World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிElectoral debacle for conservatives in Bavaria பவேரியாவில் பழைமைவாதிகளுக்கு பாரிய தேர்தல் தோல்வி By Peter Schwarz பவேரிய மாநிலத்தில் கடந்த வாரம் நடந்த தேர்தலில் கடுமையான இழப்புகளை ஆளும் கிறிஸ்தவ சமூக யூனியன் (CSU) எதிர்பார்த்திருந்தது. ஞாயிறு மாலை அறிவிக்கப்பட்ட முடிவுகள் கட்சி மற்றும் தேர்தல் கணிப்பாளர்களின் மோசமான எதிர்பார்ப்புக்களையும் விட அதிகமாக இருந்தது. ஐந்த ஆண்டுகளுக்கு முன்பு கடந்த மாநிலத் தேர்தல் நடைபெற்றதில், CSU மொத்த வாக்கில் 60.7 சதவீதத்தை கைப்பற்றியபோதும், இம்முறை அது 43.4 சதவீதத்தை மட்டுமே பெற முடிந்தது. இத்தேர்தலில் குறைந்த அளவு வாக்காளர் வாக்குப் பதிவைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இதன் பொருள் கடந்த 46 ஆண்டுகளாக பவேரியாவை ஆண்டு வந்த கட்சி இப்பொழுது மொத்த வாக்காளர்களில் 25 சதவீதத்தினரின் ஆதரவைத்தான் கொண்டுள்ளது என்பதாகும். ஒரு மாநிலத் தேர்தலில் இந்த ஆதரவு இழப்பிற்கு ஒப்புமை காண்பதற்கு ஜேர்மனிய வரலாற்றில் நீண்ட காலம் பின்னோக்கிச் செல்லவேண்டும். 1950ம் ஆண்டு CSU இதைவிட மோசமான இழப்புக்களை கண்டது; ஆனால் அதற்குக் காரணம் பழைமைவாத பவேரியக் கட்சி அதன் ஆதரவாளர்கள் பலரையும் இழுத்துக் கொள்ள முடிந்தது. CSU வின் சகோதரக் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்(CDU), ஒப்புமையில் வெட்ககரமான தோல்வியை பேர்லின் மாநிலத் தேர்தல் 2001ல் சந்தித்தது; அப்பொழுது அது நகர வங்கி ஊழலை ஒட்டி அதன் வாக்குத்தளத்தில் 17 சதவீதத்தை இழந்தது. இந்த பவேரியத் தேர்தல் பற்றி வர்ணனையாளர்கள் மிக அதிகமாகப் பயன்படுத்தும் சொற்றொடர்கள் "படுதோல்வி", "பேரழிவு", "நில அதிர்வு" மற்றும் "சிதறி உடைந்த நிலை" ஆகியவையாம். தேர்தலில் மற்றொரு குறிப்பிடத்தக்க விளைவு சமூக ஜனநாயகக் கட்சி (SPD), CSU வின் சரிவில் இருந்து இலாபம் அடைய முடியாததுதான். இக்கட்சி மொத்தத்தில் 18.6 சதவீத வாக்குகளை மட்டுமே அடைய முடிந்தது; இது 2003ல் அது பெற்றதைவிட குறைவு ஆகும்; அதுவோ கட்சியின் மிக மோசமான முடிவாக இருந்தது. சமீபத்தில் பிரங்க் வால்ட்ர் ஸ்ரைன்மயர் மற்றும் பிரன்ஸ் முன்டபெரிங்கை சமூக ஜனநாயகக் கட்சி தேசிய தலைமைக்கு உயர்த்தியமை சமூக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக வாக்குகளைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை பவேரியாவில் தோல்வியை கண்டது. இத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சுயாதீன வாக்களிப்பாளர்களாவர் (Free Voters), இவர்கள் முதல் தடவையாக மாநில பாராளுமன்றத்தில் 10,2 வீத வாக்குகளுடன் நுழைந்துள்ளனர். தடையற்ற சந்தைக்கு ஆதரவு கொடுக்கும் தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) 14 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் பாராளுமன்றத்தில் 8 சதவீத வாக்குடன் நுழைகிறது; மற்றும் பசுமைக் கட்சியினர், முந்தைய எண்ணிக்கையைவிட சற்று கூடுதலாக அதிகமாக 9.4 சதவீதம் பெற்றுள்ளது. முதல் தடவையாக மாநிலத்தில் வேட்பாளர்களை நிறுத்திய இடது கட்சி 4.3 சதவீத வாக்குகளைத்தான் பெற்றது--மாநிலப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்திற்கு தேவையான 5 சதவீதத்தையும் விட இது குறைவு ஆகும். 2003 ல் இருந்து மாநிலத்தில் மூன்றில் இரு பெரும்பான்மையுடன் ஆட்சி செய்துவந்த CSU இப்பொழுது மாநில பாராளுமன்றத்தில் அதன் மொத்த பெரும்பான்மையை இழந்து, ஒரு கூட்டரசு பங்காளியை நம்பியிருக்கும் நிலையில் உள்ளது. மற்ற நான்கு கட்சிகளின் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படுதலும் சாத்தியம்தான்; ஆனால் FDP ஏற்கனவே CSU உடன் தான் கூட்டணி அமைக்க தயார் என்று அடையாளம் காட்டியுள்ளது. Free Voters உம் CSU உடன் கூட்டணியில் சேரத் தயாராக உள்ளனர்.இதுவரை Free Voters உள்ளூர்மட்டத்தில்தான் தீவிரமாக இருந்து வந்தனர். கடந்த மாநிலத் தேர்தலில் அவர்கள் வேட்பாளர்களை நிறுத்திவைத்து 4 சதவீதம் மட்டுமே பெற்றனர். இந்த அமைப்பில் கிட்டத்தட்ட 40,000 உறுப்பினர்கள் உள்ளனர்; இது பலமுறையும் "பழைமைவாத எதிர்ப்பு இயக்கம்" என்று விளக்கப்படுகிறது. இதன் தலைவர்கள் பலர் முன்னாள் CSU உறுப்பினர்கள் ஆவர்; இவர்கள் CSU கட்சிக் அமைப்புடன் மரபார்ந்த முறையில் உள்ளூர் அரசியலில் மேலாதிக்கம் செலுத்திய வகையில் மோதலுக்கு உட்பட்டனர். 2008 வசந்தகால உள்ளூராட்சி தேர்தலில் Free Voters கிட்டத்தட்ட 20 சதவீத வாக்குகளை பெற்றனர். அப்பொழுதில் இருந்து பவேரியாவில் இக்கட்சி 71 மாநில ஆளுனர்கள் மற்றும் 800 நகரசபை தலைவர்களை கொண்டுள்ளது. ஒரு கட்சி என்பதை விட தேர்தல் கூட்டு என்ற வகையில் Free Voters இடம் ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட திட்டம் ஏதும் இல்லை. ஆனால் பல பிரச்சினைகளில் அவர்கள் CSU க்கு நெருக்கமாக உள்ளனர். அமைப்பின் தலைவரான ஹைபேர்ட் ஐவாக்னர் ஒரு சிறு விவசாயி ஆவார்: தன்னை "சாதாரண மக்கள்", விவசாயிகளின் பிரதிநிதியாக கருதுகிறார். பவேரியாவில் FDP என்பது கூட்டாட்சி FDP தலைவரும் வலதுசாரியுமான ஹீடோ வெஸ்டர்வெல்லவின் ஆதரவாளரான மார்ட்டின் ஸைல் ஆல் வழிநடத்தப்படுகிறது. 1980 இல் ஸைல் வெஸ்டர்வெல்லயுடன் தேசிய மட்டத்தில் இணைந்து பணியாற்றி FDP யின் இளைஞர்கள் பிரிவை அமைத்தார். எனவே இதில் முக்கியமாக வலதுசாரி, பிற்போக்குத்தன கட்சிகள்தாம் CSU வின் சரிவில் இருந்து ஆதாயம் அடைந்துள்ளன. பல சிறு பழைமைவாத கட்சிகளும் தீவிர வலது குழுக்களும் சில வாக்குகளை பெற முடிந்தது. இது மொத்தத்தில் கிட்டத்தட்ட 6 சதவீதம் ஆகும். அதே நேரத்தில் இடது கட்சி சமூக ஜனநாயகக் கட்சி இழந்த மொத்தத்தைவிட 3 சதவீதம் அதிகமான புள்ளிகளை பெற்றது. 