World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The Wall Street bailout and the threat of dictatorship

வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பும் சர்வாதிகார அச்சுறுத்தலும்

By Bill Van Auken, Socialist Equality Party vice presidential candidate
2 October 2008

Back to screen version

திங்களன்று அமெரிக்க பிரதிநிதிகள் மன்றத்தில் வோல் ஸ்ட்ரீட் வங்கிகளுக்கு $700 மில்லியன் பிணை எடுப்பு பொதி நிராகரிக்கப்பட்டதில் விழுந்த வாக்கு தொடர்பாக சர்வதேச அளவில் பெரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எதிரொலித்து வருகின்றன.

205 க்கு 228 - என்ற விதத்தில் பிணை எடுப்பைத் தோற்கடிக்கும் முறையில் வந்த வாக்கெடுப்பிற்கு அதிக எதிர்ப்பு ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளின் பிரதிநிதிகளால் காட்டப்பட்டது; இந்த நெருக்கடிக்கு பொறுப்பான வோல் ஸ்ட்ரீட்டின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊக வணிகர்களுக்கு வரி செலுத்துவோரின் பல நூற்றுக்கணக்கான பில்லியன்கள் பணத்தை கொடுக்கின்றனர் என்பதை அவர்கள் போட்டியாளர்கள் நவம்பர் தேர்தலில் தங்கள் இடத்திற்கான போட்டியில் பயன்படுத்தி, தங்கள் முகங்களில் கரிபூசப்படலாம் என்ற அச்சத்தை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த விதத்தில் சாதாரண மக்கள் பொது நிதி பெரும் செல்வந்தர்களுக்கு மகத்தான முறையில் மாற்றப்படுவது குறித்து கொண்டிருக்கும் விரோதப் போக்கு, பெரிதும் உருச்சிதைந்து இருந்தது என்றாலும், நடவடிக்கையின் தற்காலிக மடிவில் அதன் வெளிப்பாட்டைக் கண்டது.

செய்தி ஊடகத்தில் பிரதிபலிக்கப்படும் வகையில் அரசியல் நடமுறையின் பெரும் பகுதி என்ன படிப்பினைகளை கற்றுக் கொண்டது? நிதிய மூலதனத்தின் கோரிக்கைகளுக்கு விடையிறுக்கும் அமெரிக்க அரசாங்கம்கூட மக்களுடைய விருப்பத்திற்கு இணங்க நடக்க வேண்டும் என்பதேயாகும்.

பல வண்ணனைகளில் இந்த கருத்து ஒலிக்கிறது; சில கருத்துக்கள் ஆளும் வட்டங்களுடன் கணிசமான பிணைப்புக்களை உடைய தனிநபர்களால் எழுதப்பட்டவை ஆகும்.

இந்த சிந்தனைப் போக்கை பிரதிபலிக்கும் வகையில் புதனன்று வாஷிங்டன் போஸ்ட்டில் வெளிவந்த ஜோர்ஜ் புஷ்ஷின் முன்னாள் முக்கிய உரை தயாரிப்பாளரும், மூத்த ஆலோசகரும் தற்பொழுது வெளியுறவுகள் பற்றிய குழுவில் மூத்த கல்வியாளராகவும் இருக்கும் மைக்கல் ஜேர்சனின் கட்டுரை உள்ளது. இதன் தலைப்பு ("Too Small for a Big Crisis") "ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் மிகச் சிறிய நிலை" ஆகும் இது ஒரு செயல்படாத காங்கிரசை பற்றி சித்தரிக்கிறது.

ஒரு இழிந்த முறையில் வரலாற்று உவமையை பயன்படுத்திய விதத்தில் ஜேர்சன் கட்டுரையை ஆரம்பிக்கிறார்: "நடைமுறைக் கருத்து என்ற பாஸ்டைல் சிறை தகர்க்கப்பட்டு, எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் தன்னுடைய இதயத்தானத்தில் புரட்சி பொறுப்பற்ற தன்மையைத்தான் கொண்டுள்ளது."

ஆளும் உயரடுக்கிற்குள் பிணை எடுப்பிற்கு மிகப் பெரிய ஒருமித்த உணர்வு இருந்தும் கூட இப்படிப்பட்ட வாக்கு வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்: "அமெரிக்காவின் ஆளும் உயரடுக்கு தேசிய அறைகூவலுக்கு விடையிறுக்கையில் மிக ஒற்றுமையுடன் இது போன்ற ஒற்றுமையை காட்டியது கிடையாது" என்று அவர் நிர்வாகம், இரு கட்சிகளின் தலைமை, குடியரசு, ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று அனைவரும் பிணை எடுப்புத் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளது பற்றி எழுதியுள்ளார்.

ஒருதலைப்பட்ச ஜனநாயக மற்றும் "கொள்கைத் தூய்மை உடைய" குடியரசுப் பிரதிநிதிகள்மீது சமமாக குற்றம் கூறிய பின்னர், ஜேர்சன் தன்னுடைய அக்கறைகளின் இதயத்தானத்திற்கு வருகிறார்.

"இறுதியில் சமரசம் ஏதேனும் வந்தாலும் கூட, இப்பொழுது அமெரிக்க அரசியல் உயரடுக்குகள் ஒரு தேசிய சவாலுக்குத் தங்கள் கூட்டு விருப்பத்தை சுமத்துவதின் மூலம் விரைவாக எதிர்கொள்ளும் திறனை இழந்து விட்டனர். முன்பு சாதாரணமாக அரசியல் என்று தோன்றியது இப்பொழுது கூட்டாட்சி விதிகள் பற்றிய நெருக்கடியை ஒத்துள்ளது; பல சிறிய மனிதர்களால் நடத்தப்படும் ஒரு வலுவற்ற அரசாங்கம் போல் ஆகும். எந்த வங்கித் தோல்வியையும் விட அமெரிக்க உறுதித்தன்மையை நம்பியிருக்கும் உலகத்திற்கு இது மிகவும் அச்சத்தைக் கொடுக்கக் கூடியது."

பெரும் முதலாளித்துவ புரட்சிக் காலத்தில் இருந்து பெற்ப்பட்ட ஜேர்சனின் இரண்டாம் வரலாற்று ஒப்புமை, முதலில் கூறப்பட்டதை போலவே கிறுக்குத்தனமானது. கூட்டாட்சி விதிகளின் நெருக்கடி என்பது பிரதிநிதிகள் மற்றும் மற்றும் அதைத் தோற்றுவித்த அமெரிக்க அரசியலமைப்பிற்கு வழிவகுத்தது. இவை இரண்டும் "அரசியல் உயரடுக்குகள்" தங்கள் "கூட்டு விருப்பத்தை" விரைவில் சுமத்துவதை நோக்கமாகக் கொண்டு ஏற்படுத்தப்படவில்லை.

அரசியலமைப்பின் முதல் விதி அமெரிக்க அரசாங்கத்தின் முதல் பிரிவாக காங்கிரசை தோற்றுவித்து, அது மக்களுடைய விருப்பத்தை நெருக்கமாக பிரதிபலிக்க வேண்டும் என்ற பொருளைக் கொடுத்தது. இது குறிப்பாக பிரதிநிதிகள் மன்றத்திற்கு உண்மையாக இருந்தது; அதன் உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசியல் அமைப்பை இயற்றியவர்கள் இந்தப் பிரிவு கொடுங்கோன்மைக்கு எதிரான ஒரு கோட்டையாக இருக்க வேண்டும் என்று விரும்பி, அதற்கு பெரிய குற்ற விசாரணை மூலம் ஜனாதிபதிகளை அகற்றுவதற்கும், வரிகளை விதிக்கப்பட சட்டம் இயற்றப்படுவதற்கும் அதிகாரம் கொடுத்து, அதையொட்டி தேசிய வருமானத்தின்மீது கூடுதலான முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்குமாறும் செய்தனர்.

இத்தகைய கொள்கைகளும் அதிகாரங்களும் பல தசாப்தங்களில் முறையாக அரிக்கப்பட்டுவிட்டன இன்னும் கூடுதலான அதிகாரங்கள் ஒரு ஏகாதிபத்திய ஜனாதிபதி முறையின்கீழ் ஒருங்கிணைக்கப்பட்டன. கடந்த எட்டு ஆண்டுகளில், இந்த வழிவகை வியத்தகு அளவில் பெருகியது; காங்கிரஸ் ஒரு தேர்தல் மோசடி மற்றும் அமெரிக்க தலைமை நீதிமன்றத்தின் மூலம் ஒரு குடியரசுக் கட்சி பெரும்பான்மையை சுமத்தியது என்பதை ஏற்றது; இதற்கு பின்னர் ஒரு குற்றம் சார்ந்த போருக்கு முத்திரையிட்டு ஒப்புதல் கொடுத்தது பின்னர் அடிபப்டை ஜனநாயக உரிமைகள்மீது கடுமையான தாக்குதல்களுக்கு ஒத்துழைக்கவும் செய்தது. மன்றத்தை நிரப்புகிறவர்கள் உண்மையில் இரு முக்கிய கட்சிகளையும் கட்டுப்படுத்தும் பெருவணிக நலன்களுக்கு தாழ்ந்து இருக்கும் தங்களின் அரசியல் வாழ்வு பற்றி கவலைப்படும் "சிறிய" ஆடவரும் பெண்டிரும்தான்.

ஆயினும்கூட, இந்த பரிதாபத்திற்குரிய அரசியல் வாதிகள் இன்னமும் ஒரு குறைந்த அளவில் மக்கள் உணர்வினால் கட்டுப்படுகின்றனர்; அந்த உணர்வோ அமெரிக்க பெருநிறுவன மற்றும் நிதிய ஆட்சியாளர்களின் நலன்களுக்கு எதிரிடையாக உள்ளது, தற்போதைய முறை இன்னும் அதிக அளவில் பொறுத்துக் கொள்ள முடியாததாக இருக்கிறது.

"இது ஆபத்தானது" என்று நியூ யோர்க் டைம்ஸின் மூத்த வெளியுறவுக் கொள்கை கட்டுரையாளர் தோமஸ் ப்ரீட்மன், புதனன்று வந்த கட்டுரையில் எழுதியுள்ளார். "தங்கள் காசோலைப் புத்தகங்களைக்கூட சமன் செய்ய இயலாத பலரைக் கொண்ட மன்ற உறுப்பினர்களை நாம் பெற்றுள்ளோம்; இவர்கள் ஒரு சிக்கல் நிறைந்த பிணை மீட்புப் பொதியை நிராகரிக்கின்றனர்; ஏனெனில் சில வாக்குப் போட்டவர்களின் --இவர்களும் ஏதும் அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்-- அவர்களை ஏராளமான தொலைபேசி அழைப்புக்களால் மூழ்கடித்தனர். வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான மக்கள் சீற்றத்தை நான் பாராட்டுகிறேன்; ஆனால் இந்த நெருக்கடியை இப்படிச் சமாளிக்க முடியாது.

சுருக்கமாகக் கூறினால், "வல்லுனர்களான" நிதி மந்திரி ஹென்றி போல்சன், முன்னாள் கோல்ட்மன் சாஷின் தலைமை நிர்வாக அதிகாரியால் வடிவமைக்கப்பட்ட, தன்னுடைய வோல் ஸ்ட்ரிட்டின் சக ஊழியர்கள் தப்புவதற்கான "சிக்கல் வாய்ந்த மீட்பு பொதிக்கு" மற்றும் தனிப்பட்ட நபர்களான ப்ரீட்மன் போன்றோரின் கொழுத்த பணப்பையை காப்பாற்றுவதற்கும், பெரும்பாலான மக்கள் காட்டும் எதிர்ப்பு என்பது அனுமதிக்கப்பட முடியாதது.

வாஷிங்டன் போஸ்ட்டின் ஆடம்பரமான வலதுசாரிக் கட்டுரையாளர் ஜோர்ஜ் வில், ஒரு சில உகந்த சொற்களை ஆலோசனையாகக் கூறினார்: "இந்த வெளிப்படையற்ற சங்கடத்தை புரிந்துகொள்ள முடியாமல் பெரும் சீற்றத்தில் இருக்கும், அதற்காக குறைகூறமுடியாத மக்களிடம் இருந்து காங்கிரஸ் தன்னை தொடர்பு அறுத்துக் கொள்ள வேண்டும்."

அட்லான்டிற்கு அப்பால், பிணை எடுப்பின் தோல்வி பற்றி நிதிய வட்டங்களில் பெரும் சீற்றம் நிலவிய இடத்தில், செய்தி ஊடகத்தின் எதிர்கொள்ளல் இன்னும் வெளிப்படையாக இருந்தது. டைம்ஸ் ஆப் லண்டன் ஒரு முக்கியமான கட்டுரையை, "சர்வாதிகாரத்திற்கு காங்கிரஸ்தான் சிறந்த விளம்பரம்" என்ற தலைப்பில் வெளியிட்டது.

"இந்த வாரம் காங்கிரசில் நடந்த கொந்தளிப்பு பற்றிய அதிக பெருமை கொடுக்கும் கருத்து இதுதான் செயல்முறையில் உள்ள ஜனநாயகம் என்பதாகும்" என்று கட்டுரையாளர் Camilla Cavendish புதனன்று எழுதினார். "தனிப்பட்டமுறையில், கருணையுடைய சர்வாதிகாரம் பற்றி நான் இந்த அளவிற்கு இதுகாறும் ஈர்க்கப்படவில்லை."

இப்படி தூண்டிவிடும் தன்மையுடைய வாசகம், மிகப் பரந்த அளவில் ஜனநாயக விரோதப் போக்கு உணர்வுகள் தர்க்கரீதியான முடிவுகளில் இருந்து எடுத்துக் கூறப்படுவது, அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தை அரித்துக் கொண்டிருக்கும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் புறநிலை மாற்றங்களின் இறுதியில் வெளிப்படுத்துகின்றன.

இந்த நெருக்கடி இன்னும் கூடுதலான வகையில் பொருளாதர சக்தி குவிப்பிற்கு வகை செய்ய பயன்படுத்தப்படுகிறது; அத்தகைய நிலை அரசியல் ஜனநாயகத்துடன் பொருந்தாத் தன்மையைத்தான் கொண்டுள்ளது. மூன்று மிகப் பெரிய வங்கிகளான சிட்டி குழுமம், பாங்க் ஆப் அமெரிக்கா மற்றும் ஜேபி மோர்கன் சாக்ஸ் ஆகியவை தங்களின் தடுமாறும் போட்டி நிறுவனங்களை விழுங்கிக் கொண்டிருக்கின்றன; இப்பொழுது அமெரிக்க வங்கி சேமிப்புக்களில் முழுமையான மூன்றில் ஒரு பங்கை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன.

அதே நேரத்தில் நெருக்கடி அமெரிக்க வாழ்வின் ஒவ்வொரு கூறுபாட்டையும் சூழ்ந்துள்ள சமூக சமத்துவமின்மையை தீவிரப்படுத்தி வருகிறது இங்கு உயர்மட்ட 1 சதவிகிதத்தினர் கீழே உள்ள 90 சதவிகிதத்தினரை விட அதிக செல்வத்தை கொண்டிருக்கின்றனர். கட்டாய பணிநீக்கங்கள், ஆலைகள் மூடப்படல் ஆகியவை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன; அதே நேரத்தில் தொழிலாளர்கள் உண்மை ஊதியத்தின் தீவிர வெட்டினால் இடர்ப்பாடு அடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில்தான் ஆளும் உயரடுக்கு இன்னும் அதிக செல்வத்தை நிதிய தன்னலக்குழுவிற்கு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு அள்ளிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த ஆழ்ந்த சமூக குரோதங்கள், நிலவும் அமெரிக்க நடைமுறைக்குள் கட்டுப்படுத்திவிடப்பட முடியாதவை ஆகும். மன்றத்தில் வந்த வாக்கு பற்றிய பெரும் கூச்சல் ஒரு நெருக்கடியில் இருக்கும் முதலாளித்துவம், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வெளிப்படையான ஒரு அரசியல் சர்வாதிகார வழிமுறைகள் மூலம் நிதிமூலதனத்தின் பொருளாதார சர்வாதிகாரத்தை காக்கும் திறனுடைய புதிய ஆட்சி வடிவங்களை நோக்கித் தவிர்க்க முடியாமல் நகரும் என்ற எச்சரிக்கையைக் கொடுக்கிறது.

இந்த அச்சுறுத்தல் நிலவுகின்ற இரு கட்சி முறையின் வடிவமைப்பிற்குள் எதிர்கொள்ளப்பட முடியாதது ஆகும். அது ஜனநாயகக் கட்சியுடன் மீட்க முடியாமல் உடைத்துக் கொள்ளவேண்டும் என்றும் சமூகத்தை சோசலிச வகையில் மறு ஒழுங்கமைப்பதற்காக போராடும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புதிய அரசியல் இயக்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும் கோருகிறது. இந்த மாற்றீடுதான் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அதன் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரான ஜெரி வைட்டாலும் மற்றும் துணை ஜனாதிபதிக்கான வேட்பாளரான என்னாலும் முன்வைக்கப்படுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரத்தைப் பற்றி கூடுதலாக அறிந்துகொள்ள www.socialequality.com ஐப் பார்க்கவும், அல்லது எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved