:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
The Obama-McCain debate: Right-wing politicians agree
on bailout and militarism
ஒபாமா-மக்கெயின் விவாதம்: வலதுசாரி அரசியல் வாதிகள் பிணை எடுப்பு மற்றும் இராணுவவாதத்தில்
உடன்பாடு
By Patrick Martin
29 September 2008
Use this version to print
|
Send this link by
email |
Email the
author
வெள்ளிக் கிழமை இரவு ஜனாதிபதித் தேர்தல் விவாதம் ஜனநாயகக் கட்சி பாரக்
ஒபாமாவிற்கும் குடியரசுக் கட்சி ஜோன் மக்கெயினுக்கும் நடந்த விவாதம் இரு கட்சி உத்தியோகப்பூர்வ முறையின்
வரம்பிற்குள் 2008 ஜனாதிபதித் தேர்தலில் இருவருக்கும் இடையே அதிக வேறுபாடு இல்லை என்பதை நிரூபணம் செய்தது.
இரு வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர்; வோல்ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க இராணுவவாதம் காப்பாற்றப்படுவதற்கு
ஏறத்தாழ ஒரேவிதமான நிலைப்பாட்டை முன் வைத்தனர்; உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த நிலைப்பாடுகள்
இவர்களை அதிதீவிர வலதின் பிரதிநிதிகள் என்று அடையாளம் காண வைத்திருக்கும்.
வோல்ஸ்ட்ரீட்டை முட்டுக் கொடுத்து நிலைநிறுத்த, தொழிலாளர்கள் மீது எந்தச்
சுமையை வைத்தாலும், இரு தரப்பினரும் அனைத்து இருப்புக்களும் திரட்டப்பட வேண்டும் என்று உடன்பட்டனர். ஒபாமா
கூறினார்: "நாம் விரைவில் செயல்பட வேண்டும்; நாம் அறிவார்ந்த முறையில் செயல்பட வேண்டும்."; வங்கிகளையும்
ஊகவணிகர்களையும் காப்பாற்ற எதற்காக விரைவில் செயல்பட வேண்டும் என்று அவர் விளக்கவில்லை; ஆனால், வீடுகள்
முன்கூட்டி விற்பனை, வேலைநீக்கம், தொழிலாளர்கள் வாழ்க்கை தரங்கள் அழிப்பு ஆகியவற்றை தடுக்க ஏன் விரைவில்
செயல்பட வேண்டும் என்று அவர் விளக்கவில்லை.
பிணை எடுப்பு பற்றிய பேச்சுவார்த்தைகள் வாஷிங்டனில் நடப்பது பற்றி மக்கெயின்
பாராட்டினார். "நீண்ட காலத்தில் முதல் தடவையாக குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் ஒன்றாக
அமர்ந்து நாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண முற்படுகின்றனர்" என்றார் அவர்.
இரு நாட்களுக்கு முன்பு, ஜனாதிபதி புஷ் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி அமெரிக்க
முதலாளித்துவம் திவால் ஆகிவிட்டது என்று கூறுவதைத் தவிர கிட்டத்தட்ட அனைத்தையும் கூறினார்; முதலீட்டு வங்கிகள்
"தவிர்க்க முடியாமல்" சரியக் கூடும், "அமெரிக்காவின் நிதிய முறையில் செயற்பாடுகள் ...அப்படியே மேல
செல்ல முடியாமல் நின்றுவிட்டன", "ஒரு நிதிய பீதி ஏற்பட்டுள்ளது", "ஒரு நீண்ட, வேதனை தரும் மந்தநிலை"
போன்ற சொற்றொடர்களை கூறினார்.
ஒபாமாவும் மக்கெயினும் அத்தகைய பேரழிவுச் சித்திரத்தை
கொடுக்கவில்லை; அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்களுடைய வருங்காலக் கொள்கைமீது வோல்ஸ்ட்ரீட்
பிணைநிதிய தொகை $700 பில்லியன் எந்தவித பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றிய வினாக்களுக்கு பதில் கூறுவதை
தவிர்த்தனர். நிதிய நெருக்கடி பற்றிய விவாதம், கிட்டத்தட்ட மொத்தத்தில் பாதி நேரத்தை எடுத்துக்
கொண்டது, மக்களை உறங்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்ததே அன்றி வேட்பாளர்களின் நிலைப்பாடுகளை
எடுத்துக் கூறுவதற்கு அல்ல.
வெளியுறவுக் கொள்கை பற்றி இரு வேட்பாளர்களும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன்
இராணுவ சக்தியை உலகெங்கிலும் செலுத்தும் உரிமை கொண்டுள்ளது, "தலைமைத் தளபதி," தேவை எனக் கருதும்
எந்த நாட்டின் மீதும் தாக்கவும் படையெடுக்கவும் முடியும் என்பதை ஒப்புக் கொண்டனர். ஈராக்கின் படிப்பினை
"நாம் இராணுவ வலிமையை பயன்படுத்த தயக்கம் காட்டக்கூடாது என்றும், ஒரு ஜனாதிபதி என்ற முறையில் அமெரிக்க
மக்களின் பாதுகாப்பிற்கு இராணுவத்தை பயன்படுத்த ஒருபோதும் தயக்கம் காட்டமாட்டேன்" என்றும் ஒபாமா
கூறினார்.
இரு வேட்பாளர்களும் முக்கியமாக அமெரிக்க ஆக்கிரோஷத்திற்கு எந்த நாடுகள் இலக்கு
கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றி மோதினர்; ஒபாமா ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் இரண்டும் இலக்கு
கொள்ளப்பட வேண்டும் என்று கூறுகையில், மக்கெயின் ஈராக் மிது குவிப்புக் காட்டினார். இருவருமே ஈரான்,
ரஷ்யா இரண்டையும் அச்சுறுத்தினர். வாஷிங்டன் போஸ்ட் இருவருக்கும் இடைய வெளியுறவு பற்றி இருந்த
ஒருமித்த கருத்தை பாராட்டி சனிக் கிழமை வெளியிட்ட தலையங்கத்தில் அறிவித்தது; "பாரக் ஒபாமா மற்றும்
ஜோன் மக்கெயின் இருவரும் வாக்காளர்கள் நினைக்கக் கூடிய அளவிற்கு வேறுபாடு காட்டியதாக பேசினாலும்,
உண்மையில் அதிக வேறுபாட்டை கொண்டிருக்கவில்லை."
விவாதத்தின் முக்கிய கூறுபாடு "மாற்றம்" என்பது பற்றி அதிகமாக பேசி வந்த ஒபாமா
மக்கெயின் கூறியவற்றிற்கு எந்த அளவிற்கு உடன்பாட்டைக் காட்டினார் என்பதுதான். நிதியச் சந்தைகளில் ஒரு அசாதாரண
கொந்தளிப்புக்கள் இருந்ததற்கு பின், ஒபாமா அவருடைய குடியரசு போட்டியாளருக்கு எதிராக தாக்குதல் நடத்த
பெரும் வாய்ப்பை கொண்டிருந்தார். மாறாக அவர் பல முறையும் ஏதேனும் ஒருவிதத்தில் மக்கெயின் "முற்றிலும்
சரி" என்றுதான் அறிவித்து வந்தார்; விவாதத்தின்போது 11 முறை அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த ஒப்புதல்கள் பற்றிய அறிவிப்புக்கள் சிலவற்றை மேற்கோளிடுதல் உகந்தது;
ஏனெனில் இவை ஒபாமா பிரச்சாரத்தில் உள்ள மரபார்ந்த மற்றும் வலதுசாரி அரசியல் சார்பை முற்றிலும்
நிரூபணம் செய்கின்றன.
நிதிய நெருக்கடி பற்றி: "செனட்டர் மக்கெயின் நாம் கூடுதாலன பொறுப்பை
காட்ட வேண்டும் எனக் கூறுகையில் முற்றிலும் சரியாகத்தான் உரைக்கிறார் என்று நினைக்கிறேன்."
செலவினங்கள் பற்றி: "செலவுகள் ஒதுக்கப்படும் முறை, வழிவகை தவறாகப்
பயன்படுத்தப்பட்டுள்ளது என்று செனட்டர் மக்கெயின் கூறுவது முற்றிலும் சரியே."
