World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காObama's attorney general pick and the illusion of change ஒபாமாவின் அரசாங்கச் தலைமை சட்ட அதிகாரி தேர்வும் மாற்றம் பற்றிய பிரமையும் By Bill Van Auken ஜனாதிபதியாக வரவிருக்கும் பாரக் ஒபாமா, கிளின்டன் நிர்வாகத்தில் இருந்த முன்னாள் நீதித்துறை உயரதிகாரி எரிக் ஹோல்டரை தன்னுடைய அரசாங்க தலைமை அதிகாரியாக நியமிக்க உள்ளார் என்பதற்கு செய்தி ஊடகத்தின் எதிர்கொள்ளல் நியூ யோர்க் டைம்ஸ் எழுதியுள்ளபடி, "ஹோல்டர் நாட்டின் உயர்ந்த சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரியாக வரவிருக்கும் முதல் ஆபிரிக்க-அமெரிக்கர் ஆவார்" என்ற விதத்தில் குவிப்பை காட்டியுள்ளது. ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் போலவே இன அடையாளத்தை பற்றிய இந்தக் குறிப்பு, தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுக்கப்பட்ட தெளிவற்ற உறுதிமொழியான "மாற்றம்" கொண்டுவருவது ஒருபுறம் இருக்க, ஒபாமா ஜனாதிபதி காலத்திற்கான கையேற்பு கடந்த எட்டு ஆண்டுகளின் குற்றம் சார்ந்த, பிற்போக்கு கொள்கைகள் தொடர்வதற்கான அஸ்திவாரங்களைத்தான் போட்டுக் கொண்டிருக்கிறது. ஹோல்டர் பற்றி அதிகம் கூறப்பட்ட ஒரே குறைகூறல் குடியரசுக் கட்சி வலதிடம் இருந்து வந்துள்ளார். பில் கிளின்டன் தன்னுடைய பதவிக்காலத்தின் இறுதியில் புகலிடம் நாடிய முதலீட்டாளர் மார்க் ரிச்சிற்கு கொடுத்த ஜனாதிபதி மன்னிப்பில் இந்த முன்னாள் துணை அரசாங்க தலைமை வழக்கறிஞரின் தொடர்பை ஒரு பிரச்சினையாக ஆக்க முற்பட்டுள்ளது. இந்த அற்பத்தனமான ஊழலில் இருந்து எவ்வளவு ஆதாயத்தை கட்சியின் வலது பெறமுடியும் என்பது தெளிவாக இல்லை. அந்த மன்னிப்பு நேரத்தில் ரிச்சின் வக்கீலாக இருந்தவர் துணை ஜனாதிபதி செனியின் அலுவலர் தொகுப்பிற்கு தலைவராக இருந்த லெவிஸ் "ஸ்கூட்டர்" லிப்பி ஆவார்; இவரே CIA அடையாளக் கசிவு Valerie Plame நிகழ்வில் குற்றத்திற்காக மன்னிப்பை ஜனாதிபதி புஷ்ஷிடம் இருந்து பதவி முடியும் காலத்தில் பெற முற்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இது ஒரு அசெளகரியமான இணைந்த நிகழ்வாகும். உண்மை என்னவென்றால் ஹோல்டர் இருகட்சியும் அங்கீகரிக்கும் வேட்பாளர் என்ற நிலையை பிரதிபலிக்கிறார்; விசாரணை நடத்துதல், நீதித்துறை தொடர்புடைய பதவிக்கு குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகங்களால் நியமிக்கப்பட்ட நிலையில் இரு கட்சி ஒருமித்த உணர்வை பிரதிபலிக்கிறார்; இவர் சட்டம் ஒழுங்கு பற்றி காப்பவர் என்ற பெருமையை வளர்த்துக் கொண்டவர் ஆவார். ஜனநாயகக் கட்சிக்கு ஒரு மூத்த சட்ட ஆலோசகர் என்ற வகையில், ஹோல்டர் மிக நெருக்கமாக ஜனநாயகக் கட்சி புஷ் நிர்வாகத்தின் போலீஸ் அரசாங்க நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதற்கு உடந்தையாக இருந்தவர் ஆவார்; ஒபாமாவே வாக்களித்திருந்த 2005 ஆண்டு தேசபக்த சட்டம் மறு அங்கீகரிக்கப்படுவதற்கான பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய பங்கு பெற்றவர் ஆவார். கிளின்டன் நிர்வாகத்தைவிட்டு நீங்கிய பின்னர், தன்னுடைய அரசாங்க பணிக்கு பதிலாக வாஷிங்டன் டி.சியில் Covington & Burling செல்வாக்கு திரட்டும் நிறுவனத்தின் சட்டப் பிரிவில் இலாபகரமான அந்தஸ்தில் பங்காளியாக சேர்ந்தார்; அந்நிறுவனம் அதன் முக்கிய வாடிக்கையாளர்களில் பெரிய புகையிலை நிறுவனத்தைக் கொண்டது ஆகும். அந்த நிறுவனத்தில் ஹோல்டரின் மிகப் புகழ்வாய்ந்த வழக்கு உணவுப் பெருநிறுவனமான Chiquita Brands International, Inc. க்கு ஆதரவாக இருந்தது; இந்நிறுவனத்தின் பல மில்லியன்களை உடைய நிர்வாக அதிகாரிகள் பயங்கரவாதத்திற்கு உதவுகின்றனர் என்ற குற்றச் சாட்டு இருந்தது; ஏனெனில் அவர்கள் கொலம்பியாவில் மரணத்தை ஏற்படுத்தும் குழுக்களுக்கு நிதி, ஆயுத உதவி கொடுத்ததாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள இருந்தனர். நீதித்துறையுடனான தனது நீண்டகால தொடர்பை பயன்படுத்தி, ஹோல்டர் Chiquita வை விடுவிக்கும் வகையில் அதன் ஆண்டு வருமானத்தில் 0.55 சதவிகிதம் இருக்கும் ஒரு தொகையை மட்டும் அபராதமாக விதித்தார். அந்நிறுவனமே பல மில்லியன் டாலர்களை United Self Defense Forces of Colombia (AUC) என்பதற்கு கொடுத்துள்ளதாக ஒப்புக் கொண்டும், மிக அதிக சான்றுகள் நிறுவனத்திற்கு எதிராக இருந்தும் இவ்வாறு செய்யப்பட்டது. AUC யின் துப்பாக்கியேந்தியவர்கள் பல பல்லாயிரக்கணக்கான கொலம்பிய தொழிலாளர்கள், விவசாயிகள், தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் இடதுசாரி அரசியல்வாதிகள் ஆகியோரை படுகொலைகள், அரசியல் கொலைகள், கடத்தல்கள் ஆகியவற்றிற்கு ஆளாக்கினர். இந்த தொகைகளில் பாதிக்கும் மேலானவை AUC முறையாக ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்று குறிக்கப்பட்ட பின்னரும் நடந்தது; நீதித் துறை Chiquita வை பணம் கொடுப்பதை நிறுத்தாவிட்டால் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தும் ஓராண்டிற்கு இது தொடர்ந்திருந்தது. தன்னுடைய வாடிக்கையாளர்களுடைய நடவடிக்கைக்கு ஹோல்டர் பொறுப்பாகமாட்டார் என்று சிலர் வாதிட்டுள்ளனர்; மேலும் எந்தக் குற்றத்தில் ஈடுபட்டவருக்கும் வழக்கறிஞர் வைத்துக் கொள்ளும் உரிமை உண்டு என்றும் கூறுகின்றனர். இது சந்தேகத்திற்கு இடமின்றி உண்மைதான்; ஆனால் வழக்கறிஞர்களுக்கும் எவரை வாடிக்கையாளராக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும், எந்த வர்க்க நலன்களைக் காக்கவேண்டும் என முடிவெடுக்கும் உரிமை உண்டு. ஹோல்டரின் வரலாறு ஒன்றும் சிவில், ஜனநாயக உரிமைகளைக் காக்கும் பெருந்தகை என்றோ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பவர் என்றோ இருந்ததில்லை; மாறாக, பெருநிறுவனம் மற்றும் அரசாங்கத்தின் சட்டப்பிரிவு ஊழியர், அவற்றின் குற்றம்சார்ந்த தன்மை, அடக்குமுறை ஆகியவற்றிற்கு உடந்தையாக நின்றவர் என்றுதான் உள்ளது. ஹோல்டர் நியமனத்தைவிட சிறிதும் முக்கியத்துவத்தில் குறையாதது ஓபாமா கையேற்புக் குழு தற்போதைய FBI ன் இயக்குனர் ரோபர்ட் முல்லரை முக்கிய சட்டத்தை செயல்படுத்தும் துணைத் தலைவராக தக்க வைத்துக்கொள்ளுதல் என்று கூறப்படும் முடிவுதான். முல்லரின் பதவிக்காலம் 2011 வரை முடிவடையவில்லை என்றாலும், ஒரு புதிய ஜனாதிபதிக்கு எப்பொழுதும் முக்கிய பதவிகளில் தனக்குப் பிடித்தவர்களை போடுவதற்கு இருப்பவர்களை இராஜிநாமா செய்யக் கோரும் அதிகாரம் உண்டு. கடந்த எட்டு ஆண்டுகளில் FBI இயக்குனரின் சான்றுகள் இருக்கும் நிலையில், "மாற்றம்" வேண்டும் என்று மாற்றத்தை விரும்பும் ஒரு நபர் அனைத்தையும் முழுமையாக மாற்றுவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. புஷ் நிர்வாகம் "பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போர்" என்ற