:
ஐரோப்பா
Benelux countries intervene to bail out Fortis
போர்ட்டிஸை தப்புவிக்க பெனிலக்ஸ் நாடுகள் தலையிடல்
By Stefan Steinberg
1 October 2008
Use this version to print
|
Send this link by
email |
Email the
author
ஐரோப்பா முழுவதும் திங்களன்று கண்டத்தில் உள்ள முக்கிய வங்கிகள் பொறிவை எதிர்நோக்கியுள்ளன
என்ற செய்தியை கேட்டு பங்குச் சந்தைகள் தடுமாறி விழுந்தன.
பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி என்பது, அமெரிக்க கூட்டாட்சி சட்டமன்றத்தின் கீழ்
பிரிவான பிரதிநிதிகள் சபை வோல் ஸ்ட்ரீட்டிற்கு பிணைகொடுக்கும் திட்டத்தை நிராகரிக்கும் முன்னரே ஏற்பட்டது.
கண்டம் முழுவதும் நிதிய நிறுவனங்கள் கரைதல் பற்றி ஐரோப்பிய முதலீட்டாளர்களின் பெருகிய பீதியின் வெளிப்பாடுதான்
இது.
ஞாயிறும் திங்களும் ஐரோப்பிய அரசாங்கங்களும் தனியார் வங்கிகளும் --ஜேர்மனியின்
Hypo Real Estate,
பிரிட்டனின் Bradford & Bingley
மற்றும் டச்-பெல்ஜியன் போர்ட்டிஸ் குழு என மூன்று பெரிய வங்கிகளை பிணை எடுத்தன. இவற்றின் நடவடிக்கைகளை
தொடர்ந்து திங்களன்று ஐஸ்லாந்தில் ரேக்ஜாவிக்கில் உள்ள அரசாங்கம் ஐஸ்லாந்தின் மிகப் பெரிய வங்கிகளுள்
ஒன்றான Glitnir
மீது கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டது.
இந்த நான்கு வங்கிகளில் போர்ட்டிஸ் மிகப் பெரியது ஆகும். இது ஐரோப்பாவில்
உயர்மட்ட 50 வங்கிகளுள் ஒன்றாகும்; இதில் 85,000 பேர் உலகம் முழுவதும் பணி புரிகின்றனர். 50 நாடுகளில்
இது தீவிரமாக செயலாற்றுகிறது; சர்வதேச வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்களில் இதன் தொடர்பு ஐரோப்பாவின்
இதயத்தானத்தில் இருந்து கிழக்கு ஐரோப்பா (போலந்து), மத்திய ஆசியா (துருக்கி) மற்றும் சீனா வரை படர்ந்துள்ளது.
இத்துடன் இணைந்துள்ள போர்ட்டிஸ் காப்பீட்டுக் குழு ஐரோப்பாவில் உள்ள 10 மிகப் பெரிய காப்பீட்டு
நிறுவனங்களில் ஒன்றாகும்.
கடந்த ஞாயிறன்று டச், பெல்ஜியம் மற்றும் லுக்சம்பேர்க் அரசாங்கங்கள்
போர்ட்டிஸ் குழுவை மீட்பதற்கு, 11.2 பில்லியன் யூரோக்கள் கொண்ட பொதியுடன் விரைந்தன. வெள்ளியன்று
போர்ட்டிஸின் பங்கு விலை கிட்டத்தட்ட 21 சதவீதம் விழுந்தபின், மிகப் பெரிய நீர்மை நெருக்கடி பற்றிய வதந்திகள்
வந்தபின் இக்குறுக்கீடு ஏற்பட்டது. பெல்ஜியத்தின் பிரதம மந்திரி
Yves Leterme
அன்றே தலையிட்டு முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் கொடுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை இழக்கமாட்டீர்கள்
என்று உறுதி மொழியையும் கொடுத்தார். பெல்ஜியத்தின் நிதி மந்திரி
Didier Reynders,
வங்கி "எவ்வித திவால் பிரச்சினைகளையும் கொண்டிருக்கவில்லை" என்று அறிவித்தார்.
