World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காThe Gates appointment: Obama slaps antiwar voters in the face கேட்ஸ் நியமனம்: போர் எதிர்ப்பு வாக்காளர்களை ஒபாமா கன்னத்தில் அறைகிறார் By Patrick Martin நவம்பர் 2006ல் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஜோர்ஜ் டபுள்யூ புஷ் கேட்ஸை பென்டகனுக்கு தலைமை தாங்க நியமித்தார்; இது காங்கிரஸ் தேர்தல்களில் குடியரசுக் கட்சிக்கு ஏற்பட்ட சங்கடம் மற்றும் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் இராஜிநாமா ஆகியவற்றை அடுத்து நிகழ்ந்தது. 2006 தேர்தலில் மில்லியன் கணக்கானவர்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஈராக்கில் போரை முடிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்காக வாக்களித்த நிலையில், புஷ் நிர்வாகம் மாறுபட்ட திசையில் சென்று மற்றும் ஒரு 30,000 போரிடும் துருப்புக்களை அனுப்பி "விரிவாக்கம் செய்ததின்" மூலம் அமெரிக்க இராணுவத் தலையீட்டை அதிகரித்தது. (காங்கிரசில் இருந்த ஜனநாயகக் கட்சியினர் கடமையுடன் இதற்கு ஒத்துழைத்து தேவையான நிதியையும் அதிக படைகளுக்கு கொடுத்து கேட்ஸ், தளபதி டேவிட் டபுள்யூ பெட்ரீயஸ் மற்றும் பிற உயர் அதிகாரிகள் நியமனத்திற்கும் ஒப்புதல் கொடுத்தனர்.) இந்த முக்கிய நிகழ்வுகள் --ஈராக்கில் அமெரிக்க தலைமைத் தளபதியாக பெட்ரீயஸ் நியமனம், 2007 கோடைகாலம் மற்றும் வசந்தகாலத்தில் குருதி கொட்டிய சண்டைகள், போரில் அதிக அமெரிக்க துருப்புகள் இழப்பு, ஈராக்கிய சமுதாயத்தின் மீது சிதறடிக்கும் விளைவுடன் மிக அதிக வான்வழிக் குண்டுவிச்சு, மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு எதிரான சுன்னி, ஷியா எதிர்ப்பை பிளவுறச் செய்ய இலஞ்சம் கொடுத்தல் மற்றும் ஒடுக்குதல் --அனைத்திலும் கேட்ஸ் முக்கிய பங்காற்றினார். செனட்டர் ஹில்லாரி கிளின்டனை மீறி ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பதவியை ஒபாமா வெற்றி கொண்டதற்கு பெருமளவு காரணம் அவர் 2006ல் ஜனநாயகக் கட்சியினரை வெற்றி கொள்ள உதவிய அதே போர் எதிர்ப்பு உணர்வுகளுக்கு முறையீடு செய்ததால்தான். ஆரம்ப பிரச்சாரம் முழுவதும் இவருடைய மந்திரம் --கிளின்டன் மற்றும் செனட்டில் போருக்கு ஆதரவாக வாக்களித்திருந்த போட்டி ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஒரு கண்டனம் கொடுக்கும் வகையில்-- ஈராக்கில் தான் போரை முடித்துவிடப் போவதாகவும், "இந்தப் போருக்கு இசைவு கொடுத்திருக்கக் கூடாது, இப்போர் நடந்திருக்கவே கூடாது" என்றும் கூறியிருந்தார். இப்பொழுது பென்டகன் தலைமையில் கேட்ஸை தக்க வைத்துக் கொள்ளுதல் மற்றும் வெளிவிவகார அமைச்சகத்தை கிளின்டனுக்கு அளித்தல் என்று பரந்த வகையில் கூறப்படுவதை செய்தல் --மற்றும் தேசிய பாதுகாப்பு பதவிகளுக்கு சற்றே குறைந்த மதிப்புடைய நிறைய போர் ஆதரவு உடையவர்களை நியமித்தல்-- ஆகியவற்றால் ஒபாமா இராணுவம், உளவுத்துறை அமைப்புக்கள் மற்றும் ஆளும் உயரடுக்கு ஆகியவற்றிற்கு முழுமையாக தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை காக்க உறுதியாக இருப்பதாகவும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் புஷ் நிர்வாகத்தின் குற்றம் சார்ந்த ஆக்கிரோஷ நடவடிக்கையை அப்பகுதியில் ஒவ்வொரு அங்குலத்தையும் காப்பாற்றவும் ஒவ்வொரு சொட்டு எண்ணெயை காக்கவும் உறுதியாக இருப்பதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளார். அமெரிக்க செய்தி ஊடகத்தில் மிகப் பரந்த அளவில், வெள்ளை மாளிகையில் கட்சி மாற்றத்திற்கு பின்னர், அமெரிக்க வரலாற்றில் பென்டகன் தலைமையை தொடர இருப்பது கேட்ஸ்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னுடைய வரவிருக்கும் கொள்கை பற்றிய அடையாளத்தை ஒபாமா காட்டியுள்ளார் என்பது செய்தி ஊடகப் பிரிவுகளால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன; இவை பொதுவாக ஈராக்கில் புஷ் நிர்வாகக் கொள்கையை ஆதரிப்பவை; அதையும் விட மோசமானதிற்கும் ஆதரவு கொடுப்பவை ஆகும். இந்த முடிவு "இன்று வரை, வரவிருக்கும் நிர்வாகம் ஈராக், ஆப்கானிஸ்தான் பற்றி என்ன கருதுகிறது என்பது பற்றிய மிகத் தெளிவான அடையாளம் ஆகும்" என்று வோல் ஸ்ட்ரீட் பத்திரிகை கூறியுள்ளது. ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெற உறுதியான காலக் கெடு கூடாது என்று பாதுகாப்பு மந்திரி எதிர்த்துள்ளார்; எனவே இவருடைய நியமனத்தின் பொருள் 2010 நடுப்பகுதிக்குள் ஈராக்கில் இருந்து போரிடும் படைகளில் பெரும்பாலானவற்றை அகற்றி விடுவதாக பிரச்சாரத்தில் கூறியதில் இருந்து ஒபாமா விலகிவிட்டார் என்பதுதான். இவர்கள் இருவருமே ஆப்கானிஸ்தானை பொறுத்த வரையில் ஒரேவித கருத்தைத்தான் கொண்டுள்ளனர்; அதுதான் புதிய நிர்வாகத்தின் முக்கிய தேசிய பாதுகாப்புக் கொள்கையில் முன்னுரிமையாக இருக்கும்." "திரு கேட்ஸ் இப்பொழுது ஈராக் போரை தொடங்கிய தலைமைத் தளபதிக்கு பணியாற்றுவதில் இருந்து இதை முடிவிற்குக் கொண்டு வருவதாக உறுதி கூறிய நபரின் கீழ் பணியாற்ற வேண்டும்" என்று நியூ யோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால் கேட்ஸுக்கு பதிலாக ஒபாமாதான் இந்த நிலைப்பாட்டை விரும்புவதாக செய்தித்தாள் ஒப்புக் கொண்டுள்ளது. "திரு கேட்ஸ் தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் முடிவு எடுத்ததில், திரு ஒபாமா பிரச்சார தொடக்க காலத்தில் போருக்கு எதிர்ப்பு என்பதை தன் முக்கிய அடையாளமாக காட்டிய அரசியல் நிலைப்பாட்டில் இருந்து விலகி செவிகளில் மோசமாக விழும் அடையாளத்தை காட்டும் வகையில் பிறர் கருத்துக்களை ஒதுக்கியுள்ளார்" ஒபாமாவிற்கு வக்காலத்து வாங்கும் தாராளவாதப் பிரிவுகளில் The Nation போன்றவை, ஈராக்கில் இருந்து மெதுவாக வெளியேறுவது உள்பட கொள்கையை ஒபாமாவே நிர்ணயிப்பார், தன்னுடைய வெளியுறவுக் கொள்கை பற்றி வலதுசாரி விமர்சனத்தை அகற்றும் வகையில் கூரியபார்வை உடையவர்களை நியமித்துள்ளார் என்று கூறுகின்றன. இது பிரச்சினையை மறைப்பதாகும். எதற்காக கேட்ஸ், கிளின்டன், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு வருவார் எனக்கூப்படும் ஓய்வு பெற்ற ஜேம்ஸ் ஜோன்ஸ் ஆகியோர் இத்தகைய நாடகத்தில் பங்கேற்க உடன்பட வேண்டும் என்பது பற்றி கேள்வியை முன்வைக்கிறது. இதையும் விட சிறந்த கேள்வி கேட்ஸை பதவியில் தக்க வைத்துக்கொள்ளுவதற்கு, ஒபாமா ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் வரவிருக்கும் போரின் போக்கு பற்றிய எத்தகையை உறுதிகளை கொடுத்துள்ளார் என்பதாகும்? 2003ம் ஆண்டு ஈராக் படையெடுப்பால் அமெரிக்கா கட்டவிழ்த்துள்ள குருதிப் பாதையினால் ஒரு மில்லியன் மக்களுக்கு மேலாக மடிந்துள்ளனர். தங்கள் வீடுகளில் இருந்து ஐந்து மில்லியன் மக்கள் ஓட நேர்ந்துள்ளது. ஒரு செயல்படும் சமூகம் என்ற விதத்தில் ஈராக் இருந்தது அழிக்கப்பட்டுவிட்டது. 30 ஆண்டுகள் அமெரிக்காவின் தூண்டுகோலின் பேரில் நடக்கும் போரினால் ஆப்கானிஸ்தான் ஏற்கனவே அழிவில் உள்ளது; இப்பகுதியில் அடுத்த போர்க்களமாக பாக்கிஸ்தான் வரக்கூடும் என்ற நிலை உள்ளது. உலக மக்களின் பார்வையில், மற்றும் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் பார்வையில், கேட்ஸ் ஒரு வருங்கால போர்க்குற்ற நீதிமன்றத்தில் புஷ், ஷெனி, ரம்ஸ்பெல்ட், ரைஸ், கொலின் பவல் மற்றும் ஏனையோருடன் இருபத்தியோராம் நூற்றாண்டின் பெரும் மக்கள் கொலைச் செயலுக்காக விசாரணையில் நிற்கும்போது முக்கிய இடத்தில் இருக்கத் தகுதியானவர். கேட்ஸை தக்கவைத்துக் கொண்டதில், அதன்மூலம் அவர் தொடர்புடைய ஆக்கிரமிப்பு மற்றும் அரைக் காலனித்துவ ஆதிக்க கொள்கையை தழுவியதில், ஒபாமா போர் எதிர்ப்பு பாசாங்குத்தனத்தை கைவிட்டு, வெளிப்படையாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய தலைமைத் தளபதியாக தோன்றிக் கொண்டிருக்கிறார். |