World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Election Day 2008: The class issues

2008 தேர்தல் தினம்: வர்க்கப் பிரச்சினைகள்

4 November 2008

Use this version to print | Send this link by email | Email the author

இன்று தேர்தல் தினம். இன்று மாலை வாக்குப் பதிவுகள் மூடும் நேரத்தில் 140 மில்லியன் மக்கள் ஒரு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவும் அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் மன்றத்தில் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கும் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருப்பர். பல மில்லியன் அமெரிக்க மக்கள் வாக்கு பதிவு செய்தாலும், தேர்தலின் முடிவு உலகெங்கிலும் பல பில்லியன் மக்களால் ஆழ்ந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகையில் இருப்பவருக்கு "சுதந்திர உலகத்தின் தலைவர்" என்று செய்தி ஊடகம் சூட்டியுள்ள பெயரினால் இந்தப் பார்வை வந்துவிடவில்லை. மாறாக தங்கள் கடுமையான அனுபவத்தை ஒட்டி அவர்கள் மிகச் சக்தி வாய்ந்த ஏகாதிபத்திய நாட்டின் தலைவர் என்னும் முறையில் அவர்கள் வாழ்க்கையையும் முழு புவியையும் பெரும் அழிவிற்கு ஆழ்த்தும் கொள்கைகளை செயல்படுத்த கூடிய திறனை ஜனாதிபதி கொண்டுள்ளார் என்பதால்தான்.

இப்படி நம்பிக்கை மற்றும் அச்சம் என்ற உணர்வு இன்னும் தீவிரமாக இந்தத் தேர்தல் தினத்தில் அமெரிக்காவிற்குள்ளும் அதன் எல்லைகளுக்கு அப்பாலும் உள்ளது. அமெரிக்க வரலாற்றில் வேறு எந்த ஜனாதிபதியும் வெறுக்கப்படாத அளவிற்கு புஷ் வெறுக்கப்படுகிறார் என்று கூறினால் அது மிகையாகாது. ஒரு மனிதர் மற்றும் அரசியல் நபர் என்ற முறையில் ஜனாதிபதி பதவியை வகித்தவர்களில் மிகவும் வெறுக்கத்தக்க மனிதராவார். அதுவும் வெள்ளை மாளிகையில் முற்றிலும் ரெளடித்தனமாக ரிச்சார்ட் நிக்சன் போன்றவர் இருந்த ஒரு நாட்டில் இக்கருத்து அதிகமாகவே கூறுகிறது.

அமெரிக்காவிற்குள்ளேயே, கடந்த எட்டு ஆண்டுகள் பல மில்லியன் கணக்கான மக்களால் ஒரு தீய கனா போல் கருதப்படுகிறது. புஷ் நிர்வாகம் பற்றிய பரிதாபமான அனுபவம் கீழ்க்கண்ட சொற்கள், சொற்றோடர்கள் ஆகியவற்றுடன் எப்பொழுதும் தொடர்புபடுத்தப்படும்: "அபு கிறைப்", "கடத்தல், "முன்னரே தாக்கி தனதாக்கிக் கொள்ளும் போர்", "நீரில் மூழ்கடித்தல் போல் செய்தல்", "குவாண்டநாமோ குடா", "கத்தரினா", "குறைந்த பிணை மதிப்பு அடைமானங்கள்", இன்னும் சமீபத்தில், "பிணை எடுத்தல்", "நிதியக் கரைப்பு" மற்றும் "சொத்தின் அடைமான மீட்புரிமையை இரத்து செய்தல்".

மாற்றத்திற்கான விருப்பம் ஆழ்ந்து, பரந்து உள்ளது. பெருகிய வறுமை, வீடுகள் விற்கப்படல், பணி நீக்கங்கள், செயல்படாத சுகாதாரப் பாதுகாப்பு முறை, சிதைந்து கொண்டிருக்கும் பொதுக் கல்வி முறை, பல ஆண்டுகள் புறக்கணிப்பால் சரிந்து கொண்டிருக்கும் உள்கட்டுமானங்கள், இவற்றுடன் சமூகத்தின் மிக உயர்மட்டத்தில் முன்னோடியில்லாத வகையில செல்வக் குவிப்பு ஆகியவை மக்களின் சீற்றம், பெரும் திகைப்பு, கசப்பு உணர்வு ஆகியவற்றிற்கு எரியூட்டுகின்றன. மேலும் பெருமந்த நிலைக்கு பின்னர் முன்னோடியில்லாத வகையில் ஏற்பட்டுள்ள ஒரு பொருளாதார நெருக்கடியின் கீழும் இரு முக்கிய போர்களுக்கு இடையேயும் நடைபெறுகிறது.