வரிவிதிப்பு பற்றி: "ஏட்டளவில் வணிகத்தின் மீதான வரிகள் இந்த நாட்டில் அதிகமாகக்
காணப்படுகின்றன என்று ஜோன் கூறினார்; அவர் முற்றிலும் சரியாகத்தான் கூறியுள்ளார்."
கூட்டாட்சி வரவு/செலவு திட்டம் பற்றி: "ஜோன் கூறுவது சரியே, நாம் செலவினங்களை
குறைக்க வேண்டும்."
ஈராக் பற்றி: "செனட்டர் மக்கெயின் எமது துருப்புக்கள் மற்றும் இராணுவக்
குடும்பங்கள் காட்டியுள்ள அசாதாரண தியாகத்தின் விளைவினால் வன்முறை குறைக்கப்பட்டுள்ளது என்று கூறியிருப்பது முற்றிலும்
சரியே."
பாக்கிஸ்தானில் இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தலை பற்றி, "ஜோன், ...நீங்கள்
ஜனாதிபதிகள் பெரும் நிதானத்துடன் தாங்கள் பேசுவது பற்றி இருக்க வேண்டும் என்பது முற்றிலும் சரியே."
ஈரான் பற்றி; "செனட்டர் மக்கெயின் முற்றிலும் சரியே; ஒரு அணுவாயுதம் கொண்ட
ஈரானை நாம் பொறுத்துக் கொள்ள முடியாது."
இவ்விதத்தில் ஒபாமா தானும் மக்கெயினும் ஒரு பொதுவான வடிவமைப்பில்தான் பங்கு
கொள்ளுவதாக ஒப்புக் கொண்டார்; அதாவது அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நலன்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்
காப்பாற்றுவதாக. ஒரு சோசலிச வேட்பாளருடன் அவர் விவாதித்திருந்தால், எந்தக் கருத்துடனும் அவர் உடன்பட்டிருக்கமாட்டார்.
இந்த அளவு ஒருமித்த கருத்து இருக்கும்போது, செய்தி ஊடகம் தீவிரமாக எந்த
வேட்பாளர் விவாதத்தில் "வெற்றி பெற்றார் என்று தீவிரம் காட்டியது உண்மை பிறழ்ந்த, ஏன் அபத்தமான
தன்மையை கூட கொண்டிருந்தது. தேர்தலில் முக்கிய காரணி, வேட்பாளர்களுக்கு மக்கள் கொடுக்கும் எதிர்வினை
என்பது இல்லை; ஆனால் நிதிய மற்றும் அரசியல் நடைமுறையின் அணுகுமுறை எப்படி உள்ளது என்பதுதான்; இவை ஒபாமா
பிரச்சாரத்திற்கு ஆதரவாக கடந்த சில வாரங்களாக உள்ளன; குறிப்பாக வோல் ஸ்ட்ரீட் பிணையில் எடுக்கப்பட
ஒபாமா வழிநடத்தி நின்றதில் இருந்து ஆகும்.
ஒபாமா நடந்து கொள்ளும் விதம் பற்றி இரு வித விளக்கங்கள் கூறப்பட முடியும்;
ஒன்று மக்கெயினின் செருக்குற்ற முறையிலான இராணுவவாதம், பெருவணிகம் ஆகியவற்றிக்கு முன் கணிசமான அரசியல்
கோழைத்தனம் என்பது. ஒபாமா சற்றே வெட்கம் அடைந்து விரும்பும்போது மக்கெயினை குறுக்கிட அனுமதித்தார்
எனக்கூற முடியும்.
ஆனால் மிக உயர்ந்த அளவில் திரித்து தேவைப்படும் வகையில் அளிக்கப்படும் ஜனாதிபதி
தேர்தல் விவாதங்களின் தன்மையில், ஒபாமா குறிப்பிட்ட வழிவகையின்படித்தான் செல்கிறார் என்று கூறவியலும்; ஒபாமா
இருகட்சிகளின் ஒருமித்த கருத்தை நாடுபவர் போல் காட்டிக் கொள்ள ஜனநாயகக் கட்சிப் பிரச்சாரம்
வேண்டுமென்றே அவ்வப்பொழுது முறையாக மக்கெயினுடன் உடன்பாடு காணும் அறிக்கைகளை வெளியிடும் முடிவை
சேர்ந்திருக்க வேண்டும் என்று செய்திகள் கூறின.
