World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் 

France: high school students protest education reform

பிரான்ஸ்: உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கல்விச் சீர்திருத்தத்தை எதிர்க்கின்றனர்

By Alex Lantier and Senthooran Ravee
19 December 2008

Back to screen version

கல்வி மந்திரி சேவியர் டார்க்கோஸ் திட்டமிட்டுள்ள உயர்நிலைப் பள்ளி சீர்திருத்தங்களுக்கு எதிராக வியாழனன்று உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். (See, "Amid fears Greek demonstrations could spread: Government postpones French high school reform")

செய்தி ஊடக மதிப்பீடுகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் எண்ணிக்கை பற்றி 80,000 முதல் 160,00 வரை இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன; இது ஒரு உயர்நிலைப் பள்ளி ஆர்ப்பாட்டத்திற்கு அசாதாரண முறையில் மிகஅதிக எண்ணிக்கை ஆகும். நடப்பில் உள்ள பொருளாதார நெருக்கடியால் உருவான நிதிய, தொழில்முறை இழப்புக்களால் எரியூட்டப்பட்டுள்ள சமூக அதிருப்தியையும் கிரேக்கத்தில் அரசாங்க எதிர்ப்பு போன்ற மக்கள் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளதையும் பிரதிபலிக்கிறது.

டார்க்கோசின் சீர்திருத்தம் மிகப் பரந்த முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதற்கு காரணம் வரலாறு, புவியியல் போன்ற பல பாடங்களுக்கு செலவழிக்கப்படும் மணித்தியாலங்களை குறைத்து 13,500 ஆசிரியர்களின் வேலைகளை தகர்க்கும் திட்டத்தை அது கொண்டுள்ளதாலாகும்.

ஆளும் பழமைவாத UMP கட்சிக்கு சட்டவரைவை இயற்றுவதற்கு போதுமான அதிகப் பெரும்பான்மை உள்ளபோதும் டிசம்பர் 15ம் தேதி டார்க்கோஸ் தேசிய சட்ட மன்றத்தில் சட்டத்தை இயற்றுவதை தான் ஒத்திப்போட இருப்பதாக அறிவித்தார்.

ஒத்திப்போடும் திட்டத்திற்கு மத்தியிலும் அரசாங்கம் டார்க்கோசின் சீர்திருத்தத்தை செயல்படுத்தும் திட்டங்களைத்தான் கொண்டிருக்கிறது என்பதை மாணவர்கள் பரந்த முறையில் அறிந்துள்ளனர். மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஜனவரி 29ம் தேதி அனைவரும் திரண்டு ஒரு தேசிய வேலைநிறுத்தத்தை நடத்த வேண்டும் என்று வந்துள்ள அழைப்பையும் மாணவர்கள் எதிர்த்துள்ளனர்: ஏனெனில் இது எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சியை முறிக்கும் வகையில் அடுத்த முக்கிய ஆர்ப்பாட்டத்தை ஒரு மாதத்திற்கும் மேலாக தாமதப்படுத்தும் முயற்சி என்று அவர்கள் பரந்த முறையில் உணர்ந்துள்ளனர்.

மந்திரிசபை கூட்டத்தில் புதனன்று பேசிய ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி, "சீர்திருத்த பணிகள் தொடரும். [...] உங்களுக்கு தெரிந்துள்ளபடி சேவியரே உயர்நிலைப்பள்ளிகள் ஏன், எப்படி சீர்திருத்தப்பட வேண்டும் என்பது பற்றி விளக்க தனக்கு அவகாசம் கொடுத்துள்ளார். இதை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன்; ஏனெனில் எமது இளைஞர்களுக்கு அடிப்படையானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்; அது வெற்றியடைய வேண்டும்." என்றார்.

நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன: 5,000 மாணவர்கள் Rennes மற்றும் Nancy ல் பங்கு பெற்றனர்; Caen, Montepellier ல் 2,500 மாணவர்கள் பங்கு பெற்றனர்; Marseille ல் 4,000 மாணவர்கள் அணிவகுத்தனர். லியோனில் 10,000 மாணவர்கள் பங்கு பெற்ற அணிவகுப்பில் (போலீஸ் தரப்பில் 5,000 என்று கூறப்படுகிறது), கண்ணீர்ப்புகை போலீசாரால் பிரயோகிக்கப்பட்டது, மாணவர்கள் ஆர்ப்பாட்ட முடிவில் கற்களை எறிந்தனர். இரு கார்கள் தலைகீழாக கவிழ்க்கப்பட்டன என்றும் ஒரு பஸ் நிலையத்தில் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன என்றும் தகவல்கள் கூறுகின்றன.

மாணவர்கள் பாரிஸில் பகுதியில் இருக்கும் 105 உயர்நிலைப்பள்ளிகளில் 40க்கும் முன்பு தடைகளை நிறுவினர். Maurice Ravel, Helene Boucher உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் Cours de Vincennes நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடைக்கு உட்படுத்தினர்; கிட்டத்தட்ட 13,000 மாணவர்கள் முக்கிய ஆர்ப்பாட்டத்தை Boulevard St. Michel வழியே, தேசிய கல்வி அமைச்சகத்தை கடந்து நடத்தினர். WSWS நிருபர்கள் கூழு ஒன்று Boulevard St.Michel ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

FSU (Unitary Trade Union Federation) ல் இருந்து ஆசிரியர்கள் குழு ஒன்று வரிசையின் முன்னணியில் இருந்தது; UNL (தேசிய உயர்நிலைப் பள்ளி மாணவர் சங்கம்) உயர்நிலைப் பள்ளி மாணவர் சங்கம், FIDL (உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் சுதந்திர ஜனநாயக சம்மேளனம்) ஆகியவை முக்கிய பிரிவுகளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தன. புதிதாக அமைக்கப்பட்ட முதலாளித்துவ இடது சோசலிஸ்ட் கட்சியின் Parti de Gauche (இடது கட்சி) இன் பதாகைகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற சாலைகள் வழியே உள்ள மின்சார கம்பங்கள், பஸ் நிறுத்தங்கள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்தன.

ஆனால் இதில் குறிப்பிடத்தக்க வகையில் பங்கு பெறாதவை CGT (பொது தொழிலாளர் கூட்டமைப்பு), CDFT (பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு); தொழிற்சங்கங்கள் ஆகும்; இவை பொதுவாக இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும். இது அவர்களுடைய சார்க்கோசியுடனான நெருக்க ஒத்துழைப்பில் உள்ள பரந்த ஏமாற்றம் திகைப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது; மேலும் மக்களுடைய பொதுவான கடுமையான உணர்வையும் காட்டுகிறது. அதேபோல் LCR (Revolutionary Communist League) பிரதிநிதிகளும் வரவில்லை; இதன் ஜனாதிபதி பதவி வேட்பாளர் ஒலிவியே பெசன்ஸநோ தடையற்ற சந்தைக் கொள்கையின் விரோதி என்று அதிக அளவில் செய்தி ஊடகத்தில் பிரபலப்படுத்தப்பட்டுள்ளார்.

Quentin, Guillaume, Yohan ஆகியோருடன் WSWS உரையாடியது. Yohan "ஆசிரியர்கள் வேலை அகற்றப்படல், பாடத்திட்ட சீர்திருத்தம் ஆகியவற்றிற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் ஏற்கனவே நாங்கள் ஒரு வகுப்பறையில் 50 மாணவர்கள் என்று அதிகமாக இருக்கிறோம்..." கிரேக்கத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் "போதுமான துன்பங்களை அனுபவித்துவிட்டோம் என்னும் பொது உணர்விற்கு சான்று ஆகும்: முதலில் அராஜகவாதிகள் தெருக்களுக்கு வந்தனர்; பின்னர் மக்கள் அனைவரும் வந்தனர். பின் இது ஐரோப்பா முழுவதற்கும் பரவலாம்." என கூறினார்.

பொருளாதார நெருக்கடியினால் பாதிப்பு அடைந்துள்ள மற்றும் சார்க்கோசியின் தடையற்ற சந்தைக்கான சீர்திருத்தங்களினால் பாதிப்பு அடைந்துள்ள "அனைத்து துறைகளுக்கும்" ஆர்ப்பாட்டங்கள் பரவவேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

WSWS நிருபர் ஒருவர் சார்க்கோசி தன் திட்டங்கள் சட்டமாக்கப்படுவது தாமதிக்கப்பட வேண்டும், ஆர்ப்பாட்டங்கள் அடங்கிய பின்னர் செய்யலாம் என்று விரும்புவதாகவும், அதன் பொருள் ஒரு வெற்றிகரமான சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு நீண்டகால அரசியல் முன்னோக்கு மற்றும் அரசாங்கத்தை வீழ்த்தும் போராட்டமும் தேவைப்படும் எனவும் குறிப்பிட்டார். Yohan அதற்கு "அரசாங்கம் நாங்கள் கூறுவதை முற்றிலும் கேட்கவில்லை என்பது உண்மையே; எங்களை மிகவும் இழிவுடன்தான் அது பார்க்கிறது." என பதிலளித்தார்.

Lycée Maurice Ravel இல் இருந்து வந்துள்ள Valoy, Darmaelle இருவரும் "டார்க்கோசிக்கு எதிர்ப்பு. ஏனெனில் இச்சட்டம் சற்று பின்னடைவை பெற்றாலும், இன்னும் நடைமுறைக்கு வந்துவிடும்." Darmaelle கூறினார்: "பல துறைகளினதும் முடிவு ஒன்றில் இருந்து மற்றொன்று கடினம் என்றவிதத்தில்தான் உள்ளது. இது மிகக் கடினமானது. கற்பிக்கப்படும் நேரத்தை குறைப்பது என்பது --எந்தவித நற்கருத்து இது? வரலாறு, புவியியல் போன்ற அனைத்து பாடத்திட்டங்களும் முக்கியமானவைதான்."

Valoy "இன்னும் கூடுதலான ஆர்ப்பாட்டங்கள் தேவை; உயர்நிலைப்பள்ளிகள் செயல்படக்கூடாது. பள்ளிகளை தடைசெய்ய ஒரு தேசிய இயக்கம் தேவை." என கூறினார்.

Virginie "சீர்திருத்தங்களை ஒத்திப்போடுவது போதாது--அது உடனடியாக திரும்பப் பெறவேண்டும். அவர்கள் இதைச் செய்யலாம். [எப்படி பள்ளிச் செலவைக் குறைப்பது] டார்க்கோசின் வேலை இல்லை. ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் பணக் கண்ணோட்டத்தில் காண்கின்றனர்." என கூறினார்.

இப்பெண்மணி மேலும் கூறியதாவது: "இந்த நெருக்கடிக்கு உண்மையாக ஏதாவது செய்யப்பட வேண்டும். உயர்நிலைப் பள்ளி பயின்று பட்ட சான்றிதழ் பெற்ற பின் வேலைக்காக ஒருவர் ஆறு ஆண்டுகள் காத்திருக்கக் கூடாது. மாற்றத்திற்கு உண்மையான தேவை இருக்கிறது; நடவடிக்கை வேண்டும். விஷயங்கள் வெளிவந்தபின், இவை மாற்றப்பட்டுவிட்டால், அது நல்லது. நாங்கள் ஒன்றும் எதையும் உடைக்க இங்கு கூடவில்லை; நடப்பது பற்றி எங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை காட்டத்தான் விரும்புகிறோம். அதிகாரத்தில் உள்ளவர்கள் எங்கள் கருத்துக்களையும் கேட்க வேண்டும்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved