WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
European Union in crisis
நெருக்கடியில் ஐரோப்பிய ஒன்றியம்
By Ulrich Rippert
11 December 2008
Use this version
to print | Send
this link by email | Email
the author
இன்று ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த நெருக்கடி நிலையில்
இருக்கையில் ஐரோப்பிய அரசாங்கங்களின் தலைவர்களுடைய கூட்டம் பிரஸ்ஸல்ஸில் நடைபெறுகிறது.
பேர்லின், பாரிஸ் மற்றும் லண்டனுக்கு இடையே பெருகிய அழுத்தங்களின் மையப் பகுதியாக
இருப்பது சர்வதேச நிதிய நெருக்கடி மற்றும் உலக பொருளாதாரப் பின்னடைவு இவற்றை எப்படி எதிர்கொள்ளுவது
என்பது பற்றிய வினா ஆகும். ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் ஜோஸ் மானுவல் பராசோவுடன் பிரெஞ்சு
மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்கள் மிகப் பெரிய முறையில் பொருளாதார தூண்டுதல் திட்டத்திற்கு வலியுறுத்தி வருகையில்,
ஜேர்மனிய அரசாங்கம் அத்தகைய திட்டத்திற்கு மிக அதிக நிதி கொடுப்பதைத் தான் எதிர்ப்பதாக தெளிவாகக்
கூறிவிட்டது.
ஜேர்மனிய நிதி மந்திரி
Peer Steinbrück தான் அத்தகைய அணுகுமுறையை, "அரசாங்கப்
பணத்தின்மூலம் பின்னடைவிலிருந்து தப்புவிக்க நடத்தப்படுவதை" நிராகரிப்பதாக கூறியுள்ளார். இந்த வாரத்
துவக்கத்தில் லண்டனில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ
சார்க்கோசி மற்றும் பாரோசா ஆகியோர் ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெலை அழைக்காமல், ஜேர்மனிய
அரசாங்கத்திற்கு அழுத்தத்தை அதிகம் கொடுக்கும் முயற்சியில் ஒரு சந்திப்பை நிகழ்த்தினர்.
ஜேர்மனிக்கும் பிரான்ஸுக்கும் இடையே பெருகிவரும் பூசல் ஐரோப்பிய ஒன்றியத்தின்
உறுதி என்ற நிலைப்பாட்டிக்கு குறிப்பிடத்தக்க வகையில் தீக்குறியாகும். இரண்டாம் உலகப் போரை தொடர்ந்த
தசாப்தத்தில் முதலாளித்துவ அஸ்திவாரங்களில் ஐரோப்பிய ஒருங்கிணைப்பிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதிலிருந்தே,
ஜேர்மனிய-பிரெஞ்சு கூட்டானது செயற்திட்டத்தின் அச்சாணியாக இருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடிக்கு பின்புலத்தில் சர்வதேசப் பொருளாதார
நெருக்கடியினால் ஐரோப்பாவிற்கு ஏற்படக்கூடிய பேரழிவு தரக்கூடிய விளைவுகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின்
பொருளாதார நிலை பற்றிய முன்னாய்வு ஒவ்வொரு மாதமும் மோசமாகி வருகிறது. 10 ஐரோப்பிய ஆய்வு
நிலையங்கள் தெரிவித்துள்ள கூட்டுக் கணிப்பு ஒன்று கண்டம் முழுவதும் 2009ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் 0.4 சதவிகிதக் குறைவு இருக்கும் என்று கூறியுள்ளது; இதைத்தவிர வேலையின்மையில் பெரும் அதிகரிப்பு
இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதைவிட மோசமான நிலைமை ஏற்படக்கூடும் என்பதையும் ஆய்வாளர்கள்
மறுக்கவில்லை.
பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றியநாடுகள் ஏற்கனவே மந்தநிலையில் உள்ளன.
ஜேர்மனியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2008 முதல் காலாண்டு காலத்தில் 5.7 சதவிகிதம் உயர்ந்தது,
பின்னர் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் 1.7 சதவிகிதம் குறைந்தது, அதன் பின் மூன்றாம் காலாண்டுக் காலத்தில்
மற்றும் ஒரு 2.1 சதவிகிதம் குறைந்துவிட்டது. OECD
எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு என்பது அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேலையின்மை
மிக அதிகமாக வளர்ச்சி அடையும் என்று கூறியுள்ளது.
பிரஸ்ஸல்ஸில் உள்ள கருத்து வேறுபாடுகள் ஒரு பொருளாதார தூண்டுதல் திட்டத்தின்
வடிவமைப்பு, பரப்பு இவற்றுடன் நின்றுவிடவில்லை. ஐரோப்பிய ஒன்றியத் திட்டம் முழுவதுமே நெருக்கடியின்
அழுத்தத்தினால் முறிந்துவிடுமோ என்ற அச்சத்தைக் கண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நாணயம் கூட
பெருகிய முறையில் அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளது.
ஜனவரி முதல் யூரோ அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 13
சதவிகிதம் மதிப்பை இழந்துள்ளது. இந்த ஆண்டு வசந்த காலத்தில் அமெரிக்க டாலருடன் 1.60 என்றிருந்த மிக
உயர்ந்த மட்டத்தோடு ஒப்பிடுகையில், யூரோ 20 சதவிகிதத்திற்கும் மேலாக மதிப்பை இழந்துள்ளது; அதன்
பரிவர்த்தனை விகிதம் ஒரு கட்டத்தில் அமெரிக்க $1.25 என்று குறைந்திருந்தது.
இந்தச் சூழ்யிலையில் அனைத்து தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சினைகளும்
ஐரோப்பாவில் மீண்டும் வெளிப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு இன்னும் கூடுதலான
ஒத்துழைப்பு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கையில், ஐரோப்பாவின் தர்ம
சங்கடம் அத்தகைய ஒத்துழைப்பு பெருகிய முறையில் கடினமாகியுள்ளது, ஒருக்கால் இயலாமற் போகக்கூடும் என்று
இருக்கிறது. அமெரிக்காவின் வரலாற்றுத் தன்மை உடைய சரிவு --இப்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும்
அந்நாட்டின் பெருங்கடன் ஆகியவற்றின் மூலம் வெளியாகியுள்ளது-- அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே
உள்ள பூசல்களை தீவிரப்படுத்தியுள்ளது என்பதுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயும் பதட்டங்களை
அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய ஒருங்கிணைப்பு என்ற திட்டம் 50 ஆண்டுகளுக்கு முன்பு ரோம் ஒப்பந்தம்
-Rome Treaty-
என்பதில் தொடங்கி, மேற்கத்திய கூட்டினில் அமெரிக்க மேலாதிக்கத்துடன்
நெருக்கமாக பிணைந்திருந்தது. அந்த நேரத்தில் அமெரிக்கா மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நெருக்கமான
பொருளாதார, அரசியல் ஒத்துழைப்பிற்கு ஆதரவு கொடுத்தது. ஒரு ஒருங்கிணைந்த ஐரோப்பியச் சந்தை பொருட்கள்,
பணிகள், தொழிலாளர்கள் மற்றும் மூலதனம் ஆகியவற்றிற்கு நலன்களைக் கொடுத்தது. அமெரிக்க நிறுவனங்கள்
கண்டம் நெடுகிலும் முதலீடு செய்து தங்கள் பொருட்களை விற்பனை செய்தன. அதே நேரத்தில் ஒரு ஒருங்கிணைந்த
மேற்கு ஐரோப்பா சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அரசியல், இராணுவத் தடுப்பாகவும் செயல்பட்டது.
சோவியத் ஒன்றியத்தின் சரிவு மற்றும் வார்சோ ஒப்பந்தத்தின் சரிவு நிலைமையை
முற்றிலும் மாற்றியது. ஐரோப்பிய சக்திகள், குறிப்பாக ஜேர்மனி, அமெரிக்காவின் அரசியல் பொருளாதார
ஆதிக்கத்தைக் கடப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாக கண்டன; இதையொட்டி அமெரிக்காவின் போட்டி நாடுகளாக
அல்லது சமமான நாடுகளாக வெளிவரவும் விரும்பின.
ஐரோப்பிய ஒன்றியம் 1992ல் நிறுவப்பட்டது, ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு
ஐரோப்பாவிலும் விரிவாக்கமானது மற்றும் பொது நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது அனைத்தும் இந்த நோக்கத்தை
அடைவதற்குத்தான் மேற்கொள்ளப்பட்டன. டாலருக்கு ஒரு போட்டி நாணயம், ஒரு உலகமாற்றீட்டு நாணயமாக
வரும் என்றுதான் யூரோ திட்டமிடப்பட்டிருந்தது. 2000ம் ஆண்டில் லிஸ்பனில் நடைபெற்ற கூட்டத்தில் ஐரோப்பிய
ஒன்றியம், "2010க்குள் உலகில் மிகப் போட்டித் தன்மை நிறைந்த, இயக்க அறிவார்ந்த தளத்தைக் கொண்ட
சந்தைப் பகுதியாக வரவேண்டும்" என்பதுதான் நமது இலக்கு என்ற கருத்தை முன்வைத்தது.
தன்னுடைய பங்கிற்கு அமெரிக்கா ஐரோப்பாவில் தான் பெற்றிருந்த வலிமையான
நிலையை பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பூசல்களை ஊக்குவித்தது. அப்பொழுது அமெரிக்கப்
பாதுகாப்பு மந்திரியாக இருந்த டோனால்ட் ரம்ஸ்பெல்ட் இக்கண்டத்தை "பழைய", "புதிய" ஐரோப்பா என்று
பிரித்துக் கூற முற்பட்டதில் இது நன்கு தெளிவாயிற்று.
அதே நேரத்தில் சமூக மற்றும் தேசியப் பூசல்கள் விரைவில் ஐரோப்பாவில்
தீவிரமாயின; அதிலும் சமூகச் சரிவு கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் விரைவாயிற்று.
இந்த விதத்தில் முக்கியமாக இருந்த காரணி ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு
ஐரோப்பாவில் விரிவாக்கம் அடைந்ததுதான். ஒரு குறுகிய காலத்தில் ஐரோப்பிய நிறுவனங்கள் மிக அதிகமான
குறைவூதிய, அதிக பயிற்சி பெற்றிருந்த தொழிலாளர் தொகுப்பை அடையும் வாய்ப்பை எல்லைக்குப் புறத்தே
கண்டன; அது ஐரோப்பாவின் மற்ற பகுதிகளில் ஊதியக் குறைப்பு, வாழ்க்கைத் தரக்குறைப்பு ஆகியவற்றிற்கு
முறையாகப் பயன்படுத்தப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே ஊதிய வேறுபாடுகள் மகத்தான முறையில் உள்ளன.
ஸ்காண்டிநேவியா, ஜேர்மனி, கிரேட் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஒரு மணி நேர வேலை
என்பதற்கு 25, 30 யூரோக்கள் செலவாகும்; போலந்தில் ஐந்து யூரோக்கள்தான். பால்டிக் நாடுகள்,
ஸ்லோவாக்கியா ஆகியவற்றில் 4 யூரோக்கள்தான்; இந்த ஆண்டுத் துவக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில்
சேர்ந்துள்ள புல்கேரியாவிலோ 1.40 யூரோதான்.
இந்த ஊதிய வேறுபாடுகள் ஒரு சிறிய புவியியல் பகுதிக்குள் உள்ளன. ஜேர்மனியத்
தலைநகருக்கும் போலந்தின் எல்லைக்கும் இடையே 100 கிலோ மீட்டர் தூரம்தான் உள்ளது; லாட்விய தலைநகர்
ரீகா 1000 கி.மீ. தொலைவிற்குள்தான் உள்ளது. இந்த 1,000 கி.மீ.க்குள் கிட்டத்தட்ட 90 சதவிகித ஊதிய
வேறுபாடு உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொது நாணயத்தை இந்த சூழ்நிலையில் தக்க
வைத்துக்கொள்ள ஜேர்மனிய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றிய உறுதிப்பாடு உடன்படிக்கையைக் காக்க
முற்பட்டுள்ளது; இது 1990 களில் இருந்து ஜேர்மனியின் ஐரோப்பா பற்றிய மூலோபாயத்தின் முதுகெலும்பாக
உள்ளது.
அப்பொழுது சான்ஸ்லர் ஹெல்முட் கோஹ்ல் மற்றும் அவருடைய நிதி மந்திரி தியோ
வைகல் இருவரும் யூரோ அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் கடுமையான பட்ஜெட்
கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும், நிதிய நிபந்தனைகளை கடினமாக வைத்திருக்க வேண்டும் என்று
வலியுறுத்தினர்; அதே நேரத்தில் ஐரோப்பிய மத்திய வங்கி
EZB, அரசியல்
கட்டுப்பாடற்று சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. புதிய ஆண்டுக் கடன் ஐரோப்பிய
நாடுகளால் மேற்கொள்ளப்படுவது அதிக பட்சம் மொத்தம் 3 சதவிகிதத்திற்கும் அதிகமான உள்நாட்டு மொத்த
உற்பத்தியில் இருக்கக் கூடாது என்றும் மொத்தக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவிகிதத்திற்கும்
மேலாகக் கூடாது என்றும் வரையறை செய்யப்பட்டது.
இந்த உறுதிப்பாட்டு உடன்படிக்கை யூரோவின் உறுதியை உத்தரவாதம் செய்யவும்
டாலருடன் அது போட்டியிடவும் நோக்கம் கொண்டது. இதையொட்டி ஐரோப்பியப் பொருளாதாரத்தில் அது
ஜேர்மனியப் பொருளாதாரத்தின் மேலாதிக்கத்தை அதிகப்படுத்தும்; ஏனெனில் ஜேர்மனியின் சக்திவாய்ந்த ஏற்றுமதித்
தொழில்களின் தளம் ஒரு உறுதியான நாணயத்தின்மூலம் இலாபம் அடைந்தது.
