:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan SEP to commemorate 70th
anniversary of the founding of the Fourth International
இலங்கை சோ.ச.க. நான்காம் அகிலத்தின் 70 ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
22 November 2008
Use this version
to print | Send
this link by email | Email
the author
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான
அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் நான்காம் அகிலத்தின் 70 ஆண்டு நிறைவை கொண்டாடும்
முகமாக நவம்பர் 27 பொதுக் கூட்டம் ஒன்றை நடத்துகின்றன.
1929ல் வோல் ஸ்றீட்டில் பங்குச் சந்தை பொறிவால் உருவான மாபெரும்
பொருளாதார வீழ்ச்சியின் மத்தியில் 1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியால் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டது.
சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்பு ஜேர்மனியில் நாஸிகள் அதிகாரத்திற்கு வருவதற்கு
வழிவகுத்ததை அடுத்து 1933ல் புதிய அகிலத்தை அமைக்க ட்ரொட்ஸ்கி அழைப்புவிடுத்தார்.
1938 வரை கடந்து சென்ற ஐந்து ஆண்டுகளில், ஸ்ராலினிசத்தால் கைவிடப்பட்ட
சோசலிச அனைத்துலகவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நான்காம் அகிலத்திற்கு ஆரம்ப காரியாளர்களை
வென்று அவர்களுக்கு கல்வியூட்டுவதற்கு சோர்வற்ற அரசியல் போராட்டத்தை ட்ரொட்ஸ்கி முன்னெடுத்திருந்தார்.
தொழிலாளர் வர்க்கம் பெருந்தொகையான வேலையின்மை மற்றும் வறுமை, பாசிசத்தின் எழுச்சி மற்றும் யுத்த ஆபத்தின்
அழிவை எதிர்கொண்டிருந்தது.
நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டம் எச்சரித்ததாவது: "அடுத்த வரலாற்று
காலகட்டத்தில் ஒரு சோசலிச புரட்சி இல்லாவிடின், அத்தகைய ஒரு அழிவு முழு மனித குல கலாச்சாரத்தையும்
அச்சுறுத்தும். இப்போது பாட்டாளிகளின் சுற்று வந்துவிட்டது. உதாரணத்துக்கு, பிரதானமாக அதன் புரட்சிகர படையின்
சுற்று வந்துவிட்டது. மனித குலத்தின் இந்த வரலாற்று நெருக்கடி, புரட்சிகர தலைமைத்துவ நெருக்கடியாக
உருவாகியுள்ளது." இதன் பின்னர், ஒரு ஆண்டுக்கும் குறைவான காலத்துக்குள் அழிவுகரமான பூகோள யுத்தத்துக்குள்
உலகம் விழுந்தது.
மீண்டும் ஒரு முறை, மனிதகுலம் அழிவை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறது. முதலாளித்துவத்தின்
முரண்பாடுகள் நிதி நெருக்கடியொன்றையும் 1930களின் பின்னர் கண்டிராத அளவு பூகோள பின்னடைவுக்குள் மூழ்கும்
நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று சரிவு, நவ-காலனித்துவத்தினதும் மற்றும்
தெற்காசியா உட்பட பூகோளத்தின் ஒவ்வொரு பாகத்தையும் ஆட்டங்காணச் செய்யும் இராணுவத்தினதும் வெடிப்புக்கு
வழிவகுத்துள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தற்போது நடைபெறும் யுத்தம், மாபெரும் மோதல்கள் வரவிருப்பதற்கான
முன்னெச்சரிக்கையாகும் .
மீண்டும், புரட்சிகர தலைமைத்துவத்தின் தேவை இன்றைய எரியும் பிரச்சினையாகியுள்ளது.
புதிய காலகட்டத்தின் சவால்களை எதிர்கொள்ள, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்தி ஜீவிகளும்
நான்காம் அகிலத்தின் போராட்டங்களும் உள்ளடக்கப்பட்ட கடந்த நூற்றாண்டின் அரசியல் படிப்பினைகளில் ஆயுதபாணிகளாக
வேண்டும். சோசலிச எதிர்காலத்துக்காக போராடுவதன் பேரில், கடந்த காலத்தில் பாட்டாளிகளின் புரட்சிகர
பாதையை தடுத்த தடைகளில் இருந்து எவ்வாறு மேலெழும்புவது என்பதை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும்.
நான்காம் அகிலத்தின் ஸ்தாபிதத்தை கொண்டாடுவதற்கான எமது பகிரங்கக் கூட்டத்திற்கு
வருகை தருமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ. அழைப்பு
விடுக்கின்றன.
திகதியும் நேரமும்: நவம்பர் 27 மாலை 4 மணி
இடம்: கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்
பிரதான உரை: சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் |