World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Indian prime minister warns of "severe and prolonged" global downturn இந்தியப் பிரதம மந்திரி "கடுமையான நீடித்த" உலக நிதியச் சரிவு பற்றி எச்சரிக்கிறார் By K. Ratnayake பெருகிவரும் சர்வதேச பொருளாதார கொந்தளிப்பு பற்றிய ஆழ்ந்த கவலைகளுக்கு இடையே இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் நேற்று நாட்டின் உயர் பெருநிறுவன தலைவர்களுடன் ஒரு கூட்டம் நடத்தி அவருடைய அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்தும் முயற்சிகளில் ஈடுபடும் என்ற உறுதியைக் கொடுத்தார். நிலைமையின் தீவிரத்தை ஒப்புக் கொண்ட சிங் அறிவித்தார்: "நிதிய நெருக்கடி ஒரு உலக கீழ்நோக்கு சரிவை விரிவாக்கியுள்ளது; இது முன்னரே எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் இப்பொழுது இன்னும் கடுமையாகவும் நீடித்தும் இருக்கக் கூடும். இவ்வளவு பெரிய நெருக்கடி எமது பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடும், அவ்வாறே அது ஏற்படுத்தியுள்ளது." இக்கூட்டத்திற்கு 15 பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளும், வணிகத் தலைவர்களும் வந்திருந்தனர்; இதில் இந்தியாவின் பங்குச் சந்தை பங்கின் வகையில் மிகப் பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி, மிகப் பெரிய மொபைல் தொலைபேசி நிறுவனமான பாரதி குழுவின் தலைவரான சுனில் மிட்டால், மிகப் பெரிய சொத்துக்கள் நிறுவனமான DLF Ltd. இன் தலைவர் கே.பி.ணிங் மற்றும் இந்தியாவின் தனியார் வங்கி, கடன் கொடுக்கும் அமைப்புக்களில் மிகப் பெரிய நிறுவனமான ICICI யின் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி. காமத் ஆகியோரும் அடங்குவர். வணிகக் குழுக்கள் குறைந்த வட்டி விகிதம், கடன் சந்தையில் கூடுதலான பண புழக்கம் ஆகியவற்றை நாடுவதுடன் இன்னும் கூடுதலான சந்தைச் சீர்திருத்தஙகளையும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திடம் இருந்து பெறுவதற்கு அழுத்தம் கொடுக்கின்றன. இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறைக் கூட்டமைப்பு, ரொக்க இருப்பு விகிதத்தில் வங்கிகள் நாட்டின் மத்திய வங்கியிடம் சேமிப்பாக கொள்ளவேண்டிய பணம்-- குறைக்கப்பட வேண்டும் என்று, அதாது 5.5 சதவிகிதத்தில் இருந்து 4.5 சதவிகிதம் என இருக்கலாம் என்றும் முக்கிய வட்டிவிகிதம் 5 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. அக்டோபர் 29ம் தேதி இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறைக் கூட்டமைப்பு வரவிருக்கும் காலத்தில் இந்திய நிறுவனங்கள் மகத்தான முறையில் 25 முதல் 30 சதவிகிதம் வரை வேலைகளை அகற்றும் கட்டாயத்திற்கு உட்படக்கூடும் என்று எச்சரித்தார். மூன்று நாட்களுக்கு பின்னர், அரசாங்கத்தின் அழுத்தத்தை அடுத்து இந்த அமைப்பு தன்னுடைய கணிப்பை மாற்றிக் கொண்டு இது சொத்துக்கள், இடைத்தரகு மற்றும் முதலீட்டு ஆலோசனை தொழில்களுக்குத்தான் பொருந்தும் என்று அறிவித்துவிட்டது. அடுத்த மே மாதத்திற்குள் தேசிய தேர்தல்கள் நடைபெற இருக்கையில், அரசாங்கம் வேலையின்மை பெருக்கம் அதிகரிப்பது பற்றி தீவிர கவலை கொண்டுள்ளது. நேற்றைய கூட்டத்தில் பிரதம மந்திரி சிங் கூறினார்: "செலவினங்களை குறைத்து உற்பத்தி திறனை அதிகரிக்க அனைத்து முயற்சியும் தேவைப்படும் என்ற நிலையில், பயத்தினால் மிகப் பெரிய அளவு வேலைநிறுத்தங்கள், எதிர்மறை சுழற்சியை ஏற்படுத்த கூடியது இருக்கக்கூடாது என்று நம்புகிறேன். இந்த உலகளாவிய நெருக்கடியின் விளைவுகளை எதிர்கொள்கையில் தொழில்துறை அதன் சமூக கடைமைகளையும் மனத்தில் வைத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன்." 2008ம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 9 சதவிகிதமாக இருக்கக்கூடும் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் கணித்துக் கூறப்பட்டது; ஆனால் இப்பொழுது இந்திய ரிசேர்வ் வங்கி இதை 7.5 சதவிகிதம்தான் இருக்கக் கூடும் என்று குறைத்துவிட்டது. மற்ற பகுப்பாய்வாளர்கள் 7 சதவிகித வளர்ச்சி விகிதம்தான் இருக்கும் என்று கணித்துள்ளனர். வணிக தலைவர்களுக்கு "எமது வளர்ச்சி விகிதத்தை காப்பற்காக தேவையான நிதிய நடவடிக்கைகள் அனைத்தையும் அரசாங்கம் எடுக்கும்" என்று உத்தரவாதம் கூறினார். கடந்த சனிக்கிழமையன்று ரிசேர்வ் வங்கி எதிர்பாராமல் கடன் சந்தை நெருக்கடியை குறைக்கும் வகையில் சில நடவடிக்கைகளை எடுத்தது; அவற்றில் ரொக்க இருப்பு விகிதம் 6.5 சதவிகிதத்தில் இருந்து 5.5 சதவிகிதம் எனக் குறைப்பு, முக்கிய வட்டி விகிதம் 8ல் இருந்து 7.5 சதவிகிதம் எனக்குறைப்பு மற்றும் அரசாங்க பத்திரங்களில் வங்கி வைக்க வேண்டிய நிதிய விகிதத்தின் குறைப்பு ஆகியவை அடங்கியிருந்தன. 1997ல் இருந்து முதல் தடவையாக மத்திய வங்கி மூன்று பிரிவுகளிலும் ஒரே நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த முடிவு ஒரே நாளில் வங்கிகளுக்கு இடையேயான கடன் விகிதம் திங்களன்று முறிக்கும் அளவிற்கு 21 சதவிகிதம் என்று ஆனதை தொடர்ந்து ஏற்பட்டது. ஏற்கனவே ரிசேர்வ் வங்கி ரொக்க இருப்பு நிதி விகிதத்தை இரு முறை குறைத்தும், வட்டி விகிதத்தை ஒரு முறையும் அக்டோபரில் குறைத்துள்ளது. சனிக்கிழமை நடந்த இந்த நடவடிக்கைகள் மற்றும் ஒரு 400 பில்லியன் ரூபாய்களை (அமெரிக்க 8.2 பில்லியன் டாலர்) கடன் சந்தைக்கு கொடுக்கும். ரிசேர்வ் வங்கியின் நடவடிக்கைகள் உடனடியாக ஒரு வேகத்தைக் கொடுத்து முதல் நாள் இருந்த வட்டி விகிதத்தை 7 சதவிகிதம் குறைத்தது. மும்பையின் சென்செக்ஸ் பங்குச் சந்தை 5.6 சதவிகித ஏற்றத்தை திங்களன்று கண்டது. ரூபாயின் மதிப்பும் ஓரளவு முன்னேறியது; ஒரு வாரத்திற்கு முன்பு டாலருக்கு ரூபாய் 50.29 என்பதில் இருந்து இப்பொழுது 48.80 என்ற நிலையை அடைந்துள்ளது. பொருளாதாரம் மெதுவாக இயங்குதல் கடன்கள் கடுமையை தளர்த்தியது உலக நிதிய நெருக்கடி மற்றும் பொருளாதாரச் சரிவின் நீண்டகால பாதிப்பை இந்திய பொருளாதாரம் பெறுவதை சமாளிப்பதற்கு அதிகமாக ஏதும் செய்யாது. வெளிப்பட்டு வரும் சந்தைகள் எனக் கூறப்படும் பிற சந்தைகள் போலவே இந்தியாவும் வெளிநாட்டு மூலதனம் பெரிதும் வெளியேறிவிட்டதால் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது; அதையொட்டி பங்கு விலை மற்றும் நாணயத்தின் மதிப்பு சரிந்துவிட்டன. இந்த ஆண்டு சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 50 சதவிகிதமும் ரூபாயின் மதிப்பு 20 சதவிகிதமும் வீழ்ச்சி அடைந்துள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த ஆண்டு 13 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்திய பங்குகளை விற்றுவிட்டனர்; கடந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் வந்த 17.4 பில்லியன் டாலருடன் இந்த எண்ணிக்கை நினைத்து பார்க்கப்பட வேண்டும். நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்புக்கள் 15.4 பில்லியன் டாலர் போன வாரம் குறைந்தது, அதாவது 274 பில்லியன் டாலரினில் இருந்து 258 பில்லியன் டாலர் என்ற, அதாவது எட்டு ஆண்டுகளில் மிக அதிகமான வீழ்ச்சியாக போயிற்று. பொருளாதாரப் பின்னடைவு இந்தியாவின் முக்கிய அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளை தாக்கும்போது பொருளாதாமும் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சிக் குறைவை காண்கிறது; இந்திய ஏற்றுமதிகளுக்கான தேவைகளும் சரிவடைந்துள்ளன. ஏற்றுமதி வளர்ச்சி செப்டம்பர் மாதம் ஆண்டு அடிப்படையில் 10.4 சதவிகிதம் என்று 18 மாதங்களில் மிகக் குறைவாகப் போயிற்று. ஏப்ரலில் இருந்து செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில் வணிகப் பற்றாக்குறை கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்த 39.1 பில்லியன் டாலரை பார்க்கையில் 59.8 பில்லியன் டாலர் என்று உயர்ந்துள்ளது. ABN AMRO வங்கியின் வாங்கும் மேலாளர் குறியீட்டின்படி (purchaing managers' inded PMI) இந்திய ஆலைகளின் செயற்பாடும் பெரிதும் குறைந்துவிட்டது. குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்றாற்போல் சமன் செய்யப்பட்ட 500 நிறுவனங்கள் பற்றிய ஒரு கணக்கெடுப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது; இது ஏப்ரல் 2005ல் அளவை தொடங்கிய காலத்தில் இருந்து மிகக் குறைவாக அக்டோபர் மாதம் சரிந்தது என்பதை காட்டியுள்ளது. உற்பத்திக் குறியீடு செப்டம்பரில் 61.7 என்பதில் இருந்து 54.1 க்கு குறைந்துவிட்டது; புதிதான தேவைகளும் செப்டம்பரில் 6.36 என்பதில் இருந்து 54.4 எனக் குறைந்துவிட்டது; இவை இரண்டுமே கணக்கெடுப்பு மதிப்பீட்டில் மிகக் குறைவான புள்ளிகள் ஆகும்.ஏற்றுமதி தேவையும் 2005ல் குறியீடு தொடங்கியதில் இருத்து முதல் தடவையாக சுருக்கம் அடைந்து செப்டம்பரில் இருந்த 53 என்பதில் இருந்து 49.7 என்று ஆயிற்று. வேலை நிலை செப்டம்பரில் 51.3 என்பதில் இருந்து அக்டோபரில் 50.1 என்று குறைந்துள்ளது. இந்த மதிப்பீட்டின்படி குறைந்த சர்வதேச தேவையை அடுத்து வேலைகள் குறைந்துள்ளன என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வெள்ளியன்று நிதி மந்திரி பழனியப்பா சிதம்பரம் வேலை வெட்டுக்கள் எச்சரிக்கைகளுக்கு விடையிறுக்கும் வகையில், "7 சதவிகித வளர்ச்சியில் இருக்கும் பொருளாதாரம் வேலையை தோற்றுவிக்கும் பொருளாதாரமே ஒழிய வேலைகளை அழிக்கும் பொருளாதாரம் அல்ல" என்று அறிவித்தார். சீனாவை போல் இந்தியாவிற்கு பாதிப்பு இராது என்றும் இதற்குக் காரணம் "நாட்டுப் பொருளாதாரம் உள்நாட்டு உந்துதல் கொண்ட நுகர்வு, முதலீடு உந்துதல் கொண்ட சந்தை ஆகியவற்றை கொண்டுள்ளதால் என்றும் வளர்ச்சிக்கான ஏற்றுமதியின் அளிப்பு சீனாவில் இருப்பதைப் போல் பெரிதானது இல்லை" என்றும் கூறினார். ஆனால் ஏற்கனவே ஏற்றுமதியில் குறைவு என்பது தீவிர பாதிப்பைக் கொடுத்துள்ளது. ஜவுளித்துறை மந்திரி சங்கர்சிங் வகேலா நிருபர்களிடம் சனிக்கிழமை அன்று கூறினார்: "அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் பெரிய கடைகள் இந்திய ஆடைகள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கொடுத்த வாங்கும் ஆர்டர்களை இரத்து செய்துவிட்டன; அதைத்தவிர இவர்களுக்கு சர்வதேச அளவில் வாங்கியவர்கள் கொடுக்க வேண்டிய பண பாக்கியும் உள்ளது". அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகள் இந்திய ஜவுளி, ஆடைகள் ஏற்றுமதியில் 70 சதவிகிதத்தை கொண்டுள்ளன. வேலை வெட்டுக்களை குறைப்பதில் அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளது என்று நிருபர்கள் கூறிய கருத்தை வகேலா உதறித்தள்ளினார். "இது தனியார் நிறுவனங்களின் பிரச்சினை; அரசாங்கம் இதைப்பற்றி அதிகம் ஏதும் செய்ய முடியாது." ஆடை ஏற்றுமதி ஊக்குவிப்புக் கழகத்தின் தலைவர் ராகேஷ் வைத்தின் கருத்துப்படி, "இந்திய துணிகள் ஏற்றுமதியாளர்கள் இந்த ஆண்டு உலக பொருளாதாரப் பின்னடைவு நிலையை ஒட்டி 10 சதவிகித சரிவை எதிர்பார்க்கின்றனர்." விவசாயத்திற்கு பின்னர் ஜவுளித் துறைதான் இந்தியாவில் அதிகம் பேருக்கு வேலை கொடுக்கிறது. ஹரியானாவில் பானிப்பட், தெற்கு இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருப்பூர் ஆகியவை ஏற்கனவே குறைந்த நிலையால் பாதிப்பிற்கு உள்ளாகி விட்டன. திருப்பூரில் மட்டும் இந்த ஆண்டு 16,000 பேர் வேலையிழந்துள்ளனர்; மற்றும் ஒரு 15,000 பேர் பணிநீக்கம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வைரத் தொழிலும் பாதிப்பை உணர்ந்துள்ளது. இந்தியாவின் விலையுயர்ந்த கற்கள் ஆபரணங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் 40 சதவிகிதம் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகின்றன. இந்த வணிகத்தின் மதிப்பு 25 பில்லியன் டாலர் ஆகும். கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க சந்தை 15ல் இருந்து 20 சதவிகிதம் சரிந்துள்ளது. மேற்கு மாநிலமான குஜராத்தில் இருக்கும் சூரத்தில் வைரத் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் 700,000 பேர், இப்பொழுது உறுதியற்ற நிலையை எதிர்நோக்கியுள்ளனர். ஞாயிறன்று PTI நாட்டின் மிகப் பெரிய கார் ஏற்றுமதி நிறுவனமான Huyandai Motor India அதற்கு வந்துள்ள ஆர்டர்களில் 25 சதவிகித்தை குறைத்துள்ளதாக கூறுகிறது. "தென்னாபிரிக்கா, கொலம்பியா மற்றும் ஐஸ்லாந்தில் இருக்கும் எமது முக்கிய சந்தைகளில் இருக்கும் வணிகர்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்தி வைக்குமாறு கோரியுள்ளனர். எப்பொழுது மீண்டும் அனுப்ப வேண்டும் என்பது பற்றியும் அவர்கள் குறிப்பிடவில்லை" என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் H.S. Lheem கூறினார். இந்தியாவில் அதிகமாகப் புகழப்படும் தகவல் தொழில்நுட்ப தொழில்பிரிவு அமெரிக்காவின் நிதியக் கொந்தளிப்பின் பாதிப்பை உணர்கிறது; அங்கு பல வங்கிகளும் நிதிய அமைப்புக்களும் இந்தியாவின் வணிக வழிவகை வெளியே கொடுத்தலை (Business process outsourcing BPO வை நம்பியிருந்தன. சத்யம் IT நிறுவனம் ஏற்கனவே 4,500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் எனக் கூறிவிட்டது. TCS, Infosys, Wipro போன்ற மற்ற முக்கிய IT நிறுவனங்களும் பதவி உயர்வுகளை தள்ளி வைத்து புதிதாகத் தேர்வு செய்யப்படுபர்கள் எண்ணிக்கையும் குறையும் என்று கூறியுள்ளன. சிங் அரசாங்கத்தின் உத்தரவாதங்கள் இருந்தபோதிலும்கூட, எதிர்ப்பட்டுள்ள உலக மந்த நிலைமை இந்திய பொருளாதாரத்திற்கு பெரிய மாறுதல்களை கொடுக்கும். ஏற்கனவே நடக்கும் வேலைக் குறைப்புக்கள் நாடு முழுவதும் இருக்கும் பல மில்லியன் தொழிலாளர்களுக்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான அடையாளம் ஆகும். |