தற்போதைய பொருளாதார நடவடிக்கை, உலக பொருளாதாரப் பின்னடைவு
இவற்றின் பின்னணியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிய அமைப்பு முறை உடைக்கப்படுகிறது. ஒவ்வொரு தனி
ஐரோப்பிய நாட்டு அரசாங்கமும் தன் தொழில், பொருளாதாரத்தை பெருக்கத்தான் முயலுகிறது. ஐரோப்பிய
அரசாங்கங்களுக்கு இடையேயான மோதல்கள் பல பிரச்சினைகளில் பெருகி வருகின்றன. பொது நாணய முறை
இத்தகைய பூசல்களின் அழுத்தத்தில் சரியக்கூடும்.
1914, 1945 ஆண்டுகளுக்கு இடையே இருமுறை தீர்க்கப்படாத பிரச்சினைகள்
ஐரோப்பாவை ஒரு பெரும் சிதைவுக் குவியலாகவும் பின்னர் புதிய தீவிரத்துடன் மறு எழுச்சி செய்த தன்மையிலும்
மாற்றின. ஐரோப்பாவின்மீது யார் ஆதிக்கம் செலுத்துவது? ஒன்றுபட்ட ஜேர்மனியை கட்டுப்பாட்டிற்குள் எப்படி
வைப்பது? பிரான்ஸிற்கும் ஜேர்மனிக்கும் இடைய "மரபார்ந்த வகையில் இருக்கும் விரோதப் போக்கு" மீண்டும்
வெடிக்குமா? சிறுநாடுகள் பெரிய ஐரோப்பிய சக்திகளுக்கு எதிராக தங்கள் நலன்களை எப்படிக் காப்பது?
ஜேர்மனிக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நசுங்காமல் போலந்து தன்னை எப்படிக் காத்துக் கொள்ள முடியும்?
ஐரோப்பிய அரசாங்கங்கள் மீண்டும் ஒன்றை ஒன்று பெருகிய அவநம்பிக்கையுடன்
நோக்குகின்றன. தற்பொழுது இருக்கும் ஒரே ஒத்துழைப்பு சமூக நிலைமை மற்றும் உரிமைகள் மீது தொழிலாள
வர்க்கத்தை தாக்குதல் என்பதில்தான் உள்ளது; இதைத்தவிர கூடுதல் சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியக் குழு கட்டுப்பாடுகளை தளர்த்துதல், "தடையற்ற சந்தையின்"
தாராளமயமாக்குல் மற்றும் ஊழியர்களின் உரிமைகளை அழித்தல் ஆகியவற்றுடன் முற்றிலும் இயைந்து கொண்டிருக்கிறது.
சமூக, வட்டார வேறுபாடுகளுடன் சமரசம் காண்பதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியம் அவற்றை தீவிரப் படுத்திக்கொண்டு
வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரத்துவ பெரும் சக்தி, கிட்டத்தட்ட 40,000
ஊழியர்களை கொண்டுள்ள தொகுப்பு பிரஸ்ஸல்ஸில் மையத்தைக் கொண்டுள்ளது; இது எந்தவித உண்மையான ஜனநாயக
கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டது இல்லை மற்றும் மிகப் பெரிய வணிக செல்வாக்கை நாடும் இதே போன்ற
தொகுப்பிற்கு கட்டுப்பட்டு செயல்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரத்துவம் பெருகிய முறையில்
ஐரோப்பிய மூலதனத்தின் சக்தி வாய்ந்த பகுதிகளின் நேரடிக் கருவியாக வெளிப்பட்டு வருகிறது.
தற்போதைய ஐரோப்பாவின் சங்கடத்தை லியோன் ட்ரொட்ஸ்கியைவிட எவரும்
சிறப்பாக சுருக்கிக் கூறிவிடவில்லை. 1915ம் ஆண்டு அவர் எழுதிய "சமாதானத் திட்டம்" என்ற கட்டுரையில்
குறிப்பிட்டார்: "மேலிருந்து வரும் பாதி முடிந்த, ஆனால் தொடர்ந்த ஐரோப்பிய பொருளாதார ஒற்றுமை
என்பது, அதுவும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு இடையேயான உடன்பாட்டின்மூலம் என்பது ஒரு கலப்பற்ற
கற்பனைதான். இங்கு அரைகுறை சமரசங்கள், அரைகுறை நடவடிக்கைகள் என்பவற்றைத் தாண்டி எதுவும்
நடக்காது. எனவே உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் இருவருக்கும் மகத்தான ஆதாயத்தை கொடுக்கும்
ஐரோப்பிய பொருளாதார ஐக்கியம் என்பது, மற்றும் பொதுவான பண்பாட்டு வளர்ச்சி என்பது, ஏகாதிபத்திய
காப்புவாதம், அதன் கருவியான இராணுவவாதம் இவற்றிற்கு எதிரான அதன் போராட்டத்தில் ஐரோப்பிய
பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர பணியாகிறது." |