இது தேர்தல் உத்தியைவிடக் கூடுதலான விஷயம் ஆகும்; ஜனநாயகக் கட்சியின் அடிப்படைத்
தன்மையை, அது ஒரு பெரு வணிகத்தின் ஏகாதிபத்திய கட்சி, ஆயினும்கூட அமெரிக்க அரசியல் முறையில் தொழிலாள
வர்க்கத்திற்கு முறையீடு செய்தல், பொதுவாக ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு ஆதரவாளர் எனக் காட்டிக்
கொள்ளும் வகையில் வெளிப்படுத்துகிறது.
இதுதான் முக்கிய ஜனநாயகக் கட்யினரின் அறிக்கைகளுக்கு இத்தகைய அரைகுறை விருப்ப,
வாய் கட்டிப்போடப்பட்ட தன்மையை கொடுக்கிறது. ஒபாமாவும் அவருடைய குழுவினரும் எப்பொழுதும் தங்கள் உள்
முரண்பாடுகளிலேயே தடுமாறி விழுகின்றனர். ஏனெனில் அவர்கள் ஆளும் உயரடுக்கிடம் மொத்தமாக தீவிர வலது
சார்புடைய சமரச அடையாளங்களை காட்டி உறுதி தந்து கொண்டிக்கையிலேயே, "மக்கள் கட்சி" என்றும் தங்களைக்
காட்டிக் கொள்ள முற்படுகின்றனர்
விவாதத்தின் போக்கில் பொருளாதார நெருக்கடியில் தன்னுடைய கருத்துக்களை கூறுகையில்
மக்களை திருப்தி செய்யும் வகையில் பேசுவது எதையும் ஒபாமா தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய
கருத்துக்கள் மக்களை இலக்கு என்று கொண்டிராமல் பெரும்பாலும் அவருடைய பிரச்சாரம் முக்கிய நிதிய நலன்கள்
அவர்களுடைய செய்தி ஊடக பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய முக்கிய தளத்தைத்தான் இலக்காகக் கொண்டிருந்தது.
சில நேரம் மக்களை திருப்தி செய்யும் வகையில் வோல் ஸ்ட்ரீட்டின் பேராசை, ஊழல்
பற்றி மக்கெயின் கருத்துக்களை தெரிவித்திருந்தாலும், ஜனநாயகக் கட்சியினர் பெருவணிகத்திற்கு தாங்கள் எந்த விதத்திலும்
தொழிலாளர்களிடையே கொண்டிருக்கும் பெயரளவு "தளத்தைக்கூட" அவர்களுக்கு எதிராகத் திரட்டுதல், தூண்டுதல்
ஆகியவற்றை செய்வதாக இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஒபாமா, அமெரிக்காவின் ஆளும் உயரடுக்கின் வலதுசாரித் திட்டத்திற்கு ஒரு மாற்றீட்டை
பிரதிபலிக்கவில்லை; மாறாக வண்ணப்பூச்சு கொடுத்து இத்திட்டத்தை தொடரத்தான் விரும்புகிறார், முடிந்தால்
அதிகப்படுத்த நினைக்கிறார். ஏகாதிபத்தியப் போர், பொருளாதார சிக்கன நடவடிக்கைகள், ஜனநாயக உரிமைகளின்
மீதான தாக்குதல் ஆகியவை கீழிருந்துதான் வரும்; இரு கட்சி முறைக்கு எதிராக அவற்றில் இருந்து சுயாதீன முறையில்,
ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்கள் அரசியல் ரீதியாய் அணிதிரட்டப்படுவதிலிருந்துதான்
வரும்.
See Also:
ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினர் தேர்தல் விவாதத்தில் இருந்து வோல்ஸ்ட்ரீட் பிணை எடுப்பை
அகற்றுவதில் ஒன்றாக சதி
|