 சதவிகிதம், ஹோண்டா 24 சதவிகிதம் என
அனைத்து ஜப்பானிய கார்த் தயாரிப்பாளர்களும் செப்டம்பர் மாதம் அமெரிக்க விற்பனையில் மிகப் பெரிய சரிவுகளை
பதிவு செய்தன.
ஜப்பான் மந்த நிலையில் உள்ளது என்பதற்கு வலுவான அடையாளங்கள் உள்ளன. கடந்த
மாதம் வெளிவந்த உத்தியோகபூர்வ புள்ளி விவரங்கள் பொருளாதாரம் ஆண்டு அடிப்படையில் இரண்டாம் கால்பகுதியில்
3 சதவிகிதம் சுருக்கம் அடைந்தது எனக் காட்டுகிறது. நேற்று மந்திரிசபை நாட்டின் முக்கிய இணைந்த
பொருளாதாரச் செயற்பாட்டு ஒத்தியல்புக் குறியீட்டெண் ஆகஸ்ட் மாதம் 2.8 சரிந்து 100.7 ல் நின்றதாகவும்
பொருளாதாரம் "மோசமடைந்து கொண்டிருப்பதாகவும்" அறிவித்தது. டாங்கன் வணிக நம்பிக்கை பற்றிய
டாங்க்கென் குறியீட்டெண் பெரிய உற்பத்தியாளர்களுக்கு ஜூனில் 5 என்பதில் இருந்து செப்டம்பரில் -3 என்று போயிற்று;
2003 பெப்ருவரியில் இருந்து இது முதல் தடவை எதிர்மறையை காட்டுகிறது. ஆலை உற்பத்தி 3.5 சதவிகிதம்
குறைந்து, வேலையற்றோர் விகிதம் இரண்டு ஆண்டுகளில் உயர்மட்டமான 4.2 சதவிகிதத்தை ஆகஸ்ட் மாதம்
அடைந்தது.
கடந்த வாரம் தேசிய விடுமுறைகளுக்காக மூடப்பட்ட பின் சீனாவில் பங்கு விலைகள்
தீவிர சரிவுற்றன. முக்கிய அடையாள Shanghai
Composite Index 5.2 சதவிகிதம் திங்களன்று குறைந்தது;
செவ்வாய் தொடக்க வணிகத்தில் 4.5 குறைந்தது; இறுதியில் 0.7 சதவிகிதக் குறைவுடன் முடிந்தது. சீனாவின் பங்குச்
சந்தைகள் இந்த ஆண்டு 60 சதவிகிதத்திற்கும் மேலான சரிவைக் கண்டன. ஹாங்காங்கின்
Hang Seng Index
திங்களன்று 5 சதவிகிதம் குறைந்து, நேற்று மூடப்பட்டிருந்தது.
மற்ற நாட்டுத் தலைவர்களைப் போலவே, சீனப் பிரதமர் வென் ஜியபாவோ திங்கன்று
நாட்டின் நிதிய முறை பாதுகாப்பாக உள்ளது என்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி, உறுதிப்பாட்டில்
பெருநம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அறிவித்தார்.
Bloomberg.com இன் கருத்தின்படி, ஆசிய நிதிய
நிறுவனங்கள் அமெரிக்க குறைந்த பிணைமதிப்புடைய வீட்டு கடன்களுடன் பிணைந்து பத்திரங்களுடன் குறைந்த
தொடர்புதான் கொண்டிருந்தன--உலகளவில் உள்ள மொத்த $590 பில்லியனில் சுமார் $24.5 பில்லியன்தான்
பிணைந்துள்ளன. ஆனால் இழப்புக்களின் முழுப்பரப்பு, சர்வதேச கடன் கொடுத்தல் வறட்சியின் பரந்த தாக்கங்கள்
ஆகியவை இன்னும் அறியப்படவில்லை.
சீனாவும் தாக்கப்பட்டுள்ளதாக டைம் ஏடு குறிப்பிட்டுள்ளது. "அதன்
வங்கிகள் அமெரிக்க குறைந்த பிணைமதிப்புடைய கடன் சந்தைத் தொடர்பில் $12 பில்லியன் இழந்தன; இது குறைவான
எண்ணிக்கை என்று சில பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர். தனியார் பங்கு குழுமமான பிளாக் ஸ்டோன் மற்றும்
மோர்கன் ஸ்டான்லியில் மோசமான சமயத்தில் முதலீடு செய்த வகையில், இதன் பெரும் செல்வ நிதியங்கள் பல
மில்லியன் கணக்கான டாலர்களை இழந்துள்ளன. Ping
an Insurance என்னும் சீனாவின் இரண்டாம் மிகப் பெரிய
காப்பீட்டு நிறுவனம் அதன் $2.7 பில்லியன் முதலீட்டில் 70 சதவிகிதத்தை டச்சு-பெல்ஜிய நிதிய பணிகள் நிறுவனமான,
கடந்த வாரம் சரிந்த போர்ட்டிஸில் இழந்தது.
இன்னும் கணிசமான ஆபத்துக்கள் "நெருக்கடியில் இருந்து விளையும் உலகந்தழுவிய பருவினப்
பொருளாதார முறையில் இருந்து" வருகின்றன என்று டைம் சுட்டிக் காட்டியுள்ளது. குறிப்பாக கட்டுரை,
அமெரிக்க டாலரின் சரிவினால் ஏற்படக்கூடிய ஆபத்து மற்றும் சீனாவில் எழுச்சியுறும் ரென்மின்பியானால், அதுவும்
நாட்டின் ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே உலக வளர்ச்சிக் குறைவின் பாதிப்பால் அவதியுறும் நிலையில் ஏற்படும் ஆபத்துக்களை
தெளிவாகக் காட்டுகிறது. அது முறையே உள்நாட்டில் மேலும் மெதுவான வளர்ச்சியாக ஆகக் கூடும் சீனாவில்
வளர்ச்சி கணிப்புக்கள் திருத்தி அமைக்கப்படுகின்றன. UBS
AG, சீனப் பொருளாதாரம் இந்த ஆண்டு 9.6 சதவிகிதம்
அளவில் வளர்ச்சியைக் காணும், இநு 2002ல் இருந்து மிகக் குறைவானது என்றும் மதிப்பிட்டுள்ளது. மற்ற
மதிப்பீடுகள் அடுத்த ஆண்டு 8 சதவிகித வளர்ச்சிதான் இருக்கும் எனக் கூறுகின்றன. சீனப் பொருளாதாரத்தில் எவ்வித
குறைந்து செல்லும் வீழ்ச்சியும் பெய்ஜிங்கைப் பொறுத்தவரை தீவிர அரசியல் உட்குறிப்புக்களைக் கொண்டிருக்கும்,
அது வேலையின்மையைத் தடுப்பதில், இதையொட்டி சமூக பதட்டங்கள் உருவாவதைத் தடுப்பதில் ஆற்றொணா நிலையில்
உள்ளது.
தென் கொரியாவில் சியோல் பங்குச் சந்தை 4.3 சதவிகிதம் திங்களன்று சரிந்து நேற்று
ஓரளவிற்கு அதிகமாக முடிந்தது. மொத்தத்தில் Kospi
பங்குச் சந்தைக் குறியீட்டெண் இந்த ஆண்டு 29 சதவிகிதக்
குறைவைக் கண்டுள்ளது. தென் கொரியாவின் வொன் அமெரிக்க டாலருக்கு எதிராக திங்களன்று 5 சதவிகிதம்
குறைந்து, இன்னும் கூடுதலாக செவ்வாயன்று ஏழு ஆண்டுகள் குறைவான மதிப்பை அடைந்தது; இதையொட்டி நாணயத்திற்கு
முட்டுக் கொடுக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
நிதி மந்திரி காங் மன்-சூ நாட்டின் நாணய இருப்புக்காள கிட்டத்ட்ட $240 பில்லியனை
--உலகின் ஆறாம் மிகப் பெரியது--தென் கொரியாவின் வங்கி முறையை நிதிய நெருக்கடியில் இருந்து பாதுகாக்க
பயன்படுத்துவதாக உறுதியளித்தார். அரசாங்கம் ஏற்கனவே $25 பில்லியனை மார்ச்சில் இருந்து வொன்னை முட்டுக்
கொடுக்க செலவழித்துள்ளது; அதுவோ டிசம்பரில் இருந்து அதன் மதிப்பில் 26 சதவிகிதம் குறைந்தது. காங்,
தென் கொரிய வங்கிகள் வெளிநாட்டுக் கடன்கள் முலம் எழுப்பப்பட முடியாத டாலர்களை வெளிநாட்டுச்
சொத்துக்களை விற்றுஈட்டுமாறும் கோரிக்கை விடுத்தார்.
"நாணய சிக்கல்கள் உலகரீதியான எளிதில் பணமாக்கமுடியாத நெருக்குதலின் விளைவே
அன்றி தனிப்பட்ட வங்கிகளில் ஆபத்தை எதிர்நோக்கி எடுக்கும் விஷயங்களினால் அல்ல" என்று முக்கிய
கடன்கொடுக்கும் Kookmin
சார்பில் You Jung-youn
ராய்ட்டர்ஸிடம் கூறினார். "நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்தை விட அதிகமானது." தென் கொரியா எண்ணெய்
மற்றும் ஏனைய இறக்குமதியின் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது, இதை டிசம்பர் முதல் ஆகஸ்ட்
வரை, ஜூன் தவிர ஒவ்வொரு மாதத்திற்குமான அதன் நடப்பு கணக்கில் பற்றாக்குறைகளுக்கு பங்களிப்பு
செய்கிறது. பொருளாதாரம் சுருக்கம் கண்டுள்ளது; அரசாங்கமும் இவ்வாண்டு வளர்ச்சி விகிதத்தை 6ல் இருந்து 4
எனக் குறைத்து கணித்துள்ளது.
ஆளும் பெரும் தேசியக் கட்சியின் கருத்தின்படி, தென் கொரியாவின் ஜனாதிபதி லீ
மையுங் பாக் சீனா, ஜப்பானுடன் உச்சிமாநாட்டிற்கு இம்மாத பிற்பகுதியில் உலக பொருளாதார நெருக்கடியை
எதிர்கொள்ளுவது பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். கடந்த வாரம் மூன்று நாடுகளும் நாணயம்
கொடுத்து மாறலுக்கான $80 பில்லியன் கொண்ட சேர்மநிதியை உருவாக்குவதற்கான திட்டங்களை விரைவுபடுத்த
வேண்டும் என்றும் அது நிதியக் கொந்தளிப்பிற்கு ஈடு கொடுக்கும் வகையில் இடைப் பணமாக உதவும் என்றும் கூறியுள்ளார்.
சீனாவும் ஜப்பானும் இதற்கு இன்னும் பதில் கூறவில்லை.
சீனாவைப் போல் ஒரு பொருளாதார அதிசயம் எனப் பாரட்டப்படும் இந்தியாவிலும்
அடையாளக் குறியீடான சென்செக்ஸ் குறியீட்டெண் திங்களன்று 5.8 சதவிகிதமும் செவ்வாயன்று 0.9 சதவிகிதமும்
குறைந்தது. நாட்டின் மிகப் பெரிய தனியார் துறை நிறுவனம், பங்குச் சந்தை முறையில் முதலீட்டைக் கொண்ட
நிறுவனமான Reliance Industries
திங்களன்று 7 சதவிகிதம் சரிந்தது; உலோகப் பெருநிறுவனம் டாட்டா ஸ்டீல் பங்குகள் 11 சதவிகிதமும் மிகப் பெரிய
சொத்துக்கள் நிறுவனமான DLF
பங்குகள் 10.3 சதவிகிதமும் சரிந்தன.
ரிசேர்வ் பாங்க் ஆப் இந்தியா நேற்று குறுக்கிட்டு வங்கிகள் அதனுடன் இருத்த
வேண்டிய சேமிப்பு விகித இருப்புக்களை 9 தில் இருந்து 8.5 சதவிகிதமாகக் குறைத்தது. இந்த நடவடிக்கை
கிட்டத்தட் 200 பில்லியன் ரூபாய்களை ($4.2 பில்லியன்) நிதியச் சந்தைகளில் செலுத்தியது; ஆனால் மும்பை பங்குச்
சந்தையின் சரிவை இது தடுத்து நிறுத்த முடியவில்லை.
இந்திய ஏற்றுமதிகள், உலக கீழ்நோக்கிய மெதுவான சரிவினால் பாதிப்பிற்கு உட்படும்
என்ற அச்சங்கள் உள்ளன. நிதி மந்திரி பழனியப்பன் சிதம்பரம் திங்களன்று இந்தியாவின் வளர்ச்சி விகிதம்
2009-10 நிதி ஆண்டில் 9 சதவிகிதத்திற்கு வந்துவிடும் என்று நம்பிக்கையுடன் அறிவிக்கையில், இந்திய ரிசேர்வ்
வங்கி இந்த நிதி ஆண்டில் வளர்ச்சி 8 சதவிகிதம்தான் இருக்கும், நான்கு ஆண்டுகளில் மிகக் குறைவாக இருக்கும்
என்று மதிப்பிட்டுள்ளது.
தென் கிழக்கு ஆசியச் சந்தைகளும் உலக பொருளாதாரப் பின்னடைவு அச்சத்தின் காரணமாக
சரிந்துள்ளன. தென் கிழக்கு ஆசிய (ASEAN)
நாடுகளின் சங்கம் ஏற்கனவே மிக அதிகமாக அமெரிக்க, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவிற்கான ஏற்றுமதிகளைத்தான்
அதிகம் நம்பியுள்ளன; 1977-78 ஆசிய நிதிய நெருக்கடிக்கு பின்னர் இவை மிக அதிக அளவில் உலகந்தழுவிய உற்பத்தி
வழிவகைகளில் குறிப்பாக உதிரிபாகங்கள் மற்றும் மூலப் பொருட்களை சீனாவிற்கு கொடுப்பதில் இணைந்துள்ளன .
இந்தோனேசியாவில் பங்குகள் மகத்தான முறையில் திங்களன்று 10 சதவிகிதம் சரிந்தன--ஒரே
நாளில் இதுகாறும் இல்லாத அளவிற்கு இது ஏற்பட்டது; மற்றொரு 2 சதவிகிதம் நேற்று குறைந்தது. வட்டி
விகிதங்களை குறைப்பதற்கு பதிலாக இந்தோனேசிய வங்கி அவற்றை 0.25 சதவிகிதம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த
உயர்த்தியுள்ளது; கடந்த மாதம் இது 12 சதவிகதம் என்று போயிற்று. நாட்டின் வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு
6.4 சதவிகிதம் என்று இருக்கையில் இது பொருள்கள் ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ளன; இதில் இயற்கை எரிவாயு,
பனை எண்ணை ஆகியவை அடங்கும்; அவைதான் எந்த உலக கீழ்நோக்கிய போக்கிலும் முதலில் பாதிக்கப்படுபவை.
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பங்குகள் 5.6 சதவிகிதம் மற்றும் 1.96 சதவிகிதம்
கீழிறங்கி திங்களன்று குறைந்து நேற்று சிறிதளவு உயர்ந்தது. தாய்லாந்தில் ஒரு பொருளாதார மந்தம் நாட்டின்
நீடித்த அரசியல்நெருக்கடிக்கு எரியூட்ட உதவுகிறது; அதன் விளைவாக பொருளாதாரம் இன்னும் கூடுதலான பாதிப்பிற்கு
உட்படுகிறது. பாங்காக் பங்குச் சந்தை திங்களன்று 6.4 சதவிகிதம் சரிந்தது; நேற்று இன்னும் 4.2 குறைந்தது;
இது ஐந்து ஆண்டுகாலத்தில் இல்லாத குறைப்பைக் கொடுத்துள்ளது; அதாவது ஜனவரியில் இருந்து 30 சதவிகிதம்
குறைந்துவிட்டது.
உலக வளர்ச்சி பற்றிய கணிப்புக்கள் திருத்தப்பட்டு வருகின்றன.
IMF அதன் சமீபத்திய
பொருளாதா மதிப்பீட்டை இன்று வெளியிட உள்ளது; ஆனால்
Bloomberg.com
க்கு கிடைத்த பணியாளர் அறிக்கையின்படி, உலக பொருளாதார விகிதம்
அடுத்த ஆண்டு மூன்று சதவிகித வளர்ச்சியைத்தான் காணும் என்றும், இது
IMF இந்த ஆண்டு
ஏப்ரல் மாதம் கணித்த 3.7 சதவிகிதத்தை விடக் குறைவாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
G-7 நாடுகளான
அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், கனடா, மற்றும் இத்தாலி ஆகியவற்றில் வளர்ச்சி "குறிப்பிடத்தக்க
வகையில் குறைவாக இருக்கும்" --கனடா பட்டியலில் மேலிடத்தைக் கொள்ளும், அதன் வளர்ச்சி 1.2 என்றுதான்
இருக்கும். அடுத்த ஆண்டு உலக வளர்ச்சி விகிதம் 2.2 தான் இருக்கும் என்று
UBS கணித்துள்ளது.
JP Morgan Chase
நிறுவனம் நேற்று ஒரு அறிக்கையில் உலக வளர்ச்சி பூஜ்யத்தை ஒட்டி 2008 நான்காம் காலாண்டிலும் அடுத்த ஆண்டு
முதல் மூன்று காலாண்டுகளிலும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிதிய நெருக்கடி ஏற்றுமதிச் சந்தைகளுக்கான
தெளிவற்ற இந்த வாயுப்பவளங்களுடன் இணைந்து, ஆசிய பங்கு மதிப்புக்களில் தொடர்ந்த கொந்தளிப்பைத் தோற்றுவித்துக்
கொண்டிருக்கிறது. நேற்று இரவு வோல் ஸ்ட்ரீட்டின் பெரும் சரிவை அடுத்து இப்பகுதியில் உள்ள பங்குச் சந்தைகள்
அனைத்தும் புதனன்று தீவிர சரிவுடன் தொடங்கின. MSCI
ஆசியா-பசிபிக் குறியீடு, இப்பகுதி முழுவதிற்குமான பங்கு மதிப்பு
பற்றிய அடையாளம் டோக்கியோவில் காலை பத்து மணிக்கு 2.7 சதவிகிதம் குறைந்துவிட்டது. நிக்கேய் 225 குறியீட்டெண்
மற்றும் ஒரு 2.6 சதவிகிதம் குறைந்தது; அதையொட்டி அது 10,000 புள்ளி தரத்திற்கு கீழே சென்றுவிட்டது.
See Also:
உலக பெரு மந்த நிலை வரக்கூடிய அடையாளங்கள் பெருகுகையில் அமெரிக்கப் பங்குகள் சரிகின்றன
உலக நிதியச் சந்தைகளை பீதி கவ்வுகிறது
ஐரோப்பா: ஐரோப்பிய பங்குச் சந்தைகள் பாரிஸ் நிதிய உச்சிமாநாட்டை எடுத்து பெரும் வீழ்ச்சியுற்றன
|