World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Lessons of the Chicago factory occupation

சிக்காகோ ஆலை ஆக்கிரமிப்பின் படிப்பினைகள்

By Joe Kishore
12 December 2008

Back to screen version

Republic Windows and Doors நிறுவனத்தின் 250 தொழிலாளர்கள் தங்கள் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டதை அடுத்து இல்லிநோய்ஸ் சிக்காகோவில் உள்ள தங்கள் ஆலையில் ஐந்து நாள் ஆக்கிரமிப்பை புதனன்று முடித்துக் கொண்டனர்.

Republic நிறுவனத் தொழிலாளர்கள் எடுத்த நடவடிக்கை ஒரு மகத்தான முன்னேற்றப்பாதை ஆகும்; பொருளாதார நடவடிக்கை ஏற்பட்டுள்ளதை அடுத்து அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பிரிவுடைய முதல் சுயாதீன நடவடிக்கை ஆகும். தைரியத்துடனும் உறுதியுடனும் தொழிலாளர்கள் செயல்பட்டு, சட்டபூர்வமாக தாங்கள் பெற வேண்டிய நலன்களைப் பெறும் வரையில் ஆலையில் இருந்து நகர மாட்டோம் என்று வலியுறுத்திவிட்டனர்.

அரசாங்க கொள்கை டிரில்லியன் கணக்கான டாலர்களை வங்கிகளுக்கும் நிதிய அமைப்புக்களுக்கும் அள்ளிக் கொடுக்கும் அதே நேரத்தில் சாதாரண தொழிலாளர்கள் நூறாயிரக்கணக்கில் வேலைகள் இழக்கும் நிலையை ஒட்டி எழுந்த ஆழ்ந்த சீற்றம் மற்றும் கட்டாயமாக வேலைநீக்கத்திற்கு எதிர்ப்பு என்ற விதத்தில் இருந்த இந்த நடவடிக்கை நாடு முழுவதும் இத்தொழிலாளர்களின் போராட்டம் ஒரு அடையாளமாக மாறியது--உண்மையில் உலகெங்கிலும் எனக்கூட கூறலாம். இவர்களுடைய நடவடிக்கை நாடு முழுவதும் பரந்த ஆதரவையும் பெற்றிருந்தது.

புதன்கிழமை இரவு தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்று விட்டதாக அறிவித்து தொழிலாளர்கள் ஆலையில் இருந்து வெளியேறினர். ஒவ்வொரு தொழிலாளியும் $6,000 பெறுவர்; இதில் எட்டு வார பணிநீக்க ஊதியம், சேர்ந்துள்ள விடுமுறைக்கால ஊதியம் மற்றும் இரு மாத சுகாதாரப் பாதுகாப்பு நிதி ஆகியவை அடங்கியுள்ளன.

தொழிலாளர்களுடைய நிலைப்பாட்டில் இருந்து இந்த உடனடிக் கோரிக்கைகள் வெற்றியை அடைந்தன என்றாலும், இது ஒரு கசப்பும் இனிப்பும் கலந்த ஒன்றாகும். வேறு கெளரவமான வேலை கிடைக்காத நிலையில் Republic நிறுவனத்தின் தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழக்கத்தான் செய்கின்றனர். இன்னும் இரு மாதங்களுக்குப் பிறகு அவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பும் கிடையாது. அமெரிக்காவும் உலகப் பொருளாதாரமும் பெரு மந்த நிலைக்குப் பின் மோசமான பொருளாதாரச் சரிவை சந்தித்துள்ளன; Republic தொழிலாளர்கள் நாடு முழுவதும் இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் மில்லியன் கணக்காண மக்களுடன் சேர்ந்து கொள்ளுகின்றனர்; அதாவது வேலைப் பாதுகாப்பு, மற்றும் பிற பாதுகாப்பு நிலை இல்லை என்ற வகைக்கு.

இப்போராட்டத்தின் குறைந்த தன்மை --ஆலை மூடப்படுவதையை அது வெளிப்படாக எதிர்க்கவில்லை என்ற உண்மை-- UE எனப்படும் ஐக்கிய மின்தொழில் தொழிலாளர்களின் தலைமையுடைய பொறுப்பே ஒழிய தொழிலாளர்களுடையது அல்ல. தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆலை மூடலை எதிர்க்கவே இல்லை; துவக்கத்தில் இருந்தே அது தொழிலாளர்களின் எதிர்ப்பை ஜனநாயகக் கட்சிக்குப் பின் சேர்க்கும் வழிவகையைத்தான் பின்பற்றியது.

