World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிGermany: SPD right wing sabotages change of government in Hesse ஜேர்மனி: ஹெஸ்ஸவில் சமூக ஜனநாயக கட்சி வலதுசாரிகள் அரசாங்க மாற்றத்தை நாசவேலையூடாக தடுத்துவிட்டனர் By Ulrich Rippert மாநிலத்தின் சமூக ஜனநாயக கட்சி தலைவர் ஆண்ரே இப்சிலான்டி புதிதாக அரசாங்கம் அமைக்கலாம் என்று கொண்டிருந்த நம்பிக்கைகளை, ஹெஸ்ஸ மாநிலத்தில் இவ்வம்மையார் திட்டமிட்டிருந்த பிரதமர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக சமூக ஜனநாயக கட்சியினுள் (SPD) இருக்கும் வலது சாரிப் பிரிவு ஒன்று தகர்த்தது. திங்களன்று இப்சிலான்டியின் சொந்த மாநில பாராளுமன்றக் குழுவில் உள்ள நான்கு உறுப்பினர்கள் பகிரங்கமாக அவருக்கு ஆதரவு கொடுப்பதற்கில்லை என்று அறிவித்துவிட்டனர். இவ்விதத்தில் இப்சிலான்டிகுக் கிடைத்த பின்னடைவு மாநிலத்தில் ஒரு சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கத்தை இடது கட்சியின் மறைமுகமான ஆதரவு அல்லது பொறுத்துக் கொள்ளுதல் அடிப்படையில் அமைக்க முற்பட்ட சமூக ஜனநாயக கட்சி முயற்சிகளுக்கு ஒரு மரண அடி ஆகும். மார்ச் மாதத்தின் முன்னதாக அத்தகைய கூட்டணி அமைக்கும் முயற்சி, மாநிலத்தின் தற்போதைய பழைமைவாத பிரதமர் ரோலண்ட் கொக்கிற்கு (கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU) வின் தலைவர்), பதிலாக கொண்டுவருதல் என்பது ஒரு சமூக ஜனநாயக கட்சி பிரதிநிதி டாக்மார் மெட்ஸ்கர் இப்சிலான்டிக்கு ஆதரவு கொடுக்காததால் தோல்வி அடைந்தது. நேற்று மெட்ஸ்கர் தன்னுடைய நிலைப்பாட்டிற்கு இன்னும் மூன்று பிரதிநிதிகளிடம் இருந்து ஆதரவைப் பெற்றார். திங்கள் நண்பகலில், நான்கு "வலதுசாரி மாறுபாட்டாளர்கள்'' ஒரு கூட்டு செய்தியாளர் மாநாட்டை நடத்தி இப்சிலான்டி தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சி கூட்டணிக்கு எதிர்ப்பிற்கான தங்கள் இரு முக்கிய காரணங்களை கூறினர். முதலில் அவர்கள் எத்தகைய ஒத்துழைப்பும் இடது கட்சியுடன் என்பதை நிராகரித்தனர்; இரண்டாவதாக அவர்கள் சிறு மற்றும் பெருவணிக வட்டங்களின் நலன்கள் பற்றி சார்பு கொண்டுள்ள கொள்கையில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தனர். நான்கு பேரும் தங்கள் கடுமையான கம்யூனிச எதிர்ப்பு உணர்வை ஒன்றும் இரகசியமாக வைக்கவில்லை. எதிர்க்குழுவின் தலைவர் சமூக ஜனநாயக கட்சி மாநிலத் துணைத் தலைவரான யூர்கன் வால்ட்டர் ஆவார். இந்த 40 வயது வக்கீல் வணிக நலன்கள் சார்பான நன்கு அறியப்பட்ட வக்கீல் ஆவார்; பல ஆண்டுகள் உள்ளூர் மக்களிடம் இருந்து கணிசமான எதிர்ப்பைக் கொண்டிருக்கும் பிராங்க்போர்ட் விமான நிலைய விரிவாக்கத்திட்டத்திற்கு ஆதரவானவராவார். 2006 தேர்தலில் இப்சிலான்டிக்கு எதிராக வால்டர் மாநில தேர்தல்களில் கட்சியின் முக்கிய வேட்பாளர் பதவிக்கு போட்டியிட்டார். பசுமை வாதிகள் புறம் அரசியல் சார்பை இப்சிலான்டி கொள்வதை வால்டர் கடுமையாக எதிர்த்து அதற்கு பதிலாக "பெரும் கூட்டணியில்" கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் உடன் ஒத்துழைக்கலாம் என்று வாதிட்டார். அவர் தோற்கடிக்கப்பட்டார். இந்த ஆண்டு மாநிலத் தேர்தலுக்கு பின்னர் வால்டர் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் உடன் கூட்டணி அரசமைக்க வேண்டும் என்று வாதிட்டு வருகிறார்.தனிப்பட்ட முறையில் இவர் ஏற்கனவே அத்தகைய கூட்டணிக்கு இக்கோடையில் கிறிஸ்துவ ஜனநாயக யூனியனின் ஹெஸ்ஸ மாநிலச் செய்தித் தொடர்பாளர் எஸ்தர் பெற்றியை திருமணம் செய்த வகையில் முத்திரையிட்டுள்ளார். மற்றும் இரு சமூக ஜனநாயக கட்சி பிரதிநிதிகளான கார்மென் எவேர்ட்ஸ், ஸில்க்க ரெஸ், வால்டர், மெட்ஸ்கருடன் திங்கள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சேர்ந்து கொண்டு இப்சிலான்டிக்கு தங்கள் எதிர்ப்பை விளக்கினர். வால்டரைப் போல் கார்மென் எவர்ட்ஸும் ஒரு வக்கீல் ஆவார். இவர் இடது கட்சியுடன் எத்தகைய ஒத்துழைப்புக்கும் இடமில்லை என்று நிராகரித்ததை நியாயப்படுத்துவதற்கு தீவிரவாத அரசியல் பற்றிய தன்னுடைய கலாநிதி பட்ட ஆய்வுக் கட்டுரையை காட்டியுள்ளார். சமூக ஜனநாயக கட்சி பாராளுமன்றக் குழுவில் சிறு வணிகர்கள், பணிகள், கைவினைப் பிரிவு ஆகியவற்றிற்கு ஆதரவாப் பேசுபவர் ஸில்க்க ரெஸ் ஆவார்; மற்றும் மன்றத்தின் சட்டக் குழுவின் துணைத் தலைவரும் ஆவார். செய்தியாளர் கூட்டத்தில் தன்னுடைய எதிர்ப்பை அவர் இவ்வாறு நியாயப்படுத்தினார்: "இடதுடன் தொடர்பு கூடாது என்பதை நான் மீண்டும் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் கூறினேன்." தன்னுடைய தொகுதியில் இந்த முறிந்த உறுதிமொழி தொடர்பாக தொடர்ந்தும் என்னிடம் கேட்கப்படுகின்றது. இப்படிப்பட்ட "முறிந்த உறுதி மொழியையும்" தன்னுடைய மனச்சாட்சியும் சமரசப்படுத்துவதற்கு தன்னால் முடியாது என்று அவர் கூறினார். வால்டர், எவர்ட்ஸ் மற்றும் ரெஷ் ஆகியோர் இவ்விடயத்தில் மிகவும் தாமதமாக தங்கள் "மனச்சாட்சியை" கண்டுள்ளனர். சமீபத்திய காலத்தில் இவர்கள் மூன்று பேரும் பலமுறை நவம்பர் 4ம் தேதி இப்சலான்டிக்கு ஆதரவாக வாக்களிக்க இருப்பதாக பலமுறையும் உறுதியளித்திருந்தனர். பசுமைக் கட்சிக்காரர்களுடன் கூட்டணி உடன்பாட்டின் விவரங்களை தொடர்பாக கூட வால்ட்ர் ஈடுபட்டிருந்தார்; இப்பொழுது உரத்த குரலில் அவர்களைக் கண்டிக்கிறார். இவரைக் கடந்து தன்னுடைய விருப்பத்திற்கு உகந்த பொருளாதார மந்திரியாக ஹெர்மன் ஷீரை இப்சிலான்டி தேர்ந்தெடுத்துள்ளது பற்றி வால்டர் வெளிப்படையாக அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் ஐரோப்பிய விவகாரங்கள் துறையை இப்சிலான்டி வால்டருக்குக் கொடுக்க முன்வந்த போது அப்பதவி வேண்டாம் என்று கூறிவிட்டார். செய்தியாளர் தகவல்படி, பேர்லினில் உள்ள சமூக ஜனநாயக கட்சியின் தேசியத் தலைமை ஹெஸ்ஸவில் நடந்த இப்போக்குகள் பற்றி முழு வியப்பை அடைந்தன. நிர்வாகக் குழு உறுப்பினர்கள் "நம்பமுடியாத வியப்பை" அடைந்தனர்; கட்சியில் எவரும் தங்கள் சக கூட்டாளிகள் நான்கு பேர் ஹெஸ்ஸவில் இவ்வாறு செய்வர் என்று எதிர்பார்க்கவில்லை. நிர்வாகக் குழுவின் கருத்துப்படி, இந்த நால்வரின் நடவடிக்கை "வினோதமானது, விசுவாசமற்றது" என்பதாகும். சமூக ஜனநாயக கட்சி தலைவரான பிரான்ஸ் முண்டபெயரிங் இந்த நிகழ்வுகளை ஹெஸ்ஸவில் சமூக ஜனநாயக கட்சிக்கு "கடுமையான தாக்குதல்" என்று விவரித்தார். திங்கள் காலை தகவல் வந்தவுடன், ஆரம்ப எதிர்கொள்ளல் "அதிர்ச்சி மற்றும் இகழ்வின் கலவையாக இருந்தது" என்று முன்டபெரிங் கூறினார். சமூக ஜனநாயக கட்சி தலைவருடன் நடத்தப்பட்ட பேட்டி ஒன்று Bild என்னும் பரபரப்பு ஏட்டில் தோன்றியது; இதில் முன்டபெரிங் இடது கட்சியிடம் இருந்து பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இப்சிலான்டியின் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தன் ஆதரவை அறிவித்திருந்தார். இந்த நாளேடு இப்சிலான்டியின் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு "முழு ஆதரவை" வழங்குவதாக என்று அவர் கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. இடது கட்சியில் தங்கியிருப்பது என்பது "இயல்பாக பிரச்சினைதான் என்று முன்டபெரிங் கூறினார்; ஆனால் மீண்டும் ஹெஸ்ஸ "நியாயமாக ஆளப்பட வேண்டும்" என்பது முக்கியம் என்றார். ஆனால் இடது கட்சி இல்லாத ஒரு தீர்விற்கு தான் முன்னுரிமை கொடுத்திருப்பேன் என தெரிவித்தார். சில வர்ணனையாளர்கள் கட்சியின் வலதுசாரித் தலைவர் கொடுத்துள்ள ஆதரவு அறிக்கைகள் இப்சிலான்டிக்கு கொடுக்கப்பட்ட அரசியல் மரண முத்தமா அல்லது சமூக ஜனநாயக கட்சி தலைமை உண்மையிலேயே நிகழ்வுகள் பற்றி அதிர்ச்சி அடைந்துள்ளதா என்று ஊகிக்கின்றனர். இத்தகைய ஊகத்திற்கு அதிக முக்கியத்துவம் கிடையாது. கோடையில் பிரான்ஸ் முன்டபெரிங்கும் சமூக ஜனநாயக கட்சியின் அதிபர் பதவி வேட்பாளர் பிராங் வால்டர் ஸ்ரைன்மையிரும் சமூக ஜனநாயக கட்சி தலைமையில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தனர்; இது 2010 செயற்பட்டியல் மற்றும் Hartz IV ல் இருந்த கடும் சிக்கன நடவடிக்கைகள் பற்றிய பெருகிய அதிருப்தியை கட்சி ஏற்பதை தடுக்கும் நோக்கத்தை கொண்டிருந்தது. அவர்களுடைய நோக்கம் கட்சியின் மிக அதிருப்திகரமான செயற்பட்டியல் கொள்கைகளை தீவிரப்படுத்தி செயல்படுத்துவதற்கான சிறந்த நிலைமைகளை எப்படியும் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். பவேரியாவில் கிறிஸ்துவ சமூக யூனியனுக்கு (CSU) சமீபத்திய தேர்தலில் ஏற்பட்ட சங்கடத்தை அடுத்து பழைமைவாத முகாமில் இருக்கும் நெருக்கடியை ஒட்டி, விரைவாக மோசமாகிவரும் பொருளாதார, நிதிய நெருக்கடிச் சூழ்நிலையில், சமூக ஜனநாயக கட்சி அதன் பணிகளை ஜேர்மனிய ஆளும் உயரடுக்கிற்கு புதிய சமூகக் குறைப்புக்களை செயல்படுத்தவதற்கு நம்பகமான கருவி என்று தன்னைக் காட்டுகிறது. தங்கள் பங்கிற்கு சமூக ஜனநாயக கட்சியின் இடது என அழைக்கப்படும் பிரிவு அத்தகைய போக்கு இன்னும் கூடுதலான வகையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை கட்சியில் இருந்து விரட்டிவிடும் என்றும் நீண்ட கால அடிப்படையில் இடது கட்சியைவிட இன்னும் கூடுதலான ஒரு முற்போக்கான இடது மாற்றீடு உருவாகுவதற்கு வகை செய்யும் என்றும் நினைக்கின்றது. இந்த இடதுபிரிவு சாக்சனி, மெக்லென்பர்க், மேற்கு பொமரேனியா மற்றும் பேர்லின் போன்ற மாநிலங்களில் அதிகாரத்தில் இருக்கும் இடது கட்சி முதலாளித்துவ ஒழுங்கிற்கு ஒரு நம்பிக்கையான முட்டுக் கொடுக்கும் வகையில்தான் செயலாற்றியுள்ளது என்பதை நன்கு அறிந்து இடது கட்சியுடன் செயல்படத் தயாராக உள்ளது. சமீபத்திய ஹெஸ்ஸ நிகழ்வுகள் இன்னும் கூடுதலான வகையில் சமூக ஜனநாயக கட்சி வலதிற்கு மாற இருப்பதற்கு ஒரு முன்னோடியாகும்; அதே நேரத்தில் இது உட்கட்சி பூசலைத் தீவிரப்படுத்தி ஒருவேளை பிளவைக் கூட ஏற்படுத்தக்கூடும். |