9.3 இலட்சம் வாக்காளர்களில் 3.9 இலட்சம் வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வரவே இல்லை; ஏனெனில் தங்கள் நலன்களை எந்த வேட்பாளரும் பிரதிபலித்ததாக அவர்கள் உணரவில்லை. இந்த எண்ணிக்கை 2003ல் வந்த குறைந்த வாக்காளர்கள் எண்ணிக்கையை ஒத்துத்தான் உள்ளது. CSU இன் படுதோல்வியின் வேர்கள் CSU தேர்தல் படுதோல்வி பற்றிய பெரும்பாலான பகுப்பாய்வுகள் முற்றிலும் மேம்போக்கானவை. CSU வின் சரிவிற்கு அடிக்கடி கூறப்படும் காரணங்களில் முன்னாள் மாநில பிரதமரும் CSU தலைவருமான எட்முண்ட் ஸ்ரொய்பர் ஜேர்மனிய தேசிய மந்திரிசபையில் 2005ல் சேருவதில் தயக்கம் காட்டுவதும் உள்ளது. மற்றும் அதிக செலவு கொடுக்கும் முனிச் நகரத்தை விமான நிலையத்துடன் இணைக்கும் அதிவேக இரயில் பாதையை கட்டுவதில் அவர் அடைந்த தோல்வி; ஸ்ரொபருக்குப் பின் பதவிக்கு வந்த குந்தர் பெக்ஸ்ரைன் மற்றும் எர்வின் ஹ்யூபரின் கிராமப்புறத் தன்மை; பள்ளி நேரங்கள் குறைக்கப்பட்டது மற்றும் ஆசிரியர்கள், செலவினங்கள் குறைக்கப்பட்டது; பவேரிய சமூகத்தின் பன்முகப்படுத்தப்பட்ட சிக்கல் வாய்ந்த அமைப்பு பல கட்சிகளில் பிரதிபலிக்க வேண்டும் ஆகியவை காரணமாக காட்டப்படுகின்றன.இக்காரணிகளில் பல முக்கிய பங்கைக் வகித்திருந்தாலும், இவை CSU முடிவிற்கு முக்கிய காரணம் அல்ல. பவேரியத் தேர்தலில் அதிகம் வெளிப்பட்டுள்ளது பரந்துபட்ட மக்களுக்கும் முழு அரசியல் மேல்கட்டுமானத்திற்கும் இடையே இருக்கும் ஆழ்ந்த பிளவு ஆகும். இலட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் இப்பிரச்சினைகளுக்கு கட்சிகள் எதுவும் விடைகளை கொண்டிருக்கவே இல்லை. 1929க்கு பின்னர் மிகப் பெரிய சர்வதேச நிதிய நெருக்கடிப் பின்னணியில் இந்தத் தேர்தல் நடைபெற்றது. ஐரோப்பா மற்றும் ஜேர்மனியை சூழும் உலக மந்தநிலை என்பது பெருகிய முறையில் தவிர்க்க முடியாதது எனக் கருதப்படுகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான BayernLB வங்கி அமெரிக்க குறைந்த பிணையுள்ள அடைமானச் சந்தையில் முதலீடு செய்த வகையில் பல பில்லியன்களை இழந்துள்ளது; இதற்கு அரசாங்கக் கருவூலம் பொறுப்பேற்றுள்ளது. ஜேர்மனியின் வலுவான பொருளாதார பகுதிகளில் ஒன்றாகத்தான் பவேரியா இன்னமும் கருதப்படுகிறது; ஒப்புமையில் இங்கு குறைந்த வேலையின்மைதான் என்றாலும் வேலைகள், ஊதியங்கள், சமூக நலன்கள் ஆகியவற்றில் தாக்குதல்கள் என்பவை முன்னரே தொடங்கி ஐயத்திற்கு இடமின்றி மந்தநிலையின் பாதிப்பு வரும்போது இன்னும் தீவிரப்படும். தேர்தலில் பங்கு பெற்ற இக்கட்சிகள் எவையும் இப்பிரச்சினைகளுக்கு விடையைக் கொண்டிருக்கவில்லை; அவை தேர்தல் பிரச்சாரத்தின்போது இவற்றை பற்றி விவாதிக்கக் கூட இல்லை. நீண்ட காலம் முன்பு இழந்துவிட்ட தன்னுடைய பழைய புகழைத்தான் CSU நம்பியுள்ளது; பவேரியாவில் வலிமை இருப்பது பற்றி அழுத்தமான கருத்துக்களை கொண்டிருந்தது. மிகவும் இகழப்பட்ட 2010 செயற்பட்டியலின் கொள்கையை இயற்றியது என்ற முறையில் பெரும் கூட்டணியின் (SPD-CDU-CSU) அங்கத்தவர் என்ற முறையிலும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) பெருகியுள்ள சமூக துன்பங்களுக்கு முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளது. தன்னுடைய பங்கிற்கு இடது கட்சி 1970களின் சீர்திருத்த கொள்கைகளுக்கு திரும்பிபோக நினைக்கின்றது; ஆனால் அதிக நம்பிக்கையை ஊக்குவிக்க முடியவில்லை. மக்களின் பரந்த பிரிவினர் நிலைமை இன்னும் முற்போக்கான நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறது என்பது தெரியும். இடது கட்சி ஏமாற்றம் அடைந்துள்ள தொழிற்சங்க மற்றும் சமூக ஜனநாயக கட்சி அலுவலர்களை சார்ந்து, வெளிப்படையான வர்க்கப் போராட்டத்தை தவிர்க்க முயல்கிறது. இந்தச் சூழலில் வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் வாக்களிக்காது இருக்கின்றனர்; ஜேர்மனியின் "மக்கள் கட்சிகள்" என்று கூறப்படுபவை சிதைகின்றன; வலதுசாரி சக்திகள் மத்தியதர வர்க்க அடுக்குகளின் அதிருப்தியை பயன்படுத்தப் பார்க்கின்றன. இத்தகைய வளர்ச்சி இன்னும் தெளிவான முறையில் அண்மையில் இருக்கும் ஆஸ்திரியாவில் காணப்படுகிறது; அங்கு கூட்டாட்சி தேர்தல்கள் பவேரியத் தேர்தல்கள் நடந்த நேரத்திலேயே நடைபெற்றன. ஆஸ்திரியாவில் சமூக ஜனநாயக கட்சியினர் (SPO), மக்கள் கட்சி (OVP) ஆகியவை தேர்தல் சங்கடங்களை சந்தித்து இணைந்து மொத்தத்தில் 55 சதவீதத்தைத்தான் பெற்றன. இரு தீவிர வலது கட்சிகளான சுதந்திர கட்சி (Freedom Party), ஜோர்க் ஹெடரின் BZO ஆகியவை மொத்தத்தில் கிட்டத்தட்ட 30 சதவீத வாக்குகளை பெற்றன. மத்திய அரசாங்கத்திற்கு இதன் விளைவுகள் பவேரியத் தேர்தல்களில் தோல்வி என்பது CSU வை அதிர வைத்தது என்பது மட்டும் இல்லாமல், அதன் கூட்டாட்சி சகோதரகட்சியான கிறிஸ்தவ ஜனநாயக யூனியனையும் (CDU) அதிர வைத்துள்ளது. மரபார்ந்த முறையில் CSU விற்கான தேர்தல் ஆதரவு தேசிய மட்டத்தில் பழைமைவாத முகாமான CDU மற்றும் CSU இற்கான தேர்தல் நம்பிக்கையாக கருதப்படும். 2005 கூட்டாட்சி தேர்தலில் CSU ஜேர்மனியில் அதிக மக்கள் இருக்கும் மாநிலமான பவேரியாவில் 49 சதவீத வாக்குகளை பெற்றது. ஜேர்மனியின் மற்ற பகுதிகளில் அங்கேலா மேர்க்கெலின் CDU ஒன்றுதான் 28 சதவீத வாக்குகளை பெற முடிந்தது. சமீபத்திய CSU தோல்வி 2009 கூட்டாட்சித் தேர்தலிலும் நேரிட்டால் CDU/CSU கூட்டணிக்கு FDP யுடன் ஆள்வதற்கு தேவையான கூட்டணிக்கு முக்கியமான 40 சதவீத வாக்குகளை பெறுவது கடினம் ஆகும். CSU தேர்தல் சங்கடம் பகிரங்கமான CDU/CSU நெருக்கடியை அம்பலப்படுத்தியுள்ளது; இதுவரை அவை ஒப்புமையில் அதிபர் மற்றும் CDU தலைவர் அங்கேலா மேர்க்கெலின் அதிக புகழினால் மறைக்கப்பட்டிருந்தது.முன்பு அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரின் தலைமையில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சி (SPD) க்கு நடந்ததை போலவே, CDU/CSU அரசாங்கத்தின் தலைவராக மேர்க்கெல் பதவி ஏற்றதில் இருந்தே மாநிலத் தேர்தல்களில் தொடர்ந்து இழப்புக்களை சந்தித்து வருகிறது. பவேரியத் தேர்தல் யூனியன் இழப்புக்களை அடந்துள்ள தொடர்ச்சியான பத்தாவது தேர்தல் ஆகும். முதலில் இத்தகைய இழப்புக்கள் 2 அல்லது 3 சதவீதம்தான் இருந்தன; ஆனால் 2007ல் இருந்து இழப்புக்கள் கணிசமாகப் பெருகிவிட்டன. Bremen இல் 4 சதவீதம், ஹெஸ்ஸவில் 12 சதவீதம், லோயர் சாக்சனியில் 6 சதவீதம், ஹாம்பர்க்கில் 5 சதவீதம், இப்பொழுது பவேரியாவில் 17 சதவீதம். இதேபோல் அதிக இழப்புக்கள் தவிர்க்க முடியாமல் வரவிருக்கும் சார்லாந்த், தூரின்கியா மானிலத் தேர்தல்களில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. Andrea Ypslianti யின் தலைமையில் இருக்கும் சமூக ஜனநாயகக் கட்சி ஹெஸ்ஸ மாநிலத்தில் அரசாங்க மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றால், பின் பெரும் கூட்டணி பாராளுமன்றத்தின் மேல் மன்றத்தல் அதன் பெரும்பான்மையைக்கூட இழக்க நேரிடும். இதுவரை யூனியனின் மேர்க்கெலை குறைகூறுபவர்கள் நேரடித் தாக்குதலை தவிர்த்துள்ளனர்; ஆனால் இப்பொழுது பெரும் சாடுதலுக்கு அதிபர் உட்படுத்தப்பட்டுள்ளார். குறிப்பாக இதுவரை CSU இன் கொள்கைகள் இயற்றுவதில் மத்தியதானமாக இருந்த யூனியனின் புதிய தாராளவாத, வலதுசாரிப் பிரிவு இப்பொழுது தாக்குதலில் இறங்கிவிட்டது. CSU சிறுவணிகத் தொழிற்சங்கத்தின் தலைவரான ஹன்ஸ் மைக்கல்பார்க் பேர்லினில் உள்ள பெரும் கூட்டணியின் கொள்கைகள்தான் இவருடைய கட்சி பவேரியாவில் தோற்பதற்குக் காரணம் என்று கூறியுள்ளார். "CDU அதிக அளவில் சமூக ஜனநாயகத் தன்மை பெற்று, யூனியனின் (CSU,CDU) நம்பகத் தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது" என்று அவர் குறைகூறினார். "இதன் உயர்ந்த வரிவிதிப்புக் கொள்கை மற்றும் சொத்துக்களை குடும்பவழியை பெறும்போது கொடுக்க வேண்டிய வரிவகை ஆகியவை மத்தியதர வர்க்கத்தை யூனியன் கட்சிகளில் இருந்து வெளியே அகற்றிவிட்டது." தெளிவான திசை மாற்றம் தேவை என்று மைக்கேல்பாக் கூறியுள்ளார். மேலும், "சமூக ஜனநாயகக் கட்சி உடன் கொஞ்சிப் பேசுவதை அதிபர் நிறுத்த வேண்டும் என்றும் ஒரு தெளிவான வளர்ச்சி, வேலைப் பெருக்கம் ஆகியவற்றை நாட வேண்டும்" என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.இதற்கிடையில் யூனியனில் இருந்து உதாரணமாக முன்னாள் CDU பொருளாதார செய்தித் தொடர்பாளர் பிரீட்றிஜ் மெயர்ட்ஸ் தலைமையில் ஒரு வலதுசாரிப் பிளவு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வலதுசாரிகள் CSU வின் சங்கடத்தால் வலுவிழக்கின்றனர். ஆனால் பெரும் கூட்டணிக்கு சமூக ஜனநாயக கட்சியின் அடிமைத்தனமான ஆதரவும், ஒரு தீவிர இடது மாற்றீடு இல்லாத நிலையும் இத்தகைய சக்திகளுக்கு திரிப்புகளை செய்ய தேவையான இடத்தையும் மற்றும் மறு குழுவாக்கம் செய்யவும் இடமளிக்கின்றன. இத்தாலி மற்றும் ஆஸ்திரிய உதாரணங்கள் எச்சரிக்கையாக இருக்கின்றன. இரு நாடுகளிலும் ஒரு மைய இடது அரசாங்கம் (இத்தாலியில்) மற்றும் ஒரு பெரும் கூட்டணி (ஆஸ்திரியாவில்) தீவிர வலது சக்திகள் மறு குழுவாக அமைத்துக் கொண்டு அதிக ஆதரவுடன் பதவிக்கு வருவதற்கு வழிவகுத்தன. |