பெயரில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததில் முல்லர் முழுமையாக உட்தொடர்பை கொண்டிருக்கிறார். இவருடைய இயக்கத்தின் கீழ்த்தான் FBI, National Security Letters (NSLs) என்பதை செயல்படுத்தி அமெரிக்காவில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள்மீது சட்டபூர்வமாக உளவு வேலை நடத்தி, சட்டவிரோதமாக மின்னஞ்சல், தொலைபேசித் தொடர்பு, நிதிய மற்ற சொந்தத் தகவல்களை திரட்டியது. பென்டகனிலும், சிஐஏ யிலும் இதேபோன்ற கதை, அல்லது இதைவிட மோசமான நிலைதான் உள்ளது. கையேற்பு வழிமுறையிலுள்ள ஆதாரங்களை காட்டி புதனன்று பைனான்சியல் டைம்ஸ் எழுதியது: "ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமா மற்றும் ரோபர்ட் கேட்ஸ் இருவரும் எந்த அடிப்படையில் பாதுகாப்பு மந்திரி மீண்டும் புதிய நிர்வாகத்தில் பென்டகன் தலைவராக இருப்பார் என்று பேச்சுவார்த்தைகள் நடத்தி கொண்டிருக்கின்றனர்." பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்களை கொன்றுகுவித்து, மற்றும் 1,000 அமெரிக்க வீரர்களையும் கொன்று குவித்ததற்கு காரணமாக இருந்த, அதிக படைகள் அனுப்பப்பட வேண்டும் என்று வாதிட்ட கேட்ஸை பதவியில் தக்க வைத்துக் கொள்ளுதல் என்பது புஷ் நிர்வாகத்தின் ஆக்கிரோஷ இராணுவவாதம் தொடரப்படும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லாத அடையாளம் ஆகும். இதற்கிடையில் சிஐஏ-ல் கையேற்புக்கான நிலைமை ஜோன் பிரென்னன் தலைமையின் கீழ் நடைபெற்றுவருகிறது; இவர் முன்னாள் சிஐஏ இயக்குநர் ஜோர்ஜ் டெனட்டின் உயர்மட்ட உதவியாளர் ஆவார்; சித்திரவதை, அசாதாரணமான கடத்தல், இரகசிய சிறைகள் அமைப்பு என்ற பல செயல்கள் நடக்க காரணமாக இருந்த கொள்கைகளை தொடக்கி வைக்கும் முடிவில் டெனட் பங்கு கொண்டவர் ஆவார்; அச்சயெல்கள்தான் உலகம் முழுவதும் வெறுப்புணர்வை தூண்டியிருந்தன. டெனட்டை போல் பிரென்னனும் போர்க்குற்ற நீதிமன்றத்தை எதிர்கொள்ள தகுதியானவர்தான்; ஆயினும் கூட இவர்தான் ஒபாமாவிற்கு உளவுத்துறைத் தகவல் கொடுப்பதை உருவாக்க இருப்பவர். இத்தகைய நியமனங்கள் இருக்கையில், திங்களன்று அசோசியேடட் பிரஸ்ஸில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று "ஒபாமா நிர்வாகம் சித்திரவதை" போன்ற நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் கொடுத்த அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை கொண்டுவருவது என்பது அநேகமாக நடக்காது" என்று கூறியள்ளது வியப்பைத் தரவில்லை. நீதித்துறை, எப்பிஐ, சிஐஏ, பென்டகன் ஆகியவற்றில் கொள்கைகளும் நபர்களும் தொடரப்படவிருக்கின்றனர் என்று வெளிவந்துள்ள தகவல்களின் பொருள் புஷ் நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்ட அமெரிக்க அரசியலமைப்பு மீறல் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எவர்மீதும் பொறுப்பு சாட்டப்படமாட்டாது என்பதுதான். இது இக்குற்றங்களை கம்பளத்தின்கீழ் மூடி மறைப்பது மட்டும் இல்லை--அதுவும் தீவிரமான குற்றம்தான். மாறாக அமெரிக்க நலன்களை வெளிநாடுகளில் தொடர்வதற்கும் உள்நாட்டில் சமூக அமைதியின்மை, வர்க்க விரோதம் ஆகியவற்றை அடக்குவதற்கும் இதே வழிவகைகளை சற்று வண்ணப்பூச்சுடன் மீண்டும் செயல்படுத்துவதற்கான தயாரிப்புக்கள்தான் நடைபெற்று வருகின்றன. |