WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
Behind the crisis in the French
Socialist Party
பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் நெருக்கடியின் பின்னணி
By Alex Lantier
27 November 2008
Use this version
to print | Send
this link by email | Email
the author
சோசலிஸ்ட் கட்சியின் தேசிய குழு
Lille நகர மேயர்
மார்ட்டின் ஒப்ரியை கட்சியின் முதல் செயலாளர் என்று உயர்த்தியுள்ளமையானது, பிரான்சில் செய்தி ஊடகத் தலையங்கங்களில்
ஆதிக்கம் செய்திருந்த நான்கு நாட்கள் கடுமையான அரசியல் உட்பூசலை முடிவிற்குக் கொண்டு வந்துள்ளது.
பிரான்சில் முக்கிய இடது முதலாளித்துவக் கட்சியாகவும் பழமைவாத ஜனாதிபதி
நிக்கோலோ சார்க்கோசியின் பாராளுமன்றத்தில் முக்கிய எதிர்க் கட்சியாகவும் விளங்கும் சோசலிஸ்ட் கட்சியின்
அரசியல் தோற்றத்தை வழிநடத்தி நிர்வகிப்பது யார் என்பது பற்றிய போட்டியில் கிட்டத்தட்ட தன்னை உடைத்துக்
கொண்டது.
நவம்பர் 14-16 ல் சோசலிஸ்ட் கட்சி மாநாடு
Reims ல் கூடி
ஒரு பெரும்பான்மை முடிவை எடுப்பதில் தோல்வியுற்ற நிலையில், முதல் செயலாளரை தேர்ந்தெடுப்பது உறுப்பினர்களின்
வாக்களிப்பை அடுத்து இருக்கும் என்ற நிலைமை ஏற்பட்டது. மூன்று வேட்பாளர்கள் நவம்பர் 20 அன்று முதல் சுற்றுத்
தேர்தலில் இருந்தனர். ஒப்ரி, 2007 ஜனாதிபதி தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளராக இருந்த
செகோலீன் ரோயால், மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் சோசலிஸ்ட் கட்சியின் "இடது" புதிய
சோசலிச கட்சி கன்னையின் உறுப்பினருமான Benoit
Hamon ஆகியோர் முறையே 35, 43 மற்றும் 23 சதவிகித
வாக்குகளை பெற்றனர். இதன் பின் ஹாமோன் மறுநாள் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு ஒப்ரிக்கு வாக்களிக்குமாறு
அழைப்பு விடுத்தார்.
இந்த முக்கிய நிகழ்வு கிட்டத்தட்ட ஒரே வாக்குகள் இருவருக்கும் என்ற நிலையில்
இருந்தது; 137,000 பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் ஒப்ரி, ரோயாலை விட 42 வாக்குகள் முன்னணியில்தான்
இருந்தார். இரு வேட்பாளர்களுமே வெற்ற பெற்றுவிட்டதாக கூறி, வாக்குப் பெட்டிகளில் மோசடி பற்றி
குற்றச்சாட்டுக்களை விடுத்தனர்.
ரோயாலின் ஆதரவாளர்கள்
Essonne
பிரதிநிதி Manuel Valls,
சோசலிஸ்ட் கட்சி தேசிய செயலாளர்
François Rebsamen
போன்றோர், ஒப்ரி முகாம், வடக்கில் லீல்லை சுற்றிலும் தங்கள் மொத்த வாக்குகளை அதிகரித்துக் காட்டியதாக
குற்றம் சாட்டினர். ஒப்ரியின் முகாம் ரோயாலிடம் இருந்து "வெற்றியைத் திருடுகிறது" என்று வால்ஸ் கூறி
"உறுப்பினர்கள் கிளர்ச்சிக்கு" அழைப்பு விடுத்தார்; இதில் பாரிசில் சோசலிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்திற்கு
முன்பு ஆர்ப்பாட்டங்களும் அடங்கியிருந்தன.
இதை எதிர்கொள்ளும் வகையில் ஒப்ரி முகாமைச் சேர்ந்த
Claude Bartolone
அவதூறு வழக்கு ஒன்று பதிவு செய்ய இருப்பதாக அச்சுறுத்தியதுடன், ரோயாலுக்கு வாக்களித்த
Guadeloupe
அயல்நாட்டு பகுதியில் சோசலிஸ்ட் கட்சி பிரிவு "தொழில்துறை வலிமையில் ஏமாற்றியதற்கான" நிகழ்வுகள்தான்
வந்துள்ளன என்றும் தெரிவித்தார்.