ஆனால் வார இறுதியில் அரசாங்கங்களின் தலைமைகள் போர்ட்டிஸ் பிரச்சினைகள் மிகத்
தீவிரம் என்று உணர்ந்து, தத்தம் நாடுகளில் போர்ட்டிஸ் செயற்பாடுகளில் 49 சதவீதத்தை பெனிலக்ஸ் அரசாங்கங்கள்
உடனடியாக தலையிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிவிற்கு வந்தன; இதையொட்டி வரிபணத்தைக்
கொண்டு அதன் நீர்மைக்கு (பணமாக்கக் கொள்ளும் தன்மைக்கு) உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
பகுதி அளவு தேசியமயமாக்குதல் பற்றிய பேச்சுவார்த்தைகள் பின்னர் ஐரோப்பிய
மத்திய வங்கியின் தலைவரான ஜோன்-குளோட் டிரிஷே (Jean-Claude
Trichet) தலைமையில் தொடங்கின. தன்னுடைய குறுக்கீடு
ஐரோப்பிய பகுதி முழுவதையும் போர்ட்டிஸின் பொறிவு சீர்குலைக்கக்கூடும் என்ற கவலையினால்தான் உந்துதல் பெற்றுள்ளது
என்று டிரிஷே தெளிவாக்கினார்.
"ஐரோப்பிய நிதிய மற்றும் பொருளாதாரக் குருதி கொட்டுதல்" என்பதற்கு ஒரே
மாற்றீடு விரைவில் அரசாங்கக் குறுக்கீடு ஒன்றுதான் என்று
De Standard
அறிவித்தது.
"சந்தையின் எஜமானர்களுக்கு விதிகள் பொருந்தாது என்பதுதான் சாதாரண நடைமுறையா?
நிச்சயமாக இல்லை, ஆனால் வேறு மாற்றீடு ஏதும் இல்லை... ஐரோப்பிய நிதிய, பொருளாதார குருதி
கொட்டும் பாதையில் முதலில் வீழ்ச்சியடையும் பகடைக்காய் போர்ட்டிஸ் என்னும் நிலையில் இருந்து காப்பாற்றப்பட
வேண்டும் என்றால் இந்த மீட்கும் திட்டம் மிகவும் முக்கியமானது." என்று அது கூறியது.
"கடந்த சில நாட்களில் போர்ட்டிஸை பொறுத்தவரையில் நாம் கண்டது நிதியப்
பிரிவில் ஒரு மிருகத்தனமான அகற்றுதல் என்ற நிகழ்வுதான். கொள்கை இயற்றுபவர்கள் மற்றும் வங்கிகளின் கூட்டு முயற்சிகள்தாம்
இத்தகைய அகற்றுதல் முறை குருதி கொட்டும் பாதையாக மாறாத வகையில் செய்யமுடியும்" என்று நாளேடு
தொடர்ந்து எழுதியது.
அமெரிக்காவில் போல்சனுடைய திட்டத்தை போலவே, பெனிலக்ஸ் ஒரளவிற்கு தேசியமயமாக்கும்
திட்டத் தொகுப்பு "வங்கி மீண்டும் செயல்படுவதை" நோக்கமாகக் கொண்டுள்ளது, அதாவது, போர்ட்டிஸில் தற்போதைய
நெருக்கடிக்கு காரணமான ஊகக்காரர்களுக்கு வரிப்பணத்தில் இருந்து பில்லியன் கணக்கில் அள்ளிக் கொடுத்தல்; அந்த
ஊகக்காரர்களுக்கு "விதிகள் பொருந்தாது". பெனிலக்ஸ் அரசாங்கங்கள் பங்குகளில் தங்கள் பிரிவை பின்பு விற்கும்
விருப்பத்தைத்தான் கூறியுள்ளன; இது போட்டிஸ் மீண்டும் ஒரு முழுமையான தனியார் தொகுப்பாக செயல்பட அனுமதிக்கும்.
இந்த குறுக்கிட்டின் முழு வழிவகையும், பில்லியன் கணக்கான யூரோக்களைக்
கொண்டது, ஒரு சில மணி நேரத்தில் நடைபெற்றது; ஐரோப்பிய பாராளுமன்றங்களுக்குள் எந்த விவாதமும்
இல்லாமல் நடந்தேறியது; இச்செலவை கொடுக்க வேண்டியுள்ள ஐரோப்பிய நாடுகளின் குடிமக்களிடம் எந்த
ஆலோசனையும் செய்யப்படவில்லை என்பதை குறிப்பிடத் தேவையே இல்லை.
