World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany's war in Afghanistan

ஆப்கானிஸ்தான் போரில் ஜேர்மனி

By Ludwig Weller
24 September 2008

Back to screen version

ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ள ஜேர்மனியின் படையினர் "சீருடையில் இருக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள்" என்பதாக அரசு தரப்பிலான விளக்கம் இனியும் எடுபடாது. அவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் குருதி தோய்ந்ததாக ஆகி வருகிறது. ஜேர்மனியின் படையினர்கள் போராளிகளையும் பொதுமக்களையும் கொல்வதும், அவர்களேயும் கொல்லப்படுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஆப்கானிஸ்தான் படைநிறுத்தத்திற்கு ஆதரவாக மதிப்பு கொண்டிருந்த Bundeswehrverband (ஆயுதப் படையினர் அமைப்பு) கூட ஜேர்மனி அரசாங்கம் ஏமாற்றுவதாகவும் அபாயங்களை அலட்சிய மதிப்பீடு செய்வதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறது. "நாங்கள் சண்டையிட்டு வருகிறோம்" என்றார் கூட்டமைப்பின் தலைவர் பேர்னார்ட் கெர்ட்ஸ் செய்தியாளர்களிடம்.

சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) பாதுகாப்பு நிபுணரான Jörn Thiessen மற்றும் அவரது சுதந்திர ஜனநாயகக் கட்சியின் (FDP) சகா Birgit Homburger இதேபோன்றதொரு உணர்வுகளைப் பிரதிபலித்தனர். "அரசாங்கம் ஒரு மேகத்திரை இடுகிறது. பொது விவாதத்திற்கு அஞ்சுகிறது" என்று ஹொம்பேர்கர் Financial Times Deutschland பத்திரிகையிடம் தெரிவித்தார். ஜேர்மனி ஆப்கானிஸ்தானில் மோதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குண்டுஸ் மற்றும் ஃபைஸாபாத்தில் ஜேர்மனியின் இராணுவ தளங்கள் மீது ராக்கெட் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது "சுவர் எழுத்து" போன்ற தெளிவான சமிக்ஞை என்று ஜேர்மனியின் மற்றும் அமெரிக்காவின் ரகசியப் புலனாய்வு பிரிவினர் வட்டாரங்கள் தெரிவித்ததாக Welt Online இந்த வாரம் தெரிவித்தது. காபூலில் இருக்கும் ஜேர்மனி அதிகாரிகள் கவலையுடன் கேட்கும் கேள்வி இது தான்: ஒற்றை தாக்குதலில் 20 அல்லது 30 படையினர்கள் கொல்லப்பட்டால் என்னவாகும்? என்கிறது இந்த வலைத்தளம்.

முன்னதாக செப்டம்பரில் வடக்கு ஆப்கானிஸ்தான் நகரான குண்டுஸில் ஒரு கண்ணி வெடி வெடித்ததில் ஒரு 29 வயது ஜேர்மன் மேஜர் கொல்லப்பட்டார், மூன்று பாராசூட் துருப்புகள் காயமுற்றனர்.

ஒரு நாள் கழித்து, சர்வதேச பாதுகாப்பு உதவி படையை (ISAF) சேர்ந்த ஜேர்மன் படையினர்கள் ஒரு குழந்தை மற்றும் இரண்டு குழந்தைகளை உயிரிழக்க செய்து விட்டனர். இன்னும் நான்கு குழந்தைகள் காயமுற்றன. ஆப்கானிஸ்தான் படையினர்கள் மற்றும் போலிசாருடன் சேர்ந்து ஜேர்மன் இராணுவ போலிசாரால் பராமரிக்கப்படும் ஒரு சோதனைச் சாவடி அருகே இவர்கள் வந்த இரண்டு மக்கள் வாகனங்கள் தாக்குதலுக்கு ஆளாகி இச்சம்பவம் நேர்ந்தது.

இரண்டு வாகனங்களும் முதலில் நிறுத்தப்பட்டன. வாகனங்களை சோதிக்கும் முன்னதாகவே அவற்றில் ஒன்று "திடீரென நகர"த் தொடங்கியது. ஜேர்மன் படையினர்கள், மற்றும் அநேகமாக ஆப்கான் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்களும், எச்சரிக்கும் துப்பாக்கி ஒலிகளை எழுப்பினர். பின் சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்த வாகனத்தில் இருந்து பாதுகாப்பு படையினர் முதல் காரின் மீது துப்பாக்கி சூட்டை நிகழ்த்தினர் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.

Financial Times Deutschland கூற்றின் படி, வாகனத்தின் மீது சுட்டது ஜேர்மனியின் படையினர்கள். போர் ஈடுபடுத்த விதிகளின் படி, ஆப்கானிஸ்தான் போலிசார் மட்டுமே துப்பாக்கியால் சுடலாம் என்பது தெளிவாக உள்ளது.

