World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

Washington imposes sanctions on Bolivia

பொலிவியா மீது வாஷிங்டன் தடைகள் விதிக்கிறது

By Rafael Azul
1 October 2008

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்கத் தூதரை வெளியேற்றியதுடன், பொலிவியாவில் அமெரிக்க திட்டங்களையும் நிறுத்த உத்திரவிட்ட அந்நாட்டின் அதிபர் இவொ மொரலெஸின் முடிவிற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக புஷ் நிர்வாகம் பொலிவியா மீது புதிய தடைகளை விதித்துள்ளது.

பொலிவியாவின் கிழக்கிலுள்ள "அரை நிலா" பிராந்தியத்தில் குவிந்துள்ள கணிசமான எரிசக்தி வளங்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சுயாட்சிக்கு நெருக்குதல் அளித்து வந்த செல்வவளம் கொழிக்கும் நில உரிமையாளர்களின் மேற்தட்டுகள் வசிக்கும் அப்பிராந்தியத்தின் ஆளும் மேற்தட்டால் நடத்தப்பட்ட "உள்ளாட்டு ஆட்சிகவிழ்ப்பு" என்று கூறப்பட்ட திட்டத்திற்கு அமெரிக்கா திரைமறைவிலிருந்து ஆதரவளித்ததற்கு பிரதிபலிப்பாக மொரலெஸின் இந்த நடவடிக்கைகள் வெளியாயின.

இம்மாத ஆரம்பத்தில் நடந்த ஒருங்கிணைந்த எழுச்சி பலர் உயிரிழக்கவும் கிட்டத்தட்ட 1,000 பேர் காயமடையவும் வைத்தது. செப்டம்பர் 11ல், பொலிவியாவின் வடக்கு எல்லைக்கருகில் El PorvenirTM பெரு மற்றும் பிரேசிலுடன் இணைந்து சுமார் 30 விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம், வலதுசாரி எதிர்ப்பாளர்களால் நடத்தப்பட்ட மோசமான அட்டூழியங்களில் ஒன்றாக இருந்தது.

தொடக்கத்தில், பேரணி நடத்திய விவசாயிகளின் படுகொலை இரண்டு கட்சிகளுக்கு இடையில் நடந்த துப்பாக்கி சண்டையாக பத்திரிகை செய்திகள் குறிப்பிட்டன. எவ்வாறிருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் பாரிய பலமான இராணுவ படையால் மறைந்திருந்து தாக்கப்பட்டதாக பின்னர் வெளியான கூடுதல் விசாரணைகள் தெரியப்படுத்தின. பண்டோவிலும் மற்றும் பிற கிழக்கு மாகாணங்களிலும் நடைபெற்று வந்த சுயாட்சி சார்ந்த போராட்டங்களுக்கு எதிரான பேரணிக்கு ஆதரவாக சென்று கொண்டிருந்த பண்டோ விவசாய தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் (FUTCP) ஆதரவாளர்களின் ஒரு குழுவிலிருந்த 1,000 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தான் இந்த படுகொலையில் பாதிக்கப்பட்டனர். பொலிவியா, பெரு மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த துப்பாக்கி ஏந்திய 300 படையினர்களைக் கொண்ட ஒரு துணை இராணுவப்படையால் இந்த போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டார்கள்.

மனித உரிமைகளுக்கான பொலிவியாவின் நிரந்தர மன்றத்தின் (BPAHR) அறிக்கையின்படி, "இந்த துறையின் அதிகாரிகளும், துப்பாக்கி ஏந்திய படைவீரர்களும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் மீது கோழைத்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர்." போராட்டக்காரர்கள் முன்னேறுவதை சிரமப்படுத்தவும் மற்றும் துப்பாக்கி சூடு தொடங்கியவுடன், அவர்கள் பின்வாங்கி செல்லவும் இரண்டு மீட்டர் அகலத்திலான குழிகளை திறந்து வைக்க சாலைத்துறை அதிகாரிகள் குழிதோண்டும் ஊழியர்களை அனுப்பி இருந்ததாகவும் BPAHR குற்றஞ்சாட்டியது.

இந்த படுகொலைக்கு உத்திரவிட்டதற்காக பண்டோ மாகாணத்தின் பொலிஸ் நிர்வாக அதிகாரி லியோபோல்டொ பெர்ணான்டஜ் மற்றும் 14 பண்டா அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பண்டோவிலுள்ள ஒரு சிறிய ஆளும் குழுவின் பிரிவினைவாத நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் "மக்கள் குழு" என்று அழைக்கப்படுவதன் தலைவர் அனா மெலினா டி சுஜூகி ஆகியோர் பிரேசிலுக்கு தப்பி ஓடி அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். இந்த அடக்குமுறை இவொ மொராலெஸின் சர்வாதிகாரம் என்று கூறி அவர்கள் அங்கு புகலிடம் கேட்கிறார்கள். இதுவரை, பிரேசில் அரசாங்கம் மக்கள் குழுவின் தலைவர்களுக்கு அரசியல் புகலிடம் அளிக்கவில்லை. மேலும், Buenos AiresTM உள்ள பத்திரிகையான பஜினா 12ன் தகவலின்படி, சுஜூகியும், மற்றவர்களும் "தலைமறைவாக" இருந்திருக்க வேண்டும் என்றாலும், அவர்கள் பிரேசில் தலைநகரான பிரேசிலியாவின் வீதிகளில் காணப்பட்டார்கள்.

இந்த படுகொலை ஒரு தொடர்ச்சியான ஒருங்கிணைந்த தாக்குதல்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களின் ஒரு பகுதியாக இருந்தது. இது அரசாங்க கட்டிடங்களின் ஆக்கிரமிப்பு மற்றும் அர்ஜென்டினா மற்றும் பிரேசிலுக்கான எரிவாயு ஏற்றுமதிக்கு குறுக்கீடாக இயற்கை எரிவாயு ஆலைகளின் ஆக்கிமிப்பு ஆகியவற்றையும் உட்கொண்டிருந்தது. மேலும் பொலிவிய உள்ளூர்வாசிகள் மீது எண்ணிலடங்கா தூண்டுதலற்ற தாக்குதல்களும் அங்கு நடத்தப்பட்டன. அரசாங்கத்தால், தீவிர பயங்காரவாத்திற்கு எதிரான நடவடிக்கையாக அழைக்கப்படும் இதன் விளைவுகள், ஒரு தொடக்க மதிப்பீடாக 10 மில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. எதிர்ப்பாளர்களின் ஆதரவுடன் அமெரிக்காவைக் குற்றஞ்சாட்டியுள்ள மொராலெஸ் அரசாங்கம், சுயாட்சி கோரும் இயக்கங்களுடன் திரைமறைவில் இருந்து செயல்படுவதாக குற்றஞ்சாட்டி அமெரிக்க தூதுவர் பிலிப் கோல்ட்பெர்கை வெளியேற்றியுள்ளது. மேலும் மக்கள் குழுவுடன் தொடர்பிருப்பதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் அலுவலகத்தையும் (USAID) அது மூடிவிட்டது.

பிற நாடுகளுக்கு "பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகளை" வழங்கும் நோக்கத்துடன் 1961ல் அமெரிக்க அரசுத்துறையின் ஒரு பிரிவாக USAID உருவாக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், இந்த முகத்தோற்றத்திற்கு பின்னால், தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காவிற்கு இணங்கி வராத அரசாங்கங்களைத் தூக்கி எறியவும், பலவீனப்படுத்தவும் இந்த அமைப்பு இயக்கப்பட்டது. ஹைட்டியில், ஜனாதிபதி Jean-Bertrand Aristideஐ கடத்தி நாட்டை விட்டு வெளியேற்ற உதவிய அமெரிக்க அமைப்புகளில் USAIDயும் ஒன்றாகும். வெனீசுலாவில், தோல்வியடைந்த இராணுவ கவிழ்ப்பை ஒருங்கிணைப்பதிலும், நிதி உதவிகள் அளிப்பதிலும் ஏப்ரல் 2002ல் ஜனாதிபதி ஹூகோ சாவீஜிற்கு (Hugo Chavez) எதிராக அது உதவியது. 1970களில், சிலி, அர்ஜெண்டினா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் இருந்த இடதுசாரிகளை பூண்டோடு ஒழிக்க அனுப்பப்பட்ட அமெரிக்க உளவுத்துறை முகவர்களையும், சித்திரவதையாளர்களையும் USAID மூடி மறைத்தது. பிரேசிலிய மற்றும் உருகுவே சர்வாதிகாரங்களின் அடக்குமுறையாளர்களுக்கு சித்திரவதை செய்வதற்கான உத்திகளை போதித்த Dan Mitrione போன்ற பிரபலங்களும் இதில் உள்ளடங்கி இருந்தனர்.

வெளியேற்றியதற்கான பழிவாங்கும் நடவடிக்கையில், இனிமுதல் மருந்துகள் சந்தை போட்டியில் அமெரிக்கா பொலிவியாவை ஒரு கூட்டாளியாக கருதாது என்றும், பொலிவியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் வரிகளைக் கூட்டுவதற்கான சட்டரீதியான செயல்முறையையும் தொடங்கும் என்று அமெரிக்கா அறிவித்தது.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி சூசன் ஸ்க்வாப் தெரிவித்ததாவது: "மயக்க மருந்துகளுக்கான (Narcotics) ஒத்துழைப்பு தொடர்பான மொராலெஸ் நிர்வாகத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் ஒரு கூட்டாளிக்கு உரிய வகையில் இல்லை என்பதுடன் இந்த திட்டங்களின் விதிகளுடன் ஒத்திருக்கவில்லை." என்றார். USAIDஐ மூடவும் மற்றும் அமெரிக்க மருந்து பொருட்கள் நடைமுறைப்படுத்தும் நிர்வாகத்தின் (DEA) ஆட்களை கோக்கா (கோக்கையினுக்கான மூலப்பொருள்) சாகுபடி செய்யும் பகுதிகளில் வெளியேற்றவும் பொலிவியா எடுத்த முடிவுகளால் தான் அமெரிக்கா கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியதானது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தார்கள். பொலிவியாவில் கோக்கா இலைகளைச் சட்டவிதிகளுக்குட்பட்டு பறிக்கலாம். தென் அமெரிக்காவின் ஏழை நாடுகளில் விவசாயிகள் பசியின் கொடுயின் விளைவாகவும், கடல் மட்டத்திலிருந்து உயர்ந்த இடத்தில் வாழ்வதற்கும் அதை பயன்படுத்தினார்கள்.

பொலிவியாவில் கொக்கா உற்பத்தி வளர்ச்சியில் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், ஆனால் பொலிவிய அதிகாரிகளால் அது மறுக்கப்படுகிறது. பொலிவியா மற்றும் ஈக்வெடார் ஆகிய இரு நாட்டின் வியாபார இலாபங்களுக்கும் உத்திரவாதம் கிடைக்க கூடாது என்ற அடித்தளத்தில், இவ்விரு நாடுகளுக்கும் கிடைக்கும் வர்த்த நலன்களை வெட்ட புஷ் நிர்வாகத்திடமும், அமெரிக்க காங்கிரஸிடமும் கோரி வரும் அமெரிக்க பெரு வியாபாரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களுக்கு சார்பாக அமெரிக்க அரசாங்கம் செயல்படுவதாக பொலிவிய அரசாங்கம் குற்றஞ்சாட்டியது.

மேலும், பொலிவியாவில் அரசியல் குழப்ப நிலையை உருவாக்கும் முயற்சியில், அமெரிக்காவின் "அத்தியாவசிய பணியில் இல்லாதவர்கள்" (non-emergency personnel), தூதரக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமெரிக்க குடிமக்களையும் கூட அந்நாட்டை விட்டு வெளியேறி வருமாறு வாஷிங்டன் உத்தரவிட்டது.

அரசுத்துறை பின்வரும் அச்சுறுத்தும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது: "தற்போது பொலிவியாவிலுள்ள அமெரிக்க குடிமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; உள்ளூர் ஊடகங்களை தொடர்ந்து பார்த்து வரவேண்டும்; அதேபோல தொடர்ந்து அவர்களின் பாதுகாப்பு நிலைப்பாட்டையும் பார்த்து கொள்ள வேண்டும் என்பதுடன் சூழ்நிலை அமையும் போது அங்கிருந்து புறப்படுவதற்கும் தயாராக இருக்க வேண்டும்."

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, அமெரிக்காவின் நடவடிக்கைகள் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சியை மேலும் பலவீனப்படுத்த புஷ் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட படுமோசமான முயற்சிகளாக பொலிவியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் சித்தரிக்கப்பட்டன.

கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் பேசிய போது, பண்டோ படுகொலையையும், "பயங்கரவாத" தன்மை பெற்றிருந்த பிற பிரிவினைவாதிகளின் வன்முறை நடவடிக்கைகளை கண்டிக்காத அமெரிக்காவை மொராலஸ் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். மொராலஸை தூக்கி எறியவும், நாட்டை பிளவுபடுத்தவும் பெனி, பண்டோ, சாண்தா குரூஜ் மற்றும் தரீஜா போன்ற பொலிவியாவின் கிழக்கத்திய வளர்ச்சி துறைகளில் இருந்த மக்கள் குழுக்களின் முயற்சிகளில் அமெரிக்காவிற்கு தொடர்பிருப்பதாக லா பாஜிலுள்ள அரசாங்கம் வலுவாக சந்தேகிக்கிறது.

பாலிவியாவிற்கு எதிரான வாஷிங்டனின் தடைகள், லத்தீன் அமெரிக்கா மீதான அமெரிக்க கொள்கைகளில் அதிகரித்து வரும் நெருக்கடியையும், நீண்டகாலமாக அதன் சொந்த "கொல்லைப் புறமாக" கருதப்பட்ட ஒரு பிராந்தியத்தில் அது அதன் மேலாதிக்கத்தை இழந்திருப்பதையும் தான் அடிக்கோடிடுகிறது. உள்நாட்டில் எளிதில் தீர்க்க முடியாத பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைமைகளில் மற்றும் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நீண்ட போர்களில் ஈடுபட்டிருக்கும் நிலைமைகளிலும், இலத்தின் அமெரிக்காவில் அமெரிக்காவின் செல்வாக்கு மேலும் பலவீனமடைகிறது.

அதேபோன்று இந்த பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிக்கு மூலதன ஏற்றுமதியாளராக ஆகியிருக்கும் பிரேசிலும், இந்த அதிகார வெற்றிடத்திற்குள் நுழைவதற்கு முயற்சிக்கிறது.

பிரேசிலுக்கு இயற்கை எரிவாயு வினியோகிக்கும் எரிவாயு குழாய் நாசமாக்கப்பட்ட சான்தாகுரூஜ் தாக்குதல்களைத் தொடர்ந்து, Sao Paulo மற்றும் பிற தெற்கத்திய மாகாணங்களிலுள்ள தொழில்துறை ஆலைகள் பெருமளவில் சார்ந்துள்ள இயற்கை எரிவாயு வினியோகத்திற்கு எவ்வித குறுக்கீடும் ஏற்படுவதை அவரின் அரசாங்கம் பொறுத்து கொள்ளாது என்று கிழக்கு பொலிவிய சுயாட்சிக்கு ஆதரவான மேற்தட்டுக்களுக்கு ஜனாதிபதி Luiz Inacio Lula da Silvaன் நிர்வாகம் உடனடியாக தெளிவுபடுத்தியது.

இந்த நெருக்கடியில் தலையிட முனைந்த Organization of American Statesன் (OAS) முயற்சிகளை பிரேசில் ஜனாதிபதி ஓரங்கட்டினார். அதற்கு பதிலாக, சாண்டியாகோவிலுள்ள லா மோனிடா மாளிகையில் செப்டம்பர் 15ல், சமீபத்தில் உருவாக்கப்பட்ட தெற்கு அமெரிக்க நாடுகள் அமைப்பின் (UNASUR) மாநாட்டை கூட்ட அழைப்பு விடுத்த சிலி ஜனாதிபதி மிசெல்லி பசிலெட்டியின் பின்னணியில் இருந்து கொண்டு பிரேசில் ஜனாதிபதி அவரது அரசாங்க ஆதரவை அளித்தார். UNASUR கூட்டத்தில், மொராலஸிற்கு அது ஆதரவளிக்கும் என்றும், பொலிவியா வளர்ச்சி பிராந்தியத்தில் ஆட்சியை கவிழ்ப்பது அல்லது நாட்டை பிரிப்பது போன்றவற்றில் ஈடுபடும் சுயாட்சி கோரும் குழுக்களைப் பொறுத்து கொள்ள முடியாது என்றும் தெளிவுபடுத்தியது.

அதே நேரத்தில், UNASUR இரண்டு குழுக்களை ஏற்படுத்தியது. அதில் ஒன்று மொராலஸ் மற்றும் எதிர்ப்பு மாகாணங்களுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யும், மற்றொன்று செப்டம்பர் 11ல் நடந்த படுகொலையை விசாரிக்கும். மொராலஸ் மற்றும் நாட்டின் கிழக்கிலுள்ள பிரிவினைவாத நில உரிமையாளர்கள் எவ்வாறாவது எரிசக்தி துறையிலிருந்து வரும் இலாபங்களை பகிர்ந்து கொள்வதில் ஓர் உடன்படிக்கைக்கு வரவேண்டும் என்பதே இந்த மத்தியஸ்த முயற்சிகளின் நோக்கமாகும்.

பிரேசிலின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஸ்திரமான பொலிவியா ஒரு முக்கிய மூலமாக உள்ளது. நகைகள், பெட்டிகள், ஜவுளிகள் மற்றும் எண்ணெய் பொருட்கள் ஆகியவற்றை பெருமளவில் உள்ளடக்கிய அமெரிக்காவிற்கான பொலிவியாவின் ஏற்றுமதி பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு 2007ல் 362 மில்லியன் டாலராகும்; அதே ஆண்டு இறக்குமதி பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு 278 மில்லியன் டாலராகும். இது பொலிவியாவின் சர்வதேச வர்த்தகத்தில் வெறும் 9 சதவீதம் மட்டுமேயாகும். இது தெற்கு அமெரிக்காவின் கட்டுப்பாடற்ற வர்த்தக மண்டலத்தின் உறுப்பு நாடுகளுடனான, குறிப்பாக பிரேசிலுடனான அதன் ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவு இல்லை. 2007ல் பொலிவியாவின் 45.5 சதவீத ஏற்றுமதி பிரேசிலுக்கு சென்றுள்ளது மற்றும் 20 சதவீதம் சிலி மற்றும் அர்ஜென்டினாவிற்கு சென்றுள்ளது. இந்நாட்டின் இறக்குமதியில் 30 சதவீதம் பிரேசிலில் இருந்தும், 27 சதவீதம் சிலி மற்றும் அர்ஜென்டினாவிலிருந்தும் வந்துள்ளது.

பிரேசிலின் ஒருதலைப்பட்சமான மூலதனவாதத்தின் இலாப நலன்களால் தான் பொலிவிய நெருக்கடியில் Lula வின் தலையீடு கொண்டு வரப்பட்டுள்ளது.

1990களில் தனியார்மயமாக்கப்பட்ட அதன் எரிசக்தி துறையின் ஒரு பகுதியை பொலிவியா 2005ல் மீண்டும் தேசியமாக்கியது. இந்த நடவடிக்கை பொலிவிய எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முதலீடு செய்திருந்த மிக பெரிய முதலீட்டு நிறுவனமான பிரேசிலின் அரசுத்துறை நிறுவனம் பெட்ரோபாஸின் மீது எதிர்விளைவை ஏற்படுத்தியது. இந்த, பகுதி தனியார்மயமாக்கம் (partial privatization) மூலதன வரவிலும், அன்னிய முதலீட்டிலும் தற்காலிக வீழ்ச்சியை ஏற்படுத்தியது, ஆனால் இயற்கை எரிவாயுவிற்கான ஸ்திரமான ஆதாரங்களை (68 சதவீதம் பொலிவியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது) உறுதிப்படுத்துவதற்கான பெட்ரோபரஸின் தேவை அதன் முடிவை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு இழுத்து சென்றது.

பிரேசில், வெனிசூலா, சிலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிடம் இருந்து 2008ல் சாதனையளவான முதலீடுகள் எதிர்பார்க்கப்படுவதாக மொராலஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். பொலிவிய எரிசக்தி துறையில் பிரேசிலின் முதலீடு மட்டும் சுமார் 1 பில்லியன் டாலர் நிலுவையில் உள்ளது. பொலிவியா நாளொன்றுக்கு 42 மில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்கிறது. அதன் உள்நாட்டு தேவை 6 மில்லியன் கனஅடி மட்டுமே. 31 மில்லியன் கனஅடி வரை பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது; மீதமிருப்பவை அர்ஜென்டினா மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு வினியோகிக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு ஒரு பொலிவிய விஜயத்தில், "உங்கள் கூட்டாளி பிரேசில் தான், வெனிசூலா இல்லை" என்று லூலா இரகசியமாக மொராலஸின் காதுகளில் தெரிவித்ததாக அங்கொரு வதந்தி நிலவியது. இயற்கை எரிவாயு, எண்ணெய் மற்றும் பிற பொருட்களின் நிலையான வினியோகத்தை உறுதிப்படுத்த லூலா அரசாங்கத்திற்கு எல்லையோரங்களில் அரசியல்ரீதியாக ஸ்திரமான பொலிவியா தேவைப்படுகிறது. அந்த காரணத்திற்காக, அமெரிக்காவையும் உள்கொண்டிருக்கும் OAS சாண்டியாகோ மாநாட்டிற்கு அழைக்கப்பட வேண்டும் என்ற சிலி ஜனாதிபதி பாசிலெட்டின் கோரிக்கையை லூலா வெளிப்படையாக நிராகரித்தார். ஆறு தசாப்தங்களாக, OAS பெரும்பாலும் எப்போதும் வாஷிங்டனின் கோரிக்கைகளுக்கு தலைசாய்த்து வந்தார்.

கொக்கா உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், Aymara இந்தியரான மொராலஸ் 2005ல் 55 சதவீத பெரும்பான்மை வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகஸ்டில் நடத்தப்பட்ட மறுவாக்கெடுப்பில், அவரின் பெரும்பான்மை 67 சதவீதமாக உயர்ந்திருந்தது.

"ஆண்டிய சோசலிசத்தின்" ஆதரவாளராக தன்னைத்தானே வாயச்சவடாலடிக்கும் மொராலஸ், ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய போது, தாம் அன்னிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களைப் பாதுகாப்பதாக தெளிவுபடுத்தினார். தமது பேச்சின் ஒருபுறம், மூலதனத்தை மனிதாபிமானத்தின் எதிரியாக காட்டிக் கொண்ட அவர், மறுபுறம், அவரின் நிர்வாகம் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்று பொலிவியாவிலுள்ள அன்னிய முதலீட்டாளர்களுக்கு உறுதி அளித்தார்.

பொலிவிய இயற்கை எரிவாயுவை சுரண்டும் ஸ்பானிய மற்றும் பிரேசிலிய தளத்தைக் கொண்ட ஆற்றல் துறையில் திரண்டநிறுவனங்களைக் குறிப்பிட்டு தெரிவிக்கையில், "ரெப்சால், பெட்ரோபாஸ் மற்றும் அவர்களைப் போன்றவர்கள் உட்பட ஒரு முதலீட்டாளர் அவரின் முதலீட்டை மட்டுமின்றி, இலாபங்களையும் திரும்ப பெறுவதற்கு உரிமை உண்டு." என்று அவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய லூலா, தமது உரையில், "வளரும் நாடுகள் மரபார்ந்த அதிகார மையங்களுடன் இணைந்து கொண்டு தங்களின் பழைய கூட்டாளிகளை கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கு விட்டு விடுகின்றன." என்று குறிப்பிட்டார். "வளர்ந்து வரும் நாடுகளின்" பிரச்சனைகளைத் தீர்க்க "முக்கிய சக்திகளுடன் எந்த இடைதரகும் இல்லாமல் நேரடி பேச்சுவார்த்தை" நடத்துவதன் பலன்களையும் அவர் புகழ்ந்து பாராட்டினார். இந்த முன்முயற்சிக்குக் கீழே இருக்கும் பிரேசிலிய மூலதன நலன்களைத் தடுப்பது தான் UNASURன் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த முன்முயற்சி "மறைமுகமாக எதிர்மறையான நிலைப்பாட்டிற்கு செல்லாது" என்றும் பிரேசிலிய ஜனாதிபதி உறுதியளித்தார். எவ்வாறிருப்பினும், வாஷிங்டனின் அதிகாரத்தில் கீழ் சாதாரணமாக அது கவனித்து கொள்ளப்படும் என்ற சிறு சந்தேகம் அங்கு நிலவுகிறது. தற்போது ஆழ்ந்து சென்று கொண்டிருக்கும் அதன் நெருக்கடி என்னவாக இருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கத்திய நிலவுலகில் அதன் பல நூற்றாண்டு மேலாதிக்கத்தை அமைதியாக ஒப்படைத்துவிடாது.