இந்த பிணை எடுப்புக்கு ஆதரவு கொடுக்கும்
Willem Buite,
திங்களன்று பைனான்சியல் டைம்ஸில் கூறியது: "இதில் குறிப்பிடத்தக்க உண்மை, மூன்று ஐரோப்பிய ஒன்றிய
நாடுகளின் பன்னாட்டு நிதிய மீட்பு முயற்சி மிகக் குறைந்த நேரம் மற்றும் முயற்சியில் முடிக்கப்பட்டது என்பதுதான்;
உண்மையில், TARP
யின் மகவு, (போல்சனின் திட்டம்) அமெரிக்காவில் ஒன்றாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுவதைவிட குறுகிய
காலத்தில் இது நடந்தது. முறையாக நிறுவப்பட்டு ஆனால் செயல்படாத கூட்டாட்சி முறையை விட வளர்ந்து வரும்
கூட்டமைப்பு வெற்றி அடைகிறது."
முன்னோடியில்லாத வகையில் ஞாயிறன்று ஐரோப்பிய தலைவர்களின் குறுக்கீடு
வந்தபோதிலும், பெனிலக்ஸ் உடன்பாடு பற்றி பொருளாதார வட்டங்கள் மற்றும் பங்குதாரர்களின் தீர்ப்பு
பெருமளவில் எதிர்மறையாகத்தான் இருந்தது.
உடன்பாடு இடைத்தரகு செய்யப்பட்டு முடிக்கப்பட்டு 12 மணி நேரத்திற்குள், நிறுவனத்தில்
புதிய தலைமை நிர்வாக அதிகாரி Filip Diercks
ஒரு செய்தியாளர் கூட்டத்தில், போர்ட்டிஸ் ஒரு வலுவான தனியார் வங்கியாக இருக்கும் என்று அறிவித்து பேசிய
சில நிமிஷங்களில், அதன் பங்குவிலை சரிந்து 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 4 யூரோக்களுக்கு சற்றே கூடுதலாக
இருந்தது.
போட்டிஸின் எழுச்சியும் வீழ்ச்சியும்
போர்ட்டிஸின் விரைவான ஏற்றமும் வீழ்ச்சியும் சமீபத்திய ஆண்டுகளில் ஐரோப்பிய
நிதிய நிறுவனங்களின் பரந்த படிமங்களின் வளர்ச்சியின் அடையாளம் ஆகும். வங்கி நிறுவனம் முதலில் 1990ல்
நிறுவப்பட்டு பல ஐரோப்பிய வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களை தொடர்ச்சியாக எடுத்துக் கொண்ட வகையில்
முறையாக வளர்ந்தது. 1999ல் போர்ட்டிஸ் தன்னுடைய வரம்பை அட்லான்டிக் கடந்தும் விரிவாக்கி
American Bankers, Northern Star Insurance
Groups ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டது.
ஓராண்டிற்கு முன் வரைகூட வங்கி உலகில், ஒப்புமையில் சிறு பங்கைத்தான்
போர்ட்டிஸ் கொண்டிருந்தது; பின் அது Royal Bank
of Scotland, ஸ்பெயினின்
Santander
ஆகியவற்றுடன் இணைந்து நெதர்லாந்தின் மிகப் பெரிய நிதிய நிறுவனமான
ABN Amro வை
எடுத்துக் கொண்டது. இந்த வங்கிகளின் கூட்டமைப்பு ABN
Amro
விற்கு 70 பில்லியன் யூரோக்களை கொடுத்தது; ஒரு வங்கியை வாங்க கொடுக்கப்பட்ட மிக அதிக பணம்
இதுதான். இதில் போர்ட்டிஸின் பங்கு 24 பில்லியன் யூரோக்கள் ஆகும்.