வாக்குப் பதிவு தொடங்கியவுடன் கருத்துக் கணிப்புக்கள் தன்னுடைய குடியரசு போட்டியாளர் ஜோன் மக்கெயினைவிட கணிசமான அளவில் பராக் ஒபாமா முன்னிலையில் இருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டுகின்றன. ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சி தேர்தலில் வெற்றி பெறுதல் என்பது நடக்க கூடியதே. ஆனால் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் மக்களுடைய அதிருப்தி பற்றி குறைந்த கருத்துக்களையே கூறியுள்ளார் மேலும் புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளை நிர்ணயித்த சமூக, பொருளாதார நலன்கள் பற்றி பெரும் குற்றச் சாட்டுக்கள் கூறுவதையும் தவிர்த்துள்ளார்.

ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்க நலன்களின் தர்க்கரீதியில்தான் இந்த வரம்பு வெளிப்படுகிறது; இது ஜனநாயகக் கட்சி பிரச்சாரத்தின் முக்கிய பலவீனமாகவும் இருந்துள்ளது. குடியரசுக் கட்சி தொடர்ந்து இனவெறி மற்றும் சமூகப் பிற்போக்குத்தனத்திற்கு அழைப்பு விடுத்தது, அவை அமெரிக்காவில் வளர்க்கப்படும் பிற்போக்குத்தன அரசியல் சூழலில் முக்கிய காரணிகளாக உள்ளன; இது அனைத்து தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்குமான நேரடி வேண்டுகோளின் அடிப்படையில்தான் போராடி விரட்டி அடிக்கப்பட முடியும்.

அமெரிக்க அரசியல் நெறிகளுடன் இயைந்த வகையில், தொழிலாள வர்க்கம் பற்றிய குறிப்பு அனுமதிக்கப்படாத நிலையில், பெரும்பாலான தொழிலாள வர்க்கத்தினர் "மத்தியதர வர்க்கம்" என்று முத்திரையிடப்பட்டுள்ள நிலையில், ஒபாமா எந்தவித வர்க்க முறையீட்டையும் தவிர்த்துள்ளார். மக்கள் சீற்றத்தை பயன்படுத்திக் கொள்ள அதிகம் அவர் முற்பட்டுள்ள தன்மை, அவருடைய தனிப்பட்ட நபரின் கருத்து என்று முறையில்தான் அசாதாரணமாக செய்துள்ளார். இவருடைய சொந்தப் பின்னணியின் அடிப்படையில் தேர்தலை நடத்துவது என்பதை ஜனநாயக கட்சி அமெரிக்காவின் போக்கை கணிசமாக மாற்றக்கூடியது என்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளது. இந்த நம்பிக்கை அமெரிக்காவில் மட்டும் பரவலாய் கருதப்படுவது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நிறைந்துள்ளது. ஆயினும், இது ஒரு போலித் தோற்றம்தான்.

அமெரிக்க அரசியலில் உண்மை அடிப்படை, உலகின் மற்ற பகுதிகளில் இருப்பது போல் இனம், இனக்குழு என்று இல்லாமல் வர்க்கம் என்றுதான் உள்ளது. இந்த உண்மையை உணர்ந்து அதையொட்டி தக்க முடிவுகளை பெறுவது என்பது ஆபிரிக்க-அமெரிக்கர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இழிந்த அநீதிகளை மறப்பதோ, புறக்கணிப்பதோ அல்ல. ஆனால் அமெரிக்காவில் இனவெறியை தொடர்ந்து வைத்திருப்பது அமெரிக்க சமூகத்தின் வர்க்க கட்டமைப்பு தன்மைதான்.

செனட்டர் ஒபாமா, செனட்டர் மக்கெயினைவிட சிறிதும் குறையாத தன்மையில், முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிதான். வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ், தலைமை நீதிமன்ற நீதிபதி கிளாரன்ஸ் தோமஸ் அல்லது முன்னாள் வெளியுறவு அமைச்சர் கொலின் பவல் ஆகியோரின் இனப்பின்னணி தங்கள் அரசியலுக்கு ஒரு முற்போக்கு பண்பை கொடுக்க இயலாது என்ற உண்மையை அவரது இனப்பின்புலம் மாற்றாது.

அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் நிதிய, பெருவணிக பிரபுத்துவத்தின் நலன்களைப் பாதுகாக்க உறுதி பூண்டிருக்காவிட்டால் ஒபாமா ஒன்றும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வந்திருக்க மாட்டார். அமெரிக்க அரசியல் மற்றும் நிதிய நடைமுறையின் சக்தி வாய்ந்த பிரிவுகள் ஒபாமாவிற்கு ஆதரவு கொடுத்ததற்கு துல்லியமாக இதுதான் காரணம்; அதாவது புஷ்ஷின் எட்டு ஆண்டுகள் பேரழிவு காலத்திற்கு பின்னர் ஒபாமா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிதைந்துள்ள தோற்றத்தை மீட்க உதவுவார் என நம்புகின்றனர். வணிக சமூகத்தில் இருந்து ஒபாமா பெற்றுள்ள நூற்றுக்கணக்கான மில்லியன்கள் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக, நிதிய நலன்களுக்கு மிக சிறந்த நாவன்மையுடன் சான்று கூறுகின்றன.

பிரச்சார அலங்காரச் சொற்கள் ஒரு புறம் இருந்தாலும், இரு பிரச்சாரங்கள் மற்றும் செய்தி ஊடகம் அளித்ததைவிட வேட்பாளர்களுக்கு இடையே இருந்த வேறுபாடுகள் மிகவும் குறுகியதுதான். இவர்களுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகள் மாறுபட்ட வர்க்க நலன்களை பிரதிபலிக்கவில்லை; மாறாக ஆளும் உயரடுக்கிற்குள் வெளிநாட்டு, உள்நாட்டுக் கொள்கைகளின் சில கூறுபாடுகள் பற்றிய வேறுபாடுகளைத்தான் பிரதிபலித்தன. அடித்தளத்தில் இருந்து ஒற்றுமை நடைமுறையில் கூட்டாக ஒபாமா வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பிற்கு ஒப்புதல் கொடுத்ததில் இருந்து நன்கு நிரூபிக்கப்பட்டது.

பல வேட்பாளர்களின் தனிப்பட்ட குணநலன்களைப்பற்றி மிகப் பெரிய அளவில் குவிப்புக் காட்டும் அமெரிக்க அரசியல் வழிவகையின் வினோதத் தன்மையை பார்க்கையில், எவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும், அடுத்த நிர்வாகத்தின் கொள்கைகளின் தன்மையை நிர்ணயிக்கக் கூடிய புறநிலை சக்திகள் பற்றி அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை; வர்க்க நலன்களை பற்றி கேட்கவே வேண்டியதில்லை.

நிலைமையை பற்றி தெளிவான மதிப்பீடு நவம்பர் 5ம் தேதி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரே எதிர்கொள்ள இருப்பது (இன்று மாலை அல்லது புதன் அதிகாலையில் தேர்தல் முடிவு தெரிந்துவிடும் என்ற கருத்தில்) அமெரிக்காவிற்கு வெளியே இருக்கும் செய்தி ஊடகத்தில் நன்கு வந்துள்ளது என்பதில் வியப்பு ஏதும் இல்லை. லண்டனில் இருக்கும் ஃபைனான்சியல் டைம்ஸின் பொருளாதார கட்டுரையாளர் Martin Wolf கடந்த வாரம் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் கீழ்க்கண்ட நிதானமான மதிப்பீட்டைக் கொடுத்திருந்தார்:

இந்தக் காலாண்டில் சுருக்கமானது அமெரிக்காவில் ஆண்டு விகிதத்தில் 4 சதவிகிதம் என்றும், இங்கிலாந்தில் 4 சதவிகிம் என்றும் யூரோப் பகுதியில் 2 சதவிகிதம் என்றும் சுருக்கும் இருக்கிறது என JP Moergan எதிர்பார்க்கிறது. 2009ல் உலகத்தில் 0.4 சதவிகித வளர்ச்சிதான் இருக்கும் என்றும் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் சுருக்கம் 0.5 சதவிகிதமாக இருக்கும் என்றும் வளரும் நாடுகளில் 4.2 சதவிகித பெருக்கம் இருக்கும் என்றும் கணிக்கிறது.

