World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan rounds up suspects in Mumbai attacks

மும்பை தாக்குதல்களில் சந்தேகத்திற்கு உரியவர்களை பாக்கிஸ்தான் சுற்றி வளைக்கிறது

By K. Ratnayake
11 December 2008

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் இருந்து வந்த தீவிர அழுத்தத்தின் பேரில் பாக்கிஸ்தான் அரசாங்கம் மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடையதெனக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஸ்லாமியக் குழுக்கள் மீது சுற்றி வளைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் காஷ்மீரின் தலைநகரான முஜாபராபாத்திற்கு அருகே ஒரு சமயப்பள்ளி மற்றும் வீடுகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டு முதலாவது கைதுகள் செய்யப்பட்டன.

பாக்கிஸ்தானின் பாதுகாப்பு மந்திரி அஹ்மத் முக்தர் இந்தியத் தொலைக்காட்சி CBN-INN இடம் லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் தலைவர் ஜாகிர்-உர்-ரஹ்மான் லக்வி இன்னும் சிலருடன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். 170க்கும் மேலானவர்கள் இறப்பிற்கு காரணமான மும்பைக் கொடுமையின் பின்னணியில் செயல்தளபதியாக இருந்தார் என்று லக்வியை இந்தியப் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

காஷ்மீரில் செயலூக்கமாக இருக்கும் மற்றொரு இஸ்லாமிய குடிப்படையான ஜெய்ஸ்-இ-மொகம்மது அமைப்பின் தலைவர் மெளலானா மசூத் அசார் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பாக்கிஸ்தானிய பாதுகாப்புப் படைகள் LeT யில் இருந்தும் மற்ற குழுக்களில் இருந்தும் 40 பேருக்கு மேலாக கைது செய்துள்ளன என்றும் சோதனைகள் தொடர்கின்றன என்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் நேற்று தகவல் கொடுத்துள்ளது.

பாக்கிஸ்தானின் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி நேற்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கொண்டலீசா ரைசுடன் தொலைபேசித் தொடர்பு கொண்டு அவரிடம் இந்த தகவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ரைஸும் அமெரிக்க படைகளின் கூட்டுத் தலைவருமான அட்மைரல் மைக்கல் முல்லனும் கடந்த வாரம் இஸ்லாமாபாத்திற்கு வந்து, மும்பைத் தாக்குதல்களை நடத்தியவர்களை தேடிப்பிடிப்பதில் இந்தியாவிற்கு "ஐயத்திற்கு இடமில்லாத உதவியை" அரசாங்கம் அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

ஆனால் இந்தியாவில் விசாரணை நடத்தப்படுவதற்காக சந்தேகத்திற்கு உரியவர்களின் பட்டியலில் உள்ள நபர்களை அனுப்ப வேண்டும் என்னும் புதுடெல்லியின் கோரிக்கையை பாக்கிஸ்தான் முற்றிலும் ஏற்கவில்லை. வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி செய்தி ஊடகத்திடம் கூறினார்: "பாக்கிஸ்தானிய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்."

இந்தியப் போலீசார் அங்கு நடந்த தாக்குதலில் எஞ்சிப் பிழைத்துள்ள ஒரே நபரான அஜ்மல் அமீர் கசப் மற்றும் செய்தித்தொடர்புகளை இடைமறித்துக் கேட்டதில் இருந்து திரட்டப்பட்ட தொகுப்பில் இருந்து மும்பைத் தாக்குதல் பற்றிய விவரங்களை எடுத்துள்ளதாக கூறுகின்றனர். தான் ஒரு LeT உறுப்பினர் என்பதை கசப் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், பாக்கிஸ்தானில் பயிற்சி பெற்றதாகவும், கராச்சியில் இருந்து இன்னும் 9 பேருடன் படகில் வந்ததாகவும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதை முக்கியமாக ஏற்பாடு செய்தது லக்வி என்றும் அவர் அடையாளம் காட்டியதாகத் தெரிகிறது. ஆனால் இந்த விவரங்கள் எதுவும் பகிரங்கமாக உறுதி செய்யப்படவில்லை.

வாஷிங்டன், புதுடெல்லி இரண்டுமே பாக்கிஸ்தான் செய்துள்ள கைதுகளை அவநம்பிக்கைத்தனத்துடன்தான் எதிர்கொண்டுள்ளன; இன்னும் அதிக கைதுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்க வெளியுறவு செயலகத்தின் செய்தித் தொடர்பாளர் Sean McCormack இக்கைதுகளை "முக்கிய, நல்ல நடவடிக்கைகள்" என்று விவரித்து இருந்தபோதிலும், "பாக்கிஸ்தானிய அரசாங்கம் இனி வருங்கால தாக்குதல்களைத் தடுக்கும் பொருட்டு செயல்பட வேண்டும் என்றும்" வலியுறுத்தியுள்ளார்.

நியூ யோர்க் டைம்ஸ் லக்வி பிடிக்கப்பட்டது அல்லது கைதுசெய்யப்பட்டவர்கள் LeT ஐச்சேர்ந்தவர்கள் என்பது பற்றி சுதந்திரமான சான்றுகள் ஏதும் இல்லை என்று மூத்த அமெரிக்க அதிகாரிகள் அறிவித்ததாக மேற்கோளிட்டுள்ளது. ஒரு அதிகாரி கூறினார்: "இவர்களுக்கு எதிராக நடந்து கொள்ளுவதாக கடந்த காலத்திலும் அவர்கள் உறுதி கொடுத்திருந்தனர்; அவர்களில் ஓரிருவரைப் பிடித்து சில மாதங்களுக்குப் பின்னர் அவர்களை விடுவித்து விடுவர்."

ஜம்மு, காஷ்மீரில் இந்திய ஆட்சியை எதிர்க்கும் காஷ்மீர் பிரிவினைவாதிகள் ஒடுக்கப்பட வேண்டும் என்று இந்தியா கோருகையில், அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையில் இருக்கும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக உள்ள எழுச்சியாளர்கள்மீது கூடுதலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறது. West Point இராணுவ பயிலகத்தில் மும்பைத் தாக்குதல்கள் குறித்துப் பேசிய ஜனாதிபதி புஷ் நேற்று அறிவித்தார்: "பயங்கரவாதப் பிரச்சினை மிக அதிகமாக பாக்கிஸ்தானில் உள்ளது. இங்கு ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பகுதிகள் தாலிபன் மற்றும் அல் குவைதா போராளிகளுக்கு உறைவிடமாக மாறியுள்ளன."

பாக்கிஸ்தான் செய்துள்ள கைதுகள் பற்றி புதுடெல்லியின் எதிர்கொள்ளல் உதறித்தள்ளும் வகையில்தான் இருக்கிறது. ஒரு அரசாங்க அதிகாரி IANS இடம் கூறினார்: "இதைப் பற்றி இப்பொழுது கூறுவது முன்கூட்டிக் கூறுவது போல் ஆகும். பாக்கிஸ்தானில் இத்தகைய நடவடிக்கைகள் முன்பும் இருந்ததைப் பார்த்துள்ளோம்." இஸ்லாமாபாத்தின் நடவடிக்கைகள் "வெறும் அறிக்கைகள், பெயரளவு செயல்கள்" என்று அவர் முத்திரையிட்டார். "இந்தக் கட்டத்தில் எவருக்கும் பெயரளவு நடவடிக்கைகளில் அக்கறை கிடையாது."

ராஜாங்க மந்திரி பிரித்விராஜ் சவான் ஜம்முவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்: "இந்திய அரசாங்கம் இதுவரை பாக்கிஸ்தான் பயங்கவாதம் பற்றி செய்துள்ள நடவடிக்கைகள் பற்றித் திருப்தி அடையவில்லை. பாக்கிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கையான பயிற்சி முகாம்கள் நடத்துவது மூடப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்; மேலும் பயங்கரவாத நடவடிக்கைளில் தொடர்புடைய குற்றவாளிகளை எமது நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுப்போம்."

நேற்று மும்பையில் இந்திய அதிகாரிகள் நகரத்தின்மீது மூன்று நாட்கள் முற்றுகை இட்டிருந்து கொல்லப்பட்ட 9 ஆயுததாரிகளில் 8 பேருடைய பெயர்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பாக்கிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் இராணுவப் பயிற்சி பெற்ற பெரும் தொகுப்பின் ஒரு சிறு பகுதியினரே இவர்கள் என்றும் கூறினர். இன்னும் அதிக தாக்குதல்கள் வரக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பிய விதத்தில், மும்பை போலீஸ் துணைத் தலைவர் தேவன் பாரதி கூறினார்: "உலகம் முழுவதும் இத்தகைய கவலைகள் உள்ளன. இவர்கள் பல நாடுகளில் ஏதேனும் ஒன்றைத் தாக்கக் கூடும்."

மும்பைத் தாக்குதல் முற்றிலும் பாக்கிஸ்தானில்தான் தொடங்கியது என்பதை வலியுறுத்த இந்திய அரசாங்கம் அதிக பாடுபட்டுள்ளது. இந்தியாவிற்கு பாக்கிஸ்தானிய செயல்பாட்டாளர் வர உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாபோதின் அஹ்மத், பெப்ருவரியில் கைது செய்யப்பட்ட பஹீம் அன்சாரி என LeT உடன் தொடர்பு என்ற சந்தேகத்தில் ஏற்கனவே காவலில் இருப்பவர்கள் இருவரையும் இந்தியப் போலீசார் விசாரித்து வருகின்றனர். தெற்கு மும்பையில் முக்கிய இலக்குகள் பற்றிய வரைபடத்தை அன்சாரி வைத்திருந்தார்; இத்தகவலின் பேரில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற வினாவும் எழுந்துள்ளது.

முக்தார் அஹமத் ஷேக்கை புதுடெல்லியிலும், டெளசீப் ரெஹ்மானை கொல்கத்தாவிலும் கடந்த வெள்ளியன்று இந்தியப் போலீசார் கைது செய்துள்ளனர்; இவர்கள் மும்பைத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு மொபைல் போன்களும் சிம் கார்டுகளும் கொடுத்தாகக் கூறப்படுகிறது. போலி அடையாள அட்டைகளைக் காட்டி ரெஹ்மான் சிம் கார்டுகளை பல கொல்கத்தா கடைகளில் வாங்கியதாகவும், அஹ்மத் அவற்றை ஜம்மு, காஷ்மீரில் விற்பதில் தொடர்பு கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இக்கைதுகள், குறிப்பாக அஹ்மத்தின் கைது, ஒரு போலிஸ் முகவர் என்று இருந்த நிலையில் பல விடையிறுக்கப்படாத வினாக்களை எழுப்பியுள்ளது. பிரிட்டனை தளமாகக்கொண்ட டைம்ஸ் குறிப்பிட்டுள்ளபடி, "இந்திய காஷ்மீரின் கோடைத் தலைநகரான ஸ்ரீநகரில் போலீசார் அஹ்மத் தங்களுக்காக பணிபுரிந்ததாகக் கூறிய பின்னர் விசாரணை கசப்பாக முடிந்து, 15 ஆண்டுகளின் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலை போராளிகள் செய்வதற்கு ஒரு இந்திய முகவர் உதவியிருக்கும் வாய்ப்பு எழுந்துவிட்டது."

வாஷிங்டன் போஸ்ட் விளக்கியது போல்: "இந்தியாவும் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற திறன் மும்பைத் தாக்குதல்கள் முற்றிலும் பாக்கிஸ்தானிய நாட்டவரால் நடத்தப்பட்டது என்ற இந்தியாவின் ஆரம்ப உறுதியை சிக்கலாக்கியுள்ளது." பூசலுக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதி உட்பட இந்தியாவில் உள்ள கணிசமான முஸ்லிம் சிறுபான்மையினர் எதிர்கொண்டிருக்கும் அடக்கு முறை மற்றும் வறிய நிலை பற்றி கைதுகள் வினாக்களை எழுப்புகின்றன.

ஆனால் பாக்கிஸ்தான் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சியில்தான் புதுடெல்லி தொடர்கிறது. ஐ.நா.வின் பாதுகாப்புக் குழு Jamaat-ud-Dawa வை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலில் சேர்க்குமாறு இந்தியா முறையாகக் கேட்டுக் கொண்டுள்ளது. இது ஒரு மத அறக்கட்டளை ஆகும்; 2002ல் பாக்கிஸ்தானில் LeT தடைக்குட்பட்டபின் முன்னிருப்பு அலுவலமாக செயல்பட நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையை பாக்கிஸ்தான் தான் ஆதரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடைய தீவிர பதட்டங்கள் தொடர்வதை உயர்த்திக் காட்டும் விதத்தில் CNN-IBN நேற்று இந்திய விமானப்படை "தக்க விமானப் பாதுகாப்பு" தயார்நிலையை உயர்த்தியிருப்பதாக தெரிவித்துள்ளது. அனைத்து இந்திய போர் விமானங்களும் குண்டுகள், ஏவுகணைகள் பொருத்தப்பட்டு ஒரு சில நிமிடங்களுக்குள் தாக்குதலுக்கு தயாராக நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியப் போர்க்கப்பல்களும் அரேபிய கடல் பகுதியில் ஆக்கிரோஷமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

பாக்கிஸ்தானிய படைகளும் இதற்கு விடையிறுக்கும் வகையில் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலைமையை விமானப் படை மற்றும் கடற்படைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளன. இரு பக்கங்களிலும் இராணுவத் தயாரிப்புக்களை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், வெளியுறவு மந்திரி குரேஷி குறிப்பிடத்தக்க வகையில் எச்சரிக்கை விடுத்தார்; "நாங்கள் போரை விரும்பவில்லை; ஆனால் எங்கள்மீது அது திணிக்கப்படுமேயாயின், எங்களைக் காத்துக் கொள்ள முற்றிலும் தயாராக உள்ளோம்."

இந்திய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளரான சிதன்ஷு கார், "சாதாரண காலத்தில் கூட எச்சரிக்கை நிலையில் இருப்பது ஆயுதப் படைகளுக்கு சாதாரண விஷயம்தான்" என்று அறிவித்தார். இப்பொழுதோ காலம் சாதாரணம் என்றே கூறமுடியாது. கடந்த இரு வாரங்களில் இந்திய செய்தி ஊடகத்தில் பல கருத்துக்கள் பாக்கிஸ்தானுக்குள் இருக்கும் பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்கள் எனக் கருதப்படுதவதின் மீது தவிர்க்க முடியாத இராணுவத் தாக்குதல்கள் வேண்டும் என்ற அழைப்பைக் கொடுத்துள்ளன.

இந்தியாவும் பாக்கிஸ்தானும் ஏற்கனவே இந்திய துணைக்கண்டம் 1947ல் பிரிவினைக்கு உட்பட்ட பின் மூன்று முறை போர்கள் புரிந்துள்ளன. இரு நாடுகளிலும் இருக்கும் அரசியல் நடைமுறைகள் மக்களின் சமூகத் தேவைகள், ஜனநாயக விழைவுகளை தீர்க்க முடியாத தங்கள் இயலாத தன்மையில் இருந்து கவனத்தைத் திருப்பும் வகையில் வகுப்புவாதம் மற்றும் நாட்டுவெறி ஆகியவற்றைத் தூண்டிவிடுவதை அதிகம் நம்பியுள்ளன. உலகப் பொருளாதார நெருக்கடி தீவிரமாக இருக்கும் நேரத்தில் இரு அணுவாயுதங்கள் இருக்கும் சக்திகளிடையே மற்றொரு மோதல் என்ற ஆபத்து வராது எனக் கூறவதற்கு இல்லை.