இந்த உடன்பாட்டுச் செலவினங்களை ஏற்க Republic கனின் முக்கிய கடன் கொடுக்கும் நிறுவனமான Bank of America $1.35 மில்லியன் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளது; JP Morgan Chase, இந்நிறுவனத்தில் 40 சதவிகிதம் உரிமையுடையது, மற்றும் ஒரு $400,000 நிதியை அளித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள இரு மிகப் பெரிய வங்கிகளான பாங்க் ஆப் அமெரிக்காவும் ஜே.பி. மோர்கனும் அக்டோபர் மாதம் சட்டமாக்கப்பட்ட பிணை எடுப்புத் தொகுப்பான $700 பில்லியனில் இருந்து $25 பில்லியனை பெற்றவை ஆகும். பாங்க் ஆப் அமெரிக்காவை பொறுத்தவரை இந்தத் தொகை Republic தொழிலாளர்களுக்கு ஒதுக்க ஒப்புக் கொண்டுள்ள பணத்தைப் போல் 20,000 மடங்கு அதிகம் ஆகும். உண்மையில் இந்தத் தொகைகூட உயர்மட்ட நிர்வாகிகளுக்குக் கொடுக்கப்படும் ஆண்டு ஊதியத் தொகையில் ஓர் அற்ப விகிதமே ஆகும்.

பிணை எடுப்புப் பொதியில் இருந்து கிடைத்த பணத்தை வங்கிகள் பயன்படுத்தி "வேலைகளைக் காப்பாற்றவும்" தங்கள் இருப்புநிலைக் குறிப்புக்களில் இருக்கும் ஓட்டைகளை மறைக்கவும், புதியனவற்றை வாங்கவும் செய்துள்ளனே ஒழிய கடன்கொடுத்தலை அதிகரிக்கவில்லை. உண்மையில் மக்கள் வரிப்பணத்தை அரசாங்கம் கொடுக்கப் பெற்றதில் இருந்தே தங்களுடைய ஊழியர்களையே பணிநீக்கம் செய்த அறிவிப்புக்களைத்தான் கொடுத்துள்ளன. Republic தொழிலாளர்கள் கூறியுள்ளது போல், "அவர்கள் தப்பிப் பிழைத்துவிட்டனர். நாங்கள் விற்கப்பட்டு விட்டோம்."

Republic ஆலை ஆக்கிரமிக்கப்பட்டது அமெரிக்கப் பெறுநிறுவனம் மற்றும் அரசியல் உயரடுக்கை வியப்பில் ஆழ்த்தி அச்சறுத்தவும் செய்துள்ளது; வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பிற்காக பல டிரில்லியன் டாலர்கள் பொதி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதின் அப்பட்டமான வர்க்கத் தன்மை பற்றி மக்கள் கொண்டுள்ள சீற்றம் பற்றி இந்த அடுக்கிற்கு நன்கு தெரியும். ஆலையை ஆக்கிரமித்துள்ளதில், முதலாளித்துவ ஆட்சியின் அடிப்படைக்கு தொழிலாளர்கள் உட்குறிப்பான சவாலை விட்டுள்ளனர் --அதாவது உற்பத்தி வழிவகைமீது தனியார் உரிமைக்கு. எந்தத் தீவிர எதிர்ப்பும் இல்லாம் அதன் தேவைகள் நிறைவேற்றப்படுவதைத்தான் ஆளும் வர்க்கம் வாடிக்கையாகக் கண்டுள்ளது. தொழிலாளர்கள் ஒரு ஆலையை ஆக்கிரமித்து தங்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டபூர்வ நலன்களைப் பெறும் வரையில் அதைவிட்டு நீங்கவில்லை என்ற உண்மை அமெரிக்காவில் வர்க்க உறவுகள் இப்பொழுது இருக்கும் நிலைமை பற்றிய ஒரு குறிப்பு ஆகும்.

ஒரு சில நூறு தொழிலாளர்கள் ஒப்புமையில் சிக்காகோவில் உள்ள சிறு ஆலையில் எடுத்துக் கொண்டுள்ள துவக்க முயற்சி இன்னும் பெரிய அளவில் ஊக்கத்தைக் கொடுக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமா உட்பட பல ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் கொடுத்த பேச்சு மூல ஆதரவைத் தொடர்ந்து ஏற்பட்ட விரைவான உடன்பாடு, நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடக்கூடிய வகையில், பரந்த அளவில் எவ்வித போராட்டமும் வந்துவிடக்கூடாது என்ற முயற்சியைப் பிரதிபலித்தது.

Republic தொழிலாளர்களுடைய உறுதிப்பாடு யுனைடைட் ஆட்டோ வேர்க்கர்ஸ் தொழிற்சங்கத்தின் திவால்தன்மையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் உள்ளது. பிந்தையதோ எதிர்ப்பு என்ற போலித் தன்மையைக் கூடக் காட்டாமல் மகத்தான சலுகைகளைக் கொடுப்பதற்கு புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு மூன்று பெரும் கார் நிறுவனங்களுடனும் இசைந்துள்ளது.

தங்கள் செயற்பாட்டின்மூலம் Republic தொழிலாளர்கள் இன்னும் வெளிப்படையான தொழிலாள வர்க்க எதிர்ப்பு வழிவகைகள் இல்லாதது தொழிலாளர்களிடம் உறுதியற்ற தன்மையினால் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக தொழிற்சங்கங்கள் இரக்கமற்ற முறையில் தொழிலாள வர்க்கம் எந்தவித சுயாதீனப் போராட்டத்திலும் ஈடுபடாமல் அடக்கி வைத்துள்ளனர். அத்தகைய போராட்டங்கள் வந்தபோது, தொழிற்சங்க தலைமை முறையாக அவற்றை ஒதுக்கிவைத்து, தொழிலாளர்களை காட்டிக் கொடுத்துள்ளது.

Republic போராட்டம் உலகெங்கிலும் வரவிருக்கும் வர்க்கப் போராட்ட எழுச்சியின் ஒரு அடையாளம்தான்; இப்போராட்டம் முதலாளித்துவ முறையில் இருக்கும் நெருக்கடி மற்றும் முரண்பாடுகளில் இருந்துதான் தவிர்க்க முடியாமல் எழுந்துள்ளது. 1930 களில் நடத்திய மகத்தான உள்ளிருப்புப் போராட்டங்கள் உட்பட அமெரிக்க தொழிலாள வர்க்கம் கொண்டிருந்த போராளித்தன மரபுகளை அது உள்வாங்கி வெளிப்படுத்தியுள்ளது.

மில்லியன் கணக்கான தொழிலாளர்களை அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் எதிர்கொண்டுள்ள அடிப்படை வினா அரசியல் முன்னோக்கு பற்றியது ஆகும். பொருளாதார நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் பணிநீக்கத்தை ஒட்டிய ஊதியத்திற்காகப் போராடுதல் என்ற வரம்பை மட்டும் கொள்ளக்கூடாது; இதையொட்டி அவர்கள் வேலையின்மை வரிசையில்தான் சேருவர். அவர்கள் நேரடியாக ஆலைகள் மூடப்படுதல், ஊதியக் குறைப்புக்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் முதுகில் நெருக்கடியின் சுமை அனைத்தையும் ஏற்றும் முயற்சிகள் ஆகியவற்றை சவாலுக்கு உட்படுத்த வேண்டும்; மேலும் தங்கள் போராட்டத்தை வேலைகள், கெளரவமான வாழ்க்கை நிலைமை அனைவருக்கும் வேண்டும் என்ற உலகளாவிய போராட்டத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்தகைய போராட்டம்தான் உடனடியாக உற்பத்தி சக்திகளை எவர் கட்டுப்படுத்துவது என்ற வினாவை எழுப்புவதுடன் எந்தக் கொள்கைகளின் அடிப்படையில் அவர்கள் அமைக்கப்படுகின்றனர் என்பதையும் எழுப்பும். Republic ஆக்கிரமிப்பின் மூலம் உட்குறிப்பாக வெளிவந்த சவால் --முதலாளித்துவமுறை தனியார் சொத்துரிமையை அறைகூவுதல்-- என்பது நனவுடன் ஒரு புதிய அரசியல் முன்னோக்குடன் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

Republic தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்; இறுதியில் இதற்குக் காரணம் அவர்களுடைய உழைப்பு இலாபம் கொடுக்கவில்லை என்று கருதப்பட்டது; அதையொட்டி உலகின் செல்வத்தின் பெரும் பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மக்கட்தொகையின் ஒரு மிகச்சிறிய அடுக்கின் நலன்களுக்கு தொழிலாளர் தொகுப்பு உதவவில்லை என்ற கருத்து முன்னிற்கிறது. இதையும் விடக் கடுமையான இடர்பாடுகளை மில்லியன் கணக்கான மக்கள் எதிர்கொள்ளுகையில், சமூகத்தின் தேவைகளை அளிக்கக்கூடிய உற்பத்தி சக்திகள் குறைக்கப்படுகின்றன அல்லது மூடப்படுகின்றன. அடிப்படை உற்பத்தி சக்திகள் மற்றும் மிகப் பெரும் நிதிய நிறுவனங்கள் இனியும் தனியார் சிலரின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டு தனியார் இலாபத்திற்காக இயங்கக்கூடாது.

இவை தேசியமயமாக்கப்பட்டு பொது நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும்; தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கு இரு பெருவணிகக் கட்சிகளுடன் முறித்துக் கொள்ளப்படல் தேவை என்பதுடன் தொழிலாளர்கள் அரசாங்கத்திற்காக போராடுவதற்கு தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனமும் நிறுவப்பட வேண்டும்.

ஒரு ஆரம்ப, குறைந்த வகை வெற்றிதான் என்றாலும் Republic தொழிலாளர்களின் போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் சமூக சக்தியை நிரூபணம் செய்து ஒரு பொதுநிலை நெருக்கடி தொழிலாள வர்க்கத்தை போராட்டத்திற்குள் ஈர்க்கும், சோசலிச நனவு வளர்ச்சிக்கான காரணங்களை தோற்றுவிக்கும் என்ற கருத்தாய்வை உறுதிபடுத்தியுள்ளது. முக்கியமான பிரச்சினை தொழிலாள வர்க்கத்தின் புதிய தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டமைப்பதுதான்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved