WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Voters reject Hindu supremacist BJP's attempt to
exploit Mumbai atrocity
மும்பை கொடூரத்தை இந்து மேலாதிக்கவாத பிஜேபி பயன்படுத்தும் முயற்சியை
வாக்காளர்கள் நிராகரித்தனர்
By Deepal Jayasekera
19 December 2008
Use this
version to print | Send
this link by email | Email
the author
தன்னுடைய ஏமாற்றத்திற்கும் பெருநிறுவன ஊடகத்தின் வியப்பிற்கும் உரிய வகையில்
இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP),
நவம்பர் மும்பை பயங்கரவாதக் கொடுமையையை அடுத்து இந்திய அரசாங்கம், அரசியல் பாதுகாப்பு நடைமுறைகளை
எழுப்பிய நாட்டுவெறி பிரச்சாரத்தில் இருந்து தேர்தல் ஆதாயங்களை பெறுவதில் தோல்வியுற்றுள்ளது.
உண்மையில் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய கட்சியும், தேசிய பாராளுமன்றத்தில்
உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியுமான பிஜேபி சமீபத்தில் ஐந்து இந்திய மாநிலங்களில் முடிவடைந்த மாநிலத் தேர்தல்களில்
கணிசமான இழப்புக்களை அடைந்தது.
இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் (UPA)
மேலாதிக்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியினால் வட மேற்கு மாநிலமான ராஜஸ்தானில் பிஜேபி அதிகாரத்தில்
இருந்து அகற்றப்பட்டது. இந்தியாவின் தலைநகரமான டெல்லி இருக்கும், அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த டெல்லி
மாநிலத்தின் அதிகாரத்தை கைப்பற்றிவிட முடியும் என்று பிஜேபி பெரும் நம்பிக்கை கொண்டிருந்தது; ஆனால் அங்கு
இருந்த காங்கிரஸ் அரசாங்கம் மிக எளிதில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது. இரண்டு மத்திய இந்திய மாநிலங்களான
மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டிஸ்கரில் பிஜேபி அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டது, ஆனால் கணிசமான
பாராளுமன்ற பெரும்பான்மை குறைந்துள்ள வகையில் ஆகும்.
இதற்கிடையில் காங்கிரஸ், சிறிய வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் எதிர்க்கட்சியாக
பத்து ஆண்டுகள் இருந்த பின்னர் 40 சட்டமன்றத் தொகுதிகளில் 32 ஐக் கைப்பற்றி அதிகாரத்திற்கு திரும்ப
வந்தது. இப்பொழுது ஆட்சியில் இருக்கும் பிராந்திய கட்சியான மிசோ தேசிய முன்னணி மூன்றே இடங்கள் கொண்ட
கட்சியாக சட்டமன்றத்தில் மாறிவிட்டது.
காங்கிரஸும் ஐமுகூ(UPA)
வும் பயங்கரவாதத்தை மிருதுவாக எதிர்கொள்ளுவதாக நீண்டகாலமாக பிஜேபி தன்னுடைய பிரச்சார மையத்தில்
குற்றச்சாட்டுக்களை கூறிவந்துள்ளது. முந்தைய பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கம்
2002ல் ஏற்றிருந்த பொடா (Prevention of
Terrorism Act) என்ற கொடுமையான சட்டத்தை
கைவிட்டதற்காக அது காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக குறைகூறிவந்தது; மேலும் ஒரு வெட்கம் கெட்ட
வகுப்புவாத முறையில் ஐமுகூ (UPA)
அதன் "முஸ்லிம் வாக்குகள் வங்கியை" பாதுகாப்பதற்காக பயங்கரவாதத்தை தீவிரமாக எதிர்க்கவில்லை என்றும்
குற்றம் சாட்டியது.
பிஜேபி கடந்த மாதம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை
எடுத்துக் கொண்டு அது அரசாங்கம் மக்களை காப்பதில் அடைந்துள்ள தோல்விக்கு நிரூபணம் என்று கூறி
பாக்கிஸ்தானுக்கு எதிராக விரோதப் போக்கை தூண்டிவிடுவதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. அமெரிக்க
நடவடிக்கைகளை முன்னோடியாக காட்டி, முக்கிய பிஜேபி செய்தித் தொடர்பாளர் இந்தியாவும் எல்லை தாண்டிய
தாக்குதல்களை நடத்த வேண்டும், பாக்கிஸ்தானுக்கு எதிரான விமானத் தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று
கூறினார் --இந்த நடவடிக்கை இரு அணுசக்தி நாடுகளுக்கு இடையே முழுப் போரைக் கொண்டு வந்திருக்கும்.
மும்பை மீதான தாக்குதல் இரு விதங்களில் பிஜேபி தலைமையினால்
வரவேற்கப்பட்டது; ஏனெனில் இதற்கு முந்தைய வாரங்களில் கட்சி தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைக்குத்
தள்ளப்பட்டிருந்தது; பயங்கரவாதப் பிரச்சினைகளை அது பயன்படுத்தும் முயற்சி இடையூறுக்கு ஆளாகி இருந்தது;
ஏனெனில் ஒரு இந்து தீவிரவாத சதிவேலை அம்பலப்படுத்தப்பட்டிருந்தது. இச்சதியில் பிஜேபி- க்கு நெருக்கமான
நபர்களும் அமைப்புக்களும், ஆர்எஸ்எஸ் (RSS)
போன்றவையும் தலைமை தாங்கியிருந்தனர். (See:
India: Hindu supremacist terror network had ties to military)
சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த ஆதாயங்கள் அதன் பெருவணிக
சமூகப் பொருளாதார கொள்கைகளுக்கு மக்கள் ஒப்புதல் என்ற பொருளைத் தராது. சமீபத்திய மாநிலத்
தேர்தல்களுக்கு முன்பு காங்கிரஸ் தொடர்ந்து மே 2004ல் அது ஐமுகூ க்குத் தலைமை தாங்கி அதிகாரத்திற்கு
வந்த காலத்தில் இருந்து தேர்தல் பின்னடைவுகளை தொடர்ச்சியாக சந்தித்து வந்தது. இந்தியாவின் எட்டாம் மிகப்
பெரிய மாநிலமான ராஜஸ்தான்தான் 2005ல் இருந்து காங்கிரஸ் கைப்பற்றியுள்ள முதல் "பெரிய மாநிலம்"
ஆகும்.
மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் பிஜேபி இன் வகுப்புவாத,
பயங்கரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு மக்களுடைய விரோதப்போக்கின் ஒரு சிதைந்த வெளிப்பாடு ஆகும்.
இந்தியாவின் உழைக்கும் மக்கள் பிஜேபி இன் புதிய தாராளக் கொள்கைகளையோ அல்லது பெருகிய முறையில்
வறுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை பற்றி பொருட்படுத்தாத தன்மையையோ உலகின் முதலாளித்துவ
சந்தைக்கு முக்கியமான உற்பத்தி மையம் என்ற முறையில் இந்தியாவின் "எழுச்சியால்" ஏற்பட்ட விளைவுகளையோ
மறந்துவிடவில்லை.
பிஜேபி மற்றும் அதன் இந்துத்துவ வழிவகையை மக்கள் நிராகரித்தது, செய்தி
ஊடகத்திற்கு மட்டும் இல்லாமல் காங்கிரஸுக்கும் வியப்பைக் கொடுத்தது என்பது குறிப்பிடப்பட வேண்டும். மும்பை
தாக்குதலுக்கு பின்னர், நீண்டகாலமாக இந்து வலதை ஏற்று அதற்கு உடந்தையாய் இருந்த இழிந்த சான்றை
கொண்டிருக்கும் காங்கிரஸ், பிஜேபி க்கு "தேசிய ஐக்கியம்" என்ற பெயரில் தொடர்பு கொண்டது. பிரதம
மந்திரி மன்மோகன் சிங் பிஜேபி யின் பிரதம மந்திரி வேட்பாளரான எல்.கே.அத்வானியிடம் அவர்கள் இருவரும்
கூட்டாக மும்பையில் சுற்றுப் பயணம் வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். அத்வானி இகழ்வுற்ற ஒரு இந்து
மேலாதிக்கவாதியாவார். குஜராத் மாநிலத்தின் BJP
முதல் மந்திரியான நரேந்திர மோடிக்கு இவர் உற்ற சகா ஆவார்; பிந்தையவரோ 2002ம் ஆண்டில் முஸ்லிம்
விரோத இனப் படுகொலையை தூண்டியவர் ஆவார். மேலும் அத்வானியே 1992-93ல் அயோத்தியில் இருந்த
பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் இந்துக் கோயில் ஒன்றைக் கட்டுவதற்கு முன்னின்ற ஒரு பிற்போக்குத்தன,
பழமைவாதத் தலைவர் ஆவார்; அந்த இடிப்பை ஒட்டி பிரிவினைக்கு பிறகான மோசமான மத வகுப்புவாத
கலவரம் இந்தியாவில் மூண்டு உச்ச நிலையை அடைந்தது.
மாநில தேர்தல்களை காங்கிரஸ் கட்சி பெரும் தயக்கத்துடன்தான் அணுகியிருந்தது.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் இந்தியா இரட்டை இலக்க பணவீக்கத்தை சந்தித்தது; அதையும் விட பெரிய உணவு,
எண்ணெய் விலை உயர்வுகளும் இருந்தன. இப்பொழுது இந்தியா உலக பொருளாதாரப் பின்னடைவினால் பெரும்
பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் புள்ளி விவரங்கள் வந்தன என்றாலும்,
தொழில்துறை உற்பத்தி 1993க்கு பின்னர் முதல் தடவையாக அக்டோபர் மாதத்தில் வீழ்ச்சியுற்றது.
மேலும் மாநிலத் தேர்தல்கள் சிபிஐ(எம்) இடது முன்னணி தனது பாராளுமன்ற
ஆதரவை ஐமுகூ க்கு நிறுத்திய பின்னர் காங்கிரஸ் எதிர்கொண்ட தேர்தல்கள் ஆகும். 2004 மே மாதத்தில் இருந்து
கடந்த ஜூலை வரை ஸ்ராலினிச சிபிஐ(எம்) மற்றும் அதன் இடது முன்னணி கட்சிகள் ஐமுகூ
சிறுபான்மைக்கு அது பதவியில் இருப்பதற்கு தேவையான
பெரும்பான்மைக்கான வாக்குகளை அளித்து வந்தன. ஐமுகூ க்கான இந்த ஆதரவை மக்கள் சார்புடைய
கொள்கைகளை செயல்படுத்த அதற்கு அழுத்தம் கொடுக்க முடியும் மற்றும் பிஜேபி க்கு எதிரான மத சார்பற்ற
தடுப்பு இது என்று கூறி சிபிஐ(எம்) நியாயப்படுத்தியது. முந்தைய பிஜேபி தலைமையிலான அரசாங்கம்
முன்வைத்திருந்த புதிய தாராளக் கொள்கைகளை நான்கு ஆண்டுகளாக செயல்படுத்தி வந்த காங்கிரஸ் கட்சி கடந்த
கோடையில் ஸ்ராலினிஸ்ட்டுக்களுடன் அமெரிக்காவுடனான ஒரு சிவிலிய அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக
சிபிஐ(எம்) உடன் முறித்துக் கொண்டது; அதன் அர்த்தம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய
முதலாளித்துவத்திற்கும் இடையே ஒரு "பூகோள மூலோபாய பங்காண்மையின்" அடிக்கல்லாக இருக்கும் என்பதாகும்.
இந்திய முதலாளித்துவத்தின் மரபார்ந்த ஆளும் கட்சியான காங்கிரஸ், இடது
முன்னணியின் ஆதரவைப் பயன்படுத்தி தன்னுடைய கட்சி "சாமானிய மக்கள்மீது" பெறும் அக்கறை காட்டும் கட்சி
என்ற கூற்றை வலுப்படுத்திக் கொண்டது; பிஜேபி
போலன்றி சீர்திருத்தங்களை தொடர்வதில் "மனித முகத்தை"
கொண்டுள்ளது என்றும் கூறிவந்தது.
நாட்டுவெறித் தூண்டுதல், அச்சத்தைத் தூண்டுதல் பயனளிக்கவில்லை
டெல்லியில் பிஜேபி நவம்பர் 29 வாக்களிப்பிற்கு முன்னதாக நாளேடுளில், "நினைத்த
நேரத்தில் மிருகத்தனமான பயங்கரவாதம் தாக்குகிறது. வலுவற்ற அரசாங்கம். செயல்பட விருப்பமில்லாத,
திறமையற்ற அரசாங்கம். பிஜேபி க்கு வாக்களியுங்கள்" என்று விளம்பரங்களை வெளியிட்டிருந்தது. செப்டம்பர் 13
அன்று, டெல்லியியே 30 பேரைப் பலி வாங்கிய ஐந்து தொடர்ச்சியான குண்டுவெடிப்புக்களை கண்டது.
