WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Tense India-Pakistan standoff continues
இந்திய பாக்கிஸ்தானிய விலகிச்செல்லும் போக்கு தொடர்கிறது
By Peter Symonds
8 December 2008
Use this version
to print | Send
this link by email | Email
the author
மும்பையில் கடந்த மாதம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பு
என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள இஸ்லாமிய குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாக்கிஸ்தான்மீது புஷ்
நிர்வாகம் தீவிர அழுத்தத்தை கொடுத்துள்ளது. பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே இருக்கும் பதட்டங்களை
குறைப்பதற்கு மாறாக, புதுதில்லிக்கு வாஷிங்டன் கொடுக்கும் ஆதரவு பாக்கிஸ்தானை மீண்டும் உறுதியற்றதாக்கும்
அச்சுறுத்தலைக் கொண்டுள்ளதுடன் இரு பிராந்திய போட்டி நாடுகளுக்கும் இடையே மோதலை விரிவாக்கும் வகையிலும்
உள்ளது.
கடந்த வாரம் புதுதில்லிக்கும் பின்னர் இஸ்லாமாபாத்திற்கும் பறந்து சென்ற அமெரிக்க
வெளியுறவு மந்திரி கொண்டலீசா ரைஸ், நேற்று ABC
News
இடம் பாக்கிஸ்தான் "பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளை" வேரோடு அழிக்கும் உறுதிப்பாடுகளை மேற்கொள்ள
வேண்டும் என்று கூறியுள்ளார். "நாடு இல்லாத செயற்பாட்டினர்" மும்பைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்ற
வாதத்தை அவர் "ஏற்கத்தக்கது அல்ல" என்று உதறித் தள்ளி, "இது உங்கள் பொறுப்புத்தான்" என்று பாக்கிஸ்தான்
அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
"இது பாக்கிஸ்தான் செயல்பட வேண்டிய நேரம். இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும்
இணைந்து அவர்கள் செயல்பட வேண்டும்" என்று ரைஸ் வலியுறுத்தினார். இராணுவ நடவடிக்கை எடுக்கும் உரிமை இந்தியாவிற்கு
உள்ளதா என்று கேட்கப்பட்டதற்கு, இந்தியாவில் இருக்கும் சீற்றம், பெரும் திகைப்பு பற்றி தான் அறிந்துள்ளதாக
கூறிய அவர், "ஆனால் இதைப் பொறுத்தவரையில் இந்தியா எடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் நிலைமையை மோசமாக்கக்கூடும்.
அத்தகைய நெருக்கடி தெற்கு ஆசியாவில் வருவதை நாங்கள் விரும்பவில்லை." என்றார்.
பாக்கிஸ்தானை தளமாகக் கொண்டுள்ள
Dawn
ல் சனிக்கிழமை வந்த கட்டுரை ஒன்று, நடவடிக்கை எடுக்காவிட்டால் சர்வதேச பதிலடிகளை எதிர்க்க நேரிடும்
என்று பாக்கிஸ்தானை அச்சுறுத்தியதாக கூறியுள்ளது. பாக்கிஸ்தானின் பிரதம மந்திரி, ஜனாதிபதி, இராணுவத்
தலைமைத் தளபதி ஆகியோர் இருந்த கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு மந்திரி "இதைச் செய்தவர்களை
பாக்கிஸ்தான் அரசாங்கம் பிடிக்க வேண்டும், இல்லாவிடின் அமெரிக்கா செயல்படும்" என்று விரட்டியதாக
கூறப்படுகிறது. இச்செயலின் 'ஆழம்' வரை சென்று கண்டுவிட வேண்டும், "ஒரு திறைமையான குவிப்பான
எதிர்விடை" கொடுக்கப்பட வேண்டிய தேவை உடனடியாக வந்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா மற்றும் பாக்கிஸ்தானிய அதிகாரிகளால் பின்னர் மறுக்கப்பட்ட அறிக்கை
ஒன்றில் வாஷிங்டன் போஸ்ட் இந்தியா கோரிய 48 மணி நேர காலக் கெடுவிற்கு இஸ்லாமாபாத்
ஒப்புக் கொண்டது, மும்பை தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கஷ்மீர் பிரிவினைவாத அமைப்பு
லஷ்கர்-இ- தொய்பாவிற்கு எதிராக அமெரிக்கா ஒரு திட்டத்தை கொண்டுள்ளது என்று ஓர் உயர்மட்ட
பாக்கிஸ்தான் அதிகாரி கூறியதாக மேற்கோளிட்டு எழுதியுள்ளது. இந்த அதிகாரி தாக்குதல்களில் தொடர்புடைய
பாக்கிஸ்தானியர்களில் குறைந்தது மூன்று பேராவது கைது செய்யப்பட வேண்டும் என்றும் ரைஸ் வலியுறுத்தியதாக
அதிகாரி கூறினார்.
பாக்கிஸ்தான் அரசாங்கம் அமெரிக்க மற்றும் இந்திய கோரிக்கைகளுக்கு இணங்க
வேண்டும் என்பதற்காக கட்டாயப்படுத்தும் விதத்தில் இந்திய இராணுவ நடவடிக்கை மற்றும் குறிப்பிடப்படாத
அமெரிக்க தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சுறுத்தலை வாஷிங்டன் தெளிவாகப்
பயன்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரையில், அப்பகுதியில் அதன் பொருளாதார, மூலோபாய
நடவடிக்கைகளை அச்சுறுத்தக் கூடிய, அதிலும் குறிப்பாக அதன் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்தும்
நடவடிக்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தக் கூடிய எதையும் அச்சுறுத்தும் இரு அணுசக்தி உடைய சக்திகள்
கொண்டுவரும் "நெருக்கடியை" தவிர்க்கத்தான் விரும்புகிறது. ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமெரிக்க எதிர்ப்பு
எழுச்சியாளர்கள் செயல்பட்டு வருவதற்கு எதிரான செயற்பாடுகளை பாக்கிஸ்தான் இராணுவம் முடுக்கிவிட வேண்டும்
என்று வலியுறுத்தும் வாய்ப்பையும் ரைஸ் சந்தேகத்திற்கிடமின்றி எடுத்துக்கொண்டார். ஆப்கானிஸ்தானில் இருந்து
பாக்கிஸ்தான் துருப்புக்கள் இந்திய எல்லைக்கு இந்தியாவில் இருந்து வரும் இராணுவ அச்சுறுத்தலை எதிர்கொள்ள
திருப்பப்படுவதை தவிர்க்கவும் அமெரிக்கா விரும்புகிறது.
நவம்பர் 28ம் தேதி பாக்கிஸ்தானின் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரிக்கு ஒரு
அச்சுறுத்தல் தொலைபேசித் தகவல் வந்ததை அடுத்து பாக்கிஸ்தானின் விமானப் படை மிக உயர்ந்த கவன நிலையில்
24 மணி நேரமும் வைக்கப்பட்டது என்று கடந்த வார இறுதியில் வந்த தகவல் புது தில்லிக்கும்
இஸ்லாமாபாத்திற்கும் இடையே இருக்கும் உறவுகள் எந்த அளவிற்கு பதட்டங்களைக் கொண்டுள்ளன என்பதை
அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சனிக்கிழமை அன்று
Dawn
செய்தித்தாள் இந்திய வெளியுறவு மந்திரி பிரணாப் முக்கர்ஜி எனக் கூறிக்கொண்டு விடுத்த எச்சரிக்கை
இஸ்லாமாபாத்தில் நெருக்கடிக் கூட்டங்களை ஏற்படுத்தியதுடன் இந்திய எல்லைப் புறம் துருப்புக்களை அனுப்பி
வைக்கும் அச்சுறுத்தலையும் கொடுத்தது.
ஒரு புரளி என்று இரு திறத்தாரும் பின்னர் ஒப்புக் கொண்ட தொலை பேசி
உரையாடலே பல குற்றச்சாட்டுக்கள், எதிர்க்குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை தூண்டிவிட்டது. அத்தகைய தொலைபேசி
அழைப்பை விடுக்கவில்லை என முக்கர்ஜி மறுத்துள்ளார்; இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து அத்தகைய
தொலைபேசி எச்சரிக்கை வரவில்லை என்றும் பாக்கிஸ்தான் கூறிவிட்டது. மும்பை
தாக்குதல்களில் இருந்து கவனத்தைத் திருப்புவதவற்காக
ISI எனப்படும்
பாக்கிஸ்தானின் இராணுவ உளவுத்துறை அத்தகைய தொலைபேசித் தகவலை கொடுத்திருக்கக் கூடும் என்று இந்திய
அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். யார் இந்த தொலைபேசி தகவலைக் கொடுத்திருக்கக்கூடும் என்பது
தெளிவாக இல்லை; ஆனால் அரசாங்கக் கருவியில் பிடிவாதமாக உள்ள சில கூறுபாடுகள் --இந்தியா,
பாக்கிஸ்தான் இரண்டிலும்-- ஒரு இராணுவப் பூசலை தூண்டும் கருத்தைக் கொண்டுள்ளன என்ற கருத்து ஒதுக்கப்பட
முடியாதது ஆகும்.
இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே மோதல்கள் என்னும் ஆபத்து இன்னும்
முடிவடைந்துவிடவில்லை. அடுத்த ஆண்டு தேசியத் தேர்தல்களை எதிர்கொள்ளும் இந்திய அரசாங்கம் பாக்கிஸ்தானுக்கு
எதிராக பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்று கோரும் இந்து தீவிரவாத கட்சிகளிடம் இருந்து அழுத்தத்திற்கு
உட்பட்டுள்ளது. மும்பை தாக்குதல்களை திட்டமிட்ட லஷ்கர்-இ-தொய்பாவை அடையாளம் கண்டுள்ளதாக இந்திய
அதிகாரிகள் கூறுவதுடன் ISI
உடைய தொடர்பிற்கும் ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ளனர். ஏற்கனவே இஸ்லாமாபாத்துடனான
பேச்சுவார்த்தைகளை புதுதில்லி உறையப்போட்டுவிட்டு, "பயங்கரவாத பயிற்சி முகாம்களுக்கு" எதிரான இராணுவத்
தாக்குதல்களும் நடத்தப்படலாம் என்று கூறியுள்ளது.
பாக்கிஸ்தானை தளமாகக் கொண்ட
Daily Times
வெள்ளியன்று பாக்கிஸ்தான் தலைவர்களை சந்தித்த செனட் குழுவின் உறுப்பினரான அமெரிக்க செனட் உறுப்பினர்
ஜோன் மக்கெயினுடைய கருத்துக்களை நேற்று வெளியிட்டது. சமீபத்தில் புதுதில்லிக்கு சென்றிருந்த மக்கெயின்
பாக்கிஸ்தான் விரைந்து செயல்படவில்லை என்றால், இந்தியா, பாக்கிஸ்தானுக்குள் வான்வழித் தாக்குதல்கள்
நடத்தக் கூடும் என்று செய்தித்தாளிடம் கூறினார். "இந்தியாவில் உள்ள மக்களாட்சி அரசாங்கம் அழுத்தத்தில்
உள்ளது; பாக்கிஸ்தானிடம் சான்றுகள் கொடுத்த பின் இஸ்லாமாபாத் நடவடிக்கை எடுக்கத் தவறினால்
பயங்கரவாதிகளுக்கு எதிராக வலிமையைப் பயன்படுத்தும் உரிமையை இந்தியா எடுத்துக் கொள்ளும்' என்றார்
அவர்.
ஆசியா டைம்ஸ் வலைத் தளத்தில் சனிக்கியழமை அன்று வந்த கட்டுரை ஒன்று
இந்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி மிக உயர்ந்த மட்டத்தில் இந்தியா பாக்கிஸ்தானை
தளமாகக் கொண்ட சில பயங்கரவாத உள்கட்டுமானம் மற்றும் நபர்களை "முற்றிலும் அழிப்பதில்" நேரடித்
தொடர்பு கொள்ள இருப்பாதாகக் கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. பாக்கிஸ்தான் பதிலடி கொடுப்பது மற்றும்
முழுப் போரில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில் உளவுத்துறை பிரிவுகளின் ஆதரவிற்கு உட்பட்ட உயரடுக்குப்
பிரிவுகள் இரகசியத் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என்று அதிகாரி குறிப்பிட்டார். இந்த நடவடிக்கைகள்
பரந்த முறையில் இருக்கும் என்பதுடன் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் காஷ்மீருடன் என்று இல்லாமல்
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதிகள் மற்றும் பாக்கிஸ்தான் கடலோரப் பகுதிமீது கண்காணிப்பு என்றும்
இருக்கும் என அவர் கூறினார்.
அடுத்து என்ன நடக்கக்கூடும் என்பது தெளிவாக இல்லை. பாக்கிஸ்தான் மீது இந்தியா
தாக்கினால் அமெரிக்கா அதை எப்படி எதிர்கொள்ளும் என்று கேட்கப்பட்டதற்கு,
Daily Times
இடம் அதில் வாஷிங்டன் செய்வதற்கு அதிகம் இல்லை என்று மக்கெயின் கூறினார். செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு
பின்னர் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கப் படையெடுப்புக்கள் பற்றிக் குறிப்பிட்டு அவர் கூறினார்: "நாங்கள்
செய்ததை இந்தியா செய்யும்போது அவ்வாறு செய்யக்கூடாது என்று இந்தியாவிடம் நாங்கள் கூற முடியாது"
என்றார். புஷ் நிர்வாகத்தின் சார்பாக மக்கெயின் கருத்துத் தெரிவிக்கவில்லை என்றாலும், வெள்ளை மாளிகையின்
உணர்வுகளைத்தான் அவர் ஐயத்திற்கு இடமின்றி எதிரொலிக்கிறார்; இது இந்தியாவை இன்னும் பூசல் நிறைந்த
நிலைப்பாட்டை மேற்கோள்ளத்தான் ஊக்கம் அளிக்கும்.
டிசம்பர் 2001ல் இந்தியப் பாராளுமன்றத்தின்மீது காஷ்மீர் பிரிவினைவாதிகள் ஒரு
தாக்குதல் நடத்திய பின்னர், இந்திய இராணுவம் பாக்கிஸ்தான் எல்லைப் புறத்தில் மிக அதிக ஆயுதம் தாங்கிய இராணுவ
துருப்புகள் கிட்டத்தட்ட அரை மில்லியன் பேரை நிறுத்தியுள்ளது. நேற்று இந்து பத்திரிகையில் வந்துள்ள
கட்டுரை ஒன்று, இந்திய படைகள் திரட்டப்படுத்துவதற்கு வெளிப்படையாக செலவினம் தரக்கூடிய முயற்சிகள் தேவையில்லை
என்று குறிப்பிட்டுள்ளது. 2001-02 மோதலிற்கு பின்னர் இந்திய இராணுவம் எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல்
மிக விரைவில் பதிலடி கொடுக்கும் "Cold Start"
என்னும் கோட்பாட்டை ஏற்றுள்ளது
பாக்கிஸ்தான் மீதான அமெரிக்க அழுத்தம் எளிதில் அதன் மீதே திரும்பிக்
கொள்ளலாம். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கள் பற்றி பாக்கிஸ்தானியர்களிடையே
ஏற்கனவே பரந்த முறையில் விரோதத் தன்மையும் சீற்றமும் உள்ளது. இப்பொழுது பல முறை அமெரிக்க தாக்குதல்கள்
பாக்கிஸ்தானுக்குள் இருக்கும் எல்லைப்புற பழங்குடிப் பகுதிகளில் நடத்தப்படுதல் அதிகமாகிவிட்டது. இந்தியாவுடன்
பல தசாப்தங்களாக பதட்டங்கள் இருக்கும் நிலையில், பல பாக்கிஸ்தானியர்கள் மும்பைக் குண்டுவீச்சுக்கள் பற்றி
மிக அதிக அளவிலான இந்திய குற்றச் சாட்டுக்கள் இருப்பது பற்றி ஆழ்ந்த சந்தேகம் கொண்டுள்ளனர்; அமெரிக்க
கோரிக்கைகள் ஏற்கனவே நலிந்து இருக்கும் அதன் ஆதரவுத் தளத்தை இன்னும் குறைமதிப்பிற்கு உட்படுத்தி ஒரு
அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன.
சுதந்திரத்தின் பின் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா, மற்றும் பாக்கிஸ்தானில்
இருக்கும் அரசியல் நடைமுறைகள் பெரும்பாலான மக்களை எதிர்கொண்டுள்ள ஆழ்ந்த சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை
தீர்க்க முடியாத இயலாமையில் இருந்து கவனத்தை திசை திருப்ப, பலமுறையும் வகுப்புவாதம், இராணுவவாதம்
ஆகியவற்றை கையாண்டு வருகின்றன. தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடியின் நடுவே இரு நாடுகளிலும்
இருக்கும் அரசாங்கங்கள் மும்பைத் தாக்குதல்களை அடுத்து எழுந்துள்ள அழுத்தமான நிலைமையையும் அதே நோக்கங்களுக்கு
பயன்படுத்தியுள்ளன. அழுத்தங்களை குறைப்பதற்கு முற்றிலும் எதிரிடையான வகையில், வாஷிங்டனின் குறுக்கீடு இராணுவ
மோதல் என்னும் ஆபத்தைத்தான் உயர்த்திக் காட்டுகிறது. |