India army officers linked to Hindu supremacist
terrorism
இந்திய இராணுவ அதிகாரிகள் இந்து மேலாதிக்கப் பயங்கரவாதத்துடன் தொடர்பு
By Kranti Kumara
6 November 2008
Use this version to
print | Send
this link by email | Email
the author
செப்டம்பர் 29 அன்று மேற்கு இந்தியாவில் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் நடந்த
குண்டுவீச்சுக்களை பற்றி விசாரணை நடத்திவரும் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு
(Anti Terrorism Squad),
விசாரணையை ஒட்டி ஒரு ஓய்வு பெற்ற இந்திய இராணுவத்தின் மேஜரையும் தற்பொழுது பணியில் இருக்கும் லெப்டினன்ட்
கேர்னல் ஒருவரையும் கைது செய்துள்ளது -- இந்து மேலாதிக்கவாதிகளால் இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது
என்று ATS
கூறியுள்ளது.
மகாராஷ்ட்டிர மாநிலத்தின் வடமேற்கில் இருக்கும் ஒரு மில்லியன் மக்கள் வாழும் மேலகாம்
என்ற இடத்தில் குண்டுகள் வெடித்தன; மேலும் அண்டை மாநிலமான குஜராத்தில் மேலகாம்மிற்கு வடக்கே இருக்கும்
மோடசா என்னும் சிறுநகரத்திலும் கடந்த செப்டம்பர் 29 அன்று ஒவ்வொன்றாக ஒரு சில நிமிஷங்களில் குண்டுகள்
வெடித்தன. மேலகாம் குண்டுவீச்சு 5 பேரைப் பலி கொண்டது; மோடசா குண்டு வெடிப்பில் ஒரு 15 வயது சிறுவன்
இறந்தான். குண்டுகள் கிட்டத்தட்ட நூறு பேரைக் காயப்படுத்தின; அவர்களுள் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அக்டோபர் 24ம் தேதி அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்
(ABVP) எனப்படும்
இந்து மேலாதிக்க பிஜேபி மற்றும் RSS
உடன் இணைந்த ஒரு மாணவர் குழுவை சேர்ந்த பிரக்யா சிங் தாக்குர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் இருவர்,
35 வயது சிவநாராயண் கோபால் சிங் கல்சங்க்ரா மற்றும் 42 வயது ஷ்யாம் பன்வர்லால் சாகு என்பவரையும்
போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி, கொலை, வேண்டுமேன்றே பெரும் காயம் ஏற்படுத்துதல்
என்ற பிரிவுகள் மீது, செப்டம்பர் 29 தாக்குதல்களில் பங்கு இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது; ஆனால்
இன்னும் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்படவில்லை.
பிராக்யா எனப்படும் இந்து மதகுரு அல்லது சாத்வி தன்னை இந்தக் குழுவின் தலைவர்
என்று கூறிக்கொள்ளுகிறார்.
ஐந்து நாட்களுக்கு பின்னர் மகாராஷ்ட்ர மாநிலத்தின்
ATS பிரிவு ஓய்வு
பெற்ற இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் மற்றும் சமீர் குல்கர்னி என்னும் ஒரு சிறிய, வெறிபிடித்த இந்துத்துவ
அமைப்பான அபிநவ்வபாரத்தின் முக்கிய உறுப்பினரையும் கைது செய்தது.
ATS லெப்டினன்ட்
கேர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித்தை மத்திய பிரதேசத்தில் இருக்கும் அவருடைய இராணுவப் பிரிவில் இருந்து
விசாரணை நடத்த அழைத்து வந்தது. நேற்று போலீசார் புரோகித்திற்கு எதிராக குற்றம் சுமத்துவதற்கு
பாதுகாப்பு அமைச்சரகத்தில் அனுமதி கோரிப் பெற்றனர்.
இத்தகைய போக்குகள் இன்னும் குறிப்பிடத்தக்க வகையில் முக்கியத்துவம் ஆனவை;
ஏனெனில் செப்டம்பர் 29 குண்டுவீச்சிற்கு போலீஸ் மற்றும் செய்தி ஊடகத்தின் உடனடி விடையிறுப்பு இஸ்லாமிய
பயங்கரவாதிகள்மீது குற்றம் சாட்டல் என்று இருந்தது; முஸ்லிம்கள் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று
தெளிவாகத் தெரிந்தும் இத்தகைய கருத்து நிலவியது. ரம்ழான் முடிவைக் குறிக்கும் ஈத் பெருநாள்
கொண்டாட்டத்திற்கு முன்பு இரவு 9.30 மணி அளவில் ஒரு மசூதிக்கு அருகே குண்டுகள் வெடித்தன.
இந்த குண்டு வீச்சுக்களை இப்பொழுது
ATS "ஒரு பெரிய
சதியின்" பகுதி என்று விவரிக்கிறது; ஆனால் இதைப்பற்றி விரிவாகக் கூற மறுத்துவிட்டது.
லெப்டினன்ட் கேர்னல் புரோகித், அபினவ் பாரத் எனப்படும் அமைப்பில் ஒரு நிறுவன
உறுப்பினர் ஆவார்; ஓய்வு பெற்ற மேஜர் உபாத்யாய் இதன் "செயல்படும் தலைவர்" ஆவார். 2006ம் ஆண்டில்
"இந்து-எதிர்ப்பு" நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்த அமைப்பு "புதுப்பிக்கப்பட்டது".
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இந்துத்துவா அல்லது இந்து தேசியவாதத்தின் பிரதான சிந்தனையாளர்,
வகுப்புவாத வெறியாளர் வி.டி. சவார்க்கர் நிறுவிய இரகசியக் குழுவின் வழித்தோன்றல் அமைப்பு என அது கூறிக்
கொண்டது. இந்திய தேசிய காங்கிரசின் பிரதான தலைவர் எம்.கே.காந்தி 1948ல் சவர்க்காரின்
மாணாக்கரால் படுகொலை செய்யப்பட்டார்.
போலீசார் கூற்றின்படி, லெப்டினன்ட் கேர்னல் புரோகித், பிராக்யா மற்றும்
அவருடைய கூட்டாளிகளுடன் பலமுறை கலந்து பேசியுள்ளார். இவர்களுக்கு இடையே இருந்த தொடர்பு முதலில் ஒரு
SMS
தகவல் பரிமாற்றத்தை புரோகித் குண்டு சதித்திட்டத்தின் உறுப்பினர்கள் ஓரிருவருடன் நடத்தியதில் இருந்து தெரிய
வருகிறது எனக் கூறப்படுகிறது.
இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற கேர்னல், மகாராஷ்ட்டிரத்தில் உள்ள
போன்ஸ்லே இராணுவப் பள்ளியின் முதல்வரையும் ATS
விசாரித்துள்ளது. இராணுவப் பள்ளி இந்து தீவிர வாதிகளுடன் நெருக்கமான பிணைப்புக்களை கொண்டுள்ளது இது
சவார்க்காரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பி.எஸ். மூஞ்சே என்பவரால் நிறுவப்பட்டது; அவர் இத்தாலிய
அரசாங்கம் பாசிச முசோலினியின் கீழ் இராணுவப் பயிற்சி கொடுத்ததை ஒரு உந்துதலாக எடுத்துக் கொண்டார்.
இந்து வகுப்பாவாத அமைப்பான பஜ்ரங் தளம் (BD),
ஒரிஸா மாநிலத்தில் கண்தம்மால் மாவட்டத்தில் ஆகஸ்ட்டில் இருந்து கிறிஸ்துவர்களுக்கு எதிரான பயங்கரப்
பிரச்சாரத்தை நடத்தி வருகிறது; இது இப்பள்ளியின் மைதானத்தில் இலவசமாக இராணுவ பயிற்சி நடத்தி
வருவதாகக் கூறப்படுகிறது. (See: India: Hindu
communalists target Christian minority in Orissa and other states
)
இந்திய அரசும் இந்து மேலாதிக்கமும்
இந்திய இராணுவத்தின் அதிகாரிகள் ஒரு இந்து தீவிரவாதக் குண்டுத் தாக்குதல்களில்
தொடர்பு படுத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
இராணுவம் மற்ற இந்திய பாதுகாப்புப் படைப் பிரிவுகளுடன் சேர்ந்து இந்திய
விரோத காஷ்மீர் தேசியவாதிகளுக்கு எதிராக பல விசாரணையற்ற கொலைகள், காணாமற் போகுதல்கள் ஆகிய
"கறைபடிந்த" போரின் பகுதியாக இருந்து வருகிறது; பாக்கிஸ்தானுடன் கடுமையான விரோதத்தை கொண்டுள்ளது.
ஆனால் மற்ற அரசு நிறுவனங்களைப் போல் இராணுவம் எப்பொழுதும் இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல்
அமைப்பின் அரண் என்றுதான் தன்னை சித்தரித்துக் கொண்டுள்ளது.
இராணுவ உயர் கட்டுப்பாட்டு அலுவலகம், அதிகாரிகள் பிரிவில் இந்து
மேலாதிக்கவாத ஆபத்து உள்ளது என்ற கருத்தை உதறித்தள்ளியது; செப்டம்பர் 29 அன்று நடந்த குண்டுவீச்சுக்கள்
தொடர்புபடுத்தப்படும் இராணுவ அதிகாரிகளை ஒரு சில "அழுகிய முட்டைகள்" என்று குறிப்பிட்டுள்ளது.
இராணுவத்தின் கூற்றுக்கள் ஒருபுறம் இருக்க, இந்திய அரசு ஊழியர்களிடையே இந்து
தீவிரவாத பரிவுணர்வு இருப்பது பற்றி நிறைய தகவல்கள் உள்ளன; இதில் போலீஸ், நீதித்துறை பிரிவுகளும் உள்ளன.
இல்லாவிடின் இந்தியாவின் ஆளும் உயரடுக்கு பல தசாப்தங்களாக வகுப்புவாதம்
சாதியம் ஆகியவற்றை வளர்த்து வராவிடின், இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (BJP)
அரசாங்கம் அமைக்கக்கூடிய மாற்றீட்டுக் கட்சியாக வரமுடியுமா?
மேலகாம்-மொடாசா குண்டுவீச்சு சதித்திட்டம் ஒன்றும் பயங்கரவாத
குண்டுவீச்சுக்களில் முதல் தடவையாக இந்து தீவிரவாதிகள் தொடர்புடையதாகக் கூறப்படும் நிகழ்வு அல்ல.
ஏப்ரல் 2006ல் மேலகாமில் இரு பஜ்ரங் தள செயலர்கள் ஒரு குண்டை தயாரித்துக்
கொண்டிருக்கையில் அது வெடித்து அவர்கள் மடிந்து போயினர். இந்த இருவரும் 25 பேரைக் காயப்படுத்திய
பர்பானி மசூதி குண்டுத்தாக்குதலில் முக்கிய நபர்கள் என்று போலீஸ் கூறியது, ஏப்ரல் 2003ல் இவர்களுடைய
கூட்டாளிகள் இரு மகாராஷ்ட்டிர சிறு நகரங்களான பூர்னா, ஜல்னா ஆகியவற்றில் மசூதிகள் மீது குண்டுத்
தாக்குதல்களை நடத்தினர்.
ஆனால் அரசாங்கமும் பெருநிறுவன செய்தி ஊடகமும் முறையாக இந்து மேலாதிக்க
பயங்கரவாதத்தை பற்றிய விவாதத்தை அடக்கியுள்ளன; எந்தவிதச் சான்றும் இல்லாமல் ஒவ்வொரு குண்டுவீச்சு
கொடுமையையும் (பிரிவினை குழுக்கள் நடத்தியவை அல்ல) "இஸ்லாமியப் பயங்கரவாதிகள்" நடத்தியதாக
பரபரப்புடன் குறைகூறுகின்றன.
முஸ்லிம் வகுப்புவாதிகளும், இஸ்லாமிய வெறியாளர்களும் பல கொடூரங்களை
செய்துள்ளனர் என்பது மறுக்க முடியாதது. ஆனால் "இந்து பயங்கரவாதம் என்ற நிகழ்வு பற்றி இந்திய அதிகாரிகள்
தீவிரமாகக் கருத மறுப்பது ஒருதலைப்பட்ச நோக்கம், சதி, கோழைத்தனம் அதிகாரிகளிடையே இருப்பதைக்
காட்டுகிறது; குறைந்த பட்சம் அதன் கணிசமான பகுதியினரிடையே உள்ளது.
மேலும் பெருநிறுவனச் செய்தி ஊடகமும் காங்கிரஸ் தலைமையில் இருக்கும்
அரசாங்கமும் பயங்கரவாதத்திற்கு ஒரு பிற்போக்கு வரையறையை கொடுத்துள்ளன; அது இந்து தீவிர வலதிற்கு
பெரிதும் உதவுகிறது. அரசாங்கத்திற்கு எதிராக எழுச்சி செய்பவர்களின் குண்டுவீச்சுக்கள் பயங்கரவாதம் என்று
முத்திரையிடப்படுகின்றன; ஆனால் இந்து மேலாதிக்க வலதுகள் செய்யும் கொடுமைகள் அவ்வாறு கூறப்படுவது
இல்லை. ஆயினும் கூட 1992 ம் ஆண்டு அயோத்தியாவில் பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்ட பின் அத்தூண்டுதலில்
நடந்த கலவரங்கள், 2002ல் குஜராத்தில் BJP
அரசாங்கம் தூண்டுதலின் பேரில் நடந்த இனப் படுகொலைகள்
ஆகியவை இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது கற்பித்துக்கூறப்படும் செயல்களால் ஏற்பட்ட அனைத்து கொடூரங்களிலும்
இழந்த உயிர்களைப் போல் இரு மடங்கு உயிர்களை கவர்ந்துள்ளன.
தாக்குர் கைது செய்யப்பட்டதை பிஜேபி எதிர்கொண்டவிதம்.
இந்து தீவிரவாதிகளின் குண்டுவீச்சு பற்றிய நிகழ்வுகளில் தொடர்பு என்பது
அம்பலப்படுத்தப்படுவது ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது என்றாலும், ஏற்கனவே இது
BJP மற்றும் அதன்
கூட்டாளிகளை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
பிராக்யா சிங் தாக்குர் கைது செய்யப்பட்டதை அடுத்து, செய்தி ஊடகங்களில்
இவ்வம்மையார் ஒரு இரங்கல் நிகழ்வில் பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் பிஜேபி மத்திய பிரதேச
முதல்மந்திரி ஷிவ்ராஜ் சிங்குடன் உட்கார்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.
இதனால் சங்கடம் அடைந்த இந்திய பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ
எதிர்க்கட்சியான பிஜேபி காவி உடை அணிந்த துறவியிடம் இருந்து தன்னை விரைவில் ஒதுக்கி வைத்துக்
கொள்ளமுயன்றது; அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத்துடன் துறவிக்குத் தொடர்பு இல்லை என்றும் பிஜேபி உடன்
எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளது.
பிராக்யாவுடைய தந்தையார் இந்த அறிக்கைகளுக்கு முரணாக அவருடைய பெண்
பிஜேபி வட்டங்களில் "மிகவும் தீவிரமாக உள்ளார்" என்றும், "பெரும்பாலும் முதல் மந்திரிகள் கட்சித் தலைவர்கள்
ஆகியோருடன் கலந்து ஆலோசிப்பார்" என்றும் செய்தி ஊடகத்திடம் கூறியுள்ளார். "உண்மையில் ஒரு
குடும்பத்தினரிடம் பழகுவதைப் போல் அவர்களிடம் பழகியுள்ளாள்" என்றார் அவர்.
BJP யின் பொய்
அம்பலப்படுத்தப்பட்ட பின்னர், ராஜ்நாத் சிங் விரைவில் தலைகீழாக மாறி
ATS பிராக்யா
மீது வேண்டுமென்றே திட்டமிட்டு புகார் கூறியுள்ளது என்றார். "சான்றுகள் இருந்தால், பெண்துறவி குற்றவாளியா
இல்லையா என்பதை மக்களே நிர்ணயிக்க அது அரசாங்கத்தாலும் விசாரணை முகவாண்மைகளாலும் பொதுமக்களுக்கு
வெளிப்படுத்தப்பட வேண்டும்" என்றும் கூறினார்.
இதுவரை BJP,
ATS
பற்றி புகழாரம் சூட்டியதைத் தவிர வேறு ஏதும் செய்யவில்லை; பல முறையும் இது இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று
கூறப்படுபவைக்கு எதிராக எடுக்கும் ஆக்கிரோஷ உத்திகளையும் பாராட்டியுள்ளது. சந்தேகப்படும் முஸ்லிம்களை
பற்றிய போலீசாரின் கூற்றுக்கள் வினாவிற்கு உட்படுத்தப்படாமல் ஏற்கப்பட்டு விரிவாக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 4ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா சாத்வி பிராக்யா தாக்குருக்கு
வலுவான ஆதரவைக் கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கிறது; "பண்பாட்டு தேசியம் மற்றும் பாரதீயத்துவம்
இவற்றுடன் தொடர்புடையவர்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்க முடியாது" என்று டைம்ஸிடம் சிங்
கூறினார். போலீஸ் ஜோடித்துள்ளது என்ற குற்றச்சாட்டைக் கூறவில்லை என்றாலும்,
BJP தலைவர்
"இந்து பயங்கரவாதம்" பற்றிய விசாரணை "ஆளும் கட்சி நடத்தும் அரசியல் சதியாகும்" என்றார்.