ஆனால் பிஜேபி யின் "பயங்கரவாத எதிர்ப்பு" பிரச்சாரம் பயனற்றுப் போயிற்று.
இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பையில் ஒழுங்கு மீட்கப்பட்டுவிட்டது என்று அதிகாரிகள் கூறிய சில மணி
நேரத்திற்குள் நடைபெற்ற வாக்குப்பதிவில் 69 சட்டசபை தொகுதிகளில் 42ல் வெற்றியை கண்டு, காங்கிரஸ்
டெல்லியில் தொடர்ச்சியாக மூன்றாம் முறையாக மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்றது. தன்னுடைய பங்கிற்கு
பிஜேபி 23 இடங்களை கைப்பற்றியது.
காங்கிரஸ் கட்சி முதல் மந்திரியான ஷீலா தீக்ஷித் தன்னுடைய தேர்தல்
பிரச்சாரத்தை டெல்லி சுரங்கப் பாதைகள் மற்றும் பல மேம்பாலங்கள் போன்ற உள்கட்டுமானங்களின்
செயற்திட்டங்களை கூறி அவற்றின் மீது குவிமையப்படுத்தி, காங்கிரஸின் வெற்றியை, "(இந்தியாவின்)
மதசார்பின்மைக்கு ஒரு வெற்றி" என்று குறித்தார். பிஜேபி பிரச்சாரத்தை நேரடியாக குறித்த வகையில் அவர்,
"பயங்கரவாத பிரச்சினையை பயன்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மக்கள் அதை நிராகரித்தனர்" என்று
சேர்த்துக் கொண்டார். ஆனால் காஷ்மீரில் இந்திய எதிர்ப்பு எழுச்சிக்கான அதன் ஆதரவை முடிவுக்கு கொண்டுவர
இஸ்லாமாபாத் மீது கூடுதல் அழுத்தம் கொடுக்க மும்பை மீதான தாக்குதலை பயன்படுத்தும் காங்கிரஸ்
தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்தின் முயற்சியை பற்றி ஏதும் கூறவில்லை.
ராஜஸ்தானில், காங்கிரஸ் வெற்றி பெற்றதன் மூலம் தன்னுடைய மொத்த இடங்களை
56ல் இருந்து 96க்கு 40 இடங்கள் என்று உயர்த்திக் கொண்டது. ஆனால் மக்கள் மொத்த வாக்குகளில் 36.9
சதவிகிதம் என்று 1.2 சதவிகிதம் உயர்த்திய அளவில் இப்பங்கு உயர்வைக் கண்டது. இதற்கிடையில்
BJP 42
தொகுதிகளை இழந்து கிட்டத்தட்ட மக்கள் மொத்த வாக்குகளில் 5 சதவிகிதக் குறைப்பையும் கண்டு 34.5
சதவிகித மக்கள் மொத்த வாக்கு பங்கைப் பெற்றது.
பாக்கிஸ்தானுக்கு அருகில் இருக்கும் ராஜஸ்தான் பிஜேபி யின் "பயங்கரவாத
எதிர்ப்பு" பிரச்சரத்திற்கு மையமாக இருந்தது. இதன் தலைநகரமான ஜெய்ப்பூர் மே மாதம் குறைந்தது 80
பேரை பலி கொண்ட பயங்கரவாத குண்டுவீச்சை சந்தித்தது. பிஜேபி இந்நிகழ்வை விரைவாகப் பயன்படுத்தி ஐமுகூ
அரசாங்கத்தின் "பயங்கரவாதத்தை" எதிர்த்துப் போராடுவதில் "தோல்வி" என்ற தன் தாக்குதல்களை
தீவிரப்படுத்தியது. பிஜேபி மாநில அரசாங்கம் ஜெய்ப்பூரின் வறிய பங்களாதேஷ் புலம்பெயர்ந்த மக்கள்மீது
போலீஸ் சோதனையை கட்டவிழ்த்தது; தாக்குதலுக்கு அவர்களை பலிகடாக்கள் ஆக்கியது.
மத்திய பிரதேசத்தில் பிஜேபி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டாலும் அதன்
மொத்த எண்ணிக்கை 173ல் இருந்து 143 என்று குறைந்துவிட்டது; காங்கிரஸ் சட்டமன்றத்தில் தன்னுடைய
எண்ணிக்கையை 38ல் இருந்து 71 என உயர்த்திக் கொண்டது.
அத்வானியும் பிஜேபி இன் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கும் கிட்டத்தட்ட
"பயங்கரவாத" பிரச்சினை பற்றி பிரச்சாரம் செய்தனர் என்றாலும், மத்திய பிரதேச பிஜேபி முதல் மந்திரி
சிவராஜ் சிங் செளஹான் தன்னுடைய பிரச்சாரத்தை விவசாயத்தை வளர்க்கும் "உறுதிமொழிகள்" மூலம்
மேற்கொண்டார். மத்திய பிரதேசத்தின் 60 மில்லியன் மக்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு
விவசாயத்தைத்தான் நம்பியிருக்கின்றனர்.
அருகில் இருக்கும் மாநிலமான சட்டிஸ்காரில் பிஜேபி 90 சட்டமன்ற தொகுதிகளில்
50ல் வெற்றி கொண்ட வகையில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டது. அங்கு முதல் மந்திரி வேட்பாளர்
ராமன் சிங் பிரச்சாரத்தின் முக்கிய தளம் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு குறைந்த விலையில் அரிசி
வழங்கும் திட்டத்தை கொண்டிருந்தது. சட்டிஸ்கர் கடுமையான ஊட்டக் குறைவு மற்றும் மகளிர் சுகாதாரத்தில்
வசதிக் குறைவு இருக்கும் நிலையில் அத்தகைய திட்டம் செளஹானின் உறுதிமொழிகளில் விவசாயத்திற்கு முன்னுரிமை
என்பது மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்திய செய்தி ஊடகப் பகுப்பாய்வாளர்கள் சமீபத்திய தேர்தல்களை அடுத்த ஆண்டு
மே மாதத்தில் வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்பு ஒரு அரையிறுதிப் போட்டி என்று குறிப்பிட்டுள்ளனர்; இது பின்னர்
வரவிருக்கும் தேர்தல்களுக்கு ஒரு குறிப்பைக் காட்டும் என்பது அவர்கள் கருத்து. அத்தகைய கூற்றை உரைக்கையில்
அவர்கள் சமீபத்தில் வாக்களித்த ஐந்து மாநிலங்களில் 100 மில்லியன் வாக்காளர்கள் இருந்ததையும், இது
கிட்டத்தட்ட மொத்த தேசிய வாக்காளர் தொகுப்பில் ஆறில் ஒரு பங்கு என்பதையும் கணக்கில் கொண்டுள்ளனர்.
ஆனால் இத்தகைய கருத்துக்கள் நன்கு திறனாயப்பட வேண்டும்; ஏனெனில் டெல்லியை
தவிர மற்ற ஐந்து மாநிலங்களும் குறிப்பிடத்தக்க வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவை. இரு இந்திய
முதலாளித்துவ முக்கிய கட்சிகள் பற்றியும் மக்களிடையே, அதிலும் குறிப்பாக நீண்ட காலமாக நெருக்கடியில் உள்ள
கிராமப்புற இந்தியாவில் பரந்த அதிருப்தி நிலவுகிறது.
மேலும் இந்திய பொருளாதாரம் உலக பொருளாதரப் பின்னடைவினாலும்
பாதிக்கப்பட்டுள்ளது; பிஜேபி ஐப் போலவே காங்கிரஸும் பெரு வணிகத்திற்கு ஊக்கம் தருவதற்காக
பொருளாதார நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது ஏற்றத்தான் உறுதியாக உள்ளது.
