World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் 

France: Thousands demonstrate against postal service privatisation

பிரான்ஸ்: அஞ்சல் சேவை தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

By Olivier Laurent and Antoine Lerougetel
26 November 2008

Use this version to print | Send this link by email | Email the author

சனிக்கிழமையன்று பிரான்ஸ் முழுவதும் சிறுநகரங்களில் திட்டமிடப்பட்டுள்ள அஞ்சல் துறை தனியார் மயமாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த எதிர்ப்புக்கள் ஜனவரி 1, 2010 முதல் அஞ்சல் துறையின் அந்தஸ்தை லிமிடெட் கம்பெனியாக்க திட்டமிடப்பட்டுள்ள மாற்றத்திற்கு எதிராக ஐந்து தொழிற்சங்கங்களின் அழைப்பின் பேரில் நடத்தப்பட்டன. அத்திட்டப்படி அஞ்சல் துறையின் சொத்துக்களில் 30 சதவிகித பங்கு தனியார் முதலீட்டாளர்களுக்கு "நவீன மயமாக்குவதற்காக --3 பில்லியன் யூரோக்கள் வரை-- கொடுக்கப்படும்."

இந்த எதிர்ப்புக்களை முன்னின்று நடத்தியவை CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு), SUD (Solidarity, Unity, Democracy), ்்்FO (தொழிலாளர் சக்தி), CFDT (பிரெஞ்சு தொழிலாளர் ஜனநாயகக் கூட்டமைப்பு) மற்றும் CFTC (French Confederation of Christian Workers) கிறிஸ்தவ தொழிலாளர்களின் பிரெஞ்சு கூட்டமைப்பு ஆகியவை ஆகும்.

அஞ்சல் நிலைய நிர்வாகத்தின் செயல்கள், ஐரோப்பிய ஒன்றியத்தில் அஞ்சல் சந்தை முழுமையாக தாராளமயமாக்கப்படுவதற்கான தயாரிப்பு ஆகும். அஞ்சல் சேவைகள் ஏற்கனவே தனியார்மயம் ஆக்கப்பட்ட நாடுகளில் வேலைகள் தகர்க்கப்பட்டன, அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்டன, பணி நிலைமைகள் மோசமாயின, விலைவாசி உயர்வு மற்றும் சரிந்துள்ள சேவைகள் என்று இவை இலாபமுறைக்கான உந்துதலுக்காக நடைபெற்றன.

அஞ்சல் நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Jean-Paul Bailly அரசாங்கம் அதிக பங்குதாரராக இருக்கும் என்ற உறுதிமொழிகளை கொடுத்தும், அஞ்சல் ஊழியர்கள் இந்த நடவடிக்கை தங்கள் வேலைகளுக்கு அச்சுறுத்தல் என்றும் பொது சேவையின் தரம் குறையும் என்றும் காண்கின்றனர்.

அஞ்சல் நிலைய ஊழியர்களின் பணி நிலைமைகள் பல ஆண்டுகளாக சரிந்துதான் வருகின்றன. ஒப்புமையில் 53 சதவிகித்தினர்தான் வேலைப் பாதுகாப்பு மற்றும் அரசாங்க தொழிலாளர்களின் உரிமைகளை அனுபவிக்கின்றனர்; பலரும் பகுதிநேர ஒப்பந்த ஊழியர்களாக உள்ளனர்; 40 சதவிகிதத்தினர் குறைவான சாதகத்தை உடைய, பாதுகாப்பற்ற பொது ஒப்பந்தத்தில்தான் உள்ளனர்.

நவம்பர் 22 ஆர்ப்பாட்டங்கள் செப்டம்பர் 23 ஆர்ப்பாட்டத்தைவிட குறைந்த திரளலைத்தான் கண்டது. பாரிஸில் 12,000 பேர், மார்சேயியில் 1,000, துலூஸில் 2,000, லியோனில் 500 என்று கூடியதாகத்தான் அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். போலீசார் கொடுத்துள்ள எண்ணிக்கை இதைவிடக் குறைவாகும், வந்திருந்தவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியில் இருந்து கால் பகுதிக்கு இடையிலான சிறுமதிப்பீட்டைத்தான் கூறியது.

4.7 சதவிகித ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ததாக நிர்வாகம் கூறியுள்ளது; தொழிற்சங்கங்கள் எவ்வித அழைப்பும் கொடுக்கவில்லை என்றபோதிலும் இந்த எண்ணிக்கை உள்ளது. இதற்கு மாறாக செப்டம்பர் 23 வேலைநிறுத்தம் கிட்டத்தட்ட அஞ்சல் துறையின் 300,000 உறுப்பினர் தொகுப்பில் மூன்றில் ஒரு பகுதி பங்கு பெற்றதை கண்டது. இந்த சுமாரான பங்கு எல்லாவற்றிற்கும் மேலாக தொழிற்சங்கங்களின் மீது நம்பிக்கையின்மையை தெரிவித்தது.

"நவம்பர் தொடக்கத்தில் எலிசே ஆலோசகரான Henri Guiano, தற்பொழுது அஞ்சல் துறையின் மூலதனத்தை பிறருக்குக் கொடுக்கும் கருத்து இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் இந்த தெளிவற்ற உறுதிகளில் இருந்து அரசாங்கம் பின்வாங்கி டிசம்பர் கடைசியில் ஒரு முடிவு எடுக்க இருப்பதாக கூறியது. நிக்கோலோ சார்க்கோசி நியமித்துள்ள Ailleret குழு அறிக்கை வருவதற்காக அரசாங்கம் காத்திருக்கிறது.... அதில் தொழிற்சங்கவாதிகள், அரசியல்சார்பு உடைய அதிகாரிகள் மற்றும் அஞ்சல் துறையின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர்; La Poste ஐ செழிக்க வைக்கும் பல வழிகளை அது ஆராய்ந்து வருகிறது" என்று Nouvel Observatuer அதன் நவம்பர் 22 பதிப்பில் வாசகர்களுக்கு நினைவுறுத்தியது.

LCR-NPA (Revolutionary Communist League, தற்பொழுது புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி என்பதை நிறுவும் வழிவகையில் இருப்பதின்) தலைவரான ஒலிவியே பெசன்ஸநோ, அவரே ஒரு பகுதிநேர தபால்காரர், இந்த உத்தரவாதங்களை எடுத்துக் கொண்டு கூறினார்: "செப்டம்பர் 23 வேலைநிறுத்தத்தை அடுத்து இது ஒரு முதல் சமூக வெற்றியாகும்... இந்த வெற்றி பிற வெற்றிகளுக்கு வகை செய்யும்."

பெசன்ஸநோ தொடர்ந்து கூறினார்: "பொருளாதாரத்தின் பல பிரிவுகளையும் பாதித்துள்ள பொருளாதார நெருக்கடிக்கும் --இதில் மிக முக்கியமானது கார்த்தொழில், எஃகுத் தொழில்-- இந்த நிறுவனங்களில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் சமூக எதிர்ப்புக்களுக்கும் இடையே அரசாங்கம் அகப்பட்டுள்ளது; சார்க்கோசியே Renault-Sandouville க்கு வந்தபோது ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ததை பார்த்தார். இரும்பு சூடாக இருக்கும்போதே நாம் அடிக்க வேண்டும். தபால் நிலையங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தை அரசாங்கம் திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும்."

இந்த அறிக்கை தொழிற்சங்கங்கள் புரியும் பங்கை மூடி மறைக்கிறது; அவைதான் தங்கள் சட்டபூர்வ உரிமைகள் மற்றும் நிலைமைகள் மற்றும் தங்கள் பொதுப்பணி நிலைமையை காப்பாற்ற விரும்பும் அஞ்சல் ஊழியர்களின் நடவடிக்கைகளை முறிக்கவும் அவர்கள் மனத்திண்மையை முறிக்கவும் தொடர்ந்து முயலுகின்றன. Renault Sandouville தொழிலாளர்கள் பற்றிய குறிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இழிந்தது ஆகும். 1,000 வேலைகள் இழப்பை எதிர்நோக்கிய அவர்கள் தொழிற்சங்கங்களால் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர். அன்று தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோதே தொழிற்சங்க தலைவர்கள் ஆலையில் சார்க்கோசியுடன் போர்க்குணத்தை குறைக்கும் வகையில் வேலை உறுதிமொழி கொடுப்பதாகவும் 2012க்குள் புதிய கார் அறிமுகமாகும் என்றும் கூறி பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.

நவம்பர் 22 ஆர்ப்பாட்ட தினத்தன்று வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் NPA வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாமல், ஒரு மாதம் முன்பு அஞ்சல் துறை பற்றி "சமூக வெற்றி" என்று தான் விவரித்ததை உண்மையில் ஒரு மட்டமான உத்தி என்பதை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்கு உட்பட்டது. அஞ்சல் துறை மூலதனத்தை பிறருக்குக் கொடுக்கும் திட்டம் "தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது" என்று அரசாங்கம் அறிவித்தது; ஆனால் "திட்டமிட்ட தேதியில் அது நடைபெறும்" என்றும் அறிவித்தது" என NPA கூறியது. "அரசாங்கம் இம்முயற்சியை கைவிட்டுவிடவில்லை. பெருகி வரும் திகைப்பை குறைக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறது."

NPA துண்டுப்பிரசுரம், "CGT, CFDT, FO, CFTC, SUD" ஆகியவற்றால் வெளியிடப்பட்ட வேண்டுகோளுக்கும் மற்றும் "La Poste தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராக அணிதரள்வதற்கான, பொது அஞ்சல் துறை மீதான ஒரு பொது விவாதமும் மக்கள் வாக்கெடுப்புக்குமான தேசியக் குழு" இவற்றுக்கும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் ஆதரவளிப்பதற்கு சிறிதும் விமர்சனமற்ற முறையில் அழைப்பு விடுத்தது.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் கூட்டு விண்ணப்பம் ஒன்று "இது ஒரு பெரிய தேசிய விவாதம்" என்றாலும்கூட, "அரசாங்கம் தனியார் மயமாக்குவதில் இருந்து பின்வாங்குமாறு செய்வது" முடியும் என்ற போலித் தோற்றத்தை பரப்ப முற்பட்டுள்ளன.

ஆங்காங்கே நடைபெறும் செயல்கள், வேண்டுமென்றே தொழிற்சங்கங்களால் பரவலாக்கப்பட்டுள்ளவை, சார்க்கோசியை பின்வாங்கும்படி நிர்பந்திக்கும் என்ற மிகைப்படுத்தப்பட்ட கூற்றையும் NPA துண்டுப்பிரசுரம் விடுத்துள்ளது. தொழிலாளர்களுக்கு எவ்வித அரசியல் முன்னோக்கையும் இது முன்வைக்கவில்லை; மாறாக எதிர்ப்பு நாள் "இன்னும் கூடுதலான பொதுப் பதிலின் முதல் தொடக்கமாக இருக்கும்" என்றும், "நாம் வெற்றி அடையமுடியும்" என்றும் கூறியது.

இவ்விதத்தில் NPA அஞ்சல் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் இருந்து முறித்துக் கொண்டு சுயாதீன அமைப்புக்களை நிறுவி சமூக ஜனநாயக உரிமைகள் மீது இருக்கும் தாக்குதல்களில் இருந்து தங்கள் போராட்டங்களை மற்ற தொழில்கள், பணிகள் இவற்றில் இருக்கும் தொழிலாளர்களுடன் இணைத்துக் கொள்ளாமல் தடுக்க முற்படுகிறது.

இவர்களுடைய பங்களிப்பு தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவத்தினருக்கு உதவியாக உள்ளது; அவர்களோ சார்க்கோசியுடன் மே 2007 தேர்தலில் இணைந்து ஒத்துழைத்து, எதிர்த்தரப்பு போலக் காட்டிக் கொண்டாலும்கூட, அவருடைய சமூகப் பிற்போக்குத் திட்டத்தை செயல்படுத்த உதவினர். CGT (கம்யூனிஸ்ட் கட்சி PCF க்கு நெருக்கமானது) யின் Bernard Thibault, FO வின் Jean-Claude Mailly, CFTC யின் Jacques Voisin, FSU (கல்வித் துறையை தளமாகக் கொண்ட Unitary Trade Union Federation) ஐ சேர்ந்த Gerard Aschieri ஆகியோரும் பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றிருந்தனர்.

சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் காணப்பட்டனர்; பாரிஸில் இருந்து அவர்கள் கட்சித் தலைமை பதவிக்கு போட்டியிட்டு தோற்ற Benoit Hammond, மற்றும் செகோலீன் ரோயாலை வெற்றி கொண்டதாக அறிவிக்கப்பட்ட Martine Aubry ஆகியோருடன் வந்திருந்தனர். ஆப்ரியின் தகப்பனாரும் ஆசானுமான நீண்டகாலம் ஐரோப்பியக் குழுவின் தலைவராக இருந்த Jacques Delors, La Poste போன்ற அமைப்புக்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்த திட்டத்தை வைத்திருந்த ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்திருந்தார்; இது பிரெஞ்சு மற்றும் டச்சு வாக்கெடுப்பில் 2005ம் ஆண்டு தோல்வியடைந்தது. அதேபோல் இந்த ஆண்டு லிஸ்பன் ஒப்பந்தமும் ஐரிஷ் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டது.

உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர் ஒருவர் நான்சியில் இரு 16 வயது பள்ளி மாணவர்களிடம் பேசினார்; அவர்கள் PCF ன் ஆதரவாளர்கள் என்றனர். தங்கள் தேர்ந்த படிப்பை ஒட்டி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு கொடுக்க முன்வந்ததாக அவர்கள் கூறினர். "நாம் முதலாளித்துவ முறையினால் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுவிட்டோம்.... ஒரு பேரழிவு நிலையில் பிரான்ஸ் உள்ளது." என்றனர். "இன்றைய கூட்டம் வலுக் குறைந்ததுதான், ஆனால் மக்கள் மாறுவர், கம்யூனிசம் மீண்டும் வந்துவிடும்" என்றனர்.

ஒரு ஆர்ப்பாட்டக்காரர் தனியார்மயமாக்கும் வழிமுறை "முடக்கப்பட வேண்டியது" பற்றி நம்பிக்கை காட்டவில்லை. அருகில் இருந்த 5,000 மக்கள் வசிக்கும் ஒரு சிற்றூரான Ars-sur-Moselle அஞ்சல் சேவையை இழந்துவிட்டது; ஏனெனில் அஞ்சல் துறையினால் துணை ஒப்பந்தத்திற்கு விடப்பட்டிருந்த ஒரு கடைக்காரர் கடையை மூடிவிட்டார்" என்பதை அவர் தெரிவித்தார்.