World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

World financial crisis undercuts Russia's economic boom

ரஷ்ய பொருளாதார ஏற்றத்திற்கு உலக நிதிய நெருக்கடி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது

By Vladimir Volkov
12 November 2008

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த இரு மாதங்களில் பெருகிவிட்ட உலக நிதிய நெருக்கடி ரஷ்ய பொருளாதாரத்தின் மீது உலகச் சந்தைகளின் மாற்றங்களின் மகத்தான பாதிப்பை வெளிப்படுத்தியுள்ளது. கிரெம்ளின் தலைவர்களுடைய நம்பிக்கையை இந்த நெருக்கடி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது; அவர்கள் சோவியத்திற்கு பிந்தைய ஆண்டுகளில் பேரழிவு மற்றும் குழப்பத்தில் இருந்து ரஷ்யா மீண்டு கொண்டு வருவதுடன் பொருளாதாரத்தில் பாதிப்பற்ற நிலையை அடைந்து கொண்டு வருகிறோம் என்று நம்பத் தொடங்கியிருந்தனர்.

அதே நேரத்தில் இந்த நெருக்கடி புதிய ரஷ்ய அரசாங்கத்தின் வர்க்க தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளது. முக்கிய அதிகாரத்துவ மற்றும் தன்னலச் சிறுகுழுக்கள், பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகளை கட்டுப்படுத்துபவை, அரசாங்கத்தின் இருப்புக்களை பயன்படுத்தி தங்களை காப்பாற்றிக் கொள்ளும் உறுதிப்பாட்டை காட்டியுள்ளன; மில்லியன் கணக்கான மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சமூக விளைவுகளை பற்றி எவ்வித அக்கறையும் காட்டப்படவில்லை. நெருக்கடியின் சுமையை தாங்கும் தோள்களை கொண்ட மக்களின் பரந்த அடுக்குகளுக்கு எந்தவித முக்கியமான உதவியும் அளிக்கப்படவில்லை.

பெருகிவரும் நிதிய நெருக்கடிக்கு கிரெம்ளினின் ஆரம்ப விடையிறுப்பு தேசியவகையிலான சுய திருப்தியும், தன்னிறைவு உணர்வு என்ற விதத்தில்தான் இருந்தது. ஆட்சியின் பிரதிநிதிகள் ரஷ்ய எரிவாயு, எரிபொருள் மற்றும் மூலப் பொருள் ஏற்றுமதிகளின் உயர்ந்த விலைகள் மூலம் குவிக்கப்பட்ட மகத்தான வருவாய்களை ஒட்டி, அமெரிக்காவில் வீடுகள் மற்றும் கடன் கொடுத்தல் குமிழி மூலம் வெளிப்பட்ட நிதிய நெருக்கடியினால் ரஷ்யா அச்சுத்தப்படமாட்டாது என்ற முன்கருத்தை கொண்டிருந்தனர்.

செப்டம்பர் வரையில்கூட, நிதிய அதிர்ச்சிகளையொட்டி ரஷ்யா உலகப் பொருளாதாரத்தில் அதன் பங்கை கணிசமாக வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்ற அறிக்கைகளும் வெளியிடப்பட்டன. உலக முதலீட்டாளர்களுக்கு "பாதுகாப்பான புகலிடமாக" ரஷ்யா விளங்கும் என்றும் உலகம் முழுவதும் படர்ந்துள்ள நிதிய மையங்களில் முக்கியமானதாக ரஷ்யா இருக்கும் என்றும் கூறப்பட்டது.

ரஷ்ய பங்குச் சந்தை அதன் மதிப்பில் செப்டம்பர் 16-17 ல் ஐந்தில் ஒரு பகுதி மதிப்பை இழந்த நேரத்திலும், ரஷ்ய அதிகாரிகளிடத்தே தீவிர கவலைக்கான அடையாளம் ஏதும் இல்லை. மிகப் பெரிய நடவடிக்கைகளை வங்கி முறையைக் காப்பாற்றுவதற்காக அறிவித்தனர்; இதையொட்டி பிரச்சினை தீர்ந்துவிட்டது என்றும் வெளிப்படையாக உணர்ந்தனர்.

ஆனால் அவர்களுடைய கணக்குகளும் ரஷ்ய பொருளாதார மண்ணின்மீது எழுப்பப்பட்டவை என்பது தெளிவாயிற்று.

முன்னோடியில்லாத அளவிற்கு அரசாங்க உதவி வங்கிகளுக்கு 1.5 டிரில்லியன் ரூபிள்கள் (அமெரிக்க $60 பில்லியன்) கொடுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பிற்கு பின்னரும், நிதி அமைச்சரகம் மற்றும் ரஷ்ய வங்கி இரண்டும் நிதிய முறைக்கு இன்னும் 3 டிரில்லியன்கள் கொடுக்கத் தயார் என்ற அறிவிப்பும் கூட பங்குக் குறியீடுகளின் வீழ்ச்சியை தவிர்க்க முடியவில்லை. ஆறு வார காலத்தில், இவை 1997ம் தரத்தை வந்து அடைந்தன; இதையொட்டி அக்டோபர் இறுதிக்குள் விளாடிமீர் புட்டின் ஜனாதிபதிக் காலத்தின் பொருளாதார " சாதனைகள்" அனைத்தும் முற்றிலும் தகர்க்கப்பட்டுவிட்டன.

அக்டோபர் 27ம் தேதி ப்ளும்பேர்க் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து வளர்ச்சியுற்ற மற்றும் வளர்ச்சி பெற்றுவரும் 48 முக்கிய நாடுகளின் பங்குச் சந்தைகள் பற்றி ஒரு ஒப்புமை பகுப்பாய்வை வெளியிட்டது. இப்பட்டியலில் ரஷ்யாவின் தரம் மிகக் கடைசியில் இருந்தது. அதன் பங்குச் சந்தை நான்கு காரணி என்ற விதத்தில் சுருக்கம் அடைந்தது; மே 2008ல் அடையப்பட்ட உச்ச கட்ட மூலதன நிலைப்பாட்டில் 73 சதவிகிதம் குறைந்தது.

மூலதனம் வெளியேறும் அளவும் நாட்டின் தங்க இருப்புக்கள் மறைய ஆரம்பித்திருப்பதின் வேகமும் அரசாங்கத்தின் "உறுதிப்படுத்துவதற்கான நிதியம்" என்பது குளிர்கால முடிவு அல்லது வசந்த காலத்துவக்கத்தில் முற்றிலும் களைப்படைந்துவிடும் என்பதைத்தான் காட்டுகின்றன.

கடந்த நான்கு மாதங்களில் ரூபிளின் மதிப்பு டாலரோடு ஒப்பிடுகையில் 15 சதவிகிதம் குறைந்துவிட்டது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முட்டும் அமெரிக்க $ 30 பில்லியன் நாட்டை விட்டு வெளியே சென்றது. தங்க, நாணய இருப்புக்கள் கிட்டத்தட்ட அமெரிக்க $600 பில்லியன் என்று ஆகஸ்ட் தொடக்கத்தில் இருந்தது நவம்பர் தொடக்கத்தில் அமெரிக்க $487 என்று சரிந்து விட்டது--அதாவது அமெரிக்க $100 பில்லியன் குறைந்துவிட்டது. அக்டோபரில் மட்டும் அவை அமெரிக்க $71 பில்லியன் குறைந்தன.

அதிகாரிகளிடம் இருந்து உறுதிபடுத்தும் அறிக்கைகள் வந்தாலும், ரஷ்ய குடிமக்கள் தங்கள் சேமிப்புக்களை வங்கிகளில் இருந்து திரும்ப எடுத்துக் கொள்ள தொடங்கிவிட்டனர். செப்டம்பரில் அவர்கள் 180 பில்லியன் ரூபிள்களை (கிட்டத்தட்ட அமெரிக்க $7 பில்லியன்) தனியார் வங்கிகளில் இருந்து தங்கள் கணக்குகளில் இருந்து திரும்பி எடுத்துக் கொண்டனர். இதில் ஓரளவு பொதி அரசாங்க வங்கிகளில் சேமிக்கப்பட்டிருந்தன; அவை இன்னும் நம்பகத்தன்மை உடையவை என்று கருதப்பட்டிருந்தன; ஏனெனில் அவை நேரடி பட்ஜேட் ஆதரவிற்கு உட்பட்டவை; ஆனால் இப்பொழுது இந்த இருப்புக்களில் பாதிக்கும் மேலானவை ரொக்கமாக மாற்றப்பட்டு, பதுக்கி வைக்கப்படுகின்றன.

அக்டோபர் மாதம், சேமிப்புக்களின் பொதி இன்னும் கூடுதலாக சரிந்தது. மாஸ்கோவில் இருக்கும் சிட்டி வங்கி அதிகாரிகள் கொடுத்துள்ள தகவல்களின்படி கிட்டத்தட்ட 30 சதவிகிதப் பணம் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டன. இதைத்தவிர, ரஷ்ய மக்கள் தங்கள் ரூபிள்களை டாலர்களாக கணக்குகளில் கிட்டத்தட்ட அமெரிக்க $3.5 பில்லியன் அளவிற்கு மாற்றிக் கொண்டுவிட்டனர்.

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மக்களை அடையும் செய்தி ஊடகத்தின் குரல் கவனிக்க தக்க முறையில் மாறிவிட்டது. இறுமாப்புடன் இருந்த சுயசார்பு உணர்வு இப்பொழுது நரம்புத் தளர்ச்சி உணர்வுகள், பெரும் ஏமாற்றம் என்ற விதத்தில் வெளிவருகின்றன. இவ்விதத்தில் அக்டோபர் 7ம் தேதி பங்குச் சந்தை பெரும் சரிவைக்க கண்ட மறுநாள் கிட்டத்தட்ட கிரெம்ளின் ஆதாரங்களில் உத்தியோகபூர்வ ஏடான Izvestia, எழுதியது: "நேற்று பங்குச் சந்தைகளில் சரிந்தது குறியீடுகள் மட்டும் அல்ல; எமது வணிக மையங்களை உலக நிதிய நெருக்கடி "தொடாமல் கடந்து சென்றுவிடும்" என்ற நம்பிக்கையும் சரிந்துவிட்டது."

தன்னலச் சிறுகுழு அமைப்புக்கள் ஒன்றில் முக்கிய பதவி ஒன்றில் யெல்ட்சின் கீழ் நிதி மந்திரியாக இருந்த அலெக்சாந்தர் லிப்ஷிட்ஸ் உள்ளார். அக்டோபர் 22ம் தேதி இஸ்வெஸ்டியாவில் எழுதிய கட்டுரை ஒன்றில் லிப்ஷிட்ஸ் கூறினார்: "உலக நெருக்கடி இப்பொழுது எமது தொழில்துறைக்கு அருகே வந்துவிட்டது. ஏற்கனவே இதை அது தாக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் பெரும் வேதனை, வலி கொடுக்கக் கூடிய வகையில். ஒரே நேரத்தில் இரு திசைகளில் இருந்து அது தாக்கிவருகிறது. முதலாவது நிதிய வகைப்பட்டது, இரண்டாவது சந்தை முறையில்."

இதைத் தொடர்ந்து அவர் எழுதியது: "கடல்களுக்கு அப்பால் இருந்து வரும் நெருக்கடி எமது பங்குச் சந்தைகளை கீழ்நோக்கு சரிவில் இழுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து வங்கிகளும் பாதிக்கப்பட்டன; அவற்றுடன் வங்கிகள் கொடுத்த கடன்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. நிதிய ஆறு நம் கண்ணுக்கு முன்பாகவே மிகவும் குறுகி, ஆழமற்றுப் போய்விட்டது. இது நம் முழு பொருளாதாரக் கப்பலையும் நிறுத்திவிடும் அச்சுறுத்தலைக் கொடுக்கிறது."

நவம்பர் தொடக்கத்தில், பங்குக் கூறியீடுகள் ஓரளவிற்கு உறுதிப்பாட்டை அடைந்தன. ஆனால் ஆறு நாட்கள் தொடர்ந்து இலாபங்களை அடைந்த பின், நவம்பர் 6ம் தேதி அவை மீண்டும் சரிந்தன. RTS குறியீடு 6.3 சதவிகிதம் அதாவது 777 புள்ளிகள் குறைந்தது; MMVB 9.62 சதவிகிதம் அதாவது 700 புள்ளிகள் குறைந்தது. நவம்பர் 7ம் தேதி மற்றொரு சரிவைக் கண்டது.

பாராளுமன்றத்தின் இரு பிரிவுகளுக்கும் சமீபத்தில் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மேட்வேடவ் உரையாற்றுதல் தள்ளிப் போடப்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக நிதிய நெருக்கடியும் அடையாளம் பெறுகிறது. அக்டோபர் 23ல் நடத்தப்படும் என்று முதலில் பட்டியலிடப்பட்ட இந்த உரை நவம்பர் 5ம் தேதிதான் கொடுக்கப்பட்டது. மொத்தத்தில் மேட்வேடவ் தன்னுடைய உரையில் நம்பிக்கை உணர்வை அதிகம் காட்டினார் என்றாலும், உலக நிதிய சந்தைகளின் அதிர்ச்சி தொடர்ந்து வரும் என்றால் கிரெம்ளின் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற உணர்வால் விளைந்த எரிச்சல் வெளிப்பட்டதை காண முடிந்தது.

வாஷிங்டனை நெருக்கடிக்காக கடிந்த விதத்தில் மேட்வெடேவ் கூறினார்; "சோவியத் ஒன்றியம் சரிந்தபின் தனி நபரின் கருத்து ஒன்றுதான் உண்மையானது, போட்டிக்கு இடமில்லாதது என்ற நிலைப்பு அமெரிக்க அதிகாரிகளை பொருளாதார உலகில் மகத்தான தப்புக் கணக்கிற்கு இட்டுச் சென்றது. ஒரு நிதிய குமிழியை தனியார் வளர்ச்சிக்காக அதிகப்படுத்தியதில், அவர்கள் உலகச் சந்தையில் இருக்கும் மற்ற பங்காளிகளுடன் சேர்ந்து தங்கள் முடிவுகளை ஒருங்கிணைப்பதைக் கடினமாகச் செய்தது மட்டும் இல்லாமல் நிதானம் தேவை என்ற அடிப்படை உணர்வைக்கூட புறக்கணித்தனர். இதைத்தவிர, தங்கள் பங்காளிகளின் பல எச்சரிக்கைகளையும் (உண்மையில் நாம் கொடுத்தது உட்பட) புறக்கணித்தனர். இதன் விளைவாக தங்களையும் மற்றவர்களையும் அவர்கள் சேதப்படுத்தினர்.

ஆனால் அமெரிக்க அரசாங்கத்தின் செயற்பாடுகளை நிதிய மண்டலத்தில் ரஷ்ய அதிகாரிகள் ஊக்குவித்தனர் என்பதை நிரூபிப்பது ஒன்றும் கடினம் அல்ல; அதேபோல் உலக நிதிய ஊகத்தில் கணிசமான விகிதம் ரஷ்ய சந்தையில் நடைபெற்றது என்பதில் பெருமிதம் கொண்டனர் என்பதை நிரூபிப்பதும் கடினம் அல்ல.

இவ்விதத்தில் பெப்ருவரி 14ம் தேதி அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த புட்டின் களிப்புடன் கூறினார்; "ரஷ்ய கூட்டமைப்பில் தனியார் மூலதன நிகர வரத்து கடந்த ஆண்டு $82.3 பில்லியன் என்று, 2006ல் இருந்ததை விட இரு மடங்காயிற்று-- இரு மடங்காயிற்று!...பங்கு குறியீடு 20 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்தது; இது கடந்த ஆண்டை விட சற்றுக் குறைந்தது ஆகும்; ஆனால் கடந்த ஆண்டில் பொதுவாக இது ஒரு சாதனை எனலாம். மொத்தத்தில் ரஷ்யாவில் பங்குச் சந்தை குறைந்த எண்ணிக்கையே இல்லை என்ற விதத்தில் 20 சதவிகிதம் பெருகி சாதனையை படைத்தது."

அமெரிக்காவில் "நிதிய குமிழி வீக்கம் பெற்றதால்" ஏற்பட்ட விளைவுகளுக்கு ஆர்வத்துடன் ஒப்புதல் கொடுக்கப்படுகிறது என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன பொருள் இருக்க முடியும்? இதுவே அமெரிக்க மற்றும் உலக மூலதன நிதிய முறை பற்றி கிரெம்ளினின் தற்போதைய கடிந்துரைப்பில் இருக்கும் பாசாங்குத்தனத்தை நன்கு வெளிப்படுத்துகிறது.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் அரசாங்கம் ரஷ்ய தொழில்துறை மற்றும் வங்கிமுறைகளை காப்பாற்ற தொடர்ச்சியான புதிய நடவடிக்கைகளை அறிவிக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டது. Chamber of Accounts ன் தலைவரான செர்ஜி ஸ்டிபாஷின் அரசாங்கம் பிணை எடுப்பிற்கு கொடுத்துள்ள பொதியின் மதிப்பு 4 மில்லியன் ரூபிளுக்கும் (அமெரிக்க $150 பில்லியன்) மேலாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளார். பிற மதிப்பீடுகளின்படி வங்கிகளுக்கும் பெருநிறுவனங்களுக்கும் உறுதி கொடுக்கப்பட்டுள்ள அரசாங்க ஆதரவு மொத்தத்தில் 6 டிரில்லியன் ரூபிளாக இருக்கும் என்று (அமெரிக்க $220 பில்லியன்), அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவிகிதத்திற்கும் மேலாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த மொத்தப் பொதியில் இருந்து அரசாங்கம் 1.5 டிரில்லியன் ரூபிள்ளை வங்கி சேமிப்புக்கள், 950 பில்லியனை வங்கிகளுக்கு பத்தாண்டு கால கடன், தடையற்ற சந்தையில் இருந்து பெரு நிறுவனங்களில் பங்குகளை வாங்குவதற்கு 600 பில்லியன் ரூபிள்களை மத்திய வங்கியில் இருந்து வரி நீக்கப்பட்ட கடன் 175 பில்லியன் மற்றும் AIZhk க்கு அடைமான ஆதரவு உடைய கடன்களை காக்கும் வகையில் 75 பில்லியன் என்று பிரித்துக் கொடுத்துள்ளது.

இப்படி இருந்தபோதிலும்கூட, நவம்பர் தொடக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி அமைச்சரகத்தின் முன்னாய்வின்படி, ரஷ்யப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் நான்காம் காலண்டில் 9.5 சதவிகிதத்தில் இருந்து 6.5 சதவிகிதம் என்று வீழ்ச்சி அடையக்கூடும் என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தித்திறன் வளர்ச்சி 2007ல் இருந்த 8.1 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில் 7.3 சதவிகிதம் சரியக்கூடும் என்று தெரிகிறது. பணவீக்கம் கிட்டத்தட்ட 15 முதல் 15 சதவிகிதம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பிரச்சினை ரஷ்ய வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் உலகச் சந்தைகளில் மகத்தான கடன்களை, அமெரிக்க $450 பில்லியன் வரை, எடுத்துக் கொண்டன என்ற உண்மையில் இன்னும் தீவிரமாகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மட்டும் அமெரிக்க $50 பில்லியன் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்

ரஷ்ய அரசாங்கம் இந்த வார இறுதியில் அறிவித்த பிணை எடுப்பு திட்டத்தின் கீழ்க்கண்ட பிரிவுகளுக்கு முழு அரசாங்க ஆதரவு மையப்படுத்தப்படும் என்று உள்ளது: விமான நிறுவனங்கள், கட்டிடங்கள், வளர்ச்சி நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் பிற ஏற்றுமதி நிறுவனங்கள், இயந்திரக் கட்டுமான நிறுவனங்கள், தொழில்-வணிக வளாக அமைப்புக்கள் மற்றும் வேளாண்மைப் பிரிவு.

Nezavisimaia Gazetas அக்டோபர் 24 அன்று வெளியிட்ட கருத்தின்படி, "ரஷ்ய தொழில்துறை சிறிய, நடுத்தர நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கை இழக்கக்கூடும்; தப்பிப் பிழைப்பவை உற்பத்தியை குறைக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படும்."

VTB-Europa நடத்திய ரஷ்ய நிறுவனங்கள் பற்றிய கணிப்பு அக்டோபர் மாதத்தில் நிறுவனங்கள் பதிவு செய்யும் ஆர்டர்கள் பெரிதும் குறைந்துவிட்டன என்று புலப்படுத்துகிறது; இது உற்பத்தி அளவிலும் குறைவு ஏற்படுவதற்கு ஒரு முன்னோடி எனலாம். அக்டோபர் மாதம் தொழில்துறை பிரிவில் செயல்பாடு தொடர்ச்சியாக மூன்றாம் மாதமும் சரிவுற்றது. இந்தப் போக்கு அதிகமானால், தற்போதைய தொழில்துறை சரிவு என்பது முழு அளவில் தொழில்துறை சரிவு என்ற நிலையை அடைந்துவிடும்.

இப்படி மோசமாகி வரும் நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் நிறுவனங்கள் உற்பத்தியில் வெட்டு, ஊதியங்கள் குறைப்பு, தற்காலிகமாக பணியில் இருந்து அகற்றுதல் என்பவற்றில் ஈடுபட்டுள்ளன. கணிசமாள ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுவது என்பது நிதிய நிறுவனங்களில் நடைபெற்று வருகிறது. நுகர்வோர் பிரிவில், X5 Retail Group என்று ரஷ்யாவில் மிகப் பெரியது எனக் கருதப்படுவது Piatiorochka, Perekriostock (இரு மளிகைப் பொருட்கள் தொடர் கடைகள்) உள்ளடக்கியது 1,000 ஊழியர்களை தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளது.

Miel'-Nedvizhimost ன் பிரதிநிதியான Girgori Kulikov சொத்துச் சந்தையில் இருக்கும் இந்த தேக்கம் சொத்து நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு குறைக்க நேரிடச் செய்யும் என்று நம்புகிறார்.

கார்த்தொழில் துறையில், KamAZ தன் ஊழியர்களில் 10 சதவிகித குறைப்பை செய்யத் திட்டமிட்டுள்ளது; Gorkii கார் ஆலை, சோவியத் காலத்தில் மிக உயர்ந்த கெளரவம் அளிக்கப்பட்ட மாதிரியான Volga உற்பத்தியை நிறுத்திவிட முடிவு எடுத்துள்ளது.

உயர்மட்ட நிறுவனங்கள் அடுத்த ஆண்டு ஒருவேளை 20ல் இருந்து 30 சதவிகித உற்பத்திக் குறைவு ஏற்படக்கூடும் என்று தகவல் கொடுத்துள்ளன. சமீபத்தில் Magnitogorsk உலோகத் தயாரிப்பு ஆலை உற்பத்திக் குறைப்பு மற்றும் ஊழியர்கள் பணிநீக்கம் ஆகியவற்றிற்கான திட்டங்களை கொண்டிருப்பதாக தெரிகிறது.

வல்லுனர்கள் கருத்தின்படி, 2009ம் ஆண்டு ரஷ்யாவில் வேலையின்மை விகிதம் இரு மடங்கு அதிகரிக்கும் என்று உள்ளது. இதைத்தவிர, பயன்பாட்டு செலவினங்கள் 25ல் இருந்து 30 சதவிகிதம் என்று கணிசமாக உயரக்கூடும் என்றும் தெரிகிறது.

இவை அனைத்தும் பரந்த மக்கள் பிரிவின் சமூக பொருளாதார நிலைமை அடிப்படையில் மோசமாகி வருவதை குறிக்கின்றன. அதே நேரத்தில் அரசாங்கம் பில்லியன் கணக்கான டாலர்களை பொருளாதாரத்தில் இருக்கும் தன்னல-அதிகாரத்துவ சிறு குழுக்களின் பிணை எடுப்பிற்காக கொடுக்கிறது; அரசாங்கத்திற்கு சாதாரண மக்களுடைய உதவிக்கு செல்லுவதில் விருப்பம் இல்லை. பல பிணை எடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றுதான் --தனியார் வங்கி சேமிப்புக்களுக்கான அரசாங்க உத்தரவாதம் என்பது 100,000 த்தில் இருந்து 700,000 ரூபிள்கள் வரை இருக்கும் எனப்படுவதுதான் --பரந்த சமூக அடுக்குகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை பற்றி அக்கறை காட்டியுள்ளது.

அரசாங்கத்தின் மூலோபாய இலக்குகள் அக்டோபர் மாத இறுதியில் வட்டார நிர்வாகங்களின் நிதி அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவுகளில் நன்கு வெளியாகியுள்ளன. இந்த ஆவணத்தின்படி, "2009ம் ஆண்டு புதிய செலவு செய்தல் என்பது வரம்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும்; அதைத்தவிர இப்பொழுது செய்யப்படும் செலவுகளில் குறைப்பும் தேவை; பட்ஜெட் வகையில் தொழிலாளர்களுக்கு ஊதிய நிதியத்தை உயர்த்துவது அடங்கும்; ஏனெனில் இதற்கு நிதி உத்தரவாதம் அளிப்பதற்கு இல்லை."

இத்தகைய இழிவான அலட்சியப் போக்கு மக்கள் மீது காட்டப்படுவது முற்றிலும் தன்னலம் சார்ந்த வர்க்கக் கொள்கைகள் என்பதுடன் "கடல்கடந்து பணம் தேடும் பிரபுத்துவத்தின்" நிலைப்பாடு என்பது தெரிய வருகிறது; இதேபோல் இந்த பிரிவின் அரசாங்கத்தில் இருக்கும் ஊழல் நிறைந்த பங்காளிகளும் கடந்த 10 ஆண்டுகளாக கவனத்துடன் இயக்கப்பட்ட உத்தியோகபூர்வ சிந்தனைப் போக்கிற்கும் அடி கொடுக்கின்றனர்; அதன்படி அரசாங்கம் "திக்குத் தெரியாத 1990களுக்கு" பின்னர் சாதாரண நபர்கள்பால் அக்கறை காட்டுகிறது என்று கூறப்பட்டது.

உண்மையில் நெருக்கடியின் வளர்ச்சி மிகச் சித்தரிப்பு வகையில் ஆளும் உயரடுக்கின் கருவிகள் என்ற விதத்தில் கிரெம்ளின் அதிகாரிகளின் பங்கை நிரூபணம் செய்கிறது --தன்னலச் சிறுகுழுக்கள், அதிகாரத்துவம் மற்றும் Siloviki (பாதுகாப்புப் பிரிவுகள்); இவற்றின் நலன்கள் தொழிலாளர்கள் மற்றும் முழுச் சமுதாயத்தில் நலன்களுடன் நேரடி மோதலுக்குத்தான் வருகின்றன.

இந்த உண்மை ரஷ்ய தொழிலாளர் வர்க்கத்தின் பரந்த அடுக்குகளுக்கு ஒரு பாதை அமைத்து தரும். ஏற்கனவே புதிய ரஷ்ய முதலாளித்துவத்தின் பொருளாதார பிரச்சினைகளுக்கு அவர்கள் வேறுவிதமாக விடையிறுக்க தொடங்கி விட்டனர். VTsIOM சமூக மையம் நடத்திய கருத்தாய்வு ஒன்றின்படி கிட்டத்தட்ட பங்கு கொண்டவர்களில் 79 சதவிகிதத்தினர் அரசாங்கம் விலைகளை கட்டுப்படுத்துவது உதவிகரமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். 58 சதவிகிதத்தினர் பெரும் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்படுவதற்கு ஆதரவு கொடுக்கின்றனர். விடையிறுத்தவர்களில் பாதிப்பேர் வங்கிகள் தேசியமயமாக்கப்படுவது நேரிய நலன்களை கொடுக்கும் என்று நினைக்கின்றனர்.

VTsIOM கூற்றின்படி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனியார்மயமாக்கப்படுதவதின் முடிவுகள் பற்றிய மறு ஆய்வு, தேசியமயமாக்கப்படலுக்கு ஆதரவு என்பது பற்றி மிகக் குறைந்தவர்கள்தான் ஆர்வம் காட்டினர். 2003ல் கருத்தாய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் (48 சதவிகிதம்) தனியார் மயமாக்கப்பட்டதின் பொது நலன்கள் பற்றி மறு ஆய்வு நடத்துவது பற்றி நேரிய விடையிறுப்பை கொடுத்தனர்.

சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியுற்று கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. சோவியத் முதலாளித்துவம் பரந்த மக்களின் நலன்களின் வளர்ச்சிக்காக ஒரு அஸ்திவாரத்தை கட்டமைக்க இயலாத நிலையில்தான் உள்ளது; மேலும் மக்களுக்கும் ஒரு பகுதிக் குற்றம் சார்ந்த வணிகர்களை கொண்டு ஒரு சிறிய குழுவிற்குத்தான் வளர்ச்சிக்காக உதவுகிறது. "வளமான ஆண்டுகள்" என்ற காலத்திற்கு பின்னர் ரஷ்ய முதலாளித்துவத்தின் புதின் சகாப்தம் ஒரு நெருக்கடிக்குள் நுழைந்துள்ளது; இது தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீது இரக்கமற்ற தாக்குதல்களைத்தான் விடையிறுப்பாக கொள்ளும். இதன் ஒட்டுண்ணித்தனம்தான் வெளிப்படையாக வர்க்கப் பூசல் மீண்டும் வெளிவருவதற்கான அஸ்திவாரங்களை அமைத்துக் கொண்டு வருகிறது.