ABN
Amro வை வாங்கியதில்
இருந்து போர்ட்டிஸின் பணமாக்கக் கொள்ளும் தன்மை குறைவு மற்றும் அதன் சந்தேகத்திற்குட்பட்ட முதலீடுகள் ஆகியவை
மெல்ல மெல்ல வெளியே வந்தன.
இந்த ஜூலை மாதம் நிறுவனம் கூடுதல் முதலீடாக அதன் திவால்தன்மை இலக்குகளை
தக்க வைக்க 5 பில்லியன் யூரோக்களை எழுப்ப முற்பட்டது. ஆகஸ்ட் மாதம் ஐரோப்பிய கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம்
இருந்து கூடுதலான நிதியங்களை எழுப்ப வந்த அழுத்தத்தின்பேரில், போர்ட்டின் சீன சொத்து மேலாண்மை வணிகம்
ஒன்றில் அது கொண்டிருந்த 49 சதவீத உரிமையை பிரிட்டிஷ் நிறுவனமான
Old Mutual
க்கு விற்றது.
இந்த நடவடிக்கைகள் எதுவும் போர்ட்டிஸ் பங்கு விலை குறைப்பை நிறுத்தப்
போதுமானதாக இல்லை. ஓர் ஆண்டிற்கு முன்பு ABN
Amro வை எடுத்துக் கொண்டதில் இருந்து போர்ட்டிஸின் பங்குகள்
அவற்றின் மதிப்பில் முக்கால் பங்கை இழந்துவிட்டன. கடந்த வாரம் மட்டும் நிறுவனத்தில் பங்கு விலை அதன் எளிதில்
பணமாக்க கொள்ளும் தன்மைக்கு பற்றி புதிய கவலைகள் ஏற்பட்ட அளவில் மூன்றில் ஒரு பங்கு சரிந்தது.
டச்சு வணிக நாளேடு
NRC Handelsblad இதைப் பற்றி கொடுத்த
முடிவுரை, "ஓராண்டுக்கு சற்று அதிகமான காலத்தில், போர்ட்டிஸ் ஒரு பெருமிதமான நிதிய அமைப்பில் இருந்து
வங்கி உலகில் தீண்டத்தகாத வங்கி என்ற நிலையை அடைந்தது."
போர்ட்டிஸ் குழுவின் சரிவு எந்த அளவிற்கு ஐரோப்பிய வங்கிகளும், நிதிய அமைப்புக்களும்
அமெரிக்காவில் குறைந்த பிணை மதிப்புடைய அடைமான நெருக்கடி தொடங்கியதில் இருந்து அதன் "நச்சுக் கடன்"
மலையில் தொடர்பு கொண்டிருந்தன என்பது வெளிப்பட்டுள்ளது. பல ஐரோப்பிய வங்கிகள் அத்தகைய கடன்களுக்கு
உடைந்துபோகக் கூடிய அளவிற்கு தொடர்பு கொண்டிருந்தது, உலகம் முழுவதும் அடிப்படையில் போலி மூலதனத்தின்
தடையற்ற வளர்ச்சியில் இருந்து வெளிப்பட்டுள்ளது, ஐரோப்பிய "பொதுநல" மாதிரி முதலாளித்துவம் அதன் அமெரிக்க
நிலைக்கு தக்கவிதத்தில் செயல்படும் மாற்றீடாக செயல்படும் என்று கூறிய அரசியல்வாதிகள், வர்ணனையாளர்கள்
கருத்தை மறுக்கிறது.
டச்சு நாட்டு நாளேடான
Trouw சமீபத்திய கருத்து ஒன்றில் குறிப்பிட்டது:
"அமெரிக்கா முறைதவறி நடந்து கொண்டதுதான் நெருக்கடியின் ஆரம்பமாகும். பல ஆண்டுகளாக அரசும்
குடிமக்களும் அபத்தமான முறையில் கடன்களை வளர்த்துக் கொண்டன; திரும்பக் கொடுப்பதாக இல்லை என்ற
முடிவிற்கு வந்ததுபோல் நடந்து கொண்டனர்."
Trouvw
கருத்தின்படி இதற்கு மாற்றீடு, "மற்றொரு வகை முதலாளித்துவம் ஆகும்;
ரைன் (Rhine)
முதலாளித்துவம்... இத்தகைய முதலாளித்துவ முறையும் வணிகம் தடையற்று
சந்தையில் போட்டியிடுவதை அனுமதிக்கிறது. ஆனால் அதில் கூடுதலான பாதுகாப்புக்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன...
அதிருஷ்டவசமாக நாம் நம்முடைய வேறுபாடுகளை தக்க வைத்துக் கொண்டோம். இங்கு குடிமக்களும் அரசும் அமெரிக்காவைவிட
குறைவான கடன்களைத்தான் கொண்டுள்ளனர். மேலும் அதிருஷ்டவசமாக ஒரு காசினோ பொருகளாதாரத்தைப் (Casino
Economy) போல் சுருட்டிக் கொண்டுபோகாமல், நாம்
வளத்தை கட்டாயம் உருவாக்க வேண்டிய திக்கை இப்போது நாம் அறிவோம்.
போர்ட்டிஸின் நெருக்கடியும், ஐரோப்பா நெடுகிலும் இருக்கும் பெருகிய எண்ணிக்கையிலான
வங்கிகளின் நெருக்கடியும் முற்றிலும் மாறான நிலைக்கு சாட்சியங்கள் ஆகும்; நெருக்கடியில் அகப்பட்டுள்ள ஐரோப்பிய
நிதிய நிறுவனங்கள் தங்கள் இழக்கும் தன்மையை இத்தகைய "காசினோ பொருளாதாரத்தில்" (சூதாட்டப்
பொருளாதாரத்தில்) தவிர்க்க முடியாத தொடர்பாக கொண்டிருந்தன என்பதற்கு சான்று ஆகும்.
எல்லைக்கு அப்பால் டச்சு வணிக நாளேடான
NRC Handelsblad
கடந்த வாரம் அதன் தலையங்கத்தில், பெரும் நிதானமான
குறிப்பைத்தான் காட்டியது: "வரம்பு இல்லாத, தடையற்ற வணிகம் இயல்பாக ஒரு சிறந்த உலகத்திற்கு
இட்டுச்செல்லும் என்ற கருத்தை இனி எவரும் கொள்ள முடியாது என்ற ஒரு காரணத்திற்காகவே, வேறு காரணம்
இல்லாவிடினும், தற்போதைய நிதிய நெருக்கடி ஒரு வரலாற்று நிகழ்வு ஆகும். பழைய தாராளவாத நயமான
கட்டுக்கதையான சந்தை என்பது தன்னையே திருத்திக் கொள்ளும் என்பது குறைமதிப்பிற்கு உட்பட்டுவிட்டது...
2008 கோடைப் பின்பகுதி வரலாற்றில் 20ம் நூற்றாண்டின் கடைசி அரசியல் சிந்தனைப் போக்கு அதன் முடிவை
அனுபவித்த கணம் என்று போகும். கம்யூனிசம் உறுதியாக மடிந்துவிட்டது என்று தோன்றிய நிலைக்கு 20 ஆண்டுகளுக்கு
பின்னர் அந்த நாட்களில் வெற்றி பெற்ற முறையும் கீழே விழுந்து விட்டது. இரு பனிப்போர் முகாம்களும் இப்பொழுது
நலிந்து விட்டன. திவால் தன்மை படிமம் பெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். அதன்பின் இறுதியில் 20ம்
நூற்றாண்டு முடிந்துவிடும்; எப்படி 19ம் நூற்றாண்டு 1914ல் முடிந்ததோ அப்படித்தான் இதுவும்."
இந்த நாளேடு இதன் பகுப்பாய்வின் உட்குறிப்புக்களை தெளிவாக எடுத்து உரைக்கவில்லை;
ஆனால் 19ம் நூற்றாண்டின் முதலாளித்துவத்தின் திவால்தன்மை முன்னோடியில்லாத மிருகத்தனமான போர்களுக்கு
கட்டியம் கூறிய சகாப்தம் ஆகும்; அதைத் தொடர்ந்து உலகின் முதல் சமூகப் புரட்சி ரஷ்யாவில் வெற்றிகரமாக
நடந்தேறியது.
See Also:
ஒரு மாசற்ற முதலாளித்துவத்தின் சர்வதேச நிதிய நெருக்கடியும் பிரமைகளும்
|