இந்த விஷயம் சோசலிஸ்ட் கட்சியின் தேசியக் குழு வரை சென்றது; அங்கு ஒப்ரியின்
ஆதரவாளர்கள் பெரும்பான்மையில் இருந்தனர். நவம்பர் 25ம் தேதி 159 க்கு 76 என்ற விதத்தில் தேசியக் குழு
ஒப்ரி வெற்றிபெற்றதாக அறிவித்தது.
சோசலிஸ்ட் கட்சி இப்பொழுது பொது மக்களுக்கு முன் ஒரு விந்தையான
தோற்றத்தை காட்டுகிறது; வாக்குப் பதிவு ஏமாற்றுதல் என்ற குற்றச் சாட்டுக்களை சில தினங்களுக்கு முன்பு
பரிமாறிக் கொண்டபின், இதன் முக்கிய உறுப்பினர்கள் இப்பொழுது ஒன்றாக செயல்பட்டு பிரான்சை ஆள்வதற்கு
சோசலிஸ்ட் கட்சியை மிகச் சிறந்த பாராளுமன்ற வகை ஜனநாயகக் கட்சி என்று முன்வைக்க முற்பட்டுள்ளனர்.
சோசலிஸ்ட் கட்சி தலைமைக்குள் உள்ள பிளவுகள் தவிர்க்க முடியாமல் மீண்டும் தோன்றும்; மேலும் 2012
ஜனாதிபதித் தேர்தலின்போது வேட்பாளருக்கான தேர்வில் கட்சி பூசலைக் கொள்ளும்.
சோசலிஸ்ட் கட்சி பூசல் பற்றிய மக்களின் ஏமாற்றத் திகைப்பின் பெரும் பகுதி இரு
பக்கத்தாருக்கும் இடையே எந்தவித கொள்கை அடிப்படையிலான வேறுபாடுகள் இல்லாததில் மையம்
கொண்டிருந்தது. பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் இருக்கும் செல்வாக்குப்
படைத்தவர்களை மேற்கோளிட்டு, தலைமைத் தேர்தல் என்பது "கொள்கைகள் என்பதை விட தனிநபரின் ஆளுமை
பற்றியது" என்பதை இசைவுடன் மேற்கோளிட்டுள்ளது. ஆனால் இத்தைகைய தனி நபர் பூசல்கள் தவிர்க்க முடியாமல்
அரசியல் தன்மையைத்தான் கொண்டிருக்கும்.
அற்ப விழைவு மற்றும் பெருகிய சந்தர்ப்பவாதம் என்று சோசலிஸ்ட் கட்சி
தலைமையின் தேர்தலை சூழ்ந்திருந்த நிகழ்வுகள் சகதியில் இருந்து பற்றி எடுக்கக்கூடிய அரசியலை பார்த்தால்
வேறுபாடுகள் இவ்விதத்தில் உள்ளன: ரோயல் தொழிலாள வர்க்கத்துடன் உள்ள முறையான தொடர்பைக் கைவிட
முற்பட்டு, வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகளான பிரான்சுவா பேய்ரூவின் ஜனநாயக இயக்கத்துடன் இவர் 2007
பிரச்சாரத்தில் கொண்டது போன்ற உடன்பாட்டை காண விரும்புகிறார். கொள்கை அளவில் அத்தகைய
உடன்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றாலும், லீல்லின் உள்ளூராட்சி நிர்வாகத்தில் அவர்களை
பயன்படுத்திக் கொண்ட பின்னர் ஒப்ரி ஒரு பரந்த செயல்பாடு என்ற முறையில் இது உகந்தது அல்ல என்று
கருதுகிறார்; ஏனெனில் இது இடது புறம் ஒரு மகத்தான அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தும்.
சோசலிஸ்ட் கட்சி "இடதில் நங்கூரம் பாய்ச்சிய முறையில் இருக்க வேண்டும்" என்று
ஒப்ரி அழைப்பு விடுத்துள்ளார்; மேலும் இப்பொழுது மாற்றப்பட்டுவிட்ட 35 மணி வார நேர சீர்திருத்தத்தில்
சோசலிஸ்ட் கட்சியின் பங்கை ஒழுங்குறச் செய்ய வேண்டும் என்றும் கருதுகிறார்.
ரோயால் போலவே ஒப்ரியும் தொழிலாள வர்க்கம் நேர்மையற்றது,
பாசாங்குத்தனம் நிரம்பியது என்ற கருத்தைத்தான் கொண்டுள்ளார். இவ்வம்மையாரின் இடது சொற்ஜாலங்கள்
இடதில் எழுச்சி பெறும் அச்சுறுத்தல் பற்றி சோசலிஸ்ட் கட்சியின் தலைமைக்குள்ளே உள்ள கவலைகளை
பிரதிபலிக்கிறது. சமீபத்தில் சோசலிஸ்ட் கட்சியை விட்டு விலகி ஒரு இடது கட்சியை நிறுவ முற்பட்டுள்ள
Jean Luc Melenchon,
ஜேர்மனிய அரசியல்வாதி லா பொன்டைன் மற்றும் இடது கட்சியின் உதாரணத்தைத்தான் மேற்கோளிட்டுள்ளார்.
மேலும் ஒலிவியே பெசன்ஸநோவும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (LCR),
சோசலிஸ்ட் கட்சியின் வலது மாற்றத்தின் மூலம் இலாபம் அடையலாம் என்ற கவலையும் உள்ளது. செய்தி ஊடகம்
பல முறையும் ஹாமோனை தலைமை பிரச்சார காலத்தில் "ஒரு பெசன்ஸநோ-எதிர்ப்புக் கருவி" என்று
குறிப்பிட்டுள்ளது.
இவை அனைத்துமே சுதந்திர சந்தைக் கொள்கைகளின் நம்பகத்தன்மையை வெடித்து
சிதறவைத்துள்ள உலக முதலாளித்துவத்தின் விரைந்துவரும் நெருக்கடியின் வடிவமைப்பிற்குள் வந்துள்ளன. 360 பில்லியன்
யூரோக்களை வங்கிகள் பிணை எடுப்பிற்கு கொடுத்தபின், பல வேலைநீக்கங்கள் மற்றும் வேலைநிறுத்த
நவடிக்கைகளை பல தொழில்துறைகள் எதிர்கொண்டபின், சார்க்கோசி புதிய சூழ்நிலைக்கு ஏற்ப அவருடைய
கொள்கைகளில் மாற்றம் செய்துள்ளார்; ஒரு தேசிய தொழில் கொள்கை மற்றும் முதலீட்டு மூலோபாயம் வேண்டும்
என்று அழைப்பு விடுத்துள்ளார். சிறிது காலத்திற்கு முன்புதான் சார்க்கோசி தன்னை அமெரிக்க முறையிலான
தடையற்ற முதலாளித்துவ சந்தை முறைக்கு ஊக்கம் கொடுப்பவர் என்று சித்தரித்துக் காட்டியிருந்தார். ஆனால்
இப்பொழுது ஓய்ந்துவிட்ட பிரெஞ்சு செய்தி ஊடகத்தை கூட வியப்பில் ஆழ்த்தும் வகையில் சார்க்கோசி ஐரோப்பிய
பாராளுமன்றத்தில், "ஒருவேளை தான் ஒரு சோசலிஸ்ட்டாக கூட இருக்கலாம்" என்று அறிவித்துள்ளார்.!
ஒப்ரிக்கு சோசலிஸ்ட் கட்சி தலைமையிடத்தில் கிடைத்துள்ள கிட்டத்தட்ட ஒருமனதான
ஆதரவு என்ற பின்னணி --இதில் முன்னாள் பிரதம மந்திரிகள்
Laurent Fabius, Michel Rocard,
இப்பொழுது சார்க்கோசி அப்பதவிக்கு நியமித்த பின்
IMFல் தலைவராக இருக்கும்
Dominique Strauss-Kahn
ஆகியோர் உள்ளனர்-- குறிப்பிடத்தக்கது ஆகும். கடந்த ஆண்டு சோசலிஸ்ட் கட்சியை தடையற்ற சந்தை முறையை
வெளிப்படையாக தழுவ வேண்டும் என்று வழிநடத்த விரும்பிய ரோயால் இப்பொழுது செல்வாக்கில் இல்லை.
பிரெஞ்சு முதலாளித்துவத்தின் காப்பாளர்களுடைய கருத்தில் ஒப்ரிக்கு ஒரு வாக்கு என்பது இடதின் ஆபத்தில் இருந்து
பாதுகாக்கக்கூடியது.
இந்த நிலைமை ஒரு உண்மையான சோசலிச இயக்கம் தோற்றுவதற்கு
அசாதாரணமான அல்ல அறிகுறிகளைக் காட்டுகிறது என்பது தெளிவு. நடைமுறை அரசியலுக்கு மக்கள் எதிர்ப்பு
ஆழமடைந்துள்ளது; மில்லியன் கணக்கான மக்கள் புதிய அரசியல் பாதையைக் காண விரும்புகின்றனர்.
ஆனால் இந்தக் கணத்தில்தான் துல்லியமாக
LCR மற்றும்
பெசன்ஸநோ, செய்தி ஊடக உந்துதலின் செல்வாக்கு அலையில் மேலே மிதப்பவர்கள், புரட்சிகர சோசலிசத்தில்
இருந்து தங்கள் பழைய தொடர்பின் எச்ச சொச்சங்கள் அனைத்தையும் முறையாக நிராகரித்துள்ளனர். இந்த
இலக்கை கருத்தில் கொண்டு அவர்கள் LCR
ஐ கலைத்துவிட்டு "புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி
NPA" என்பதை நிறுவ உள்ளனர். இந்த மாற்றத்தையொட்டி
LCR
தலைமைக்குள் நிறைந்த விவாதம் தெளிவாக்குவது போல்,
NPA ஒரு
முதலாளித்துவ சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தை தளமாகக் கொள்ளும். அலன் கிறிவின், பிரான்சுவா சபாடோ
மற்றும் பிற LCR
தலைவர்கள் தங்கள் புதுக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்துடன், அதாவது ஒரு சோசலிசப் புரட்சி முன்னோக்குடன், எவ்வித
நடைமுறை தொடர்பையும் கொண்டிருக்காது என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
சோசலிஸ்ட் கட்சிக்கு இடது புறம் ஒரு நிலைப்பாட்டை கொள்ள தனது செல்வாக்கை
பயன்படுத்த நம்பிக்கை கொள்ளும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை பொறுத்தவரை, சோசலிஸ்ட் கட்சி
நெருக்கடியின் விரைவான போக்கும் ஆழமும் ஒரு மகிழ்வற்ற வியப்பாக வந்துள்ளன. சோசலிஸ்ட் கட்சியின்
நெருக்கடி "ஒரு வருந்த தக்க தன்மை உடையது" என்றும், "வலதுசாரியை சேர்ந்தவர்கள்தான் இது பற்றி
களிப்படைய முடியும்" என்றும் பெசன்ஸநோ கூறியுள்ளார்.
பிரான்சிலும் ஐரோப்பாவிலும் உள்ள சோசலிஸ்ட்டுகள், சோசலிஸ்ட் கட்சியின்
நெருக்கடி எதை வெளிப்படுத்தியுள்ளது என்பதை கவனமாக சிந்திக்க வேண்டும்.
Whither France
என்ற நூலில் ட்ரொட்ஸ்கி கொடுத்துள்ள மதிப்பீட்டைத்தான் இந்த நிலைமை நினைவிற்குக் கொண்டு வருகிறது. "குட்டி
முதலாளித்துவத்தினருடையது உட்பட, உழைக்கும் மக்களின் பொதுப் போக்கு, இடதுபுறம்தான் என்பது தெளிவு.
தொழிலாளர்கள் கட்சிகளுடைய சார்போ வலது என்பது அதே அளவிற்கு வெளிப்படையாக உள்ளது." நான்காம்
அகிலத்தின் அனைத்துலக குழுவின் முன்னோக்கு, ட்ரொட்ஸ்கி செய்தவாறு, பிரான்சில் ஒரு புரட்சிகர சோசலிஸ்ட்
கட்சியை அமைப்பதற்கு போராடுவதாக இருக்க வேண்டும். |