WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Iraqi government seeks criminal prosecution of anti-Bush protestor
ஈராக்கிய அரசாங்கம் புஷ்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர் மீது குற்றவழக்கு பதிவு செய்ய
விரும்புகிறது
By James Cogan
17 December 2008
Use this version
to print | Send
this link by email | Email
the author
ஞாயிறன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கும் நடவடிக்கையாக
ஜோர்ஜ் புஷ்மீது தன்னுடைய காலணிகளை வீசிய 29 வயது செய்தியாளரான முன்டடர் அல்-ஜைதி நேற்று பாக்தாத்
மத்திய குற்றவியில் நீதிமன்றத்தின் விசாரணை நீதிபதி முன் நிறுத்தப்பட்டார்.
குற்றப் பதிவு தொடரப்படலாமா என்று நீதிபதி தெரிவிக்கும் வரை ஜைதி காவலில்
வைக்கப்படுமாறு உத்திரவிடப்பட்டார். ஈராக்கிய உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த ஒரு செய்தித் தொடர்பாளர்
அப்தெல் கரிம் காலெப் Report Without
Borders ன் நிருபர்களிடம் நாட்டின் குற்றவியல் தொகுப்பின்
மூன்று பிரிவுகளின் கீழ் "ஒரு அயல்நாட்டு அரசாங்கத் தலைவர்மீது குற்றம்" என்ற விதத்தில் குற்றச் சாட்டுக்களை
எதிர்கொள்ளக்கூடும் என்று தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது புஷ்ஷிற்கு அருகில் நின்று
கொண்டிருந்த பிரதம மந்திரி நூரி அல்-மாலிகியை அவமதிப்பிற்கு உட்படுத்தியதற்காகவும் அவர்மீது விசாரணை நடத்தப்படலாம்.
இதன் விளைவாக செய்தியாளர் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறக்கூடும். ஆனால்
புஷ்ஷை "தாக்குவதற்கு" முற்பட்டார் என்ற தீவிர குற்றம் அவர் மீது சுமத்தப்பட்டால் அதற்கான தண்டனை 15
ஆண்டுகளாக இருக்கக்கூடும்.
இன்று ஜைதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படலாம். அவரை பகிரங்கமாக
கொண்டுவந்தால் அவர் எதிர் நடவடிக்கையில் ஈடுபட்ட பின் அமெரிக்க இரகசியத் துறை முகவர்கள் மற்றும் ஈராக்கிய
உள்துறை அமைச்சக நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டது பற்றிய குற்றச்சாட்டுக்களை பற்றி சுதந்திரமான
பார்வையாளர்களால் உறுதி செய்ய முடியும்.
செவ்வாயன்று இவருடைய சகோதரர் மைதம் அல்-ஜைதி ராய்ட்டரிடம்
தெரிவித்தார்: "நேற்று ஒரு நபர் --அவரை எங்களுக்குத் தெரியும்-- எங்களுடன் தொடர்பு கொண்டு முன்டடர்
சனிக்கிழமையன்று Ibn-Sina
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று கூறியதுதான் எங்களுக்கு இதுவரை தெரியவந்துள்ளது. அவர்
தலையில் காயமுற்றிருக்கிறார்; ஏனெனில் ரைபிளின் மட்டைப்புறத்தால் அவர் தாக்கப்பட்டார், அவருடைய கைகள்
ஒன்றும் முறிக்கப்பட்டுள்ளது."
மற்றொரு சகோதரர் டர்காம் அல்-ஜைடி கூறினார்: "முன்டடதருக்கு ஒரு கை
முறிந்துள்ளது, விலா எலும்புகள் முறிந்துள்ளன, அவருடைய கண்ணிற்குக் கீழ் மற்றும் கால்களில் ஏற்பட்ட சில
காயங்களும் வேதனை கொடுக்கின்றன."
செய்தியாளர் கூட்டத்தில் இருந்து ஈராக்கிய -செய்தியாளர்கள் "ஒரு பெண் போல்
அழும் வரை" ஜைதியை பாதுகாப்பு அதிகாரிகள் தாக்கினர் என்று கூறியுள்ளனர்; மேலும் அவரை இழுத்துச் சென்ற
அறை வரை ஒரு இரத்தச் சுவடை காண முடியும் என்றும் கூறினார்கள்.
ஈராக் மற்றும் மத்தியகிழக்கு, உலகம் முழுவதும் ஜைதியின் எதிர்ப்பு புஷ் நிர்வாகம்
மற்றும் அதன் குற்றம் சார்ந்த ஈராக்கிய படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நூறாயிரக்கணக்கான
மில்லியன் மக்களுடைய உண்மையான உணர்வுகளின் அடையாளம் என்று பாராட்டப்பட்டு வருகிறது.
அரபு பண்பாட்டில் ஒருவருடைய காலணிகளை மற்றவர் மீது வீசுதல் என்பது இழிவு,
வெறுப்பு என்ற சொற்களால் வடிக்க முடியாத தன்மைக்கு அடையாளம் ஆகும். அமெரிக்க ஜனாதிபதி மீது
ஒன்றன்பின் ஒன்றாகத் தன் காலணிகளை ஜைதி வீசியெறிந்தபோது அவர் கூச்சலிட்டார்: "நாயே, இதுதான்
ஈராக்கிய மக்களிடம் இருந்து உனக்குக் கிடைக்கும் விடைபெறும் முத்தம். ஈராக்கியப் போரில்
கொல்லப்பட்டவர்கள், விதவைகள் மற்றும் அனாதைகளிடம் இருந்து இது வருகிறது."
மார்ச் 2003ல் சட்டவிரோதப் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து ஒரு
மில்லியனுக்கும் மேலான மக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்; நான்கு மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து
வெளியேறும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளனர்; சமூக உள்கட்டுமானம் முற்றிலும் பேரழிவிற்கு உட்பட்டுள்ளது. மற்றய
நூறாயிரக்கணக்கான ஈராக்கியர்களைப் போல், ஜைதியும் அமெரிக்கத் துருப்புக்களால் காவலில் வைக்கப்பட்டும்
அவமானம், பயங்கரம் மற்றும் அதிர்ச்சியைப் பொறுமையாக தாங்கிக் கொண்டார். இந்த ஆண்டுத் துவக்கத்தில்
அமெரிக்கத் தாக்குதல் தொழிலாளர் வர்க்கப் பகுதியான சதர் நகரத்தில் நடந்தது பற்றி தகவல் திரட்டியபோது
அவர் எதிர்ப்புப் போராளிகள் மற்றும் குடிமக்கள் குண்டுத் தாக்குதல்களுக்கு இடையே சிக்கி ஏராளமாகக்
கொலையுண்டதை நேரில் பார்த்துள்ளார்.
மக்களுடைய நிலைமை கடுமையாகத்தான் உள்ளது. இந்தக் குளிர்காலத்தில்
பெரும்பாலன மக்களுடைய உண்மை நிலைமை போதுமான உணவைப் பெறுவதற்கும், தக்க வெப்பத்துடன்
இருப்பதற்கும் அன்றாடம் பெரும் போராட்டம் நடத்துவதாக உள்ளது. கிட்டத்தட்ட 70 சதவிகித குடும்பங்கள்
மாதம் ஒன்றுக்கு $210 க்குள் வாழ்வதற்குப் பெரும்பாடுபடுவதாக தகவல் திரட்டுக்கள் தெரிவிக்கின்றன. ஐந்து
வயதிற்குக் குறைந்த குழந்தைகளில் நான்கில் ஒரு பங்கிற்கு மேல் --அதாவது அமெரிக்க ஆக்கிரமிப்பின்போது
பிறந்தவை-- போதிய ஊட்ட உணவு இல்லாததால் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளன.
படையெடுப்பு ஜனநாயகத்தை நிறுவிவிட்டது என்ற கூற்றுக்கள் ஈராக்கியர்களிடையே
எந்தச் செல்வாக்கையும் பெறவில்லை. புஷ் நிர்வாகம் குறுகிய பற்றுக்கள், இன, பழங்குடி குழுக்களை
ஊக்குவித்துள்ளது; இத்தகைய முன்னோக்கு அரசாங்க அதிகாரத்தை பயன்படுத்தி அவை செல்வம் பெறுவதற்குத்தான்
உதவியுள்ளது. ஒரு ஷியைட் அடிப்படைவாதக் கருவியானது தெற்குப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது; மேலும்
அது மாலிக்கியின் கூட்டாட்சி அரசாங்கத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறது. குர்திஷ் தேசியவாதிகள் வடக்கில் ஒரு
தன்னாட்சிப் பகுதியை நிறுவியுள்ளனர்; அதே நேரத்தில் சுன்னி பழங்குடித் தலைவர்கள் நாட்டின் மேற்கு மற்றும் பிற
சுன்னி அதிகம் இருக்கும் பகுதிகளில் கிட்டத்தட்ட தன்னுரிமை கொண்ட ஆட்சியைக் கொண்டுள்ளனர். அவர்களுடைய
செல்வாக்கு மண்டலத்தில் ஒவ்வொரு பிரிவும் முறையான ஊழல், மிரட்டல் மற்றும் அடக்குமுறை ஆகியவற்றை
கையாள்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு தந்துள்ள ஈராக்கிய அரசியல் உயரடுக்கிற்கும்
சாதாரணமக்களின் தொகுப்பிற்கும் இடையே இருக்கும் பிணைப்பிற்கு இடமில்லாத பிளவுதான் மக்கள் ஜைதியின்
எதிர்ப்பிற்கு கொடுத்துள்ள பதிலில் பிரதிபலிக்கிறது.
ஈராக்கியர்கள் செய்தியாளரை பாராட்டியுள்ளபோது, ஈராக்கின் பெரும்பகுதியை
அழிப்பதற்கு இசைவு கொடுத்த மாலிகியின் அமைச்சரவை புஷ்ஷின்மீது காலணிகளை எறிந்ததை "ஒரு
காட்டுமிராண்டித்தனமான, இழிவான செயல்" என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சதாம் ஹுசைனுக்கு மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான மரண தண்டனை
கொடுக்க வேண்டும் என்று பாடுபட்ட உயர்மட்ட ஈராக்கிய வழக்கறிஞரான
Tariq Harb
ஜோர்ஜ் புஷ்ஷிற்கு காட்டப்பட்ட அவமதிப்பு "மிகவும் அவமானகரமானது, நம்ப முடியாதது" என்று அறிவித்து,
ஜைதி மீது குற்றவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
குர்திஷ் பிரிவைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினரான அப்துல்லா அல்-அலயாவி இந்த
எதிர்ப்பு "பொறுப்பற்ற நடவடிக்கை" என்றும் ஈராக்கிய மக்களை அவமதித்த செயல் என்றும் கண்டித்துள்ளார்.
ஒரு செய்தி ஊடகச் சங்கமான Kurdistan Press
Syndicate, ஆளும் தேசியக் கட்சிகள் வடக்கு ஈராக்கில்
செய்திச் சுதந்திரத்தை தடைக்குட்பட்டது பற்றி ஏதும் கூறாதது, இப்பொழுது இந்தத் தாக்குதலை "அநாகரிகமான
தாக்குதல்" என்று கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுன்னி பழங்குடி எழுச்சிக் குழுவின் தலைவர், வடமேற்கில் உள்ள அன்பர் மாநிலத்தில்
இருக்கும் அஹ்மத் அபு ரிஷாவும் கண்டனக் கூட்டத்தில் சேர்ந்துள்ளார். அவரும் மற்ற பழங்குடி தலைவர்களும் ஏராளமான
பணம் கொடுக்கப்பட்டு அன்பர் பகுதி மீது முழுக் கட்டுப்பாட்டையும் பெற்றுள்ளனர்; கடந்த ஆண்டு "எழுச்சி" -ன்
போது அமெரிக்க பன்னாட்டுப் படைகளுக்கு உதவுவதற்கான ஒரு குடிப்படைக்கு ஆட்களைப் பொறுக்கி எடுத்தனர்.
"அமெரிக்க ஜனாதிபதி அனைத்து ஈராக்கியர்களுடைய விருந்தாளி என்றும்" உரிய மரியாதையுடன் நடத்தப்பட
வேண்டும் என்றும் ரிஷா அறிவித்தார்.
அவருடைய மீறிய செயலுக்காக ஜைதிக்கு எதிராக இந்த அமெரிக்க கைப்பாவைகளினால்
இயக்கப்பட்ட அரசியல் நஞ்சு எந்த அளவிற்கு உடைவு நிலையில் அவர்கள் ஆட்சி உள்ளது என்பதின் அடையாளம்
ஆகும். இவருடைய இரண்டு காலணிகள், 2003ல் இருந்து நலன் பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு சிறுபான்மையின்
பிரதிநிதிகளால் புஷ்ஷின் மீது அள்ளிவீசும் மிகையதார்த்த பாசாங்குத்தன புகழுரைகளை புஸ்ஸென்று ஊதித் தள்ளவிட்டன.
இந்த நிகழ்விற்கு சில மணி நேரம் முன்பு குர்திஷ் தேசியவாத தலைவரும் ஈராக்கிய
ஜனாதிபதியுமான ஜலால் டாலிபானி ஈராக்கிற்கு கடைசி முறையாக வரும் அமெரிக்க ஜனாதிபதியை வரவேற்று,
"நம் நாட்டை நமக்கு விடுவிக்க உதவிய மனிதர், இன்று நாம் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் வளமையை
படிப்படியாக நம் நாட்டில் பெறுவதற்கு உதவியவர்" என்று பாராட்டினார். "ஈராக்கிற்கு ஆதரவாக இருந்து ஈராக்கிய
மக்களுக்கும் நீண்ட காலமாக ஆதரவு கொடுத்தவர்" என்று மாலிகி அவரைப் பாராட்டினார்.
ஆக்கிரமிப்பினால் இறப்பு, அழிவு, துன்பங்களை தவிர வேறு எதையும் கொண்டுவந்து
விடவில்லை என்பதை நினைவுறுத்தும் வகையில்தான் ஜைதியின் எதிர்ப்பு உதவியுள்ளது; மேலும் ஈராக்கிய மக்களின்
பெரும்பாலானவர்களின் வெறுப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. அவருக்கு பின்னர் கொடுக்கப்பட்டுள்ள அடி, உதைகள்
தங்கள் புதிய ஆக்கிரமிப்பு வகை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள புஷ் நிர்வாகம் மற்றும் அதன் வாடிக்கை
பங்காளர் ஆட்சி தொடரும் ஜனநாயக விரோத வழிவகைகளைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. |