WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
Greece: Police crack down as government and opposition
seek to isolate mass protests
கிரேக்கம்: பரந்த மக்கள் எதிர்ப்பை தனிமைப்படுத்த அரசாங்கத்தினதும் எதிர்க்கட்சியின்
குறிக்கோளிற்காக போலீஸ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கிறது
By Stefan Steinberg
16 December 2008
Use this
version to print | Send
this link by email | Email
the author
பல்லாயிரக்கணக்கான கிரேக்க மாணவர்கள், பள்ளி மாணவர்கள், புலம்பெயர்ந்தவர்கள்,
வேலையில் உள்ளவர்கள் உட்பட மற்றும் சாதாரண தொழிலாளிகள் என்று கிரேக்க தலைநகர் ஏதேன்ஸிலும் மற்ற
முக்கிய நகரங்களிலும் பல முறை திரும்பத் திரும்ப ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றவர்களை "தீவிரவாதிகள்", "பயங்கரவாதிகள்"
என்று கிரேக்க நாட்டுச் செய்தி ஊடகத்தின் சில பிரிவுகளும் மற்றும் முக்கிய அரசியல்வாதிகளும் முத்திரையிடுவதை குறியாகக்கொண்டுள்ளனர்.
முதலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு 15 வயதுச் சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததற்கு
காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர். ஆனால் பெருகிய
முறையில் ஆர்ப்பாட்டங்கள் கிரேக்க அரசாங்கம் மற்றும் முழு அரசியல் நடைமுறைக்கு எதிரான எதிர்ப்புக்கள் என்ற
வடிவமைப்பை கொண்டுவிட்டன. எதிர்ப்பாளர்களின் பொதுக் கோரிக்கைகளின் மிக அதிகமாக இருப்பது பிரதம மந்திரி
கோஸ்டாஸ் கராமன்லிஸ் (புதிய ஜனநாயக வாதிகள்,
ND) தலைமையில் இருக்கும் கன்சர்வேடிவ் கிரேக்க அரசாங்கம்
இராஜிநாமா செய்ய வேண்டும் என்பதாகும்.
எதிர்ப்பாளர்களை அரக்கத்தனமாக சித்திரிக்கும் ஒருங்கிணைந்த பிரச்சார முயற்சியுடன்,
முக்கிய செய்தித்தாள்கள் மக்கள் இயக்கத்தை அடக்குவதற்கு உறுதியான போலீஸ் நடவடிக்கை வேண்டும் என்றும் அழைப்பு
விடுத்துள்ளன. கடந்த வாரம் போலீஸ் தந்திரோபாய முறைகளில் மாற்றம் என்பதற்கான தெளிவான அடையாளங்கள்
இருந்தன; இதையொட்டி முக்கிய அரசாங்க வட்டங்களில் எதிர்ப்பு இயக்கத்தை தனிமைப்படுத்தி, மிரட்டி, அடக்க
வேண்டும் என்ற முடிவிற்கு ஒரு மாற்றம் வந்துள்ளது.
ஞாயிறன்று போலீசார் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் நகரத்தின் அறியப்படா
வீரரின் கல்லறைக்கு வெளியேயும் சின்ட்கமா சதுக்கத்தில் ஒரு அமைதியான முறையில் மெழுகுவர்த்தி விழுப்பு நிலை
நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
கிட்டத்தட்ட 600 பேர் என்று இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு
முன்னேயும் பின்னும் பக்கவாட்டிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல பஸ்களில் கொண்டுவரப்பட்ட போலீசாரை
எதிர்கொண்டனர்.
கண்ணால் பார்த்த சாட்சி ஒருவர்
BBC இடம்
கூறினார்: "பெரும்பாலான எதிர்ப்பாளர்கள் பக்கத் தெரு ஒன்றை கடந்த பின் கலகப்பிரிவு போலீசார் அவர்கள்
மீது பாய்ந்து தெருவின் மூலையில் இருந்து ஒரு இருண்ட கடைக்கு முன்னே நிற்குமாறு 15 இளம் ஆடவர், பெண்டிரை
கட்டாயப்படுத்தினர்.
"எதிர்ப்பாளர்கள் தங்களை கைகளை உயர்த்தி தாங்கள் சண்டையிட விரும்பவில்லை
என்பதை காட்டியும், போலீசார் அவர்களை தடியால் அடிக்க தொடங்கி, தீவிர வன்முறை அச்சுறுத்தலையும்
கொடுத்தனர். பெண்கள் ஆண்களுடன் சேர்த்து கைவிலங்கிடப்பட்டனர்; ஆடவர்கள் முழுமையான சோதனைக்கு
உட்பட்டனர்."
கிரேக்க மொழி பேசத் தெரிந்த ஒரு பிரிட்டிஷ் வணிகர் இதன் பின்னர் கலகப்
போலீஸ் பிரிவினர் நிரபராதியான பார்வையாளர்கள்மீது திரும்பினர் என்று சாட்சியாக அவர் கூறியதாவது: "ஒரு
கலகப் பிரிவை சேர்ந்த போலீஸ் தன்னை பின் புறத்தில் இருந்து தூற்றிக் கொண்டு ஒரு நபரை அவருடைய
உடன்பருமனை பற்றி கூறிக்கொண்டே தாக்கினார். அந்த மனிதன் திரும்பியபோது, போலீஸ் அந்த இளைஞரை
கைத்தடியால் அடித்து, மண்டையிலும், முகத்தின் பக்கவாட்டிலும் அடித்தார்."
தாங்கள் பிடித்துவைத்திருந்தவர்களிடம், "உங்களை நாம் இப்போது
பிடித்துவிட்டோம். நீங்கள் இப்போது உங்கள் பல்கலைக்கழகங்களுக்கு வெளியே இருக்கிறீர்கள்...உங்களைக்
கொல்லப் போகிறோம்." என்று போலீசார் கூறியதைக் கேட்டதாக அந்த சாட்சி சொன்னார்.
BBC அறிக்கைக்கு ஆதரவாக உலக
சோசலிச வலைத் தளத்திற்கு நேரில் கண்ட ஒரு கிரேக்க மாணவர் அனுப்பிய அறிக்கை உள்ளது.
பரந்த மக்களின் எதிர்ப்புக்கு எதிராக கிரேக்கத்தில் இருக்கும் அரசியல் நிறுவன
அதிகார குழுவினரின் நிலை நெருக்கமான போதே போலீசாரின் தாக்குதல் அதிகரிப்பு தன்மையின் நேரம்
வந்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான PASOK
யின் தலைவர் Georgiou Papandreou
அண்மையில் புதிய தேர்தல்களுக்கான அழைப்பை விடுத்துள்ளார். ஆனால்
பாராளுமன்றத்தில் அவருடைய கட்சி அரசாங்கத்திற்கு நெருக்கமான ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளது என்பதுடன்
தற்போதைய கிரேக்க ஜனாதிபதி இந்த அமைப்பின் முன்னாள் நிறுவன உறுப்பினரும் ஆவார்.
1974ம் ஆண்டு இராணுவ சர்வாதிகாரம் முடிவடைந்ததில் இருந்து
PASOK கிரேக்க
அரசியலில் மேலாதிக்கம் செலுத்தியது. 1981ல் இருந்து 1989 வரை பின்னர் 1993, 2004 ஆண்டுகளில் அது
அரசாங்கத்தை அமைத்து நாட்டின் தொழிற்சங்கங்கள்மீது சக்திவாய்ந்த செல்வாக்கை கொண்டிருந்தது. 1980
களில் PASOK
ஒரு தேசியவாத பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை நிலைநிறுத்தி அமெரிக்க-எதிர்ப்பு மற்றும்
ஐரோப்பிய எதிர்ப்பு அலங்கார சொற்களையும் பயன்படுத்தி பல சமூக சீர்திருத்தங்களையும் செயற்படுத்தியது.
ஆனால், 1990 களில் மற்றய ஐரோப்பிய சமூக ஜனநாயக கட்சிகளை போலவே
இது பெருகிய முறையில் புதிய தாராள பொருளாதார முன்மாதிரியை ஏற்று ஐரோப்பிய ஒன்றியத்தின்
ஆணையின்பேரில் கடுமையான முறையில் பொதுநலச் செலவினங்களை குறைத்தவிதத்தில் சட்டங்களை இயற்றியது.
இது புதிய தாராளக் கொள்கைகளை செயல்படுத்திய விதத்தில் தன் ஆதரவை
PASOK
இழந்து 2000ம் ஆண்டில்தான் ND
க்கு எதிராக தேசியத் தேர்தல்களில் ஒரு குறுகிய பெரும்பான்மையில் வெற்றி பெற முடிந்தது.
2004 தேர்தல்களுக்கு சற்றே முன்னர் கட்சியின் தலைவராக
Georgiou Papandreou
பொறுப்பேற்றார்; ஆனால் மக்களை திருப்தி செய்யும் முயற்சியைக் கொண்டிருந்த பிரச்சாரத்தை செய்தும் சமூகச்
சீர்திருத்தங்கள் கொடுப்பதாக உறுதிமொழி கொடுத்தும் மக்கள் ஆதரவைப் பெறுவதில் தோல்வி அடைந்தார்.
Georgiou
வின் தந்தை, பாட்டனார் இருவரும் முன்பு பிரதம மந்திரிகளாக இருந்ததுடன் கட்சி ஒரு குடும்ப வணிகம் போல்
நடத்தப்பட்டது.
கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் ஊழல், தெரிந்தவர்களுக்கு உயர்வளித்தல் மற்றும்
காட்டிக் கொடுப்புக்களை அடுத்து கன்சர்வேடிவ் ND
அதிகாரத்தை மீண்டும் பெற முடிந்தது. PASOK
இழிவுற்ற நிலையில் கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE)
போன்ற மற்ற கட்சிகள் வெற்றிடத்தை நிரப்ப முயன்றன.
கிரேக்கத்தில் KKE
மிகப் பழைமையான கட்சி என்பதுடன் 1980 கள் முடியும் வரை சோவியத் ஒற்றியம் சரிந்து தொடர்ச்சியான
பிளவுகள் ஏற்படும் வரை, மாஸ்கோவில் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு தீவிர ஆதரவைக் கொடுத்திருந்த
பின்னணியையும் பெற்றிருந்தது. அரசியல் அளவில் இன்று எஞ்சியிருக்கும் பழைய தீவிர ஸ்ராலின்
KKE கட்சித்
தலைவர்கள் முன்னைக்காட்டிலும் கூடுதலான முறையில்
PASOK க்கு அரசியில் ஆதரவைத்தான் கொடுக்கின்றனர்.
ஒரு வாரம் முன்பு தொடங்கிய மக்கள் ஆர்ப்பாட்டங்களில்
KKE பங்கு பெற
மறுத்து, எதிர்ப்புக்களை தீவிரவாதிகள் மற்றும் தூண்டிவிடுபவர்களின் செயல் என்றும் கண்டித்தது.
ANA-MPA க்கு
கொடுத்த பேட்டியொன்றில், KKH
உடைய தலைவர் Aleka Papariga
ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கியமானவர்களை மிருகத்தனமாக தாக்கிப் பேசி அரசாங்கத்தின் சார்பாக
நடப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
" மோலோடோவ் கலப்பு பானங்கள்
[கையெறி குண்டுகள்] மற்றும் முகமூடியணிந்த தனிநபர்கள் கொள்ளையடித்தலும், அரச இரகசியப் பிரிவுகளின் மையம்
மற்றும் வெளிநாட்டு மையங்களால் இயக்கப்படுபவை என்பதைத்தான் காட்டுகின்றன; இவை மாணவர்கள் மற்றும்
பொதுவாக மக்களுடைய பெரும் சீற்றத்துடன் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை."
இதன் பின் Papariga,
SYRIZA எனப்படும் தீவிர இடது பிற்போக்கு கூட்டணியையும் இது
கடுமையாக விமர்சித்தது; கூட்டணி வேண்டுமென்றேயோ அல்லது தெரியாத வகையிலோ கிரேக்க நாட்டிற்காக செயல்படுகிறது
என்ற உட்குறிப்பை கூறியுள்ளது. (SYRIZA
என்பது முற்போக்குத்தனம் மற்றும் சோசலிஸ்ட் குழுக்களின் கலவை ஆகும்; இதில் 2004ல் நிறுவப்பட்டிருந்த
Synaspismos
அமைப்புக்களும் அடங்கியிருந்தன. இது ஐரோப்பிய இடதுடன் இணைக்கப்பட்டுள்ளது,
ஜேர்மனிய இடது கட்சி போன்ற அமைப்புக்களுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கிறது.)
ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான விரோதப் போக்குடைய நிலைப்பாட்டிற்காக
KKE
அரசாங்கத்தின் புகழ்ச்சியை பெற்றுள்ளது. வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் அதன் "பொறுப்பான" அணுகுமுறைக்காக
KKE ஐ
பாராட்டியுள்ளார்.
அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியின் பிரச்சாரம் அதிக அளவில் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் பெரும்பாலான மக்கள் கலங்கள் ஒரு சமூக எழுச்சியே அன்றி போலீஸ் துப்பாக்கிச்
சூட்டிற்கான வெறும் விளைவு அல்ல என்று நினைப்பதைத்தான் தெளிவிபடுத்தியுள்ளனர்.
BBC தகவலின்படி, கத்திமெரினி
ஏட்டினால் விசாரிக்கப்பட்டவர்களில் 60 சதவிகிதத்தினர் இடையூறுகள் ஒரு சிறிய தீவிர அராஜகவாத குழுவினால்
நடத்தப்பட்ட தொடர்ச்சியான ஒருங்கிணைந்த தாக்குதல்கள் என்ற கருத்தை நிராகரித்துள்ளனர். இடதுசாரி
Ethnos
ஏடு நடத்திய மற்றொரு கருத்துக் கணிப்பின்படி, 83 சதவிகித கிரேக்கர்கள் வன்முறையை அரசாங்கம் எதிர்கொண்ட
விதம் பற்றி மகிழ்ச்சி அடையவில்லை என்று உறுதிபடுத்துகிறது. கத்திமெரினி இதை ஏற்றுக்கொள்ளாத சதவிகிதம் 68
என்று கூறியுள்ளது. |