: செய்திகள்
ஆய்வுகள் : வட
அமெரிக்கா
A damning admission on the Georgian war
ஜோர்ஜிய போரைப் பற்றி இழிந்த வகையிலான ஒப்புதல்
By Alex Lantier
8 November 2008
Use this version
to print | Send
this link by email | Email
the author
நியூ யோர்க் டைம்ஸ்
வெள்ளிக் கிழமையன்று, "ரஷ்யப் போர் பற்றிய ஜோர்ஜியாவின்
கூற்றுக்களை தகவல்கள் கீழறுக்கின்றன" என்று தலைப்பிடப்பட்ட முதல் பக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. 56
உறுப்பினர்களை கொண்ட OSCE
எனப்படும்
ஐரோப்பிய பாதுகாப்பு, ஒத்துழைப்பு அமைப்பு (Organization
for Security and Cooperation in Europe)
கொடுத்துள்ள ஒரு அறிக்கையை மேற்கோளிட்டுள்ளது; இதன்படி போர் நடந்தபோது அங்கு கண்காணிப்பாளர்களாக
இருந்த இந்த அமைப்பின் உறுப்பினர்களின் கருத்துப்படி, 2008 ஆகஸ்ட் ரஷ்ய ஜோர்ஜிய போரின்போது அமெரிக்கா
உத்தியோகபூர்வமாக இது ஒரு ரஷ்ய ஆக்கிரமிப்பு என்று கூறிய கருத்தை முற்றிலும் தவிடுபொடி ஆக்குகிறது.
அமெரிக்கரிடம் பயிற்சி பெற்ற ஜோர்ஜிய துருப்புக்கள், ரஷ்ய அமைதி காப்பாளர்கள்
மற்றும் ஜோர்ஜியாவின் பிரிவினை நாடும் மாநிலமான தெற்கு ஒசேஷியாவின் தலைநகரான டிஷின்வலியின் சாதாரண
குடிமக்கள் மீது குண்டுகளை ஆகஸ்ட் 7ம் தேதி வீசிய அளவில் மோதல்கள் தொடங்கியது என்று
OSCE முடிவிற்கு
வந்துள்ளது.
வெள்ளிக் கிழமை நியூ யோர்க் டைம்ஸ் பதிப்பின்படி, "இந்த அமைப்பு
கொடுத்த தகவல்கள் ஜோர்ஜியாவின் அனுபவமற்ற இராணுவம் பிரிவினைவாத தலைநகரான டிஷின்வலியின் ஒதுக்கப்பட்ட
பகுதிகளில் ஆகஸ்ட் 7ம் தேதி பொறுப்பற்ற முறையில் பீரங்கி மற்றும் ராக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டு
அங்கிருந்த சாதாரணக் குடிமக்கள், ரஷ்ய அமைதி காப்பாளர்கள் மற்றும் நிரபராதியான கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு
பெரும் தீங்கு விளைவித்தது." பத்திரிகை மேலும் கூறியது:"ஜோர்ஜிய பீரங்கி மற்றும் ராக்கெட்டுக்கள் நாள்
முழுவதும் நகரத்தில் 15-20 வினாடிகள் வித்தியாசத்தில் குண்டுகளை வீசிக்கொண்டே இருந்தன; குண்டுவீச்சுக்கள்
தொடங்கி முதல் மணி நேரத்தில் குறைந்தது 48 முறை சாதாரண மக்கள் வசிக்கும் பகுதி தாக்குதலுக்கு
ஆளானது."
ஆகஸ்ட் 7 அன்று காலை 6 மணியளவில் ஆரம்ப குண்டு வீச்சிற்கு பின்னர், ஜோர்ஜிய
துருப்புக்கள் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்தை அறிவித்தன; இந்த நேரத்தில் அவர்கள் ராக்கெட்டுக்கள் மற்றும்
பீரங்கிகளை நன்கு தாக்கக் கூடிய இடங்களை தேர்ந்தெடுத்து நகர்த்தியிருக்க வேண்டும் என்பது வெளிப்படை. 11
மணிக்கு ரஷ்ய துருப்புக்கள் தெற்கு ஒசேஷியாவில் இருக்கும் ஜோர்ஜிய கிராமங்களை தாக்கிவருவதாக ஜோர்ஜியா
அறிவித்ததுடன் அதன் நடவடிக்கை மீண்டும் அங்கு "அரசியலமைப்பு ஒழுங்கை மீட்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது" என்று
கூறியது.
ரஷ்ய தாக்குதல்களுக்குத்தான் ஜோர்ஜிய துருப்புக்கள் விடையளித்தன என்ற கூற்றை
OSCE
கண்காணிப்பாளர்கள் மறுத்துள்ளனர். டைம்ஸ் எழுதியது: ஜோர்ஜிய ஜனாதிபதி திரு. சாகேஷ்விலி
தாக்குதலுக்கு நியாயப்படுத்திய முக்கிய காரணங்களுள் ஒன்றான "ஜோர்ஜிய இனக்குழு கிராமங்கள் அன்று மாலை
பெரும் குண்டுவீச்சிற்கு ஆளாயின என்று கூறியதை கண்காணிப்பாளர்கள் சரி பார்க்க இயலவில்லை என்று தெரிவித்துள்ளனர்"
என்று டைம்ஸ் எழுதியது.
போர் தொடங்கியபோது ஜோர்ஜியாவில்
OSCE யின் மூத்த
பிரதிநிதியாக அங்கிருந்த முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ அதிகரியான ரியன் கிரிஸ்ட்டி, "ஜோர்ஜிய தாக்குதல் முற்றிலும்
பொறுப்பற்ற முறையில், தூண்டுதல் இருந்தாலும் சற்றும் அளவிற்குப் பொருந்தாத வகையில்தான் உண்மையில் இருந்தது
என்பது எனக்குத் தெளிவாயிற்று" எனக் கூறியதாக அப்பத்திரிகை மேற்கோளிட்டுக் கூறியுள்ளது.
பின்னர் விளக்கப்பட்டது போல், குறிப்பாக ஐரோப்பிய
செய்தி ஊடகத்தில், ஜோர்ஜிய தெற்கு ஒசேஷியாவை விரைவில் கைப்பற்றிவிடலாம், ரஷ்யாவையும் தெற்கு ஒசேஷியாவையும்
பிரிக்கும் மலைகளுக்கு இடையே உள்ள Roki Tunnel
ஐ கைப்பற்றிவிடலாம் என்ற விதத்தில் செயல்பட்டது. ரஷ்யா பலவீனமான முறையில் இதை எதிர்கொண்டிருந்தால்
--பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் பந்தயத்திற்காக ரஷ்ய உயர் அதிகாரிகள் சென்றிருந்த நேரத்தில் தாக்குதல் நடைபெற்றது--ஜோர்ஜியா
வாதத்திற்கிடமின்றி நிறைவேற்றப்பட்ட காரியத்துடன் ரஷ்யாவை வைத்திருக்க நம்பிக்கை கொண்டிருக்கக் கூடும். ஆனால்
ஜோர்ஜிய தாக்குதல் டிஷினிவலியில் நிகழ்ந்தவுடன் ரஷ்யா அதிக துருப்புக்களை அனுப்பி தெற்கு ஒசேஷியாவில் இருந்து
ஜோர்ஜிய படைகளை விரைவில் விரட்டிவிட்டது.
அமெரிக்க அரசாங்கமும் அப்பொழுது தகவல் கொடுத்து வந்த செய்தி ஊடகமும்
உண்மையை தலைகீழாக மாற்றி ஒருமித்த குரலில் ரஷ்யாவை அதன் "ஆக்கிரமிப்புக் கொள்கைக்காக" கண்டித்தன.
ரஷ்யா தெற்கு ஒசேஷியாவிற்கு கூடுதல் படைகளை அனுப்பி அங்கு வந்த ஜோர்ஜிய படைகளை விரட்டியவுடன், ஜனாதிபதி
புஷ், ரஷ்யா மேற்கொண்ட விடையிறுப்பை "அளவிற்கு அதிகமானது" என்று கண்டித்தார். துணை ஜனாதிபதி டிக் செனி,
"ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு விடை கொடுக்காமல் இருக்கக் கூடாது" என்றார். மேலும் அது தொடர்ந்து அங்கு
இருந்தால் ரஷ்யா அமெரிக்காவுடன் கொண்டிருக்கும் உறவுகளில் "மோசமான விளைவுகளை" ஏற்படுத்தும் என்று
கூறினார்.
ஆகஸ்ட் 12 தலையங்கத்தில் டைம்ஸ்: "1990 களின் ஆரம்பத்தில் இருந்து
ஜோர்ஜியாவில் இருந்து பிரிய முற்படும் தெற்கு ஒசேஷியா மற்றும் அப்காசிய இனக்குழு சிறுபான்மையினரின் உரிமைகளை
காக்கத்தான் செயல்படுவதாக மாஸ்கோ கூறுகிறது. ஆனால் அதன் விழைவுகள் இதைவிட மிக அதிகமாக உள்ளன.
பிரதம மந்திரி விளாடிமீர் புட்டின் வலிமை மற்றும் மிரட்டல் மூலம் பழைய சோவியத் செல்வாக்கு மண்டலத்தில்
ரஷ்ய செல்வாக்கை மீண்டும் சுமத்த உறுதிபூண்டுள்ளார் என்றும் அதில் எவரும் குறுக்கிட முடியாது என்றும் நினைக்கிறார்"
என எழுதியது.
டைம்ஸ் வெள்ளிக் கிழமை வெளியிட்ட அதன் கட்டுரையில்
OSCE கொடுத்துள்ள கண்டுபிடிப்புத் தகவல்கள் பற்றி தனக்கு
ஏதும் முன்பு தெரியாது என்ற உட்குறிப்பைக் காட்டியுள்ளது. ஆனால் இது கொடுத்துள்ள தகவலே ஜோர்ஜிய ரஷ்ய
பூசல் பற்றி தவறான தகவலைப் பரப்புதற்கு தனக்குச் சாதகமான சித்திரத்தை கொடுத்த இதன் பங்குடன்
முரண்படுகிறது. இக்கட்டுரை OCSE
யின் பிரதிநிதி கடந்த ஆகஸ்ட்டில் "ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர்களுக்கு கொடுத்த தகவலில் கண்காணிப்பாளர்களின்
கருத்துக்களில் இருந்து எடுத்த தகவலும் அவருடைய மதிப்பீடும் இருந்தன. அதன் பின் அவர் புரிந்து கொள்ள
முடியாத சூழ்நிலையில் உடனே இராஜிநாமா செய்தார்" என்று குறிப்பிடுகிறது. டைம்ஸ் (அமெரிக்க
அரசாங்கமும்) கிரிஸ்ட் அறிக்கை ஐரோப்பிய அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளேயே நன்கு
அறிந்திருந்தது என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது.
OSCE சான்றுகளுக்கும் அமெரிக்க
அரசாங்கம், செய்தி ஊடகத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிற்கும் இடையே இருக்கும் வேறுபாடு "அமெரிக்கவை
கடினமான நிலையில் வைக்கும் திறன் உடையது. சாகேஷ்விலிக்கு முக்கிய வெளிநாட்டு ஆதரவிற்கு ஆதாரமாக
இருக்கும் அமெரிக்கா பல ஆண்டுகளாக இந்த அமைப்பின் முடிவுகள் பற்றியும் அதன் நேர்த்தியான செயற்பாடு பற்றியும்
ஏற்கத்தான் செய்துள்ளது" என்று டைம்ஸ் கட்டுரை முடிவுரையாக கூறியுள்ளது.
உண்மையில் OSCE
அறிக்கை பல முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கொண்டிருக்கும் அமெரிக்க நிலைப்பாட்டை முற்றிலும் மறுக்கிறது.
ரஷ்யாவின் மீது புகார் கூற முற்படுகையில், அமெரிக்க செய்தி ஊடகமும் அமெரிக்காவிற்கு தெரியாமல் ஜோர்ஜிய
படைகள் செயல்பட்டன என்ற கருத்துக்களை பரப்பின -- படையெடுப்பிற்கு முன்னதாக அமெரிக்கா ஜோர்ஜியாவில்
100 இராணுவ ஆலோசகர்களை நிறுத்தி வைத்திருந்தும் இவ்வாறு கூறப்பட்டது; இதைத்தவிர "உடனடி விடையிறுப்பு
2008" என்ற பெயரில் அமெரிக்கப் படைகளுடன் கூட்டுப் பயிற்சிகளும் நடைபெற்றிருந்தன.
ரஷ்ய-ஜோர்ஜிய மோதலை பயன்படுத்தி போலந்திலும் செக் குடியரசிலும் வாஷிங்டன்
ஏவுகணைப் பாதுகாப்பு முறைகள் மற்றும் துருப்புக்களை நிறுத்த முற்பட்டது; இது ரஷ்யாவுடன் நேரடி இராணுவ
தாக்குதல் என்ற பயங்கர சூழலை அதிகப்படுத்தியது. ஜோர்ஜியாதான் ஆக்கிரமிப்பு நடத்தியது என்ற ரஷ்யக் கூற்றுக்களை
அமெரிக்க உதறித்தள்ளியது.
குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயின் சாகேஷ்விலிக்கு
தொலைபேசி மூலம் கூறினார்: "இன்று நாங்கள் அனைவரும் ஜோர்ஜியர்கள்." இதன்பின் ஜனநாயகக் கட்சி
வேட்பாளர் பாரக் ஒபாமா, அவர் விடுமுறையைக் கழித்துகொண்டிருந்த இருந்த ஹவாயில் இருந்து ரஷ்ய "ஆக்கிரமிப்பை"
கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதன்பின், செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களின் ஏழாம் ஆண்டு
முடிவை ஒட்டி இருந்த நிகழ்ச்சிகளில் வேட்பாளர்கள் இணைந்து "தேசியப் பணி" என்பதற்கான அழைப்பை விடுத்தனர்;
"நாம் போருக்குப் போகவேண்டும் என்றால், ஒரு சிலர் என்று இல்லாமல், அனைவரும் போக வேண்டும்" என்று
ஒபாமா கூறினார்.
உலகப் போரை ஏற்படுத்தக்கூடிய திறன் இருக்கும் நிலைமையில் இருந்து திட்டவட்டமான
அரசியல் முடிவுரைகள் எடுக்கப்பட வேண்டும். முதலிலும் முக்கியமானதுமாக, அமெரிக்க அரசியல் நடைமுறை மற்றும்
எந்தவித எதிர்ப்பு கருத்தும் தெரிவிக்காத செய்தி ஊடகம் இரண்டும் முற்றிலும் நம்பகத்தன்மையை இழந்துள்ளது கவனிக்கப்பட
வேண்டும்; அதுவும் இவை பற்றிய விமர்சனங்கள் ஐரோப்பிய செய்தி ஊடகத்தில் அவற்றின் கூற்றுக்களுக்கு முரணான
வகையில் வெளிப்பட்டன.
நியூ யோர்க் டைம்ஸ்
OCSE அறிக்கைக்கு
கொடுத்துள்ள முக்கியத்துவம் --இக்கட்டுரை முதல் பக்க முக்கிய கட்டுரையாக வெளியிடப்பட்டு, உட்பக்கங்களிலும்
ஒரு முழுப் பக்கம் வெளியிடப்பட்டது--இப்பகுதியில் அமெரிக்க கொள்கை மாற்றம் பற்றி பொது மக்கள் கருத்து
உருவாதலுக்கு வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட நிலைப்பாடு எனத் தெரிகிறது. ஆப்கானிஸ்தானில் கூடுதலான அமெரிக்க
இராணுவம் நிறுத்தப்படும் என்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா உறுதியளித்துள்ள நிலையில், அமெரிக்கா
ஒரு பெரிய பொருளாதார மந்தநிலையை எதிர்நோக்கியிருக்கையில், ரஷ்யாவுடன் உறவுகளை சீரமைத்துக் கொள்ளும்
முயற்சிகள், ஒருவேளை சாகேஷ்விலியின் இழப்பில்கூட என, மேற்கோள்ளப்படக்கூடும் என்று தெரிகிறது.
டிபிலிசியல் 10,000 எதிர்ப்பாளர்கள் நேற்று சாகேஷ்விலிக்கு எதிராக ஆர்ப்பரித்தனர்;
இது போட்டி தேசியவாத இர்கலி ஒக்ருஷ்விலி என்னும் போட்டியாளருக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டங்கள் கடுமையாக
அடக்கப்பட்ட தினத்தின் ஓராண்டு முடிவடைந்த நாளை ஒட்டி ஏற்பாடாகி இருந்தது.
அணுவாயுதங்கள் குறித்தும், ரஷ்யாவுடன் சர்ச்சைக்குரிய அதற்கு எதிரான பாதுகாப்பு
கேடயத்தை அமெரிக்கா அமைத்து வருவது பற்றியும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை தொடக்குவதற்கான
திட்டத்தையும் அமெரிக்கா நேற்று அறிவித்தது. இப்பேச்சுக்கள்
START (Stratgeic
Arms Reduction Treaty) மூலோபாய வகையில் ஆயுதக்
குறைப்புக்கள் நிலைப்பாட்டை திருத்தும் நோக்கத்தை கொண்டிருக்கும் என்றும் "ஐரோப்பாவிற்கு ஒரு அமெரிக்க
ஏவுகணை பாதுகாப்பு முறைக்கு ரஷ்யாவின் பெருகிய எதிர்ப்பை" சமாதானப்படுத்தும் வகையிலும் பேச்சுவார்த்தைகளின்
நோக்கம் இருக்கும்.
வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர், புஷ் நிர்வாகத்தின் கீழ் அத்தகைய
பேச்சுவார்த்தைகள் முடிவு பெறாது என்றும் இது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமாவிற்கு "செயல்
தொடங்க உபயோகப்படலாம்" என்பதைக் காட்டும் வகையில்தான் இருக்கும் என்று கூறினார். |