அந்த நேரத்தில் ஜேர்மனி படையினர்கள் பதட்டமுற்று, ஆப்கானிய குடும்பத்தின் மீது சுட்டிருக்கலாம் என்பதும் சாத்தியம் தான். "வடக்கு ஆப்கானிஸ்தானில் எங்களது படையினர்கள் மீது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தாக்குதல் நிகழ்ந்திருக்கின்றன என்கிற உண்மையானது அவர்களின் மனோநிலையில் பெரும் தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. இதில் உண்மையில் பெரிய ஆச்சரியம் ஏதும் இல்லை" என்று Bundeswehrverband தலைவர் Gertz தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளால் நடத்தப்பெறும் நவீன-காலனியாதிக்க போரின் தவிர்க்க முடியாத விளைவு தான் அப்பாவி ஆண், பெண், மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதானது. ஆக்கிரமிப்பு படைகள் தலீபான் தலைமையிலான கிளர்ச்சியை அதிகமான முரட்டுத்தனம் கொண்டு அடக்க முற்படுகின்றன. ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துள்ள படைகள் அதிகமான அளவில் துரிதமாக வளரும் ஆயுதமேந்திய எதிர்ப்பு மூலம் எதிர்கொள்ளப்படுகின்றன. ஜூன் மாதத்தில் வடக்கு ஆப்கானிஸ்தானில் துரித பதிலிறுப்பு படையின் தலைமையை ஜேர்மனி ஏற்றுக் கொண்டது முதல், அதன் துருப்புகள் ஆக்கிரமிப்பு சக்தியாகவே பார்க்கப்படுகின்றன, அவ்வாறே எதிர்க்கப்படுகின்றன.

ஆப்கான் மக்களிடையே ஜேர்மனியின் ஆயுதமேந்திய படையினர் நல்ல மரியாதையை அனுபவித்து வருகின்றனர் என்றும், எதிர்பாராமல் அப்பாவிகள் தாக்கப்பட நேர்வதன் காரணத்தை கூட அவர்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ஃபிரான்ஸ் ஜோசப் ஜங்கின் (கிறிஸ்தவ ஜனநாயக சங்கம், CDU) சமீபத்திய வாக்குறுதிகள் சுயநல சிந்தனையாலானவை என்பதோடு மட்டுமல்லாமல் ஜேர்மனி இராணுவ ரோந்து படையினர் மீது அன்றாடம் நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் மூலம் பொய்யென நிரூபிக்கப்பட்டு வருவதுமாகும்.

போராளிகளின் தாக்குதல்கள் இந்த ஆண்டு 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. வாரக்கணக்கில், அமெரிக்காவும் அதன் கூட்டணி படைகளும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அதிகமான படையினர்கள் உயிரிழப்பை கண்டு வருகின்றன. ஜேர்மன் அரசாங்கமும், ஏறக்குறைய ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருக்கின்றன, இருந்தாலும் படை நிறுத்தத்தை இவை உறுதியாக ஆதரிக்கின்றன.

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கமிட்டி தலைவரான Ulrike Merten (SPD) ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டிருக்கும் ஜேர்மன் துருப்புகளின் எண்ணிக்கை உச்சவரம்பை அக்டோபரில் புதுப்பிக்கப்படும்போது 1000 என்னும் நடப்பு எண்ணிக்கையில் இருந்து 4500 ஆக உயர்த்தும் அரசாங்க திட்டத்திற்கு ஆதரவு கோரி உடனடியாக அழைப்பு விடுத்தார். "சூழ்நிலை தெளிவாக தீவிரமுற்றிருப்பது தெரிகையில், எண்ணிக்கையை அதிகரிப்பது மூலம் நீங்கள் பதிலளிக்க வேண்டியது அவசியம்" என்றார் அந்த அம்மையார்.

ஜேர்மன் துருப்புகளுக்கும் அவர்களது போர் நடவடிக்கைகளுக்கும் தனது ஆதரவை விளங்கப்படுத்துவதற்காக குண்டூஸுக்கு ஒரு அறிவிக்கப்படாத பயணத்தையும் பாதுகாப்பு அமைச்சர் ஜங் மேற்கொண்டார்.

ஆகஸ்ட் மத்தியில், ஜேர்மன் ரோந்து குழு ஒன்று குண்டூஸுக்கு 35 கிமீ தெற்கில் ஒரு தற்கொலை படை தீவிரவாதியால் தாக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர் தனது மோட்டார் சைக்கிளை ரோந்து வாகனத்திற்கு வெகு அருகில் கொண்டு வந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்ய முடிந்தது என்று இராணுவ வட்டாரங்களில் இருந்தான தகவல்கள் தெரிவித்தன. இந்த வெடிப்பு மிகப் பெரிய அளவில் இருந்தது. இரண்டு வாகனங்களை இது சிதைத்தது. ஐந்து படையினர்கள் காயமுற்றனர். இதில் இருவருக்கு படுகாயம்.

