World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US vice-presidential debate: A window on the right-wing character of an Obama-Biden administration

அமெரிக்கத் துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் விவாதம்: ஒபாமா-பிடென் நிர்வாகத்தின் வலதுசாரித் தன்மை பற்றிய ஒரு பார்வை

By Patrick Martin
4 October 2008

Use this version to print | Send this link by email | Email the author

வியாழன் இரவு நடைபெற்ற செய்தி ஊடகத்தின் பெரும் பரபரப்பிற்கு உட்படுத்தப்பட்ட துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் விவாதம் இத்தகைய மோதலைப் பார்த்த மிகப் பெரிய தொலைக்காட்சி பார்வையாளர்களை கொண்டு இருந்ததது; செப்டம்பர் 26ம் தேதி ஜனாதிபதி வேட்பாளர்கள் விவாதத்தை பார்த்தவர்களைவிட அதிக மக்கள் இதைப் பார்த்தனர். ஆனால் இந்த நிகழ்வில் பெரும் மந்த நிலைக்குப் பின்னர் அமெரிக்காவின் மிகப் பெரிய நிதிய நெருக்கடி பற்றி தீவிர விவாதம் ஒன்றை தவிர்த்ததுதான் குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்தது.

விவாதத்தில் எவர் "வெற்றி பெற்றார்" என்று செய்தி ஊடகத்தின் ஊகம், குடியரசுக் கட்சியின் அலாஸ்கா கவர்னர் சாரா பாலின் ஒரு வர்ணனையாளர் குறிப்பிட்டது போல் "பகிரங்கமான IQ சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில்" தப்பித்தார என்பது பொருளற்ற வினா ஆகும். இந்த விவாதம் ஜனாதிபதி தேர்தலின் விளைவை மாற்றுவதற்கு ஏதும் செய்யவில்லை; அதில் ஜனநாயகக் கட்சி நிறுத்திவைக்கும் பாரக் ஒபாமா மற்றும் ஜோசப் பிடன் கணிசமான முன்னணியில் உள்ளனர்.

இந்த நிகழ்வு வருங்கால ஒபாமா-பிடென் நிர்வாகத்தின் சில நிகழக்கூடிய செயற்பாடுகள் பற்றிக் கோடிட்டுக் காட்டியது என்று உறுதியாகக் கூறலாம்; அமெரிக்க பெருநிறுவன உயரடுக்கின் நலன்களை உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளில் காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை நிர்வாகம் எப்படிச் செய்யும் என்ற குறிப்பு இருந்தது. அமெரிக்க செனட்டில் 36 ஆண்டுகளாகவும், வாஷிங்டன் நடைமுறையில் நீண்ட காலமாகவும் உறுப்பினராக இருக்கும் பிடென் கடந்த வாரம் ஒபாமா குடியரசுக் கட்சியின் வேட்பாளர் செனட்டர் ஜோன் மக்கெயினுடன் நடத்திய விவாதத்தை விட மிக பகிரங்கமாகவே பேசினார்.

இது குறிப்பாக வெளியுறவுக் கொள்கையில் வெளிப்பட்டது; இதில் பிடென் பல முறையும் மக்கெயினையும் பாலினையும் வலதுபுறத்தில் இருந்து தாக்க முயன்றார். பாக்கிஸ்தானில் அல் கொய்தாவின் இலக்குகள் இராணுவத் தாக்கதல்களுக்கு உட்பட வேண்டும், ஆப்கானிஸ்தானில் கூடுதலான அமெரிக்க துருப்புக்கள் தேவை என்னும் ஒபாமாவின் அழப்பை இவர் வலியுறுத்தினார். இஸ்ரேல்-பாலஸ்தீனிய பூசல் பற்றிய புஷ் நிர்வாகத்தின் கொள்கையை இவர் கண்டித்து வெள்ளை மாளிகையை ஹமாஸ் மற்றும் லெபனிய ஹெஜ்பொல்லா அமைப்புக்கள்மீது மிகவும் மிருதுவான போக்கைக் கொண்டுள்ளதாவும் கூறினார்; இவை இரண்டும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு இலக்குகள் ஆகும்.

நிகழ்ச்சியை நடத்திய PBS இன் Gwn Ifill இன் வினா ஒன்றிற்கு விடையிறுத்த பிடென் வெளிநாடுகளில் அமெரிக்க இராணுவக் குறுக்கீடுகளுக்கு தான் எவ்வாறு நீண்ட காலமாக வாதிட்டு வருவதாக தன்னையே பெருமைப்படுத்திக் கொண்டார்; 1990களின் தொடக்கத்தில் பொஸ்னியா, 1999 சேர்பியா மீது அமெரிக்கா குண்டுவீசியது மற்றும் இப்பொழுது எண்ணெய் வளம் மிகுந்த சூடானில் ஒரு இராணுவ முறையில் மாற்றம் கொண்டுவருவதற்கு டார்பூரை போலிக்காரணமாக பயன்படுத்துவது வரை இதற்கு சான்றுகளாக குறிப்பிட்டார்.

உள்நாட்டுக் கொள்கை பற்றி விவாதம் இரு கட்சிகளும் வோல்ஸ்ட்ரீட் பிணை எடுப்பிற்கு $700 பில்லியன் அளிப்பது பற்றி உடன்பாடு கொண்டுள்ளதை காட்டுகிறது. ஒபாமா, மக்கெயின் மற்றும் பிடென் என்று அனைவரும் பிணை எடுப்பு சட்டத்திற்கு, துணை ஜனாதிபதி விவாதத்திற்கு முந்தைய தினம், வாக்களித்து, பல குறைகூறல்கள், எதிர்குறைகூறல்கள் என்று இருந்தாலும் இரு பிரச்சாரங்களும் பொது நிலைப்பாட்டைப் பகிந்து கொண்டுள்ளனர் என்பதை நிரூபித்தனர்.

பிணை எடுப்பு பற்றிய விவாதம் சுருக்கமாகவும் மேம்போக்காவும்தான் இருந்தது. மக்கெயின் திட்டத்திற்கு வாக்களிந்திருந்தாலும், பாலின் மக்களின் பரந்த எதிர்ப்பிற்கு வண்ணப் பேச்சு கொடுக்கும் வகையில் வோல் ஸ்ட்ரீட்டின் பேராசை, கொள்ளை முறை, ஊழல் நிறைந்த நிதிய மேலாளர்கள் ஆகியவை பற்றி பேசினர்.

பாலினின் வோல் ஸ்ட்ரீட்டை பற்றிய மக்களை திருப்தி செய்யும் உரை மக்கெயின் பிரதிபலிக்கும் "சீர்திருத்தம்" பற்றிய வலியுறுத்தல்களுடன் இணைந்தது; ஆனால் அச்சொல்லை அவர் பயன்படுத்திய விதம் பொருளுரை இன்றி வெற்றுத்தனமாகத்தான் இருந்தது. "மாற்றம்" பற்றி ஒபாமா அழைப்பு விடுத்ததைத்தான் அது ஒத்திருந்தது; அது பிரச்சாரத்தின் போக்கில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியை மாற்றுவது என்பதைத் தவிர வேறு எந்தப் பொருளையும் கொண்டிருக்கவில்லை என ஆகிவிட்டது.

தன்னுடைய பங்கிற்கு பிடென் கடுமையான வணிக எதிர்ப்பு அலங்காரப் பேச்சை தவிர்த்து பிணை எடுப்புச் சட்டத்திற்கு தீவிர ஆதரவையும் கொடுத்து, ஜனநாயகக் கட்சியும் பாரக் ஒபாமாவும் அதன் விதிகளுக்கு கணிசமான பொருளுரையை தந்துள்ளதையும் வலியுறுத்தினார். தன்னுடைய நிலைப்பாட்டிற்கு அப்பால் சென்று வரவிருக்கும் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் தேர்தல் காரணங்களுக்காக கட்சி இப்பொழுது சில மக்களை திருப்தி செய்யும் வகையில் கருத்துக்களை கூறினாலும், செல்வந்தர்களின் சொத்துக்களையும், இலாபங்களையும் பாதுகாக்கும் என்று வலியுறுத்தி அடையாளம் காட்டிப் பேசினார்.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் நிற்பது செல்வந்தர்களுடைய நலனுக்கு விரோதப் போக்கு உடையது என்ற கருத்தை அவர் இருமுறை நிராகரித்தார். ஆண்டிற்கு $250,000 க்கு அதிகமான வருமானம் கொண்டுள்ளவர்களின் வரிகள் உயர்த்தப்படும் என்னும் ஒபாமாவின் திட்டம் "வர்க்கப் போரா" என்று பாலின் வினாவியதற்கு, பிடென் இது "நியாய உணர்வு அடைப்பிடையில்தான்" கூறப்பட்டது என இகழ்வுடன் பதில் அளித்தார்.

இக்கருத்தைத் தொடர்ந்த பாலின், "இதில் உள்ள கொள்கைகள் சிலவற்றுடன் நான் உங்களுடன் உடன்பாடு காணவில்லை; அதுவும் செல்வப் பங்கீட்டுக் கொள்கை என்று நீங்கள் கூறுவதுடன்" என்று அறிவித்தார்.

செல்வ பங்கீட்டுக் கொள்கையுடன் தன்னைத் தொடர்புபடுத்தும் முயற்சி பற்றி பரபரப்பு அடைந்ததுபோல் காட்டிக் கொண்ட பிடென், விவாதத்தில் தன்னுடைய மிகத் தெளிவற்ற விடையை கூறினார்: "க்வென், எனக்கு எங்கு தொடங்குவது என்று புரியவில்லை. என்னுடைய வீட்டிற்கு அருகே இருக்கும் பகுதி, Scranton, Claymont, Wilmington, நான் வளர்ந்த இடங்களில் மறு பகிர்வு என்று கூறவில்லை --எக்சன் மொபிலுக்கு இந்த ஆண்டு இன்னும் ஒரு $4 பில்லியன் வரிச்சலுகை கொடுக்கப்படாமல் அப்பணத்தை மத்தியதர வர்க்கத்திற்கு அவர்கள் குழந்தைகள் கல்லூரிக்கு செல்ல வசதியளிக்கக் கொடுப்பது என்பது ஜோன் கூறியுள்ளது போல் மறுபங்கீடு அல்ல. நாங்கள் அதை முதல் இடத்தில் உள்ள நியாயமான செயல் எனக் கூறுகிறோம்."

பாலின் சில சமயம் தன்னுடைய விவாதத்தில் தொழிலாள வர்க்கம் என்று குறிப்பிட்டிருக்கையில், பிடென் அச் சொல்லை தவிர்த்து எப்பொழுதுமே, "மத்தியதர வர்க்கம்" என்றுதான் குறிப்பிட்டார்.

இரு வேட்பாளர்களும் தொழிலாள வர்க்கத்தைப் பற்றி முற்றிலும் ஒரேமாதிரியான கருத்தைத் தான், பாலின் கூறிய வகையில் "Joe Sixpack" என்றனர்; அது அமெரிக்கத் தொழிலாளரை சமூக, அரசியல் தன்மைகளில் பிற்போக்கானவர் என்று மட்டமான முறையில் வரையறுப்பது ஆகும்; அதாவது சலுகை பெற்றுள்ள உயரடுக்கு மற்றும் அதன் அரசியல் மற்றும் செய்தி ஊடக எடுபிடிகளால் தொழிலாளர் அவ்வாறு கருதப்படுவார்.

இரு வேட்பாளர்களும் சாதாரண தொழிலாளர்கள் பற்றிய அடையாளங்களை கூறும் சொற்கள் முறை ஒரு புறம் இருக்க, பாலின், பிடென் இருவரும் அமெரிக்க மக்களின் உயர்மட்ட அடுக்கில் இருப்பவர்கள்; இவர்களுடைய குடும்ப வருமானங்கள் $230,000 - $250,000 ஆண்டிற்கு என முறையே உள்ளது. இவர்களுடைய நிதிய நிலைமை அவர்களுடைய ஜனாதிபதி வேட்பாளர்களுடன் ஒப்பிடுகையில் சுமார் என்றுதான் கூறப்பட முடியும். பாரக் ஒபாமா இப்பொழுது ஒரு பல மில்லியன் உரிமையாளர்; ஜோன் மக்கெயின் $200 மில்லியனுக்கும் மேலான சொத்துக்களை உடைய ஒரு பெரும் செல்வந்த பெண்மணியை திருமணம் செய்து கொண்டவர்.

துணை ஜனாதிபதி விவாதத்தின் மிகக் குறிப்பிட்டத்தக்க அம்சங்களில் ஒன்று எது விவாதிக்கப்பட்டது என்பது அல்ல -- பாலினின் தீவிர வலது கருத்துக்கள், கிறிஸ்துவ அடிப்படைவாதத்தில் தோய்ந்துள்ள நற்செய்தி வகைக் கருத்துக்களை தளமாகக் கொண்டவை. செய்தி ஊடகத் தகவல்கள்படி, பாலின் மனிதர்களும் டினோசரும் பூமியை 6,000 ஆண்டுகளுக்கு முன்பு பகிர்ந்து கொண்டனர் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் (பைபிள் முறையில் உலகம் தோற்றுவிக்கப்பட்டதை ஏற்கும் வகையில்); மேலும் பொதுப்பள்ளிகளில் உலகம் தோற்றுவிக்கப்பட்ட கருத்து பற்றி கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வாதிட்டுள்ளார். கற்பழிப்பு, மிக நெருக்கமான உறவினர்களுடன் தொடர்பு ஆகியவற்றால் கரு ஏற்பட்டால் அது கூட கலைக்கப்படக் கூடாது என்று அவர் எதிர்க்கிறார்; அதேபோல் திருச்சபை, அரசாங்கம் இவை தனித்தனியேதான் இயங்க வேண்டும் என்ற கருத்தையும் எதிர்க்கிறார். போருக்குச் செல்லுதல், குழாய்திட்டம் கட்டமைத்தல் போன்ற முற்றிலும் வேறுபட்ட செயற்பாடுகளுக்கு கூட சமயக் கருத்துக்களின் இணக்கம் என்பது அரசியல் முடிவுகளுக்கு தேவை என்று அவர் கூறுகிறார்.

இப்பகுதியில் Ifill எந்த விசாரணை பற்றியும் அக்கறை காட்டவில்லை; ஓரின உடன்வாழ்வோருக்கு குடிமை உரிமைகள் பற்றிய ஒரு வினா மட்டும் கேட்டார்; இதற்கு பாலின் சகிப்புத் தன்மை வேண்டும் என்று விடையிறுத்தார்; அந்த நிலைப்பாடு குடியரசுக் கட்சித் திட்டத்துடன் அடிப்படையில் மாறுபட்டது ஆகும். ஓரின உரிமை பற்றிய பாலின் உடன்பட்ட கருத்துக்கள் என்பதை பிடென் உடனே ஏற்று வலதின் சமய உரிமைகளை விளக்கும் பிற "சமூக பிரச்சினைகள்" பற்றி எந்த விவாதத்தையும் தொடரவில்லை.