:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
US government brokers Citigroup takeover of Wachovia
Bank
அமெரிக்க அரசாங்கம் வாச்சோவியா வங்கியை சிட்டிகுழுமம் எடுத்துக் கொள்ள இடைத்தரகு
செய்தது.
By Barry Grey
30 September 2008
Use this version to print
|
Send this link by
email |
Email the
author
ஒரு சில மிகப் பெரிய வங்கி நிறுவனங்களின் கைகளில் நிதிய இருப்புக்கள் மற்றும் ஆதாரங்கள்
குவிக்கப்பட்டு, அமெரிக்க நிதிய முறை மறுசீரமைக்கப்பட்டது, திங்களன்று வாச்சோவியாவின் வணிக செயற்பாடுகள்
நாட்டின் மிகப் பெரிய வங்கியான சிட்டி குழுமத்திற்கு விற்கப்பட்டதன் மூலம் இன்னும் ஒரு மேலதிக அடி எடுத்து
வைத்துள்ளது.
வட கரோலினாவை தளமாகக் கொண்ட வாச்சோவியாவின்
Charlotte, அமெரிக்காவின்
நான்காம் மிகப் பெரிய வங்கியின் முடிவு, வாஷிங்டன் மியூச்சுவல் என்றும் அமெரிக்க வரலாற்றின் மிகப் பெரிய
வங்கிப் பொறிவு நடந்து நான்கே நாட்களில் வந்தது. அமெரிக்காவில் ஆறாம் மிகப் பெரிய சேமிப்பு மற்றும் கடன்
வங்கியான, சியாட்டிலை தளமாகக் கொண்ட வாமுவின் வங்கிச் செயற்பாடுகள், உடனடியாக JP
Morgan Chase இடம் விற்கப்பட்டது; இந்த உடன்பாடு மத்திய வைப்புத்தொகை
காப்பீட்டு நிறுவனம் (FDIC) என்னும் கூட்டாட்சி அமைப்பின் தரகு
மூலம் தடைபெற்றது. இதுதான் வணிக வங்கிகளின் சேமிப்புக்களுக்கு காப்பீடு கொடுக்கும் அமைப்பு ஆகும்.
நிதி மந்திரி ஹென்றி போல்சன் மற்றும் பெடரல் ரிசேர்வ் போர்டின் தலைவர் பென்
பெர்னன்கே இருவரும் வார இறுதியில் வாச்சோவியாவை வாங்க எவரேனும் உள்ளனரோ என்று தீவிர முயற்சியில்
ஈடுபட்டனர். ஜனாதிபதி புஷ்ஷும் கலந்து ஆலோசிக்கப்பட்டார் என்று செய்தி ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரிவாக்கம் அடைந்து கொண்டிருக்கும் கடன் மற்றும் வங்கி நெருக்கடியில் விழும் முதல்
பெரும் அமெரிக்க வங்கி வாச்சோவியா ஆகும்.
FDIC திங்கள் காலையில் சிட்டி குழுமம் சரிவின்
விளிம்பில் தடுமாறும் வாச்சோவை எடுத்துக் கொள்ளும் என்று அறித்தது; முதல் விற்பனை விலையான ஒரு பங்கிற்கு
$1 என்ற முறையில், கிட்டத்தட்ட $2.2 பில்லியனுக்கு. அரசாங்கம் வாச்சோவோவின் இழப்புக்கள் சிலவற்றை
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிறுவனத்தின் செயற்பாடுகள், சொத்துக்கள், கடன்கள் ஆகியவற்றை வாங்குவற்கு
சிட்டி குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிட்டி குழுமம் $42 பில்லியனுக்கும் அதிகமான இழப்புக்களை வாச்சோவோவின்
$312 பில்லியன் தொகை கடன் இழப்புக்களை எடுத்துக் கொள்ளும் என்று
FDIC ஒரு அறிக்கையில்
கூறியுள்ளது. இக்கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு அப்பால் வரும் இழப்புக்களைத்தான் எடுத்துக் கொள்ளும் என்றும்,
அதற்காக $12 பில்லியனை கூடுதல் விருப்ப பங்கு, பத்திரங்கள் இவற்றிற்கு கொடுக்கும் என்றும் கூறியுள்ளது.
இந்த பொறுப்பெடுத்தலானது
FDIC யின் வைப்பீட்டு
காப்புறுதி நிதியில் இன்னும் கூடுதலான அரிப்பை கொடுக்கும்; இந்த நிதிதான் வாடிக்கையாளர்கள் வணிக வங்கிகளில்
$100,000 வரை கொண்டுள்ள சேமிப்புக்களுக்கு உத்தரவாதம் அளிக்க பயன்படுகிறது. கடந்த ஜூலை மாதம்
இண்டிமாக்கின் சரிவு $8.9 பில்லியனை $45.2 பில்லியன் நிதியிலிருந்து குறைத்து இன்னும் ஆபத்தான முறையில்,
அதுவும் பெரிய, சிறிய நிதிய அமைப்புக்கள் டஜன் கணக்கில் சரியும் அபாயத்தை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில்
காலியாக ஆக்கியது.
சிட்டி குழுமம் வாச்சோவியாவின் $400 பில்லியன் சேமிப்புக்கள் மற்றும் 21 மாநிலங்களில்
இருக்கும் 3,300 கிளைகள் கொண்ட வலைப்பின்னலையும் பெற்றுக் கொள்ளும்.
அதிக பாதிப்பு இருக்கக்கூடிய மாறக்கூடிய வட்டிவிகிதமுள்ள அடைமான பிரிவில்
வாச்சோவியா அதிக அளவில் முதலீடு செய்திருந்தது; வீடுகள் மற்றும் கடன்கள் குமிழிகளின் உள் வெடிப்பு கடந்த
ஆண்டில் ஏற்பட்டதில் இருந்து, இக்கடன்கள் பலவும் ஒழுங்காகத் திரும்பி வரவில்லை. வங்கி கிட்டத்தட்ட $122 பில்லியன்
சரிசெய்யக்கூடிய வட்டி விகிதம் இருக்கும் வீட்டுக் கடன்களை கொடுத்துள்ளது; இத்தகைய இருப்புக்களில் இதுதான்
மிக அதிகமாகக் கொண்டுள்ள வங்கியாகும். இப்பொழுது திவாலாகிவிட்ட வாஷிங்டன் மியூச்சுவலைவிட இது கூடுதலாக
கொண்டிருந்தது. Fitch Ratings
ல் இருக்கும் பகுப்பாய்வாளர்கள் இத்தகைய கடன்கள் பாதுகாப்பு பொதிகள் என்ற முறையில் 45 சதவிகிதத்தை
அடையக்கூடும் என்று கணித்துள்ளனர்.
வங்கி வீடுகள் கட்டுபவர்கள் மற்றும் வணிக அளவில் நிலத்தை வாங்கி வளர்ப்பவர்கள்
ஆகியோருக்கு கடன் கொடுத்த வகையிலும் இழப்புக்களை சந்தித்தது. 2008 முதல் அரையாண்டில் வாச்சோவியா
$9.7 பில்லியன் இழப்புக்கள் ஏற்பட்டதாக அறிவித்தது. ஜூன் மாதம் நிர்வாகக்குழு
G. Kennedy Thomon
என்னும் வங்கியின் நீண்ட கால தலைமை நிர்வாகியை பணிநீக்கம் செய்தது. அவருக்கு பதிலாக ஜூலை மாதம்
கோல்ட்மன் சாக்ஸில் தலைவராகவும், பின்னர் கருவூலப் பிரிவின் தலைவராகவும் உள்ள ஹென்றி போல்சனின் உயர்மட்ட
உதவியாளர் ரோபர்ட் கே.ஸ்டீல் நியமித்தது.
இரு வாரங்களுக்கு முன்பு லெஹ்மன் பிரதர்ஸ் தோற்றதை அடுத்து, வாச்சோவிய
வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக்களை மிக அதிக அளவில் திரும்பப் பெறத் தலைப்பட்டனர்; வங்கியின் பங்கு
பெரிதும் சரிந்தது; கடந்த வாரம் இது $10 என்று நியூ யோர்க் பங்குச் சந்தையில் இருந்தது; பின் 95 சென்டுகளுக்கு
திங்கள் காலை 9 மணி வணிகத்தில் வந்தது. இது பெப்ருரி 2007ல் $48 க்கும் அதிகமாக விற்கப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு மெரில் லிஞ்ச் அமெரிக்க வங்கியால் வாங்கப்பட்டதை
அடுத்து, முக்கிய அமெரிக்க நிறுவனங்களின் தோல்வி மற்றும் வாங்கப்பட்டது என்பது, அமெரிக்க வங்கி சேமிப்புக்களின்
மூன்றில் ஒரு பகுதியை மூன்று பெருநிறுவனங்களான சிட்டி குழுமம், அமெரிக்க வங்கி மற்றும்
JP Morgan Chase ஆகியவற்றிடம் விட்டுள்ளது. இந்த நிதிய
நிறுவனங்கள் இப்பொழுது மிகப் பரந்த வகையில் கிளைகளின் வலைப்பின்னல்களை கொண்டு, சொத்து மதிப்புக்களை
டிரில்லியன் கணக்கிலும் கொண்டுள்ளன. இதையொட்டி இவை வணிகக் கடன்களில் இருந்து கடன் அட்டைகள், வீடுகள்
அடைமானம் வரை அனைத்திற்கும் கட்டணம், வட்டி செலுத்துதல் ஆகியவற்றை நிர்ணயிக்கும் உரிமையைக் கொண்டுள்ளன.
நிதிய முறையில் இன்னும் அதிகமாக ஏகபோக உரிமை என்பது சிறு, நடுத்தர
வங்கிகள் மீது அழுத்தத்தை அதிகரித்து அவற்றின் போட்டித் தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தி அவற்றுள் பலவற்றை
பெரிய போட்டியாளர்களுக்கு விற்கச் செய்யும் அல்லது மூடிவிடும்.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து முதலீட்டு வங்கியான பேய்ர் ஸ்டேர்ன்ஸ் ஜே.பி.
மோர்கன் சேசிற்கு விற்கப்பட்டதில் இருந்து --அந்த நடவடிக்கைக்கு பெடரல் ரிசேர்வ் ஜே.ப. ரோக்னுக்கு
உதவி தொகையாக மீட்பு நடவடிக்கைக்கு $29 பில்லியனை கொடுத்திருந்தது;
IndyMac Bankcorp.
என்னும் பெரிய கலிபோர்னிய சேமிப்பு, கடன் கொடுக்கும் வங்கி
முறிந்துவிட்டது, மற்றொரு மிகப் பெரிய வோல்ஸ்ட்ரீட் நிறுவனமாக லெஹ்மன் பிரதர்ஸ் முழுகியது; அரசாங்கம் அடைமானப்
பெருநிறுவனங்களான பானி மே மற்றும் பிரெட்டி மாக், மற்றும் காப்பீட்டுப் பெரு நிறுவனம் அமெரிக்க இன்டர்நேஷனல்
க்ரூப் ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு விட்டது.
புஷ் நிர்வாகத்தின் வோல் ஸ்ட்ரீட் தப்பிப் பிழைக்க திட்டமிட்டுள்ள $700 மில்லியனுக்கும்
மேலான நிதியைத் தவிர, அமெரிக்கக் கருவூலமும் பெடரல் ரிசேர்வும் ஏற்கனவே நூற்றுக்கணக்கான பில்லியன்
டாலர்களை நிதியத் தொழிலில் செலுத்தியுள்ளன; இவை குறைந்த வட்டிக் கடன்கள், வரிகொடுப்பவர் நிதியளித்த
உதவித் தொகைகள் என்ற விதத்தில் உள்ளன; பெரு மந்த நிலைக்கும் பின் மிகப் பெரிய நிதிய நெருக்கடியைக்
குறைக்கும் முயற்சிகளாக அவை உள்ளன. அதே நேரத்தில் நெருக்கடியை பயன்படுத்தி அரசாங்கம் வங்கி முறையை
பரந்த முறையில் ஒன்றுபடுத்தும் திட்டத்தையும் கொண்டுள்ளது.
சிட்டி குழுமம் வாச்சோவியாவை எடுத்துக் கொள்ளுதல் என்பது பெரிய அளவில்
வேலை குறைப்புக்களை கொடுக்கும்; அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்களில் ஏற்கனவே ஆகஸ்ட்
2007ல் இருந்து கடன் நெருக்கடிக்கு பின்னர் குறைக்கப்பட்ட 150,000 க்கும் அதிகமான வேலைகள் குறைப்பு
தவிர, இவையும் சேரும்.
கடந்த ஜூன் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரியான,
G. Kennedy Thompon விலகும் தொகுப்பூதியமாக $1.45 மில்லியனும்,
விரைவுபடுத்தப்பட்ட $7.25 மில்லியனை குறைந்த பிரிவு பங்குகளாகவும் பெற்றார்.
See Also:
வாஷிங்டன்
மியூச்சுவல் நிதிநிறுவனத்தின் சொத்துக்கள் ஜே.பி. மோர்கன் சேசினால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன
மிகப் பெரிய அமெரிக்க வங்கியின் இதுகாறும் இல்லாத திவால்
வோல் ஸ்ட்ரீட்டை பிணை எடுத்து காப்பாற்றுவதை நிராகரி!
1930களுக்கு மீண்டும் திரும்ப வேண்டாம்! வங்கிகள் பொதுவுடைமை ஆக்கப்பட வேண்டும்!
|