ஜேர்மன் துருப்புகள் ஆப்கானிஸ்தானில் படை நிறுத்தம் செய்த 2002 இன் ஆரம்ப காலம் முதல் 28 ஜேர்மன் படையினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஜேர்மன் படையினர்களால் கொல்லப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்கள் மற்றும் போராளிகளின் எண்ணிக்கை குறித்த துல்லியமான புள்ளிவிவரம் ஏதும் இல்லை. செப்டம்பரின் தொடக்கத்தில், தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை ஜேர்மன் ரோந்து குழு படுகாயமுறச் செய்தது. வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான பதக்ஷான் போலிஸ் துறை தலைவர் கூற்றுப்படி, கொல்லப்பட்டவர் நிராயுதபாணியான ஒரு ஆடு மேய்ப்பவர்.

இந்த சமீபத்திய தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் ஜேர்மனியின் நடவடிக்கைகள் மீது ஒரு புதிய விவாதத்திற்கு அடியெடுத்து கொடுத்திருக்கின்றன. ஜேர்மனியினரில் பெரும்பான்மையினர் இந்த போரை நிராகரித்திருக்கும் நிலையில், ஸ்தாபன கட்சிகள் ஜேர்மனியின் பங்கேற்பை தீவிரமாக ஆதரிக்கின்றன.

உத்தியோகபூர்வமாக அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படும் எந்த விமர்சனமும் பெரும்பாலும் கூடுதல் தீவிர இராணுவ நடவடிக்கை கோரும் நோக்கமுடையதாகத் தான் இருக்கிறது. SPD உடன் முன்னர் கூட்டணியில் இருந்தபோது ஆப்கானிஸ்தானில் ஜேர்மனி இராணுவத்தை நிறுத்துவதற்கு ஒப்புதலளித்த Greens இப்போது எந்த படை திரும்பப் பெறலையும் கட்டாயமாக எதிர்க்கிறது. Greens நாடாளுமன்ற பிரிவின் தலைவரான Jürgen Trittin இராணுவ நடவடிக்கைகள் அவசியமாயுள்ளன என்றும் அதற்கு மாற்று ஒன்றும் இல்லை என்றும் கூறுகிறார்.

இருந்தாலும், வளர்ந்து வரும் போர் எதிர்ப்பு மனோநிலை அரசியல்ரீதியாக வெடிப்புமிகுந்ததாக ஆகலாம் என்கிற கலக்கத்தை பல ஊடக வர்ணனையாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

"ஜனாதிபதி மேர்க்கெல் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மயர் தொடங்கி பாதுகாப்பு அமைச்சர் ஜங் வரை சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் எல்லோரும் அரைமனதாகத் தான் தங்கள் ஆப்கானிஸ்தான் கொள்கையை மக்களிடம் வழங்குகிறார்கள்" என்று Süddeutsche Zeitung தனது தலையங்கத்தில் புகார் தெரிவித்தது. மக்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டியது அவசியம் என்று வாதிடுகிறது இந்த பத்தி. இந்துகுஷ் மலைப் பகுதியில் ஜேர்மன் படையினர்கள் எல்லாம் ஒரு மனிதாபிமான உதவி செய்யும் நிறுவன ஊழியர்கள் போல் தான் செயல்படுவதாக கூறும் கனவுக்கதைகளை எல்லாம் இனியும் யாரும் நம்பத் தயாராக இல்லை என்பதால், ஜேர்மனியின் நலன்களுக்காகவும் அவர்களின் இராணுவ அமலாக்கத்திற்காகவும் வெளிப்படையானதொரு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு கடைசியில் நேரம் வந்திருப்பதாக இது தெரிவிக்கிறது.

துல்லியமாக இந்த காரணத்தால் தான் இந்த போரே நடத்தப்படுகிறது. இது "ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கான" போர் "இல்லை" என்பது மட்டும் நிச்சயம். மாறாக அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஒரு நவீன காலனியாதிக்க போரில் ஈடுபட்டுள்ளன. இதன் நோக்கம் வள ஆதாரங்கள் செழுமையுற்றதான மத்திய ஆசிய பகுதியில் தங்களது நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு ஒரு பிராந்திய தளமாக இந்த நாட்டை ஆக்குவது தான். ஜேர்மனியின் அனைத்து ஸ்தாபன கட்சிகளுமே ஜேர்மன் துருப்புகளை திரும்பப் பெறுவது என்கிற கேள்வியே இல்லை என்பதை ஒப்புக் கொள்கின்றன. இந்துகுஷ் பகுதியில் தமது துருப்புகளுக்கு உதவும் பொருட்டு அரசாங்கம் சமீபத்தில் ஒரு மேல்தட்டு KSK சிறப்பு படைகளை அனுப்பியிருக்கிறது - இவர்களது வேலை தலீபான்களை தேடிப் பிடித்து அழிப்பது- என்கிற உண்மை இதனை உறுதிப்படுத்துகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved