World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Washington exploits Mumbai attack to promote "war on terror"

மும்பை தாக்குதலை வாஷிங்டன் "பயங்கரவாதத்தின் மீதான போருக்கு" ஊக்கம் கொடுக்க பயன்படுத்திக் கொள்கின்றது

By Bill Van Auken
4 December 2008

Use this version to print | Send this link by email | Email the author

புதன்கிழமையன்று அமெரிக்க வெளியுறவு மந்திரி கொண்டலீசா ரைஸ் கடந்த வாரம் மும்பையை அதிர்ச்சிக்கு உட்படுத்திய பயங்கரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட 173 பேருக்கு அமெரிக்காவின் இரங்லை தெரிவிக்கும் வகையிலும் இந்திய மக்களுடன் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் விதத்திலும் வருகைதந்ததாக காட்டிக் கொண்டார்.

ரைஸினால் மேற்கொள்ளப்படும் கடைசி சர்வதேச முயற்சிகளில் இதுவும் ஒன்றாக இருக்கக்கூடும்; ஈராக் மற்றும் ஆப்கானிய மக்கள் மீது ஆக்கிரமிப்புப் போர் நடத்தியதிலும், சித்தரவதை, அசாதாரண கடத்தல் ஆகிய அமெரிக்க செயற்பாடுகளை புரிந்ததிலும் அவருடைய பங்கு ஒரு போர்க் குற்றங்கள் சாட்டப்படுவதற்குரிய இலக்கைக் கொண்டுள்ளன.

மத்திய கிழக்கில் --2006ம் ஆண்டு ஆயிரக்கணக்கான லெபனிய சாதாரண குடிமக்களின் உயிர்களை குடித்த இஸ்ரேலிய போரை சமாதானம் தோன்றுவதற்கான "பிரசவ வலி" என்று கூறி இகழ்வை பெற்ற இவரைப் பற்றி, எதிர்ப்பாளர்கள் பலமுறையும் இரத்தத்தை உமிழும் நச்சுப் பற்களை கொண்ட ஒரு 'vampire' என்று சித்தரித்துள்ளனர்.

இத்தகைய தோற்றம் தெற்கு ஆசியாவில் இவர் தற்பொழுது மேற்கொண்டுள்ள பயணத்திற்கும் நன்கு பொருந்தும் உவமை ஆகும்; மும்பையில் சிந்தப்பட்ட அப்பாவி பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் வாஷிங்டனால் சுரண்டிக்கொள்ளப்பட, "பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போர்" என்று அழைக்கப்படுவதை ஊக்குவிக்கும் முயற்சிக்கு இப்பொழுது முன்னின்றுள்ளார்; இதன் மூலம் அமெரிக்கா அதன் மூலோபாய நலன்களை தொடர உள்ளது.

புது தில்லியில் பேசிய ரைஸ் குறிப்பிடத்தக்க முறையில் பாக்கிஸ்தான்மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் அதன் அரசாங்கம் "உறுதியாகவும் உடனடியாகவும் செயற்பட்டு வெளிப்படையாக முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்" என்று அறிவித்துள்ளார். தன்னுடைய பங்கிற்கு பாக்கிஸ்தான், பயங்கரவாத தாக்குதல்களை கண்டித்து அதன் அரசு சார்ந்த பிரதிநிதிகளுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது.

அல் கேய்டாவிற்கும் மும்பைத் தாக்குதல்களுக்கும் இடையே இல்லாத பிணைப்பை ரைஸ் கூறுகிறார்; இதை அறிவிக்கும் வகையில், "அல் கேய்டா பங்கு கொள்ளும் விதத்தை இது தெளிவாகக் காட்டுகிறது" என்றார். பின்னர் இவர் இந்த கருத்தைப் பின் வாங்கும் கட்டாயத்திற்கு உள்ளானார்; இருந்தபோதிலும், இந்தியாவின் வணிகத் தலைநகரை தாக்கியவர்கள், நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியவர்கள் "ஒரே வட்டங்களில் செயல்படுகின்றனர்" என்று கூறினார்.

மும்பைத் தாக்குதல்களுக்கும் செப்டம்பர் 11 தாக்குல்களுக்கும் இடையே தொடர்பு இருந்தால் அது அமெரிக்கா எதிர்கொள்ளும் முறையில்தான் காணப்படலாம். உலக வணிக மையம் மற்றும் பென்டகன் மீது விமானங்கள் பறந்து ஏழு மாதங்களுக்குப் பின்னர், ரைஸ் அந்த சோக நிகழ்ச்சிகளை "ஒரு புதிய வல்லமைச் சமநிலை உருவாக்கம்" காண்பதற்கு "மகத்தான வாய்ப்பு" என்று விளக்கியிருந்தார். இப்பொழுதும் வாஷிங்டன் அதே போன்ற வாய்ப்பை தெற்கு ஆசியாவில் அதன் நலன்களை தொடர்வதற்கு இந்தியாவில் அழிவுச் செயலை பயன்படுத்துகிறது.

புது தில்லியில் ரைஸ் இருந்தபோது, அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைவரான அட்மைரல் மைக் முல்லன் இஸ்லாமாபாத்தில் நாட்டின் இராணுவத் தளபதிகள் மற்றும் எட்டு மாத கால குடிமக்களது அரசாங்கத்தின்மீது அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

"பாக்கிஸ்தானில் இருக்கும் அனைத்து குழுக்கள் கொண்டிருக்கும் தொடர்புகள் பற்றி கடுமையாக விசாரிக்க வேண்டும்" என்று ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கும் புதுதில்லியில் ரைஸின் அறிக்கைகளை முல்லன் எதிரொலித்தார். ஆனால் அட்மைரல் ஒரு படி மேலே சென்று "இன்னும் கூடுதலான, இன்னும் ஒருங்கிணைந்த வகையில் நாட்டில் மற்ற இடங்களில் இருக்கும் போர்க்குணமிக்க தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அறிவித்தார்.

இந்தக் கடைசி குறிப்பானது, பாக்கிஸ்தான் இராணுவம் வஜீரிஸ்தான், கூட்டாட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பழங்குடிப் பகுதிகள் இன்னும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பிற இடங்களிலும் அதன் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பது பற்றிய தெளிவான கோரிக்கை ஆகும். அப்பகுதிகள் ஏழாண்டு கால அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போரிடும் ஆப்கானிய சக்திகளுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றன. அமெரிக்க இராணுவம் பலமுறையும் இப்பகுதிகளில் தன் தாக்குதல்களை நடத்தி ஏவுகணை மற்றும் கமாண்டோ தாக்குதல்களில் பாக்கிஸ்தானிய குடிமக்களை கொன்றுள்ளது.

மும்பை நிகழ்வுகளில் பாக்கிஸ்தானை ஆப்கான் போரில் கூடுதலான ஆதரவு கொடுக்கும் வகையில் தான் கூறுவதை செய்வதற்கு மிரட்டும் ஒரு வாய்ப்பை வாஷிங்டன் கண்டுள்ளது என்பது தெளிவு; அவ்வாறு செய்யத் தவறினால் தன் குறுக்கீடு பெருகுவதை நியாயப்படுத்தும்.

இவ்விதத்தில் குறிப்பிடத்தக்கவாறு வாஷிங்டன் போஸ்ட்டில் செவ்வாயன்று ஒரு கட்டுரை ஈராக் போருக்கு முன்னணி வக்காலத்து வாங்குபவரும் புஷ் நிர்வாகத்துடன் நெருக்கமான தொடர்புகளையும் கொண்டிருப்பவருமான றொபர்ட் காகனால் வெளியிடப்பட்டது. பாக்கிஸ்தான் மீது படையெடுக்க ஒரு சர்வதேசப் படை அமைக்கப்படவும், "காஷ்மீர் மற்றும் பழங்குடிப் பகுதிகள் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட வேண்டும்" என்றும் காகன் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்தகைய இராணுவக் குறுக்கீட்டிற்கு வாதிடுகையில், காகன் "அமெரிக்கா, ஐரோப்பா இன்னும் பலநாடுகள் இந்த கொள்கையை ஸ்தாபிக்க தொடங்குவதற்கு உதவியாக இருக்கும் அதாவது பாக்கிஸ்தான் மற்றும் பிற நாடுகள் தளங்களை நிலைநிறுத்தியுள்ள பயங்கரவாதிகள் அவர்களுடைய இறையாண்மையை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடாது. 21ம் நூற்றாண்டில் நாடுகள் தங்கள் இறையாண்மை உரிமையை சம்பாதித்துப் பெறமுடியும்" என்றும் அறிவித்துள்ளார்.

இத்தகைய "சர்வதே முறையில் விடையிறுப்பை" மும்பைத்தாக்குதலுக்கு கொள்ளுவது "இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையே நேரடி இராணுவ மோதலைத் தடுக்கும் நலனையும் கொண்டுள்ளது" என்றும் காகன் வாதிட்டுள்ளார்.

இறுதியாக, இத்தகைய தலையீடு "இந்திய மக்களுக்கு அவர்கள் மீதான தாக்குதல் நாம் நம் மீது நடத்தப்படும் தாக்குதல்களை போலவே எடுத்துக் கொள்ளுவோம் என்ற கடப்பாட்டை கொண்டுள்ளோம் என்பதை அமெரிக்கா நிரூபிப்பது போல் இருக்கும்" என்றும் காகன் கூறியுள்ளார்.

இவ்விதத்தில் 9/11 தாக்குதலை மும்பை தாக்குதலோடு தொடர்புபடுத்துதல், இந்தக் கலவையின் முழு உட்குறிப்புக்கள் ஆகியவை தெளிவாக எடுத்துக் கூறப்படுகின்றன. 2001 தாக்குதல்களை போலவே, இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் ஒரு புதிய ஆக்கிரமிப்பு போருக்கான போலிக் காரணமாகவும் வரலாற்றளவில் ஒடுக்கப்பட்டுள்ள ஒரு நாட்டின் இறையாண்மை மீது ஆணவத்துடன் அதிகாரம் செலுத்துவதற்கான நியாயப்படுத்தலாகவும்தான் பார்க்கப்படுகின்றன.

இந்தியா, பாக்கிஸ்தானுக்கு இடையே இராணுவ மோதல் என்று காகன் எச்சரிக்கும் செயற்பாடு இப்பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடுகளை இன்னும் அதிகமான முறையில் வரக்கூடிய வாய்ப்பாகச் செய்துள்ளது.

அமெரிக்க மூலோபாய நலன்களை பொறுத்த வரையில் அத்தகைய போர் ஒரு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தும்; ஏனெனில் ஆப்கானிஸ்தானுக்கு மேற்கு எல்லையில் தான் நிறுத்தியுள்ள படைகளை பாக்கிஸ்தான் திரும்பப் பெற்றுக் கொண்டு, அவற்றை கிழக்கே இந்தியாவின் பக்கம் பாக்கிஸ்தான் நிறுத்தக்கூடும்; இது ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகளுக்கு வழங்கல்கள் அழிக்கக்கூடிய பகுதியை பாதுகாப்பு இல்லாமல் செய்துவிடும்.

மனித குலத்தைப் பொறுத்த வரையில், இந்தப் போர் ஒரு அணுவாயுதப் போராக மூண்டு மில்லியன்கள் இறக்கக்கூடிய ஆபத்தையும் கொண்டுள்ளது.

பாரக் ஒபாமா அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்று பதவி ஏற்கவிருப்பதற்கு ஆறு வார காலத்திற்கு முன்னதாக இந்த நெருக்கடி வந்துள்ளது. மற்ற இடங்களை போல் இங்கும், "தடையற்ற கைமாற்றுகை" அடையாளங்கள் வரும் என்றுதான் தோன்றுகிறது. பலமுறையும் ஒபாமா தன் நிர்வாகத்தின் உயர் முன்னுரிமை ஆப்கானிஸ்தானில் போரை விரிவுபடுத்துதல் மற்றும் பாக்கிஸ்தானுக்குள்ளும் அதை விரிவுபடுத்துதல் என்று கூறியுள்ளார்.

கடந்த திங்களன்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தன்னுடைய தேசிய பாதுகாப்புக் குழுவை அறிமுகப்படுத்தியபோது, ஒபாமா, "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதின் சொல்லாட்சியை முற்றும் தழுவிய முறையில் பேசி, ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் கீழ் செயற்படுத்தப்பட்ட அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கான இழிவகை நியாப்படுத்துதல்களை தானும் பயன்படுத்த இருப்பதாக குறிப்புக் காட்டியுள்ளார்.