World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காHistory and the revolutionary party வரலாறும் புரட்சிகரக் கட்சியும்
By Barry Grey சோசலிச் சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் என்று நூல் வெளிவந்துள்ள நிலையில், இந்த ஆவணத்தின் முக்கியத்துவம் பற்றி, அதுவும் குறிப்பாக சோசலிச சமத்துவக் கட்சி பேரவை கூடியதில் இருந்து வெடித்துள்ள உலகப் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், ஆராய்வது மிகவும் உரியதும் தக்கதும் ஆகும். ஒரு புரட்சிகர சோசலிசக் கட்சி கட்டமைக்கப்படுவது சகாப்தத்தின் தன்மை பற்றிய ஒரு வரலாற்று மதிப்பீடு மற்றும் முதலாளித்துவ முறையின் நெருக்கடி பற்றி ஒரு பகுப்பாய்வின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதுடன் தொழிலாளர் வர்க்கத்தினதும் சர்வதேச டிராட்ஸ்கிச இயக்கத்தின் மூலோபாய அனுபவங்களின் படிப்பினை உட்கிரகிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஆவணம் வலியுறுத்துகிறது. ஆவணம் கூறுவதாவது: "கடந்த காலப் போராட்டங்களின் படிப்பினையின் அடிப்படையில்தான் புரட்சிகர சோசலிச மூலோபாயம் வளர்க்கப்பட முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, சோசலிஸ்ட்டுகளின் பயிற்றுவித்தல் நான்காம் அகிலத்தின் வரலாறு பற்றிய விரிவான அறிதலைப் பெறுதலை நோக்கி வழிநடத்தப்பட வேண்டும். சோசலிசப் புரட்சியின் தத்துவார்த்த மற்றும் அரசியல் முன்னணி என்ற வகையில் மார்க்ஸிஸத்தின் வளர்ச்சியானது அதன் மிக முன்னேற்றமான வெளிப்பாட்டை நான்காம் அகிலம் 1938ல் அது நிறுவப்பட்டதில் இருந்து, ஸ்ராலினிசம், சீர்திருத்தவாதம், டிராட்ஸ்கிசம் மற்றிய பப்லோவாத திருத்தல்கள், மற்றும் அனைத்துவடிவிலான சந்தர்ப்பவாதங்களுக்கும் எதிராக அது நடத்திய போராட்டங்களில் கண்டது. "கட்சிக்குள் வேலைத்திட்டத்தின் முக்கிய பிரச்சினைகள் பணிகள் பற்றிய அரசியல் வகையிலான உடன்பாடு 20ம் நூற்றாண்டின் வரலாற்று அனுபவங்கள் மற்றும் அவற்றின் மைய படிப்பினைகள் பற்றிய பொது மதிப்பீட்டைக் காணாமல் அடையப்பட முடியாது...வரலாற்றில் இருந்து எந்த அளவிற்கு தொழிலாளர் வர்க்கம் வெற்றிகள் மட்டுமின்றி தோல்விகளைப் பற்றியும் கூட அறிந்து கொள்ளுகிறதோஅந்த அளவிற்குத்தான் புதிய புரட்சிகரக் கால போராட்டத்தின் தேவைகளுக்கு அது தன்னைத் தயாரித்துக் கொள்ள முடியும்." இப்படிப்பட்ட வரலாற்று, கோட்பாட்டு நெறி வகையிலான அடிப்படைக் கருத்தாய்வுதான் பிற குட்டி முதலாளித்துவ மற்றும் இடதில் உள்ள சந்தர்ப்பவாத அரசியல் போக்குகளில் இருந்து சோசலிச சமத்துவக் கட்சியையும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
பிரான்ஸின் பப்பலோவாத Ligue Communiste Revolutionnaire, உதாணத்திற்கு அரசியல் தெளிவற்ற ஒரு "முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி" கட்டமைக்க வேண்டும் என்று வாதிடுகிறது. இதன் இயல்பிலேயே இது ஒரு சந்தர்ப்பவாத செயற்திட்டம் ஆகும்; இது வேலைத்திட்டத் தெளிவுடனோ அல்லது அரசியல் கோட்பாடுகள் பற்றிய தீவிர அணுகுமுறையுடனோ பொருந்தாது. மார்க்ஸிஸத்தின் தத்துவார்த்த அடித்தளங்கள் மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாற்று அனுபவங்கள் ஆகியவற்றிற்கு மதிப்பளிக்காமையை ஒரு பெரிய, அரிய குணநலன் என்று LCR காட்டிக் கொள்ளுகிறது. LCR ன் முக்கியமான பொதுத் தொடர்பாளாரான ஒலிவியர் பெசன்ஸநோ வரலாற்றின் படிப்பினைகளை ஆராய்வது என்பது "முதலாளித்துவ-எதிர்ப்பு" கட்சியைக் கட்டமைக்கும் பணிக்கு குறுக்கே வரக்கூடாது என்று பகிரங்கமாக கூறியுள்ளார். "பல சிந்தனைப் போக்கு மற்றும் வரலாற்று "மரபியங்கள்" பற்றிய விவாதம் ஆர்வம் கொடுக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால் அவை சந்தேகத்திற்கிடமின்றி நீண்டும் இருக்கும். நாம் அப்படிப்பட்ட வகையில் துவங்க இயலாது!" இதன் பின் அவர் LCR தன்னுடைய கடந்த காலத்தை கட்சிக்கு ஆதரவு கொடுக்கக் கூடியவர்களிடம் "சுமத்த" விரும்பவில்லை என்றார், "அதே போல் டிராட்ஸ்கிசம் அல்லது LCR உடைய குறிப்பிட்ட வரலாறு பற்றியும்" சுமத்த விரும்பவில்லை" என்றார். இதே போல் சர்வதேச சோசலிஸ்ட் குழுவைச்(International Socialist Group) சேர்ந்த டேவிட் பாக்கர்டும் அவருடைய அமைப்பு"ஒரு புதிய இடது கட்சி பற்றிய விவாதத்தில் நம்முடைய வரலாற்றுச் சொற்றொடர்களையெல்லாம் சுமத்த தேவையில்லை" என்று அறிவித்து விட்டார். சோசலிச் சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் சோசலிச் சமத்துவக் கட்சி இத்தகைய சந்தர்ப்பவாதக் கருத்தாய்வுகளை எதிர்த்து நிற்கிறது என்பதை நிறுவுகிறது நம்முடைய இயக்கம் நான்காம் அகிலத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை அளித்த அஸ்திவராங்கள் மற்றும் வரலாற்று கருத்தாய்வுகளுடன் சிறிதும் ஐயத்திற்கு இடமின்றி பிரிக்க முடியாமல் பிணைந்து ஆழ்ந்த வேர்களைக் கொண்டுள்ளது என்பதை நாம் மிகவும் தெளிவாகக் கூறுகிறோம். இத்தகைய கருத்தாய்வுகளின் முக்கியத்துவம் 1930 களுக்குப் பிறகு மிகப் பெரிய உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியின் வெடிப்பினால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. இந்தக் காலம், இதன் சோகம் ததும்பிய விளைவுகளின் அரசியல் படிப்பினைகளை உள்ளடக்கிய இந்த ஆவணம்தான் எத்துணை சரியான நேரத்தில் வந்துள்ளது! நான்காம் அகிலத்தின் மரபியத்தை நம்முடைய கட்சியின் மிகப் பெரிய வலிமையாகவும் ஒரு புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிக்கு சக்தி வாய்ந்த அடிப்படையாகவும் நாங்கள் காண்கிறோம். ஆவணம் கூறுவது போல்: "சோசலிச் சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலமும் ஒரு பரந்த வரலாற்று மரபை முன்னே எடுத்துச் செல்லுகின்றன. வேறு எந்த அரசியல் இயக்கமும் அவர்கள் விரும்பினாலும்கூட தன்னுடைய வரலாற்றைப் பின் நோக்கி பார்க்கவோ அல்லது இயலவோ முடியாது. சமூக ஜனநாயகவாதிகள், ஸ்ராலிஸ்டுகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பப்லோவாத போக்குகள் ஆகிய சந்தர்ப்பவாத அமைப்புக்கள் அவற்றின் பெரும் தவறுகள், குற்றங்கள் பற்றிய சான்றுகள் பற்றி நினைவுபடுத்த விரும்புவதில்லை. அதே போல் வரலாறு கொள்கைகள் எனக் கூறிக் கொண்டு தாங்கள் பயன்படுத்திய சந்தர்ப்பவாத உத்திகள் பற்றியும் கூறப்பட்டு தடைக்கு உள்ளாக விரும்பவில்லை. நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு ஒன்றுதான் பெரும் கோட்பாடுகளின் அடிப்படையில் அதன் அரசியல் பணியை நனவுடன் கொண்டுள்ளது; எனவே வரலாற்றை தொழிலாளர் வர்க்கத்திற்கு எந்த இடைவெளியும் இல்லாமல் அது கொடுக்க முடியும். அதன் பதாகைக்கு தொழிலாளர்கள், இளைஞர்களிடையே இருக்கும் மிக உறுதியுடன் கூடிய, தைரியம் மிகுந்த, நேர்மையான கூறுபாடுகளை ஈர்க்கும்." அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியால் போராட்டத்தினுள் இழுக்கப்பட்டிருக்கும் ஒரு புதிய தலைமுறைத் தொழிலாளர்களால் சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் என்ற ஆவணம் படிக்கப்பட்டு, ஆராயப்பட்டு, விவாதிக்கப்படவும் வேண்டும். |