World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Arrested SEP member speaks to the WSWS following his release

இலங்கை ; கைது செய்யப்பட்ட சோ.ச.க. அங்கத்தவர் அவரது விடுதலையின் பின்னர் WSWS உடன் உரையாடுகிறார்

By Nanda Wickramesinghe
1 October 2008

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) அங்கத்தவர் வேலும்மயிலும் கமலதாசன் மற்றும் அவரது மைத்துனரான சந்திரலிங்கம் இளஞ்செழியனும் செப்டம்பர் 15 அன்று பஸ்ஸில் கொழும்பு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த போது நீர்கொழும்பில் வைத்து இலங்கை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கமலதாசன் கட்சியின் நீண்டகால அங்கத்துவத்தைக் கொண்டுள்ளார் என சோ.ச.க உறுதிப்படுத்தியபோதிலும் அவர்கள் ஒரு வாரகாலத்துக்கு மேலாக நீர்கொழும்பு பொலிஸ் சிறைக் கூண்டுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தை எதிர்ப்பதில் மட்டுமன்றி, தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் குட்டி முதலாளித்துவ தேசியவாத வேலைத்திட்டத்தையும் எதிர்ப்பதில் சோ.ச.க. பிரசித்தி பெற்றதாகும். இந்த இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய பொலிசார் மறுத்தமை, "பயங்கரவாதத்துக்கு" எதிரான போராட்டம் என்ற போர்வையின் கீழ் எந்தவொரு எதிப்பையும் அடக்குவதற்காக ஜனநாயக விரோத வழிமுறைகள் அதிகரித்தளவில் பயன்படுத்தப்பட்டு வருவதற்கான இன்னுமொரு அறிகுறியேயாகும். இந்த இருவரும் சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தினதும் சக்தி வாய்ந்து பிரச்சார நடவடிக்கையின் பின்னரே பொலிசார் இறுதியாக விடுதலை செய்தனர்.

கமல்தாசன் தான் கைது செய்யப்பட்ட சூழ்நிலை பற்றி WSWS உடன் பேசும் போது தெளிவுபடுத்தினார். நாங்கள் அரசாங்கத்தின் சட்ட விதிகளின்படி கூட எங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வைத்திருந்தோம். எங்களிடம் பொலிஸ் பதிவுகளின் பிரதிகள் இருந்தன. [சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் உள்ள ஒவ்வொரு தமிழர்களும் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அவருடைய/அவளுடைய குடும்ப உறுப்பினர்களை பதிவு செய்ய வேண்டும்] கடவுச் சீட்டும் எம்மிடம் இருந்தது. ஆனாலும் அவர்கள் எங்களைக் கைது செய்தார்கள். நாங்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு அரசியல் காரணங்கள் உள்ளன.

"உண்மையில் எமது கைதானது பொதுவில் உழைக்கும் மக்கள் மீது, குறிப்பபாக இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மீதான தாக்குதலின் ஒரு பாகமாகும். பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய இராஜபக்ஷ (ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஸவின் சகோதரர்) செவ்வி ஒன்றில் தெரிவித்ததாவது: 'எல்லாத் தமிழர்களும் பயங்கரவாதிகள் அல்ல, ஆனால் 98 வீதமான பயங்கரவாதிகள் தமிழர்களே' அண்மையில் கொழும்புக்கு வந்த தமிழர்கள் யாழ்ப்பாணத்துக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று அவர் விரும்புகின்றார். அவர் தமிழர்களை கைது செய்வதற்கான சுதந்திரத்தை பொலிசாருக்கு வழங்கியுள்ளார்.

"நாங்கள் செப்டம்பர் 15 காலை 11.30 மணிக்கு நீர்கொழும்பு பஸ் நிலையத்தில் ஒரு பஸ்ஸில் ஏறி இருந்தோம். கால் மைல் தூரம் பஸ் முன்னேறியபோது புகையிரதக் கடவைக்கு அருகில் பொலிசார் பஸ்ஸை நிறுத்தினர். பின்னர் அவர்கள் எங்களை இறக்கி எமது ஆவணங்களைப் பரிசோதித்துவிட்டு அவர்களின் வானில் கூட்டிச் சென்றார்கள். ஏற்கனவே கைது செய்யப்பட்ட இரண்டுபேர் அந்த வானுக்குள் இருந்தார்கள்.

"இரண்டு பொலிஸ் அதிகாரிகள், 'பிடித்தது போதாது. நாங்கள் இன்னும் இரண்டு பேரையாவது பிடிக்க வேண்டும்' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டது எங்களுக்கு தற்செயலாகக் கேட்டது. மற்ற இருவரில் ஒருவர் கம்பளையைச் சேர்ந்த தமிழ் இளைஞர். அவர் மூன்று வருடங்களாக நீர்கொழும்பில் வாழ்கிறார்கள். அடுத்தவர் வட மாகாணத்தைச் சேர்ந்தவர். அவர் இரண்டு வருடங்களாக நீர்கொழும்பில் இருக்கிறார். அடையாள அட்டை இல்லாத ஒரு சிங்கள இளைஞனும் பஸ்ஸில் இருந்து இறக்கப்பட்டார். எவ்வாறாயினும் அவர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டார்.

"அவர்கள் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒரு பதிவுப் புத்தகத்தில் எமது பெயர்களை எழுதிக் கொண்டதுடன் எமது கையொப்பங்களை பெற்றுக்கொண்டார்கள். நாங்கள் ஏன் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறி இங்கு வந்தோம் என்று அவர்கள் எங்களைக் கேட்டார்கள். அங்கு வேலை இல்லாதாதால் வேலை எதிர்பார்த்து இங்கு வந்தேன் என நான் விளக்கினேன். எனது மைத்துனர் 23 வருடங்களாக இங்கு இருந்து வருகிறார். பின்பு அவர்கள் எங்களை சிறைக் கூண்டுக்குள் அடைத்தார்கள்.

"அந்த கூடு 2.5 x 3 மீட்டர் அளவானது. நாங்கள் அந்த அறையில் நிற்க மட்டுமே முடிந்தது. கூண்டுக்குள் இருந்த ஆட்களின் தொகை அடிக்கடி மாறிக் கொண்டிருந்தது. ஒரே இரவு 14 பேர் அங்கு இருந்தார்கள். எல்லா ஆட்களுக்கும் கூட்டுக்குள்ளேயே மட்டமான சுவரால் பிரிக்கப்பட்டிருந்த ஒரு சிறிய மலசல கூடம் உள்ளடக்கப்பட்டிருந்தது. யாராவது ஒருவர் மலசல கூடத்தில் நின்றால், அவரது உடலின் மேல் பகுதி வெளியில் தெரியும். மலம் மற்றும் சலம் என்பவற்றின் நாற்றம் கூடு முழுவதும் பரவி இருக்கும். பொலிஸ் எங்களைத் தாக்கவில்லை. அது எமது கட்சி உடனடியாக தலையிட்டதனாலாக இருக்கும். தடுத்து வைக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட சோறு முடை நாற்றம் வீசுவதாகவும் வெறுப்பூட்டுவதாகவும் இருந்தது. நாம் வீட்டில் இருந்து கொண்டுவரும் சாப்பாட்டை நம்பி இருந்தோம். எனது மனைவி மற்றும் மைத்துனர்களும் தினமும் எம்மைப் பார்க்க வருவார்கள்.

"புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மூன்று சந்தர்ப்பங்களில் எம்மை விசாரித்தார்கள். நான் சோ.ச.க. அங்கத்தவர் என்று சொன்னேன். ஏழு நாட்களுக்கு பின்னர் நீதிவானின் அறையில் நீதவான் முன்னிலையில் எங்களை முற்படுத்தினார்கள். அவர்கள் எங்களை நீதிமன்றத்தில் முற்படுத்தவில்லை. எங்களுக்கு எதிராக எதுவிதமான ஆதாரங்களும் கண்டு பிடிக்கப்படாத படியினால் எங்களை விடுதலை செய்வதாக பொலிசார் கூறினர். இந்த அர்த்தம் நாங்கள் தமிழர்களாக இருந்தமையே எங்களுடைய கைதுக்கான போதிய காரணமாக இருந்தது.''

இலங்கையின் அவசரகாலச் சட்டம் விசாரணை இன்றி நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கு அனுமதி வழங்கினாலும், பொலிசார் தடுத்து வைப்பு கட்டளையைப் பெறுவதற்கும் மற்றும் அதன் ஒரு பிரதியை தடுத்து வைக்கப்பட்டவருக்கு வழங்கவும் சட்டரீதியாக கடமைப்பட்டவர்களாவர். "நாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் எம்மை தடுத்து வைப்பதற்கான கட்டளையைப் பொலிசார் எமக்கு காட்டவில்லை. ஏழு நாட்களுக்குப் பின்னர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றிருந்த போதுதான் ஒரு ஆவணத்தை எங்களுக்கு காட்டினார்கள். இதைப்பற்றி பொலிசாரோ அல்லது நீதிமன்றமோ எங்களுக்கு விளங்கப்படுத்தவில்லை. அதன் மேற்பகுதியில் 'பாதுகாப்பு அமைச்சு' என்ற தலைப்பு இருந்தது. கட்சி எங்கள் தொடர்பாக பிரச்சினைகளை உருவாக்கியதால் தான் நாங்கள் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறோம் என்று பொலிசார் எமக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அதை நம்பவில்லை,'' என கமல்தாசன் தெரிவித்தார்.

கமல்தாசனின் மைத்துனர் இளஞ்செழியனும் கருத்துத் தெரிவித்தார்: ''கமலின் அரசியல் கட்சியின் தலையீட்டால் அவர்கள் எங்களை விடுதலை செய்யவில்லை என்று பொலிசார் கூறினர். அவர்கள் சொன்னதை நான் நம்பவே இல்லை. கமலிடம் இருந்து நான் கட்சியைப் பற்றி தெரிந்து கொண்டுள்ளேன். எங்களை விடுதலை செய்ய கட்சி வேலை செய்யும் என்று நம்பினேன். எங்களைப் போல் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பணம் கறந்துகொள்ள சிலர் முயன்றனர். எவ்வாறாயினும், சோ.ச.க. அவ்வாறு செய்யவில்லை. அவர்கள் தமது கொள்கைக்காகப் போராடுகிறார்கள் என நான் புரிந்துகொண்டேன்."

கமல்தாசன் தொடர்ந்தார்: ''கைது செய்யப்பட்ட மற்ற இரு இளைஞைர்களும் எங்களுடனேயே விடுதலை செய்யப்பட்டனர். நான் நினைக்கிறேன் எமது விடுதலைக்காக சோ.ச.க. தலையீடு செய்தபடியால்தான் அவர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள் என்று. கைது செய்யப்பட்ட நேரத்தில் இருந்து எங்களுடைய விடுதலைக்காக சோ.ச.க போராடும் என நான் உறுதியாக நம்பி இருந்தேன். எமது தோழர்களுக்கும் ஏனையவர்களுக்கும் எதிரான பொலிஸ் மற்றும் இராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக, அதேபோல் விடுதலைப் புலிகளினதும் அடக்கு முறைகளுக்கு எதிராக கட்சி முன்னெடுத்த போராட்டம் பற்றிய முன்னைய அனுபவம் எனக்கு உண்டு. கட்சி எமது விடுதலைக்ககாக ஒரு சர்வதேச பிரச்சாரத்தினை நடத்தும் என்று எமக்கு தெரியும். கட்சி எமது விடுதலைக்காக தொழிலாளர் வர்க்கத்துக்கு மத்தியில் போராடும் என்று எமக்குத் தெரியும்.

"நவீன சமூகத்தின் ஒரேயொரு புரட்சிகர வர்க்கம் தொழிலாளர் வர்க்கமே. சரியான திசையமைவு வழங்கப்பட்டால் தொழிலாளர் வர்க்கத்திடம் எங்களை விடுதலை செய்யும் சக்தி இருக்கும். தமிழ் அல்லது சிங்களம் அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி, சகல இன, வகுப்பு மற்றும் தேசியவாதப் பிரிவுகளுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்காக போராடினால் மட்டுமே இதை செய்ய முடியும்.

"அனைத்துலக வாதத்தின் தளத்திலேயே லெனின் ஒக்டோபர் புரட்சிக்கு தலைமை வகித்தார். ஸ்ராலின் தேசியவாதத்துக்கு திரும்பினார். அந்த தலைமை புரட்சியின் மூலம் ஈட்டப்பெற்ற வெற்றிகளைக் கீழறுத்ததுடன் இறுதியில் சோவியத் யூனியனின் பொறிவுக்கு வழிவகுத்தது. ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினின் கீழ் மூன்றாம் அகிலம் காட்டிக் கொடுக்கப்பட்டதற்கு எதிராக அனைத்துலக புரட்சிகர மரபுகளைக் காப்பாற்றும் போராட்டத்தை முன்னெடுத்தார். இன்று இந்த அனைத்துலகப் போராட்டத்தை எமது கட்சி முன்னெடுக்கிறது.''

யுத்தத்தின் கீழ் வாழ்க்கை

1998ல் வன்னியில் புலிகளால் கட்சியின் நான்கு அங்கத்தவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக சோ.ச.க முன்னெடுத்த போராட்ட அனுபவங்களின் பின்புதான், தான் கட்சியில் இணைய முடிவு எடுத்ததாக கமல்தாசன் கூறினார். முடிவில் சோ.ச.க வின் அனைத்துலகப் பிரச்சாரத்தின் பலம் காரணமாக புலிகள் அவர்களை விடுதலை செய்யத் தள்ளப்பட்டனர். அப்பொழுது அவர் வன்னியில் இருந்தார். "நான் 1978 ஆகஸ்ட்டில் பிறந்தேன். எனது முழு வாழ்க்கையும் யுத்த நிலமையின் கீழ் செலவழிந்து விட்டது. எனது தந்தை [தற்பொழுது நீர்கொழும்பில் கமல்தாசனுடன் வசித்து வருகிறார்] திருகோணமலை துறைமுக ஆணைக்குழுவில் பணியாற்றினார்."

இந்தச் சமயத்தில் கமல்தாசனின் தந்தையும் கலந்துரையாடலில் இணைந்து கொண்டார்: ''ஆம், நான் கொழும்பு, காலி மற்றும் திருகோணமலையிலும் பணியாற்றினேன். நான் இலங்கையின் எல்லாப் பெரிய துறைமுகங்களிலும் பணியாற்றியுள்ளேன். லங்கா சமசமாஜக் கட்சியின் துறைமுக ஊழியர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கியமான தொழிலாளர் போராட்டங்களில் நாம் போராடினோம். அந்த நேரத்தில் சமசமாஜக் கட்சி சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளுக்கும் அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நின்றது. ஆனால் 1964ல் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தில் சமசமாஜ கட்சித் தலைவர் என்.எம். பெரேரா நிதி அமைச்சர் ஆகியதோடு அவர்கள் அந்த போராட்டத்தை கைவிட்டுவிட்டனர்.

கமல்தாசன் தொடர்ந்தார்: ''1983 ஜூலையில் தமிழர் எதிர்ப்பு படுகொலைகள் நடந்த போது எமது குடும்பம் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகருக்கு இடம் பெயர்ந்தது. ஆனால், வழி எங்கும் பிரச்சினை இருந்ததால் நாங்கள் கிளிநொச்சிக்கு திரும்பினோம். குறுகிய காலத்துக்கு பின்பு காரைநகருக்கு சென்றோம். எனது தந்தையர் வேலையில் இருந்து ஓய்வு பெறும்வரை திருகோணமலையிலேயே தங்கியிருந்தார். காரைநகரில் வாழ்வது சாத்தியப்படாததால் மீண்டும் நாங்கள் கிளிநொச்சிக்குச் சென்றோம். அங்கும் நாங்கள் நீண்டகாலம் தங்க முடியாத நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள வட்டுக்கோட்டைக்கு இடம் மாறினோம். இந்தப் பிரதேசத்தை இந்திய இராணுவம் 1987 இல் ஆக்கிரமித்தபோது நாங்கள் காரைநகருக்கு திரும்பினோம்.

உண்மையிலேயே நாங்கள் அடிக்கடி இடம்பெயர்ந்து கொண்டிருந்தோம் -- வட்டுக்கோட்டை, கிளிநொச்சி, பூநகரி மற்றும் பல பிரதேசங்களுக்கு. எங்களுக்கு பொருத்தமன வீடு, கல்வி அல்லது கெளரவமான தொழில் வாய்ப்புக்கள் சாத்தியப்படவில்லை. ஷெல் சத்தம், துப்பாக்கிச் சத்தம் மற்றும் தாழப்பறக்கும் யுத்த விமானங்களில் இருந்து போடப்படும் வெறுக்கத்தக்க குண்டுகளின் சத்தம் போன்றவை எமது இளமை வாழ்க்கையின் பின்னணி இசையாகின. நான் அறிந்த பலர் அல்லது உறவினர்கள் கொல்லப்பட்டனர் அல்லது உடல் உறுப்புக்களை இழந்தனர். பலர் படகின் மூலம் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள். சிலர் ஐரோப்பாவுக்கு அல்லது வேறு நாடுகளுக்கு சென்றடைந்துள்ளார்கள்.

"நான் பல தடவை படசாலைகளை மாற்றியுள்ளேன். நான் காரைநகர் மறை ஞானசம்பந்தர் வித்தியாலயம், திருகோணமலை கோணலிங்கம் வித்தியாலயம், மூளாய் சைவப் பிரகாச வித்தியாலயம், வட்டுக்கோட்டை பிலவத்தை அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, வட்டுக்கோட்டை திருநாவுக்கரசு மகா வித்தியாலயம், கிளிநொச்சி மகா வித்தியாலயம் உட்பட ஏழு பாடசாலைகளில் படித்தேன். ஆனால் எந்த ஒரு பாடசாலையாலும் பொருத்தமான கல்வியை வழங்க முடியாமல் போனது. அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த யுத்தத்தால் எல்லாம் நாசமாக்கப்பட்டன.

"அங்கு வாழ்க்கையை அமைத்துக்கொள்வது சாத்தியமில்லாத காரணத்தினல் நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறினேன். வேலைகள் கிடைப்பது சாத்தியமாகவில்லை. கொழும்பு மற்றும் தெற்குடன் ஒப்பிடும் போது விலைகள் மிகவும் அதிகம். ஆகக் குறைந்து ஒருவருக்கு அன்றாடம் தேவைப்படும் வருமானத்தை கூட ஈட்ட முடியாது. யாழ்ப்பாணத்துக்குள் இராணுவத்தால் சுமத்தப்படும் இறுக்கமான கட்டுப்பாடுகளால் மீன்பிடிக்கும் வாய்ப்பு கிடையாது. வடக்கு மாகாணங்களில் இராணுவச் சட்டம் மிக அடக்குமுறையானது. ஆட்கடத்தல் மற்றும் கொலைகள் அன்றாட சம்பவங்களாகும்."

சோ.ச.க. உறுப்பினர் நடராசா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பரான சிவநாதன் மதிவதனனும், கடந்த வருடம் மார்ச் மாதத்தில் வடக்கில் யாழ்ப்பணக் குடாநாட்டில் உள்ள ஊர்காவற்றுறையையும் புங்குடுதீவையும் இணைக்கும் நீண்ட கடற் பாலத்தில் மோட்டார் சயிக்கிளில் பயணிக்கும் போது காணாமல் போனது பற்றி கமல்தாசன் விளக்கினார். ''இராணுவத்தால் யாரையும் 'காணாமல்' ஆக்க முடிவதோடு தண்டனையில் இருந்து தப்பிக்கவும் முடியும். அதுதான் யாழப்பாண மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவகை சுதந்திரம்,'' என கமல்தாசன் கூறினார்.

"எனது குடும்பத்தினர் 2005ல் என்னை கொழும்புக்கு அனுப்பி அங்கிருந்து வேலை தேடி மத்திய கிழக்குக்கு அனுப்புவதற்கு உதவுவதற்கு முடிவு செய்தனர். நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறி தற்போது இரண்டு வருடங்களும் ஒன்பது மாதங்களும் ஆகின்றன. அவர்களிடம் கைத் தொலைபேசிகள் இருந்த போதும், யாழ்ப்பாணத்தில் இருக்கும் எனது உறவினர்களுடன் தொடர்பு கொள்வது மிகவும் கடினமானதாகும். எல்லா நேரமும் சிக்னல் கிடைக்காது. அங்கேயுள்ள கடினமான சூழ்நிலை காரணமாக அவர்கள் நான் அங்கு வருவதை விரும்பவில்லை. இங்கிருப்பதை விட யாழ்ப்பாணத்தில் இரண்டு, மூன்று மடங்கு விலைவாசி அதிகமாகும். ஆகவே நான் மத்திய கிழக்கில் இருந்து திரும்பியவுடன் ஒரு வேலையை தேடிக்க கொண்டு இங்கு (நீர் கொழும்பில்) தங்குவதற்கு தீர்மானித்தேன்.

"தெற்கிலும் மற்றும் கொழும்பைச் சூழவும் வேலை தேடிக்கொள்வது ஒவ்வொருவருக்கும் பிரச்சினை. எவ்வாறெனினும், இது நிச்சயமாக தமிழ் மக்களுக்கு மிகவும் மோசமான நிலையாகும். ஒருவர் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது அந்த பிரதேசத்தின் கிராம அதிகாரியின் கடிதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஒருவரால் தனது வதிவிடத்தை உறுதிப்படுத்த முடிந்தாலும் கூட, கடிதத்தை பெற்றுக்கொள்ள அவர் கிராம அதிகாரியை திருப்திப்படுத்த வேண்டும். எனக்கு ஒரு படகு கட்டும் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. ஆனால் தமிழர்களுக்கு சொந்தமான படகுகளில் வேலை செய்ய என்னை அனுமதிக்க வேண்டாம் என பொலிசார் அறிவுறுத்தியுள்ளதாக அங்குள்ள உரிமையாளர் தெரிவித்தார். சிங்களவர்களுக்கு சொந்தமான படகுகளை செய்ய மட்டுமே நான் அனுமதிக்கப்பட்டேன். அதற்குப் பின்னர் பொலிசார் அப்பிரதேசத்தில் உள்ள படகுத் தொழிற்சாலைகள் அனைத்தையும் மூடி விட்டார்கள். டசின் கணக்கான சிங்கள தொழிலாளர்களும் தொழிலை இழந்தார்கள். இராணுவ-பொலிஸ் கட்டுப்பாடுகள் எவ்வாறு தமிழ் தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி சிங்களத் தொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதை இது காட்டுகிறது.''

2002 இல் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி ( யூ.என்.பி.) அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கொழும்பு அராசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான ''சமாதான முன்னெடுப்புகள்'' தோல்வி கண்டமையும் மற்றும் மீண்டும் யுத்தத்திற்கு திரும்பியமையும் மக்களை அரசியல் பதிலீடு ஒன்றை எதிர்பார்க்கத் தூண்டியது என கமல்தாசன் தெளிவுபடுத்தினார். 2005 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிடத் தக்க தட்டுக்கள் சோ.ச.க. பக்கம் திரும்பத் தொடங்கினர்.

"2005ல் யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. ஒழுங்கு செய்திருந்த ஜனாதிபதி தேர்தல் கூட்டத்துக்கு எனது அப்பா மற்றும் குடும்ப அங்கத்தவர்களும் வந்திருந்தனர். அக்கூட்டத்தில் தோழர் நந்த விக்கிரமசிங்க உரையாற்றவிருந்தார். கஸ்டமான நிலமைக்குள்ளும் வடக்கு மாகாணத்தில் வன்னி உட்பட்ட பிரதேசங்களில் இருந்து சுமார் 60 பேர் -- ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக-- கூட்டத்திற்கு முன்னரே வருகை தந்திருந்தனர். கூட்டத்தை நாங்கள் நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று அச்சுறுத்தி அந்த மண்டபத்தின் கதவில் புலிகள் போஸ்டர் ஒட்டியிருந்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள எமது தோழர் ஒருவரின் சுருக்க உரையுடன் நாங்கள் கூட்டத்தை நிறுத்தினோம்.

"அந்த 'சமாதான முன்னெடுப்புகள்' தொழிலாளர் வர்க்கத்துக்கானது அல்ல. கொழும்பு அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியே அது. அந்த 'சமாதான முன்னெடுப்புகள்' சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் உழைக்கும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கானது அல்ல. ட்ரான்ஸ்நஷனல் கம்பனிகளின் இலாபத்துக்கு சிறந்த நிலமைகளை உருவாக்கும் என்ற ஆவலில் 'சர்வதேச சமூகம்' அதற்கு அனுசரணையளித்தது. இந்த முன்னெடுப்புகளின் ஊடாக சமாதானம் வரும் என்று பெரும்பாலான மக்கள் நினைத்தார்கள்.

"புலிகளின் அரசியல், தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதிலோ அல்லது பாதுகாப்பதிலோ தோல்வி அடைந்துவிட்டது. இராணுவ-பொலிஸ் அரச இயந்திரத்துக்கு முடிவு கட்டி, தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தைக் கட்டி எழுப்புவதன் மூலம் மட்டுமே தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என சோ.ச.க தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது. தமிழ் மற்றும் சிங்கள உழைக்கும் மக்களினது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாங்கள் போராட வேண்டும். இது இலங்கைக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாறாக, அனைத்துலக தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியத்தினால் மட்டுமே வெல்லக்கூடியதாகும். எங்களுக்கு ஆதாரவாக WSWS க்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் இந்த அனைத்துலக ஐக்கியத்தின் பலத்தையே காட்டுகின்றது'' என்று கமலதாசன் குறிப்பிட்டார்.