"விசாரணைப் பிரிவு பிராக்யா தாக்குருக்கு எதிராக குற்றச் சாட்டுக்களை பதிவு
செய்தால், BJP
தன் எதிர்ப்புக்களை கைவிடுமா" என்று கேட்கப்பட்டதற்கு இத்தகைய வினா "கற்பனையானது" என்று சிங்
ஒதுக்கித்தள்ளினார் என்று டைம்ஸ் கூறியுள்ளது.
மகாராஷ்ட்டிரத்தில் BJP
யின் கூட்டாளிக் கட்சியான பாசிச சிவ சேனை ஒரு படி மேலே சென்றுள்ளது. சிவ சேனையின் நாளேட்டில்,
அக்கட்சித் தலைவர் பால் தாக்கரே கடந்த வாரம், "இந்து சமூகம் முழுவதும்
ATS ஆல் ஜோடிக்கப்பட்டுவரும்
சாத்வி, ஓய்வு பெற்ற மேஜர் ரமேஷ் உபாத்யாயா மற்றும் சமீர் குல்கர்ணிக்கு ஆதரவைக் கொடுக்க வேண்டும்"
என இடி முழக்கம் கொடுத்தார்.
மூன்று "இந்து சமயக் காப்பாளர்கள்" என்று தங்களைத் தாங்களேஅறிவித்துக் கொள்ளுபவர்கள்
வேண்டுமென்றே குற்றம் சாட்டலுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்னும் தாக்கரேயின் கூற்றுடன், சிவ சேனைத் தலைவர்
அவர்கள் குண்டுவீச்சிற்கு பின்னணியில் இருந்தாலும் அத்தகைய கொலைகாரச் செயல்கள் நியாயமானவை என்பதால்
காக்கப்பட வேண்டும் என்று வாதிடும் அளவுக்கு சென்றார்.
தாக்கரே எழுதினார்: ("நாட்டில் இருக்கும் போலி மத சார்பற்றவர்கள் (2001
இந்திய பாராளுமன்றத்தில் பங்கு பெற்றதாகக் கூறப்பட்டு, தூக்கு தண்டனையை எதிர்நோக்கி உள்ள அப்சல் குருவிற்கு
ஆதரவாக இருக்கையில்), நாம் ஏன் சாத்வி பிராக்யா, ரமேஷ் உபாத்யாயா மற்றும் சமீர் குல்கர்ணி பற்றி
அன்பும் பெருமிதமும் அடையக்கூடாது?'
"ஒவ்வொரு நாளும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்தியாவில் இந்துக்களைக் கொல்லுவதற்கு
குண்டுகளை திட்டமிட்டுச் செய்கின்றனர். சமீபத்திய அஸ்ஸாம் குண்டுவெடிப்புக்கள் கூட பங்களாதேஷில் இருந்து வந்த
குடியேறியவர்களால் திட்டமிடப்பட்டது. ஒரு சாத்வி பிராக்யா அல்லது ரமேஷ் உபாத்யாயா அல்லது ஒரு சமீர்
குல்கர்னி தற்போதைய தொகுப்பில் இருந்தால் அதற்காக அவர்கள் மீது குறைகூறக்கூடாது."
சிவசேனையும் மற்ற இந்து மேலாதிக்க அமைப்புக்களும் மேலகாம் குண்டுவீச்சு
சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்ட, நிதி உதவி அளிக்கின்றன. குறைந்த பட்சம் அத்தகைய "ஒற்றுமை
செயற்பாட்டை பிஜேபி காட்டியுள்ளது. "மேலகாம் குண்டுவீச்சு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சேனா
சட்ட உதவி அறிவித்துள்ளதில் எங்களுக்கு ஆட்சேபணை ஒன்றும் கிடையாது" என்று
BJP செய்தித்
தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். "அப்படிப்பார்த்தால்
RSS கூடத்தான்
உதவியை உறுதிமொழியாகக் கூறியுள்ளது. தனியார் நிதிகளை மற்றவருக்காக உதவுவதற்கு பயன்படுத்துதல் தவறு
அல்ல. அது ஒவ்வொருவரதும் உரிமையாகும்." |