:
செய்திகள் ஆய்வுகள்
:ஆசியா
:
ஜப்பான்
Taro Aso: third Japanese prime minister in two years
டரோ அசொ: இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது ஜப்பானிய பிரதம மந்திரி
By John Chan
27 September 2008
Use this version to print
|
Send this link by
email |
Email the
author
செப்டம்பர் 22ல் ஆளும் தாராண்மை ஜனநாயக கட்சியின் (LDP)
தலைவர் பதவியை டரோ அசொ (Taro
Aso) வென்ற பின்னர், ஜப்பான் பாராளுமன்றத்தின் கீழ் சபையான
டயட், அவரை புதனன்று ஜப்பானின் புதிய பிரதம மந்திரியாக நியமித்தது.
LDP அரசாங்கத்தின்
சிறுபான்மை ஆதரவு மற்றும் ஒரு சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் ஜப்பானிய பொருளாதார வீழ்ச்சிக்கான அறிகுறி
ஆகியவற்றிற்கிடையில், முன்னாள் பிரதம மந்திரி யாசோ ஃபுகுதாவிடமிருந்து (Yasuo
Fukuda) அசொ பதவி ஏற்றுக்கொள்கிறார்.
2007 LDP மேல் சபையில் அதன்
பெரும்பான்மையை இழந்தவுடன், அசொ, அவருக்கு முன்னாள் பதவியில் இருந்தவரைப் போலவே, எதிர்கட்சியான
ஜப்பான் ஜனநாயக கட்சியின் (DPJ)
சட்டமன்ற இடையூறூகளை எதிர்கொண்டார். உண்மையில், மேல்சபை
அசோவின் நியமனத்தை நிராகரித்தது;
அவருக்கு பதிலாக
DPJன் தலைவர் இச்சிரோ ஒஜாவாவின்
(Ichiro Ozawa)
பெயரை முன்மொழிந்தது;
ஆனால் கீழ்சபை அதை ஏற்கவில்லை. புதிய மந்திரிசபைக்கான
தேர்தலில் நடக்கும் எந்த திடீர் பாய்ச்சலையும் தனக்குச்சாதகமாக்கிக்கொள்வதற்கு, அசொ கீழ்சபைக்கான ஓர்
இடைத்தேர்தலுக்கு அழைப்பு விடுக்க கூடும்.
ஒரு வருடம் மட்டுமே பதவியிலிருந்த ஷின்ஜொ அபெவிடமிருந்து (Shinzo
Abe) பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர், பதவியேற்ற வெறும்
ஒரே ஆண்டில் செப்டம்பர் 1ல் ஃபுகுதா எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இராஜினாமா செய்தார். ஆப்கானிஸ்தான்
மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு இராணுவ ஆதரவு அளித்ததால் ஏற்பட்ட அரசாங்கத்தின் மீதான எதிர்ப்புகளாலும்,
விலையுயர்வுகள் மற்றும் மோசமான வாழ்க்கைத் தரங்கள் மீதான கவலைகளால் தூண்டப்பட்டதாலும் அபெ மற்றும்
ஃபுகுதா ஆகிய இருவருக்கும் ஆரம்ப கருத்துக்கணிப்பு புள்ளிகளில் கிடைத்த ஆதரவு படுவீழ்ச்சியை அடைந்தது.
ஓர் ஆண்டிற்கு பின்னர், அபெயை மாற்றுவதில் அசொ முன்னணியில் இருந்தார். ஆனால்
ஃபுகுதாவை பாதுகாப்பு கரங்களாக கண்ட கட்சியின் அதிகாரத் தரகுக் கன்னைகள் அசொவை ஒதுக்கி வைத்தன.
அபெவின் கீழ், குறிப்பாக அவருக்கு முன்னாள் இருந்த ஜூனிச்சிரோ கோய்சுமியின் (Junichiro
Koizumi) கீழ் மிக மோசமாகியிருந்த சீனாவுடனான உறவுகளை
ஃபுகுதா மேம்படுத்தினார். கோய்சுமி மற்றும் அபெ ஆகியோரின் ஆட்சியில் வெளியுறவு துறை மந்திரியாக இருந்த
அசொ, தற்போது ஜப்பானின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளியாக விளங்கும் சீனாவுடன், விரோத நிலைப்பாட்டைக்
கொண்டிருந்தார்.
திங்களன்று நடந்த தேர்தலில், 525க்கு 351 வாக்குகளுடன் அசொ மிக சுலபமாக
வெற்றி பெற்றார். விற்பனை வரியை இரட்டிப்பாக்குவது மற்றும் பொது திட்டங்கள் மீதான செலவுகளை
பெருமளவில் குறைப்பது ஆகியவற்றை அறிவுறுத்திய ஒரு நிதியத்துறை பழமைவாதியான காவோரு யொசானொ (Kaoru
Yosano) 66 வாக்குகள் பெற்று மிகவும் பின்தங்கினார்.
யூடிகோ கோய்கே (Yutiko Koike)
44 வாக்குகள் வித்தியாசத்தில் மூன்றாவதாக வந்தார். அவர் வெற்றி
பெற்றால் ஜப்பானின் முதல் பெண் பிரதம மந்திரியாவார் என்றும், கொய்சுமியின் (Koizumi)
தீவிர "கட்டுப்பாடற்ற
சந்தை"
சீர்திருத்த திட்டங்களுக்கு புத்துயிர் அளிப்பார் என்ற பிரகடனத்துடன்
கொய்சுமியால் நிறுத்தப்பட்டார். மற்ற இரு வேட்பாளர்கள்:
டோக்கியோவின் வலதுசாரி ஆளுனரின் மகன் நொபுதேரு
இஷிஹாரா மற்றும் முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஷிகேரு இஷிபா
ஆகிய இருவரும் முறையே 37 மற்றும் 25 வாக்குகளைப்
பெற்றனர்.
தாராண்மை ஜனநாயக கட்சி நிர்வாகிகளின் மட்டத்திலிருந்து, அசொ 141 வாக்குகளில்
அதிகபட்சம் 98 சதவீத வாக்குகளைப் பெற்றார். கட்சியின் கிராமப்புற அடிமட்டத்தையும், கட்டுமான
தொழில்துறையின் கூட்டாளிகளையும் ஊக்குவிக்கும் அரசாங்க செலவு திட்டங்களான
LDPன் பாரம்பரிய
பொருளாதார கொள்கைகளின் ஓர் ஆலோசகராக அவர் இருக்கிறார். அசொ, ஒரு புதிய திட்டத்தை அங்கீகரிக்க
உடனடியாக ஒரு இடைக்கால நிதியறிக்கையை கொண்டு வர விரும்புகிறார்;
ஆனால் அது மேல்சபையின் எதிர்ப்பை சந்திக்கிறது. அவர் நுகர்வு
வரியில் எவ்வித உயர்வையும் கொண்டு வருவதை கைவிட்டுள்ளார்.
அவரின் மந்திரிசபையை தேர்ந்தெடுப்பதில் அசொ ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்.
அது முன்னதாகவே அவர் ஒரு தேர்தலுக்கு தயாராகி வருதற்கான அறிகுறியாக உள்ளது. கோய்கேயைத் தவிர
அவரின் போட்டியாளர்கள் அனைவருக்கும் மந்திரிசபையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
தமக்கு அளிக்கப்பட்ட பதவியை அவர் கோய்கே ஏற்கவில்லை.
பொதுத்திட்டங்களுக்கு அதிக செலவிட வேண்டும் என்பதற்கு அசொவின் எதிர்ப்பாளராக இருந்த போதிலும்,
யசானோ அவரின் பொருளாதார மந்திரியாக அமர்த்தப்பட்டுள்ளார். இஷிபா வேளாண்துறை மந்திரியாகவும்,
அதிகாரம் மிக்க தாரண்மை ஜனநாயக கட்சியின் பொது செயலாளருக்கு பதில்செயலாளராக இஷிஹாராவும்
நியமிக்கப்பட்டுள்ளார்.
மந்திரிசபையில் சேர மறுத்திருக்கும் கோய்கேயின் முடிவு,
லிஞிறிக்குள் இருக்கும்
பிரிவினைகளைக் குறித்து காட்டுகிறது. "கசுமிகசேக்கியை
சீர்திருத்துவது அல்லது அழிப்பது"
தான் தமது வேலை என்று கடந்த வார விவாதத்தில் அறிவித்த கோய்க்கே,
அவரின் காட்டுமிராண்டித்தனமான சந்தை சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதில் கொய்சுமியின் அரசியல்
நடைமுறைக்கு எதிரான சொற்ஜாலங்களைப் பற்றியிருந்தார். டோக்கியோவின் மாவட்டமான
Kasumigaseki
அரசு அதிகாரத்துவத்தின் வீடுகளைக் கொண்டுள்ளது.
"வாக்காளர்கள்
எங்களிடம் பெரிய கேள்விகளைக் கேட்பார்கள். கோய்சுமியின் சீர்திருத்தங்களுக்கு முன்னர் இருந்த ஒரு நிலைக்கு
திரும்பலாமா அல்லது சீர்திருத்த முனைப்புக்களைத் தொடரலாமா?"
என்று அவர் கேள்வி எழுப்பினார்.
LDP க்குள், குறிப்பாக
நிர்வாகிகள் மட்டத்தில் அவருக்கு குறைந்திருக்கும் ஆதரவு, இந்த சீர்திருத்தங்கள் மீதான சமூக விளைவுகளுக்கு
அதிகரித்து வரும் பெரும்பான்மை விரோதத்தை தான் பிரதிபலிக்கிறது.
மற்றொரு புறம், கோய்சுமியின் செயற்பட்டியல் முன்னெடுக்கப்படவில்லை என்பதால்
பெரிய வியாபார நலன்கள் நிலைகுலைந்துள்ளன. செப்டம்பர் 24ல் அசாகி ஷிம்புன்-ல் வெளியான
தலையங்கம் ஒன்று, "கோய்சுமியின்
சீர்திருத்தத்திற்கான வலிமையான கருத்து LDPன்
முக்கிய கொள்கை விளக்கத்தால் முழுவதுமாக காணாமல் போய்விட்டதாக"
கவலை தெரிவித்தது.
LDPஐ அழிப்பதற்கான
கோய்சுமியின் திட்டத்திற்கு புறமுதுகு காட்டுவதன் மூலம்
LDP அதன் பதவியை இழக்கும் சரிவில் இருந்ததாகவும், அது
கட்சி அணிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்துவத்தின் பிடியையும் இழந்து வருவதாகவும் அந்த பத்திரிகை எச்சரித்தது.
ஏற்கனவே கடினமாக இருந்த போதினும், பொது திட்டங்கள் மற்றும் சமூக நல திட்டங்கள் மீதான கடுமையான
வெட்டுக்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், ஜப்பானிய பெருநிறுவனங்களின் சர்வதேச போட்டிகளைச் சமாளிக்கவும்
தேவைப்படுகிறது என்று அந்த தலையங்கம் குறிப்பிட்டது. தற்போது ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
180 சதவீதத்தில் நிற்கும் நிலையில், பிற எந்த
OECD நாட்டை
விடவும் ஜப்பான் மிக அதிகளவு பொதுக்கடனைக் கொண்டுள்ளது.
ஓர் இறுதி வடிவம்
அசொவின் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் கருத்து கணிப்பில் அதிக புள்ளிகளை
அவர் பெற்றது தான், LDP
அவரை தேர்ந்தெடுத்திருப்பதற்கு ஒரு வெளிப்படையான காரணியாக
இருந்தது. திட்டமிட்டு ஓர் இறுதி வடிவத்தை பெற்றுள்ள அவர், மங்கா (manga)
அல்லது ஜப்பானிய காமிக்ஸின் தீவிர ரசிகன் என்று தன்னைத்தானே
அறிவித்ததன் மூலம் நாட்டின் சமூகளவில் சீரழிந்துள்ள இளைஞர்களைக் கவர முயன்றார். ஜப்பான் டைம்ஸ்
கருத்துப்படி, "செப்டம்பர்
2006 டோக்கியோவிலுள்ள அகிஹபரா மாவட்டத்தில், இளம் மங்கா தொண்டர்களின் கவனத்தை கவர்ந்த அவரின்
தலையாய மேடைப் பேச்சுக்கு பின்னர், ஆளும் தாராண்மை ஜனநாயக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அசொவை
அக்கட்சியின் ஒரு எதிர்கால தலைவராக கவனித்தனர்."
எவ்வாறிருப்பினும், அவர் முகம் பரிச்சயமானதாக தான் உள்ளது. அவர் ஜப்பானிய
அரசியல் அமைப்பிற்கு மிகவும் நெருக்கமானவர். 1940ல் பிறந்த அசொ, நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க
குடும்பங்களில் ஒன்றிலிருந்து வந்தவர். 1868ல், ஜப்பானின் முதலாளித்துவத்தை பாரியளவில் விரிவுபடுத்த வழியைத்
திறந்து விட்ட, மெய்ஜி புணர்மானத்திற்கு தலைமை வகித்த மூன்று பிரபுக்களில் ஒருவரான ஒகூபு டோஷிமிச்சியின்
கொள்ளுப் பேரன் தான் அசொ. அவரின் தாயார் முன்னாள் பிரதம மந்திரி ஷிகேரு யொஷிதாவின் மகள் ஆவார்.
அவரின் சகோதரி அரசரின் மைத்துனரை மணந்திருந்தார் மற்றும் அவரின் மனைவி மற்றொரு பிரதம மந்திரியான
செங்க்கோ சுசுக்கியின் மகள் ஆவார்.
இரண்டாம் உலக யுத்தத்தின் போது பலவந்தப்படுத்தி உழைப்புக்களை சுரண்டிய ஒரு
சுரங்க குழுமத்தை அசொவின் குடும்பம் கொண்டிருந்தது. அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்திற்கு
அனுப்பப்படுவதற்கு முன்னர், அவர் ஜப்பானில் பொருளாதாரம் படித்தார். எவ்வாறிருப்பினும், அவரின் பழமைவாத
குடும்பம் அவர் அதிகளவில் "அமெரிக்கதன்மை"
பெற்று வருவதாக அஞ்சியதால் அவர் முன்னதாகவே நாடு
திரும்பினார். தந்தையின் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்னர், அவர் இலண்டன் பொருளாதார பள்ளியில் கல்வி முடித்த
பின்னர் 1973 முதல் 1979 வரை நிறுவனத்தின் தலைவராக இருந்தார். 1979ல் கீழ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட
அவர், முன்னாள் பிரதம மந்திரி Yoshiro Mori
உடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி கொண்டார்.
2001TM,
Mori
அவரை பொருளாதார மற்றும் நிதி மந்திரியாக நியமித்தார்.
2003ல், கொய்சுமி அவரை உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தொலைதொடர்பு
மந்திரியாகயும், பின்னர் 2005ல் வெளியுறவுத்துறை மந்திரியாகவும் நியமித்த போது அசொவின் முக்கியத்துவம்
அதிகரித்தது. கோய்சுமி ஈராக்கிற்கு ஜப்பானிய துருப்புகளை அனுப்பிய போதும், வடகிழக்கு ஆசியாவிற்கான, குறிப்பாக
சீனாவிற்கான கடுமையான வெளிநாட்டு கொள்கையை அறிவித்த போதும் அதை பாதுகாக்க அசொ பிரச்சார
ஊடகமாக இருந்தார். ஜப்பான் மத்திய கிழக்கில் அதன் செல்வாக்கை விரிவாக்க முடியும்,
ஏனென்றால்
"மென்மையான
நீலநிற கண்களை"
உடைய ஐரோப்பியர்களுடன் விரோதம் இருந்த போதினும்,
"மஞ்சள் நிற முகங்களை"
விட அரேபிய மக்கள் நம்பத்தகுந்தவர்கள் இல்லை என்று வெளிப்படையான
இனவாத வார்த்தைகளில் அவர் வாதிட்டார். ஜப்பானின் யுத்தகால அட்டூழியங்களை மறுத்தும், சீன இராணுவம்
நவீனத்துவமாக்கப்படுவதால் ஏற்பட்டிருந்த "அச்சுறுத்தல்"
குறித்தும் பல நிகழ்வுகளில் பேசி அவர் பெய்ஜிங்கிற்கு எரிச்சலூட்டி
இருந்தார்.
அசொவின் மந்திரிசபை அவரின் பாரம்பரிய நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது. செலவுகளைத்
தீவிரமாக தூண்டிவிடும் ஆலோசகரான ஷோய்ச்சி நகாகா- வை நிதி மற்றும் நிதிய சேவைகளுக்கான மந்திரியாக
அசொ அறிவித்துள்ளார். ஜப்பானின் கடுமையான கடன்களில் தவித்த வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த
1990களில், நிதிய சேவை முகவாண்மை உருவாக்கப்பட்டது. இதில் நிதி அமைச்சகம் சர்வதேச நிதிய
கொள்கைக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது. சர்வதேச நிதி நெருக்கடியை எதிர்கொள்வதற்கான
கொள்கையுடன் ஒத்து போகும் உடனடி தேவையுடன் இந்த பிரிவு பொருந்துவதாக இல்லை என்று அசொ அறிவித்தார்.
சமீபத்திய செலவு திட்டத்தை பாதுகாக்கும் வகையில், பொருளாதாரம் சரிவு முகட்டில் இருக்கும் போது, ஜப்பான்
பொதுக்கடன் குறைப்புக்கு தள்ளப்பட்டால், அது உலகின் நகைப்புக்குள்ளாகும் பங்குச்சந்தையாகும் என்று
Nakagawa எச்சரித்தார்.
Takeo Kawamura தலைமை
மந்திரிசபை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அசொவைப் போன்றே,
Kawamuraவும்
அவரின் சீனாவிற்கெதிரான விரோத போக்கில் நன்கு அறியப்பட்டவர். கடந்த ஆண்டு செயற்கைகோளினால் கண்டறிய
முடியாத சீனாவின் ஏவுகணை சோதனைக்கு ஒரு நேரடி பிரதிபலிப்பாக, ஜப்பான் இராணுவத்திற்கு விண்வெளியை பயன்படுத்துவதை
அங்கீகரிக்கும் அரசியல் அமைப்பை அவர் மே மாதம் வெளியிட்டார். எவ்வாறிருப்பினும், பெரிய வியாபார
நிறுவனங்களின் அழுத்தத்தை சந்தித்து வரும் அசொ, பின்வருமாறு அறிவித்து, ஒரு முக்கிய நடைமுறை நிலைப்பாட்டை
எடுத்துத்துள்ளார்: "சீனா
மற்றும் கொரிய குடியரசு இரண்டும் ஜப்பானின் முக்கிய கூட்டாளிகளாகும்."
அவர் முன்னாள் பிரதம மந்திரி யஷுகிரோ நாகாசோனே (Yasuhiro
Nakasone)ன் மகனான ஹிரோபுமி நாகாசோனே -ஐ வெளியுறவுத்துறை
மந்திரியாக நியமித்துள்ளார். அமெரிக்கா-ஜப்பான் கூட்டணியை வலிமையாக வலியுறுத்தும் ஹிரோபுமி நாகாசோனே,
சீனாவுடனும் சிறந்த உறவுகளைக் கொண்டுள்ளார்.
அடுத்த தேர்தல்களில், கீழ்சபையில்
LDP தோல்வியடையும்
என்று பல ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். LDPன்
தலைவராக அசொவிற்கு பாரிய ஆதரவு இருந்த போதினும் கூட, அவரின் மந்திரிசபை எதிர்பார்த்த அளவிலான
ஊக்கத்தை பெறவில்லை. கொயொடொ செய்தி நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில், கடந்த ஆண்டு
அவர் நியமிக்கப்பட்ட போது புகூடாவின் 60 சதவீதத்தை விட குறைவாக 48.6 சதவீதம் மட்டுமே அசொ
அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என்பதை எடுத்துக்காட்டியது.
Keio பல்கலைக்கழகத்தின் ஓர்
அரசியல் பேராசிரியரான Yasunori Sone
ராய்டர்சிடம் தெரிவித்ததாவது:
"அவர்கள்
[LDP] நவம்பர்
2ல் நடக்கவிருக்கும் தேர்தல் குறித்து பேசுகிறார்கள். ஆதரவு 50 சதவீதம் அல்லது அதற்கு மேலிருந்தால் அவர்
(அசொ) தேர்தலுக்கு அழைப்பு விடுவார் அல்லது 50 சதவீதத்திற்கு கீழிருந்தால் அவர் அவ்வாறு செய்யமாட்டார்
என்று நான் எண்ணினேன். ஆனால் அவர் காத்திருப்பதால் மட்டும் சூழ்நிலை சாதகமாக அமைந்துவிடாது. அவர்கள்
மேலும் மோசமாக தான் பாதிக்கப்படுவார்கள். அவர் திறமையான ஏதேனும் செயல்பாட்டை செய்ய கூடும்;
இடைத்தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் வாய்ப்புள்ளது... ஆனால்
கேள்வி என்னவென்றால், அவர்களால் வெற்றி பெற முடியுமா? என்பது தான்."
என்றார்.
1990களின் ஒரு குறுகிய காலகட்டம் தவிர,
LDP 50 ஆண்டுகளுக்கும்
மேலாக அதிகாரத்தைக் கைப்பற்றி இருந்தது. உண்மை என்னவென்றால், அது அதிகாரத்தை இழக்கும் எல்லையில்
நிற்பதென்பது, கட்சி தேவையான மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தும் தகுதியைக் கொண்டிருக்கிறது என்ற
பெருநிறுவன மேற்தட்டுக்கள் மத்தியிலுள்ள தவறான கருத்தை தான் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில் ஏற்கனவே
சட்டமாக்கப்பட்ட சீர்திருத்தங்கள் சராசரி மக்களின் வாழ்க்கை தரங்களை மிகவும் பாதித்துள்ளதால் கோபங்களும்,
முரண்பாடுகளும் பரவலாக தீவிரமடைந்துள்ளன. |