WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா
:
பிரித்தானியா
Opportunism versus socialism: lessons of two "left"
conferences in Britain
சோசலிசத்தின் எதிரி சந்தர்ப்பவாதம் : பிரிட்டனில் இரு "இடது" மாநாடுகளின் படிப்பினைகள்
By Chris Marsden
30 October 2008
Use this
version to print | Send
this link by email | Email
the author
கடந்த வாரம் இரு "இடது" சந்தர்ப்பவாத அமைப்புக்கள், பிரிட்டனின் சோசலிச
தொழிலாளர் கட்சி (Socialist Workers
Party-SWP) மற்றும் ஜோர்ஜ் காலோவேயின்
Respect Renewal
ஆகியவற்றின் கடந்த வார இறுதி மாநாடுகள் பற்றி நேற்று உலக சோசலிச வலைத் தளம் ஒரு விரிவான அறிக்கையை
கொடுத்திருந்தது (பார்க்கவும்:
The SWP and Galloway's Respect Renewal on the economic crisis)
இந்த மாநாடுகள், பிரான்சின்
Ligue Communiste Revolutionnaire
அல்லது ஜேர்மனியின் இடது கட்சி போல் உலகம் முழுவதும் இதே போல் இருக்கும் அமைப்புக்களின் வலதுபுற அரசியல்
நகர்வை காட்டும் தன்மையிலும் மற்றும் அவற்றின் சமூக நலன்களைப் புரிந்து கொள்ளவும் பரந்த முக்கியத்துவத்தை
கொண்டுள்ளன.
SWP க்கும்
Respect Renewal
க்கும் எவ்வளவு குழுவாத வேறுபாடு இருந்தாலும், அடிப்படையில் இரு கட்சிகளும்
உலக முதலாளித்துவத்தின் பொருளாதார நெருக்கடி பற்றிய அணுகுமுறையில் அவற்றினைடையே இருக்கும் அடிப்படை
ஒற்றுமை மிகவும் வியக்கத்தக்கதாகும். இரு அமைப்புக்களும் உலகப் பொருளாதாரங்களை திவால் ஆக்கும் தன்மை
கொண்ட, அசாதாரணமான முறையில் உலகின் மிகப் பெரிய நிதிய அமைப்புக்களை சரிய வைத்துள்ள உலக
நெருக்கடியின் தீவிரத்தை குறைத்து மதிப்பீடு செய்யும் தன்மையில் மிகஅசாதாரணமான அக்கறையை காட்டுகின்றன.
இந்த முயற்சிகள் இலாபமுறைக்கு ஒரு சோசலிச மாற்றீட்டின் தேவை பற்றி
தொழிலாள வர்க்கம் நம்பவைக்கும் சாத்தியப்பாடு உள்ளது என்று சிறிதும் வலியுறுத்தாமல் உள்ளதுடன், அதே
போல் தொழிலாள வர்க்கத்தை நம்ப வைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளாததுடன் தொடர்புபட்டதாகும்.
பொருளாதாரத்தை கீன்சிய முறைப்படி அரசாங்க கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து செயல்படுத்துவதற்கு தேசிய முதலாளித்துவ
அரசாங்கங்கள் மீது அழுத்தம் கொடுப்பது சாத்தியமானது, அதற்கு மேல் எதுவும் செய்ய இயலாது என்பது போல்
பேசப்படுகிறது. இவ்விதத்தில் வரவிருக்கும் சரிவின் மோசமான விளைவுகளில் இருந்து தொழிலாள வர்க்கத்தை
குறைந்த சீர்திருத்தங்கள் மூலம் ஓரளவு பாதுகாப்பிற்கு உட்படுத்த முடியும் என்பது அவற்றின் கருத்தாகும்.
Respect Renewal மற்றும்
SWP
இன் பகுப்பாய்வு முற்றிலும் வெற்றுத் தன்மையுடயது, வரலாற்று நெறியற்றது, செயலற்ற விதத்தில் இருப்பது மற்றும்
முற்றிலும் உறுதியை குலைப்பதாகும். எவ்வளவு மோசமானதாக நிலைமை இருந்தாலும் பொருளாதார நிலை
கட்டுப்பாட்டுக்கள் வைக்கப்பட முடியும், இந்த அமைப்பு வீழ்ச்சியடையாது என்று அவர்கள் தீர்மானமாக
கூறுகின்றனர். இருக்கும் அரசாங்கங்களின் கொள்கை இயற்றுபவர்கள் திட்டமிடுவதில் இருந்து சோசலிஸ்ட்டுக்களால்
வேறுவிதமான விளைவுகளை கொண்டுவர முடியும், கொண்டுவரவேண்டும் என்ற கருத்தையே அவர்கள் சிறிதும்
பொருட்படுத்தாமல் உதறித்தள்ளுகின்றனர். இவ்விதத்தில் காலோவே முதலாளித்துவத்தை எதிர்கொண்டுள்ள
"பேரழிவு" என்று எவர் பேசினாலும் அவரைக் கடிந்து கொள்ளுகிறார்;
SWP யின் கிறிஸ்
ஹார்மன் "1930 நெருக்கடி போல்" இது மோசமாக இருக்காது என்று வலியுறுத்துகிறார்.
ஒரு குறிப்பிட்ட புறநிலை புரட்சிகர நிலைமைகளில்தான் ஒரு சோசலிசப் புரட்சி
உருவாகும் என்பது மார்க்சிஸ்ட்டுக்களுக்கு நேரிய உண்மையாகும். இது அரசியல் வகையில் விதி என்பது
ஏற்கப்பட்டுவிட்டது என்று பொருளாகாது. புறநிலை சூழ்நிலைகள் அறியப்பட்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
மார்க்சிஸ்ட்டுக்களை பொறுத்த வரையில், தற்போதைய நெருக்கடியில் இருந்து விளையும் புரட்சி வருவதற்கான
வாய்ப்பு என்பது தொழிலாள வர்க்கத்தை பயிற்றுவித்து, ஒழுங்கமைக்கும் விதத்தில் ஒரு சோசலிச கட்சி அதற்கு
பங்களிப்பதற்கு அப்பால் இல்லை என்பது உணரப்படுவதுடன், தொழிலாள வர்க்கத்தின் மிக முற்போக்கான
பிரதிநிதிகள் ஒரு புரட்சிகர முன்னோக்கிற்கு அணிதிரட்டப்படவேண்டும்.
குட்டி முதலாளித்துவ இடது குழுக்களின் தலைவர்களுக்கு இது முற்றிலும் தவிர்க்கப்பட்ட
ஒன்றாகும். அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள ஒரே வரலாற்று பங்காளர் முதலாளித்துவத்தினர் தாம். அனைத்து
அரசியல் முன்னெடுப்புகளும் ஆளும் வர்க்கத்திற்கு விட்டுவிடப்பட வேண்டும். இவ்விதத்தில் தற்போதைய பொருளாதார
நெருக்கடி ஒரு உலகச் சரிவை ஏன் தூண்டிவிடாது என்பது ஹார்மன் கருத்தின்படி, "அரசாங்கம் குறுக்கிட்டு" அதைத்
தடுத்து நிறுத்திவிடும் என்பதாகும்.
அதன் செயல்திறனற்ற தன்மை மற்றும் முதலாளித்துவத்திற்கு அனிபணிந்து நடந்து
கொள்ளுவது இரண்டையும் நியாயப்படுத்துவதற்காக, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ சீர்திருத்தம் என்ற
முன்னோக்கை தாண்டி ஒருபோதும் செல்லாது என்று SWP
வலியுறுத்துகிறது. புறநிலைமைகள் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்களின் முயற்சியுடன் இணைந்து தொழிலாள வர்க்கத்தின்
நிலைநோக்கை மாற்றிவிடக்கூடும் என்ற சாத்தியப்பாடு பற்றி கருதிக்கூட பார்க்கப்படவில்லை. ஒரு புரட்சிகர
முன்னோக்கிற்காக போராடுபவர்கள் "குறுங்குழுவாதிகள்" என்று கண்டிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின்
கருத்து.
Respect Renewal இன்
தலைவர் காலோவே இடது "இறந்துபோன ரஷ்யர்களை பற்றி (அதாவது லெனின், ட்ரொட்ஸ்கி போன்றவர்கள்)
பேசுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
SWP மாநாட்டில் பங்கு பெற்றவர்களில் ஒருவரான
New Left Review
இன் ரொபேர்ட் ப்ளாக்பேர்ன் நிலைமை ''எவருக்கும் என்ன செய்வது என்று
தெரியாதிருக்கையில், அறையில் பின் பகுதியில் இருந்து லெனின் தன் கைகளை உயர்த்தி இப்பெரும் குழப்பத்தை
தீர்க்கும் பொறுப்பை நான் எடுத்துக் கொள்வேன் என்று கூறிய 1917 இனை போல் அல்ல" என்று
வலியுறுத்தினார்.
ரஷ்யாவில் பெரும் மக்கள் போராட்டங்கள் நிறைந்த ஆண்டான
1917ல் இருந்தது
போல் இப்பொழுது நிலைமை இல்லையா என்பது பிரச்சினை அல்ல. நிலைமை அப்படி இல்லை என்பது தெளிவு.
ஆனால் புரட்சி வெடிப்பதற்கு முந்தைய ஆண்டுகளில் ஒரு மார்க்சிச கொள்கை, கோட்பாடுகள் நிறைந்த,
சந்தர்ப்பவாதத்தின் பல வகைகளையும் எதிர்க்கும் ஒரு புரட்சிகர சோசலிச கட்சியை கட்டமைப்பதற்கு லெனின்
அயராமல் உழைத்திருந்தார். அந்தப் போராட்டம் இல்லாமல் 1917ல் ஒரு வெற்றிகரமான சோசலிசப் புரட்சி
ரஷ்யாவில் இருந்திருக்காது.
இப்பொழுது தற்போதைய நெருக்கடி 1930களில் இருந்தது போன்ற பாசிசப்
பேரழிவு அல்லது சோசலிசப் புரட்சிக்கு வழிவகுக்குமா என்பது மார்க்சிஸ்ட்டுக்கள் எடுக்கும் நடவடிக்கைகளில்
பெரிதும் அடங்கியுள்ளது. இந்த அடிப்படை கருத்தாய்வைத்தான் நான்காம் அகிலத்தை நிறுவிய ஆவணத்தில்
ட்ரொட்ஸ்கி, "மனித குலத்தின் நெருக்கடி என்பது ஒரு புரட்சிகர தலைமையின் நெருக்கடி" என்று தெளிவாகக்
குறிப்பிட்டிருந்தார்.
முதலாளித்துவம் அதன் வரலாற்று நபர்களையும் அவர்களுடைய சாதனைகளையும்
இழிவுபடுத்த முற்படுவதில்லை என்பதை கவனத்திற்குகொள்ள வேண்டும். அதற்கு முற்றிலும் மாறாகத்தான் நடந்து
வருகிறது. ஆடம் ஸ்மித்தின் (Adam Smith)
நீடித்த முக்கியத்துவம் என்பதை வலியுறுத்துவதில் அது களைப்படைவதில்லை. ஆனால் குட்டி முதலாளித்துவ
தீவிரவாதிகள் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ட்ரொட்ஸ்கி ஆகியோரின் மரபியத்தை, இந்த சோசலிசத்தின்
மாமேதைகள் எப்பொழுதும் தொடர்பு கொண்டிருந்த புரட்சிகர முன்னோக்கை எதிர்ப்பதற்காக "தொழிலாளர்கள்
புரிந்துகொள்ளும் வார்த்தைகளில் பேசவேண்டும்" எனக் கூறி இழிவுபடுத்தும் வாய்ப்பை விட்டுவிடுவது இல்லை.
எப்பொழுதாவது பேசும் சோசலிச வார்த்தை ஜாலங்களை தவிர
SWP போன்ற,
காலோவேயை இன்னமும் சுற்றி வரும் சில பிரிவினரும் அவற்றின் சர்வதேச கூட்டினரும் தொழிலாள வர்க்கத்தின்
வரலாற்று நலன்களை வரையறுப்பதில்லை. இவர்கள் போருக்குப் பிந்தைய சமூக நல அரசாங்கத்தை பெரிதும்
நம்பியிருந்த மத்தியதர வர்க்கத்தின் அடுக்கில் இருந்து தோன்றியவர்கள், மற்றும் பொதுவாக கல்விக்கூடங்கள்,
உள்ளூராட்சிகள் மற்றும் ஆட்சிப் பணித் துறைகளில் பதவிகளை வகித்தவர்களை நோக்கி அணிதிரண்டுள்ளனர். சமூகத்திற்குள்
அவர்கள் பெற்றிருந்த இத்தகையை நிலைமை பல எதிர்ப்பு அரசியல் (Protest
politics) வழிவகைகளாகத்தான் உரு மாறியது; அவை அதிகாரத்துவ
தொழிலாளர் கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் மீது மிக அழுத்தும் கொடுத்து போருக்குப் பிந்தை
காலத்தின் சமூக நலன்களை பாதுகாத்துக் கொள்ள மட்டுமே விழைகின்றன.
கடந்த தசாப்தங்கள் இக்குழுக்கள் அனைத்தும் வலதிற்கு பாய்ந்து சென்றதைத்தான்
கண்டுள்ளன; இவற்றின் முக்கிய நபர்கள் நீண்டகாலமாக தொழிற்சங்கம் மற்றும் உத்தியோகபூர்வ இடதின்
பொதுவான பிரிவினரின் அமைப்புகளுடன் முழுமையாக இணைந்தவர்கள் ஆவர். கீன்சிய மாதிரியிலான கட்டுப்பாடு
மற்றும் பலவித குறைந்தபட்ச சீர்திருத்தங்கள்தான் இயலும் என்று அவர்கள் கூறுவது இப்பொழுது தொழிலாள
வர்க்கத்திற்குள் தங்கள் ஆதரவை இழந்துவிட்ட தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு பதிலாக அவர்கள் வகிக்க
நினைக்கும் பாத்திரத்துடன் பிணைந்துள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் முன்னாள் தீவிரவாதிகள் பழைய கட்சிகளின் சீரழிவினாலும், உடைவினாலும்
கையறு நிலையிலுள்ள பல சீர்திருத்தவாதிகள், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்றும் தொழிற்சங்க வாதிகள் ஆகியோருக்கு ஒரு
புதிய அரசியல் சரணாலயத்தை வழங்குவதற்காக ஒரு "பரந்த இடது கட்சிகளை" கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு
வருகின்றனர். அவர்கள் முன்வைக்கும் பல ''குறைந்தபட்ச'', ''இடைமருவு கோரிக்கைகள்'' ஆகியவை, இந்த
அரசியல் மதிப்பிழந்த பிரிவினர் மீது தொழிலாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் நப்பாசையை மீண்டும் கொண்டுவரும்
முயற்சியாகும். இது ஒரு உண்மையான சோசலிச மாற்றீட்டை உருவாக்குவதற்கு இட்டுச்சென்றுவிடும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ்,
லெனின் ஆகியோரின் சிந்தனைகள் தொடர்பான எவ்விதமான கலந்துரையாடலுக்கும் கவனம் செலுத்தாது விடுவதன்
மூலம் பாதுகாக்கப்படுகின்றது. |