World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காObama's "left" cheerleaders and the right-wing transition ஒபாமாவின் "இடது" உற்சாகமூட்டுபவர்களும் வலதுசாரி நிலைமாற்றமும் By Bill Van Auken ஜனவரி மாதம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா பதவியேற்பு, பெருகிய முறையில் வலதுசாரி பண்பு நிலைமாற்றம் எடுத்திருக்கும் தயாரிப்புக்களானது, மத்தியதர வர்க்கத்தின் "இடதில்" இருந்து கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. Nation ஏடு போன்ற பதிப்புக்களில் பிரதிபலிக்கும் இந்தத் தொகுப்பினரின் கருத்துக்கள் ஒபாமா வேட்பாளர் தன்மை மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு அடிப்படை அரசியல் மற்றும் சமூக மாறுதலுக்கான கருவிகள் என்று ஊக்கப்படுத்தி வளர்க்கும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. "மாற்றத்தை நீங்கள் உறுதியாக நம்பலாம்" என்னும் ஒபாமாவின் கோஷத்தில் இருக்கும் உண்மையான பொருளுரையைத்தான் கடந்த பத்து நாட்கள் அம்பலப்படுத்த உதவியுள்ளன. முதலில் வலதுசாரி ஜனநாயக மக்கள் மன்ற பிரதிநிதியும் மில்லியனரும் முதலீட்டு வங்கியாளருமான ரஹ்ம் எமானுவல் பணியாளர்களின் தலைவர் என்ற நியமனம் வந்தது. அவருக்குப் பதவி அளிக்கப்பட்டவுடனேயே, எமானுவல் ஒபாமாவின் வெள்ளை மாளிகை, காங்கிரஸில் கூடிய வலுமை பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மைக்கு ஈடுகொடுத்து நிற்கும் என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் உறுதியளித்தார். இதன்பின் பென்டகன் மற்றும் CIA ல் பொறுப்பெடுக்கும் குழுக்களுக்குத் தலைமை தாங்கப்படுவதற்கு ஈராக்கிய போர் ஆதரிப்போராலும் மற்றும் மூத்த CIA அதிகாரிகளாலும் முறையே நிரப்பப்படும் என்றும், இவர்கள் சித்திரவதை, அசாதாணக் கடத்தல்கள் மற்றும் போலி உளவுத் தகவல் தயாரிப்பு ஆகியவற்றை ஈராக்கிற்கு எதிரான போரில் தயாரித்தது ஆகியவற்றில் உடந்தையாக இருந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. வெள்ளியன்று செனட்டர் ஈராக்கிய படையெடுப்பிற்கு ஆதரவாக வாக்களித்தார் என்று பிரச்சாரத்தின் போது தாக்கியிருந்த ஹில்லாரி கிளின்டனையும் சேர்த்துக் கொள்ள இருக்கிறார் என்ற தகவலும், ஈராக்கில் "படைப்பெருக்கத்திற்கு" ஆக்கம் அளித்த ரொபேர்ட் கேட்ஸை பாதுகாப்பு மந்திரியாக தக்க வைத்துக் கொள்ள இருக்கிறார் என்ற தகவல் ஆகியவற்றுடன் நியூயோர்க்கின் பெடரல் ரிசேர்வ் தலைவர் டிமோதி கீத்னரை நிதி மந்திரியாக நியமிக்க உள்ளார் என்ற தகவலும் வந்துள்ளன. வங்கிகள் பிணை எடுப்பிற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் ஒபாமாவின் நிதி அமைச்சரகத்திற்கு தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என்ற செய்தி வோல் ஸ்ட்ரீட்டில் பங்கு விலைகளை பெரிதும் உயர்த்தியது. இத்தகைய போக்குகள் தமது சொந்த நலனுக்கு பாடுபடும் வங்கியாளர்கள் குழுக்கள் மற்றும் வாஷிங்டனில் செல்வாக்கு உடையவர்கள் என்பவற்றுடன் இணைந்து ஒபாமாவின் நிலைமாற்றமானது, கிளின்டனின் முன்னாள் அதிகாரிகளாக இருந்து பெருநிறுவனத்திற்கு செல்வாக்கு தேடுபவர்களும் உத்தியோகபூர்வமாக வாஷிங்டனுக்கு மீண்டும் திரும்ப இருக்கையில், இப்பொழுதிலிருந்து இன்னும் இரண்டு மாதத்தில் இருக்கப்போகும் நிர்வாகத்தைப் பற்றிய முன்தோற்றம் கிடைத்துள்ளது. எது உருவாகிக் கொண்டிருக்கிறது என்றால், மாற்றம் என்பதை விட கடந்த எட்டு ஆண்டுகள் நிகழ்வுகளுடன் தொடர்ச்சி என்பதைப் பிரதிபலிக்கும் அரசாங்கம்தான் என்று கூறலாம். இதன் நபர்களும் அவர்கள் அடையாளம் காட்டும் கொள்கைகளும் வெளிநாட்டுப் போர்களின் தொடர்ச்சி மற்றும் அமெரிக்க நிதிய உயரடுக்கின் நலன்களை பரந்த தொழிலாளர்களின் இழப்பில் காக்க முற்படும் கொள்கைகளின் தொடர்ச்சியும்தான் வரவிருக்கின்றன. "நம்பிக்கை", "மாற்றம்" போன்ற ஒபாமாவின் அலங்காரச் சொற்கள் வளர்த்துள்ள போலித் தோற்றங்கள் ஏற்படுவதற்கான நிலைமை சிதறடிக்கப்பட்டு, பொருளாதார நெருக்கடியினால் உந்தப்பெறும் கொந்தளிக்கும் போராட்டங்கள் நிரம்பிய காலம் தவிர்க்க முடியாமல் வரவிருக்கிறது. போலித் தோற்றங்களும் இன்னும் கூடுதலான போலித் தோற்றங்களும் நிறைந்துள்ளன என்பது உண்மையே. நவம்பர் மாதம் 4ம் தேதி மில்லியன் கணக்கான அமெரிக்க மக்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று இரண்டு குற்றம் சார்ந்த போர்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடனும், முன்னோடியில்லாத வகையில் சமூக சமத்துவமின்மைக்கு வழிவகுத்துள்ள மற்றும் பெருமந்த நிலைக்குப் பின் மிக ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி என்று உள்நாட்டில் இருக்கும் கொள்கைகளுக்கு எதிரான தங்கள் சீற்றத்தை வெளியிடவும் வாக்குப் பதிவு செய்தனர். இதைத் தவிர ஜனநாயகக் கட்சி மற்றும் அது பாதுகாக்கும் இலாப முறைக்கு ஆதரவு தருவதற்காக தங்களையும் ஏமாற்றிக் கொண்டு பிறரிடையே போலித் தோற்றங்களையும் வளர்த்து வரும் விதத்தில் அரசியலை பிழைப்பாகக் கொண்டவர்களும் உள்ளனர். இதுதான் அமெரிக்காவில் நீண்டகாலமாக இடது தாராளவாதத்தின் மையக் கருவியாக இருக்கும் Nation உடைய அரசியல் சிறப்பு ஆகும். இதன் கட்டுரையாளர்கள் பொறுப்பெடுப்பை சூழ்ந்துள்ள நியமனங்கள் மற்றும் அறிக்கைகளை ஒட்டி போலித் தோற்றங்களை வளர்க்கும் பணியை செய்வது மிகவும் கடினம் என்று காண்கின்றனர்; எனவே தங்கள் கவலையை தெரிவித்துள்ளனர். அவர்களுடைய கவலைகளின் இதயத்தானத்தில் அமெரிக்க முதலாளித்துவ முறையை நெருக்கடி கவ்விக் கொண்டிருக்கும் நேரத்தில், அமெரிக்க தொழிலாளர்கள், மாணவர்கள் இளைஞர்கள் ஆகியோரிடம் தீவிர இடதிற்கான திருப்ப நிலைமை ஏற்பட்டுக் கொண்டிருக்கையில், ஒபாமா மிகத் தீவிரமாகவும் வெளிப்படையாகவும் வலதுபுறம் நகர்ந்து கொண்டிருக்கிறார் என்ற உண்மை உள்ளது. Nation ன் கட்டுரையாளர் Tom Engelhardt புதனன்று வெளியிட்ட கட்டுரை ஒன்றில் இதுகாறும் கொடுக்கப்பட்டுள்ள நியமனங்கள் பற்றி எழுதிய கருத்தாவது: "2008 தேர்தலில் ஹில்லாரி கிளின்டன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற முடிவிற்கு நீங்கள் வந்தால், அதற்காக மன்னிப்பைப் பெறலாம்." Politico.com கட்டுரை ஒன்று "இதுவரை நியமிக்கப்பட்ட பொறுப்பெடுக்கும் குழு அல்லது பிற பதவிகளுக்கானவற்றில் 47ல் 37 நபர்கள் கிளின்டன் நிர்வாகத்துடன் பிணைப்பு உடையவர்கள்; இவருடைய [ஒபாமாவின்] பொறுப்பெடுப்பு ஆலோசனைக் குழு இல் ஒருவரை தவிர மற்றவர்களுக்கும் கிளின்டன் நிர்வாகத்துடன் தொடர்புடையவர்கள் ஆவர்.ஆயினும்கூட, ஒபமாவே "ஒரு புதிய தென்றல் போல்தான்" என்று எங்கல்ஹர்ட் விவரிப்பதுடன் "ஜனநாயகக் கட்சிக்கு நல்ல காலத்தில் (அல்லது கெட்ட காலத்திலும்), ஒபாமா வழக்கமான வாஷிங்டன் சிறப்பு அழுத்தங்களுக்கு இடையே தன்னுடைய சமநிலையை தக்க வைத்துக் கொள்ளுவார் என நம்புகிறோம்" என்று கூறியுள்ளார். இதே போல், லாஸ் ஏஞ்ச்ஸ் டைம்ஸின் முன்னாள் கட்டுரையாளரும் இப்பொழுது Nation க்கு எழுதுபவருமான Robert Scheer ஒபாமாவின் ஆலோசகர் Zbigniew Breziznski உடைய பங்கு பற்றி கவலை தெரிவித்து அவர் எப்படி ரஷ்யாவுடன் மோதலை அதிகரிக்கும் வகையில் கொள்கைகளை வகுத்தார் என்றும் கூறியுள்ளார். "ஒபாமாவின் நெருக்கமான ஆலோசகர்கள் சிலர் பிடிவாதமான பருந்துக் குணத்தை கொண்டு பனிப்போர்க்காலத்தில் ரஷ்யர்களுடன் அழுத்தங்களை தேவையற்ற முறையில் தூண்டுபவர்களாக இருந்தனர் என்பது அமைதியின்மையைத் தருகிறது." என்று ரொபேர்ட் ஷீர் எழுதியுள்ளார். இதன்பின் Brezezinski உடைய முன்னாள் ஆலோசகரான கேட்சை, ரஷ்யாவிற்கு எதிரான கடினப் போக்கு தேவை என வலியுறுத்துபவரை பென்டகன் அதிகாரியாக தக்க வைத்துக் கொள்ளுவது பற்றியும் கவலை தெரிவித்துள்ளார். "ஒபாமா இன்னும் பதவிக்கு வரவில்லை என்று அறிவேன்.பனிப்போர்க்கால கருத்துக்களை அவர் கடந்து விட்டார் என்று எனக்குத் தோன்றியதால்தான் ஒரளவு உற்சாகத்துடன் அவருக்கு வாக்களித்தேன். ஆனால் இப்பொழுது சிறிதும் மனவருத்தப்படாத ஜனநாயகப் பருந்துகள்தான் வட்டமிடுவதைக் காண்கையில் நான் வாங்குபவன் என்ற முறையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று அவர் எழுதியுள்ளார். இரு கட்டுரைகளிலும் வெளியிடப்பட்டுள்ள அடிப்படைக் கருத்தாய்வுகள் ஒரே தன்மையைத்தான் கொண்டுள்ளன: தேர்தலை தொடர்ந்து "முன்னேற்றம் நிறைந்த" ஒபாமா வலதுசாரி உதவியாளர்கள் மற்றும் ஆலோசகர்களுடைய ஆதிக்கத்தின் கீழ் வரக்கூடிய ஆபத்து உண்டு, இது அவரை "மாற்றப்" பாதையில் இருந்து அகற்றிவிடக்கூடும்" என்பதே அது. இது மிகவும் அபத்தமாகும். ஒபாமாவின் முழு வேட்புத்தன்மை இயல்பும் இந்த "ஆலோசகர்களால்தான்" செதுக்கப்பட்டது; அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை தொடர்வதற்கான உத்தி மாற்றங்களை செயல்படுத்தும் வழிவகையாக அது கையாளப்பட்டது; இப்பொழுது அமெரிக்க மக்களிடைய சுமத்த விரும்பும் அரசியல் செயல்பட்டியலில் உள்ள வலதுசாரித் தன்மையை மூடி மறைக்கும் வகையில்தான் அந்த உத்திகள் இருந்தன. தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒபாமா என்ன கூறுகிறார், செய்கிறார் என்று தீவிர கவனம் செலுத்தியவர்களுக்கு --உள்நாட்டு ஒற்றுவேலையை விரிவாக்க தொலைபேசி நிறுவனங்களுக்கு பொது விலக்கைக் கொடுத்த விதத்தில் இருந்த அவர் கொடுத்த வாக்கு, ஈரான் மற்றும் பாக்கிஸ்தானுக்கு எதிராக போர் அச்சுறுத்தல்கள் மற்றும் எப்பொழுதும் இஸ்ரேலுக்கு விசுவாசம் என்ற கருத்து, ஈராக்கில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டால் நாட்டில் "எஞ்சிய படைகள்" பல்லாயிரக்கணக்கான படைகள் இருக்கும், அதே நேரத்தில் தளத்தில் இருக்கும் தளபதிகள்தான் இதன் போக்கை நிர்ணயிப்பர் என்று கூறியது, $700 பில்லியன் பிணை எடுப்பிற்கு இவர் கொடுத் ஆதரவு ஆகியவற்றின்மீது கவனம் காட்டியவர்களுக்கு-- இந்த நிலைமாற்றத்தின் பண்பு ஒன்றும் வியப்பாக இல்லை. Nation போன்றவற்றினால் அளிக்கப்படும் அரசியல் பிரச்சாரத்தின் உத்வேகம் அமெரிக்க தொழிலாளர்கள் வரவிருக்கும் ஒபாமா ஜனாதிபதிக் காலத்திற்கு எத்தகைய போராட்டங்கள் ஏற்படுவதை தாழ்த்தி வைத்தல் என்பதாகத்தான் உள்ளது.இதுவும் மற்றொரு நீண்டகால Nation கட்டுரையாளராக இருக்கும் Frances Fox Piven என்பவரால் நவம்பர் 13 கட்டுரையில், "ஒபாமாவிற்கு ஒரு எதிர்ப்பு இயக்கம் தேவைப்படுகிறது" என்ற தலைப்பில் வந்ததில் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் குணநலன் பற்றி பிவென் இன்னும் தெளிவான அணுகுமுறையைத்தான் காட்டியுள்ளார். "இதை நாம் உணர வேண்டும்: ஒபாமா ஒன்றும் பெரும் தீர்க்கதரிசி அல்ல; ஒரு இயக்கத் தலைவர் கூட இல்லை" என்று அவர் எழுதுகிறார். மாறாக இவர் ஒரு "திறமையான அரசியல்வாதி" "எப்படி சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிந்தவர் ...குறிப்பாக வோல் ஸ்ட்ரீட்டிம் இருந்து பெரு நிதியளித்தவர்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் எப்படி இருக்க வேண்டும், சக்திவாய்ந்த பெருவணிக செல்வாக்கு கோருபவர்களிடம் எப்படி இருக்க வேண்டும், கன்சர்வேடிவ் Blue Dog, வோல் ஸ்ரீட் சார்பு உடைய ஜனநாயகக் கட்சியினர் அடங்கிய காங்கிரசில் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்தவர்". மேலும், "இது ஒன்றும் ஒபாமாவின் பிழை அல்ல; இப்படித்தான் வழிவகை இருக்கும்" என்றும் அவர் சேர்த்துக் கொண்டுள்ளார். இதைவிட பெருநிறுவன கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இரு கட்சி முறைக்கு அவ்வளவு இடது இல்லாத தாராளவாத வட்டங்களின் அடிபணிந்து நிற்றல் பற்றி இதைவிடத் தெளிவான அறிக்கையை நாம் கேட்க முடியாது. ஒபாமாவின் வரம்புகள் அல்லது இயலாமை ஒரு புறம் இருந்தாலும், அவர் பதவிக்கு வந்த பின் மாற்றம் பற்றிய மக்கள் எதிர்பார்ப்புக்கள் "கீழிருந்து முழுமையான உருவாகுதல்களுக்கான நிலைமைகளை தோற்றுவிக்கக்கூடும்" என்று பிவென் தெரிவிக்கிறார். ஒபாமா தேர்தலுக்கும் 1932 ல் பிராங்க்ளின் டிலனோ ரூஸ்வெல்ட் தேர்தலுக்கும் இடையே இணையான தன்மையையும் இவர் எடுத்துக் கூறியுள்ளார்; ஒரு மரபார்ந்த கன்சர்வேடிவ் ஜனநாயக கட்சித் திட்டத்தின் அடிப்படையில்தான் FDR பதவி ஏற்றுக் கொண்டார் என்பதைக் கூறுகிறார். 1930 களில் இருந்த மகத்தான வேலைநிறுத்த இயக்கங்கள், போராட்டங்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட இவர், "எதிர்ப்பு இயக்கங்களின் எழுச்சி புதிய ஜனாதிபதியையும் ஜனநாயகக் கட்சி காங்கிரசையும் தைரியமுள்ள சீர்திருத்தவாதிகளாக மாறும் இயல்பைக் கொடுக்கும்" என்றும் வாதிட்டுள்ளார். ஒபாமாவிடம் இருந்தும் எதிர்ப்பு ஒன்றுதான் அதேபோன்ற விளைவுகளை கொடுக்கும் என்றும் இவர் தெரிவிக்கிறார். இந்த வாதத்திலும் இரு வெளிப்படையான பிரச்சினைகள் உள்ளன. முதலாவது 1930 களில் இருந்ததை விட அமெரிக்க முதலாளித்துவத்தின் பொதுநிலை தன்மை இப்பொழுது மிகவும் பலவீனமாகும்; அப்பொழுது வாஷிங்டன் ஒரு கடன் கொடுக்கும் நாடாக, வணிக உபரிகள் நிறைந்ததாக, உலகச் சந்தைகளில் அதன் உற்பத்தி ஆதிக்கம் கொண்ட நிலையில் இருந்தது. அந்த ஒப்புமையில் வலுவான நிலைப்பாட்டில் இருந்துதான் ரூஸ்வெல்ட் Toledo Automobile வேலைநிறுத்தம், மின்னியாபோலிஸ் பொது வேலைநிறுத்தம் மற்றும் சான்பிரான்ஸிஸ்கோ வேலைநிறுத்தம் போன்ற 1934 நிகழ்வுகளையும் அதற்குப் பின் கார்த்தொழிலில் நடந்த உள்ளிருப்புப் போராட்டங்களை எதிர்கொள்ளும் வகையில் குறைந்த வகையில் சீர்திருத்தங்களை அளிக்க முடிந்தது. தற்போதைய நெருக்கடி அமெரிக்க முதலாளித்துவத்தின் நீடித்த சரிவின் விளைவு ஆகும்; அமெரிக்கா மிகப் பெரிய அளவிற்கு கடனாளி நாடாக உள்ளது; பல தசாப்தங்களாக அதன் உற்பத்தித்தளம் சிதைக்கப்பட்டுள்து; இதன் நிதிய முறை ஒரு அழிக்கும் இயந்திரம் போல் செயல்பட்டது உலகளாவிய சரிவை ஆழப்படுத்தியுள்ளது. இது ஒன்றும் ஒபாமா நிர்வாகத்தில் இருந்து வரவிருக்கக்கூடிய ஒரு நவீன புதிய உடன்பாடு அல்ல. மேலும், ரூஸ்வெல்ட்டினால் 70 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்ட திட்டம் பெருமந்த நிலையைக் கடப்பதிலும் தோல்வியைத்தான் அடைந்தது. அது பின்னர் ஒரு இரண்டாம் உலகப் போரின்மூலம்தான் சாதிக்கப்பட்டது; அப்போரோ மில்லியன் கணக்கான மக்களை தகர்த்துவிட்டது. தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் அரசியல் உதவியுடன் ரூஸ்வெல்ட் நிர்வாகம் ஒரு சோசலிசப் புரட்சி என்ற அச்சுறுத்தலை அகற்றுவதில் வெற்றியடைந்தார். அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வரவிருக்கும் போராட்டக் காலம் கடினமான படிப்பினைகளை கொண்டிருக்கும். தங்கள் சொந்த நலன்களை தொழிலாள வர்க்கம் முன்வைக்க முடியவில்லை என்றால், அதாவது முதலாளித்துவத்திற்கு ஒரு சோசலிச மாற்றீட்டை முன்வைக்கவில்லை என்றால், தற்போதைய நெருக்கடியின் "தீர்வு" என்பது அதே வழிகளில் உலகச்சந்தை மறு பங்கீட்டிற்கு பெரும் படுகொலைகள் மூலம் உட்படுத்தப்பட்டிருக்கும். Nation இன் அரசியல் இதைத்தான் உருவாக்குகிறது; இதேபோன்ற தீய அரசியல் போக்குகள்தான் உருவாக்குகின்றன. போருக்கு எதிரான போராட்டம் மற்றும் சமூக நிலைமையின் மீதான ஆழ்ந்த தாக்குதல்களுக்கு எதிரான போராட்டம் என்பது ஜனநாயகக் கட்சியுடன் உறுதியாக முறித்துக் கொள்ளும் வகையில்தான் முன்வைக்கப்பட முடியும்; அதேபோல் Nation போன்றவை ஊக்குவிக்கும் அரசியல் போலித் தோற்றங்களுடனும் உறுதியான முறிவு முன்வைக்கப்பட வேண்டும்.வெறும் எதிர்ப்பினாலும் அழுத்தத்தினாலும் இல்லாமல், சொந்த அரசியல் கட்சியை கட்டமைத்து, முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு பொது சர்வதேசப் போராட்டத்தில் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தும் நோக்கத்தை கொண்ட சோசலிச திட்டத்தை ஆயுதமாகக் கொண்ட தொழிலாள வர்க்கம், மனிதகுலத்தின் மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ள முதலாளித்துவ நெருக்கடியினால் ஏற்படக் கூடிய பேரழிவிற்கு, அதனுடைய சொந்த முற்போக்கான தீர்வாக இதை முன்வைக்க முடியும். |