: செய்திகள்
ஆய்வுகள் : வட
அமெரிக்கா
The US auto bailout and the socialist alternative to
concessions
அமெரிக்காவின் வாகனத்துறை பிணையெடுப்பும், சலுகைகளுக்கு பதிலாக சோசலிச
மாற்றீடும்
By
Jerry White
17 November 2008
Use this version
to print | Send
this link by email | Email
the author
வாகனத்துறை தொழிலாளர்களின் நிலைமைகளைச் சீரழிப்பதே, அமெரிக்க வாகனத்துறைக்கு
பிணையெடுப்பை விரிவாக்க வேண்டுமா என்ற விவாதித்தின் மைய பிரச்சனையாக உள்ளது என்பது தற்போது தெளிவாகி
உள்ளது. அது அரசாங்க கடனாக வடிவம் எடுக்கிறதா அல்லது டெட்ராய்டின் மூன்று பெரிய கார் உற்பத்தியாளர்களில்
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டது திவாலாகிறதா என்பதில் உள்ளது. தற்போதுள்ள தொழிலாளர் உடன்பாடுகளை
உடைக்கும் நிலைமைகளை உருவாக்கி, 1930களில் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் உருவாக காரணமான
தொழில்துறை போராட்டங்களுக்கு முன்னர் ஏற்பட்டிருந்த வறுமை மற்றும் இரக்கமற்ற சுரண்டல் நிலைமைகளுக்கு,
வாகனத்துறை தொழிலாளர்களை மீண்டும் கொண்டு வருவது தான் இதன் நோக்கம்.
சாத்தியப்பட்டால், $25 பில்லியன் டாலர் கடன் சலுகை அளிக்க இந்த வாரம் காங்கிரஸ்
விவாதித்து வரும் நிலையில், இந்த நெருக்கடிக்காக தொழிலாளர்களுக்கு எவ்வாறு அழுத்தம் அளிக்கலாம் என்பதில்
பல பிரிவுகள் தோன்றியுள்ளன. கட்டுப்பாடற்ற சந்தையுடன் முரண்படாத ஒரு பிணையெடுப்பை காங்கிரசில் உள்ள
குடியரசு கட்சியினர் அறிவித்துள்ளனர். இல்லையானால், பல மில்லியன்கணக்கான வேலைகளையும் கூட இழக்க
வேண்டிய வகையில் வாகனத்துறை நிறுவனங்கள் திவாலாகும், தொழிலாளர் செலவுகளைக் குறைக்கவும், கூடுதல் இலாபம்
பெறுவதற்காக மறுசீரமைப்பு செய்யவும் நீதிமன்றங்களை அணுக வேண்டியதிருக்கலாம் என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.
இதற்கிடையில், வாகன உற்பத்தியாளர்கள் அவர்களின் மறுசீரமைப்பு நிகழ்முறையை
தொடர்வதற்கு உதவியாக, அவர்களுக்கு பிணையெடுப்பு தேவைப்படுகிறது என்று ஜனநாயக கட்சி தலைவர்கள்
வாதிடுகிறார்கள். ஏற்கனவே இந்த மறுசீரமைப்பு நிகழ்முறை 2006ல் இருந்து 100,000 வேலை வெட்டுக்களுக்கு
இட்டு சென்றுள்ளது. ஞாயிறன்று, NBC-TVஇன்
"Meet the Press"
எனும் நிகழ்ச்சியில் மிசிகனின் ஜனநாயக கட்சியின் மூத்த செனட்டர் கார்ல் லெவின்
பேசும் போது, வாகன உற்பத்தியாளர்கள் ஏற்கனவே அவர்களின் மணித்தியாலத்திற்கு வேலை செய்யும்
தொழிலாளர்களில் பாதி நபர்களையும், மூன்றில் ஒரு பங்கு ஊதிய தொழிலாளர்களையும் விலக்கிவிட்டனர் என்று தெரிவித்தார்.
சலுகைகளைப் பொறுத்த வரை மற்றும் சம்பள வெட்டுக்களைப் பொறுத்த வரை மற்றும் நலன்களில் குறைப்புகளைப்
பொறுத்த வரை UAW
என்ன செய்திருக்கிறது என்ற இந்த முக்கிய மூன்று கேள்விகளையும் மக்கள்
புரிந்து கொண்டால் நிலைமை மாறும்."
வாகனத்துறை நிறுவனங்களுக்கு ஒரு பிணையெடுப்பு கிடைத்தவுடனும் கூட,
குறைந்தபட்சம் மேலும் 10 அசெம்பிளி ஆலைகளின் பக்கம் கவனத்தைத் திருப்பும்;
ஆலையின் 30,000 வேலைகளை வெட்டும்;
ஆயிரக்கணக்கான பொறியியளாளர்கள் மற்றும் ஊதிய
தொழிலாளர்களுக்கு பணிவிடுப்பு அளிக்கும் என்று தொழில்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். பிணையெடுப்பின்
பெரும்பான்மை வயதானவர்களையும், அதிக சம்பள தொழிலாளர்களையும் விலைக்கு வாங்கவே பயன்படுத்தப்படும்.
பின்னர் அவர்களில் ஒரு பகுதியினரை, அவர்களை விட அரை ஊதியம் பெறும் புதியவர்களைக் கொண்டு அவர்களை
மாற்றியமைக்கும்.
வாகனத்துறை தொழிலாளர்களின் பல தசாப்த போராட்டங்களால் பெறப்பட்ட
நலன்களை அழிக்கும் இந்த முறைமைகளை சர்வதேச அளவிலுள்ள செய்தி ஊடகங்களும் ஆதரிக்கின்றன. வெள்ளியன்று
வாஷிங்டன் போஸ்டில் வெளியான "Lemon of a
Bailout" எனும் சீர்கெட்ட மற்றும் நம்பிக்கையற்ற ஒரு
கட்டுரையில், அதன் பெரியளவிலான நலன்களுடன் கூடிய உயர்ந்த கூலி ஒப்பந்தங்களில் இருந்து விடுபடுவது...
பரந்த ஓய்வூதிய கடமைகள் மற்றும் வேலை வங்கிகள் போன்ற வேலையில்லாதவர்களுக்கான வேலை திட்டங்கள்
மற்றும் வேலை செய்யாமல் இருக்க அளிக்கப்படும் பெரிய தொகைக்கான வழக்கம் போன்ற கூலி உடன்பாடுகளை
விட்டு வெளியில் எடுப்பதைத் தான் திவால் நிலை என்று கூறப்படுகிறது என்பதாக சார்லஸ் கிரெளதம்மர்
குறிப்பிட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி பாராக் ஒபாமாவின் ஒரு ஆலோசகரான
ரோபர்ட் ரீச் போன்ற தாராளவாதிகள், அவர்கள் பங்கிற்கு, எந்தவித பிணையெடுப்பும் வாகனத்துறை
தொழிலாளர்களின் நிறைய தியாகங்களைப் பின்னிகழ்வாக கொண்டிருக்கும் என்று குறிப்பிடுகின்றனர்.
"அரசாங்க உதவிக்கு
மாற்றாக, முக்கிய மூன்று கடன்வழங்குனர்கள், பங்குதாரர்கள் மற்றும் மேலதிகாரிகள், பிரிவு 11ன் கீழ்
நீடித்திருக்கும் வரை அவர்கள் (தொழிலாளர்கள்) இழப்புகளை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். மேலும் கூலி
மற்றும் நலன்களின் பரந்த சில வெட்டுக்களுக்கு UAW
ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்."
என்கின்றனர்.
" பரந்த பணி நெகிழ்வுத்தன்மை
மற்றும் குறைந்த தொழிலாளர் செலவுகளைக் கொண்ட மாற்றியமைக்கப்பட்ட உடன்பாடுகளுக்கு"
UAW
ஒப்புக்கொள்ளவில்லையானால், "பின்
அதற்கான மாற்றாக இருப்பது திவால் நீதிமன்றம் தான் என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும். அதுவும்
(நீதிமன்றமும்) இதே போன்ற ஒரு தீவிர மறுகட்டமைப்பைத் தான் வலியுறுத்தும்"
என்று வாஷிங்டன் போஸ்டின் ஒரு வெள்ளிக்கிழமை தலையங்கம் குறிப்பிட்டது.
வர்க்க பிரச்சனைகள் தெளிவாக இருக்காது. வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்புக்கான
ட்ரில்லியன் டாலர்களை ஆதரித்த அதே மக்கள் தான், இந்த நெருக்கடிக்கும் தொழிலாளர்கள் கஷ்டப்பட வேண்டும்
என்று கோருகிறார்கள். தியாகங்களை வங்கி செயலதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று யாரும்
கோருவதில்லை. உண்மையில், அவர்கள் எந்த இணைப்பும் இல்லாமல் அல்லது அரசாங்கத்திடமிருந்து எந்தவித
உதவியும் கேட்கப்படாமல் பணத்தைக் கையாண்டு வருகிறார்கள்.
அரசு பொருளாதாரத்தில் குறுக்கிட தள்ளப்பட்டிருக்கிறது என்ற உண்மையானது,
முதலாளித்துவ முறையின் தோல்வியை வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறது. எவ்வாறிருப்பினும், இரு பெரிய
முதலாளித்துவ கட்சிகளால் கொண்டு வரப்பட்ட பிணையெடுப்புகள் சாதாரண உழைக்கும் மக்களின் நலன்களைப்
பாதுகாக்க ஒன்றும் செய்யப் போவதில்லை. இதற்கு முரண்பாடாக, இந்த பொருளாதார பேரழிவுக்கு
பொறுப்பான முதலாளித்துவ வர்க்கத்தின் தனியுடைமை சொத்துக்கள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க, வரி
செலுத்துவோர் பணத்தை அவர்கள் சுரண்டி கொண்டுள்ளனர்.
இந்த நெருக்கடி ஒரு புதிய மூலோபாயத்தை கோருகிறது. நிதி சீரழிவில் இருந்து
சமுதாயத்தைக் காப்பாற்ற தொழிலாளர் வர்க்கம் இதில் தலையிட வேண்டும். உழைக்கும் மக்களின் ஜனநாயக
கட்டுப்பாட்டின் கீழ் வாகன தொழில்துறை நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவ கட்சி
கோருகிறது. உற்பத்தி, நிதி ஆதார ஒதுக்கீடுகள், கூலிகள், பணியிட நிலைமைகள், அத்துடன் மேலாளர்கள்
தேர்ந்தெடுப்பு ஆகியவை உட்பட அனைத்து முடிவுகளும் ஆலை மற்றும் தொழிலாளர்களால் மட்டுமே
தேர்ந்தெடுக்கப்பட்ட பணியிட குழுக்களால் முடிவு செய்யப்பட வேண்டும்.
வாகனத்துறை மக்களுடமை ஆக்கப்பட்ட பின்னர், முந்தைய உரிமையாளர்கள் மற்றும்
பங்குதாரர்களுக்கான மாற்றீடு குறித்த கேள்விகள் மீது பேச்சுவார்த்தை நடத்தப்படலாம். தனிநபர் சொத்து
சேர்ப்பதற்கல்லாமல், மனிதயின தேவைக்கான உற்பத்தி கோட்பாட்டின் அடிப்படையில் ஒட்டுமொத்த
பொருளாதாரத்தையும் மாற்றி அமைக்க, வங்கிகளை பொதுத்துறை கட்டுப்பாட்டில் நாட்டுடமையாக்குவதுடன்
இணைத்து இது செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொரு நாட்டிலும் மோசமான பணியிட நிலைமையில் குறைந்த கூலிக்கு யார்
வேலை செய்வார்கள் என்பதை உறுதிப்படுத்தி ஒருவருக்கொருவர் , சேவக சதியுடன் தொழிலாளர்களை வேலை
இழப்புகளுக்கு இட்டு செல்லும் பேரழிவுமிக்க தேசிய போட்டியை முடிவுக்கு கொண்டு வர, ஓர் உலகம் தழுவிய
பொருளாதார திட்டம் சனநாயக ரீதியாக ஒழுங்குமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும். சர்வதேச
வாகனத்துறையின் மனித மற்றும் தொழில்நுட்ப வளங்கள், பாதுகாப்பான எளிய மற்றும் அனைவருக்குமான
சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
குடியரசு கட்சியின் ஜனாதிபதி, நிதி மேற்தட்டுக்களின் நலன்களுக்காக பெருமளவில்
தக்க வைத்திருந்த இதுபோன்ற கொள்கைகள் வரவிருக்கும் ஒபாமா நிர்வாகத்திற்கு ஒரு சாபக்கேடாக இருக்கும்.
இதுபோன்றதொரு அடிப்படை மாற்றத்தை கொண்டு வரவும் பெரு முதலாளிகளின் இருகட்சிகளில் இருந்து முற்றிலும்
விடுபட்டு தொழிலாளர்களுக்கான அரசாங்கத்திற்காகவும், பொருளாதாரம் மற்றும் அரசியல் வாழ்க்கை மீதான
முறையான ஜனநாயக கட்டுப்பாட்டுக்காக போராடவும் ஒரு பரந்த அரசியல் கட்சியை தொழிலாளர் வர்க்கம்
உருவாக்க வேண்டும்.
முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியை தொழிலாளர் வர்க்கத்தின் முதுகில்
சுமத்த, வாகனத்துறை தொழிலாளர்கள் மீதான தாக்குதல் ஒரு முன்னோட்டமாக பயன்படுத்தப்படும். ஆனால்
தொழிலாளர்கள் இதற்கு பொறுப்பல்ல. உரிமையாளர்கள் மற்றும் மேலதிகாரிகளால் எடுக்கப்பட்ட வியாபார
முடிவுகளுக்கு அவர்களை ஒன்றும் கூற முடியாது. பிந்தையவர்கள் பெரிய பெருநிறுவன சர்வாதிகாரத்தை
தலைமையேற்று நடத்துவதுடன், அவர்களின் பேராசையும், திறமையின்மையும் பேரழிவுக்கு இட்டு சென்ற போது
அவர்கள் தொழிலாளர்களைக் குற்றஞ்சாட்டினார்கள்.
இந்த விடயத்தில் வாகனத்துறையும் ஒரு விஷயமாகியுள்ளது. 1970-80களின் கிறிஸ்லர்
பிணையெடுப்பின் போது, சலுகைகளுக்காக பில்லியன்கணக்கான தொகையை அளிக்கும் நிலைக்கு வாகனத்துறை
தொழிலாளர்கள் தள்ளப்பட்டார்கள். அந்த பணம் தொழில்துறையின் நீண்டகால நிலைப்புத்தன்மையை மேம்படுத்த
பயன்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக, முக்கிய பங்குதாரர்களின் மற்றும் பெருநிறுவன மேலதிகாரிகளின்
சொத்துக்களை அதிகரிக்கவே பயன்படுத்தப்பட்டது.
1984ல், அமெரிக்க வாகனத்துறை மேலதிகாரிகளுக்கு, சாதாரண நீல-காலர்
தொழிலாளரை விட 12ல் இருந்து 18 மடங்கு அதிகமான ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் 2006ல், ஒவ்வொரு
மேலதிகாரிக்கும் $100 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பிலான ஒரு உத்தரவாதமளிக்கப்பட்ட
சிறப்புத்தொகை சேர்க்கப்படாமலேயே, அவர்களுக்கு 122 மடங்கிற்கும் அதிகமான ஊதியம் வழங்கப்பட்டது.
புதிய தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தை விட 240 மடங்கு அதிகமான சலுகைகளை வாகனத்துறை
மேலதிகாரிகள் பெறுவார்கள் என்பதை தான் UAWஆல்
சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை எடுத்துக்காட்டுகிறது.
செர்பிரஸ் கேபிட்டல் மேனேஜ்மென்டின் உரிமையாளர் கிறிஸ்லர் போன்ற தனியார்
ஈக்விட்டி மேலாளர்கள், இதைவிட அதிகமாக இலாபம் ஈட்டினார்கள். கடந்த ஆண்டு, முதல் 50 கெட்ச் மற்றும்
தனியார் ஈக்விட்டி நிதிய மேலாளர்கள், தற்போதைய ஒரு வாகனத்துறை தொழிலாளி சம்பாதிப்பதை விட
10,000 மடங்கு அதிகமாக - சராசரியாக $588 மில்லியன் சம்பாதித்தனர்.
இதுபோன்ற சமத்துவமின்மையின் தேக்க நிலைமையும் மற்றும் ஆதாரவளங்களின் குவிப்பும்
தான் திவாலாவதற்கும், பழமையாகிப் போன முறைக்கும் காரணமாகும். அது ஒரு நீண்ட பெரிய பகுத்தறிவுள்ள
மற்றும் சமத்துவ முறையால், அதாவது சோசலிசத்தால் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
தங்கள் பணிகளை மற்றும் வாழ்க்கை தரங்களை பாதுகாக்கும் போராட்டத்தில்
தொழிலாளர்கள் UAWவின்
மீது நம்பிக்கை வைக்க முடியாது. அது தொழிலாளர் வர்க்கத்தின் மீதான பெருநிறுவன தாக்குதல்களின் கூட்டாளியாக
நீண்டகாலமாக செயல்பட்டுள்ளது. தொழிற்சங்கத்தின் புதிய பல பில்லியன் டாலர் மதிப்புடைய ஓய்வு பெற்ற
தொழிலாளர் சுகாதார நலநிதிக்கு முட்டு கொடுப்பது உட்பட, முதலாளித்துவ நிதி நலன்களை தங்களால் முடிந்த
வரை பாதுகாப்பதில் மட்டுமே அது கவனம் செலுத்துகிறது. வெள்ளியன்று வாஷிங்டன் போஸ்டில் வெளியான கட்டுரையில்,
UAW தலைவர்
ரோன் கெட்டில்பின்கர், தொழிற்சங்கத்தால் கடைசியாக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், தொழிற்சங்கத்தில் உள்ள
மற்றும் தொழிற்சங்கத்தில் இல்லாத வாகன தொழிலாளர்களுக்கு இடையிலான தொழிலாளர் செலவு வேறுபாடுகளை
அழித்துள்ளது என்று தெரிவித்தார்.
சோசலிச மற்றும் புரட்சிகர அமைப்புகளுடன் தொழிலாளர்கள் முன்னின்று முக்கிய
பங்காற்றிய 1930களில் நடந்த வேலைநிறுத்த போராட்டங்கள் எடுத்துக்காட்டிய சிறந்த பாரம்பரியங்கள் மீண்டும்
மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் போராட்டத்திற்கான புதிய அமைப்புகளும் தோற்றுவிக்கப்பட வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாளர் வர்க்கத்திற்கான பரந்த அரசியல் கட்சியாக, சோசலிச சமத்துவ
கட்சியை உருவாக்குவதையே அது குறிக்கிறது. |