"மேலை உலகின் வங்கி முறை கிட்டத்தட்ட சிதைந்துள்ள நிலையில், பாதுகாப்பான சொத்துக்கள் நோக்கி மக்கள் விரைந்து செல்லுகையில், உண்மைப் பொருளாதாரத்திற்கு கடன் கொடுத்தல் இறுக்கமாகையில், பங்கு விலைகள் சரிகையில், நாணயச் சந்தைகளில் கொந்தளிப்பு நிறைந்திருக்கையில், வீடுகள் இலைகளில் தீவிர சரிவுகள் தொடர்கையில், ஒதுக்க நிதிகளில் இருந்து பணங்கள் விரைவில் திரும்பப் பெறப்படுகையில், "நிழல் வங்கி முறை" எனப்படுவதின் சரிவு நடந்து கொண்டிருக்கையில் இத்தகை கணிப்புக்கள்கூட முற்றிலும் நம்பிக்கை ஊட்டும் விதத்தில் உள்ளன. அடுத்த ஆண்டு விளைவு மிக மோசமாக இருக்கலாம்."

நிதிய உயரடுக்கிற்குகள் சரிவைத் தவிர்க்க அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் முறையில் அவர் எழுதுவதாவது:

"ஆயினும்கூட, ஒரு விரைவான மந்த நிலை கடந்த கால குவிப்புக்களை உலகம் அகற்றிவிட உதவும் என்ற கருத்து எள்ளி நகையாடலுக்கு உரியது. மாறாக ஆபத்து என்பது ஒரு சரிவு, மலைபோன்ற தனியார் கடன் அமெரிக்காவில் இருப்பதுதான்; இது மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போல் மூன்று மடங்கு உள்ளது; இது மகத்தான அளவில் பலரும் திவால்தன்மையை பெறுவதை காட்டிலும் உயர்ந்த தன்மையை கொண்டது. கீழ்நோக்குச் சரிவு இன்னும் மோசமான முறையில் நிதிய முறைகள் சரிதல், எங்கும் படர்ந்திருக்கும் நம்பிக்கையற்ற தன்மையீன் கீழ் வெளிப்படுதல், கடன் நிலை என்பதே மறைந்து போதல், ஏராளமான வணிகங்கள் மூடப்படல், மிகப் பெரிய அளவில் வேலையின்மை பெருகுதல், சரியும் பொருட்கள் விலைகள், சொத்துக்களின் மதிப்பில் அருவியென சரிவுகள், கடனுக்கு பதிலாக வங்கிகள் வீடுகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவை வரும். உலகளாவிய முறை என்பது எல்லா இடங்களிலும் பேரழிவைத்தான் பரப்புகிறது."

"பல பாதிப்பாளர்களும் கடந்த அதிகநிலைமை பற்றி அறியாதவர்களாக இருப்பர்; மிக அதிக குற்றம் செய்தவர்கள் முறைகேடாக பெற்ற இலாபங்களை தக்க வைத்துக் கொள்ளுவர். இது 19ம் நூற்றாண்டில் இருந்த தடையற்ற முறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு தயாரிப்பு கொடுக்கும் விதத்தில் இருக்காது; ஆனல் நாட்டு வெறி, தேசியம் மற்றும் புரட்சி ஆகியவைக்குத்தான் வழிவகுக்கும். இருக்கும் நிலையில் அத்தகைய விளைவுகள்தான் எதிர்பார்க்கப்பட முடியும்."

சமீபத்திய நாட்களில் நியூ யோர்க் டைம்ஸும் அதன் நோபல் பரிசு பெற்ற பொருளாதாரக் கட்டுரையாளர் போல் க்ருக்மனும் 1930 களில் இருந்ததை போல் பணச் சரிவு வரக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இந்த நெருக்கடிக்கு ஒபாமாவின் விடையிறுப்பு அனைத்து சமூக வர்க்கங்களின் நலன்களும் -- வறியவர்கள், செல்வந்தர்கள், வோல் ஸ்ட்ரீட், பிரதான தெரு என-- ஒன்றுபோல்தான் உள்ளன என்ற கட்டுக் கதையை தக்க வைப்பது ஆகும். சிக்கனம் வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்து, அமெரிக்க மக்கள் "தியாகம் செய்ய" தயாராக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

தேர்தலுக்கு பின்னர் என்ன நேரிடும் என்றால், இன்னும் பணிநீக்கங்கள், ஆலைகள் மூடல் மற்றும் சமூகப் பணிகளில் இன்னும் குறைப்புக்கள் என்பவைதான். பயன்பாட்டுத் துறையில் மூடல்கள் தீவிரமாக அதிகரிக்கும் என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறியுள்ளது; உரிய நேரத்தில் வாங்கியதற்கு பணம் கொடுக்காத வாடிக்கையாளர்கள் மீது நிறுவனங்கள் கடுமையாக நடந்து கொள்ளும்.

அடுத்த நிர்வாகத்தின் மிகப் பெரிய கொள்கையை நிர்ணயிப்பதில் இரண்டாம் இடத்தில் இருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்கொண்டிருக்கும் சர்வதேச நிலைமை ஆகும். ஈராக்கில் நடக்கும் போர் தொடரும். ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற்றுக் கொள்வது பற்றி ஒபாமா பேசுவது அவற்றை ஆப்கானிஸ்தானத்திற்கு அனுப்பத்தான். அமெரிக்க மக்களுக்கு தெரியாமல் பின்னணியில் அமெரிக்கக் கொள்கை இயற்றுபவர்கள் போர்த்திட்டத்தை மட்டும் இயற்றுவது இல்லை.

மக்களுடைய கவனம் தேர்தல் மற்றும் பொருளாதார நிலைமையில் குவிந்திருக்கையில், ஒபாமா மற்றும் அவருடைய ஆலோசகர்கள் நேற்று நியூ யோர்க் டைம்ஸில் வந்துள்ள ஒரு குறிப்பின்படி மிக உயர்மட்ட இரகசிய விவாதங்களை ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் தயாரிப்பு தொடர்பாக நடத்தி வருகின்றனர் எனத் தெரிகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி, இரண்டு முக்கிய முதலாளித்துவக் கட்சிகளின் வேட்பாளர்களையும் நிராகரிக்கிறது. "குறைந்த தீமை" என்ற அரசியலை நாங்கள் நிராகரிக்கிறோம். உண்மையில், "குறைந்த தீமை" என்ற கருத்து பலகாலமாக அமெரிக்க அரசியலின் அடித்தளமாக இருக்கும் வர்க்க நலன்களை மறைப்பற்கும் தவிர்ப்பதற்கும்தான் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் ஒரு கொள்கை அடிப்படையில் ஆதரவு கொடுத்தல் என்றால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் செய்வதற்கான அரசியல் பொறுப்பை ஏற்கிறோம் என்று பொருள் ஆகும். சந்தர்ப்பவாத மற்றும் கோழைத்தனமான "இடது" மற்றும் தாராளவாதப் போக்குகள், Nation இதழ் வெளிப்படுத்துவது போன்றவற்றை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம் இது ஒபாமா பிரச்சாரத்தின் அடித்தளத்தில் இருக்கும் வர்க்க நலன்களை மறைப்பதற்கு ஏமாற்றுத்தனம் மற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளது; இதையொட்டி பின்னால் என்ன வரும் என்பதற்கு தொழிலாள வர்க்கத்தை தயார் நிலையில் இருக்கச் சொல்லுவது இல்லை.

அதேபோல் ரால்ப் நாடர் மற்றும் பிற மூன்றாம் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுக்குமாறும் நாங்கள் அழைப்பு விடவில்லை. இந்தக் கட்சிகள் "வெற்றி பெற முடியாது" என்பதால் அல்ல; அவை இரு முக்கிய முதலாளித்துவ கட்சிகளுக்கு, சோசலிச கொள்கையின் அடிப்படையில் கோட்பாட்டு ரீதியான அரசியல் மற்றும் நடைமுறை திட்டமுள்ள மாற்றீட்டை முன்வைக்கவில்லை என்பதால்தான்.

ஜெர்ரி வையிட் மற்றும் பில் வான் ஒகென் ஆகியோர் முறையே சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் ஆவர். SEP ஆதரவாளர்கள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களை வர்க்க நனவுடன் கூடிய வாக்கை எமது வேட்பாளர்களின் பெயர்களில் வாக்குப் பதிவு அன்று முத்திரையிடுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம். அத்தகைய வாக்கு ஒரு ஊழல் மிகுந்த பிற்போக்குத்தன இரு கட்சி முறைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் ஒரு வழிவகையாகும்; இந்த முறைதான் முதலாளித்துவ வர்க்கத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு முதலாளித்துவ வகுப்பின் நலன்களையும் காக்கிறது.

தேர்தல் தினத்திற்கு பின்னர் சோசலிசத்திற்கான அரசியல் போராட்டத்தை தொடர்வதும் ஒரு உறுதிப்பாடுதான்-- எல்லாவற்றிகும் மேலாக சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்வதின் மூலம் ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு

SEP பற்றி அதிகம் அறிய இங்கே கிளிக் செய்யவும்.