தன்னுடைய "பயங்கரவாத-எதிர்ப்பு" பிரச்சாரத்திலிருந்து தேர்தல் ஆதாயம்
அடைவதில் பிஜேபி அடைந்துள்ள தோல்வி BJP
தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணிக்குள்ளே விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளது. டிசம்பர் 9ம் தேதி,
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மறுநாள், ஜனதா தளம் (ஐக்கியம்), தேஜகூ
(NDA) வின்
முக்கிய பங்காளி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான சிவானந்த் திவாரி பிஜேபி ஐ "பயங்கரவாத
பிரச்சினையை" ஒதுக்கிவிட்டு சமூகப் பொருளாதார பிரச்சினைகளில் கவனக்குவிப்பு காட்டுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இம் முன்மொழிவு அத்வானி மற்றும் பிஜேபி யினால் விரைவில் நசுக்கப்பட்டது.
இந்திய தொழிலாளர்களுக்கு நடைமுறைக் கட்சிகளை தவிர வேறு விருப்பத் தேர்வு
ஏதும் இல்லை --அதாவது ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பிஜேபி,
பலதரப்பட்ட வகுப்புவாத, சாதியக் கட்சிகள் மற்றும் ஸ்ராலினிச
தலைமையில் உள்ள இடது முன்னணியின் பல கூறுபாடுகள் ஆகியவற்றை தவிர. அனைத்துமே இந்திய முதலாளித்துவத்தின்
"புதிய பொருளாதாரக் கொள்கைகளைத்தான்" செயல்படுத்தியுள்ளன; அவையோ இந்தியாவை உலக மூலதனத்திற்கு
குறைவூதிய தொழிலாளர் தொகுப்பை கொடுத்து உற்பத்தியை அவற்றிற்கு அதிகமாக்கும் நோக்கத்தை
கொண்டுள்ளது; அனைத்துமே இந்திய உயரடுக்கின் உலக சக்தி என்ற அந்தஸ்தை பெறுவதற்கான உந்துதலுக்கு ஆதரவு
கொடுக்கின்றன.
பல ஆண்டுகளாக ஸ்ராலினிஸ்ட்டுக்கள் வலதுசாரி ஐமுகூ அரசாங்கத்திற்கு முட்டுக்
கொடுத்து நிறுத்தியுள்ளனர். இப்பொழுது அவை காங்கிரஸில் இருந்து தம்மை ஒதுக்கி வைத்துக் கொள்ளும் கட்டாயத்திற்கு
உட்பட்டுள்ளதால் --காங்கிரஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அப்பட்டமான முறையில் உடன்படிக்கை கொண்டு
தொழிலாள வர்க்கத்திடையே இழிவு பெற்றுவிட்டதால்-- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) காங்கிரஸிற்கும்
பிஜேபி க்கும் எதிராக எனக் கூறிக் கொண்டு இப்பொழுது ஒரு "மூன்றாம் அணி" ஒன்றை சேர்க்க முயல்கிறது.
இதற்காக ஸ்ராலினி்ஸ்ட்டுக்கள் பல வட்டார முதலாளித்துவ கட்சிகளுடன், தமிழ்நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் (AIADMK),
ஆந்திரப் பிரதேசத்தில் தெலுகு தேசக் கட்சி (TDP)
ஆகியவை உட்பட, கூட்டணி காண முற்பட்டுள்ளது. இவ்விரு கட்சிகளும்
CPM இனால் "மதசார்பற்றவை"
என்று புகழப்பட்டுள்ளன; ஆனால் இவை முன்பு இந்து மேலாதிக்க பிஜேபி யுடன் கூட்டணி உறுப்புக் கட்சிகளாக இருந்தன.
இரண்டும் இரக்கமற்ற முறையில் தொழிலாள வர்க்க எதிர்ப்புச் செயல்களை புரிந்ததுடன் தங்கள் மாநிலங்களில்
ஆட்சியில் இருந்தபோது புதிய தாராள சீர்திருத்த கொள்கைகளைத்தான் செயல்படுத்தின.
இத்தகைய பிற்போக்கு சக்திகளுடன் தொழிலாள வர்க்கத்தை பிணைக்க முயலுகையில்,
சிபிஐ(எம்) காங்கிரஸுடன் தேசிய தேர்தலுக்கு பின் ஒருவேளை கூட்டணி வைத்துக் கொள்ளும் விருப்பத்தையும்
கொண்டுள்ளது. இது அதன் கோஷமான "பிஜேபி ஐ தோற்கடியுங்கள், காங்கிரசை நிராகரியுங்கள்" என்பதின்
மூலம் வெளிப்பட்டுள்ளது. |